அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 1
நாள் : 26/01/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை
நேரலை :- https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=3h49m07s
=================================
# அன்புடன் போகர் சித்தர் வாக்கு
=================================
அகிலத்தை காக்கும் அழகான தேவியே, தாயே, பொற்பாதத்தை, அனைத்து இடங்களிலும் ஒன்றே. ஆனாலும், பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மீனாட்சியே, அனைத்தும் நீயே. உன்னை நினைத்தே மக்களுக்கு பரப்புகின்றேனே. பரப்புகின்றேனே போகனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (எத்தனை இடங்களில் எத்தனை அவதாரங்கள் அன்னை எடுத்திருந்தாலும் , அவை அனைத்தும் ஒரே அவதாரத்தின் வெளிப்பாடுகளே. மீனாட்சியே, அனைத்தும் நீயே. உன்னை நினைத்தே நான் இம்மக்களுக்கு இந்த வாக்குகளை பரப்புகிறேன்.)
போகர் சித்தர் :- அறிந்தும் எதை என்று புரிய ஆனாலும், பின் உன்பால் எதை என்று அறிந்தும், தெளிந்தும் கூட ஞானங்கள் பெற்றாலும், பின் அஞ்ஞானத்தின் வழி நிச்சயம் தெளிவு அடையப்போவதில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- (என்ன சொல்றாருன்னா, நீங்கள் கோயிலுக்கு போயிட்டு, திருத்தலங்களுக்கு போயிட்டு, ஞானத்தை பெற்றாலும், அதன்படி நீங்க செயல்பட முடியாது.)
போகர் சித்தர் :- அறிந்தும் ஏதோ ஒரு சுயநலத்திற்காகவே சென்று, மீண்டும் அறிந்தும், அத்தோல்வியுற்று,
போகர் சித்தர் :- இதனால் ரகசியங்கள் நிச்சயம் தன்னில். அதாவது, அறிந்தும் எவை என்று, பின் அதாவது குருநாதன் அகத்தியனும் வந்து, புதுமையான விஷயங்கள் எடுத்துரைக்கப் போகின்றான்.
போகர் சித்தர் :- அறிந்தும் இதைத்தன் அறியா விடிலும் கூட, இதுதான் உண்மை. எவை என்று புரிய, அடுத்த முறை எதை என்று தெரிவிக்க, முதலில் அறிந்தும் இவைத்தன் நிச்சயம் அனைவரும் பின் எதை என்று கூற, பின் முகத்தில் சந்தோஷமே இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- ( எவருடைய முகத்திலும் ஒரு களையே இல்லப்பா)
போகர் சித்தர் :- இதைத்தன் பின் என் மகனான, பின் அதாவது அறிந்தும் முருகனை நினைத்து, அறிந்தும் பின் குருநாதன் பைத்தியம் என்று அழகானவனை பின் சொன்னான். அவன் பாடிட்ட, இவர்கள் எல்லாம் ஆடிவிடுமே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அகத்திய மாமுனிவர் முன்பு அன்புடன் அழைத்த பாடகரை பாட அங்கு அழைத்தார்கள் )
போகர் சித்தர் :- ஒவ்வொரு மனதிலும் கூட எண்ணற்ற கவலைகள்,
சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொரு மனதிலும் எண்ணற்ற கவலை இருக்குதாம்.
போகர் சித்தர் :- ஏன்? எதற்கு? அனைத்து புதியவைகளும் கூட இப்பொழுது யான் முதலிலே உரைப்பேன். குருநாதன் அகத்தினிடமே கேட்டுட்டு வந்துள்ளேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அகத்தீசா , கொஞ்சம் இருப்பா. மக்களுக்கு நான் கொஞ்சம் உரைக்கிறேன் என்று சொல்லிட்டு, குருநாதர் அகத்திய மாமுனிவரிடம் பர்மிஷன் வாங்கி நான் உங்களுக்கு உரைக்கிறேன்.)
போகர் சித்தர் :- அறிந்தும் பல இல்லங்களில் பல தடுமாற்றங்கள் என்ன, ஏது என்றெல்லாம் ஆனால் உணராமை. அவையெல்லாம் நிச்சயம் எடுத்துரைக்கப் போகின்றேன். இதனால் அறிந்தும் எவை என்று புரியாமல், பின் ஒவ்வொரு முகத்திலும் சந்தோஷமே இல்லை.
போகர் சித்தர் :- எதை என்று புரிய ஆனாலும், இப்பொழுது ஆடிப்பாடி, இவைத்தன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் முருகன் வரட்டும். பின்பு யான் உரைத்திடுவேன்.
போகர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும் பலமாகவே அறிந்தும், இவைதன் பின் ஞானம் குழந்தைக்கு எதை என்று கூற. அன்றே பாடினாயே, அதையே பிடித்த பாடலாகவே நீ பாடு.
சுவடி ஓதும் மைந்தன் :- (பாடகரை அழைத்து- மருதமலை மாமணியே அதை பாடுங்க அய்யா )
இசையமைப்பாளர் , பாடகர் :- முருகப்பெருமானை அழைக்க “மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை மிக அருமையாக பாடினார்கள். அதை நேரலை பதிவு இங்கே கேட்டு மகிழுங்கள்)
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=3h55m10s
பாடகர் :- ( அழகாக பாடி முடித்த பின்னர் )
போகர் சித்தர் :- தெளிவு அறிந்தும் இவைத்தன் மற்றைய பின் குழந்தையும் பற்றி பாடு. பின் ஓடோடி, பின் அங்கு முடித்துமே அறிந்தும் அறிந்தும் இதை என் உணர, பின் அழகாக, பின் தாயே என்று மடியில் மீது அமர்ந்து கொண்டு சில காலம், பின் இதனால் நீயும் கூட இப்பொழுதும் உறங்கிக் கொண்டு இருக்கும், பின் மணிகண்டனை தட்டி எழுப்பி ஒரு பாடலை பாடு. அனைவருக்கும் பின் செல்ல முடியாத காலம் இருந்தாலும், நிச்சயம் அவனும் அருள் புரியட்டும் இவர்களுக்கெல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (இங்குள்ள அனைவரும் சுவாமி மணிகண்டன் வசிக்கும் சபரிமலைக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள். சுவாமி ஐயப்பன் அருள் வழங்க வரக்கூடிய சக்தி உடையவர். சுவாமி ஐயப்பன் குழந்தை ரூபத்தில் ஓடிவந்து, உண்ணாமலை அன்னையின் மடியில் உறங்குவாராம். அந்த குழந்தை சுவாமி ஐயப்பன் ரூபத்தையும் மெதுவாகத் தட்டி எழுப்பி, அவரிடம் ஆசீர்வாதம் பெற ஒரு பாடல் பாட வேண்டும். ஏனெனில் உங்களுக்கு எல்லாம் ஏதோ ஒரு கவலை வந்திருக்கிறது; அதனால் வாக்கு நடுவில் நிற்கிறது. சித்தர்கள் வந்து வாக்கை அப்படியே நிறுத்திவிடுவார்கள். பின்னர் அதன் காரணத்தை அவர் விளக்குவார்கள். )
சுவடி ஓதும் மைந்தன் :- (பாடகரை அழைத்து- பாடுங்க அய்யா )
பாடகர் :- (சுவாமி ஐயப்பனை அழைக்க பாடல் - பள்ளிக்கட்டு சபரிமலைக்கு …. )
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=4h02m00s
பாடகர் :- ( அழகாக பாடி முடித்த பின்னர் )
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் )
ஓம் ஸ்ரீ லோபாமுத்தரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete