மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2
உலக நன்மைக்காக மதுரையில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை
நாள்: 7.12.2025, ஞாயிறு இடம்: A.S திருமண மண்டபம், வில்லாபுரம், மதுரை
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு
====================================
ஆதி மூத்தோனை பணிந்து, குருநாதனையும் பணிந்து, வாக்குகள் ஈகின்றேன் தேரையனே.
( மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2 )
இதன் தன் பின் இவை அன்றி தேரையனே செப்புகின்றேனே. இதைத்தன் பின் ஏன்? எதற்கு அகத்தியனை பின் போற்றி போற்றி பாடச் சொன்னேனே என்றெல்லாம் பின்புரைப்பேன். முதலில் போற்றுக, போற்றுக,
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா! முதல்ல அகத்தியரை போற்றி பாடணும்.. ஓகேங்களா?
தேரையர் சித்தர் :- இவைத்தன் பின்பு செப்புவேன்.
தேரையர் சித்தர் :- இவைத்தன் ஆணும் பெண்ணும்
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் பாடலை பாட , ஒரு ஆணும் ஒரு பெண்ணும்.
தேரையர் சித்தர் :- கோபமுற்று சென்றாளே, மூதாட்டியே!
தேரையர் சித்தர் :- தெரிகின்றது அல்லவா? ஓடோடி வா!
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் போற்றி பாடுங்க! வாங்க!
தேரையர் சித்தர் :- பின் வளர்ந்த கெட்டவனையும் வரச் சொல்! வாய் உள்ள..
(தேரையர் சித்தர் அழைத்த இருவரும், மேடையேறி , அழகாக - அகத்திய மாமுனிவர் போற்றும் பாடலை பாடினார்கள் )
( முதலில் அவ் மூதாட்டி அகத்திய மாமுனிவர் பாடலை பாடினார்கள்)
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=3h09m15s
===========================================
வருவாய், வருவாய்! குருநாதா,
வந்தருள் புரிவாய்! குருநாதா,
வருவாய், வருவாய்! குருநாதா,
வந்தருள் புரிவாய்! குருநாதா,
அனுதினம் வருவாய்! குருநாதா,
அனுக்கிரகம் செய்வாய்! குருநாதா,
அனுதினம் வருவாய்! குருநாதா,
அனுக்கிரகம் செய்வாய்! குருநாதா,
மாதா, பிதா, குரு! நீதானே
மனக்கவலையை தீர்ப்பதும்! நீதானே
மாதா, பிதா, குரு! நீதான
மனக்கவலையை தீர்ப்பதும்! நீதானே
கனவு பலித்தது! குருநாதா,
மனதும் குளிர்ந்தது! குருநாதா,
கனவு பலித்தது! குருநாதா,
மனதும் குளிர்ந்தது! குருநாதா,
கருணை கடலே! குருநாதா,
காத்தருள்வாயே! குருநாதா,
கருணை கடலே! குருநாதா,
காத்தருள்வாயே! குருநாதா,
கருணை கடலே! குருநாதா
===========================================
சுவடி ஓதும் மைந்தன் :- ( அம்மா , திருப்பியும் இன்னொரு முறை பாட சொல்லிட்டாரு! )
( மீண்டும் அவ் மூதாட்டி அகத்திய மாமுனிவர் பாடலை பாடினார்கள்)
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=3h10m55s
===========================================
சிவா, திருச்சிற்றம்பலம்,
சித்த நாயகன், தமிழ் பித்தர் சேவகன்,
சத்தி தாயவள், ஜெய பக்த பாலகன்,
அத்தி மா முகன், வினை தீர்த்தமானவன்,
தீர்த்த மாமலை, திவ்ய ஆர்த்தி மங்களன்,
சித்த நாயகன், தமிழ் பித்தர் சேவகன்,
சக்தி தாயவள், பிரிய பக்த பாலகன்,
அத்திமாமுகன், வினை தீர்த்த மாணவன்,
தீர்த்த மாமலை, திவ்ய ஆர்த்தி மங்களன்,
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
கர்மத்தின் பலன் என் கனவினில் சொன்னவன்,
புண்ணியமாய் நிலம் இங்கு தானம் கொண்டவன்,
என்னுடன் இரு என்று சொன்ன மன்னவன்,
உன்னை கைவிடேன் என்று என்னில் நிற்பவன்,
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
தொலைந்த ஆவினம் தனை மீட்டு வருபவன்,
தோஷம் நீங்கவே வழிகாட்டி தருபவன்,
குழந்தை வேண்டுவோர் மனை மழலையானவன்,
குழந்தை வேலவன் உபதேசமானவன்,
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
ஆன மாமலை அடி அடக்கி ஆண்டவன்
வான மாமலை பதி வாழும் வாமனன்,
ஊனுமானுடன் உணவூட்டும் தாயவன்,
தாணுமாலயன் தந்த பொதிகை நாயகன்,
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
குருவடி சரணம்! அகஸ்திய திருவடி சரணம்!
உச்சி வேளையில் பாடும் அச்சுதன்
சச்சிதானந்தமான சண்முகன் சிவன்
சித்தர்கள் கணம் புடை சூழ வந்தவன்
பக்தர்கள் மனம் உரை மாய பக்குவன்
குருவடி சரணம் அகஸ்திய திருவடி சரணம்.
அருள் ஆற்றல் உள்ளவன்
பொற்பதம் தொழும் சரணம்
குருவடி சரணம் அகத்திய திருவடி சரணம்
குருவடி சரணம் அகத்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகத்தியர் திருவடி சரணம்
சந்திரன் அவன் அக்னினேத்திரம்
அன்பர் அனைவரும் அகஸ்திய கோத்திரம்
வருணபாலகன் கொடை வைத்திய சாஸ்திரம்
வாழ்க வாழ்கவே
அகஸ்தியர் வாழும் ஆசிரமம்
குருவடி சரணம் அகத்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகத்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகத்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகத்தியர் திருவடி சரணம்
அம்மகஸ்திசா
உம்மகஸ்திசா
மம்மகஸ்திசா
நம்மகஸ்திசா
மம்மகஸ்திசா
சிம்மகஸ்திசா
வம்மகஸ்திசா
எம்மகஸ்திசா
ஓம் மகத்தீஸ்வராய நம
ஓம் மகத்தீஸ்வராய நம
ஓம் மகத்தீஸ்வராய நம
சிவா திருச்சிற்றம்பலம்
===========================================
தேரையர் சித்தர் :- ஆசிகள்
சுவடி ஓதும் மைந்தன் :- ஆசிகள் அம்மா. ஆசிகள்னு சொல்லிட்டார்
(இவ் அம்மை பாடி முடித்த பின்னர் , இப்பொழுது அவ் பாடகர் அழகாக பாடலை பாடினார்கள். உம்மை தேடிச் சென்ற வழிகள் என்ற இவ் பாடலை இங்கு கேட்டு மகிழ்க )
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=3h16m02s
=====================================
# கார்த்திகை, மார்கழியில் ஐயப்பன் , மீனாட்சி அன்னையைக் காண வரும் ரகசியங்கள்
====================================
தேரையர் சித்தர் :- இவை அறிவித்து தேரையனே, ஓடோடி வருவானே இக்கார்த்திகையிலும் மார்கழியிலும் அறிந்தும் பின் மணிகண்டனே. தன் அன்னையைக் காண. மீனாட்சி அன்னையைக் காண. அதைத்தன் நிச்சயம் யார் உணர்வார் இங்கு?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஐயப்பன் அவங்க அம்மாவை தேடி எப்ப வருவாராம்? கார்த்திகை மார்கழியிலும் மீனாட்சி அம்மா தேடி வருவாங்களாம்
தேரையர் சித்தர் :- அறிவித்து, இவைத்தன் எத்தனை நாட்கள், இப் பிள்ளைக்கு நன்மை செய் என்றெல்லாம். இதனால் பின் மனமகிழ்ந்து இப்பொழுது கூட படுத்து இருக்கின்றான் மீனாட்சி தன்னில். இதனால் அவனை எழுப்புதல் போன்று, பாடல் பாடு
சுவடி ஓதும் மைந்தன் :- ( இப்ப கூட சுவாமி ஐயப்பன், மீனாட்சி அன்னை மடியில் படுத்து இருக்காராம். அவரை எழுப்புவது போன்ற ஒரு பாடல் ஐயப்பன் பாட்டு பாடுங்க அய்யா. )
அருமையான குரலில் பாடும் அடியவர் :- ( சுவாமி ஐயப்பனின் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு என்ற புகழ் பெற்ற பாடலை பாடினார்கள். கூட்டு பிரார்த்தனை மண்டபமே சரண கோஷம் ஆனது. பின் வரும் பதிவில் அவ் பாடலை கேட்டு பக்தி பரவசம் அடைக )
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=3h21m42s
இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவுடனே வந்தோம்
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும்
திருவடியைக் காண வந்தோம்!
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
…………………..
………………..
……………..
( பாடல் பாடி முடித்ததும் )
========================================
# கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் முருகப்பெருமான் , மீனாட்சி அம்மையிடம் விளையாட வரும் ரகசியங்கள்
========================================
தேரையர் சித்தர் :- இதைத்தன் ரகசியங்களை அறிந்தும், ஏன் இதனை பாடச் சொன்னேன்? இவ் நாளில் , கார்த்திகை, மார்கழி, பின் தை தன்னில் கூட, நிச்சயம் பின் இவ்வாறு பின் மணிகண்டன் வருகின்ற பொழுது, அறிந்தும் இவன் தன் அழகாக பின் மீனாட்சி தன்னிலே விளையாட, பின் அறிந்தும் பின் கந்தனும். கந்தனை நினைத்துப் பாடு. பின்பு அனைத்து ரகசியங்களும் சொல்கின்றேன்
அருமையான குரலில் பாடும் அடியவர் :- ( சுவாமி ஆறுமுகப் பெருமானின் - “நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா” - என்ற புகழ் பெற்ற பாடலை பாடினார்கள். கூட்டு பிரார்த்தனை மண்டபமே சரண கோஷம் ஆனது. பின் வரும் பதிவில் அவ் பாடலை கேட்டு பக்தி பரவசம் அடைக )
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=3h28m42s
( பாடல் பாடி முடித்ததும் )
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள்)
========================================
# புரட்டாசியில் காக்கும் கடவுள் பகவான் நாராயணர், மீனாட்சி அம்மையிடம் ஓடி வந்து, பின்னர் மார்கழி மாதத்தில் மதுரையில் இருந்து புறப்படும் ரகசியங்கள்
========================================
தேரையர் சித்தர் :- இதைத்தன் அறிந்தும், இவைத்தன் உணர. புரட்டாசி தன்னில் கூட பின் திருப்பதிலிருந்து அழகாக ஓடி வந்து மீனாட்சி தன்னில். பின்பு புறப்படுவான் புறப்படுவான் மார்கழி. இதனை நினைத்து இப்பொழுது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நாராயணன் நினைச்சு பாட சொல்றாரு ஐயா. இதுதான் ரகசியம். இது ஏன் பாட சொல்றாருன்னா, இது ரகசியம். ஐயா புரியுதுங்களா? )
தேரையர் சித்தர் :- ( இவ் பாடகரை, இசையமைப்பாளரை குறித்து ) இதைத்தன் எவை என்று புரிய, இவை போன்று முட்டாள்கள் எல்லாம் எங்களுக்கு தேவை.
( இங்கு முட்டாள்கள் என்றால் அன்பு, உயர் பக்தி மிகுந்தவர்கள் என்று பொருள் கொள்க. காசுக்கு அடி பணியாத நல் உள்ளங்கள் என்று பொருள் கொள்க. அன்புக்கு , இறைவன் திருவடிக்கு மட்டும் தலை வணங்கும் உயர் ஆத்மாக்கள். )
தேரையர் சித்தர் :- இவைத்தன் பின் அறிவாக இருந்துவிட்டால், நிச்சயம் இறைவனை மறந்து விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப அறிவாளியா இருந்தால் , காசுக்காக பாடுவாங்க. இது மாதிரி முட்டாள்களுக்கு கொடுத்தா இலவசமா பாடுவாங்கப்பா. )
தேரையர் சித்தர் :- இதைத்தன் கேட்பவனுக்கும் புண்ணியம். பாடுபவனுக்கும் புண்ணியம்.
தேரையர் சித்தர் :- காசை எதிர்பார்த்தால் நோய்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( பாடல் பாடி , இங்கு காசை எதிர்பார்த்தால் நோய் வந்துரும்)
தேரையர் சித்தர் :- இன்னும் ரகசியங்கள் சொல்கின்றேனடா.
அருமையான குரலில் பாடும் அடியவர் :- ( “திருப்பதி மலை வாழும் வெங்கடேசா” - என்ற புகழ் பெற்ற பாடலை பாடினார்கள். கூட்டு பிரார்த்தனை மண்டபமே சரண கோஷம் ஆனது. பின் வரும் பதிவில் அவ் பாடலை கேட்டு பக்தி பரவசம் அடைக )
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=3h33m55s
( பாடல் பாடி முடித்ததும் )
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- ( மகிழ்ச்சியில் பலத்த கைதட்டல்கள்)
தேரையர் சித்தர் :- வாலோனே மறந்துவிட்டாயா?
சுவடி ஓதும் மைந்தன் :- ( வாலோன் என்றால், வால் பையன். யாருன்னா பிள்ளையாரை மறந்துட்டியா அப்பா என்று சொல்கின்றார் அய்யா. பிள்ளையாரை பற்றி பாட சொல்கின்றார் அய்யா )
தேரையர் சித்தர் :- அடுத்தடுத்து உரைத்திடுவேனே ரகசியங்களை.
சுவடி ஓதும் மைந்தன் :- (பிள்ளையாரை பற்றி பாடு. அடுத்து நான் ரகசியம் உரைக்கிறேன்)
அருமையான குரலில் பாடும் அடியவர் :- ( “பிரபோ கணபதே, பரிபூரண வாழ்வருள்வாயே பிரபு கணபதே” - என்ற புகழ் பெற்ற பாடலை பாடினார்கள். கூட்டு பிரார்த்தனை மண்டபமே சரண கோஷம் ஆனது. பின் வரும் பதிவில் அவ் பாடலை கேட்டு பக்தி பரவசம் அடைக )
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=3h36m58s
( பாடல் பாடி முடித்ததும் )
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள்)
தேரையர் சித்தர் :- இதை அறிவித்து பின் ஆசீர்வாதங்களோடு இயக்குகின்றேன். மதுரை தன்னில் வாழும் மீனாட்சியிடமே குருநாதன் அழகாக அகத்தியனே, அறிந்தும் இவைத்தன் ஒரு மண்டபம் ஆசிரமத்தை அமைத்தான்.
தேரையர் சித்தர் :- (சித்தர்கள்) நாங்கள் அனைவரும் பாடத்தை இங்கு தான் கற்றுக்கொண்டோம். குருநாதன் அகத்தியனே ஒவ்வொரு, அதாவது அனைவரையும் அழைத்து, ஒவ்வொருவரும் கலியுகத்தில், அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் கலியுகத்தில் அழிவுகள். அதைத்தன் நிச்சயம் பின் அதாவது இவ் மீனாட்சி தாயை நினைத்து அனைவரும் தன் உள்ளத்தில் என்னென்ன எழுகின்றதோ, அதை சொல்லுங்கள் என்று, அகத்தியன் பின் ஆசீர்வாதங்களோடு யான் இயக்கியதை , யான் கண்டுபிடித்ததை, பின் நிச்சயம் அறிந்தும் இவைத்தன் அகத்தியனின் ஆசீர்வாதத்துடனே, மீனாட்சி தாயின் ஆசீர்வாதத்துடனே சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அகத்திய மாமுனிவர் அவங்க , மீனாட்சி இடத்தில் ஒரு ஆசிரமம் அமைச்சாரு. ஆசிரமம் அமைக்கின்ற பொழுது எல்லாம் சித்தர்கள் வந்தாங்க. அப்போ, அகத்தியர் சொன்னார் அங்குள்ள சித்தர்களுக்கு. இப்ப கலியுகத்தில் மக்களுக்கு அதிகமா துன்பம் நோயும் வரும் பொழுது, அதாவது அகத்தியர் சொல்றாரு இங்க, நீங்க உங்களுக்கு என்னென்ன தோணுதோ கண்டுபிடிங்க அப்படின்னு சொல்லிட்டார். தேரையர் ஒன்று கண்டுபிடிச்சாரு. அந்த ரகசியம் நான் உங்களுக்கு சொல்லப்போறேன் என்று சொல்கின்றார்.)
தேரையர் சித்தர் :- இதை அறிவித்து, அறிந்தும் இக்கலியுகத்தில், பின் இவை அறிவித்த நாளிலிருந்தே, அனைவரும் ஓடோடி, அறிந்தும் தாயின் மடியிலே இருக்கின்றேன் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (இந்த கலியுகத்தில் மக்கள் அவ்வளவுதான் இறைவனை மறந்து போயிடுவாங்க. கஷ்டங்கள் அது வரும்போது இறைவன் நினைக்க மாட்டாங்க. அப்படின்னு சொல்லிட்டு என்ன பண்ணாங்களாம்? பாடுனாங்க பாருங்க - ஐயப்பன் , முருகன் ,பிள்ளையார் , நாராயணர் - இவங்க எல்லாம் என்ன செஞ்சாங்களாம் ? அம்மா நீங்க மட்டும் எனக்கு போதும் அம்மா. அப்படின்னு சொல்லிட்டு ஓடோடி வந்துவிட்டாராம்)
==================================
# சுவாமி ஐயப்பன் சபரிமலைக்கு ஏன் சென்றார்? - என்ற ரகசியங்கள்
==================================
தேரையர் சித்தர் :- ஆனாலும் இவைத்தன் அறிவித்து மீனாட்சி தாயை அறிந்தும் இவைத்தன், இப்படி இருந்தால், என்ன பின் அங்கங்கு அதாவது கஷ்டங்கள் என்று தெரிகின்றது. அறிந்தும் இவைத்தன் நீங்கள் அதாவது எங்கேயோ மறைந்து வாழுங்கள். அப்பொழுது உங்களைத் தேடியே அடைந்து வந்தால் அவ் பாவங்கள் தீரும் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப மீனாட்சி அம்மா என்ன சொல்றாங்க?. அப்பா வேணாம்ப்பா. என் கையில இருக்காதீங்க. நீங்க தூர, தூரமாக போயிடுங்க. நீங்க மறைஞ்சு தூர தூர போய் இருங்க. உங்களை தேடி வர முடியாது. அப்படி வந்தாலும், தேடி வந்தா, ஆசீர்வாதம் கொடுங்க. தேடி வரட்டும்) .
தேரையர் சித்தர் :- முதலிலே ஐயப்பன் ஓடோடி சென்றுவிட்டான்.
தேரையர் சித்தர் :-முதல்ல இதை சொன்னதுமே யாரு? மீனாட்சி அம்மா சொன்னதுமே, சுவாமி ஐயப்பன் ஓடோடி சபரி போய்விட்டார் )
==================================
# திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ரகசியங்கள்
=================================
தேரையர் சித்தர் :- முருகனே அழுதான். ஐயோ தாயே என்னால் உன்னை விட்டு பின் போக முடியாது. அதனால் இங்கேயே.
சுவடி ஓதும் மைந்தன் :- (போக முடியாது அம்மா உன்னை விட்டு என்ன நான் இங்கேவே இருக்கிறேன் அம்மா இருந்து ஆசீர்வாதம் கொடுமான்னு)
தேரையர் சித்தர் :- அழுது, தாய் அவளுக்கு தெரியும். பின் பிள்ளை அழுதால், இருந்து விடு என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப மீனாட்சி தாய் என்ன சொல்லிட்டாங்க. சரிப்பா. என்னை சுற்றியே இருப்பா என்று சொல்லிவிட்டார்கள். ஐயா புரியுதுங்களா? மீனாட்சி அன்னை பக்கத்திலே இருந்து, அதாவது மதுரை அருகில் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை இங்கேயே இருந்து , முருகனே நீ இங்கு வருபவர்கள் பாவத்தை எல்லாம் நீக்கிவிடு என்று சொல்லிவிட்டார்கள் )
==================================
# பிள்ளையார்பட்டி ரகசியங்கள்
=================================
தேரையர் சித்தர் :- இவை அறிவித்து பின் வாலோனும் அறிந்தும் அதாவது தாயே இவனுக்கு மட்டுமா? யானும் இங்கேயே இருக்கின்றேன் என்று.
தேரையர் சித்தர் :- (பிள்ளையாரிடம் மீனாட்சியம்மை) ஆனாலும் நீ இங்கிருந்தால் பின் (முருகனுடன்) சண்டையிடுவாய். சற்று தூரத்தில் இரு. அது தான் பிள்ளையோன் பட்டி.
சுவடி ஓதும் மைந்தன் :- ( பிள்ளையார்பட்டி. அப்ப பிள்ளையார் என்ன சொல்றாரு, நானும் இங்கே இருக்கிறேன் அம்மா. முருகப்பெருமான் மாதிரி மதுரையில் , நானும் இங்கேயே இருக்கிறேன் என்று சொன்னாராம். ஆனால் மீனாட்சி அம்மாவோ, இல்லப்பா நீ வாலு பையன். அதாவது மீனாட்சி அம்மா சொல்றாங்க. நீ மதுரை இங்க இருந்தா முருகனோடு சண்டை போடுவ. அதனால நீ கொஞ்சம் தொலைவில் இருந்து, பிள்ளையார்பட்டி அங்க போயிடுப்பா என்று சொல்லிட்டாங்க. )
==========================================
# (1) மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், (2) சபரி மலை , (3) திருப்பரங்குன்றம், (4) பழமுதிர்சோலை, (5) பிள்ளையார்பட்டி - அடிக்கடி சென்று கொண்டே இருந்தால் பாவங்கள் மாறி, புண்ணியங்கள் தொடர்ந்து உங்களுக்கு அனைத்தும் கிட்டும்.
==========================================
தேரையர் சித்தர் :- இதைத்தன் அறிந்தும், இவைத்தன் புரிந்தும், சென்று கொண்டே இருந்தால், பாவங்கள் மாறி, புண்ணியங்கள் தொடர்ந்து உங்களுக்கு அனைத்தும் கிட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சபரிமலைக்கும், திருப்பரங்குன்றம் பக்கத்துல இருக்கற பழமுதிர்சோலை எல்லாம் போயிட்டே இருந்தீங்கன்னா, அப்புறம் பிள்ளையார்பட்டி போயிட்டே இருந்தீங்கன்னா, என்ன ஆகும்?
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- பாவங்கள் தொலையும்.
சுவடி ஓதும் மைந்தன் :- பாவங்கள் தொலையும்.
தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிவித்து இங்குதான் ஞானம் சூட்சமம். அறிந்தும் ஏன் இங்கு, பின் பெருமான் வந்தான்? அதாவது நாராயணன்?
தேரையர் சித்தர் :- இவை அறிவித்து, சற்று சிந்தியுங்கள். அப்பொழுதுதான் வாக்குகள் தொடரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (நான் சொல்லிட்டேன். சிந்தியுங்க அப்பதான் வாக்கு நான் சொல்லுவேன். ஏன் பெருமாள் அவர் இங்க வந்தார்? இதுதான் ரகசியம். பெருமாள் வந்தார் இல்லயா? ஏன் வந்தார்?)
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (அனைவரும் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தனர். விடை காண முயன்றனர் அங்கு…சில மணித்துளிகள் அமைதி )
தேரையர் சித்தர் :- தாயே, தந்தையே, இவை அறிவித்து, அறிந்தும் நாராயணன் தெரிந்துவிட்டது. ஓடி ஓடி அறிந்தும் இவைத்தன் உணர்ந்தும். அதாவது மீனாட்சி தாயிடமே, தாயே கலியுகம் தொடர்ந்தும் அறிந்தும் இவைத்தன் பிறந்துவிட்டது மனிதன் பணத்துக்காக ஏங்குவான். என்னால் அங்கிருந்து கொடுக்க முடியாது. அதனால் இங்கே இருக்கின்றேன் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( பெருமான் ஏன் வந்தாருன்னா புரியுதுங்களா? கலியுகம் தொடங்கியாச்சு. அம்மா கலியுகம் தொடங்கியாச்சு. அதனால எல்லாமே பணம் தான் கேட்பான். அம்மா நான் வரமாட்டேன். நான் இங்கே இருக்கிறேன் என்று பெருமாள் மீனாட்சி தாயிடம் கூறுகிறார். )
===========================
# பிச்சாடனார் - ரகசியங்கள்
===========================
தேரையர் சித்தர் :- இவை அறிவித்து இங்கே இரு. ஆனாலும் உன் ஆன்மா அங்கே அறிந்தும். நீ பல வடிவானவன் அல்லவா? அதனால் அங்கேயும் இரு. இங்கேயும் இரு.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப, நீ பல வடிவம். நீ விளையாட்டு பல வடிவம் ஆனவன் நீ. பல வடிவம் என்றல் உங்களுக்கு தெரியும். அவதாரங்கள். அதனால பரவாயில்லப்பா. எல்லோரும் கஷ்டப்படுவாங்க. இருந்தாலும் மதுரை, இங்கேயும் இரு. திருப்பதி, அங்கேயும் இரு. )
தேரையர் சித்தர் :- அப்படி இல்லை. அறிந்தும் எவை என்றும் புரிந்தும், யானே பிச்சை எடுப்பவன் அறிந்தும் கூட. அதாவது பின் எப்படி என்று?
சுவடி ஓதும் மைந்தன் :- (அம்மா நானே பிச்சை எடுப்பவன் அம்மா என்று பெருமாள் கேட்கிறார். எப்படியம்மா நான் கொடுக்க போறேன் கலியுகத்தில்?)
தேரையர் சித்தர் :- அறிந்தும் அதேபோல் நிச்சயம் நில். உன்னிடத்தில் பிச்சை போடுவார்கள். அதைத்தன் எடுத்து அனைவருக்கும் கொடு. ஐந்து ரூபாய் என்றாலும் அது பல மடங்காக பெருகி விடும். இதுதான் பிட்சாடனம்.
சுவடி ஓதும் மைந்தன் :- (பிச்சாடனார் தான்.. யாரு? பெருமான். மதுரை மீனாட்சி கோயிலில் அங்க பிச்சை எடுக்கிறார் பார்த்தீங்களா? பிச்சாடனார். அப்ப மீனாட்சி அம்மா என்ன சொன்னாங்க ? பெருமாளே , நீ பிச்சைக்காரன் தானே? அங்க போய் பிச்சை எடு. உனக்கு ஒரு அஞ்சு ரூபாய் மக்கள் கொடுத்தால், அது கோடி ஆயிடும் உனக்கு. நீ திருப்பதி அங்க போய் எல்லோருக்கும் அதை கொடு என்று சொல்லிவிட்டாங்க )
தேரையர் சித்தர் :- இல்லை. இல்லை. அறிந்தும் அப்பொழுது, ஈசனையும் வரச் சொல்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்பா நான் அது மாதிரி செய்ய மாட்டேன். மனுஷன் இடம் நான் பிச்சை எடுக்க மாட்டேன். ஈசனையும் வர சொல் என்று மீனாட்சி தாயிடம் பெருமாள் கூறினார்)
தேரையர் சித்தர் :- (மீனாட்சி தாயும் )அறிந்தும் எதை என்று அறிய, சரி என்று ஒன்றாக இணைந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப சரி என்று, பெருமாளும் , ஈசனும் ஒன்றாக இணைஞ்சிட்டாங்க - பிச்சாடனார் வடிவத்தில் )
தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும் புரிந்தும், இதைத்தன் அறிய, அதாவது பின் யாங்கள் ஒன்று இணைந்து விட்டோம். பிரம்மாவோ தனியாக இருக்கின்றான் தாயே.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப நாங்க ரெண்டு பெரும் வந்துட்டோம். பிரம்மா தனியா நினைக்கிறாங்கன்னு )
===========================
# திருப்பதி சென்று , பின் மதுரையில் மீனாட்சி அம்மன் திருவடிகளை வணங்கும் அதி ரகசியங்கள்
===========================
தேரையர் சித்தர் :- பறந்து சென்றான் ( பெருமான் திருப்பதிக்கு).
சுவடி ஓதும் மைந்தன் :- ( நான் மனிதர்கள் கையில் பிச்சை வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு , பெருமாள் திருப்பதிக்கு பறந்து சென்றார் )
தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிவித்து, அறிந்தும் இதைத்தன் முட்டி மோதி அறிந்தும், இவைத்தன் எதை என்று அறியா, பின் பின் இவை என்று உணர்ந்து, பின் அதாவது (திருப்பதி) மலையதனிலே முட்டி, மீண்டும் அறிந்தும், அதாவது நாராயணன், தன்னை அறிந்தும், இவைத்தன் மீண்டும் (மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்) இங்கு வந்து சேர்ந்து விட்டான்
சுவடி ஓதும் மைந்தன் :- ( மதுரை மீனாட்சி அம்மையிடம் இருந்து திருப்பதி அங்கு பறந்து சென்றார் பெருமாள். சென்ற வேகத்தில் திருப்பதி மலையில் முட்டி மோதி மீண்டும், போன வேகத்திலேயே, மதுரை மீனாட்சி அம்மையிடம் திரும்பி வந்துவிட்டார்)
தேரையர் சித்தர் :- இவை அறிவித்து இதனாலேயே அறிந்தும் தொடர்ந்து தன் பின் நிச்சயம் பின் அதாவது பின் திருப்பதி தன்னில் கூட சென்று கொண்டே இருந்தால், சில அடிகள் விழுந்து அனைத்தும் கிட்டிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (இதனால்தான், திருப்பதிக்கு போனா என்ன ஆகும்? அடி விழுகும். ஏன் என்றல் பெருமாள் இவர் மண்டை முட்டி தானே இங்க வந்தார். இல்லையா? அதனால் உங்களுக்கு அடி விழுந்து தான், உங்கள் விதி மாற்றி காசு கொடுப்பார்)
========================================
# பிட்சாடனர் = சிவன் + திருமால் + பிரம்மா.
========================================
தேரையர் சித்தர் :- இவை அறிவித்து இதைத்தன் மூன்றாக அறிந்தும் இணைந்தவர்களே
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்போ , பிட்சாடனர் யார்? சிவன் , திருமால் , பிரம்மா - இவ் மூவரும் இணைந்ததே பிட்சாடனர் வடிவம் )
தேரையர் சித்தர் :-அறிந்தும் ஞான சூட்சமமாக இருக்கின்றான் பிரம்மன் மீனாட்சி தன்னில்.
========================================
# மதுரை கூட்டு பிரார்த்தனை ரகசியங்கள்
========================================
தேரையர் சித்தர் :- இதனாலே விதியை மாற்ற உங்களை வரச் சொன்னேனே அறிந்தும் எதை என்று புரிய என் அகத்தியன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இதனாலதான் அகத்திய மாமுனிவர் உங்களை அனைவரையும் அடிக்கடி கூட்டு பிரார்த்தனைக்கு , இங்க மதுரைக்கு அடிக்கடி வர சொல்கிறார். அடிக்கடி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் , இங்க வந்து கர்மத்தை நீக்கவேண்டும். )
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- ( நிலைமையை உணர்ந்து - கை தட்டல்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- (அடிக்கடி உங்களை ஏன் இங்க வரவழைக்கிறார் ஏன் என்றால், எல்லா கடவுளும் இங்கதான் இருக்காங்க மீனாட்சி அம்மன் கோயில்ல தான் இருக்காங்க. அதனால இங்க வந்தா உங்கள் விதியை மாறும்)
தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிவித்து அறிந்தும் நீங்களும் செய்தீர்களே அறிந்தும் இவைத்தன் காசுகளை அதை யான் கொடுக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- (சற்று முன் நீங்கள் என்ன செய்தீர்கள் ? பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள், அவர்களுக்கு காசு கொடுத்தீங்க இல்லையா ? அதை தேரையர் சித்தர் நான் உங்களுக்கு திருப்பி கொடுக்கிறேன். இப்ப அஞ்சு ரூபாய் கொடுத்தீங் என்றால், நான் பத்து ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்கின்றார்)
==============================================
# கூட்டு பிரார்த்தனை அடியவர்களுக்கு - மகத்தான ஒரு பாக்கியம்.
==============================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிவித்து, இங்கு தன் அறிந்தும், இவைத்தன் புரிய, பின் (திருப்பதி) அங்கிருந்து எடுத்து அது என்று அறிய பின் மீனாட்சி தாயிடம் காண்பித்து, அனைவருக்கும் அடுத்துத் தடவை (கூட்டுப் பிரார்த்தனையில்) கொடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஐயா என்ன சொல்கிறார் தெரியுங்களா? யாராவது ஒருத்தர் திருப்பதி சென்று அங்கு காசு சில்லறை வாங்கி, அங்கிருந்து சில்றையை எல்லாம் எடுத்துட்டு வந்து, மீனாட்சி அம்மா கையில காண்பிச்சு, அடுத்த கூட்டு பிரார்த்தனையில் வரும் அடியவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றார்)
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (கை தட்டல்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- (அவ்வளவுதான். உங்களுக்கு திருப்பியும் வந்து தேரையர் சித்தர் கொடுக்க போறார்.)
தேரையர் சித்தர் :- இதை அறிவித்து, பின்பு யான் உரைப்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( திருப்பதி சென்று , சில்லறைகளை சமர்ப்பணம் செய்து , பின்னர் மீனாட்சி அம்மனிடம் சமர்ப்பணம் செய்து , பின் கூட்டு பிரார்த்தனை அடியவர்களுக்கு பரிசுத்த உயர் அன்புடன் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் இதர ரகசியங்களை பின் உரைப்பேன் என்று தேரையர் சித்தர் சொல்கிறார் அய்யா. எல்லோருக்கும் புரியுதுங்களா ஐயா? )
=====================================
# அன்பு செலுத்தினால் புண்ணியம் வருமே.
=====================================
தேரையர் சித்தர் :- நாய் போல் திரிவானே காசுகளுக்காக மனிதன் கலியுகத்தில்.
தேரையர் சித்தர் :- ஆனால் காசு கொடுத்தால் அறிந்தும் புண்ணியம் வருமா என்ன?
தேரையர் சித்தர் :- வராதே. அன்பு செலுத்தினால் புண்ணியம் வருமே.
=====================================
# அன்பாலே காசை வெல்வீர்.
=====================================
தேரையர் சித்தர் :- அறிந்தும் அன்பாலே காசை வெல்வீர்.
=====================================
# பணம் ரகசியங்கள் - அன்பாக பிறருக்கு உதவுக.
=====================================
தேரையர் சித்தர் :- எவ்வன்பு இப்பொழுது கொடுத்தீர்களே அறிந்தும் இவை அன்பு. இதைத்தன் வென்றுவிட்டால் காசு. இதைத்தன் சூட்சமாகவே சொன்னேனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இப்ப நீங்க அன்பு காமிச்சீங்க அன்பு. இதுதான் காசு. அந்த அன்பு காண்பித்தீர்கள் என்றால் , என்ன ஆகும்? அவர்களுக்கு நாம் செய்த உதவிதான் காசு. அந்த காசு உங்களுக்கு பல மடங்கு பல மடங்கு இறைவன் திருப்பி தருவார் என்று சொல்கின்றார். பிரதிபலன் பாராமல் அன்பு கட்டவேண்டும். அவ் அன்பே , உங்களுக்கு திரும்பி வரும். )
தேரையர் சித்தர் :- இவை அறிவித்து மனிதனிடத்தில் யான் பெருக்குகின்றேன் என்று சொன்னால், கர்மத்தையும் பெருக்கி, காசுகளும் போய்விடுமடா தரித்திர மனிதா.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அன்பை விட்டுவிட்டு , வெறும் பணத்தின் பின்னால் போனால் தரித்திரம். இருக்கும் காசுகள் போய்விடும். )
தேரையர் சித்தர் :- இவைத்தன் காசுகளுக்காக இப்படி ஏமாற்றுவான் மனிதன்.
தேரையர் சித்தர் :- அறிந்தும் இவனுக்கு பணத்தை வைக்கத் தெரியவில்லை என்று இறைவன் பிடுங்கிக் கொள்வான் அழகாக.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒருவர் தாத்தாவிடம் "₹20 கொடு, நாளைக்கு ₹40 தருகிறேன்" என்று சொல்கிறார். தாத்தா காசுக்காக ஆசைப்பட்டு, "நாளைக்கு இரட்டிப்பு கிடைக்கும்" என்று நம்பி பணம் கொடுக்கிறார். ஆனால் அந்த மனிதன் ஏமாற்றி, வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஏமாற்றி க்ளோஸ் செய்து விடுகிறான். இதுபோன்ற பேராசை கொள்பவர்களுக்கு இறைவன் தண்டனையாக அவர்களிடம் உள்ள பணத்தை பிடுங்கி கொள்வர். சித்தர் வாக்குகளை கேட்டு, நேர்மையாக, அன்புடன் புண்ணியங்கள் செய்து வாழ்ந்தால், வாழ்க்கை வளமாகும்.)
கூட்டு பிரார்த்தனை அடியவர் :- ( தேரையர் பெருமான் என்ன சூட்சமமா சொல்றாங்கன்னா, இப்ப நம்மகிட்ட பணம் இருந்தது. அவங்க ஒரு சின்ன ஒரு யோசனை கொடுத்தாங்க இல்லாதவங்களுக்கு கொடுங்கன்னு ஒரு யோசனை கொடுத்தாங்க. நம்மகிட்ட இருந்த பணத்தை கொடுத்துட்டோம். இப்ப அதை பல மடங்கா நமக்கு திருப்பி தரேன்னு சொல்றாங்க. அது வேற விஷயம். இதே போல நீங்க என்னன்னா, கலியுகத்துல மனுஷன் ஏமாறுற இடத்துல தான் போய் பணத்தை கொடுக்கிறான். அங்க கொடுக்காதீங்கப்பா. பிறருக்கு நீங்க உதவி செய்யுங்க. மனசு வைத்து நீங்க பிறருக்கு செய்யக்கூடிய இந்த உதவி இருக்கு பாருங்க, அன்பு இருக்கு பாருங்க, அங்க பணம் இல்ல அது.)
கூட்டு பிரார்த்தனை அடியவர் :- ( ஒரு ரூபாய் கொடுத்தாலும் அது அன்புதான். அன்பா பாருங்க. பணமா பார்க்காதீங்க. ஐயோ என் காசு போகுதேன்னு நினைக்காதீங்க. அந்த அன்பை நீ ஒரு ரூபாய் கொடுத்தேன்னா, பல மடங்கு பல மடங்கு திருப்பி கொடுத்துருவாரு. நீ கடனா கொடுத்தேன்னா முடிஞ்சது லைஃப். ஒருத்தன் கஷ்டப்பட்டு உன்கிட்ட வந்து ஐயா கொஞ்சம் உதவி பண்ணுன்னு சொன்னா, உங்களால இயன்றதை கொடுங்க. இல்லைன்னு சொல்லிடாதீங்க. அதுதான் சொல்றாங்க. )
தேரையர் சித்தர் :- இவைத்தன் இருப்பவனோடுமே கேட்பான் பிச்சை என்றாலும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (பிச்சைக்காரன் யார்கிட்ட கேட்பாரு? இருப்பவன் இடம் தான் கேட்பார். அவருக்கே தெரியும் இல்லாதவர்களிடம் கேட்க மாட்டார். )
தேரையர் சித்தர் :- அறிந்தும் இவைத்தன் இறைவனும் அனுப்புவான்
சுவடி ஓதும் மைந்தன் :- (பிச்சைக்கார் அவர்களை , உங்களிடம் கடவுள் தான் அனுப்புகிறார். உங்களை சோதனை செய்ய. இவனுக்கு கொடுக்கின்றன இல்லையா என்று சோதனை செய்ய)
தேரையர் சித்தர் :- அறிந்தும் கலியுகத்தில் ஒரு நாணயத்தை மறந்து பல கோடிகளை ஏமாற்றுவன் கொடுப்பான்
சுவடி ஓதும் மைந்தன் :- (அந்த பிச்சைக்காரனிடம் ஒரு ரூபாய் கொடுக்குறதுக்காக தயங்குவான் மனுஷன். ஏமாற்றுக்காரனிடம் பல கோடி கொடுப்பான். உங்களை தேடி யாராவது உதவி ன்னு வந்துட்டா, ஒரு ரூபாய், உங்க கையில சில்ற மாத்தி வச்சுக்கோங்க எல்லாரும். ஒரு ரூபாய் உங்களை தேடி யாராவது உதவின்னு வந்துட்டா, தயவு செஞ்சு கொடுத்துருங்க. இல்லன்னா இறைவன் மறைமுகமா பிடுங்கி கொள்வர் என்று சொல்கின்றார். அந்த ஒரு ரூபாய் நீங்க யோசித்தீங்கன்னா ₹1000 ₹10000 கோடி ரூபாயும் உங்களிடம் இருந்து போயிடும்)
தேரையர் சித்தர் :- அனுபவம் சாலச் சிறந்தது. இங்கு இருக்கின்றார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அது மாதிரி செய்பவர்களும் இங்க இருக்கிறாங்க. நிறைய பேர்)
தேரையர் சித்தர் :- இவைத்தன், நிச்சயம் வரும் நாராயணன் இடத்திலிருந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நீங்க எல்லோரும் இன்னைக்கு இந்த சிறுவர்களுக்கு பண உதவி செய்தீர்கள் இல்லையா ? அதை பல மடங்காக, பகவான் நாராயணனிடம் இருந்து கொடுப்பார். ஐயா யாராவது கூட்டுப் பிரார்த்தனை குழுவில் இருந்தது , சில்லறையை திருப்பதிக்கு கொண்டு சென்று, பகவான் பெருமாள் நாராயணரிடம் சமர்ப்பணம் செய்து , திருப்பதியில் இருந்து சில்றையை எடுத்து வந்து,பின் மீனாட்சி அம்மா கையில வச்சிட்டு, அதை ஒரு பேக் பண்ணி வைங்க. சரிங்களா. அடுத்த கூட்டுப் பிரார்த்தனை க்கு எல்லாருக்கும் வரும் பொழுது, அந்த சில்லறையை கொடுக்கணும் நம்ம. அது கொடுக்கும் பொழுது, என்ன பண்ணுவாரு, பல மடங்கா திருப்பி தருவார். பல மடங்கா அதுக்காக வழியை சொல்லுவாரு. அந்த காசு வாங்கிக்கினீங்கன்னா, அது என்ன பயன்படுத்தனும்னு தேரையர் சொல்லுவாரு. எப்படி அதை பல மடங்கா பெருக்கணும்னு சூட்சமத்தை சொல்லுவாரு அடுத்த வாக்கில்)
தேரையர் சித்தர் :- இதை இதைத் தன் உணர, அதை வைத்து பின் உதவிகள் செய்ய புண்ணியங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப நீங்க அதை வச்சு என்ன பண்ணனும்? பணம் வரும். அதை வச்சு என்ன பண்ணனும் புண்ணியம் செய்ய வேண்டும். )
தேரையர் சித்தர் :- இவைத்தன் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றலாம். பின் நிச்சயம் அனைவரும் சில தரித்திரங்கள் நீங்கும். அவரவர் பின் எண்ணங்கள் ஈடேறும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அதை வச்சுக்கிட்டு, அந்த திருப்பதியில் இருந்து வந்த ஒரு ரூபாவோ, ரெண்டு ரூபாவோ உங்களுக்கு ஏதாவது வரும். காசு அதை என்ன செய்யவேண்டும் ? புண்ணியம் மத்தவங்களுக்கு செய்யணும். கொஞ்சமாவது கொடுக்கணும். அதை கொடுத்து புண்ணியங்கள் அன்புடன் செய்தால் , உங்களின் எல்லா நோய்களும் தீரும். எல்லாம் நிரந்தரம் ஆகும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். )
தேரையர் சித்தர் :- இவைத்தன் ஏனடா? அறிந்தும் இவைத்தன் எத்தனை மந்திரங்கள்? என்ன ஜெபித்து? என்ன தெரிந்து கொண்டு எதனை பிதற்றுகின்றீர்கள்?.
சுவடி ஓதும் மைந்தன் :- (புண்ணியங்கள் செய்யாமல், இத்தனை மந்திரம் சொல்றீங்களே? எதுக்கு சொல்றீங்க? மந்திரத்தை சொல்லி பிதற்றினால், என்ன பலன் என்று கேட்கிறார். )
தேரையர் சித்தர் :- இவைத்தன் தெரியாமல் இறைவனை வணங்குவது பின் இறைவன் பின் கொடுக்காவிடில் இறைவன் இல்லை என்று சொல்வது மாய மனிதன். தரித்திர மனிதன். அழியும் மனிதன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் கிட்ட என்ன கேட்கணும்னு உங்களுக்கு தெரியவில்லை. எதையோ ஒன்னு நினைச்சுட்டு, நீங்க பாட்டு படிக்கிறேன், மந்திரம் சொல்றேன், அதை சொல்றேன், இதை சொல்றேன், என்னென்னத்தையோ நீங்க சொல்லிட்டு, கடைசியில் இறைவன் ஒன்னும் செய்யல ன்னு சொல்லிட்டு இருக்கீங்க மாய உலகில் பைத்தியக்காரன் அப்பா மனிதன் என்று சொல்கின்றாங்க.. )
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் தேரையர் சித்தர் உரைத்த மதுரை கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)
ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)


OM SRI AGATHEESAYA NAMO NAMAHA
ReplyDelete