அன்புடன் காகபுசுண்ட , அகத்திய மாமுனிவர் உரைத்த வாக்கு
02.11.2025 - திருவண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.- பகுதி 1
==================================================
# அன்புடன் காகபுசுண்ட மாமுனிவர் உரைத்த வாக்கு
==================================================
உலகாளும் ஈஸ்வரனையும், ஈஸ்வரியையும் வணங்கி, பரிசுத்தமான ஆற்றலோடு இயக்கும் அவன் மேலே பரிந்து உரைத்து, எண்ணமெல்லாம் எண்ணவென்று பரிந்துரைக்கப் போகின்றேன் புசுண்டனவனே.
எண்ணற்ற கோடிகள் மனிதன் பிறப்பு பிறப்பு எடுத்தாலும், நிச்சயமாய் இறைவனை உணர முடியாது, உணர முடியாது, மூடனே.
================================
# இறைவன் என்பவர் யார் ?
================================
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் எதை என்று புரிய, இறைவன் கண்ணுக்குத் தெரிவான். இறைவன் என்பவன் யார்?
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் நிச்சயம் தெரிவதில்லை. இதனால்தான் கஷ்டங்களே அதனால்தான் கஷ்டங்கள். அறிந்தும் நிச்சயம் மூடர்களே, இறைவன் என்பவன் யார்?
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் இவனைக் கண்டால், துன்பமில்லை.
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் ஆனால், துன்பக்காரர்களே, நீங்கள் அனைவரும் அப்படி இறைவனைக் கண்டு உணர்வதே இல்லையே.
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் எவை என்று அறிய, எதை என்று தத்துவத்தை, தத்துவத்தை விளக்குகின்றேன். ஈசன் என்னென்ன திருவிளையாடல்கள் விளையாடினான் என்றெல்லாம்.
காகபுசுண்ட மாமுனிவர் :- அதன் அறிந்தும் பிறகு, இப்பொழுது இறைவன் என்பவன் யார் என்று.
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் எவரும் உணர்வதில்லை. யாரோ ஒரு மூடன் சொல்லிக்கொண்டு, அதன்படியே நீங்களும் கூட.
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் துன்பத்தில், துன்பத்தில் பின்னே, பின்னே.
================================
# இறைவன் என்பவர் நீதிபதி
================================
காகபுசுண்ட மாமுனிவர் :- இறைவன் நீதிபதி.
காகபுசுண்ட மாமுனிவர் :- தண்டனை கொடுக்க மட்டுமே தெரியும், ஆனால் மற்று எவை?
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும், அப்பொழுது இறைவன் யார்? மீண்டும் கேட்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் சுருக்கம் :- ( இறைவன் எங்கும் பரந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர் நீதிபதி மாதிரியே இருக்கிறார் — தண்டனை கொடுக்க தெரியும், தீர்ப்பு வழங்க தெரியும். நீதிபதியிடம் வந்து தண்டனை தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை. பிரச்சனை வந்தால் தான் கோர்ட்டுக்கு போவோம், அப்போ அவர் ஆயுள் தண்டனையோ, தூக்கு தண்டனையோ கொடுக்கிறார். வேறு ஏதாவது சொல்கிறாரா? என்றால் கிடையாது. இல்லையென்றால் கேஸ் தள்ளுபடி. இல்லை என்றால், தண்டனை. இறைவன் யார் என்பதையே கேட்கின்றார். )
============================================================================
# இறைவனை நீதிபதி என்று புரிந்து கொண்டு, பலர் புகழை அடைகின்றனர்
============================================================================
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் இதை பல்லோர் மேலிடத்தோர் புரிந்து கொண்டு, அமைதியாக பின் புகழை அடைகின்றனர்.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் சுருக்கம் :- ( சிலர் மட்டுமே—மேலோர், மேல் மேல்நாட்டோர் போன்றவர்கள்—இது இறைவனின் உண்மை என புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் பெரிய புகழ் பெறுகிறார்கள், ஆனால் நமக்கு அது தெரியவில்லை.)
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் இதைச் சொன்னேன், நிச்சயம் புரியாது மனிதனுக்கு என்று அமைதி, அமைதி காத்து, அமைதி காத்து. இப்படியே காலங்கள் எல்லாம் பின்.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் சுருக்கம் :- ( இறைவனை உணர்ந்த சிலர், அவரை புரிந்து கொண்டு, நல்ல வாழ்க்கை வாழ்ந்து, தங்கள் பயணத்தை முடித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். மனிதனுக்கு அவர்கள் சொன்னாலும் பயனில்லை, ஏனெனில் மனிதன் கேட்க மாட்டான் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதனால், அவர்கள் மட்டும் உணர்ந்து, அமைதியாக வாழ்ந்து, வாழ்க்கையை முடித்து போய்விடுகிறார்கள். )
=====================================
# இறை சக்தி வேறு, இறைவன் வேறு.
=====================================
காகபுசுண்ட மாமுனிவர் :- இதை எவை என்று இறை சக்தி. இறை சக்தி வேறு, இறைவன் வேறு என்று யான் இங்கு குறிப்பிடுகின்றேன்.
========================================================
# இறை சக்தியை உணராதவர்கள் - கஷ்டத்துக்குள்ளே
========================================================
காகபுசுண்ட மாமுனிவர் :- மீண்டும் செப்புகின்றேன், இறைவன் தண்டனை மட்டுமே கொடுக்கத் தெரியும். இறைவன் சக்தித்தான் மிகப் பெரும் சக்தி. அச் சக்தியை உணராதவர்கள் அறிந்தும் மீண்டும் கஷ்டத்துக்குள்ளே, கஷ்டத்துக்குள்ளே.
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் அத்தண்டனிலிருந்து காப்பாற்றவே, நீங்கள் இறைவனை வணங்கி, வணங்கி, ஆனால் நீங்கள் யார் என்று இப்பொழுது புரிந்து கொண்டீர்களா?
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் சுருக்கம் :- ( நாம் எல்லாம் குற்றவாளிகள். நீதிபதியிடம் வணங்கி தப்பிக்கலாம் என நினைத்து, மீண்டும் மீண்டும் வணங்குகிறோம். ஆனால், நீதிபதி என்ன செய்கிறார்? எவ்வளவு வணங்கினாலும், அவர் தண்டனைதான் வழங்குகிறார். அதனால், வணக்கத்தால் தப்பிக்க முடியாது. )
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் இப்பொழுது இறைவன் சமம் நீதிபதி, ஆனாலும் பின் நீதிபதியுடன் நீங்கள் வரிசையாக நிற்கின்றீர்கள். நேரம் காலம் வரவேண்டும், நிச்சயம் ஒவ்வொருவருக்காக பின் தீர்ப்பை சரியாக கொடுத்தால் தான் வாழ்க்கை. அப்படி இல்லை என்றால், வாழ்க்கையே இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் சுருக்கம் :- ( ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்த செயல்களுக்கு தீர்ப்பு நிச்சயம் கிடைக்கும். மனிதன் குற்றவாளி. அதனால், இறைவனின் முன் அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். யாருக்காவது அதிர்ஷ்டம் இருந்தால், அவரை முதலில் அழைத்துச் செல்வார். மற்றவர்கள் இரண்டாவது, மூன்றாவது என பின்னால் நிற்கிறார்கள். ஒருவர் ஆயிராவது வரிசையில் இருந்தால், அவருக்கு தீர்ப்பு எப்போது வரும் என்பது தெரியாது—அது 50 வயதில் கூட இருக்கலாம். சிலர் சிறு வயதிலேயே நல்ல வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள், சிலர் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள். இது ஆன்மா செய்த தவறுகளுக்கான தண்டனை. இறைவனின் கையில் தீர்ப்பு இருக்கிறது )
======================================================
# நீதிபதிக்கு/இறைவனுக்கு யார் தண்டனை கொடுப்பது?
======================================================
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் எவை என்று அறிய, ஆனால் நீதிபதிக்கு யார் தண்டனை கொடுப்பது? அவன் தான் கடவுள்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( நீதிபதி தண்டனை வழங்குகிறார், ஆனால் நீதிபதிக்கு மேல இறைவன் இருக்கிறார். அதேபோல், இறைவனுக்கும் மேல ஒரு சக்தி இருக்கிறது—அவர் தான் உண்மையான கட்டளையிடுபவர். காகபுசுண்ட சித்தர் கூறுவது, இறைவன் தண்டனை வழங்கி சென்றுவிடுகிறார்; வணங்கினாலும், வணங்காவிட்டாலும், அவர் தண்டனையை வழங்குவார். ஆனால் அதற்கும் மேலே ஒருவர் இருக்கிறார், அவர் தான் இறுதி கட்டளையிடுபவர்.)
காகபுசுண்ட மாமுனிவர் :- உணர்வதில்லையே, மூடன்.
============================================================
# திருத்தலங்கள் = நீதிமன்றம், தண்டனை கொடுக்கும் இடம்
============================================================
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் திருத்தலங்கள், திருத்தலங்களாக சென்று, எத்தனை எத்தனை திருத்தலங்கள்? நோய் வராமல் இருக்கின்றதா? இன்னும் கஷ்டங்கள் வராமல் இருக்கின்றதா? திருத்தலங்கள் எல்லாம் நிச்சயம் சொல்கின்றார்களே, நீதிபதி வாழும் இடம். அவ்வளவுதான். நீங்கள் எல்லாம் நிச்சயம் சென்று கொண்டே, நிச்சயம் குற்றவாளிகள். நீங்கள் அனைவருமே
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( கோயில் என்பது நீதிமன்றம் போல. கோயிலில் நாம் தவறுகளை ஒப்புக் கொண்டு தீர்ப்பு பெறுகிறோம். இந்த உண்மை யாருக்கும் எளிதில் புரியாது; பக்தர்களுக்கும் ஞானிகளுக்கும் கூட இது முழுமையாக விளங்காது. திருத்தலங்கள் என்பது தண்டனை வழங்கும் இடங்கள்.)
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் இத்தனை, ஆனால் இறைவன் யார் என்றே தெரியாமல், இறைவனை குற்றம் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். மனிதர்கள் பாவிகளா?
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( இறைவன் யார் என்பதையே மனிதன் புரிந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில், இறைவனை குற்றம் கூறும் நிலைக்கு கொண்டு வருகிறார்கள். இறைவனை குற்றவாளியாக மாற்றுகிறார்கள். இறைவன் யார் என்பதே தெரியாமல், இறைவன் இல்லை எனவே கூறுகிறார்கள். )
காகபுசுண்ட மாமுனிவர் :- இறைவனை குற்றம் கூறினால் என்ன? தண்டனை உடனே அடிப்பான். ஆனால் அடிப்பதில்லையே. ஏன்?
காகபுசுண்ட மாமுனிவர் :- தவறு செய்தவன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றான். ஏனென்றால், நீதிபதியிடம் சென்றே ஆகவேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( தவறு செய்த மனிதன் வாழ்ந்து கொண்டே இருக்கிறான், ஆனால் தண்டனை பெற வேண்டியது அவசியம். கோயில் என்பது நீதிமன்றம் போல — நீதியை வழங்கும் இடம். நாம் கோவிலுக்கு போய், இறைவனிடம் நம் தவறுகளை ஒப்புக் கொள்வதற்கு பதிலாக, அவரை திட்டுகிறோம். இது நீதிமன்றத்தில் நீதிபதியை அவமரியாதை செய்வதற்கு சமம். அங்கே நீதிபதி உடனே தண்டனை வழங்குவார். ஆனால் இறைவன், அந்த அவமரியாதையையும் பொறுத்து, நம்மை தண்டிக்காமல் விட்டுவிடுகிறார். ஏன் அவர் இப்படிச் செய்கிறார் என்பதே கேள்வி.)
காகபுசுண்ட மாமுனிவர் :- நிச்சயம் இதன் எவை என்று கூற, இவ்வளவுதான் கற்றுக் கொண்டது. கடவுள், கடவுள் உள்ளே அறிந்தும், எது என்று இத்தனை, இத்தனை தவங்கள், ஆசனங்கள், இன்னும் என்னென்னவோ, இறைவனை காண, எத்தனை, எத்தனை ரிஷிகள், குருமார்கள், இன்னும் ஞானிகள் ஆனாலும், ஒருவராலும் அறிய முடியவில்லை. இறைவனை.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( இறைவன் என்பது ஒரு மறைபொருள். அதை யாராலும் முழுமையாக கண்டுபிடிக்க முடியாது. எத்தனையோ ஞானிகள், ரிஷிகள், உலகத்திற்கு வந்து தவம் செய்து, தியானம் செய்து முயற்சி செய்தாலும், இறைவனை காண முடியவில்லை. இது மனித அறிவுக்கு எட்டாத ஒரு ஆழமான உண்மை. )
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் இன்னும் பிறப்புக்களாக வேண்டும், வேண்டும் என்று
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( இறைவனை எங்கே இருக்கிறார் என்று அறிய வேண்டும் என்ற ஆழமான தேடலில், பலர் மீண்டும் மீண்டும் பிறப்புகளை அனுபவிக்கிறார்கள். இறைவனை காணும் முயற்சியில் அவர்கள் பிறப்புக்குப் பிறப்பு எடுத்து, அந்த உண்மையை grasp செய்யாமல் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறார்கள். )
காகபுசுண்ட மாமுனிவர் :- அப்படிப்பட்ட இறைவனை பின் சாதாரணமாக நீங்கள் எண்ணி விட்டீர்கள். நிச்சயம் பின் அது முடியாதப்பா, செல்லாதப்பா.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( பெரும் ஞானிகள், இறைவனை அறியவும், உணரவும், காணவும் எண்ணற்ற கோடி பிறவிகள் எடுத்துள்ளனர். ஆனால், சாதாரண மனிதர்கள் இறைவனை எளிதாக எண்ணி வாழ்கிறார்கள். இதை ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்—இறைவனை உணர்வது மிக ஆழமான பயணம், எளிதல்ல. )
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் எவை என்று புரிய, கடவுள் உள்ளை அறிந்து விட்டால், நிச்சயம் எதை என்று புரிய, எதை என்று அறிய, நீங்கள் தான் இறைவன்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( இறைவன் மற்றும் கடவுள் என்ற இரண்டும் வேறு வேறு அம்சங்கள். இறைவன் என்பது ஒரு பரந்த சக்தி, ஆனால் கடவுள் என்பது உங்களுக்குள்ளே இருக்கும் உணர்வு. ஒருவர் கடவுளை உணர்ந்து விட்டால், அவர் தான் இறைவன் . அதாவது, கடவுளை உணர்ந்த மனிதனே இறைவன் )
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் இதேபோல் எத்தனை, எத்தனை பின் மனிதன் பிறவிகள் எடுத்தாலும், கஷ்டத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், இறைவன் அறிந்தும், புரிந்தும், நிச்சயம் அவனுக்கு மேலே ஒரு சக்தி. நிச்சயம் அதை எப்பொழுது கண்டுகொள்ள போகின்றீர்கள்?
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( மனிதனுக்குள்ளே இறைவனுக்கும் மேலான ஒரு சக்தி இருக்கிறது, ஆனால் அதை உணராமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்த சக்தியை உணர்ந்தால் தான் ஒருவர் இறைவன் ஆக முடியும், கடவுளை உணர முடியும். இல்லையென்றால், நாம் நீதிபதியிடம் கேள்விகள் கேட்டு, பெட்டிஷன் கொடுத்து, தீர்வு நாடும் நிலைக்கே சிக்கிக் கொண்டிருக்கிறோம். )
காகபுசுண்ட மாமுனிவர் :- ஆனாலும் இவைத்தன் கலியுகத்தில் சொல்லாமல் இருந்தாலும், நிச்சயம் அறிந்தும் இன்னும் சில ஆண்டுகளிலே கஷ்டங்கள் வந்து கொண்டே, இறைவன் இல்லை என்றே சொல்லிக் கொண்டிருப்பான். மூடன்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( இறைவனைப் பற்றிய உண்மையை இனிமேல் சொல்லாமல் விட்டு விட்டால், சில வருடங்களில் மக்கள் “இறைவனே இல்லை” என்று கூறும் நிலைக்கு சென்று விடுவார்கள். கலியுகத்தில் இது ஒரு அபாயம். அதனால், உண்மையை நாம் எடுத்துரைத்து, பரப்ப வேண்டும். இறைவன் இருப்பதை உணர்த்தும் பொறுப்பு நமக்கே உள்ளது.)
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் எங்களையும் நம்பி, நம்பி அறிந்தும், புரிந்தும்,
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( மக்கள் சித்தர்களை நம்பி இருக்கிறார்கள். அதனால், இறைவனைப் பற்றிய உண்மையை எடுத்துரைக்கும் பொறுப்பும் சித்தர்களுக்கே உள்ளது. உண்மையை வெளிப்படுத்த வேண்டிய கடமை சித்தர்களிடம் இருக்கிறது, ஏனெனில் சித்தர்களின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். )
காகபுசுண்ட மாமுனிவர் :- இவை சார்ந்து அறிந்தும் எதை என்று புரிய, ஆனால் இத்தனை நாட்கள் நீங்கள் நீதிமன்றத்துக்கு தான் சென்றீர்கள். ஆனால் விடிவு எப்பொழுதோ.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( மனிதர்கள் தண்டனையிலிருந்து விடுதலை பெற முடியாமல், கோர்ட் வாசலில் நின்று கொண்டிருக்கிறார்கள். கோயில்கள் கூட நீதிமன்றம் போலவே, நாம் தவறுகளுடன் சென்று, வாய்தா வாங்கி, தீர்ப்பு எதிர்பார்த்து நிற்கிறோம். ஆனால், யாரும் உண்மையான மாற்றத்தை செய்ய முயலவில்லை. எல்லோரும் ஏதாவது நடக்கும் என எதிர்பார்த்து, செயலற்ற நிலைமையில் இருக்கிறார்கள். )
==============================
# ஈசனின் ஆகாய ரகசியம்
==============================
காகபுசுண்ட மாமுனிவர் :- இதைத்தன் சார்ந்து எவ்விசயங்கள் என்ற நிலை அறிந்தும் அண்ணாமலையை இப்பொழுது சில பின் ஈசனின் பின் ஆகாயத்தை இப்பொழுது தெரிவிக்கின்றேன்.
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் எதை என்று எவை என்று அறிய, ஈசன் ஒருவனே. ஆனாலும் அதிலிருந்து பிரித்து ஓடியது தன் இதயம்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ஈசன் ஒருவரே — அதாவது, இறைவன் ஒரே சக்தி. அந்த ஒருமையில் இருந்து பிரிந்து ஓடியது "ஹார்ட்" எனப்படும், இதயம்.
=======================================================
# ஈசனின் இதயம் அன்னை பார்வதி தேவி - கைலாயம்
=======================================================
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிவித்தும் இதை சார்ந்து எதை என்று அறிய, அவ்விதயம் தான் பார்வதி தேவி ஓடுகின்றது.
காகபுசுண்ட மாமுனிவர் :- இப்பொழுது கூறுங்கள், பின் பார்வதியும் ஈசனும் வெவ்வேறா என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- இரண்டும் ஒன்றுதான். நீங்க பார்வதி தேவி கும்பிட்டாலும் ஒன்றுதான். ஈசன் கும்பிட்டாலும் ஒன்றுதான்.
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் எவை எதை என்று புரிய, இவ் அண்ணாமலையிலிருந்து கைலாயத்திற்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அண்ணாமலையில் இருந்து ஈசன் (இறைவன்) இங்கே இருக்கிறார். ஆனால் இதயம் — அதாவது உணர்வும் ஆன்மீக சக்தியும் — கைலாயத்தை நோக்கி பிரிந்து ஓடுகிறது. அது பாஸ்ட் (வேகமாக) ஓடுகிறது. )
காகபுசுண்ட மாமுனிவர் :- இதை அறிவித்து அனைத்து சித்தர்களும் அறிந்தும் ரிஷிமார்களும் உணர்ந்து கொண்டு ஓடோடி.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இந்த ஆழமான ஆன்மீக உண்மை — இதயம் என்பது பார்வதி தேவி என்பதையும், இறைவனின் உணர்வுப் பகுதியை — ரிஷிகள், முனிவர்கள் மற்றும் சித்தர்களுக்கே மட்டும் தெரியும். மற்ற யாருக்கும் இது தெரியாது. )
காகபுசுண்ட மாமுனிவர் :- இவையறிவித்து எதை ஈர்த்து தன்னில் கூட பின் ஓரிடத்தில் அழகாக அறிந்தும் நின்றது அறிந்தும் எவை என்று பின் இருதயம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ ஒரு இடத்தில் நின்று விட்டது அந்த இதயம்.
காகபுசுண்ட மாமுனிவர் :- மீண்டும் சரி என்று அனைவரும் இங்கு வந்தனர். பல கோடி ஞானிகளும் கூட, ஆனால் ஈசனால் பின் ஒன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இதயம் திரும்பி ஓடிவிட்டது. பின்னர், பல கோடி ஞானிகளும் திருவண்ணாமலைக்கு திரும்பி வந்தார்கள். ஈசனால எதையும் செய்ய முடியவில்லை. )
காகபுசுண்ட மாமுனிவர் :- இதை அறிவித்து, இதை ஈர்த்து, மீண்டும் எதை அறிவித்த நிலையில், மற்றொன்று எதைக் காண, மீண்டும் அறிந்தும் புரிந்தும் ஓடோடி. ஆனாலும் இதைத்தன் உணர்ந்து, பின் அறிந்தும் எதை என்று அறிய, மீண்டும் பின் மூளை அறிந்தும் எதை என்று கூற, அதில் ஒன்று பின் அறிந்தும் எவை என்று புரியாத நிலையிலும் கூட, மீண்டும் ஓடோடி, அறிந்தும் எவை என்று அறிய,
சுவடி ஓதும் மைந்தன் :- ( மூளை சிந்திக்கிறது — அதாவது அறிவு செயல்படுகிறது. ஆனால் சித்தர்களும் ரிஷிகளும், ஆன்மீக உண்மையைத் தேடி, ஓடோடியே திரும்பி இறைவனின் இருதயத்துக்கே போகிறார்கள். )
===================================================================
# ஈசனாருக்கு ஆகாயத்தில் இருந்து வந்த கடவுள் வாக்கு
===================================================================
காகபுசுண்ட மாமுனிவர் :- இதை அறிவித்து என்னவென்று, ஏது என்று அறிய, ஆனாலும் இருதயம் எதை என்று கூற, கூக்குரலிட்டு அனைத்தும் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது எவை என்று ஈசனுக்கு சக்திகள் போய்விட்டது. அறிந்தும் எதை என்று புரியாத நிலையில் இருந்தாலும், இவைத்தன் உணர்ந்துகில் என்ன என்று, பின் பலத்த சத்தத்துடனே அறிந்தும், ஈசனுடனே, பின் இரு கைகள் இருக்கின்றது. அதை எடுத்தால் அனைத்தும் வரும் என்று சத்தம். இதுதான் கடவுள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மேலிருந்து ஒரு சத்தம் வருகிறது — அதாவது, மேலே இருக்கும் கடவுளின் அறிவிப்பு. அந்த சத்தம் கூறுவது, ஈசனிடம் இரண்டு கை இருக்கின்றன. அந்த இரண்டு கைகளை எடுத்தவுடன், இறைவன் தானாகவே (ஆட்டோமேட்டிக்காக) செயல்பட ஆரம்பிக்கிறார் என்று சொல்லியது அந்த சத்தம்.)
===================================================================
# ஈசனின் ஒரு மூளை விஷ்ணு - ஈசனின் மற்றொரு மூளை பிரம்மா
===================================================================
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் ஒரு மூளையிலிருந்து வெளிப்பட்டவன் விஷ்ணு, ஒரு மூளையிலிருந்து வெளிப்பட்டவன் பிரம்மா. இப்பொழுது யார் ஈசன் ?
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஈசன் ஒரே ஆதாரமாக இருந்து, அவரிடமிருந்து இரண்டு தனித்துவமான "மூளைகள்" தோன்றுகின்றன. அந்த மூளைகளில் ஒன்றிலிருந்து விஷ்ணு தோன்றுகிறார்; மற்றொரு மூளையிலிருந்து பிரம்மா தோன்றுகிறார் )
காகபுசுண்ட மாமுனிவர் :- இவர்கள் யாவரும் நிச்சயம் தன்னில் எங்கு இருப்பார்கள் என்றால், நிச்சயம் மலைகளிலே தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஈசனும் , பிரம்மாவும், விஷ்ணுவும் மலையில் தான் இருப்பாங்க.)
காகபுசுண்ட மாமுனிவர் :- இவைத்தன் தத்துவங்களாக, இன்னும் ஞான தத்துவங்களாக ஆனாலும், புரிந்திருக்கையில் இவ்வளவுதான். ஆனால் நின்றேன் இங்கு வந்து, ஈசனே என்று. ஆனால் அறிந்தும் எதை என்று அறிய, பின் நிச்சயம் ஈசன் வாயாலே, பின் அண்ணாமலைக்கு அண்ணனே என்று.
=========================================================================
# அண்ணாமலை எம் அண்ணா போற்றி - (போற்றித் திருவகவல் 149 ஆம் வரி)
=========================================================================
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் எவை என்று அறிய, நிச்சயம் அண்ணனுக்கு அண்ணன் என்று நீங்கள் சொல்வீர்களே. அதை புரிந்து கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்கள் :- ( அண்ணாமலை எம் அண்ணா போற்றி - திருவாசகம்/போற்றித் திருவகவல் 149 ஆம் வரி )
காகபுசுண்ட மாமுனிவர் :- இதற்கு என்ன அர்த்தம்? யானும் ஈசனே என்று நின்றேன். ஆனால் இருகை கூப்பி, பின் நிச்சயம், பின் மேலிருந்து ஆச்சரியங்கள் எனக்குமே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( காகபுசுண்ட மாமுனிவர் வந்து ஈசனேன்னு சொன்னாராம். அவர் ஈசன் என்ன சொன்னாராம்? - அண்ணா, அண்ணா. )
காகபுசுண்ட மாமுனிவர் :- அப்பா, அறிந்தும் இதனால்தான் உங்களுக்கு புதுமையான விஷயங்கள் செப்பினாலும், நிச்சயம் தன்னில் கூட இன்னும் மூடர்களாகவே இருப்பதினால் தான் அகத்தியன் பக்குவங்கள் படுத்தி , படுத்தி எதை என்று அறிய, அப்பொழுதுதான் பின் அறிந்து கொள்ள முடியும். இறைவனின் லீலைகள் இல்லை என்றால், பின் நிச்சயம் தன்னில் கூட பூஜ்ஜியத்திலே இருக்க வேண்டியதுதான். பூஜ்ஜியத்திலே இருந்து கஷ்டங்கள் பட வேண்டியதுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( பக்குவம் இல்லாத நிலையில், எதுவும் கிடைக்காது. அறிவில்லாமல் பூஜ்ஜிய நிலையிலிருந்து செயல்பட முடியாது. அதனால், வாழ்க்கையில் கஷ்டங்களைச் சந்தித்து, அவற்றை ஏற்று வாழ்ந்தே ஆக வேண்டும்.)
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் எவை என்று அறிய, பின் எதை என்று புரிய, அனைவரும் நிச்சயம் தன்னில் கூட அமர்ந்திருக்கின்றீர்களே. நிச்சயம் சொல்லுங்கள்,
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்கள் :- ( பலமுறை பாடினார்கள் - “அண்ணாமலை எம் அண்ணா போற்றி” - திருவாசகம்/போற்றித் திருவகவல் 149 ஆம் வரி )
காகபுசுண்ட மாமுனிவர் :- அண்ணாமலை, எம் அண்ணா, போற்றி.
=========================================================================
# அண்ணாமலை ஈசனே. எனக்கும் மேலே ஒருவன் என்று உரைத்துள்ளார்கள்
=========================================================================
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் எவை என்று அறிய, என்ன அறிந்துள்ளீர்கள்? யாரோ ஒருவர் பேசிவிட்டார். அப்படியே பின் கூறுவோம் என்றுதான். ஆனாலும் அறிந்தும் யான் ஈசனாரே என்று நிச்சயம் பாசத்துடனே, பின் கையில் கூப்பி, பின் அறிந்தும் மேலேற்றி, அறிந்தும் இவைதன் ஆனாலும் இதை கூறியது ஈசனே. எனக்கும் மேலே ஒருவன் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( காகபுசுண்ட மாமுனிவர், ஈசனை கையெடுத்து கும்பிட்டு அழைக்கிறார். ஈசன் பதிலளிக்கிறார்: “எனக்கு மேல அண்ணாமலை இருக்கிறார், அதற்கும் மேலே அண்ணா, போற்றி.” பின்னர் இருவரும் ஆனந்தத்தில் விளையாடுகிறார்கள், “அண்ணாமலை, அண்ணா, போற்றி” என பாடுகிறார்கள். இறுதியில், ஈசனே உணர்கிறார் — அவருக்கும் மேலாக ஒருவர் இருக்கிறார். அவர் தான் “அப்பா” — எல்லாவற்றிற்கும் மேலான பரம்பொருள். )
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் எவை என்று அறிய, யான் எங்கு காண்பேன்? ஈசனாரே என்று.
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் எவை என்று அறிய, பின் சொல்லைக் கேட்கின்றாயா? என்ற ஈசனும், சரி என்று நினைத்துக்கொண்டு, பின் தலைக்கீழ் நட புரியும் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( காகபுசுண்டர் மாமுனிவரை பார்த்து ஈசனார் சொல்வது என்னவென்றால்: “ தலைக்கீழ் நட, அப்பொழுது தான் உனக்கு உண்மை புரியும்.” )
காகபுசுண்ட மாமுனிவர் :- ஈசனாரே, என்ன விளையாட்டு இது? என்று. ( காகபுசுண்டர் மாமுனிவரை பார்த்து ஈசனார்) ஆனாலும் அறிந்தும் அனைத்தும் புரிந்து கொண்டீர், புரிந்து கொண்டீர் என்று நீதான். அப்பா,
காகபுசுண்ட மாமுனிவர் :- அறிந்தும் எவை என்று அறிய, உலகத்தை ஓர் முறை சுற்றி வந்து, அண்ணாமலையிலே, முடியவில்லை என்று.
=================================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு ஆரம்பம்
=================================================
அகத்திய மாமுனிவர் :- இதைத்தன் அகத்தியன் எடுத்துரைக்கின்றேன் இப்பொழுது.
அகத்திய மாமுனிவர் :- அப்பனை எதை என்று அறிய, அனைவரும் கண்டு உணர்ந்தோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( எல்லா சித்தர்களும், உலகத்தில் நடக்கின்றதை அமைதியாகக் கவனித்து, அதில் உள்ள ஆழமான உண்மைகளை உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் “காகபுஜண்டர் முனிவர் இங்க என்ன செய்து கொண்டு இருக்கின்றார் ?” என வியப்புடன் பார்த்தாலும், வெளிப்படையாக எதையும் கூறாமல் அமைதியாக இருக்கிறார்கள்.)
அகத்திய மாமுனிவர் :- அறிந்தும் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட ஈசனாரும் அறிந்தும் தலைக்கீழில் பின் நடந்தாயே. புசண்டனே , எதை என்று புரிய? எவை நீ தெரிந்து கொண்டாய் என்று?
அகத்திய மாமுனிவர் :- எதை என்று புரிய, நிச்சயம் அறிந்தும் உலகத்தை சுற்றி வரவே, எதை என்று புரிய, என்னால் ஐயோ என்றெல்லாம், பின் எப்படி என்றெல்லாம் ஆனாலும் ஒன்றுமே யான் சிந்திக்கவில்லை என்று புசண்டனும்.
அகத்திய மாமுனிவர் :- அறிந்தும் அறிந்தும் எவை என்று அறிய, ( காகபுசுண்டர் மாமுனிவரை பார்த்து ஈசனார்) பின் குழந்தாய் மீண்டும் ஒருமுறை சென்றுட்டு வா.
அகத்திய மாமுனிவர் :- அறிந்தும் எதை புரிந்தும் எவை என்று அறிய, மீண்டும் எதை என்று, ஆனால் ஈசனின் பின் கட்டளையாய் இவை என்றெல்லாம் (என்று காகபுசண்ட மாமுனிவர்).
அகத்திய மாமுனிவர் :- அறிந்தும் எவை என்று நிச்சயம் தன்னில் கூட மீண்டும் நடந்திட, பின் (காகபுசண்ட மாமுனிவர்). மீண்டும் சுற்றி வந்து இங்கு (அண்ணாமலைக்கு).
அகத்திய மாமுனிவர் :- மீண்டும் ஈசனும் அறிந்தும், அப்பா, அறிந்தும் என்ன புரிந்து கொண்டாய் என்று
அகத்திய மாமுனிவர் :- நிச்சயம் தலைக்கீழ் நடப்பதே அவ்வளவு சுலபமில்லை. நிச்சயம் வலி தான் புரிந்தது என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (புரிதலின் விளைவாக வந்தது தலைவலி மட்டும்தான் என்று நான் புரிஞ்சுகிட்டேன் என்று காகபுசண்ட மாமுனிவர்.)
அகத்திய மாமுனிவர் :- நிச்சயம் ஒரு வரம் அறிந்தும் எப்பொழுது நீ உலகத்தை நன் முறையாக சுற்றி, பின் எதை என்று அறிய, என்று சுலபமாக இருக்கின்றது சொல்வாயோ? அப்பொழுது மட்டும் தான் மக்களுக்கும் விடிவெள்ளி புசண்டனே என்று. ஆனாலும் சுற்றிக்கொண்டே தலைவலி, தலைவலி என்று சுற்றிக்கொண்டே புசண்டனும். இதனால் பின் நிச்சயம் மக்களும் இக்கலியுகத்தில் இப்படித்தான் இருப்பார்கள்.
அகத்திய மாமுனிவர் :- அறிந்தும் எவை என்று அறிய, மீண்டும் நிச்சயம் போதுமடா என்றெல்லாம் புசண்டனுக்கு நிச்சயம் வந்து, பின் அறிந்தும் அடிமுடி, அடிமுடி காணாத அண்ணாமலையானே என்று. ஆனாலும் ஈசனும், இவையெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது என்று.
அகத்திய மாமுனிவர் :- இன்னும் எதை என்று அறிய, சுற்றிக்கொண்டே, சுற்றிக்கொண்டே. இதனால் நீங்களும் பின் எதை என்று கூற? இறைவன் யார்? எதை என்று அறிய இன்பத்திலும் துன்பத்திலும் சுற்றிக்கொண்டே.
அகத்திய மாமுனிவர் :- நிச்சயம் எவ்வளவு ஞானங்கள் உலகத்திற்கு எதை என்று புரிய, அறிந்தும் ஞானி எவன்? புசண்டன் அவனாலே புரிந்து கொள்ள முடியவில்லை. இறைவனை நீங்கள் எப்படித்தான் புரிந்து போகின்றீர்களோ? ஐயோ, பாவம்!
சுவடி ஓதும் மைந்தன் :- ( அகத்தியர் கூறுகிறார், “நீங்கள் எல்லாம் பாவம் ” — அதாவது, இறை உணர்வை அடையாத நிலை. பல கோடி யுகங்களாக வாழும் பெரிய சித்தர் காகபுசண்டர். அவர் பல தடவைகள் உலகத்தைச் சுற்றியும் இறைவனை உணர முடியவில்லை. அப்பொழுது எப்படி நீங்கள் இறைவனை உணரப்போகின்றீர்கள். )
அகத்திய மாமுனிவர் :- இதனால்தான் எவை என்று புரிய, மிகப்பெரிய, பெரிய, பெரிய ஞானிகள் நிச்சயம் எதை என்று அறிய வணங்கினாலும் எனக்கு மேலே ஒருவன் என்று ஈசன்.
அகத்திய மாமுனிவர் :- எதை புரிய? இவைதன் இயேசுவானாலும் இவ்வாறுத்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அன்பு சித்தர் இயேசுவானாலும், எனக்கு மேலே ஒருவன் என்று தான் கூறுவார்.)
அகத்திய மாமுனிவர் :- நபிகள் எவை என்று அறிய
சுவடி ஓதும் மைந்தன் :- ( நபிகள் நாயகம் கூட என்ன சொல்றாரு? நான் எல்லாம் இல்லப்பா! எனக்கும் மேல. )
அகத்திய மாமுனிவர் :- எதை அறிவித்த புத்தனும் இதைத்தான் இன்னும் சிந்தித்துக் கொண்டே இருக்கின்றான். நிச்சயம் மரத்தடியில் உட்கார்ந்து அறிந்தும் கூட ஒன்றும் விளங்கவில்லை. இறைவன் மேலே
அகத்திய மாமுனிவர் :- அறிந்தும் எவை என்று புரிய சரி. இப்படியே அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய கைலாயத்துக்கு செல்வோம். பார்வதி தேவியாவது வேண்டிக்கொள்வோம் என்று ( காகபுசண்டர்).
சுவடி ஓதும் மைந்தன் :- ( காகபுசண்ட முனிவர் , தனது ஆன்மிக தேடலில் அடுத்த கட்டமாக, கைலாயத்துக்கு செல்ல முடிவெடுக்கிறார். அங்கு இதயமாக இருக்கும் பார்வதி தேவியை வேண்டிக்கொள்வோம் என்று. )
அகத்திய மாமுனிவர் :- அறிந்தும் தாயே எவை என்று அறிய புசண்டனும் புரிந்து அறிந்தும், அதாவது இங்கு இருக்கின்றாய், எதை என்று அறிய. ஆனால் அங்கு வந்துவிட்டால், அனைத்தும் உணர்ந்து விடுவாய்.
இவ்வாறெல்லாம் என்னை அலை கழிக்கின்றான் ( விளையாடுகின்றார் ) தந்தை ( ஈசன் ) என்று ( முறையிட்டார்).
======================================================
# பார்வதி தேவி இருதயமாகவே காட்சி - கைலாயதில்
======================================================
அகத்திய மாமுனிவர் :- அன்றும் எதை என்று அறிய அறிய, ஆனால் ( பார்வதி தேவி ) இருதயமாகவே காட்சி ( அளித்தார்கள் , காகபுசண்ட மாமுனிவருக்கு கைலாயதில்).
சுவடி ஓதும் மைந்தன் :- ( அண்ணாமலையில் இருந்து , ஆதி ஈசனிடம் இருந்து பிரிந்து போன இதயம் உள்ள இடம் கைலாயம். அங்கு பார்வதி தேவி இதயமாகவே காட்சி அளித்தார்கள் , காகபுசண்ட மாமுனிவருக்கு )
அகத்திய மாமுனிவர் :- எதை எவை என்று புரிய, (பார்வதி தேவியும்) நிச்சயம் யான் (அண்ணாமலைக்கு) வரப்போவதில்லை (என்று உரைத்தார்கள்). எதை புரிய அறிய கலியுகமும் ஆரம்பமாகிவிட்டது.
அகத்திய மாமுனிவர் :- இதைத் தவிர்த்து அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பின் எதை என்று முடிவெடுத்தான். நிச்சயம் தன்னில் கூட தன்னால் இதயமாக, இதயமாக ஆக்க முடியுமே என்று. நிச்சயம் கலியுகத்தில் இப்படித்தான் அநியாயங்கள், அக்கிரமங்கள் நடக்கும். நிச்சயம் நாம் புகுந்துகொள்வோம் பார்வதி தேவி போல் என்று நினைத்தான் புசண்டனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (காகபுசண்ட மாமுனிவர் ஒரு முடிவெடுக்கிறார். அப்பா ஈசன் விளையாடுகிறார் உண்மையை சொல்லாமல் . அம்மா பார்வதி தேவி கயிலாயத்தில் இதயமாக இருக்கிறார். இருவரும் உண்மையை சொல்லவில்லை. கலியுகம் வேறு ஆரம்பித்துவிட்டது. இனிமேல் அநியாயங்கள், அக்கிரமங்கள் தான் நடக்கும். எனவே நாமும் பார்வதி தேவி போல கயிலாயத்தில் நுழைந்து விடுவோம் என்று).
=====================================================================
# திருவண்ணாமலை அஷ்டலிங்கங்கள் உருவான நிகழ்வு ரகசியங்கள்
=====================================================================
அகத்திய மாமுனிவர் :- இதை அறிவித்து எதை என்று கூற, மிக வேகமாக உள்நுழைந்தான். அறிந்தும் எதை என்று புரிய தட்டினான். அறிந்தும் ஈசனே அங்கங்கு விழுந்தது. இதனால்தான் அறிந்தும் அஷ்ட எவை என்று கூற, லிங்கங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அஷ்டலிங்கங்கள். காகபுசுண்ட முனிவர் கயிலையில் அதாவது இதயத்தில் உள் நுழைய வேகமாக இதயத்தை தட்டினார். அப்பொழுது இதயத்தில் இருந்து ஈசனின் லிங்கங்கள் அங்கங்கு திருவண்ணாமலையில் எட்டு மூலையில் விழுந்தது. அதாவது இதயம் 8 லிங்கங்களாக, சிதறி விழுந்த அவ் லிங்கங்கள் - திருவண்ணாமலையை சுற்றி அமைந்திருக்கும் அஷ்டலிங்கங்கள்)
================================================
# திருவண்ணாமலை அஷ்டலிங்கங்கள்
================================================
இந்திரலிங்கம்: கிழக்கு திசையில் அமைந்துள்ளது.
அக்னி லிங்கம்: தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது.
யம லிங்கம்: தெற்கு திசையில் அமைந்துள்ளது.
நிருதி லிங்கம்: தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது.
வருண லிங்கம்: மேற்கு திசையில் அமைந்துள்ளது.
வாயு லிங்கம்: வடமேற்கு திசையில் அமைந்துள்ளது.
குபேர லிங்கம்: வடக்கு திசையில் அமைந்துள்ளது.
ஈசான்ய லிங்கம்: வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது.
===============================================================
# அஷ்டலிங்கங்கள் உயிர் பெற்று ஈசனே, ஈசனே என்று துடித்தது
===============================================================
அகத்திய மாமுனிவர் :- இவையறிவித்து எதை என்று புரிய, எதை என்று அறிய ஆனாலும் நிச்சயம் உயிர் பெற்றது. அறிந்தும் எதை என்று கூற, ஈசனே, ஈசனே என்று
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஆனாலும். அந்த அஷ்டலிங்கமும் என்ன ஆச்சு? உயிர் பெற்று, ஈசனே, ஈசனே, ஈசனே என்று துடி துடித்தது. )
===============================================================
# உங்கள் கஷ்டங்களுக்கு விடிவு அளிக்கும் அஷ்டலிங்கங்கள்
===============================================================
அகத்திய மாமுனிவர் :- அறிந்தும் இவ்வாறாக கஷ்ட காலத்திலும், நிச்சயம் தன்னில் கூட அங்கங்கு பின் எட்டுத் திக்குகளிலும் கூட அமர்ந்து சரியாக, பின் மனம் பின் பலமுடனே ஈசனை வணங்கினால், நிச்சயம் அறிந்தும் கூட விடிவு உண்டு.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் விளக்கங்கள் :- ( அண்ணாமலையில் எட்டு லிங்கங்கள் - உங்கள் கஷ்ட காலங்களில் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து , அந்த எட்டு லிங்கங்களை, முறையாக அமர்ந்து , எதையும் நினைக்காமல், இறைவனை தியானம்/தவம் செய்து , முழுமையாக சணடைந்து , வணங்கி வந்தால் , உங்களின் சில பிரச்சினைகள் விலகும் என்று அகத்திய மாமுனிவர் சொல்றாங்க. 8 திக்கிலும் இன்னும் கூட அந்த உயிர் துடிச்சிட்டு தான் இருக்குது.)
====================================================================
# குருநாதர் அழைத்த, ஈசனை நோக்கிப் பாடும் ஒரு அம்மை அடியவர்
====================================================================
அகத்திய மாமுனிவர் :- அறிந்தும் பெண் ஒருவள் அறிந்தும் பின் பாடுங்க, ஈசனை நோக்கி அழகாக பின் உரைப்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் விளக்கங்கள் :- ( யாரோ இங்க ஒரு பெண் நன்றாக பாடுறாங்க. யாருன்னு தெரியல. எழுந்து பாடுங்க அம்மா. ஈசனை நினைத்து யாரோ இங்க பாடிட்டு இருக்கீங்க. வாங்கம்மா. அம்மா வாங்க. அவ் அடியவரை மேடைக்கு அழைத்தார்கள்)
குருநாதர் பாட அழைத்த அவ் அம்மை அடியவர் :- ( மேடை அருகில் வந்தார் அவ் அடியவர். பின் வரும் பதிகத்தை மிக இனிய குரல்வளத்தால் அங்கு பாடினார்கள். சுந்தரர் பெருமான் அருளிய பாடல். ஏழாம்-திருமுறை - பித்தா பிறை சூடீ பெருமானே )
திருச்சிற்றம்பலம்.
பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா
பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே, நினைக்கின்றேன், மனத்துன்னை
எத்தால் மறவாதே, நினைக்கின்றேன், மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தா, உனக்காலா இனி. அல்லேன் எனலாமே.
அத்தா, உனக்காலா இனி. அல்லேன் எனலாமே.
திருச்சிற்றம்பலம்.
அகத்திய மாமுனிவர் :- அறிந்தும் ஏன் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட இதை ஏன் உன்னை பாடினேனே. அறிந்தும் இவைத்தன் உணர,
சுவடி ஓதும் மைந்தன் :- ( அம்மா, நீங்க இந்த பாடலை ஏன் வந்து இந்த பாடலை பாடினீர்கள் என்று சொல்லுங்க? என்று உங்களை சொல்லச் சொல்கின்றார் குருநாதர். )
குருநாதர் பாட அழைத்த அவ் அம்மை அடியவர் :- இன்னைக்கு காலையிலிருந்து இந்த பாட்டு மட்டும்தாங்க என் மனசுல ஓடிட்டே இருக்கு.
அகத்திய மாமுனிவர் :- எதை என்று புரிவித்து அறிந்து ஆனாலும் அனைவருக்கும் சொல்லித்தா, மீண்டும்.
குருநாதர் பாட அழைத்த அவ் அம்மை அடியவர் :- ( மீண்டும் பாடினார் )
திருச்சிற்றம்பலம்.
பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா
பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே, நினைக்கின்றேன், மனத்துன்னை
எத்தால் மறவாதே, நினைக்கின்றேன், மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தா, உனக்காலா இனி. அல்லேன் எனலாமே.
அத்தா, உனக்காலா இனி. அல்லேன் எனலாமே.
திருச்சிற்றம்பலம்.
அகத்திய மாமுனிவர் :- எதை எவை என்று அறிய ஏன் எதற்காக, நிச்சயம் வாழ்க்கை தொலைத்துவிட்டு வந்திருக்கின்றாள். அதற்காக, இவ் நிச்சயம் தன்னில் கூட ஒரு வாய்ப்பை அளித்தேன். பின் ஈசனும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அந்த அம்மா வாழ்க்கையை தொலைச்சிட்டாங்க. அதனால்தான் அகத்தியர் ஒரு சான்ஸ் கொடுத்தார். யாருக்காவது வாழ்க்கை தொலைச்சிருக்கா? டோட்டலா, ஈசன் டேக் ஓவர் பண்ணிட்டாரு. அம்மா, சொல்லுங்கம்மா உங்கள் அனுபவத்தை பகிருங்கம்மா. )
குருநாதர் பாட அழைத்த அவ் அம்மை அடியவர் :- ( இவ் அம்மையின் வாக்கை, அவர் உரைத்தவாறே , உலகோர் அனைவரும் பக்தியை புரிந்து கொள்ள வேண்டும் என்று அப்படியே இங்கு பகிரப்பட்டுள்ளது)
இன்னைக்கு நான் இங்க இருக்கிறதே, அவரோட அருள் தாங்க, ஐயா.
நானும் சாதாரணமா ஒரு மானுட வாழ்க்கையில இருந்து சராசரியான ஒரு குடும்ப வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருந்தேன்.
ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி, நடராஜர் வந்து. வீட்ல பூஜைக்கு வந்தாரு. பூஜை பண்ண ஆரம்பிக்கிறதுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியாது. பூஜை பண்ண ஆரம்பிச்சு, அங்க சிதம்பரத்தில் இருந்து சுவாமி வந்து ஆறு பூஜை பண்ணனும், வருஷத்துக்கு இப்படி எல்லாம் பண்ணனும், அப்படின்னு சொன்னாங்க.
ஒரு விளையாட்டுத்தனமா ஆரம்பிச்சது தான் என் வாழ்க்கையில சிவபூஜை, அப்படிங்கறது. போக போக தான் தெரிஞ்சது, அவர் எப்படி ஆட்கொண்டு இந்த வாழ்க்கையை மாத்திக்கிட்டே இருக்காரு.
இந்த நொடி இப்ப வரைக்கும். அவரோட பிரசென்ஸ் இங்க நான் இப்ப நின்னு பேசுறது கூட, அவருடைய அருள்தான்.
இன்னைக்கு இங்க வந்து நிக்க முடியுமான்னு தெரியாது. ஆனா என்னை இங்க வர வச்சு. கோயில்ல அப்படி ஒரு அனுபவம், அண்ணாமலையார் கோயில்ல அப்படி ஒரு அனுபவம் கொடுத்து கூட்டிட்டு வந்து இங்க வந்து நுழையற கூப்பிட்டு நிக்க வச்சிட்டாரு. என்னை இங்க ஐயாவோட கருணையை என்ன சொல்றதுன்னு தெரியலைங்க.
===============================================
# நீதிபதியே இவள் இல்லத்தில் அமர்ந்துள்ளார்
===============================================
அகத்திய மாமுனிவர் :- இதயத்தின் அறிவித்து எவை என்று அறிய அனைத்தும் பின் சொன்னான். அறிந்தும் புஜண்டன் பல வழி அறிந்தும், இவைத்தன் அதை எடுத்துரைக்கவும் இன்னும் சில நாட்கள் ஆகட்டும். பின் தொடர்ந்து, அப்பொழுது செப்பினால் தான் உண்மைப் பொருள் விளங்கும். அறிந்தும் எதனால் எதை என்று அறிய, இவ்வளவு எதை என்று அறிய, நீதிபதியே, நிச்சயம் தன்னில் கூட இவள் இல்லத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( எல்லாரும் எங்க போறோம்? (ஆலயம் என்ற ) கோர்ட்டுக்கு போயிட்டு நிக்கிறோம். அந்த (ஆலயம் என்ற) கோர்ட்டின் நீதிபதி உங்க வீட்ல இருக்கார் அம்மா. )
அகத்திய மாமுனிவர் :- அப்பொழுது எவை என்று அறிய, எதை என்று புரிய, இன்னும் ஞானங்கள் எதை என்று அறிய, இன்னொரு ரகசியம் நான் அடுத்து சொல்லப் போகின்றேன். பின் நிச்சயம், பின் அறிந்தும், இவைத்தன் உணர, அறிந்தும், இவைத்தன் மீண்டும் ஒருமுறை (சிவபுராணம் அனைவரும் பாடுங்கள்).
(அன்புடன் காகபுசுண்ட, அகத்திய மாமுனிவர் மாமுனிவர் உரைத்த - 02.11.2025 அன்று நடந்த திருவண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு பகுதி 1 நிறைவு)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete