சித்தன் அருள் - 1978ன் தொடர்ச்சியாக.......
இந்த நல்ல நாளில் இன்னும் சில விஷயங்கள் கூட சொல்ல வேண்டும் என்று சொல்லுகிறான். இந்த இடத்திற்கு எல்லாம் வாழ்ந்து கொண்டு அங்கொரு தொழில் நடத்திக்கொண்டு, வருவோர் போவோருக்கெல்லாம் அன்னதானம் செய்துகொண்டு, அன்பு மனையை கொண்டு, அடிக்கடி நான் குடிகொண்டிருக்கும் சதுரகிரி மலைக்கே வந்து ஆண்டகப்பட்டுக்கொண்டிருக்கிற வேங்கடவன் பெயர் கொண்டிருக்கிற மைந்தனுக்கெல்லாம், அவன் இங்கொரு சிற்றரசனாக இருந்தவன்! ஒரு ஜமீன்தார் போலவே வாழ்ந்தவன் ! அங்குள்ள அத்தனை பேரையும் பாதுகாத்து ஒரு கானகத்தை, ஒரு காலத்தில் பாதுகாத்து பார்த்தவன்.
சித்தர்கள் இங்கு இருகிறார்கள் உஷ் சத்தம் போடாதே என்று, வருவோர் போவோர் எல்லாம் மிரட்டிவைத்து சித்தர்களை தூங்க வைத்தவன்.
சித்தர்கள் அன்புகளை பாராட்டியவன், வேங்கடவன் பெயர் கொண்ட அன்னவன். அவன்தான் அந்த நாள் முதல் இந்த நாள் வரை மண்ணிலே வலம் வந்து கொண்டிருக்கிறான்.
அன்னவனுக்கும் காலாங்கிநாதர் அருமையான வாழ்கை, முதுகை தட்டி கொடுக்கிறார். உன்னக்கு சித்து தரிசனம் அல்ல, தெய்வ தரிசனத்தையும் நான் சண்டை போட்டு வாங்கி தருகிறேன் என்கிறான். அந்த புண்ணியம் அந்த வேங்கடவன் பெயர் கொண்ட வெங்கடேசனுக்கு வந்து சேரும். ஆக அவன் சாதாரண மனிதன் என்று எண்ணிவிடாதே, அவன் எண்ணமெல்லாம் சித்தத்தன்மை நோக்கி போயிருப்பதால், அவன் சித்தன் என்று சொல்லவில்லை. அவனுக்கும், இந்த சித்தத்தன்மைக்கும் இந்த பூமிக்கும், ஆண்டாண்டு காலமாய் தொடர்பு உண்டடா. ஒன்றல்ல, இரண்டல்ல, பலஆண்டுகள், பல ஆயிரகணக்கான ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டுகளும் கடைசி நேரத்தில் சித்தன் கேட்பான், நீ இவ்வளவு தூரம் சித்தனுக்கு பணிவிடை செய்திருக்கிறாயே ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பான், உனக்கு மறு பிறவில்லை தரட்டுமா என்பான்.அவன் சொல்லுவான், எனக்கு, மறுபிறவி வேண்டும்.
இதுபோல பல கைங்கர்யங்களை செய்ய வேண்டும் ! சித்தர்களுக்கே பின்தொடர்ந்து காலகாலம், எத்தனை ஆண்டுகள் சித்தர்கள் உயிரோடு இருக்கிறார்களோ ? எத்தனை ஆண்டுகள் இந்த உலகம் இருக்கிறதோ ? எத்தனை ஆண்டுகள் நான் பிறவி பிறக்க வேண்டுமோ ? அத்தனை முறை நான் பிறப்பேன் ! ஆக சித்தர்களுக்கு தொண்டு செய்வேன் ! எனக்கு சித்த தரிசனம் கிடைக்க கிடைக்கத்தான் நான் நன்றாக இருப்பேன் என்று வேண்டுகோள் விடுத்தான். இல்லையென்றால் அங்குள்ள வேங்கடேசனுக்கு, இன்றையதினம் மறுபிறவி இருக்காது, எப்பொழுதோ முடிந்திருக்கும். ஆனால் ஆசைப்பட்டானே கடைசி நேரத்தில், எத்தனை பிறவி எடுத்தாலும், சித்த தரிசனம் செய்ய வேண்டும், சதுரகிரி மலைக்கு வர வேண்டும், வேங்கடவனும் தரிசனம் செய்ய வேண்டும். என் வேண்டப்பட்டவர், வேண்டப்படாதவர் என்பதல்ல, எல்லோருக்கும் எல்லா வித பாக்கியத்தையும் செய்ய வேண்டும் என்று சிறு குழந்தை போல கைகட்டி கொண்டிருக்கிறானே, அவனுக்கும் சித்தர்கள் தரிசனம் உண்டு, காலாங்கிநாதன் என்னை கூப்பிட்டு, அவன் முதுகை தொட்டு, சொட்டு என்று சொல்லுவார்களே ஆங்கிலத்தில், ஒரு சொட்டு போட்டு சொல்லு இவனுக்கு, இன்னும் பல பிறவிகள் இருக்கிறது, இன்னும் பல பிறவிகள் அவன் நல்லதொரு காரியத்தை செய்ய போகிறான், சித்தத்தன்மையில் வாழப்போகிறான் என்று சொல்லியிருக்கிறான்.
ஆகவே அவனுக்கு அந்த புண்ணியமும் இந்த நாள் தான், காலாங்கிநாதனே வலுக்கட்டாயமாக என்னடியாம் வந்து வழங்கியிருக்கிறான். ஆகவே அந்த புண்ணியமும் அவர்களுக்கும் உண்டு, அவர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் உண்டு.
ஆக சித்தர்கள் எங்கேயுமே மறைந்து விட மாட்டார்கள். சித்தர்களுக்கு ஜீவ சமாதி என்பது கிடையாது. ஆக அவர்கள் இங்கு தான் ஜீவ சமாதி என்றால் கண்ணயர்ந்து தூங்குவது போல் ஒரு நடிப்பு. மீண்டும் கண் திறப்பான், சித்தர்கள் வருவார்கள் ! அந்த சித்தர்கள் தன்மையைத்தான் இப்பொழுது எல்லோருமே பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.இனி இன்று முதல் சித்தர்கள் காலம் என்று சொல்லிவிட்டேன். ஆக சித்தர்கள் அத்தனை பேரும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். நிழலாகவும் இருப்பார்கள், தோழனாகவும் இருப்பார்கள், தூணாகவும் இருப்பார்கள், உங்களுக்கு எந்த சமயத்தில், எந்த வேண்டுகோள் இருந்தாலும் ஒன்றை செய்யுங்கள். காலாங்கிநாதரே சொல்லுகிறார், அத்தனை வேண்டுகோளையும் காலாங்கிநாதருக்கு அனுப்பி வைக்கட்டும், நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்கிறார் ! உங்களுக்கு மனக்கஷ்டம் இருக்குமே என்றால் ? பொருளாதார கஷ்டம் இருக்குமே என்றால் ? தொழிலில் முடக்கம் ஏற்படுமே என்றால் ? நோயால் அன்றாடம் அவதிபடுகிறீர் என்றால் ? வார்த்தைகளால் அன்றாடம் கொல்லப்படுகிறீர் என்றால் ? நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். உங்களுக்கு எந்த தெய்வத்திடம் நம்பிக்கை இருக்கின்றதோ ? அந்த தெய்வத்தை மனதார நினைத்து கொண்டு ஒரு லிகிதத்தில் (பேப்பரில்), உன் கஷ்டங்களையெல்லாம் எழுதி, காலாங்கிநாதனை நினைத்து, ஒரு நிமிடம் கண் மூடி, போகனை நினைத்து, ஒரு தடவை கண்ணை திறந்து பார்த்து அகத்தியனை நோக்கி ஒருமுறை வணங்கி வாங்கி வா, நாங்கள் மூவருமே உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து, வேண்டுகோளை உடனடியாக பரிசீலனை செய்வோம் !
அது எப்பேர்ப்பட்ட வேண்டுகோளாக இருக்கலாம். இதற்கு வேண்டியது, நியாயமா ? தர்மமா ? என்று கூட கேட்காதே. உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணிவிட்டார் காலாங்கிநாதர். எங்களையும் துணைக்கு அழைக்கிறார். எத்தனையோ வேலைகள் அகத்தியனுக்கு ஒரு பக்கம் இருந்தாலும் கூட, அதையெல்லாம் தாண்டிவிட்டு காலாங்கிநாதனுக்காக, அவன் பிறந்தநாளுக்காக, அவன் வேண்டுகோள் விடுத்ததற்காகவே அவன் கூட நானும் கைகோர்த்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை அகத்தியன் எத்தனையோ காரியம் செய்திருக்கலாம், எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம், உண்மையை சொல்லப்போனால் கடந்த 50 ஆண்டுகளாக, அகத்தியன் மைந்தன் மூலமாக ஏறத்தாழ 28 லட்சம் பேர் தலையெழுத்தை மாற்றி காட்டியிருக்கிறேன் ! அகத்தியன் மைந்தன் மூலமாக 182043 பேருக்கு நோய்களை குணப்படுத்தியிருக்கிறேன், எத்தனையோ பேருக்கெல்லாம் அவர்கள் குடும்ப நிலைமையை மாற்றி மனதை சந்தோஷ படுத்தியிருக்கிறேன். அதில் ஒன்று சென்று விட்டுப்போயிருக்கும். யானையின் பெருங்கவலை, யானை உட்கொள்ளும்பொழுது, பெரும் கவளம் வயிற்றுக்குள் போனாலும், ஒன்று சென்று கீழே விழுவது போல, ஒரு சிலருக்கு காரியங்கள் சற்று தாமதமாகியிருக்கலாம், நடக்காமல் கூட போயிருக்கலாம். அது அகத்தியன் குற்றம் அல்ல, சித்தர்கள் குற்றம் அல்ல.இனி அந்த பழுதும் வராமல், அகத்தியன் கண்கொத்தி பாம்பாக இருந்து, எல்லாருக்கும் எல்லா விதத்திலும் நன்மை பெறவேண்டும் என்பதற்காக நான் போராடி ஜெயிப்பேன் !!! எனக்கு பக்க பலமாக காலாங்கிநாதர் இருக்கிறார் !!! அதை விட என்ன பலம் எனக்கு வேண்டும் ? என் சம ஒத்த வயதுடையவர், எனது சம பலத்தை உடையவர், எனக்கும் இறைவனுக்கும் எப்படி தொடர்போ ? அதை விட பன்மடங்கு தொடர்பு உடையவர் !அவன் என்னோடு கைகோர்த்துக்கொண்டு இன்றைக்கு தான் வாய் திறந்து சொல்லுகிறான், இந்த மனிதர்களுக்கு நாம் ஏதேனும் உதவி செய்திட வேண்டும் !
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment