​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 19 November 2025

சித்தன் அருள் 2008 - அன்புடன் அகத்தியர் - கதிர்காமம் வாக்கு!






9/10/2025  அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: கதிர்காமம் கந்த பெருமான் சன்னதி . ஸ்ரீலங்கா.

ஆதி மூலனை மனதில் எண்ணிச் செப்புகின்றேன், அகத்தியன்!!!

அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அப்பனே!!!

முருகனின் அப்பனே, லீலைகள் அப்பனே, பல !! பல!! இவ்வுலகத்தில். அப்பனே,

இன்னும் அப்பனின் பின் லீலைகள் நடத்திக் கொண்டே தான் இருக்கின்றான். அப்பனே, நல்லவருக்காகவே!!! அப்பனே!!!!

நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் இதையெல்லாம் அப்பனே, பின் முருகனின் எதை என்று புரிய பக்தர்களுக்கு தெரியுமப்பா!!!, பரிபூரணமாக!!.

அப்பனே, முருகனையே நினைத்து, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட இருப்பவர்களும் கூட.......அப்பனே, இன்னும் புண்ணியங்கள் பெற வேண்டும் என்பேன். அப்பனே,!!

அப்புண்ணியத்திற்காகவே.!!!! அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பல வகையிலும் கூட. அப்பனே, வாக்குகள். அப்பனே,.....

(புண்ணியத்தை மனிதர்கள் பெறுவதற்காக சித்தர்கள் வாக்கு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்)

இவை தன்பின் வருங்காலத்தில் கலியுகத்தில். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, மக்கள் அப்பனே பின் பயன்படுத்தி, அப்பனனே வெற்றி கொள்வார் என்பேன். அப்பனே!!!

ஏனென்றால்? மிகப்பெரிய அப்பனே பின் எவை என்ற அறிய அழிவு ஒன்று காத்திருக்கின்றது!! என்பேன். அப்பனே,

அப்பொழுது பின் அழிவு வந்துவிட்டால், பின் நிச்சயம் எதை என்று புரிய இறைவன் தான் உண்மை. என்று இறைவனை நோக்கி நோக்கி புறப்படுவார்கள் என்பேன். அப்பனே!!

அதனால்தான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அவ் அழிவிலிருந்து, பின் நிச்சயம் அனைவரையும் காக்க. அப்பனே, சித்தர்கள், யாங்கள், நிச்சயம் தன்னில் கூட போராடிக் கொண்டே இருக்கின்றோம்.

மனிதனின் அப்பனே எண்ணங்களை, அப்பனே பின் மாற்றமடைய செய்து கொண்டே இருக்கின்றோம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.

அவ்வாறு, பின் நிச்சயம் மாற்றமடைய செய்துவிட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.!!!

மனிதனும் எதை என்று அறிய!!!! 

(மனிதனும் முயற்சிகள் எடுக்க வேண்டும் இறை பலத்தை இறைவனை தேடி தேடி அலைந்து கூட்டிக் கொள்ள வேண்டும்)

அதனால், அப்பனே, நிச்சயம் தேடி அலையுங்கள். அப்பனே,!!!!
நிச்சயம் தன்னில் கூட!!. அப்பனே

பின் சுயநலத்திற்காக, அதாவது, அப்பனே, திருமணம் வேண்டுமென்றால்,??? அப்பனே, நிச்சயம் பெண்ணை தேட!?!?. அப்பனே, எத்தனையோ, அப்பனே, மைல். அப்பனே, நிச்சயம் கடந்து கடந்து. அப்பனே!!!!, 

பணத்தை சேகரிக்க, எத்தனையோ,??? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே,!! எங்கெங்கோ!?. அப்பனே,

ஆனாலும், அப்பனே, இறைவனை தேடத்தான், நிச்சயம் தன்னில் கூட. மனிதனுக்கு கஷ்டமாகவே உள்ளதப்பா,

ஏனென்றால், மனிதன் சொல்வான், "யான் இருக்கும் இடத்திலிருந்தே இறைவனை காணலாம்" என்று.

அப்பனே, நிச்சயம் அவையெல்லாம் பொய்யே!!! என்பேன். அப்பனே!!

ஏனென்றால், அப்பனே, எங்கெங்கு? சக்திகள் அதிகமாக இருக்கின்றதோ,? அங்கெல்லாம், அப்பனே, நிச்சயம் அழகாக  சுவடிகளை எழுதி வைத்தோம். அப்பனே, யாங்களே!!!

ஆனாலும், அவையெல்லாம், நிச்சயம் தன்னில் கூட மாற்றி அமைத்து,!!!..... பின் இவ்வாறு, (சுவடிகளை கடைப்பிடித்து சென்றால் வாழ்க்கை நன்றாக அமைந்து விடும் என்று) பின் சென்றால், நிச்சயம் தன்னில் கூட, மனிதன் பிழைத்துக் கொள்வான் என்று!!

என்பதற்கிணங்கவே. அப்பனே, பின் அனைத்தும் மாற்றி அமைத்து விட்டார்கள் என்பேன். அப்பனே

இதனால் தான். அப்பனே, தேடி அலைய, நிச்சயம், அப்பனே, பாவங்கள் போகுமப்பா, புண்ணியங்கள் சேரும்ப்பா, அப்பனே, சக்திகள் கூடுமப்பா!!!

(சக்திகள் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு தேடி தேடி அலைந்து செல்ல வேண்டும் சித்தர்கள் ஒவ்வொரு வாக்கிலும் சக்தி மிகுந்த திருத்தலங்களை சொல்லிக்கொண்டே வருகின்றார்கள் அதை மனிதர்கள் கடைபிடிக்க வேண்டும்)

இதனால்தான். அப்பனே, நிச்சயம், அப்பனே, வரும் வரும் சந்ததிகளுக்கு, அப்பனே, நிச்சயம் எங்களுடைய வாக்குகள் அனைவருக்குமே போய் சேரும் என்பேன்.
அப்பனே, 

ஏனென்றால்???, அப்பனே, எப்படி, ஏது என்றெல்லாம், அப்பனே, எப்படி எல்லாம், அப்பனே, வாக்குகள் செப்ப வேண்டும்???. இன்னும், அப்பனே, மிக சக்தி இடங்கள் எங்கு உள்ளது??? என்பதை எல்லாம், அப்பனே, நலங்களாகவே செப்பி செப்பி, அப்பனே!!!!, 

பின் நீங்கள் உயர்வுகள் பெற வேண்டுமல்லவா!!! அப்பனே,

மனிதன், அப்பனே, நிச்சயம், மனிதனை எதை என்று புரிய. அப்பனே, மனிதனால், அப்பனே, அனைத்தும் செய்ய முடியுமப்பா, அதனால்தான். அப்பனே!!!,

மனிதனுக்கு, ஆனாலும், அப்பனே, மனிதனுக்கு அறிவுகள் இருந்தும், அறிவில்லாமல் செயல்படுகின்றான் என்பேன் அப்பனே,

இதனால்தான். அப்பனே, மற்ற பின் ஜீவராசிகளும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கீழ் நோக்கி சென்று கொண்டே இருக்கின்றது என்பேன். அப்பனே,

நிச்சயம் வருந்துகின்றது என்பேன். அப்பனே,

இதனால்தான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதனை எதை என்று கூட. இன்னும், இன்னும், அப்பனே, பக்குவப்படுத்தி, எதை என்றறிய செதுக்கி, நன்றாகவே. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட!!

அப்பனே, பின் அதாவது பெரிய பெரிய, அப்பனே, மனுஷனாக மாற்றுகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தெரியுமப்பா, பின் சித்தர்கள் யார்? என்பது,!!!

மற்றபடி எல்லாம், அப்பனே, நிச்சயம், பின் ஒன்றும் தேவையில்லையப்பா. எங்களுக்கு!!!

அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அன்பான உள்ளம் தான், யாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்பேன். அப்பனே,

அவ் அன்பான உள்ளம், அப்பனே, பின் இருந்திட்டால் போதும் என்பேன். அப்பனே, யாங்கள் அங்கு, பின் அமர்ந்துட்டு, என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும்?? என்பதை எல்லாம், யாங்களே செய்திட்டு, அனைத்தும் கொடுத்திடுவோம் என்போம். அப்பனே, நலங்களாகவே.

அப்பனே, இன்னும், அப்பனே, எத்தனை? எத்தனை?, அப்பனே, மனிதனுக்கு, அப்பனே, பின் அதாவது ஒவ்வொரு மாதத்திற்கும், அப்பனே, ஒவ்வொரு, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் மணித்துளிக்கும், அப்பனே, ஒவ்வொரு நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது மாறிக்கொண்டே இருக்கின்றது என்பேன். அப்பனே, பின் வாழ்க்கை,!!!

நிச்சயம் தன்னில் கூட, அதாவது பாவங்கள் வந்து, மனிதனை, அப்பனே, நிச்சயம் பின் அண்டிக்கொண்டே இருக்கின்றது என்பேன். அப்பனே, நிச்சயம் மின்சாரம் போல்,!!

அவையெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, புண்ணியம் என்ற, அப்பனே, நிச்சயம் தன்னில், அப்பனே, பின் கம்பை எடுத்து, அப்பனே, நிச்சயம் பின், அதாவது பாவத்தை அடித்திட, அப்பனே, தூரே விலகிப் போகுமப்பா,

அதனால்தான், அப்பனே, நிச்சயம் சொல்ல வந்தோம். யாங்கள், அப்பனே!!!,

இதை எவை என்றறிய, அப்பனே, பின் இக் கதிர்காம அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் முருகனுக்கு எவ்வளவு? சக்திகள்? என்பவை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, போக போக, அப்பனே!!!!!!

, எதை என்று கூட, பல வழியிலும் கூட, அப்பனே, பின் எதை என்று அறிய, அறிந்தும் கூட, அப்பனே, பின் என் முன் தோன்றி, எதை என்று அறிய, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இவ்விடம் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பேன். அப்பனே!!!!


பல ரிஷிமார்களும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் எவை என்று புரியாத அளவிற்கும் கூட, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் நோக்கி நோக்கி, அதாவது இங்கு எதை என்று அறிய, கதிர் போல், அப்பனே, நிச்சயம் வளருமப்பா, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும், அப்பனே,


 நிச்சயம் பின், அதாவது, பின் ஞானி ஞானம் என்ப...( என்ற), அப்பனே, சொல்லுக்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, பின் முருகன் எதை என்று புரிய, அப்பனே!!!!, பரிசுத்தமான, அப்பனே!!!


, நிச்சயம், அதாவது எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம், அதாவது, பின் இவ் மரம் எதை என்று கூட, சாதாரண மரம் இல்லை என்பேன். அப்பனே, !!!!

(கதிர்காமத்தில் ஆலயத்தில் நதிக்கரையோரத்தில் ஒரு பெரிய அரசமரம் உள்ளது அந்த அரச மரத்தின் அடியில் தான் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் அய்யா ஜீவநாடி வாசித்தார் குருநாதர் குறிப்பிடும் மரம் அரசமரம்)


நிச்சயம் தன்னில் கூட, இராவணனே, அப்பனே, பின் இங்கு வந்து, எதை என்று கூட, தவங்கள் பல பல வழிகளில் கூட செய்து, அப்பனே, நிச்சயம் எதை என்று புரிய, அப்பனே, பின் எப்பொழுதும்!!!


, பின் அதாவது இராவணனுக்கு தெரியும், பின் எங்கெல்லாம்?, பின் தியானங்கள் செய்தால், வெற்றி கொள்ளலாம்??, நிச்சயம் தன்னில் கூட, எங்கெல்லாம்?, நிச்சயம் தன்னில் கூட, எவை அறிந்து என்றெல்லாம், அப்பனே!!!,


 அவனுக்கு ஒரு சிறப்பு இருந்தது என்பேன். அப்பனே, ஆனாலும், அச்சிறப்பு, அப்பனே, பின் பல பிறவில் கூட, அப்பனே, பின் ஈசனை வேண்டி வேண்டி, நிச்சயம் பெற்றுவிட்டான் என்பேன். அப்பனே,


 ஆனாலும், ஒரு பிறவியின் தன்னில் கூட, அப்பனே, இங்கே அமர்ந்து, அப்பனே, தியானங்கள் செய்ய செய்ய, அப்பனே, சக்திகள் ஏறிட்டது என்பேன். அப்பனே,

 இதனால், அப்பனே, சாதாரணம் இல்லை என்பேன். அப்பனே, இவ் மரமே, அப்பனே, ஒரு மாபெரும் சக்தியப்பா!!!!, அப்பனே,

 நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இங்கு, அப்பனே, தியானங்கள் செய்வோர்களுக்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எப்பொழுதும் குறை இல்லாத வாழ்க்கை அமையுமப்பா, அனைத்தும், அப்பனே, கிட்டுமப்பா, அப்பனே!!


 இதைதன், அப்பனே, பின் புண்ணியங்கள் இருந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இராவணனே அழைத்து, அப்பனே, நிச்சயம் முருகனிடம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, முறையிடுவான் என்பேன். அப்பனே,


 இவர்களுக்கெல்லாம் கொடு!!!! நிச்சயம் சக்தி!!!!!,

 பின் எங்கள் எதை என்று கூறிய, பின் அதாவது தந்தை (ஈசன்)  தந்தானே, அதேபோலே கொடு,!!!! நிச்சயம், பின் அனைவரையும் பாதுகாக்கட்டும் என்று!!


அப்பனே, இன்னும், அப்பனே, போக போக, இன்னும் எதை என்று புரிய. அப்பனே, எவையெல்லாம் புரிந்தும், எதை எல்லாம் அறிந்தும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, விதிவிலக்காக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இங்கு வந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் குழந்தை ரூபத்தில், பின் அழகாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் விளையாடிக் கொண்டே இருக்கின்றான். முருகனும் கூட, அப்பனே,!!!


 பின் வருவோருக்கெல்லாம் ஆசிகள் கொடுத்து, அப்பனே, என்னென்ன?? தேவை? என்பதை எல்லாம், அப்பனே, கொடுத்து கொடுத்து, அப்பனே, நிச்சயம் அனைவரையும் கூட,!!!

 அப்பனே, பின் குழந்தை, அப்பனே, ஒன்றும் அறியாது என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நீங்கள் கேட்டதை, அப்பனே, அப்படியே கொடுத்துவிடும் என்பேன். அப்பனே,


 இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் கார்த்திகை (திங்களில்), பின் பெண்களும் கூட, அப்பனே, நிச்சயம், அதாவது, பின் குழந்தை எங்களுக்குத்தான் சொந்தம், எங்களுக்குத்தான் சொந்தம் என்றெல்லாம், அப்பனே, பல ஆயிரம், பல ஆயிரம், அப்பனே, பின் நிச்சயம் பெண்கள், அப்பனே, வந்திட்டனர் என்பேன். அப்பனே, !!!
நிச்சயம் தன்னில் எது என்று புரிய. அப்பனே, நலங்களாகவே.

(கார்த்திகை மாதத்தில் முருகன் குழந்தை ரூபத்தில் இருப்பதை பார்த்தது அனைத்து பெண்களும் என்னுடைய குழந்தை என்று சொந்தம் கொண்டாட வந்தனர்)



 இதனால், அப்பனே, முருகனே யார்?,
பின் அம்மா!!! யாரை என்று அழைப்பது??? என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், எவை என்று புரிய.

ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, இதனால், எவை என்று அறிந்து கூட, பார்வதியும் ஈசனிடம்,!!!!


 நிச்சயம் தன்னில் கூட, இக்குழந்தைக்கு, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, பின் இத்தனை (பெண்கள் குழந்தையை தன் குழந்தை என சொந்தம் கொண்டாடி வந்து விட்டார்கள்), பின் அதாவது, எவை என்று புரிய. பின் அனைவரும் கூட,!!!!!!!



 பின் என் குழந்தை, என் குழந்தை என்று ஓடி வந்து விட்டார்களே. இப்பொழுது என்ன செய்ய வேண்டும்??? என்றெல்லாம்,


 நிச்சயம் அறிந்தும் புரிந்தும், இதனால், இவைதன் கூட, நிச்சயம், பின் கார்த்திகை தன்னில் கூட, பின் அதாவது, சஷ்டி எதை என்று புரிய, எதை என்றும் அறிந்தும் கூட, அப்பனே!!!,


(இச்சம்பவம் கார்த்திகை சஷ்டி தன்னில் நடந்தது)



பின் ஈசனாரும்
 நல்விதமாகவே, அப்பனே, எவை என்று கூட, மீண்டும், பின் அனைத்தும் பார்த்துக் கொண்டே இரு!!!!, நிச்சயம், தேவியே என்றெல்லாம் ஈசனும் கூட!!!!, 


பின் பலவகையான, பின் உண்மைகள் உந்தனுக்கே தெரியும் என்று,!!!!

 நிச்சயம், தன்னில் கூட, அக் குழந்தையை நம்மிடத்திலே இருந்து வைத்திருந்தாலே, எதை என்று புரிய. ஆனாலும், பின் சிறுவதிலே, இவ்வளவு, பின் எதை என்று கூட, ஞானங்கள் எதை என்று அறிய.


பார்வதி தேவியார்:

 ஆனாலும், நிச்சயம், இவ்வளவு, பின் எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, பெண்கள் வந்து, அதையும் கூட, என் பிள்ளை, என் பிள்ளை என்று கூறுகின்றார்களே.!!!


 பின் எப்படித்தான்?, யார்? எதற்கு?, பின் பதில் சொல்ல வேண்டும்? என்று!!!


,இன்னும், இன்னும் சில சில, நிச்சயம், தன்னில் கூட, பின் அதாவது, சில பெண்கள், நிச்சயம், முருகனே!!!!!......,

 நிச்சயம், பின் உன்னை தொடாவிடில், நிச்சயம், எதை என்று அறிய. இங்கேயே, அதாவது, அதாவது, பக்கத்தில் இருக்கும், நிச்சயம், தன்னில் கூட, நதியிலே குதித்து, நிச்சயம், அனைத்தும், பின் யான் இறப்பேன் என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட.!!!


 அதனால், பின் இக்குழந்தையை ஒருமுறையாக தொட வேண்டும் என்றெல்லாம்,

 நிச்சயம், பின் அழகாகவே, அறிந்தும் புரிந்தும், விரதம் மேற்கொண்டனர்,


 நிச்சயம், முருகனை காண, நிச்சயம், தன்னில் கூட, பல பல, பின் வழிகளில் கூட, அறிந்தும் எதை என்று புரிய.


 ஆனாலும், இவைதன் உணர, எத்தனை? எத்தனை? என்றெல்லாம், ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும் புரிந்தும் கூட, பின் இவை என்று அறிய, பின் எதை என்று கூற, நிச்சயம், தன்னில் கூட,


 இவ்வாறாகவே, அதாவது, அருணகிரி!!! ஈசனிடம், எதை என்று புரிய, பின் இவ்வாறாகவே, இக்குழந்தையை, நிச்சயம், விட்டுவிட்டால், எவ்வாறு என்பதையெல்லாம்,!!!


ஈசனார்:

 அருணகிரியே, நிச்சயம், இக்குழந்தைக்காக!!! நீ ஒன்று செய், !!! 

நிச்சயம், பின் அதாவது, அறுபடை, பின் வீடுகளுக்கும் சென்று, பின் அறிந்தும் கூட, நல்விதமாகவே சென்று, நிச்சயம், கடைசியில் வா!!!!,

 உண்மை தத்துவங்கள், பின் உந்தனுக்கே புரியும்!!.

 இதனால், நீயே, நிச்சயம், தன்னில் கூட, இப்பெண்களை காப்பாற்றுவாய்!!! என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட.



 இதனால், அருணகிரி நிச்சயம், பின் அறுபடை, பின் வீடுகளுக்கு சென்று, பின் உடனடியாக இங்கு வந்து, நிச்சயம், பின் தவங்கள், அதாவது, இவ் மரத்தடியிலே அறிந்தும் கூட, பின் தவங்கள், பின் அழகாக, பின் எதை என்று கூட,!!!

 பின் முருகன், பின் மனதிலே, பின் நிச்சயம், பின் சொல்லி, எதை என்று அறிய, நிச்சயம் புரிந்து கூட


. இதனால், நிச்சயம்,

 (அருணகிரிநாதர் அப் பெண்களைப் பார்த்து) 

எவை என்று யார்? யார்?, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, (இங்கு) ஓடுகின்றதே, இவ் நதியினில், தன்னில் கூட, பின் நீராடி, நிச்சயம், தன்னில் கூட, பாவத்தை தொலைத்து, பின் அவரவர், நிச்சயம், விரும்பிய போல், முருகனை, பின் அழகாக, பின் தூக்கிக் கொள்ளலாம் என்றெல்லாம், 
நிச்சயம், தன்னில் கூட,


 அவ்வாறாகவே, (பெண்கள் அனைவரும்) ஓடி ஓடி, நிச்சயம், தன்னில் கூட, பாவங்கள், பின் தொலைத்து, தொலைத்து, ஆனாலும், பின் இவ்வாறாக, பின் தொலைத்த பொழுது, நிச்சயம், பின் அதாவது, பின் (நதியில் )நீர் கூட, நின்றுவிட்டது, எதை என்று புரிய!!!

(கதிர்காமத்தில் ஓடும் முக்கிய நதி மாணிக்க கங்கை ஆகும். இது கதிர்காமம் புனித யாத்திரை தலத்தின் அருகில் அமைந்துள்ளது. 
மாணிக்க கங்கை: இந்த நதி கதிர்காமத்தின் புனிதத் தலத்திற்கு அருகில் பாய்கிறது.)



 பின் பாவங்கள், பின் அத்தனை பாவங்கள், மனிதன், எதை என்று புரிய, ஆனாலும், எவை என்று அறிய, மீண்டும், நிச்சயம், தன்னில் கூட, பின் அதாவது, அருணகிரிக்கு, பின் சந்தேகம், எதை என்று கூட,!!!!


 இத்தனை பாவங்களா?????, மனிதன் வைத்திருக்கின்றான்??


ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, அன்பை மட்டும் கொள்கின்றார்களே!!!


(மனிதர்கள் இறைவன் மீது அன்பு வைத்திருக்கின்றார்கள் ஆனால் அவர்களிடம் பாவமும் அதிகமாக இருக்கின்றது)

 சரி,!!..... பின் நிச்சயம், அக்குழந்தையை தூக்கி,!....இக்குழந்தை என்ன செய்கின்றது??? என்று பார்ப்போம் என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட,


 அழகாகவே, அறிந்தும் புரிந்தும், அதாவது, நிச்சயம், தன்னில் கூட,


 குழந்தை தவழ்ந்தது,!!!!

 பின் எங்குதான்? செல்கின்றது? என்றெல்லாம்,
(குழந்தையை தரையில் விட்டு குழந்தை எங்கு செல்கின்றது என்று அருணகிரிநாதர் கவனித்தார்)


நிச்சயம், அழகாகவே, இதுவும், நிச்சயம், தன்னில் கூட, பின் எத்தனை? எத்தனை,? பின் அவதாரங்கள்?????, முருகனினுடைய அவதாரங்கள்!!!!!!!!, பல பல வழிகளில் கூட,


 ஆனாலும், பின் மனிதனுக்கு தெரியவில்லையே!!!.


 அதனால்தான், பின் நிச்சயம், தன்னில் கூட, பின் முருகன் யார்,?? நிச்சயம், தன்னில் கூட, ஏன்?, எதற்காக,? அவதாரங்கள் எடுத்தான் என்பதை எல்லாம், நிச்சயம், பின் நாராயணன், ஏன்???, எதை என்று கூட, இன்னும் இன்னும், பின் பல வகையில் கூட, மனிதனுக்கு செப்புகின்ற பொழுதுதான், உண்மை நிலையே தெரியும்,!!! இறைவன் யார் ?? என்பதே தெரியும், நிச்சயம், தன்னில் கூட,



 பின் அந்நாள் வரை, இறைவன் யார்? என்பதை தெரியாமல், ஏதோ வணங்குகின்றோம், நிச்சயம், இறைவனுக்கு படைப்போம், நிச்சயம், ஏதோ !?!?மந்திரத்தை சொல்வோம்!!! என்பதுதான், மனிதனுக்கு தெளிவடையுமே தவிர,!!!!!


 இறைவன் யார்,?? எங்கு இருப்பான்??, என்னென்ன லீலைகள் செய்தான்??? என்பதை எல்லாம் யாருக்கும் தெரியாதப்பா.


 இதனால், அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட, ஏதோ வணங்கினோமா,!?!? வணங்கி வணங்கி, அப்பனே, கஷ்டங்களை பெற்று பெற்று, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் நோய் நொடிகளோடு, அப்பனே, வாழ்ந்து மீண்டும் பிறந்து பிறந்து, இறைவனை, நிச்சயம், அறியாமலே செல்கின்றான்.!!


 ஆனாலும், அப்பனே, சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்!!!!

""""", ஒரு ஆன்மா, நிச்சயம், இறைவனைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்!!.

 அப்பொழுதுதான், முக்தியும்!!! மோட்சமும் கிடைக்கும்!! என்பேன். அப்பனே!!!!!,


 இதற்கும் எதை என்று புரிய. அப்பனே, இன்னும் விவரமான வாக்குகள் செப்புகின்றேன். அப்பனே,!!!!!



 மீண்டும், அப்பனே, அழகாக, அப்பனே,  நீர் இல்லையப்பா. அப்பனே, நிச்சயம், ஆற்றில், பின் எதை என்று புரிய. அப்பனே,


 நிச்சயம், தன்னில் கூட, பின் இறங்கியது, அழகாக, இக்குழந்தை

(குழந்தை அதாவது முருகன் தவழ்ந்து கொண்டு நதியில் இறங்கினார்) 


, நிச்சயம், மீண்டும், பின் பெருக்கெடுத்து ஓடியது, நதி அறிந்தும் புரிந்தும் கூட.


 இதனால், பின் அனைவரும், எதை என்று கூட, மீண்டும், பின் சமமாகவே, அனைவரும், பின் நிச்சயம், தன்னில் கூட, கர்மம், கர்மத்தை, பின் தொலைத்து, நிச்சயம், தன்னில், எதை என்று அறிய. அப்பனே, அப்படியே, முருகன், அப்பனே, பின் அதாவது, பின் கீழுக்கும், மேலுக்கும் (மண்ணுக்கும் விண்ணுக்கும்), அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, எவ்வளவு, பின் உயரங்கள் என்றெல்லாம், அப்பனே, பின் தன் சுயரூபத்தை காட்டினான்.முருகன் அப்பனே!!!

(நதியிலிருந்து அனைவருக்கும் தன்னுடைய விஸ்வரூப தரிசனம் முருகன் காட்டினார்)


 அனைவரும், நிச்சயம், தன்னில் கூட, எவை என்று கூட, ஒவ்வொரு இடத்திலும் கூட, பின் குழந்தாய்!!, குழந்தாய்!! என்றெல்லாம், நிச்சயம், பிடித்துக் கொண்டனர் என்பேன். அப்பனே,


 நிச்சயம், எதை என்று புரிய. இதனால், எவ்வாறு அறிந்தும் கூட, நிச்சயம், தன்னில் கூட, எப்பொழுதும் உங்களுக்கு, யாங்கள் சேவை செய்ய வேண்டும் என்பதெல்லாம்.


 ஆனாலும், அருணகிரியோ, நிச்சயம், பின் பெண்களே!!!!!, அறிந்தும் கூட, நீங்கள் எப்படியோ, இக்குழந்தை, எதை என்று கூட, யாரும் குழந்தை என்று அறிந்தேனே.!!!!!


 ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, இப்படி செய்துவிட்டதே, நிச்சயம், தன்னில் கூட,!!!


 நீங்கள். ஆனாலும், உங்களுக்கு, பின் பிறப்புகள், ஆனாலும், இப்பொழுது முருகனை பிடித்துக் கொண்டீர்கள்!!!


(முருகனை சொந்தம் கொண்டாடி வந்த பெண்கள் அனைவருக்கும் இனியும் பிறவிகள் உண்டு)

 ஆனாலும், பல பிறப்புகள், நிச்சயம், தன்னில் கூட, இருந்த வண்ணம், உங்களுக்கு. ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாகவே, நிச்சயம், தன்னில் கூட, அழகாகவே, அறிந்து கொண்டு, கார்த்திகை, தன்னில் கூட, நிச்சயம், தன்னில், எவை என்று புரிய. நீராடி, நிச்சயம், தன்னில், பலமாகவே, நிச்சயம், எவ்வாறு புரிந்து புரிந்து, நிச்சயம், தன்னில் கூட, வந்து வந்து, நிச்சயம், இவ் முருகனை தொழுதால், நிச்சயம், தன்னில் கூட, எண்ணங்கள் பின் விஷயங்களுக்கு, அவை நடக்கும்.

(அந்தப் பெண்கள் மறுபிறப்பு எடுத்தாலும் கார்த்திகை மாதத்தில் இங்கு வந்து நதியில் நீராடி கதிர்காம முருகனை வேண்டிக் கொண்டால் அவர்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்று அருணகிரிநாதர் கூறினார்)



 ஆனாலும், நிச்சயம், பின் அருணகிரி!!!!!, எதை என்று கூட, நில்லும்!!!!! என்றெல்லாம், மேலிருந்து, ஒரு பின் கூக்குரல்,!!!(அசரீரி)


அதாவது, ஈசன்,!!!

அருணகிரியே!!!
 நிச்சயம், நீ இவ்வாறாக சொல்லிவிட்டால், நிச்சயம், பின் கார்த்திகை, திங்களில், பின் சஷ்டி, தன்னில், நிச்சயம், அறிந்து கூட, பின் அனைவரும் வந்து விடுவார்கள்.


 ஆனால், எப்படி?? என்றெல்லாம், நிச்சயம், யோசனையில், எதை என்று அறிய, பின் புரிய.!!!



(அருணகிரிநாதர் ஈசனாரிடம்)


ஆனாலும், நிச்சயம், அவையெல்லாம், நிச்சயம், எவை என்று கூட, யான் பார்த்துக் கொள்கின்றேன். கார்த்திகை, பின் மாதம் வந்தாலே, யான் மாயையை,...(புகுத்தி) நிச்சயம், மறைத்து விடுகின்றேன். யாரும் வர முடியாதவாறு, என்றெல்லாம்!
 நிச்சயம், தன்னில் கூட. 


ஆனாலும், முழு முயற்சியோடு, நிச்சயம், ஞானங்கள், எதை என்று அறிய, பின் பாவத்தை, நிச்சயம், தொலைத்தோர், நிச்சயம், வர முடியும் என்று. 

(மாயையில் இருந்தாலும் உண்மையான பக்தி அன்பு ஞானம் புண்ணியங்கள் இருந்தால் செல்ல முடியும்)



இதனால், அப்பப்பா, அறிந்து கூட, பின் நிச்சயம், பின் அதாவது, நீரை, பின் தலையிலோ!!,
(நதியின் நீரை தலையில் தெளித்துக் கொள்ளுதல்)
 அல்லது, பின் நீராடியோ, நிச்சயம், தன்னில் கூட, இவ் முருகனை, பின் வேண்டிக்கொண்டு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, வந்தாலே, அப்பனே, பின் போதுமானதப்பா.


 அதாவது, முருகன் என்பதை விட, யான் இங்கு குழந்தை தான் என்று சொல்வேன். அப்பனே,!!!!


 நிச்சயம், இவ்வாறாக, பல பல வழியிலும் கூட, அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட. ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, இப்பெண்கள் ஏன்,? எதற்கு? என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, குழந்தை வரத்தை, வரத்தை இல்லாதவர்களே!!!


(இப் பெண்கள் அனைவரும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்)

 அனைவரும் கூட, நிச்சயம், தன்னில் கூட. ஆனாலும், அனைவருக்கும் ஆசிகள் கொடுத்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அனைவருக்குமே, குழந்தை வரத்தை கொடுத்தான் என்பேன். அப்பனே, முருகன், அப்பனே,!! நன்றாகவே!!!,

அப்பனே நிச்சயம், தன்னில் கூட, இதேபோலத்தான், அப்பனே, சஷ்டி, தன்னில் கூட, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. பின் அறுபடை வீடுகளுக்கும் சென்று, அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, சில மூலிகைகளும் இருக்கின்றது என்பேன். அப்பனே, இப்பொழுதே, பின் அனைவருக்கும் அதை தெரிந்திருக்கும் என்பேன்.


 அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அவ்வாறாக, அப்பனே, பின் நிச்சயம், சஷ்டி, சஷ்டி, நிச்சயம், தன்னில் கூட.

(சஷ்டி விரதம் கடைப்பிடித்தல்)

ஒரு நாள், அப்பனே, பின் கார்த்திகை திங்களில், நிச்சயம் தொடங்கி, அப்பனே, சஷ்டி, சஷ்டி, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, சில விசேஷ பூஜைகள், அப்பனே, முருகனை நோக்கி, அப்பனே, பின் (கதிர்காமத்திற்கு) வர முடியாத போதிலும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, இல்லத்திலே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின் அதாவது, கதிர்காமனை, அப்பனே, நினைத்து, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, குழந்தை ரூபத்திலே, நினைப்போருக்கெல்லாம், அப்பனே, நிச்சயம், குழந்தை பாக்கியம் கிட்டும்ப்பா!!!.

(மழலைச் செல்வம் இல்லாதவர்கள் முருகனை குழந்தை ரூபமாக எண்ணிக் கொண்டு கார்த்திகை மாதத்தில் சஷ்டி விரதம் கடைப்பிடித்து முருகனுக்கு உரிய மூலிகைகளை பயன்படுத்தி அதாவது குருநாதர் வாக்கில் ஏற்கனவே கூறியிருக்கின்றார்.. 108 மூலிகைகளை பயன்படுத்தி ஓமம் வளர்த்துவது.... வில்வம் துளசி அருகம் புல் இன்னும் பல மூலிகைகள் விசேஷ பூஜைகளை செய்து வந்தால் கதிர்காமம் செல்ல முடியாவிட்டாலும் வீட்டிலிருந்து முறையாக சஷ்டி விரதம் அனுசரித்து முருகனுக்கு பூஜை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்)



 அப்பனே ஏனென்றால், அப்பனே, பின் கலியுகத்தில், அப்பனே, குழந்தை பாக்கியம் என்பதெல்லாம் அரிதாகும் என்பேன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட,!!!

பின்  தலைகீழாக மாறும் என்பேன். அப்பனே, இதனால்தான், அப்பனே, செப்புகின்றேன் என்பேன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட


. இதனால்தான், அப்பனே, அதற்காகவே, அப்பனே, பின் முருகன், அப்பனே, குழந்தை வடிவமாக, அப்பனே, அவதரித்து, நிச்சயம், தன்னில் கூட!!!!


. இவை யாரப்பா????? சொல்வார்கள்??? என்பேன். அப்பனே,


(இந்த ரகசியத்தை யார் சொல்வார்கள்???
 முருகன் குழந்தை பாக்கியம் தருவதற்காகவே குழந்தை அவதாரம் எடுத்த ரகசியம்)

 ஆனாலும், பின் சித்தர்கள், அப்பனே, பல வழியில் கூட எழுதி வைத்தார்கள், அழகாக.!!


 ஆனாலும், அப்பனே, நிச்சயம், இவையெல்லாம் மறைத்துவிட்டனர் என்பேன்.

 அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, மீண்டும் வெளிக்கொண்டு வருவோம்.


 அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, மீண்டும், அப்பனே, பின் முருகனே, பின் ஆட்சிகள் எதை என்றறிய. அப்பனே,!!!


 பின் நல்லோர்களை எல்லாம் தேர்ந்தெடுத்து அனைத்தையும், செய்து, அப்பனே, பின் அனைத்து ஜீவராசிகளும் இறைவனுக்கே சொந்தம் என்றெல்லாம். அப்பனே, இறைவனே, நிரூபிப்பான் என்பேன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட!!!!.


 அப்பனே, இதனால்தான், அப்பனே, எவை என்று புரிய. இதனால், அப்பனே, மானிடருக்கு, அப்பனே, சொல்லிச் சொல்லி, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. பின் ஆழ்த்துவதை விட அப்பனே, தண்டனைகளை கொடுத்து, அதாவது, கஷ்டத்தை கொடுத்து, திருத்துவதே மேல் என்றெல்லாம். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, முருகன் யோசித்துக் கொண்டே இருக்கின்றான் என்பேன். அப்பனே,


 இன்னும், அப்பனே, அவ் நிலைக்கு, அப்பனே, கொண்டு செல்லாதீர்கள் என்பேன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.

(மனிதர்களுக்கு சொல்லி புரிய வைப்பதை விட தண்டனைகள் கொடுத்து திருத்த வேண்டும் என்று முருகன் நினைத்துக் கொண்டிருக்கின்றார் ஆனால் முருகனுடைய எண்ணத்தின் படி நடக்க அந்த இடம் வரை செல்லக்கூடாது!!!

ஏனென்றால் சித்தர்கள் கூடி முருகனை முருகனின் எண்ணத்தை விவாதம் செய்த பொழுது முருகன் கோபப்பட்டால் நல்லது நடக்கும் ஆனால் முருகன் வருத்தப்பட்டால் இந்த உலகத்தில் என்ன நடக்கும் என்பது எங்களுக்கே தெரியாது என்று சித்தர்கள் விவாதித்தது சித்தன் அருள் வலைத்தளத்தில் வெளிவந்தது நினைவிருக்கலாம்!
முருகன் தரும் தண்டனை தீர்வுக்கு  முன்பாக சித்தர்கள் நமக்காக கூறும் வழிமுறைகளை கடைப்பிடித்து மாற்றிக்கொள்ள வேண்டும் மாறிக்கொள்ள வேண்டும்)



 அப்பனே, இதனால், பின் குறைகள் வேண்டாம் என்பேன். அப்பனே, அனைவருக்குமே ஆசிகள் இன்னும், இன்னும், அப்பனே, சில விஷயங்கள். அப்பனே, நிச்சயம், அதாவது, இறைவனைப் பற்றி தெரிந்து கொண்டாலே, புண்ணியமப்பா.  அப்புண்ணியத்தை வைத்து, நீங்கள், அப்பனே, சாதித்துக் கொள்ளலாம் என்பேன். அப்பனே,


 புண்ணியங்கள் இல்லை என்றால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஏதும் தெரிந்து கொள்ள முடியாதப்பா.

 அப்பனே, பல பிறவிகள் கடந்து, அப்பனே, பல கஷ்டத்தை சந்தித்து சந்தித்து, அப்பனே, நிச்சயம், தன்னில் வரவேண்டியதுதான். அப்பனே, 


அதனால், அப்பனே, தெரிந்து கொள்ளுங்கள். அப்பனே, அனைத்திற்கும், அப்பனே, காரணம் எது என்பதை, இறைவனே என்பேன். அப்பனே,

 அனைவருக்குமே தெரியும் என்பேன். அப்பனே, 

இதனால், அப்பனே, நல்விதமாக, அனைத்தும் தெரிந்து கொள்ளுங்கள் என்பேன். அப்பனே, சித்தர்கள் வழி நடத்த, அப்பனே, நிச்சயம், எதை என்று அறிய. அப்பனே, பின் நீங்களும் தெரிந்து கொள்வீர்கள் என்பேன். அப்பனே,

 கவலையில் இல்லை என்பேன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பெரிய பெரிய அழிவுகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது என்பேன். அப்பனே,


 ஆனாலும், அதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம், மறைமுகமாக. 

பின், அதாவது, உங்களுக்கு சொன்னாலும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின் பயந்து பயந்து,!!!!


 இப்படி எல்லாம் நடக்கின்றதா???! ஏன்,?? இறைவா, நீ தடுக்க வேண்டாமா??? என்றெல்லாம், அப்பனே, கேள்விகள். அப்பனே, பின் கேட்பவர்கள் உண்டு.


 அதனால்தான், அப்பனே, நிச்சயம், எங்களுக்கு தெரியுமப்பா. 

நிச்சயம், மனிதன் தான் சொல்லிக் கொண்டிருப்பான். அழிவுகள் வருகின்றது, அழிவுகள் வருகின்றது என்று. 

ஆனாலும், அவனுக்கு தடுக்க தெரியாதப்பா.


 ஆனாலும், அப்பனே, பின் யாங்கள் தடுப்போம், நிச்சயம், தன்னில்.கூட.

 அதனால்தான், அப்பனே, பின் கூட்டு பிரார்த்தனை எல்லாம். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அனைவரும் பின் ஒன்றாக இணைந்து, அப்பனே, செய்யுங்கள், செய்யுங்கள் என்றெல்லாம். அப்பனே, 

இப்படி, நிச்சயம், செய்து கொண்டே இருந்தாலே, அப்பனே, மனிதனின் சொல் பலிக்காதப்பா. நிச்சயம், தன்னில் கூட,

 பல வருத்தங்கள் ஏற்படாதப்பா. நிச்சயம், தன்னில் கூட,

 யாங்கள் இருப்போம், வழியும் செய்வோம். அப்பனே, இன்னும், அப்பனே, வாக்குகள் செப்புகின்றோம். ஆசிகள், ஆசிகளப்பா!!!.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

No comments:

Post a Comment