சித்தன் அருள் - 1958ன் தொடர்ச்சியாக!
குருநாதர்: அப்பனே இதனால் தான் பக்குவங்கள் வேண்டும்,அப்பனே நிச்சயம் தன்னில் கூட,எதை என்று புரிய அப்பனே.அப்பக்குவங்களை வைத்து தான் பல உண்மைகள் யாங்கள் சொல்ல முடியும் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன்: அதனால் தான் மனிதர்களுக்கு சில கஷ்டங்களை கொடுத்து பக்குவங்கள் அடைய வைக்கின்றனர். அந்த பக்குவங்கள் அடைந்தால் மட்டும் தான் சில உண்மைகள் புரியும்.
குருநாதர்: அப்பனே பாவத்தை நிச்சயம் கூட கழிக்க வேண்டும் அப்பனே.புண்ணியத்தை பெருக்க வேண்டும் என்பேன் அப்பனே.அப்பனே புண்ணியம் இருக்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை சொன்னாலும் பின் பிரம்மன் சரி என்று தலை ஆட்டி விடுவான் அப்பா.ஆனால் அப்பனே பாவம் இருக்கின்ற பொழுது,அப்பனே ஏன் சொல்கின்றீர்கள் அவன் அனுபவிக்கட்டும் என்று தான் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:அப்பொழுது பாவம் இருக்கும் பொழுது வேண்டிக்கொண்டால், ப்ரம்ம தேவர் அந்த மனிதர் துன்பத்தை அனுபவிக்கட்டும் , விட்டுவிடுங்கள் என்று சொல்லி விடுவார்.அதனால் தான் சித்தர்கள் மனிதர்களை புண்ணிய பாதைக்கு அழைத்து செல்கிறார்கள்.
குருநாதர்: அப்பனே இதனால் தான் அப்பனே ஏன் பக்தர்களை நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம் புண்ணியம் என்ற இடத்திற்கு அழைத்து வந்து யான் செப்புகின்றேன் அப்பனே.அப்பனே யாங்கள் அனைத்தும் சொல்ல தயாரப்பா,நிச்சயம் தன்னில் கூட பின் உயிர் எங்கிருக்கின்றது,அப்பனே எப்படி இயங்குகின்றது,அப்பனே எவ்வளவு நேரம் பின் நிச்சயம் தன்னில் கூட அதாவது ஒரு நாளைக்கு நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவ்வ்ளவு நேரம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஒரு சமநிலை வருகின்ற பொழுது, அப்பனே எவ்மந்திரத்தை செப்பினால் அப்பனே உடனே அப்பனே நிச்சயம் தன்னில் கூட நடக்கும் என்பதை எல்லாம் யாங்கள் விளக்குவோம் வரும் வரும் காலத்தில்.
சுவடி ஓதும் மைந்தன்: ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் உயிர் எங்கு இருக்கிறது , எந்த நேரத்தில் , எந்த நொடியில் ஒரு மந்திரத்தை உச்சரித்தால் வெற்றி கிடைக்கும் என்று குருநாதர் பிற்காலத்தில் சொல்லுவார்கள்.
குருநாதர்: அப்பனே இவை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட ஞானியர்கள் அழகாக தெரிந்து வைத்து இருந்தார்கள் என்பேன் அப்பனே.அப்பலூது தான் அப்பனே,அதாவது அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே,இறை என்ற துகள் பின் நிச்சயம் ஒரு நாளைக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஓரிடத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதை என்று அறிய,கண் இமைக்கும் நேரத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இடித்து அப்பனே மீண்டும் சென்று விடும் என்பேன் அப்பனே.அவ் இடிக்கின்ற நேரம் மனிதனுக்கு தெரியாதப்பா பாவங்கள் இருந்தால் என்பேன் அப்பனே.அவ் இடிக்கின்ற நேரத்தில் பின் மந்திரங்கள் சொன்னால் உடனடியாக அனைத்தும் நடந்து விடும் என்பேன் அப்பனே.நிச்சயம் இவை தன் அனைத்தும் சித்தர்கள் யாங்கள் அறிந்தோம் அப்பனே.இதனால் தான் அப்பனே பல பல அரசர்கள் சரியான நேரத்தில் நிச்சயம் யாங்கள் சொல்லி கொடுத்ததினால் அப்பனே அந்நேரத்தில் அப்பனே,அதாவது முன்பே அப்பனே பின் பாய்கின்ற நேரத்திலே நிச்சயம் தன்னில் கூட யாங்கள் மந்திரங்கள் உருட்டு கின்ற பொழுது செப்புகின்ற பொழுது,சரியான நேரத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே துகள் அப்பனே வந்தடைந்து நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் பின் அப்பனே நடக்கும்.
சுவடி ஓதும் மைந்தன்:ஒவ்வொரு நாளும் ஓர் நொடி ,அந்த இறை துகள் நமக்குள் வந்து சென்று கொண்டே இருக்கும்.
குருநாதர்: அதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதனை எப்பொழுதுமே மந்திரங்களை சொல்லிக்கொண்டே இருங்கள் என்று அப்பனே,ஆனாலும் நிச்சயம் இரவு பகலும் கிடையாதப்பா.ஆனால் அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கும் போது , இருக்கும் புண்ணியம் வேண்டும் அப்பனே,புண்ணியம் இல்லாவிடில் அப்பனே அவை வந்து அடைகின்ற பொழுது பின் தண்ணீர் குடிப்பது,கண் இமைப்பது ,பின் ஓய்வு எடுப்பது என்றெல்லாம் பின் நிச்சயம் ஒரு கண் இமைக்கும் நேரத்தில்.
குருநாதர்: அப்பனே இன்னும் நுணுக்கங்கள் இருக்கின்றது அப்பனே,ஆனால் மனிதனுக்கு அதை பயன்படுத்த தெரியவில்லை அப்பனே நிச்சயம் தன்னில் கூட,அதனால் தான் சொல்ல வந்தோம் சித்தர்கள் யாங்கள்.அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கிறோம் அப்பனே,அதை செயல்படுத்த தெரியாதவனுக்கு கஷ்டங்கள் பின் நிச்சயம் வந்து கொண்டே இருக்கும்.அப்பனே மீண்டும் மீண்டும் பிறவிகள் வந்து கொண்டே இருக்கும்.அப்பனே நல் முறைகளாக விளக்கங்கள்,அதனால் என் பக்தர்களுக்கு அப்பனே நிச்சயம் அனைத்தும் சொல்லி ,அப்பனே பிறவிப் பெருங்கடலை கடக்க செய்து விடுவோம் என்பேன் அப்பனே.அப்பனே பிறவி பெருங்கடலை யாராலும் தாண்ட முடியாதப்பா சொல்லிவிட்டேன் அப்பனே,ஆனால் பொய் சொல்லலாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம் கடைசி ஜென்மம் அது இல்லை என்றெல்லாம்,ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட யாம் அறிவோம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எப்படி காக்க வைப்பது நிச்சயம் தன்னில் கூட எங்கு வந்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம் அறிந்தும் புரிந்தும் அப்பனே நிச்சயம் நல் முறைகளாகவே அப்பனே இறைவனுடைய வெளிச்சம் அப்பனே எதை என்று புரிய அப்பனே, புருவத்தில் அப்பனே,இரண்டு புருவத்தின் மத்தியில் அப்பனே பட்டு கொண்டே இருக்கும் அப்பனே,அதை நிச்சயம் அப்பனே பின் அதற்கும் நிச்சயம் அதாவது மத்தியில் அப்பனே நிச்சயம் நின்று விட்டால் தான் அப்பனே கஷ்டங்கள்,அப்பனே இணைக்க வேண்டும் என்பேன் அப்பனே.அப்பனே இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நெற்றியில் நிச்சயம் தன்னில் கூட இன்னும் இன்னும் அப்பனே பின் அதாவது அப்பனே நிச்சயம் திருநீறு அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பல வகைகளிலும் கூட நிச்சயம் தன்னில் கூட பல மூலிகைகளாலும் அப்பனே எதை என்று கூற பின் நீறும் இன்னும் அதை ஏற்க பல வகைகளிலும் கூட முன்னோர்கள் தெரிவித்தனர் என்பேன் அப்பனே.
அப்பனே இதற்கு பின் பரிசுத்தமான ஈர்க்கும் சக்தி பச்சை கற்பூரத்திற்கு உள்ளது என்பேன் அப்பனே அதிகளவு.அப்பனே நிச்சயம் இதில் கூட மூலிகை தயாரிக்க வேண்டும் என்பேன் அப்பனே.அவை எப்படி தயாரிப்பது என்பதெல்லாம் எடுத்துரைக்கிறேன்.அப்பனே நிச்சயம் ரசாயனம் கூட ஐடா விடும் இதில் (பாதரசமும் இதற்கு தேவைப்படுகிறது),அப்பனே இன்னும் சில மூலிகைகளை யான் சொல்வேன் அப்பனே உபயோகித்துக்கொள்ளலாம்,அப்பொழுது தெரியும் இறைவன் யாரென்று ? நீ யாரென்று ? அதுவரை தன்னில் நிச்சயம் உணர முடியாதப்பா.அப்பனே இன்னும் விளக்கத்தை யான் தருகின்றேன் அப்பனே நிச்சயம் நிச்சயம் தன்னில் கூட.இருந்தாலும் அப்பனே ஒரே இடத்தில் உட்காருவது சுலபமில்லை என்பேன் அப்பனே.அப்பனே நிச்சயம் சில விஷயங்கள் சொன்னால் நீ குழப்பிக்கொள்வாய் அப்பனே ,அதிலே நேரம் போய்விடும்.அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம் அடுத்தடுத்து இன்னும் சோலி எல்லாம் உருட்டுவார்கள் அல்லவா ,அதை மட்டும் யான் சொல்லுகின்றேன் உந்தனுக்கு.அப்பனே நல் முறைகளாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம் பின் முன்னோர்களின் ஆசியும் கிடைக்க அப்பனே நிச்சயம் யானே செய்வேன் அப்பனே.ஏன் ,எதற்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட உன் முன்னோர்கள் எதை என்று புரிய அப்பனே , நிச்சயம் எங்கு எங்கெல்லாம் இருந்தார்கள் என்பதையெல்லாம் யங்கள் மட்டுமே அறிவோம் என்பேன் அப்பனே.எதற்கு எவை என்று புரிய அப்பனே,நிச்சயம் தன்னில் கூட அப்பனே,அதாவது நிச்சயம் தன்னில் கூட ஆன்மா என்பதெல்லாம் ஒரு சிறிய துகள் அப்பா.அதாவது நுண்ணுயிர் என்றெல்லாம் வைத்து கொள்ளலாம் என்பேன் அப்பனே.இன்னும் விவரமான வாக்குகள் வருகின்ற பொழுது இன்னும் தெளிவு அடைவீர்கள் என்பேன் அப்பனே.அப்பனே அது மட்டுமில்லாமல் அனைத்தும் ஒரே முறையில் சொல்லிவிட்டாலும் ,அப்பனே மறந்து மறந்து அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே மனிதனிடத்தில் ஒரு சக்தி இருக்கின்றதப்பா,அது எங்கு உள்ளது என்று யான் உங்களுக்கு தெரிவிக்கின்ற பொழுது,அவை தன் எங்கு எடுத்து வந்து நிச்சயம் வைத்து விட்டால் அப்பனே உங்கள் உன்னுள் அனைத்து பாவமும் நீங்கி புண்ணிய கணக்கு தொடங்கி ,அப்பனே அனைத்தும் நடக்கும் என்பதையெல்லாம் யான் எடுத்து உரைக்கின்றேன் அப்பனே.இதற்கும் அப்பனே நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.அதனால் தான் அப்பனே ,அங்கு செல் ! இங்கு செல் ! இப்படி செய் ! அப்படி செய் ! என்றெல்லாம் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே.அதாவது மற்றவருக்காக நிச்சயம் தன்னில் கூட உன்னால் புண்ணியம் செய்ய முடியவில்லை என்றாலும் ,மற்றவருக்காக போராடு என்பேன் அப்பனே .அப்பொழுது சில புண்ணியங்கள் உங்களை சேறுமாப்பா,அப்பொழுது சுலபமாக நான் ப்ரம்மாவிடத்தில் கேட்கின்ற பொழுது ,இவன் மற்றவருக்காக போராடுகின்றன,அதனால் இவனுக்கு யாங்கள் நல்லதே செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது பிரம்மா, அதாவது நீ சொல்கிறாயே, கை அசைத்து இறைவா என்று, அதேபோலத்தான் யாங்களும் பிரம்மா செய்து விடுகின்றோம் என்று !
(மற்றொரு பக்தருக்கு குருநாதர் முன் வந்து அமர்ந்தவுடன் , குருநாதர் திருவாய் மலர்ந்து வாக்குகள் நல்கினார்)
குருநாதர்: நிச்சயம் தன்னில் கூட என்னுடைய ஆசீர்வாதங்கள் பரிபூரணமாக , நாராயணின் ஆசீர்வாதங்கள் பரிபூரணமாக இருக்க நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் அனைத்தும் நிறைவேறும் கவலை இல்லை இப்பொழுது.அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வகையில் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும், நாராயணனே நிச்சயம் அழைத்து செல்வான்,அது மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட,ஒரு முறை பின் மட்டும் நிச்சயம் தன்னில் கூட கூத்தனூர் சென்று அறிந்தும் புரிந்தும் அப்பனே பின் அதாவது சரஸ்வதி தேவிக்கு அப்பனே நிச்சயம் முப்பெரும் தேவிகளும் நிச்சயம் இங்குதான் எவை என்று கூற பரிபூரணமாக நிச்சயம் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே,இதனால் அப்பனே நிச்சயம் அறிந்தும் புரிந்தும் அப்பனே பின் சென்று வாருங்கள் அப்பனே நிச்சயம் தரிசனம் எவை என்று கூற சரியாக கிட்டும் அப்பனே அனைத்தும் நிச்சயம் நடக்கும் என்பேன் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட அம்பாள் நிச்சயம் தன்னில் கூட அம்பாள் பரிபூரணமாக நிச்சயம் இயக்குவாள், நவராத்திரி அன்று தன்னில் கூட நினைத்து கொண்டே இருங்கள்,காரியங்களும் பின் நிறைவேறும்
சுவடி ஓதும் மைந்தன் : நவராத்திரி பொழுது அம்பாள் வீட்டிற்கு கூட வருவார்கள் என்று சொல்கிறார் குருநாதர்.
குருநாதர் : நிச்சயம் அறிந்தும் இதனால் நிச்சயம் தன்னில் கூட பரிபூரணமாக நிச்சயம் தன்னில் கூட தேவி பின் இல்லத்தில் தங்கியிருப்பாள்
சுவடி ஓதும் மைந்தன் : (கண்டிப்பாக அந்த அம்மன் உங்கள் வீட்டிலேயே தங்கி இருப்பார்கள் என்று குருநாதர் சொல்லுகிறார் )
குருநாதர்:அறிந்தும் பாடலை பாடு தாயே!
சுவடி ஓதும் மைந்தன் : குருநாதர் அம்மன் பாடல் ஒரு பாடலை பாட சொல்லுகிறார்.
பெண் அடியவர்: ஜெய ஜெய துர்கா ஜெய ஜெய துர்கா ! சர்வ சக்தி ஜெய துர்கா !! ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா !! சர்வ சக்தி ஜெய துர்கா !! என்ற துர்க்கை அம்மனின் பாடலை பாட ஆரம்பிக்கிறார் !
குருநாதர்: தாயே நிச்சயம் தன்னில் கூட,நீ என்ன வேண்டுகோள் விடுத்தாயோ? நிச்சயம் பின் எதை என்று அறிய பின் நிச்சயம் பின் வாயாலே வந்துவிட்டது துர்கா , துர்க்கை என்று நிச்சயம் கெட்டியாக பிடித்துக் கொள்,உனையும் விடமாட்டாள் அவள் பின் சொல்லிவிட்டேன் நிச்சயம் தன்னில் கூட பின்பு உரைப்பேன்.
அடியவர் வினா : நான் முன்னோர் பிரார்த்தனைக்காக, தர்ப்பணங்கள் மற்ற பித்ரு காரியங்கள் சரியாக செய்கிறேன்,என்னுடைய சிறிய தந்தையும் தர்ப்பணங்கள் சரியாக செய்கிறார்.பின் ஏன் எங்களுக்கு குடும்பத்தில் பிரச்சனைகள் வருகிறது ? கோவிலிலும் பூஜாரியாக இருக்கிறார்,நான் தெரியாத ஒரு காரியத்தில் காவல் நிலையம் வரை சென்று வந்திருக்கிறேன்,என்னக்கு அதில் எந்த தொடர்பும் இல்லை ,அந்நாள் ஒரு பிரதியாக அங்கு செல்ல நேரிட்டது.
குருநாதர்:அப்பனே நல்ல நேரம் தான் அப்பனே.குற்றங்கள் வேண்டாம்,குறைகளும் வேண்டாம்.
அடியவர்: மீண்டும் காவல் நிலையம் எதனால் செல்ல நேரிட்டது ,என்று வினவ முற்படும் பொழுது...
குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அப்பனே,நல் நேரம் என்று சொல்லிவிட்டேன் என்றால் அப்பனே,இவை சிறு பிரச்சனை தானப்பா.அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது இவன் வாகனத்தில் செல்கின்ற பொழுது இவன் விழுந்து அப்பனே பல வகையில் கூட நினைவை அப்பனே நிச்சயம் தன்னில் கூட நினைவை இழந்து அப்பனே நிச்சயம் அனைவருக்கும் தொல்லைகளாக போயிருக்கும் என்பேன் அப்பனே.இதனால் அப்பனே அதன் வழியில் அப்பனே குறைகள் இல்லை அப்பா நிச்சயம்.
அடியவர்: என்னுடைய தாத்தா மற்றும் முன்னோர்கள் அனைவரும் கோவில் வேலையில் இருந்தார்கள், அதை பற்றி..
குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட,அதாவது யான் சொன்னதை ஏற்று அப்பனே நலன்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்: குருநாதர் அவர் சொன்னபடி நவராத்திரி பிரார்த்தனை,கூத்தனூர் சென்று விட்டு வந்த பிறகு மீண்டும் கூறுகிறேன் என்று சொல்லுகிறார்.
குருநாதர்:அப்பனே நிச்சயம் எதை என்று புரிய அப்பனே, எவ்வாறு என்பதை எல்லாம்,நிச்சயம் தன்னில் கூட அப்பனே சில வகையான சாபங்களும் தான் காரணம் இவற்றுக்கும் கூட, அதனால் சொன்னேனே அப்பனே,நிச்சயம் பின் விபத்தில்,ஆனாலும் சிறிய அப்பனே சில வகையான புண்ணியங்கள் இருக்கின்ற பொழுது,சிறிய வகையில் தப்பித்தாய்.
சுவடி ஓதும் மைந்தன்: முன்னோர்கள் வழியில் நீங்கள் சொன்ன படி தோஷங்கள் இருந்தாலும் ,ஏதோ சிறிய புண்ணியங்களும் இருப்பதனால் இதெல்லாம் பெரிய விஷயங்கள் இல்லை.
அடியவர்: ஒரு இரண்டு வாரங்கள் முன்னாடி தான் அய்யா எல்லா கோவில்களுக்கும் சென்று வந்தோம் , தஞ்சை மற்றும் சுற்றியுள்ள கோவில்கள். பெண் அடியவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சையும் இப்பொழுது சமீபத்தில் நடைபெற்றது.
குருநாதர்:நிச்சயம் எதை என்று புரிய அம்மையே,அதாவது சொன்னேனே எதை என்று,எதை என்று புரிந்து கொண்டு ?
சுவடி ஓதும் மைந்தன்:குருநாதர் இதைப்பற்றி இப்பொழுது தான் கூறினார்கள்.பெரிய ஆபத்து ஏதுமில்லாமல் சிறிய அளவில் தொந்தரவுகளுடன் துன்பம் தீர்ந்தது.அது மூலமாக வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல் தடுத்து விட்டனர்.
அடியவர்: மூன்று மாதத்திற்கு முன்பு தான் கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் நடந்தது.
குருநாதர்:அப்பனே இதை பற்றி நிச்சயம் தன்னில் கூட,யான் சொன்னதை எடுத்து வாருங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:இதையெல்லாம் விட்டு விடுங்கள்.குருநாதர் சொல்லியதை பின்பற்றி வாருங்கள் என்று அறிவுறுத்துகிறார்.
குருநாதர்:அப்பனே என்ன எது நடக்கிறது என்பதை எல்லாம் உங்களுக்கு புரியும்,பின் அப்பொழுது நீங்கள் எதை என்று அறிய ,எதை புரிய ,புரிந்துகொண்டு அப்பனே,பின் அதை பற்றி யான் எடுத்துரைப்பேன்.
சுவடி ஓதும் மைந்தன்: ஐயா குருநாதர் கூறியவற்றை நீங்கள் பின்பற்றும் பொழுது,உங்களுக்கே நிறைய விஷயங்கள் புரியவரும், இல்லை இறைவன் அருளால் யாரோ முன்கூட்டியே உங்களுக்கு தகவல் கொடுத்து விடுவார்கள்.
பெண் அடியவர்: அறுவை சிகிச்சை கூட எங்களுக்கு முன்கூட்டியே தெரிய வந்தது.கடைசி கட்டம் வரை இல்லாமல்,முன்பே எங்களுக்கு தெரிய வந்ததால் பிழைத்தோம்.
குருநாதர்:அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நாணயத்தை நிச்சயம் தன்னில் கூட,இங்கு நாணயம் என்பது காசு ,அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட நிச்சயம் பல பல அதாவது உண்டியல் நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஒரு ரூபாய் நாணயத்தை கூட பின்னர் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் 108 : 108 அப்பனே நிச்சயம் நிரப்பி அப்பனே நிச்சயம் பின் சில திருத்தலங்களுக்கு கொடுத்து விடு.
சுவடி ஓதும் மைந்தன்: அய்யா உண்டியலில் ஒரு ரூபாய் காசு போட்டு 108 காசு சேர்ந்தவுடன்,அதை போன்று பல உண்டியல்கள் சேர்த்து பல கோவில்களுக்கு கொடுக்க சொல்லுகிறார். ஒரு 10,20 உண்டியல் வாங்கி இதை போன்று செய்யுங்கள்.உங்களால் முடிந்த அளவுக்கு செய்யுங்கள்.
குருநாதர்:அப்பனே இதை நான் ஏன் செய்ய சொன்னேன் என்று போக போக உங்களுக்கு புரியும் அப்பா.அப்பனே இவை எல்லாம் கொடுத்திட்டு வாருங்கள்.அப்பனே இவ்வாறாக சற்று பொறுத்திருங்கள்,அப்பனே விவரமாக சொல்லுகின்றேன் யானும்.
குருவருள் திருவருள் தொடரும் !!
ஓம் லோபாமுத்திரா சமேத அகஸ்திய பெருமான் திருவடிகள் போற்றி போற்றி !!!
குரு வாழ்க குருவே துணை !!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment