அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - 05.10.2025 - பகுதி 6 (நிறைவு வாக்கு)
ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
அப்பனே அடுத்து, அண்ணாமலையில் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, பின் சாது சந்நியாசிகளுக்கு உடுத்த ஆடை தானம். அவை மட்டுமில்லாமல், சரியாகவே அறிந்தும் கூட, பின் பூஜை மகேஸ்வர பூஜை செய்வித்து மகிழ்விக்க, சித்தர்களும் அதை ஏற்றுக்கொண்டு சில பாவ வினைகள், பின் நிச்சயம் தன்னில் கூட.
உலகத்திற்காக, நிச்சயம் அவர்களும், பின் அதாவது ஞானிகளும் வருவார்கள் அப்பா. அப்பனே, இப்பொழுது ஆசிகள். பின் இதை தவறாமல் செய்யுங்கள். நிச்சயம், பின் என்னென்ன ஏது என்று அறிய உங்களுக்கு யாங்கள், பின் அனைத்தும் செய்ய தயாராகவே இருக்கின்றோம். ஆசிகள், ஆசிகள், பிள்ளைகளே.
குருநாதர் :- அடுத்து, எவை என்று அறிய, அங்கே பின் குடைதானமும் செய்ய நன்று.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் : - (திருவண்ணாமலையில் மகேஸ்வர பூஜை நடத்த வேண்டும். அதற்குப் பின், அங்கு இருக்கும் சாதுக்கள் மற்றும் சந்நியாசிகளுக்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும். வஸ்திர தானம் என்பது ஒரு வேட்டி, ஒரு துண்டு கொடுத்து, அவர்களுக்கு அறுசுவை உணவு , சாதம், இரு வகை ரசம், அறுசுவை உணவுகள் வழங்கி, அன்புடன் படைத்து சேவை செய்வது.அறிந்தபின், திருவண்ணாமலையில் குடை தானம் செய்ய வேண்டும்.)
குருநாதர் :- இவை என்று நிச்சயம் ஞானிகளும், பின் உங்களை ஆசீர்வதிப்பார். மீண்டும் எதை என்று அறிய, ஆசிகள் இன்னும் பலமாக வாக்குகளும் இருக்க நன்று. ஆசிகள், ஆசிகள், மீனாட்சி, பின் சொக்கநாதன், பின் இடமே, பின் அனைவரிடம் அறிந்தும் இதை புரிய, அனைவருக்குமே, பின் அவனுடைய ஆசிகள், பின் சமம்.
=================================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு நிறைவு
=================================================
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்திதான் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete