​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 7 November 2025

சித்தன் அருள் - 1985 - அன்புடன் அகத்தியர் - திருஅண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை இடைக்காடர் சித்தர் வாக்கு.- பகுதி 3


அன்புடன் அகத்தியர்  அருளால், அன்புடன் இடைக்காடர் சித்தர் உரைத்த வாக்கு - பகுதி 3 31.08.2025 - திருஅண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.- பகுதி 3

இடைக்காடர் சித்தர் :-  அப்பப்பா, பக்தி என்ற அதிர்ஷ்டம் வந்து விட்டால், நிச்சயம் பல அதிர்ஷ்டங்கள். அதாவது, நீங்கள் கேட்பீர்களே, இல்லம் என்று உங்களை தேடி வரும். பணம் உங்களை தேடி வரும். அனைத்தும் உங்களை தேடி வரும். ஆனால், நிச்சயம், பின் தேடி எதனை தேட வேண்டும் என்பது ? -  பக்தி அதிர்ஷ்டத்தை. 

சுவடி ஓதும் மைந்தன் :-   (அப்போ கேளுங்க...முதல்ல பக்தி என்ற அதிர்ஷ்டம் உங்க வாழ்க்கையில வந்துருச்சுன்னா, அதுவே எல்லா நல்ல விஷயங்களுக்கு துவக்கம். வீடு வேணும்னா? சரி, உங்க கையில ஒரு வீடு இருந்தா, இறைவன் இரண்டு வீடு கொடுப்பார். மூணு வீடு, நாலு வீடு... அப்படியே வந்து கொண்டே இருக்கும். அதே மாதிரி, நீங்க “பணம் வேண்டாம்”ன்னு சொன்னாலும், பக்தி அதிர்ஷ்டம் உங்க மேல இருக்கிறதால, இறைவன் அருளால் , பணம் தானாக வந்து கொண்டே இருக்கும். ஆனா, இவங்க எல்லாம் முன்னாடி, முதல்ல என்ன அதிர்ஷ்டம் வேணும்னு கேக்கணும். அதுக்கு பதில் — பக்தி.  அந்த பக்தி இல்லாம, எதுவும் நிலைக்காது. )

இடைக்காடர் சித்தர் :-  அப்பா, அறிந்தும், ஆனால், பக்தி என்ற அதிர்ஷ்டத்தை, (இறைவன்)  அனைவருக்கும் கொடுத்திருக்கின்றான். ஆனால், அனைவருமே அதை தூரே,   கண்டுகொள்ளவேயில்லை . 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (இறைவன் எல்லாருக்கும் பக்தி என்ற அதிர்ஷ்டத்தை வழங்கியிருக்கிறார். ஆனால், மக்கள் அதை மதிக்காமல் புறக்கணித்து விட்டார்கள்.) 

இடைக்காடர் சித்தர் :- அப்பா , அறிந்தும்  இவைகள் அப்பனே  பயன்படுத்துவதே இல்லை. அவ் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துவது என்று, நிச்சயம் சொல்கின்றேன். நிச்சயம், உழையுங்கள். உழைத்து வாழுங்கள். பின் தானாக 10% வந்துரும். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (உழைப்பே அடிப்படை. நீங்கள் முழுமையாக உழைத்தால், முயற்சி செய்தால், அதன் பலனாக இறைவனுடைய 10% அதிர்ஷ்டம் உங்களுக்கு வந்து சேரும்.) 
இடைக்காடர் சித்தர் :- அடுத்து நிச்சயம் கூட, மற்றவர்கள் ஏமாற்றக்கூடாது. அப்பொழுது 10% பக்தி அதிர்ஷ்டம் வரும். 
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (இறைவன் சொல்வது உழைப்பும் நேர்மையும். மற்றவர்களை ஏமாற்ற கூடாது. முதலில் உழைக்க வேண்டும் — எந்த வேலையும் நேர்மையாக  செய்யலாம்.  (1) உழைத்தால் 10% அதிர்ஷ்டம் வரும். (2) நேர்மையுடன் இருந்தால், இறைவன் மேலும்  10% பக்தி அதிர்ஷ்டம் தருவார்.  இப்போது மொத்தம் 20% அதிர்ஷ்டம்  உங்கள் கையில்.)
இடைக்காடர் சித்தர் :- மீண்டும் பொய் சொல்லக்கூடாது. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (அடுத்ததாக பொய் சொல்லக்கூடாது. பொய் சொன்னால் என்ன ஆகும் ?)

இடைக்காடர் சித்தர் :- அப்பா, நிச்சயம் பொய் சொன்னால், அவ் இருபதும் போய்விடும்.

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( பொய் சொன்னதால் இப்போ சம்பாதித்த 20% அதிர்ஷ்டம்  முழுவதும் இழந்து விடுகிறார். அதாவது இப்போ (0%) ஜீரோ தான்.)

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம் அடுத்து  பின் 30% (அதிர்ஷ்டம் ). நிச்சயம் அனைத்தும் தன் உயிர் போல் என்னுதல். 
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( அடுத்த 30% அதிர்ஷ்டம் என்பது — எல்லாவற்றையும் தன் உயிரைப் போல எண்ணும் மனநிலை. எல்லாரும் நம்மவங்க.  எல்லா ஜீவராசிகளையும் நாம உயிர் போல நேசிக்கணும். அந்த ஒற்றுமையும், கருணையும் தான் இந்த 30% அதிர்ஷ்டத்தின் அடிப்படை. இப்போது மொத்தம் உங்களிடம் 50% அதிர்ஷ்டம்  சேர்ந்து இருக்கும்) 

இடைக்காடர் சித்தர் :- அப்பப்பா, அறிந்தும் நிச்சயம், இவை யாரும் பயன்படுத்துவதே இல்லை. இதனால் அனைவருக்கும் பக்தி அதிர்ஷ்டம் பூஜ்யத்திலே  இருக்கின்றது. 

இடைக்காடர் சித்தர் :- எதையும் பயன்படுத்தாமல், இறைவன் அதாவது தந்தையை நினைத்தால் , தந்தை அனைத்தும். செய்வான். ஆனால், நிச்சயம் அறிந்தும் பின் புரிந்தும் இதனால்  நிச்சயம் நீங்கள் தந்தை பேச்சையே கேட்பதில்லையே !!!! . அப்பொழுது, நிச்சயம் என்ன செய்வான்  தந்தை உங்களுக்கு?  இங்கு தந்தை என்பவன் இறைவன் என்று வைத்துக்கொள்ளுங்கள். 
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ( அப்போ கேளுங்க... ஒரு நிமிடம் உங்கள் அம்மாவை , அப்பாவை நினைச்சுப் பாருங்க. அவங்க உங்களுக்கு எவ்வளவு செஞ்சிருக்காங்க? ஒரு குழந்தை தன் அம்மா , அப்பாவோட வார்த்தையை கேட்டால் , என்ன பண்ணுவாங்க? சாப்பாடு வேண்டும் என்றால் , உடனே அந்தக் குழந்தைக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பாங்க . தேவையானதெல்லாம் — உடை, உணவு, பாதுகாப்பு — எல்லாம் அவங்க தருவாங்க. ஏனென்றால், அது தான் அப்பா. ஆனா, அந்த அப்பாவை நீங்க, அவர்களை புறக்கணித்தால், நம்மை நேசிக்கிற ஒரே ஆதாரத்தை நாமே இழக்கிறோம் அவர் சொல்றதை கேக்காம விட்டீங்கன்னா? அப்போ என்ன ஆகும்? நம்மால் தான், நம்ம இழக்கிறோம். நம்ம வாழ்க்கையில நம்மை நேசிக்கிற ஒரே ஆதாரத்தை நாமே தொலைக்கிறோம். அதே மாதிரி தான். இறைவனையும் ஒரு தந்தை போலவே நினைக்கனும். அவர் சொல்ற வார்த்தையை நம்பனும். அவர் வழிகாட்டும் பாதையை நாம் பின்பற்றணும். அவரை நம்பினால் , அவர் நம்ம வாழ்க்கையில தேவையான எல்லாம் தருவார். அவர் கொடுப்பது உண்மையான பாதுகாப்பு, உண்மையான ஆசீர்வாதம். இறைவனை தந்தை போல நேசிக்கணும், நம்பிக்கையோட வாழணும்.
இறைவனை தந்தையாக நினைக்கணும். நம்ம தந்தை நமக்கு வேண்டியதை கண்டிப்பா கொடுப்பார்கள். அந்த நம்பிக்கை எப்ப வருகின்றதோ அப்போது  உங்களுக்கு எல்லாமே கிடைக்கும். ) 

இடைக்காடர் சித்தர் :-  நிச்சயம், அறிந்தும் புரிந்தும் , அதனால் இறைவனும் பின் சிரித்துக் கொண்டே இருப்பான். நிச்சயம், அதாவது ஒவ்வொருவருக்கும் பக்தி என்ற அதிர்ஷ்டத்தை கொடுத்து அனுப்பினோம். ஆனால், எவருமே  அதை நிச்சயம் உபயோகிக்கவில்லையே  என்று. 

எப்படியாப்பா?  இறைவனை  பின் நிச்சயம் புரிந்து வாழ, கற்றுக்கொள்ள,  எற்கனவே கொடுத்து அனுப்பியதை நீங்கள் தான்  சரியாக உபயோக  படுத்த வில்லை. பின் அப்பொழுது, யார் தவறு இது?. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (இறைவன் நமக்கு மிகப்பெரிய பக்தி அதிர்ஷ்டத்தை கொடுத்து அனுப்பி இருக்கிறார். ஆனால் நாம் அதை தூரத்தில் வச்சு, கவனிக்காம இருக்கிறோம். சின்ன  சின்ன அதிர்ஷ்டத்தை மட்டும் கேட்டு, பெரிய அதிர்ஷ்டத்தை மறந்துவிட்டோம். நம்ம வாழ்க்கையில் ஏற்கனவே இருக்கிற அந்த பெரிய பக்தி அதிர்ஷ்டத்தை நாம் உணரவில்லை என்றால், சின்ன ஆசைகள் — பணம், பொருள், வசதி — எதுவும் நமக்கு உண்மையான மகிழ்ச்சியை தராது. மிகப்பெரிய பக்தி அதிர்ஷ்டம் நம்மிடம் இருக்கிறது. அதை உணர்ந்து, நாம் பயன்படுத்தும் தருணம் தான் நமது வாழ்க்கையின் மாபெரும்  திருப்புமுனை. எனவே பக்தி என்ற அதிர்ஷ்டத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.) 

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம், பின் பிற அதிர்ஷ்டங்களை நிச்சயம் தந்து விடுகின்றான். ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்  புரிந்தும் கடைசியில் பார்த்தால், நிச்சயம் அதனால் பொய் என்று இறைவன் நிரூபிக்கின்றான். மீண்டும், அப்பொழுதுதான் பின் தூசி, அதாவது பட்டிருக்கிறதே,  இறைவன், அதாவது பக்தி அதிர்ஷ்டம் எடுத்து, அப்பொழுதுதான் பார்க்க முடியும். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ( இறைவன் நமக்காக எல்லா மாயா அதிர்ஷ்டங்களும் கொடுக்கிறார் — வீடு, நிலம், வசதி, செல்வம். நாம் கேட்டதெல்லாம் தருகிறார். ஆனால், அது நிஜமா? அந்த மாயையை உண்மை என்று நம்பும் நம்ம மனநிலையை இறைவன் கடைசியில் சோதிக்கிறார். அந்த மாயா அதிர்ஷ்டங்களை திருப்பி எடுத்து, “ஐயோ !!! இது எல்லாம் பொய்யா?” என்று நம்மை விழித்தெழச் செய்கிறார். அப்போதுதான், நம்ம உள்ளத்தில் தூசி தட்டி எழும் உண்மையான பக்தி என்ற அதிர்ஷ்டம். அதுதான்  நம்ம வாழ்க்கையின் உண்மையான அர்த்தம். அதை உணர்ந்தவனுக்கே இறைவன் முழுமையாக கிடைப்பார். மாயையை விட, பக்தியை நம்புங்கள். அப்போதுதான், உண்மை அதிர்ஷ்டம் உங்கள் வாழ்க்கையில் ஒளிரும். பக்தி அதிர்ஷ்டம்  அதை முதலிலேயே கையில் எடுத்திருந்தால் …….)
இடைக்காடர் சித்தர் :- அப்பப்பா, உங்கள்  தவறுகள் நிச்சயம் தன்னில் கூட இல்லைப்பா. அப்பா, சொல்லித் தர ஆள் இல்லைப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (உங்கள்  மேல் தவறு இல்லை. உண்மை சொல்வதற்கு ஆள் இல்லை.)

இடைக்காடர் சித்தர் :- அப்பப்பா, இறைவன் பெயரை வைத்து ஏமாற்றுபவர்கள் தான் அதிகம் அப்பா. 

இடைக்காடர் சித்தர் :- அப்பனே இப்படி இருக்க, அப்பனே எப்படி அப்பா  இறைவனை நம்புவார்கள்? . இறைவனும் கூட, அப்பனே அதாவது உங்களை  அழகாக இறைவன் அனுப்பினான். ஆனால், பின் நீங்கள் இப்படி இருந்தால், இறைவனுக்கே அவமானம். அதாவது, மற்றவன் திட்டிட்டு செல்வான். இறைவனை  நம்புகின்றானா என்று? 

=======================================================
 #          உங்கள் மூக்கில் -   இல்லம் அதிர்ஷ்டம் உள்ளது          #
=======================================================

இடைக்காடர் சித்தர் :- அப்பா, அறிந்தும் இன்னும் அதிர்ஷ்டத்தை அதாவது மூக்கில் அப்பா, அதிர்ஷ்டம், பின் இல்லம் அதிர்ஷ்டம் இருக்கின்றது, பின் கோபப்பட்டால், அவ் அதிர்ஷ்டம் தானாக சென்று விடும்.  இதை யார் கற்பிப்பார்கள் ? 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ( உங்கள் வீடு அல்லது இல்லம் வரும் அதிர்ஷ்டம் உங்கள் மூக்கின் மேலே உள்ளது.  நீங்கள் கோபப்படாமல் இருந்தால், அமைதியா இருந்தால், இல்லம் யோகம், வீட்டு யோகம், அது உங்களுக்கு தானாக கிடைக்கும். இவ் ரகசியத்தை யார் சொல்லிக் கொடுப்பாங்க? என்று கேட்கின்றார் அய்யா. மூக்கின் மேலே உள்ள உங்கள் இல்லம் அதிர்ஷ்டம்,  நீங்க கோபப்பட்டா, உங்களை விட்டு தானாக போய்விடும். அதனால், எது வந்தாலும், யார் என்ன பண்ணாலும், அமைதியா போங்க அம்மா , அமைதியா போங்க அய்யா)
 

=======================================================
 #      பொய் சொன்னால்  -   பணம் உங்களிடம் தங்காது        #
=======================================================

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம், அடுத்து நிச்சயம் பொய். வாயில் பொய் வருவதென்றால், நிச்சயம் நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள். பணம் உங்களிடம் தங்காது. 

=======================================================
 #   நிலம் வாங்கும்  அதிர்ஷ்டம்    -   கண்களில் இருக்கிறது   #
=======================================================

இடைக்காடர் சித்தர் :- அப்பப்பா, அத்தனை அதிர்ஷ்டங்கள், அப்பா, நிலம் வாங்கும் அதிர்ஷ்டம், அப்பா, கண்களில் இருக்கிறது. கண்களை சரியாக கூர்ந்து, இறைவனை கண்டால், அவ் அதிர்ஷ்டம் தேடி வரும். ஆனாலும், நிச்சயம் பின், அதாவது அநியாயங்களை  கண்டு, நிச்சயம் எதை என்று புரிந்து, பின் கூர்ந்து கவனித்து, அமைதியாக இருந்தால், நிச்சயம் பின் நிலத்தினால் , பெரும் பாதிப்பு ஏற்படும். 


=======================================================
 #   நெற்றியில்   இறைவனுடைய  அதிர்ஷ்டம்  இருக்கிறது    #
=======================================================

இடைக்காடர் சித்தர் :-  அப்பா, நிச்சயம் இன்னும் அப்பா, பின் நெற்றியில் தான் இறைவனுடைய அதிர்ஷ்டம். அப்பா, இவையெல்லாம் கடந்து வந்தால், இறைவன் சரியாக உன் நெற்றியில் அமர்வான்  அப்பா, அனைத்தும் கொடுப்பான் அப்பா.  நிச்சயம் எப்பொழுது இறைவன் நெற்றியில் அமர வைக்க போகிறீர்கள்? 

இடைக்காடர் சித்தர் :- அப்பா, அறிந்தும் இதைத்தன் உணர ஆள் இல்லை. உங்களுக்கு சொல்லித் தரவும் பின், நியாயமானதை சொல்லித் தரவும் இங்கு ஆள் இல்லை. அனைத்தும் காசுகளுக்காக  சொல்லிக் கொடுத்து, பொய் சொல்லிக் கொடுத்து, எதை எதையோ கற்பித்துக் கொண்டிருக்கையில், உண்மையிலேயே நீங்கள் நிச்சயம் (பாவம் அப்பா). ஆனால் அவன் அவன் பாவம், அவன் நிச்சயம் பின் அழிவதற்கு சமம். 

இடைக்காடர் சித்தர் :- அப்பப்பா, இன்னும் கலியுகத்தில் பொய்கள் தான் பக்தியில் நுழைந்து கொண்டே . அப்பா, இறைவன் மீது பயமே இல்லை அப்பா. 

இடைக்காடர் சித்தர் :- அப்பப்பா, நிச்சயம் தன்னில் எதை என்று அறிய சிறு வயதிலிருந்தே, அப்பப்பா, நிச்சயம் பின், அதாவது தவறு செய்தால், இறைவன் நிச்சயம் தண்டிப்பான் என்று நிச்சயம். அப்பனே , சொல்லித் தருவார்கள். அப்பா, இப்பொழுதும் நிச்சயம் அவைதான் நடக்கப்போகின்றது. 

““““   பெரும் தண்டனையாக இருக்கும். ””””””  

இடைக்காடர் சித்தர் :- பின் இன்னும், அதாவது இன்னும் சரியவனுக்கு பரிகாரங்களாம், இன்னும் கேதுவானவனுக்கு பரிகாரங்களாம், இன்னும், இன்னும், பின் இவையெல்லாம் நிச்சயம். ஆனால் நீங்கள் சரியாக இருந்தால் அப்பா, ஏனப்பா பரிகாரங்கள் செய்யப் போகின்றீர்கள்? அப்பொழுது நீங்கள் திருடர்கள் தானே? 


இடைக்காடர் சித்தர் :- அறிந்தும் மானிடா எதை என்று புரிய, இறைவன் பொருளுக்கு ஆசைப்படுகின்றீர்கள் நீங்கள். நிச்சயம் பணம் என்பது இறைவனுடைய தான். நிச்சயம் நிலம் என்பது கூட இறைவனுடையது தான். 



இடைக்காடர் சித்தர் :-ஆனால் அவை (அனைத்தும்), தந்தை நீங்கள் கேட்காமலேயே கொடுப்பான். ஆனால், பொருத்தாகவே வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( மனிதன் ஆசைப்படும் பணம், நிலம் போன்றவை அனைத்தும் இறைவனுடைய சொத்துகள். அந்த சொத்துக்கள் இறைவனுக்கே சொந்தமானவை, அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும். ஆனால் மனிதன் அவற்றை உரிமையுடன், நேர்மையான வழியில் , பொறுமையாக இருந்து  பெற வேண்டும்; ஏமாற்றம், திருட்டு போன்ற குறுக்கு வழிகளில் அல்ல. இறைவனுடைய சொத்துக்கு ஆசைப்படுவது தவறு அல்ல, ஆனால் அதை நேர்மையான முறையில், இறைவனின் அருளால் பெற வேண்டும்.)

இடைக்காடர் சித்தர் :- அறிந்தும் புரிந்தும் தாயே , தந்தையை என்று உங்களுக்கு அழைக்கின்றேன். சொல்லித் தர ஆள் இல்லை, பொய் சொல்வதற்கு தான்  ஆள் இருக்கின்றது. 

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம் அங்கு சென்றால். அவை நடக்கும், அங்கு சென்றால் இவை நடக்கும்? அவன் ஆனால் மரணத்தை நிச்சயம் வெல்ல முடியாது.  யாராவது சொல்லச் சொல் ? 


இடைக்காடர் சித்தர் :- நிச்சயம், உயிர் எப்பொழுது போகப்போகும் என்று யாருக்கும் தெரியாது அப்பா.  சித்தர்கள் எங்களுக்குத் தெரியும். 


இடைக்காடர் சித்தர் :- நிச்சயம் அறிந்தும்,  அனைத்தும், பின் பணத்துக்காகவே இவ்வுலகத்தில், பொய் சொல்லி நடிப்பான்  அப்பா.

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம் அறிந்து, இவை நடக்கும். அப்பொழுது நீ எந்தனுக்காக எதையாவது செய் என்று  யாராவது சொல்கின்றார்களா  என்று பார்ப்போம்? 

இடைக்காடர் சித்தர் :- அப்பப்பா, இன்றைய நிலைமையில் அப்பா, நிச்சயம், பெரும் எது என்று அறிய அறிய,  பின், திருடுவது பக்தி என்ற  நிலைமைக்கு வந்தே திருடுகின்றார்கள் . 

இடைக்காடர் சித்தர் :-  அப்பா, வித விதமாக வேஷம்  இட்டுக்கொள்வது, வித விதமாக, நிச்சயம் எதையெதையோ அணிந்து கொள்வது. ஆனால், நிச்சயம் அறிந்தும்  புரிந்தும், இவையெல்லாம் செய்தால், இறைவன் தன்னிடத்தில் இருந்து விடுவானா என்ன? 

இடைக்காடர் சித்தர் :-  நிச்சயம் அப்படி இருந்தால், எங்களுக்கு ஒன்றும் தேவையில்லை. அதாவது, பின் தர்மம் வேறு கொண்டு எதையோ உட்கொண்டு கொண்டிருப்பார்கள். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் இடைக்காடர் சித்தர் உரைத்த வாக்கு தொடரும் )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment