​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 3 November 2025

சித்தன் அருள் - 1978 - திரு.ஹனுமந்ததாசன் அவர்களின் கஞ்சமலை வாக்கு - 8!


சித்தன் அருள் - 1971 தொடர்ச்சியாக........

காலாங்கிநாதன் தெய்வ ரகசியங்கள் பல பல. இதில் சிலவற்றை தான் அகத்தியன் இங்கு சொல்ல முடியுமே தவிர, எல்லாவற்றையும் இங்கே தெரிவிக்க இயலா நிலையில் மாட்டி கொண்டிருக்கிறேன். காரணம் இங்கு ஒரு சிலர் கூட, சில தவறுகள் நடந்திருக்கிறது. தெரிந்தோ தெரியாமல் சில தவறுகள் பண்ணியிருக்கிறார்கள் மனிதர்கள்தானே. அதன் காரணமாகத்தான் காலாங்கிநாதன் சற்று வாய்மூடி இருக்கிறான். ஏற்கனவே சொன்னேன் வாய்திறக்க மாட்டான் என்று. இருந்தாலும் சூட்சுமமாக சொல்லியிருக்கிறான், இங்குள்ளவர்கள் மருத்துவத்தில் மிக உயர்ந்த நிலை அடைய போகிறார்கள் ! இதுவரை செய்ய முடியாத சாதனை எல்லாம் செய்து காட்டப் போகிறார்கள் ! அதற்கான சூட்சும ரகசியங்களை, இன்னும் 45 நாட்களுக்குள் அவர்கள் எதோ ஒரு வகையில் வந்து சேரப்போகிறார்கள். ஆக தாங்கள் எதற்காக பிறந்தோம் வளர்ந்தோம் என்றெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, எதோ சமுக சேவை செய்வதற்காக அல்ல, காலாங்கிநாதர் எனக்கு கட்டளை இட்டுயிருக்கிறார் ! அதன் படி செய்யப்போகிறேன் என்று சொல்லி , அவரவர் தாங்கள் ஏதேனும் ஒரு சாதனையயை செய்து, இந்த மனிதகுல மேம்பாட்டிற்காக அருமையான காரியங்கள் செய்யப் போகிறார்கள். அந்த நல்ல நாளும் இந்த நாள் ஆரம்பம் என்று சொல்லலாம்.

அதுமட்டும் இல்லை இங்குள்ள அத்தனை பேருமே அன்றைய தினம் ஏறத்தாழ சொன்னேனே, சில ஆண்டுகளுக்கு முன்பாக, இதே கஞ்ச மலையில் கூடி, ஒன்றாக இருந்து, இரவும் பகலும் பாடுபட்டு, சித்தர்களின் தரிசனத்திற்காக தங்களை மெய் வருத்திக் கொண்டவர்கள்! பல நாட்கள் பட்டினி கிடந்தே இந்த காடுகள் சுற்றி வந்திருக்கிறார்கள் ! கடும் புலிகளையும், வேங்கைகளையும் தாண்டி அவர்களை ஜெயித்து காட்டியிருக்கிறார்கள். நாளெல்லாம் பட்டினி கிடந்தால் கூட, இறைவனின் திருநாமம் ஒன்றே போதும், முக்கண்ணின் அருள் வேண்டும் என்று, சித்தர்கள் தரிசனம் வேண்டுமென்று காத்து கிடந்தவர்கள். இவர்களுக்கே தெரியாமல் சித்தர்கள் தரிசனம் கொடுத்திருக்கிறார்கள் ! இவர்கள் பலர் இன்றும் கூட 17 சித்தர்களின் தரிசனம் கண்டவர்கள் தான் ! அந்த பதினேழு சித்தர்களின் அருளாசி பெற்றவர்கள் தான் இங்கே இருகிறார்கள் ! காலத்தின் கட்டாயத்தால் அவர்கள் பலன் சற்று தாமதமாக கிடைக்கலாம், அல்லது கிடைக்காமலே போகலாம் என்று எண்ணி விடாதே, அவர்கள் இங்கு இருக்கிற அத்தனை பேருக்கும், இந்த பதினேழு சித்தர்கள் அகத்தியன் உள்பட, பதினெட்டு சித்தர்கள் உள்பட, அத்தனை பேரின் கருணையும் மனப்பூர்வமாக உண்டு !!

இழந்ததை மீண்டும் பெறுவது போல, அதேபோல் இடைப்பட்ட காலத்தில் ஏதோ காரணத்திற்க்காக அந்த சித்த தன்மை அடைய முடியாமல் போயிருக்கலாம், இனிமேல் சித்தர்களின் காலம் என்று சற்று முன்னே சொன்னேனே,  ஆக இப்பொழுது எங்கள் ஆட்சி எங்கள் பலம் ஓங்கியிருக்கின்ற காரணத்தால், இப்பொழுது நங்கள் கொடுக்கின்ற வாக்கெல்லாம் தெய்வ வாக்காகவே மாறும் !

ஆகவே இந்த நிலம் புனிதமான ஸ்தலத்தில், என் அப்பன் முருகன் சந்நிதிக்கு முன்னால், அகத்தியன் காலாங்கிநாதன் உள்பட ஒரு வாக்குறுதி தருகிறோம், உங்களுக்கெல்லாம் நல்ல காலம் என்பது ஏற்கனவே இருந்தாலும், இன்று முதல் இப்பொழுது முதல் ஆரம்பித்து அதற்கு அச்சாரம் குடுத்தது போல, நாங்கள் உங்களுக்கு மங்கலமாய் வாழ்த்துகளை தருகிறேம்! காலாங்கிநாதர் கூட தன் பங்கை, தன் புண்ணியத்தை, தன் ஆசியை உங்களுக்கு தந்து விட்டார் ! 

இப்பொழுது கூட சொல்லுகிறார், நான் கூட அவசரப்பட்டு 1 /8 என்கிற விதத்தில் உங்களையெல்லாம் 8 க்கு ஒரு பங்கு என்றுதானே என்று சொன்னேன், நான் வைத்து என்ன செய்ய போகிறேன் ? அதையும் பாதிக்குப்பாதி  கொடுத்திவிட்டால் என்ன என்று நினைக்கிறேனடா.அவனும் மனிதனாக மாறிவிட்டானோ என்று தெரியவில்லை? அடிக்கடி புத்தி மாறுகிறது. முதன் முதலாக சொன்னான் 1 /8  என்று, அதை தான் உங்களிடம் உரைத்தேன், இப்பொழுது பாதிக்கு பாதி தான் பெற்ற புண்ணியத்தை தருகிறேன் என்று சொன்னால் ? அவன் உங்கள் மீது கொண்ட பாசத்தினாலோ ? ஆசையினாலோ ? அல்லது தான் பிறந்த நாளில் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினாலோ ? அல்லது உங்கள் பக்தியை கண்டு மெச்சி, தன்னை மறந்து சொல்லுகின்றானா ?  என்பது தான் புரியவில்லை.  அவன் சொன்னதையும் சொல்லவேண்டும், என் கடமை.

ஆகவே அவன் தான் பெற்ற (காலாங்கிநாதர்) மருத்துவ ரகசியங்கள் எல்லாம், இதுவரை வெளிவராத ரகசியங்கள் எல்லாம், உங்களுக்கு வந்து சேரும். அந்த மருத்துவ ரகசியங்கள் படி யார் யார் புரிந்து செயல்பட்டு வந்தார்களோ, அவர்களுக்கு ஆரோக்கியம் சீராக இருக்கும் ! வாழ்வதற்காக மருந்து கொடுக்கவில்லை, மற்றவர்களை காப்பாற்றுவதற்கு உங்களுக்கு திறமை இருக்க வேண்டும். அது போல வழிமுறையும் தருகிறான், வாய்ப்புகளையும் தருகிறேன் என்கிறான். ஆகவே மருத்துவர் தான் செய்ய வேண்டும் என்பதல்ல, சாதாரண மனிதன் கூட இந்த நல்லதொரு காரியத்தை செய்ய முடியும் ! அதையும் சொல்ல வேண்டும், ஆகவே காலாங்கிநாதன் இப்பொழுது மனம் மாறி கொண்டிருக்கிறான், இன்னும் ஒரு மணி நேரம் உங்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தால் ? அவன் முழு தானத்தையும்  உங்களிடம் கொடுத்து சென்றாலும் சென்று விடுவான் !வாங்கி கொள்ளுங்களேன் ! அகத்தியனுக்கு என்ன குறை வந்தது ? மகிழ்ச்சிதான் !!!

ஆகவே சற்று பொறுத்து அவனே மனம்திறந்து, வாய்திறந்து புன்னகை பூத்து தருகிறான், இந்த புண்ணியத்தையும் நீங்கள் ஏற்று கொள்ளுங்கள் !!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment