இங்கு ஏமாந்து போக நிறைய மனிதர்கள் இருக்கும் பொழுது, நீ ஏன் தெரிந்தே மாட்டிக் கொள்கிறாய்? தவறாக வாழ்ந்தவர்கள், சம்பாதித்தவர்கள், அரசாங்கத்திடமும், கோவில் நிறைவாகத்திடமும் ஏமாந்து போகிறார்கள், தான் சேர்த்துக் கொண்ட கெட்ட கர்மாக்களை இங்கு தொலைத்து விடலாம் என்று. அவர்களுக்கு புரிவதில்லை, செயலின் விளைவு, தண்டனையாக இனிமேல்தான் வரப்போகிறது என்று.
ஏமாற்றப்படுகிறோம் என உணர்ந்து, அமைதியாக புன்னகைத்து கொடுத்து செல்வது பல கர்மாக்களை கரையவைக்கும். நீ ஏமாறுவது இல்லாதவனிடமாகட்டும். இங்கு கர்ம பரிவர்த்தனை நடைபெறுவதை காணலாம். எந்த கர்மாவை கரைத்தாலும், எப்படி கரைத்தாலும், பிரம்மஹத்தி தோஷம் சேராமல் பார்த்துக்கொள். இறையே இறங்கி வந்து அழித்து விடு என்று உத்தரவிட்டாலும், மறுப்பதே உன் கடமை. மனிதன் உருவாக்க பிறந்தவன், அழிக்கவல்ல. அவன் உருவாக்குவது நல்லதாக இருக்கட்டும். இறைவனும், சித்தர்களும் ஆசீர்வதித்து வழி நடத்துவார்கள்.
அகத்தியப் பெருமான் வாக்கு!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..... தொடரும்!

குருநாதர் அருளால் ஒரு பதிவு.
ReplyDeleteகிராமத்து நம்பிக்கைகளின் தெய்வீக உளவியல்.
https://youtu.be/P1hGm0kx8RI?feature=shared
வாசிப்பதற்கான விரிவான பதிவு :-
https://fireprem.blogspot.com/2025/11/blog-post.html?m=1
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete