இறைவா !!!!! நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய திருஅண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை நிறைவு வாக்கு.
நாள் - 31.08.2025 ஞாயிற்றுக்கிழமை. காலை 8 மணி - மாலை 6 மணி வரை.
வாக்குரைத்த ஸ்தலம் :- ராஜா ராணி மஹால் , அவலூர் பேட்டை பை பாஸ் ஜங்ஷன் அருகில் , திருவண்ணாமலை.
( இந்த வாக்கு இடையில் இருந்து பதிவு செய்ததால் அவ்வாறே , இங்கு வெளி வந்துள்ளது )
(கூட்டுப் பிரார்த்தனை நிறைவு வாக்கு)
அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில ரகசியங்கள் நிச்சயம் தன்னில் கூட அப்பனே கவலை வேண்டாம், அப்பனே.
சிறுக சிறுக , அப்பனே சில பாவங்களை மறைந்து, புண்ணிய கணக்கு தொடங்கும் என்பேன்.
அது மட்டுமில்லாமல், அப்பனே, வரும் காலத்தில் பலத்த அழிவுகள் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறு, அப்பனே, அனைவரும் சேர்ந்து ஈசனை அழைத்தால், நிச்சயம் இறங்குவான் அப்பா.
மீண்டும் அண்ணாமலையிலும், அப்பனே, மதுரை தன்னில் ஆளும் மீனாட்சி தேவியிடமும் , அப்பனே, மீண்டும், அப்பனே, வேண்டிக்கொள்ளுங்கள் அப்பனே.
மனம் இறங்குவார்கள், அப்பா.
அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். கவலை வேண்டாம், அப்பனே.
யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே. சிறு குறைகளாயினும் , அப்பன், நிச்சயம் சிறுக சிறுக நிக்கிட்டு, அப்பனே, பெருவாழ்வு கொடுப்போம். ஆசிகள் , ஆசிகள்.
மீண்டும், அப்பனே, உரைக்கின்றேன் அப்பனே.
(மீண்டும் கூட்டுப்பிரார்தனையை அண்ணாமலையில் , மற்றும் மதுரையிலும் தொடர வேண்டும் என்று உரைத்தார்கள். அதற்கு அடியவர்கள் முதலில் முதலில் மதுரை அதன் பின் திருவாண்ணாமலையில் கூட்டுப்பிரார்தனை தொடரலாமா என்று தயக்கத்துடன் கேட்டபோது )
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, உங்கள் மனம் போலே செய்யுங்கள்.
அப்பனே, ஆசிகள் என்று சொல்லிவிட்டேன் , கவலைகள் வேண்டாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
இன்னும் புதிது புதிதான விஷயங்கள் எல்லாம் சொல்லி, அப்பனே, தெரிவித்து வந்தாலே போதுமானது, அப்பா.
அப்பனே, நீங்களே உங்களை மாற்றிக்கொண்டு, பெரும் வெற்றியை நிச்சயம், அப்பனே, ஈசனே கொடுப்பான், அப்பா.
கவலைகள் வேண்டாம், அப்பனே,
நிச்சயம் தொடர்ந்து, அப்பனே, (நவகிரக) தீபத்தை ஏற்றிக்கொண்டே வாருங்கள் அப்பனே.
இன்னும் அப்பனே சித்தர்கள் புதுமையான ரகசியங்கள் எல்லாம் சொல்லுவார்கள் அப்பா. அப்பொழுது உண்மை நிலை தெரியும் உங்களுக்கு. அப்பனே, உண்மை நிலை தெரிந்த உடன் , அப்பனே, நிச்சயம் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் மறந்து போகும்,இன்பங்கள் வந்து கொண்டே.
அப்பனே கவலை வேண்டாம், சித்தர்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள்.
(அடியவர்கள் , அனைவரின் நலனுக்காகவும், திருவண்ணாமலையில் பலமாக முருகப்பெருமான் பாடல் மூலமாக ஆதி ஈசனாரையும் , பார்வதி அண்ணியையும் அழைத்தார்கள். அதனால் வாக்குகள் யாரும் பலமாக செப்பவில்லை)
குருநாதர் :- நிச்சயம் முருகன் கூக்குரலிட்டு , பின் அப்பனே, அதாவது ஈசன் பார்வதி தேவியை அழைத்தான் அல்லவா? நிச்சயம் அப்பனே, அதனால்தான் வாக்குகள் யாரும் பலமாக செப்பவில்லை.
அப்பனே, நல்லவிதமாக இப்பொழுது அனைவருக்குமே என்னுடைய ஆசிகள் அப்பனே.
நிச்சயம் உங்கள் பயணம் தொடரட்டும் , அப்பனே.
இன்னும் சொல்கின்றேன். ஆசிகள் ஆசிகள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete,, ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteபதிவுகளுக்கு நன்றி ஐயா
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete