29/6/2025 அன்று போகர் சித்தர் பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: ஓதியப்பர் சன்னதி ஓதிமலை அன்னூர்.
அன்பாலே உதித்த மைந்தா போற்றி!!!!
போற்றியே!! பணிந்தோமே.!! சித்தர்கள் யாங்கள் அனைவருமே!!!
முருகா!!! கேட்டவுடன் வரத்தை அளிக்கும் முருகா!!!! வரவேண்டும்!!.
அருள்கள் தந்திட்டானே,!! தந்திட்டானே!! அனைவருக்குமே!!!!.
போகனே,!! இப்பொழுது ஈகின்றேன். விவரமாக!!!
அன்பென்று ஒன்றென்று கண்டேனே!!!
கண்டு இன்று!! இங்கு வந்தேனே!!
.அருள் புகழ் ஒன்று பாடிட்டேனே.
என்னென்ன?என்பது ஏனையில்லை. வந்து வந்து அணைத்தோமே.!!
அன்பு எல்லை இல்லா மனிதனுக்கே!!!
அன்பே நிரந்தரம்
அன்பு மட்டுமே போதும் முருகனுக்கு
--------------------------
என்னென்றும் உள்ளது என்பவை எல்லாம் அன்பென்று ஒன்றும் போதுமே. போதுமே, போதுமே என்றென்றும் முருகனுக்கு!!!!
அன்பென்று ஒன்றை கொடுத்தீர்களே!!! அன்பொன்று ஒன்றை கொடுத்தீர்களே என்றென்றும் வாழும் அன்பர்களே. அனைவருக்கும் எங்களது ஆசிகளே.
அன்பன்பு வந்தவர் எல்லாமே முருகன். முருகன் வள்ளி தெய்வானையோடு வந்தானே என்றென்றும் சிறப்பை தரும் வல்லானே. என்றென்றும் சிறப்பையும் தரும் வல்லானே.
என்றென்றும் நிற்கும் புகழ் உங்களை அடைந்து அடைந்து சென்றானே.
வடிவேலா வருக!! என்று சொன்னோமே. வடிவேலா என்று வந்து சொன்னோமே.
அன்பு நிறைந்த மக்களுக்கே பின் முருகன் அனைத்தும் ஏற்றுக்கொண்டானே.
அன்பு ஒன்று அனைத்து உலகும் காப்பாள். காப்பாள் பின் அன்னையே, அனைத்து உலகும் காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்.
என்றென்றும் முருகன் நிச்சயம் ஜீவிக்கின்றானே.
அனுபவித்து, அனுபவித்து என்றென்றும் உங்களுக்கும் ஆசிகளும், என்றென்றும் உங்களுக்கு ஆசிகளும், இந்திரரும் தேவாதி தேவர்களும் பின் ஆசீர்வதித்து!!, ஆசீர்வதித்து!!
எப்பொழுதும் பின் அழிவுகள் தன்னை நிச்சயம் தன்னில் கலியுகத்தில் அழிவுகள் வந்த வந்த வண்ணம்!!!!
என்றென்றும் நிற்கும் முருகா!!! போற்றி. என்றென்றும் நிற்கும் முருகா! போற்றி.!!
சிறப்பு மிக்க என்றென்றும் உங்களை ஆசீர்வதித்தானே, ஆசீர்வதித்தானே.
அன்றென்று எங்களும், எங்களையும் அன்றென்று எங்களையும், எங்களையும் அழைத்து வந்து பாருங்களே!!! என்று வள்ளி தெய்வானையோடு முருகன் அழைத்தானே.
என்றென்றும் ஜீவிக்கும் இவ்வுலகத்தில், என்றென்றும் ஜீவிக்கும் இவ்வுலகத்தில்,
(ஓதிமலை தனி உலகம் தனி உலகத்தில் வாழும் முருகன் வள்ளி தெய்வானையோடு இந்த பூசைக்கு சித்தர்களை அழைத்தார்)
அன்றென்று நிற்கும் கர்மத்தைப் பின் மனிதன் சம்பாதித்து வைத்தானே.
அதை நீக்கவே போராடி, போராடி, அதை நீக்கவே போராடி, போராடி முருக பக்தர்களே அறிந்தும், அறிந்தும்!!!!
(முருகன் மீது அதிக அளவு பக்தி கொண்ட அடியவர்களுக்கு கூட பாவக்கருமத்தை அகற்ற வழி தெரியவில்லை)
இதன் உண்மை தெரிந்தும் ஞானியாவான்!!
நின்றின்று, நின்றின்று, பின்னோர்கள் நின்றின்று, நின்றின்று வந்தோர்கள். எத்தனை?, எத்தனை ?பேர்களுக்குப் பின் மாயையில் சிக்கி, சிக்கி, சிக்கி அழிந்து, அழிந்து போகும் வண்ணம் அழிந்து, அழிந்து பின் போகும் வண்ணம் நிச்சயம் தன்னில்!!!
(பல பிறப்புக்கள் பிறப்பெடுத்து வந்து மாயையில் சிக்கி அழிந்து கொள்ளும் மனிதர்கள்)
நல்லோர்களைப் பின் முருகனே உருவாக்கி, உருவாக்கிப் பின் வைத்தானே!! உருவாக்கிய பின் வைத்தானே!!!
என்றென்றும் ஜீவராசிகளுக்கு பின் அன்பென்று தந்தான், தந்தானே!!
(ஓதி மலைக்கு கணபதியின் வருகை பூசைக்கு ஆசிர்வாதம் அடியவர்களுக்கு ஆசிர்வாதம்)
கணபதியின் பேரருள் தந்தானே!! கணபதி பேரருளை தந்தானே!! முதலிலே தன்னை கணபதி தன்னை வந்திட்டானே, பின் வந்திட்டானே.
அனைவரின் எண்ணம் கண்டிட்டானே, அனைவரின் எண்ணம் கண்டிட்டானே.
சிறப்புமிக்க வாழ்க்கை பின் அளித்துட்டு, பின் சென்றிட்டானே. சித்தி, முத்தி விநாயகனே, சித்தி, முத்தி விநாயகனே,!!
அன்பென்று ஒன்றை கொடுத்தீர்களே. அன்பொன்று ஒன்றை கொடுத்தீர்களே.
இதற்கு பதிலாக நிச்சயம் தன்னில் எங்களுடைய ஆசிகளும், இதற்கு தகுந்தார் போல் எங்களுடைய பின் ஆசிகளும், பின் ஆசிகளும்!!!
(அன்பாக பக்தியாக ஓதிமலைக்கு வந்து இந்த உலக நன்மைக்காக செய்த பூசைக்கு அன்பிற்கு பதிலாக சித்தர்களின் ஆசிர்வாதம்)
(பூஜைக்கு ஞானியர்கள் வருகை அனைவரும் பூசையை ஏற்றுக் கொண்டனர்)
எல்லை இல்லா, நிச்சயம் தன்னில் எல்லை இல்லா, நிச்சயம் தன்னில் ஞானிகளும் கூட வந்தார்களே.
அப்பா, அறிந்தும், அறிந்தும், அறிந்தும் ஒன்றும் நிச்சயம் தன்னில் ஏற்றோமே. உங்கள் பூசையை ஏற்றோமே. நலமுடனே அருள் தந்திட்டோமே.
(திரு அகத்தியர் மைந்தன் ஜானகிராமன் ஐயா அவர்கள் ஓதி மலையில் இந்த வாக்கு வாசித்த நேரம் இரவு 11 :36 வந்து நிமிடம் அன்று இரவு உலக நன்மைக்காக அடியவர்கள் அனைவரும் ஓதி மலையில் யாகம் நடத்தினர். அதன் பிறகு திரு ஜானகிராமன் ஐயா ஜீவநாடி வாசித்தார்.. வாக்குகள் படித்த நேரம் இரவு 11:36 மணி.
ஓலை சுவடியை வணங்கி வாசிப்பதற்கு முன்பாக எங்கிருந்தோ மூன்று முறை மிகப்பெரிய சத்தத்துடன் மயில் அகவியது!!!... முருகனின் ஆசிர்வாதமென ஓதி மலையில் கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் அந்த நள்ளிரவில் முருகா முருகா என பக்தி பரவசத்தில் தொழுது வணங்கினர்.. யாகத்தை பூசையை சித்தர்கள் ஏற்றுக் கொண்டு ஆசிர்வதித்ததை போகர் பெருமான் இந்த வாக்கில் குறிப்பிடுகின்றார்)
(வேண்டுதல்களுக்கு வேண்டுதல் பலித்திட ஆசிர்வாதங்கள்)
என்னென்ன?? வேண்டுதல் பலித்திட்டோமே. என்றென்று உண்மைகள் தெளிவடையட்டும். என்றென்றும் உண்மைகள் தெளிவடையட்டும்!!
பக்தர்கள் கூடி ஒன்றொன்றாக இவை போல் பின் செய்திட்டாலே, செய்திட்டாலே பின் அழிவுகளே காக்கப்படும். என்றென்றும் பின் காக்கப்படும்.
(பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி இதுபோன்று பல்வேறு மூலிகைகளை இட்டு யாகம் மற்றும் கூட்டு பிரார்த்தனை இவை செய்ய வேண்டும்)
என்றென்றும் மனிதன் தன்னில் அனைத்துலகும், மனிதன் தன்னில் அனைத்துலகும் தந்தானே. ஈசனே, தந்தானே. ஈசனே, அதை தன் பின் காக்க முடியவில்லையே. அதை தன் காக்க முடியவில்லையே.
(ஈசன் உலகத்தை படைத்து மனிதர்கள் கையில் கொடுத்தார் மனித பிறப்பையும் கொடுத்தார் ஆனால் மனிதர்களால் சரியாக காக்க முடியவில்லை)
அறிந்தும் இதன் உண்மையை தெரிந்தோர்களே, சிலர் ஏற்று நடத்துவார்கள். இப்புவி தன்னில் கூட இதை தன் சிலரே தெரிந்தோர்களே. பின் ஏற்று நடப்பாவார்கள். அருளாலே,
(இந்த உண்மையை தெரிந்து கொண்டோர் இந்த உலகத்தை நல்முறையாக வழிநடத்துவார்கள்)
அருளார்களே, எங்கிருக்கும் அருளார்களே, எங்கிருக்கும் உண்மை அருளார்களே. அழைத்து தன்னைப் பின் முருகன் பின் அறிந்தும் கூட பின் ஓய்வு நேரத்திலும் கூட வந்தோமே. அறிந்தும், அறிந்தும் வந்தோமே.
(எங்கெங்கோ இருக்கும் அருளாளர்கள் ஞானியர்கள் சித்தர்கள் அனைவரும் வந்தனர்... அருளாளர்கள் எந்தெந்த உலகத்தில் இருக்கின்றார்கள் வாழ்கின்றார்கள் என்பது மனிதர்களுக்கு தெரியாது)
முருகன் தன்னை அழைத்துட்டு, அழைத்துட்டு வந்தோர்கள்.
பின் ஏனையோர்கள் எங்கெங்கு ராஜ்ஜியங்கள்?, எப்பொழுது, எத்தனை ராஜ்ஜியங்கள்? மனிதனுக்கு பின் தெரியாது, தெரியாது, தெரியாதே.
என்றென்றும், என்றென்றும் உண்மைதனை!!
எங்கெல்லாம் வரும் பரவி தன்னும் கூட பின் கலியுகத்தில் எதை என்றும் கூட பரவி நிற்குமே. நோய்களே பரவி நிற்குமே.
நோய்களையே இவையெல்லாம் அகற்றிடும் சக்தி நிச்சயம் தன்னில் இப்பொழுது செய்தீர்களே. அதைத்தன் பின் சுவாசித்தாலே போதும்.
(ஓதி மலையில் உலக நன்மைக்காக நடந்த யாகத்தில் 108 மூலிகைக்கு அதிகமாக ஏராளமான மூலிகைகளை இட்டு ஹோமம் வளர்க்கப்பட்டது !!
இப்படி நோயிலிருந்து நம்மளை பாதுகாத்துக் கொள்ள இப்படி மூலிகைகளான ஹோமப்புகையை சுவாசித்தாலே நோய்கள் வராது என்று போகர் பெருமான் வாக்கில் உபதேசிக்கின்றார்)
சுவாசித்தில் போதுமானது நிச்சயம் தன்னில் மனிதனுக்கு,!!
நிச்சயம் தன்னில் மனிதனுக்கு ஒன்றும் தெரியாமல் போனாலும், நிச்சயம் முருகனே தன்னே வருவானே.
ஒன்றும் தெரியாமல் கலியுகத்தில் பின் சென்றாலும், முருகன் பின்னே சென்று, பின்னே சென்று, நிச்சயம் தன்னில் அழைப்பானே.
இவ் உலகத்திற்கு பின் அளிப்பானே. தனி உலகத்தில் வாழ்ந்தானே, தனி உலகத்தில் வாழ்ந்தானே. எங்கள் அன்பு பிள்ளையே, முருகா!!, முருகா!!, தனி உலகத்தில் வாழ்ந்தானே.
(ஓதிமலை தனி உலகம் ரகசியம்)
இவ்வுலகமே தனி உலகம். இங்கு இருக்கும் !!முருகா,!! முருகா, தனி ராஜ்ஜியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்.
எங்கெங்கும் பக்தர்கள் உன்னை நாடியே, எங்கெங்கும் பக்தர்கள் உன்னை நாடியே. வந்து வந்து பின் ஆசிகள் பெற்றோர் பலர், பலர், பலர், பலர், பலர்,
(ஓதிமலைக்கு வந்து அருளாசி பெற்றவர்கள் பலர்)
அறிந்தும், அறிந்தும் என்னவென்று அனைத்தும், அனைத்தும் பாசத்தோடு பின் கொடுப்பாயே. எந்தன் குழந்தையே,!!
அனைத்தும் அனைவருக்கும் பாசத்தோடு பின் அருள்வாயே, அருள்வாயே.
என்றென்றும் பின் ஜீவிக்கும் வள்ளி தெய்வானையோடு வந்து இங்கு விளையாடும் தன்னில் குழந்தாயே.
அன்றென்றும், என்றென்றும் உண்மை என்றும், எங்கெங்கும் எப்பொழுதும் உண்மை என்றும், தன் உலகத்தில் வாழ்ந்தோர்க்கே எதனை என்றும் புரியவில்லையே.
உலகத்தை என்று சொன்னேனே, உலகத்தில் என்று சொன்னேனே. இவ் ஓதிய மலையில் பின் உலகமே பின் அடங்கியுள்ளது என்று சொன்னேனே.
ஓதி மலையில் பின் உலகம் என்று, பின் தனி, தனி உலகம் என்று முருகனுக்கு!!
அன்பென்று, அன்பென்று, அன்பென்று. இங்கு பின் அடியில் பலத்த, பலத்த பின் யோகிகள், யோகிகள் வாழ்ந்தார்கள்.
இங்கு பலத்த அடியோருடன், யோகிகளுடன், நிச்சயம் தன்னில் வாழ்ந்து கொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கையில், நிச்சயம் தன்னில் வாழ்ந்து கொண்டிருக்கும். நிச்சயம் தன்னில் அன்போடும் ஆதரவோடும் எங்கென்றும் உலகத்திற்கு வந்தாலே சிறப்படையும்.
(ஓதிமலை தனி உலகம் ஓதிமலை உள்ளே அதாவது ஓதிமலை கோவிலுக்கு அடியில் பல ரிஷிகளும் முனிவர்களும் யோகியர்களும் தவம் புரிந்து வந்து கொண்டிருக்கின்றார்கள் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் ஏற்கனவே திருவண்ணாமலை குறித்தும் கூறியுள்ளார் திருவண்ணாமலை ஒரு தனி உலகம் என்று அதேபோன்று ஓதி மலையும் தனி உலகம்)
தனி ராஜ்ஜியம் பின் அணிந்திருந்தான். தனியில் பின் ராஜ்ஜியத்தில் இவ்வகையின் என்றென்றும் பின் ஓதியுள்ளானே, ஓதியுள்ளானே. எதையும் தன்னை ஓதியுள்ளானே. அனைத்து மந்திரங்களும் நிச்சயம் தன்னில் ஓதிக்கொண்டிருக்கின்றார்கள். ஓதிக்கொண்டிருக்கின்றார்கள். ரிஷிகளும் கூட, முனிவர்களும் கூட ஓதிக்கொண்டிருக்கின்றார்கள். ஓதிக்கொண்டிருக்கின்றார்கள்.
முருகனை நினைத்து, நினைத்து ஓதிக்கொண்டிருக்கின்றார்கள். ஓதிக்கொண்டு இருக்கின்றார்களே.
(ஓதி மலையில் முனிவர்களும் ரிஷிகளும் மந்திரஜெபம்)
இவ்வுலகத்தை விட்டு தனியே வா. இவ்வுலகத்தை விட்டு தனியே வா.!! என்றென்றும் நிச்சயம் ஓதிக்கொண்டு, ஓதிக்கொண்டு, ஓதிக்கொண்டு.
(முருகனை இந்த உலகத்தில் இருந்து வெளியே வந்து அனைவரையும் காப்பாற்று என்று வேண்டிக் கொண்டிருக்கின்றார்கள்)
முருகனே, அன்றென்றும் யான் வரப்போவதில்லை, வரப்போவதில்லை.
என் உலகத்திலே நிற்கின்றேனே, என் உலகத்திலே நிற்கின்றேனே என்று, என்று பல பல பல யுகங்களாக சொல்லிக் கொண்டிருக்கையில், பல பல யுகங்களாக சொல்லிக் கொண்டிருக்கையில்!!!,
உலகம் தன்னில் எதை என்று, உலகம் தன்னில் எதை என்று எங்கு குறிப்பிட்டேன். அழகாக இங்கு இதனையே தன்னை ஓதிமலையே பின் தன் தனி உலகம் என்று குறிப்பிட்டேனே.
அன்றென்றும் நிச்சயம் வந்தானே, அன்றென்று நிச்சயம் நிச்சயம் வந்தானே. என்றென்றும் புகழ் ஓங்கி வைக்கும் அருள் தந்திட்டானே, தந்திட்டானே.
எக்குறைகள் நீக்கிடும் பின் அறிந்துண்மை கொண்டும் கந்தனுக்கு கந்தனே! வேலா! வெற்றி வேலோடு வருவோர்க்கெல்லாம் அருள்வானே. என்றென்றும் அன்பிற்கும் கட்டுப்படும், என்றென்றும் அன்புக்கு கட்டுப்படும். ரிஷிகளும் யோகிகளும் இவ்வுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே, கொண்டிருக்கின்றார்களே.
அவரவருக்கு தேவையானதை, அவரவருக்கு தேவையானதை நிச்சயம் தன்னை அளித்திடும் குழந்தாய்!!!!.
, என் மகனே, புகுந்தாய். நிச்சயம் தன்னில் ஒன்றோடு ஒன்று இணைந்தோமே. அன்றென்று, அன்றென்று இருந்தோமே.
இவ்வுலகத்தில் பிரிவு என்று சந்தித்தார்களே, பிரிவு என்று சந்தித்தார்களே. அவருக்கு, அவருக்கு பிரிவினைகள், அவருக்கு, அவருக்கு பிரிவினைகள். நிச்சயம் இவை தன்னில் கூட முருகன் அனைத்தும் இணைப்பானே!!.
(இவ்வுலகத்தில் அதாவது ஓதி மலையில் பலருக்கு பிரிவு நிலைகள் பிரிவினைகள் அதையெல்லாம் முருகன் மாற்றி இணைத்து விடுவார்)
நிச்சயம் தன்னில் அனைத்தும் கூட, நிச்சயம் தன்னில் இணைப்பானே!!!
ஒவ்வொருவருக்கும் பாவம் தன்னில், ஒவ்வொருவருக்கும் பாவம் தன்னில். அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட பின் அகற்றி, அகற்றி நின்றானே. அகற்றி, அகற்றி நின்றானே.
பின் கைலாயத்தின் முற்புகுந்தே அறிந்தும் உண்மைதனை நின்றோனே. எத்தனை, எத்தனை நிச்சயம் தன்னில் வந்தும், வந்தும் பின் கைலாயம் அறிந்தும் என்றும் சிறப்பு தரும், அறிந்தும் என்றும் சிறப்பு தரும்.
(ஓதிமலை!! யாக பூஜையை சித்தர்கள் ஏற்றுக்கொண்டனர்)
நிச்சயம் தன்னில் அழகாக பின் யாங்கள் ஏற்றுக்கொண்டோம். பூஜையே என்றும் நிச்சயம் அழகாக பூஜை ஏற்றுக் கொண்டோமே. யாங்களே,
(ஓதி மலையில் நடந்த யாக பூஜையை சித்த பெருமக்கள் ஏற்றுக் கொண்டார்கள்)
நிச்சயம் தன்னில் அனைவருக்கும், நிச்சயம் தன்னில் அனைவருக்கும் வந்து, வந்து பின் இன்னல்கள், பின் தாக்கி, தாக்கி, பின் சென்றிருக்கையில், வந்து, வந்து இன்னல்கள் தாக்கி, தாக்கி சென்று கொண்டிருக்கையில், நிச்சயம் தன்னில் யாரையும், யாரும் காக்க முடியாது.
யாரையும் யாரும் காக்க முடியாது. கந்தனே, பின் குழந்தாயே, நீ வருவாயே, அருள்வாயே, வருவாயே, அருள்வாயே.
நிச்சயம் தன்னில் உந்தனக்கே, நிச்சயம் தன்னில் உந்தனக்கே பூஜைகள் செய்வோர்கள். வாழ்க்கையும் பின் வீணாகிக் கொண்டே, வீணாகிக் கொண்டே. அத்தனையும் நிச்சயம் கந்தனே, அத்தனை நிச்சயம் கந்தனையே. நீதானே பார்த்துக் கொண்டிருக்கின்றாயே, பார்த்தே கொண்டே இருக்கின்றாயே. சிரித்து, சிரித்து இருக்கின்றாயே, சிரித்து, சிரித்து இருக்கின்றாயே.
(ஓதி மலையில் முருகனுக்கு பூஜை செய்பவர்களுக்கும் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் அதையும் மாற்றி அருளிடும் குமரனே)
அன்புடன் அவர்களையும் ஆதரித்து, அன்புடன் அவர்களையும் ஆதரித்து, அன்புடன் அவர்களையும் ஆதரித்து. நிச்சயம் தன்னில் தேவையானது, பின் வரங்களிலும் அளித்திடும் குமரனே. நிச்சயம் தன்னில் தேவையான பின் அருளும், அருளும் கந்தனே. அனைவரும் உன் பிள்ளைகள் தானே, அனைவரும் பின் பிள்ளைகள் தானே.
நிச்சயம் தன்னில் சில கர்மாத்தை எடுத்து, எடுத்து கொடுப்பானே. அறிந்தும் நிச்சயம் கருணை படைத்தவன் அனைவருக்கும் கொடுப்பானே.
என்னென்ன தேவைகள்?? பூர்த்தி செய்வானே, என்னென்ன தேவைகள்?? பூர்த்தி செய்வானே!!!, மெதுவாக பூர்த்தி செய்வானே.
பின் கந்தனே என் குழந்தையே, அன்புடன் ஆதரித்து, அன்புடன் ஆதரித்து, அன்புடன் பின் ஆதரித்து, ஆதரித்து. எப்பொழுது செய்வாய்?, எப்பொழுது செய்வாய்?, ஏங்கிக் கொண்டிருக்கின்றாய், மனிதர்களே. எப்பொழுது செய்வாய்,? எப்பொழுது செய்வாய்?, மனிதனும் பின் ஏங்கிக் கொண்டிருக்கின்றானே.
(முருகன் எப்பொழுது நல்வழி காட்டுவார் என ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்)
அதற்கும் தானே முருகனே, அதற்கும் தானே முருகன் தானே. நிச்சயம் தன்னில் வழிநடத்துவேன் என்று, வழிநடத்துவேன் என்று,!!! அனுதினமும் பின் அறிந்தும், அறிந்தும் ஆசிகள் கொடுத்தும், கொடுத்தும், கொடுத்தும்!!
பாவ வினைகள் பின் சூழ்ந்திருப்பதால், பாவ வினைகள் சூழ்ந்திருப்பதால், மெதுவாக மெதுவாக அவைதன் பின், பின் அகற்றி, அகற்றி ஓட்டிடுவானே. பேய்களைப் போலே ஓட்டிடுவானே, பேய்களைப் போலே ஓட்டிடுவானே.
மனிதன் இதயம் பேய்கள் போன்றது, மனிதன் இதயம் பேய்கள் போன்றது. அதை கட்டுப்படுத்தும் திறமை, பின் முருகன் இடத்திலே இருக்கின்றன. அதை கட்டுப்படுத்தும் திறன் தன்னை, முருகன், பின் கலியுகத்தில், முருகன், பின் அறிந்தும், உண்மை வில்லோடும் வேலோடும் வந்து, பின், பின் அதனையும் இன்னும் நசுக்கிட வில்லோடும், பின் அறிந்தும், பின், பின் வந்து, வந்து, பின் நசுக்கிடுவானே.
(கோடி கோடி பிறவிகள் எடுத்தாலும் மனிதர்களுக்கு பக்தி என்பது என்னவென்று தெரியவில்லை)
எண்ணற்ற, எண்ணற்ற கோடிகள் தன்னில் பிறந்திட்டோம், பிறந்திட்டோம், மனிதனே......
இன்னும் தெரியவில்லை, பக்திக்குள்ளே, பக்திக்குள்ளே, அறிந்தும் எதனை அறியவில்லையே. அறிந்தும், பின் அறியவில்லையே
உண்மை பொருளை அறிந்திட்டேனே, பின் அறிந்திட்டேனே, பின் மனிதனுக்கு எத்தனை, எத்தனை சேவைகள்??, எத்தனை, எத்தனை சேவைகள்??. அன்றின்று, என்றென்றும்,
(உண்மை பொருளை போகர் பெருமான் புரிந்து கொண்டார் மனிதர்களுக்கு இதை எடுத்துரைத்து சேவை செய்து வருகின்றார் அப்பொழுது இல்லை எப்பொழுதும்)
எப்பொழுதும், பின் கந்தனே, பின் நீயே துணை. அன்றென்றும், என்றென்றும், எப்பொழுதும், கந்தனே, நீயே துணை, துணை. வேலோனே, வேலோனே, வேலோனே, வேலோடு வந்து, அனைவருக்கும் பின் அனைவரின் இல்லத்திலும் காக்க, காக்க.
ஒவ்வொரு இல்லத்திலும் பிரச்சனைகள், ஒவ்வொரு இல்லத்திலும் பிரச்சனைகள். அதை தன் பின் பாவங்களோடு வந்து இணைந்து, நிம்மதியாக வாழ்க்கை இல்லை. அதை தன் பின் பாவங்களோடு இணைத்து, பின் நிம்மதியான வாழ்க்கை இல்லை.
(வந்திருந்த அடியவர்கள் பாவவினை காரணமாக வீட்டில் நிம்மதி இல்லை நல்ல வாழ்க்கை இல்லை.
முருகன் அனைவரது வீட்டிலும் இருந்து கொண்டு இதை பார்த்து ஒவ்வொன்றாக நீக்கி கொண்டே வருகின்றார்
பாவங்களை அகற்றிவிட்டு எல்லோரையும் அன்போடு ஓதிமலைக்கு அழைத்தார் முருகப்பெருமான்)
அதனையும் கூட வந்திட்டுட்டு, அனைவரும் இல்லத்திலும் கந்தன் இருக்கின்றான், கந்தன் இருக்கின்றான், கந்தன் இருக்கின்றான். அனுதினமும் பார்த்திருக்கின்றான், பார்த்திருக்கின்றான்.
அனைத்தும் கூட ஓட்டி இருக்கின்றான். பின் பேய்களோடு, பேய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் இல்லத்திலும், முருகன் தன்னை சுட்டிக்காட்டி, அதனையும் நீக்கிவிட்டு, அதனையும் நீக்கிவிட்டு, பரிசுத்தமான இவ்விடத்தில், முருகன் உங்களை அழைத்தானே. பரிசுத்தமான இவ்விடத்தில், பின் முருகனே, பின் அழைத்திட்டானே.
இந்திரனும், பின் சந்திரனும், பின் வந்தானே. இந்திரனும், பின் சந்திரனும், பின் வந்தானே.
சூரியனும், பின் வந்தானே. பின் அனைத்து ஆசிகளும் தந்திட்டானே.
சூரியன், பின் வந்தானே. பின் அனைத்து ஆசிகளும் தந்திட்டானே.
(மனிதர்களும் பாவங்களும் ஒரு சடை போல பின்னிப்பிணைந்து காணப்படுகின்றனர் இந்த பின்னிப்பிணைந்த மனிதர் பாவங்களில் இருந்து தனித்தனியாக பிரிக்க வேண்டும்)
எப்பொழுதும் எதனைப் பின் வினை தீர்க்கும், எப்பொழுதும் வினையும் வினை தீர்க்கும். கர்மத்தோடு, பின் பின்னிப் பிணைக்கையில், எப்படி மனிதன் காப்பாற்றுவான்? பின்னிப் பிணைப்பில், பின் பாவத்தோடு, பின் கலியுகத்தில், பின் அதிக அளவு, பின் மனிதன், பின்னிப் பின்னி, பின்னிப் பின்னி, பின்னி வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
எத்தனை, எத்தனை பின்னிப் பின்னி, பின் அவைதன் பின் ஒவ்வொன்றாக, பின் அறிந்தும், அறிந்தும், பின் எடுத்துக் கொண்டிருக்கின்றான். என் மைந்தனே, எடுத்துக் கொண்டிருக்கின்றானே. என் அழகாக ....குழந்தாய், குழந்தாய், குழந்தாய், குழந்தாய், குழந்தாய். எப்பொழுதும் கருணையை படைத்திடும் முருகா, நின்றின்று, நின்றின்று, ஆசிகள் எப்பொழுது?, எப்பொழுது?, அப் பிணைப்பை, எப்பொழுது?, எப்பொழுது?, அப் பிணைப்பை எடுத்து, எடுத்து, எடுத்து, எடுத்து, அதை பின் நல்வழியாக நீட்டினால் மட்டுமே வாழ்க்கை உண்டு.
நீங்கள் அனைவருமே, நீங்கள் அனைவருமே, பின்னிப் பிணைப்பில், நிச்சயம் தன்னில்!!
(அனைவரும் பாவத்தோடு பின்னிப்பிணைந்து)
அப்படி சென்றாலும், இப்படி சென்றாலும், முடியவில்லையே, முடியவில்லையே.!!!
(இதிலிருந்து மீண்டு வர எங்கு சென்றாலும் தீர்வு இல்லை)
அதனைக் கண்டு, நிச்சயம் தன்னில் ஒவ்வொன்றாக, பின் ஒவ்வொன்றாக, அவைதன் பின், நீக்கிட, நீக்கிட, வாழ்க்கை உண்டே, நிச்சயம்
வாழ்க்கை உண்டே, வாழ்க்கை உண்டே!!.
அறிந்திருந்தும், எதை என்றும், நவகிரகத்தின் போராட்டமும்,!!! நவகிரகத்தின் பின் போராட்டமும்!!!
(தற்போதைய சூழ்நிலையில் நவகிரகங்களும் தடம் மாறி செயல்படுவதை குறிப்பிடுகின்றார்)
, பின் நவகிரகங்கள் வந்து ஆசீர்வதித்தன. நவகிரகங்கள் வந்து ஆசீர்வதித்தன.
(ஆனாலும் ஓதி மலைக்கு நவகிரகங்களும் வந்து பூஜைக்கு ஆசீர்வாதங்கள் செய்தனர்)
என்றென்றும் ஜீவிக்கும் முருகா, உன்னை என்றென்றும் ஜீவிக்கும் முருகா, உன்னை என்றென்றும் அறிந்திட்டேன்.....
மனிதன் இல்லையே, என்றென்றும் உண்மைதனை பொருளாக்கும், பொருளாக்கும் என்று எந்தனக்கே.
(உண்மை பொருள் நீ என்பதை கண்டு கொண்டேன் முருகா ஆனால் மனிதர்களுக்கு இது தெரியவில்லை)
+நீயே அனைத்தும் முருகா)
உன்னையும் தானே அனைத்தென்றும் கூறுவேன்.
நீயே ராமன்!!!!, நீயே, நிச்சயம் அறிந்தும் ஒன்றும் இல்லையே. அறிந்தென்றும்,
என்றென்றும், நிச்சயமாய், வில்லோடு, அம்போடு வந்திட்டாயே. நிச்சயம் தன்னில் எங்கும் இருக்கும். இனிமேலும் தன்னில் வில்லோடு பின் விடுவானே.
நிச்சயம் தன்னில் பாவத்தைப் பின் அம்போடு பின் எடுத்துட்டு, பின் தூரே பின் வீசிடுவானே.
(வில்லும் அம்புமாய் வேலுமாய் முருகன்!!
மனிதர்களின் பாவத்தை அம்பெய்ய போகின்றார்)
எங்கெங்கும் இருக்கும் அழகான குழந்தை, எங்கெங்கும் இருக்கும் அழகான குழந்தை, என்றென்றும் நிற்கும் அழகாக, குழந்தை எப்பொழுதும் வாழ வைக்கும்.
நிச்சயமான குழந்தை, உங்களையும் பின் பார்த்திட்டானே!!. உங்களையும் பின் பார்த்திட்டானே!! குழந்தை ரூபத்தில் பார்த்திட்டானே. பின் அணைத்திட்டானே. பின் அணைத்திட்டானே.!!!
எத்தனை?, எத்தனை? குறைகள் தன்னை, எத்தனை?, எத்தனை? குறைகள் தன்னை. அதனென்றும் , மீண்டுட்டு, மீட்டிட்டு, மீண்டும் மீண்டும் என்னை பார்க்க. அதனை என்றும் மீண்டிட்டு, மீண்டிட்டு, தினமும் என்னை பார்க்க, பார்க்க. எப்படி, எப்படி, ஏது?, ஏது?, எத்தனை,? எத்தனை? பிறவிகள்?, பிறவிகள் வந்து, வந்து, மனிதன் தன்னை பின் பாவத்தை ஒழிக்க முடியவில்லையே.
(எத்தனை கஷ்டங்கள் எத்தனை பாவங்கள் எத்தனை முறை பிறப்பெடுத்து வந்தாலும் முழுமையாக மீள முடியவில்லை பாவத்திலிருந்து நீங்க முடியவில்லை)
எத்தனை?, எத்தனை? பிறவிகள் வந்தும் பாவத்தை போக்க முடியவில்லையே.
என்றென்றும் ஏனை எவ்வாறு என்பது, என்னென்று ஏனை எவ்வாறு என்பது, எப்படி புரிந்து கொண்டிருக்கையில், மனிதன் கையில் இல்லையே. பின் வாழ்க்கையே!!!
, மனிதன் கையில் இல்லை. வாழ்க்கையே, மனிதன் கையில் இல்லையே. வாழ்க்கையே,
எத்தனை?, எத்தனை? ஓடிட்டன. அத்தனை பிறவிகள் எவ்வென்றும், பின் மனிதனைப் பின் சாவதற்குள், பின் நிச்சயம் தன்னில் செத்து செத்துப் பின் வாழ்ந்து கொண்டிருக்கின்றானே.
ஒவ்வொரு மனிதனுக்கும் தீமை தன்னை, ஒவ்வொரு மனிதனுக்கும் தீமை தன்னை. எப்படி?, எப்படி? வாழ்ந்திருக்கின்றான்??. நிச்சயம் தன்னில், நிச்சயம் தன்னில் அவை தன்னை நீக்க, நீக்க. எப்படி? நீக்க, நீக்க, நீக்க. நிச்சயம் தன்னில் முருகர் ஆசிகள் பெற்ற, பெற்ற அருளார்கள் இன்னும் இருக்கின்றார்கள்.
அவற்றை நோக்கிக் கொண்டிருக்கையில், நிச்சயம் தன்னில் மாற்றிடுவார்கள்.
எத்தனை?, எத்தனை? கோடி பிறவிகள், எத்தனை?, எத்தனை? கோடி பிறவிகள் எப்பொழுதும் பின் வந்தாலும், பின் மனிதனைப் பின் நிம்மதியாக வாழ முடியவில்லையே. கலியுகத்தில் நிம்மதியாக வாழ முடியவில்லைய!!!..
அறிந்தும், அறிந்தும்,
அறிந்தும், அறிந்தும், எப்பொழுதும், எப்பொழுதும் பின் காப்பாற்றுவான்? என்று, எப்பொழுதும், எப்பொழுதும் காப்பாற்றுவான்? என்று, மீண்டும், மீண்டும் மனக்குழப்பங்களாக, மனக்குழப்பங்களாக ஓடோடிப்போய், ஓடோடிப்போய், எங்கிருந்து மீண்டும், மீண்டும் தன்னிடத்தில், தன்னிடத்தில், தன்னிடத்தில் வந்தது என்றே.
நிச்சயம் தன்னில்!!! கந்தன் பின், பின் உன் இல்லத்திற்கு, அனைவரின் இல்லத்திற்கு வருவானே. அனைவரின் இல்லத்திற்கு வருவானே. நிச்சயம் தன்னில் அம்போடு பின் அனைத்தும் பின் நீக்கிட்டு தருவானே. நீக்கிட்டு தருவானே. நீக்கிட்டு தருவானே. என் குழந்தை கருணை மிக்கவனே, கருணை மிக்கவனே.
(ஓதி மலையில் பூசையில் கலந்து கொண்டோரின் சில சாபங்களை இந்திரன் எடுத்துச் சென்று விட்டார்)
இந்திரனும் இன்று வந்தானே. இந்திரனும் இன்று வந்தானே. சில சாபங்களை நீங்கள் பெற்றிருந்த, அதனையும் கூட மகிழ்ச்சியாக பின் மேலோகத்திற்கு எடுத்துச் சென்றானே. சில சாபங்களும் நீங்கள் பெற்றிருக்க, அதை தன்னும் எடுத்துச் சென்றானே.
நிச்சயம் தன்னில், நிச்சயம் தன்னில் எதையோ எவையோ என்று கவனித்துப் பார்த்தால் தெரியுமடா.
என்றென்றும் நிச்சயம் இவ்வுலகத்தில் எத்தனை, எத்தனை, எத்தனை, எத்தனை உலகம், உலகம் என்றென்றும் கூட பாடிட்டு நின்று, பாடிட்டு நின்று எத்தனை? தர்மங்கள், தானங்கள் செய்யும். எத்தனை? தர்மங்கள், தானமும் செய்யும். எத்தனை? கர்மங்கள், எத்தனை?, எத்தனை?, எத்தனை?, எத்தனை? கோடிக்கணக்கில் எப்பொழுது????, எப்பொழுது??? தீர்ப்பாய்???, மனிதா!!!, எப்பொழுது,??? எப்பொழுது?? தீர்ப்பாய்???, மனிதா!!!.
நிச்சயம் தன்னில் அழகாக, பின் முருகன் தன்னே விலக்கிக் கொண்டிருக்கின்றான். விலக்கிக் கொண்டிருக்கையில், விலக்கிக் கொண்டிருக்கையில், அறிந்துள்ளவன், பின் அறிந்தும், அறிந்தும், பின் அத்தனையும்!!!
எத்தனை?, எத்தனை? கோடி பாவங்கள், எத்தனை?, எத்தனை? கோடி பாவங்கள். அதை அனுபவிக்க பிறவிகள் தன்னை போதாதே, போதாதே.
புத்தி கெட்ட, புத்தி கெட்ட மனிதா!!!, அதை போதாதே, பின் போதாது.
எப்படியாயினும், முருகனின் தன்னை கால்களை பிடித்து, நிச்சயம் தன்னில் சென்றிட்டாலே, சென்றிட்டாலே, சென்றிட்டாலே, மெதுமெதுவாக, நிச்சயம் தன்னில் பாவங்கள் ஒழிந்து, நிச்சயம் தன்னில் பாவங்கள் ஒழிந்து, பல கோடி புண்ணியங்கள் பின் பெருகுமே!!, மனிதனே, பெருகுமே, மனிதனே???.
என்றென்றும் யானே எழுத்தின் பின், எத்தனை?, எத்தனை? எழுத்துக்கள் தரும், எத்தனை, எத்தனை எழுத்துக்கள் தான், பின் மந்திரத்தால், பின் உபதேசங்கள், எத்தனை? என்று உண்மைதனை எப்பொழுதும், பின் கைகளாலே, அத்தனை, அத்தனையும் பொய்யாக்குவான். மனிதன் தன்னை
சுட்டெறிந்த பின்!!,
(ஓதி மலையில் வாழும் நாக தேவதை வந்திருந்தவர்களின் பாவங்களை எடுத்துக் கொண்டு விட்டது... ஓதி மலையில் இரவில் தன் வயிற்றில் இருந்து மாணிக்க வைரத்தை ஒளிரச் செய்து ராகு கேது அம்பாளின் ஆசிர்வாதம் பெற்று தரும் நாக தேவதை மற்றும்
அந்த தேவதையை மனிதர்கள் பார்த்தால் மனிதர்கள் பயந்து இருந்து விடுவார்கள் இரவில் தங்கினால் முருகன் அருளால் அந்த நாக தேவதையின் சிலருக்கு காட்சிகள் கிடைக்கும் என்பதை
சித்தன் அருள் 1592 ... ஓதிமலை ரகசியம் மற்றும் நாகதேவியின் ரகசியம் முழுவதையும் மீண்டும் ஒருமுறை படிக்க தெரிந்து கொள்ளலாம்)
பாம்பு ஒன்றும் இங்கும் அலைந்திருக்கையில், பாம்பு ஒன்று இங்கும் அலைந்திருக்கையில், நிச்சயம் தன்னில் சுவாசம் தன்னில், பின் அழகாக, பின் அறிந்திட்டு, பின் அறிந்திட்டு, அறிந்திட்டு, எத்தனை பின் இன்னும் வாழுமடா, வாழுமடா. எத்தனை பிறவிகள் வாழ்ந்திட்டாலும், அறிந்தும் எப்படி நின்றிட்டாலும், அழகான பாவங்கள் போக்கிடும். நிச்சயம் தன்னில் கூட, பின் பாம்பின், தன் பின், பாம்பின் கால், பின் அறிந்து, பின் மனிதனுக்கு, பின் பாவம் தன்னில், பின் எடுத்துரைத்த,
எடுத்துரைத்த சில பாவத்தனை கூட, பின் அப்பாம்பே, பின் ஏற்றுக்கொண்டது!
நிச்சயம் தன்னில் யார் பொறுப்பு??, நிச்சயம் தன்னில் யார் பொறுப்பு,??? பாவத்திற்கும் காரணம், பின் புண்ணியத்திற்கும் காரணம் யார்??.
நிச்சயம் தன்னில் மனிதனா? என்றால், நிச்சயம் தன்னால் மனிதனா?? என்றால், நிச்சயம் இல்லை, நிச்சயம் இல்லை, நிச்சயம் இல்லை, உடம்பில்லை,
ஆன்மா என்று சொன்னீர்களே, ஆன்மா என்று சொன்னீர்களே. அவைதன்னும் உண்மை இல்லை, பின் உண்மை இல்லை, பின் உண்மை இல்லை. ஏது? உண்மை, பின் புரிந்ததென்று, ஏது? உண்மை,??
(உடலில் ரகசியமாக இருக்கும் உயிரை கண்ணுக்குக் கொண்டு வந்தால் இறைவன் தரிசனம்)
பின் புரிந்ததென்று, அழகாக காட்சிகள், காட்சிகள் படைத்தேன். நிச்சயம் தன்னில் கண்களில், தன் கண்களில், தன்னில் உயிரோட்டமும், அனைவருக்கும் பின் உயிரோட்டமும், அங்கு வைத்திட்டால், பின் அழகாக, பின் முருகனை, பின் காணலாமே.
இன்று தன்னில், பின் வள்ளி தெய்வானையோடு வந்துட்டானே.
இன்று தன்னில் கூட வள்ளி தெய்வானையோடு வந்துட்டானே. ஆசிகள் கொடுத்து சென்றிட்டானே.
பின் அவரவர் வினையை நீக்கியே சென்றிட்டானே.
(முருகன் வள்ளி தெய்வானையோடு வந்து பூசையில் வந்து ஆசீர்வதித்து வினைகளை நீக்கி அருளினார்)
எத்தனை?, எத்தனை? இன்னும் வினைகள், எத்தனை?, எத்தனைக? இன்னும் வினைகள். நிச்சயம் தன்னில் அவ்வளவு வினைகள், பின் மனிதன் சுமந்து, சுமந்து கொண்டிருக்கின்றானே.
அப்படி இருக்க, நிச்சயம் தன்னில், அப்படி இருக்க, நிச்சயம் தன்னில் எப்படி ஒழித்திட???, மனிதன் தன்னில் பார்த்துக் கொண்டிருக்கின்றான், பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
ஒழியவில்லையே, ஒழியவில்லையே, ஒழியவில்லையே, ஒழியவில்லையே. எத்தனை?, எத்தனை?
நிச்சயம் தன்னில் இவ்வாறு குண்டங்கள் அமைத்திட்டால், நிச்சயம் தன்னில் வந்து நின்று, நிச்சயம் தன்னில் வந்து, வந்து கலந்து உரையாடல் செய்திட்டாலே, சில பாவவினைகள்
போகுமாடா, பாவவினைகள் போகுமாடா.
(அனைவரும் ஒன்று சேர்ந்து கலந்து இதுபோன்று யாக குண்டங்கள் அமைத்து யாகங்கள் வளர்க்க வேண்டும் இப்படி செய்தால் பாவ வினைகள் அகலும்)
நிச்சயம் தன்னில் எதற்கெடுத்தாலும், நிச்சயம் தன்னில் எதற்கெடுத்தாலும், இன்னும் இன்னும் சூழ்ச்சிகளாக, மனிதன் தன்னை, நிச்சயம் தன்னில்
மனிதன் நீங்கு எவ்வாறு என்று, எங்கென்று ?பின் இறைவனை காணலாம்.
நிச்சயம் தன்னில் ஓதிமலையில், பின் தனி உலகமே, தனி உலகம், தனி உலகமே, தனி உலகம் என்றென்றும் நிச்சயம் ஜீவிக்கின்றான்.
எத்தனை?, எத்தனை? ஜீவராசிகள், எத்தனை, எத்தனை ஜீவராசிகள், அனைத்திற்கும் பின் பொருளாக விளங்கும் கந்தனே, இவ் ராஜ்ஜியத்திற்கு தலைவனே!!!! என்றென்றும்!!!
(ஓதிமலை தனி உலகத்தின் தலைவன் முருகன் ஓதி மலையில் அடியில் ரிஷிகளும் முனிவர்களும் மனித குலத்தின் நன்மைக்காக தவம் இயற்றிக் கொண்டே இருக்கின்றார்கள் அவர்கள் மனித குலத்திற்காக பாடுபடுவது மனித குலத்திற்கு யாருக்கும் தெரிவதில்லை அவர்களும் இந்த பூசையில் வந்து கலந்து கொண்டார்கள்)
நிச்சயம் தன்னில் கூட இரவு தன்னில் வந்தார்களே.!!! யாரும் கூட நிச்சயம் தன்னில், யாரும் கூட நிச்சயம் தன்னில் அழகாக பின் ஓய்வெடுப்பார்களே.
ஓய்வெடுத்த பின் உறங்குவார்களே. எத்தனை?, எத்தனை?, எத்தனை, எத்தனை இதற்கு அடியில், எத்தனை?, எத்தனை? பிறவிகள் தன்னில், எத்தனை பின் ஆன்மாக்கள், பின் அனைத்தும், அனைத்தும் மனிதன் தன்னிற்கு உழைப்பதற்காகவே இருக்கின்றது.
பின் அதனை சரியாக பயன்படுத்த எவரும் இல்லை.
எத்தனை?, எத்தனை? பின் ஆண்டுகள், ஆண்டுகள் மனிதனுக்குப் பின் சித்தர்கள் இறங்கி, இறங்கி, பின் வந்தென்றும், வந்தென்றும் செப்புவார்களே.
அதனையும் கூட பயன்படுத்தாத, அதனையும் கூட பயன்படுத்தாத, நிச்சயம் தன்னில் என்றிருக்கும். எங்கு எங்கிருக்கும் பின் தேடுவானே,
(சித்தர்கள் யுகம் யுகங்களாக மனிதகுலம் நன்றாக வாழ்வதற்கு வாக்குகள் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் மனிதர்கள் அதை பயன்படுத்துவதே இல்லை அதை பயன்படுத்தாமல் அங்கு இங்கு என்று சென்று கொண்டே இருக்கின்றார்கள் இறைவனை தேடிக் கொண்டே இருக்கின்றார்கள்)
எங்கிருக்கும் பின் எங்கிருக்கும் பின் தேடுவானே, தேடுவானே.
(இறைவன் மனிதனே இருக்கின்றான் மனதில் கோயிலை திருத்தலத்தை அமைக்க வேண்டும்)
அறிந்தும் பின் மனதிலே இருக்கும், அறிந்தும் பின் மனதிலே இருக்கும். நிச்சயம் தன்னில் முருகன் என்று அறிய மாட்டானே, பின் அறிய மாட்டானே.
என்றென்றும் எங்கும் திருத்தலங்கள், என்றென்றும் எங்கும் திருத்தலங்கள்.
முதலில் மனதில், முதலில் மனதில் திருத்தலங்கள், பின் அமையவைப்பானே, அமைய வைப்பானே.
அதன் பிறகே நிச்சயம் தன்னில் முடிவெடுத்து, அணைந்திருந்து ஆனந்தத்தில், பின் கொண்டாடினார். ஆனந்தத்தில், பின் கொண்டாடினார்.
எங்கென்றும், அங்கென்றும் உண்மைதனை பொருள் விளங்கவில்லையே. என்றென்றும்
உத்தமனே!!, முருகா!! கருணையே!!, முருகா!! பாசமே!!, முருகா!!
அன்பே!!, முருகா!!
கருணை வடிவானவனே!!.
எதனையும் என்றும் அன்பென்று, அன்பென்று, நிச்சயம் தன்னில் எங்கெங்கும் கொண்டும் சென்றோமே.!! எவ்வகை என்றென்றும் இல்லையே, எதற்கென்றும் பின் ஊனென்று உடம்பை படைத்தானே, பின் படைத்தானே. அவை தன்னை, நிச்சயம் தன்னில் ஊனொன்று, நிச்சயம் தன்னில் கூட இருக்கையில், நிச்சயம் ஊனென்று, அனைத்தும் தானே ஊனென்று செல்கின்றது. முருகா, முருகா,
(பிறவியில் உடம்பு!!!.. உடல் சார்ந்ததையே தேடிக் கொண்டு இருக்கின்றது அதை எப்பொழுது தடுப்பாய்? முருகா)
அதனை தன் எப்பொழுது தடுப்பாய்?, எப்பொழுது தடுப்பாய்?,
முருகா, முருகா,
நிச்சயம் தடுத்திட்டான், தடுத்திட்டான், தடுத்திட்டான். எங்கென்றும், எங்கென்றும், எங்கென்றென்றும் சிறப்பான வாழ்க்கையை அமைத்திட்டானே. எத்தனை?, எத்தனை? பேருக்குத்தான் அவைதன் பின் சரியாக பயன்படுத்தவில்லையே. பயன்படுத்த முடியவில்லை!!!
அனைத்தும் பின்
அவனே எடுத்து, எடுத்து, எடுத்து, அவனே எடுத்து, எடுத்து, எதனை என்றும், என்றென்றும், எத்தனை, எத்தனை கோடிகள்?, பிறவிகள், எத்தனை? என்றும் அறிந்த பின்னே, பின் முருகனை காண இயலுமே.
எத்தனை, எத்தனை கோடிகள்,? பிறவி எடுத்து, எடுத்து, முருகனை காண இயலுமே.
(உடம்பில் இருக்கும் உயிரை மேலே எழுப்பி கண்களுக்குள் கொண்டு வர வேண்டும் அப்படி வந்தால் இறைவனை காணலாம்... நம் குருநாதர் அகத்தியர் பெருமான் இப்படி உயிரை புருவம் மத்தியில் கொண்டு வந்தால் முக்தியும் மோட்சமும் கிடைக்கும் என்பதை பற்றியும் சித்தன் அருள் 1781 ல் புடா புஷ்கர் ராஜஸ்தான் குருநாதர் கேள்வி பதில் வாக்கில் தெளிவாக கூறியுள்ளார் மீண்டும் ஒருமுறை படிக்க உணர்ந்து கொள்ளலாம்)
என்றென்றும், எதனையும், எப்பென்றென்றும், நிச்சயம் தன்னில், நிச்சயம் தன்னில், உயிர் என்ற, நிச்சயம் தன்னில்,
உடம்பினில், உயிர் எங்கு?, எதனை? என்று தெரியவில்லை. எங்கு இருக்கின்றது? தெரியவில்லை.
நிச்சயம் தன்னில் கண்களில் (உயிரை) அதை எடுத்து வந்தாலே, முருகன் காட்சிக்கு தெரிவான்.
கண்களிலே எடுத்து வந்தாலே, முருகன் நிச்சயம் தன்னில் காட்சித் தருவான்.
எத்தனை?, எத்தனை? ஆசைகள்?, எத்தனை?, எத்தனை? ஆசைகள்?, இவ்வாறு நிச்சயம் தன்னில் இருந்தாலே, கண்ணுக்குப் பின் உயிர் போகாதே!!!.
(ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்)
இத்தனை ஆசைகள், நிச்சயமாக இருந்தால்தானே, உயிருக்குப் பின் எதை என்றும் புரியாதே.
(ஆசைகள் அதிகமாக இருந்தால் உயிருக்கு எதுவும் புரியாது)
(யார் ஒருவர்? அனைத்தும் இறைவனே அனைத்திற்கும் காரணம் இறைவனே என்று முழுமையாக இருக்கின்றார்களோ அவர்களிடம் ஆசைகள் இருக்காது.. இந்த உன்னத நிலையை அடைந்து விட்டால் தானாக உயிர் கண்கள் இருக்கும் இடத்திற்கு சென்று விடும் அப்போது இறைவனை கண்டுவிட முடியும்)
அத்தனை இறைவன், நீயே தானே, அத்தனை இறைவன், நீயே தானே, என்று என்றொன்று யார்? ஒருவன் உணர்வானே.
நிச்சயம் தன்னில் கண்களில் கூட,
அவ் உயிர் செல்லுமே.
அப்பொழுது கூட இறைவனை காணலாமே.!!! அப்பொழுது கூட இறைவனை காணலாமே.
அப்படி ஒன்றும் இங்கில்லை. அப்படி இங்கு மனிதன் இல்லை.
(அப்படிப்பட்ட மனிதர்கள் யாரும் இப்பொழுது இல்லை)
எத்தனை?, எத்தனை? கோடிகள் தான், நிச்சயம் தன்னில் ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு மனிதனும் ஏங்கி நிற்கின்றான். எதற்காக?, பின் எதற்காக?, பணத்தின் பின்னே போய்க்கொண்டிருக்கையில், பணத்தை பின்னே போய்க்கொண்டிருக்கையில், அதனை தன் அள்ளித் தருவானே. அதனை தன் அள்ளித் தருவானே.
அதனென்றும் நிச்சயம் ஒன்றுமில்லை. அதனென்றும் ஒன்றும் நிச்சயம் இல்லை.
(பணத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை)
உடம்பை பின் காக்க முடியாதே, மனிதனே. பின் உடம்பை பின் காக்க முடியாது.
என்றென்றும் எதனையும் புரிந்ததொன்று, என்றென்றும் எதனையும் புரிந்ததென்று என்று, நிச்சயம் தன்னில் அறிந்தொன்று, பின் அறியாத பின்,... ஏதடா??,
அறிந்தொன்று, பின் அறியாதது, பின் ஏதடா?, ஏதடா??.
தத்துவங்கள், பின் மனிதனுக்குள், பின் முதுகில், தன்னில், பின் இருக்கின்றது.
ஆசைகள், தன்னில், நிச்சயம், தன்னில் நீக்க முடியாமல் இருந்தாலே, அத்தத்துவங்கள், நிச்சயம் தன்னில் கூட, மூக்கின் நுனியில் வரவேண்டுமே.
அம் மூக்கு நுனியில் பின் வந்துவிட்டால், அம் மூக்கின் நுனியில் வந்துவிட்டால், அனைத்தும் நிறைவேறும், அனைத்தும் நிறைவேறும்.
(ஆசைகள் மனிதர்களுக்கு இருக்கும் வரை முதுகு தண்டில் இருக்கும் சில ரகசியங்கள் மூக்கின் நுனிக்கு வர வேண்டும் அப்படி வந்தால் அனைத்தையும் அடைய முடியும்)
என்றென்றும் ஆசிகள் கொடுத்திட்டானே. என்றென்றும் ஆசிகள் கொடுத்திட்டானே. வள்ளி தெய்வானையோடு கொடுத்திட்டானே. ஆசிகள், ஆசிகள்,
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)


.jpeg)

No comments:
Post a Comment