​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 14 November 2025

சித்தன் அருள் - 1998 - அன்புடன் அகத்தியர் - போகர் சித்தர் அருளிய மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு!






அன்புடன் போகர் சித்தர் அருளிய மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு:- 

05.10.2025, ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 8 மணி - மாலை 6 மணி.

(அடியவர்கள் பின் வரும் கூட்டுப் பிரார்த்தனை நாடி வாக்கு YouTube வீடியோவை இயக்கி  , அதனுடன் இந்த பாடல் வடிவமான வாக்கினை படிக்க நன்கு புரிதல் உண்டாகும்.

https://www.youtube.com/watch?v=SMB7Av04ohY&t=2h26m31s  )

==================================================

#     மீனாட்சி அன்னையை போற்றி போகர் சித்தர் பாடல் 

==================================================

அழியும் உலகை காத்து இரட்சிக்கும் அன்னையே!!!, பராசக்தியே!!!!! 

அன்னையே, வடிவாய் நின்று ஓதும் எதனால் உண்மையை அறிந்திருக்கவில்லையே? மானிடர்கள்!!.... 

எந்நாளும் எந்நாளும் எங்கே?? ஓடிக்கொண்டு!!! 

ஓடிக்கொண்டு எங்கே??? இறைவன் இருக்கின்றான்?? என !!.....

எத்தனை? குறைகள் இருப்பினும்!!... ஆயினும் எத்தனை ஆயினுமே !!....

அன்னை பராசக்தி காமாட்சியே! உமையம்மையே!!!, 

என்றென்றும் உன் வழியில் வந்து நிற்கின்றார்கள். 


எதனையோ  நம்பி என்னென்ன? செய்வார்கள் என்றெண்ணியே!!! 


தாம் தான் புண்ணியம் என்பது என்ன? மானிடனுக்கு தெரியவில்லையே? 


அன்பே!!, தாயே!!, காமாட்சியே! உமையவளே, 


வந்திறங்கி பின் ஆசீர்வதித்து என்றென்றும் மனிதனை  காப்பாற்றுவாயே! மீனாட்சியே!!!, 

அகிலம் காக்கும் மீனாட்சியே! 

ஆதி பராசக்தியே!!!, 


அனைத்தும் ஒன்றே என்றுதானே!!  பின் மனிதனுக்கு புரியவில்லையே? தாயே!!!, 

இப்படி இருக்கும் மனிதன் எப்படி மோட்சத்தை காணப் போகின்றான்???? 


அனைத்தும் ஒன்றே!!! என்ற பின் தானே மோட்சம் தித்திக்குமே ! 


அலைந்து அலைந்து கண்களுக்கே நீயும் தெரியவில்லை,!! தெரியவில்லையே! 

அன்பே, மீனாட்சியே, 

காஞ்சி காமாட்சியே!  விசாலாட்சியே, 


என்றென்றும் உன்னை நம்பி நம்பி, 

என்றென்றும் உன்னையே நம்பி நம்பி, 

மனிதன் தானே வாழ்கின்றானே! 


அவர்களுக்கு ஆசிகளை அள்ளித் தருவாயே! 

ஆசிகளை அள்ளித் தருவாயே! 


என்னென்ன ?நிச்சயம் அறிந்தும்  கூட வேண்டுதல்கள் 

நிறைவேற்றிட, தாயே! ஓடோடி ..வா!!, மீனாட்சியே!!! 

அகிலம் போற்றும், மீனாட்சியே! காமாட்சியே! 


என்றென்றும் உன் புகழ் பாடியே, யானே வளர்ந்தேனே! 

என்றென்றும் உன் புகழ் பாடியே, யானே வளர்ந்தேனே!!! 

மக்களை காப்பாற்றுவாயே! தேவியே!!, சரணியவே! 


அறிந்தும் இவை அனைத்தும் என்றென்றும் அறியாமலும் தானே புவியிலே பிறக்கின்றானே! 



மனிதன் புவியிலே பிறந்து எப்படி வாழ்வது?? என்று தெரியவில்லையே! 


மீனாட்சி தேவியே, வந்து அருள் செய்யும்! 

மீனாட்சி தேவியே!!, பிள்ளைகளுக்கு வந்து அருள் செய்யும்! 


புண்ணிய கணக்கை அதிகப்படுத்தி!!!, தாயே!!, 

பாவ கணக்கை பின் நெஞ்சில் இருந்து அகற்றுவாயே! 


அனைவரின் உள்ளத்திலும் பின் நற்செயல்கள், பின் புகுத்தி, புகுத்தி, பின் அறிந்தும் அன்பும் கருணையும் வரவழைப்பாளே ! தேவியே, என் காமாட்சியே! 

அன்னை பராசக்தி! தேவியே, உமையம்மையே! 




அனைத்தும் நீயே!! தான்!! என்று மனிதனுக்கு பின் தெரியவில்லையே! என்றென்றும்  


எப்பொழுது ??அதை உணர்கின்றானோ, அப்பொழுதே!! அந்த பாவம் தொலையுமே! 


பாவம் இருக்கும் வரையிலும் உன்னை யாரும் அறியவில்லையே! தேவி, 


பாவம் இருக்கும் வரையிலும் உன்னை அறிய முடியாதே! 


கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து வந்து செல்வாய்!!! 


அதைத்தான் சித்தர்கள் யாங்களே அறிவோம்!!! 

மனிதன் அறிவதில்லையே! 

 அறியவில்லையே! ஏனோ? தாயே! 


பாவங்களை சுமந்து சுமந்து திரிகின்றானே! மனிதனே, 



அப்பாவத்தை சுமக்கையிலே!!!

அப்பாவத்தை சுமக்கையிலே!!!!


எப்படி?? மனிதனுக்கு நல்வாழ்வு அமையும்???


 சொல்!!, தாயே!!!...


அனைத்தும் உணர்ந்தவளே! 

உலக நாயகியே! 

அனைத்தும் உணர்ந்த உலக நாயகியே! 


உன் பிள்ளைகள் அனைவரும் தவறுகள் செய்திருந்தாலும், அதை ஏற்றிடு! 

பின் இறக்கிடு! பாவத்தை, தாயே! 


புண்ணியத்தை சேர் தாயே!!!!

புண்ணியத்தை பின் சேர் தாயே!!!! 


இவர்களும் உன்னை வணங்க!!, வணங்க!!, வணங்கிய பின் எப்படி? வணங்குவதோ என்று தெரியவில்லை! தாயே! 


இக்குழந்தைகளுக்கு ஆசீர்வாதங்களும் பண் படுகின்ற பொழுது!!!, 


சூரியனின் நிச்சயம் இருக்கும்! அதாவது அறிந்தும் பொருந்தும் என்னவென்று 


சூரியனின் ஒளி கற்றைகள் போல் புண்ணியத்தை அதிகமாக்கு! 


மீனாட்சி தேவியே! அன்பே!!, அருளாளே!! 

கருணை படைத்தவளே! எப்படி உன் திருநாமம்? உன் திருநாமத்தை யான் உச்சரிக்க, உச்சரிக்க பின் சொல்கின்றேனே! 

அறிந்தும் எதனை? எப்பொழுது? என்று பிள்ளைகளுக்கு!!.... 


எப்பொழுது?  எதைக் கொடுக்க வேண்டும்?? என்று உணர்ந்து, என்று உணர்ந்து!! அருள்வாயே! செல்வியே, தேவயானியே !!! 


அனைத்தும் நீயே! 

அனைத்தும் நீயே! 

உலகை இயக்குபவளே!! ! 


என்றென்றும் இன்னும் எதை என்று பொறுத்து அறிந்தும் அதனுள்ளே  எத்தனை? பிறப்புகள் கடந்து !!..கடந்து !!...


உன்னை யாரும் தெரிந்திருக்கவில்லையே! 

அன்னை காமாட்சி! பின் தேவியே!


எப்படி ? உன்னை சுமந்திருந்தும்?

எப்படி உன்னை சுமந்திருந்தும் ?


நிச்சயம் தன்னில் அடிவிழுந்து பிடி  எடுகின்ற நேரத்திலே, 


கடல் தன்னிலே நிச்சயம் தன்னில் இவை வருகின்ற பொழுது, 


நிச்சயம் அவை என்று தடுக்கவே நிச்சயம் கையை எதை என்று பிடித்துக் கொண்டாயே! 


அப்படியே நில்லும்!!!... என்றென்று, 

அப்படியே நின்று, என்றென்று,!!! 

அப்படியே நின்றாயே! மீனாட்சி! பின் தாயே, உமையவளே! 


எத்தனை குறைகள்,?? எத்தனை பிழைகள்,?? 


உன் பிள்ளைகள்!!, உன் பிள்ளைகள் !!பின் செய்திருந்தாலும், 


அத்தனை குறைகளை பின் நீக்கிட!! வா ! வா! மீனாட்சியே! 


அக்குறைகளை நீக்கிட்டு, !

அக்குறைகளை நீக்கிட்டு,! 


புண்ணியம் என்ற பாதை பின் காண்பித்து, 

புண்ணியம் என்ற பாதையை காண்பித்து, 


அப் புண்ணிய பாதையில் செல்ல வைப்பாயே! தாயே, தேவியே! 

பின் அறிந்தும், தாயே, 

தாயே, தேவியே! 


அனைத்துலகாளும் புவனேஸ்வரியே! புவனேஸ்வரனே! 


அறிந்தும், இக்கலியுகத்தில் மனிதன் வாழ தெரியாமல் வாழ்கின்றானே!!! 


அறிந்தும் எதை என்று போன்றோர் நல்லோர் இருக்கையிலே, 


தேவியே! மீனாட்சியே! தாயே, உன்னை என்றென்றே எப்படி அழைப்பது? 


குழந்தை என்றென்று, தாயா! என்பேன், அழைப்பதுண்டோ? 


எதனை என்றென்று உன் குறை எதை என்று அறியவில்லை! 

உன் குறை யானும் அறிந்திருந்து,!!... 


பின் எத்தனை ஓடி, பின் அடிகள் வந்தேனே! 


இம் நகருக்கு அறிந்து உனதுள்ளம் எதை என்று போன்றே அறிந்தும், இவை என்று அறியாத வகையிலும் நீ அறிந்தும், உண்மை தன் கடல் நீரும் 


எத்தனை வந்து வந்து, பின் அடைந்திற்றே! என்றே யானே அறிவேனே!!!!! 


அதனை பின் தடுக்க, நிச்சயம் எவை என்று போன்ற கையை அப்படி உயர்த்தினாயே! 


அப்படியே நின்றது, பின் கடல் நீரும்!!!...., 


பின் அப்படியே வருவதும் எண்ணி, எதை என்று உணர்ந்து, 



அங்கே எதை என்று அறியாமலும் 

எத்தனை பிள்ளைகள் தவறுகள் செய்தாலும், 

அத்தனை பிழைகள் பொருத்தாயிற்றே! 


எத்தனை?, எத்தனை? அறிந்தும் உண்மைகள் மனிதனுக்கு இன்னும் தெரியவில்லை! 


உமையவளே, காஞ்சி காமாட்சி! காமாட்சியே! 


மதுரை தன்னில் வாழும் அனைத்தையும் தன் கட்டுக்குள் அடக்கி வைக்கும் இயல்பான பின் அறிந்தும், எவை என்று வருவாயே! 


தோழியாக வந்து வருவாயே! 

பின் தகப்பனாக வந்து அருள்வாயே! 

தாயாக வந்து அருள்வாயே! 


ஒவ்வொரு பின் பின் இடத்திலும் பல பல குறைகள் நிறைந்துள்ளதே! 


ஒவ்வொரு இடத்திலும் நிச்சயம் எவை என்று ஒவ்வொரு மனதிலும் பாவங்கள் இருக்கின்றதே! 


அதைத் தன் நிச்சயம் எதை என்று புரிய உன்னாலே மாற்ற முடியும்! 


அகிலாண்டேஸ்வரியே! 

அகிலாண்டேஸ்வரியே! 

அகிலாண்டேஸ்வரியே! 


நலமுடன் அருள்வாய்! 

நலங்கள் பெறுவதற்கு காண்பதற்கு 


மக்களை காப்பாற்ற எதை என்று புரிய புண்ணியங்கள் மட்டும் கொடுத்திடு! 

மக்களை காப்பாற்ற எதை என்று புரிய புண்ணியத்தை மட்டும் கொடுத்திடு! 


பாவத்தை அதன் மூலமே அவர்களே நிச்சயம் அழித்துக் கொள்வார்! 


எதை என்று புரியாமலும் எதை என்று அறியாமல் இருந்தாலும், 




தாயே, எதனை நிச்சயம் குறைகள் அனைத்தும் சீர் செய்ய!!

வா! வா !  தாயே, 


தாயே, அறிந்தும் உன்னையே என்றும் எண்ணி, 

அனைத்தும் நிச்சயம் காப்பாள் என்று எண்ணியே! எண்ணி வருகின்றாரே! கூட்டமோடு!! 


அப்படியும் இருந்து, எதனை நின்றும் கூட ஒவ்வொரு பாவத்தையும் எடுப்பாயே! 


கலியுகத்தில் நிம்மதியாக வாழ வைப்பாயே! தேவியே, மனிதனை !!...


அன்றென்றும் என்றென்றும் எப்பொழுதும் உன்னையே நாடியே! 


ஈசனே, அறிந்தும் எதை என்று புரிந்தும் தந்தையே! தாயே, அணைப்பாலே


எதை என்று புரியாமல் இருந்தாலும்!!..., 

எதை என்று புரியாமல் இருந்தாலும்!..., 


இத்தனை செல்வங்களை காப்பாற்ற பின் ஓடோடி வருவாள்! என் அன்னையே!!!, 


அனைத்தும் ஒன்றே! 

அனைத்தும் ஒன்றே என்று எண்ண வேண்டும்!!!! 


அனைத்தும் ஒன்றே! 

அனைத்தும் ஒன்றே என்று எண்ண வேண்டும்!!!! 


அனைத்து உயிர்களும் எத்தனை?, எத்தனை?? பாடு !!...பாடுகள்!!... 


கலியுகத்தில் எத்தனை வேறு! பின் பாடுகள்!!! 


அறிந்தும் , அவை, அவை என்றும் உணர்ந்து, எத்தனையோ??? 


எதனை என்று பாவத்தை இன்னும் அதிகமாக்கி கொள்கின்ற மனிதனே! 


எத்தனை?, எத்தனை? பாவத்தை அதிகமாக்க மனிதன் இவ்வுலகத்தில் பிறந்திருக்கின்றானே! 


அதையும் நிச்சயம் குறைவாக்கு!!! தேவியே, 

அதனையும் குறைவாக்கு! தேவியே, 


புண்ணியத்தை அருளீந்து, நிச்சயம் எவ்வாறு? என்று 


எத்தனை?, எத்தனை? திருத்தலங்கள்! 


எத்தனை?, எத்தனை? திருத்தலங்கள்! 


எத்தனை இருந்தும் மனிதனை ஏன் பேய் போல் போல் ஆட வைக்கின்றாய்??! தேவியே, 


எத்தனை? திருத்தலங்கள்! 

எத்தனை? திருத்தலங்கள் இருந்தும் கூட!!... மனிதனின் மனம் தான் பேயே! பேயே!!! என்று அனைத்தும் தெரிந்தவளே! 


அப் பேயை மாற்றி புண்ணியத்தை புகுத்து!!, புகுத்து!! ஓடோடி வா! தாயே ! 


என்றென்றும் இருப்பவளே! 

உலகத்தில் என்றென்றும் இருப்பவளே!!! 


மனிதன் சிறிது நேரமாவது சந்தோஷமாக வாழ்ந்திட்டு செல்லட்டும்! தேவியே, 

சிறிது நேரங்கள் சந்தோஷமாக வாழ்ந்து செல்லட்டும்! தேவியே,


தேவியே, உமையம்மையே! பரிசுத்தமானவளே! 

தேவியே!!, உமையம்மையே! பரிசுத்தமானவளே! 


மனிதன் சிறிது நேரத்தில் சந்தோஷமாக வாழ வழி விடு தாயே! மீனாட்சியே,!!! 




எத்தனை???, எத்தனை?? மனிதனுக்கு குறைகள்! 


யாங்கள் தானே பாவம் என்று மக்களை காத்திட வந்தோம்! 

பாவம் என்றே!! காத்திட வந்தோம்!!!!


பிள்ளைகளே, ஒன்றும் தெரியாதவர்களாய்  இருந்தாலும், 


தாயே,!! சொக்கனே !! மீனாட்சி அன்னையே வந்து அருள் ஈவாய் ! 


எத்தனை?, எத்தனை? அழிவுகள் என்று பிள்ளைகளுக்கு தெரியவில்லை! 


நாமே வாழ்கின்றோம் என்றே சந்தோஷம் படுகின்றனர்! 


எப்படி வாழ்வார்? என்பதை யாங்கள் கூட்டிக் கழித்து பார்த்தால், 


எப்படி வாழ்வான்? மனிதன் என்ற பின் சந்தோஷமே! 


சந்தோஷம் என்று தீயாய் இங்கு போனது! தாயே, 


இறங்கி புண்ணியத்தை அனைவருக்கும் பின் அளித்திட  வா! வா! தாயே, புவனேஸ்வரியே! 


எங்கும் எதிலும் எப்பொழுதும் இருப்பவளே! 

எங்கும் எப்பொழுதும் எங்கும் இருப்பவளே! 

கருணை மிகுந்தவளே! 

கருணை மிகுந்தவளே! 

அன்பானவளே! மீனாட்சியே! 


அனைவருக்கும் ஆசிகள்! தா தா, தா தா! அறிந்தும் எவை என்றும் புரிய 


அனைவருக்கும் பின் ஆசிகள் தந்து மனதை மாற்றிடச் செய்ய! மீனாட்சியே! ஓடோடி வா! 


எங்கும் நிறைந்தவளே! 

எதிலும் நிறைந்தவளே! 


உன்னை நினைத்தாலே போதுமே! 

அங்கே நீயே!! இருப்பவளே! 


உன்னையே நினைத்து நினைத்து இம் மாநகரில் யான் வந்தேனே!!!! 


எமக்கும் ஒரு வழிகாட்டியாக நீ இருந்தாயே! மீனாட்சியே! 


அதைப் போலவே! பின் பின் மனிதனுக்கும்!! 

பாவத்தை நீக்கி புண்ணியத்தை பின் அதிகமாக்கு! அதிகமாக்கு! 

பின் கருணை வடிவானவளே! 


எத்தனை குறைகள்? செய்திருந்தாலும், 


அவை தன் பின் அறிந்தும் அன்னையவளே!


பின் அக்குறைகளும் நீக்கி, நிச்சயம் தன்னில் அறிந்தும் நீ சந்தோஷப்பட்டாலே! 

நீ சந்தோஷப்பட்டாலே! 


குழந்தைகள் வாழ்வு செழிப்புறும்! தாயே, காமசுரனியே! 

காமசுரனியே!!! 


அறிந்தும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரத்தை எடுப்பவளே!!! 


பொறாமை குணத்தை எப்படி அழிப்பது? என்று அதை தன் உணர்த்தியவளே! 


ஒவ்வொரு லீலைகளின் பின் கோபம் இன்னும் மனிதன் பின் ஆட்டங்கள்! 


அத்தனை, அத்தனை அவதாரங்கள் எடுத்திட்டாயே! அழிப்பதற்கே!!!! 


ஆனாலும், கலியுகத்தில் பின் அமைதியாக நிற்கின்றாயே! 

அமைதியாக நிற்கின்றாயே! 




தேவியே, உமையவளே! 

அனைத்தும் எங்கும் எதிலும் இருப்பவளே! 


குறைகளை அனைவரோடும் நின்று, ஒவ்வொரு குறையுடன் வந்த வண்ணம்,


எப்படி நீயே அறிவாய்? எதை என்று அறியதனை 


கிளியின் ரூபம் தன்னிலே ஓடோடி வா ! தாயே, மீனாட்சி! 


அறிந்தும் எப்படி ஒவ்வொரு உள்ளத்தையும் அறிந்திருக்கின்றாய்? 


ஒவ்வொரு உள்ளத்திலும் அழுக்குகளே! 


அழுக்குகள் என்பது இங்கே யானே பாவம் என்றே தெரிவித்தேனே! 


அவ்வழுக்கை பின் அடியோடு அழிந்திட வா வா! தேவியே, 


அனைத்தும் எதை என்று உணர்ந்தவளே! 


இக்குழந்தைகளுக்கு அறிந்தும் கூட என்னென்ன வேண்டும்?


 வரங்களே !!!

செய்திடு! தாயே, மீனாட்சி! 

செய்திடு! தாயே, மீனாட்சி! 


உன்னைத்தானே நம்பி வந்திருக்கின்றார்கள்! 

அறிந்தும் கூட,!!!


 தேவியவள் பின் எதை என்று நமக்கு ஏதாவது செய்வாளே என்று நம்பித்தான்!!!! 

உன்னையே!! நம்பி, நம்பி தொழுவோர்க்கு கஷ்டத்தை கொடுக்காதே! தாயே, 


மகிழ்ச்சியை கொடுத்திடு! 


எதை என்றும் அறியாத! 

எதை என்றும் அறியாத! 

அனைத்தும் யாமே உணர்ந்தோமே என்று இருந்தோமே! 



என்றென்றும் ஒரு ஒரு உடம்பில் யானே கண்டேன்! 

நோய்களை!!!


 யானே கண்டேன்! அறிந்தும் கூட, 


நீ பெரியவளாக ! இருக்க, 

நீ பெரியவளாக பின் இங்கிருக்க! அதையெல்லாம் நீக்கிடு !! தாயே! கருணை வடிவான ! பராசக்தியே! பராசக்தியே! 


அறிந்து உனதுள்ளம்!!! எப்படி? என்று யாமே அறிந்தோமே! 

அனைத்து சித்தர்களும் பணிந்தோமே! 


இக்குழந்தைகள் தவறு செய்திருந்தாலும், மன்னித்து பொறுத்தருள்வாயே! 


தாயே, காமாட்சி! 

தாயே, விசாலாட்சி! 

தாயே, மீனாட்சி! 

அகிலம் ஆளும் பரமேஸ்வரியே! 

அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே! 


எப்பொழுது பாவம் அழிந்திடுமே! 


அப்பொழுதும் அனைத்தும் ஒருவனே! 

என்றென்றும் நாதனே! சொக்கனே! சொக்க தங்கமே! 


உன்னை வழிபட்டோருக்கு ஏனிந்த ??அவலம் நிலை என்று தெரியவில்லை! 


அறிந்தும் உனதுள்ளம் மன மகிழ்ச்சியில் அடைந்திட!!! 


சித்தர்கள் யாங்களும் நிச்சயம் அறிந்தும் மனிதனின் மாற்றத்தை கொண்டு வருவோமே! 


சொக்கா!!!, அறிந்தும் எதை என்று புரிய மனிதனை யாங்கள் மாற்றிடுவோமே! 




அவரவர் அவருக்கு தேவையானது கொடுத்திடுக ! கொடுத்திடுக ! கொடுத்திடுக ! சொக்கனே! 


தேவியே!!!, இருவரும் இணைந்து அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் செய்யுமே! 


அனைவரும் ஒன்றே! அனைத்தும் உன் பிள்ளைகளே! என்று எண்ணி அறிந்தும் உனதுள்ளம்! 


எப்பொழுதும் எதை அறிந்தும் கூட இவ்வுலகத்தை நீ பிள்ளையாக கொண்டாயே! 


அனைவருக்குமே எதை என்று புரியாமல் வாழ்ந்து வருகின்ற நேரத்திலே, 


=====================================

# மீனாட்சி அன்னையின் கையில் பூமி

=====================================


பூமியை கையில் வைத்துள்ளாயே! மதுரை தன்னில்!!! 


அதுவும் யாருக்கும் புரியவில்லையே! 

தேவியே, மீனாட்சியே! 


அந்நாள்? , எதை என்று உரிய நேரத்தில் யானே விளக்கம் அளிப்பேனே! 

யானே விளக்கம் அளிப்பேனே! 


=====================================

# மீனாட்சி அன்னை மதுரை முழுவதும் 

=====================================


மதுரை தன்னில் கூட எங்கும் பரந்தும் யானே இருக்கின்றேனே! 

என்றென்று சொன்னவளே, நீயே உமையவளே! 


=====================================

# போகர் சித்தர் உடல் மதுரையில் ……..

=====================================


போகனே,!!! இவ் என்று அறிய, எதை என்று புரிய 

என் அருகிலே இருந்து, இவ்வுடம்பை பலப்படுத்து என்று என்று சொன்னாயே! 


அங்கங்கு பின் உடம்பை வைத்து, கலியுகத்தில் பின் மக்களை காப்பாற்று என்று சொன்னாயே! 




உன் சொல் படியே, அதன் படியே தானே என் உடம்பை யானே அங்கங்கு வைத்தேனே! 


அதை தன் யாருக்கும் புரியவில்லை! 

அங்காள பரமேஸ்வரியே! 

அங்காள பரமேஸ்வரியே! 


==============================================

# அகத்திய மாமுனிவர் பாவங்களை போக்குபவர் 

==============================================


அறிந்தும் எத்தனை பாவங்கள், அதையும் கூட அகத்தியன் பின் எறிந்து வீசிடுவானே! 


=======================================================

# போகர் உடம்பை தேடுகின்ற பொழுது நோய்கள் வளராது

======================================================


அப்பொழுது? எதை என்று அறிய, எப்பொழுது? அதை என்று அறிய 


என் உடம்பை தேடுகின்ற நேரத்தில், நோய்கள் வளராது தாயே! 


அதற்கும் நீயே!! புண்ணியத்தை பின் அருளிட செய்ய வேண்டும்! 


மக்களுக்கு தெளிவுபடுத்தி அறிந்தும் அறிந்தும் எதை என்று அறியும் 


அனைவருக்குமே பின் நிறைவேற்றி, எதை என்று அறிய 


அவரவர் நியாயமான பின் கோரிக்கைகள் நிறைவேற்ற வா! வா! 

தாயே, அகிலாண்டேஸ்வரியே! 

தாயே,  அகிலாண்டேஸ்வரியே! 


அழகாக புவியை கையில் வைத்துள்ளாயே! 


அழகாக பின் அறிந்தும் கூட, பின் உருண்டையை கையில் வைத்துள்ளாயே! 


உன் இஷ்டத்துக்கு பின் அறிந்தும் அறிந்தும், அதை தன் சுழற்றாதே! 


நீ தான் சுழற்றினாலும் கூட, 

மனிதன் தாங்குவதில்லை! தாயே, 


பிரச்சனைகளே உருவெடுக்கும்! தாயே, 

அதனை என்று அமைதி காப்பாயே! 


கோபத்தினாலே, அதை தன் சுற்றாதே! 

கோபத்தினாலே, அதை தன் சுற்றாதே! 


கருணை மிகுந்தவளே! காமாட்சியே! 

அன்னை பராசக்தியே! தேவியே, உமையம்மையே! 


அறிந்தும் கூட, பின் அப்படியே எதை என்று கொள்ள,!!! 


நிறுத்திடு! 

தாயே, நிறுத்திடு! தாயே,


 மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டும்! அல்லவா? 


நீயும் தானே வேகமாக பின் சுழற்றினாலே, அனைத்தும் பின் நீரும் கூட வந்து நிலத்திலும் தங்குமே! 


அதை என்று அறிவித்த சில சில மாதங்களே!!!....,


 நிச்சயம் தன்னில் கோபம் பின் பின் படாதே! மீனாட்சியே! 


மக்களை யாங்கள் நிச்சயம் தன்னில் அழுக்குகள் பின் தூரே வீசுகின்றோம்! 


மக்கள் மனதில் தீய எண்ணங்களை கூட, அறிந்தும் கூட, பின் எரித்து வீசுகின்றோம்! 


அமைதி காத்திடு! தாயே, புவனேஸ்வரி! மீனாட்சியே!!! 


எத்தனை?, எத்தனை? மனிதனிடத்தில் குறைகள்! 

எத்தனை?, எத்தனை? மனிதனிடத்தில் குறைகள்! 


அத்தனையும் யாங்கள் சீர் செய்து, பின் அழைத்து வருகின்றோமே!!!! 


சத்தியம் செய்து கொடுக்கின்றோமே! தாயே, மீனாட்சியே! அகிலாண்டேஸ்வரியே! 




மக்களுக்கு உண்மை தெரியாததனால் தானே குற்றம் செய்கின்றார்கள்! 


அதனையும் கூட சித்தர்கள் யாங்கள் வருங்காலத்திலும் அதையும் நீக்கி, உன் பின் தாள் பணிக்கின்றோமே! 


எத்தனை?, எத்தனை? குறைகளோடு பின் மனிதன் வாழ்கின்றானே! 

எத்தனை?, எத்தனை? குறைகளோடு மனிதன் கலியுகத்தில் வாழ்கின்றானே! 


எத்தனை, ?எப்படி? அதை பின் சீர் செய்ய தெரியவில்லை! 

எப்படி ?அதை சீர் செய்ய தெரியவில்லை! 


தாயே, உமையம்மையே! 

தாயே, உமையம்மையே! 


அறிந்தும் கூட, தன் பிள்ளை எத்தனை குறைகள் செய்திருந்தாலும், 


தன் மகளை எதை என்று அறிய, தன் மகனை நிச்சயம் விட்டிடுவாளா!??? தாயே !!!!?


அவை போலே நீயும் எத்தனை ? பின் மனிதன் பின் குறைகள் செய்திருந்தாலும், பொறுத்தருள்வாயே! 


காஞ்சியே, ஏகாம்பரனே! 


சொக்கனே,! சொக்கனே!! என்றுதானே பின் செல்லமே! 

பின் சொக்க தங்கம் என்று அழைப்போமே! 


சொக்கனே!, இங்கே எதை என்று புரிய, பின் எதை என்று அறிய, 


சொக்க தங்கம்!  நீதானே பெருமானே! 

அனைத்திலும் உருவெடுத்து அருள்வாய்!

 பின், பின் மனதில் தீயை அழித்து எறிந்துவிடு! அழுக்குகளை !!


சொக்க தங்கமே! கருணை படைத்தவனே  !!!!


எத்தனை திறமை மனிதனிடத்தில் கலியுகத்தில் இருந்தாலும்,!!!... 


அதைவிட உபயோகிக்க  நேரம் இல்லாமல் காய்ந்து காய்ந்து கஷ்டத்தோடே  வாழ்கின்றானே! 


மனிதனே, அறிந்தும் எதை என்று புரிய மண்டியிட்டு கேட்கின்றேனே! தாயே, மீனாட்சியே! 


இப்  போகனுக்கு பின் அருளியவாறு மக்களுக்கு பின் அருள்வாயே!!! 


தீய குணங்களை முதலில் எடுத்திடு! தேவியே!!!, 


பொறாமை குணங்களை எடுத்திடு! தேவியே,


எதை என்று புரிய! மீண்டும் மீண்டும் பாவத்தை சேர்த்துக்கொள்ள மனிதன் பின் புவி தன்னிற்கு வருகின்றானே! 


பின் புண்ணிய பாதையை மனிதனுக்கு பின் செலுத்தி செலுத்தி ! 

பின் பாவத்தை நொறுக்கி நொறுக்கி, பின் அனைத்தும் கொடுத்திடவா! புவனேஸ்வரியே! 


அகிலம் காக்கும் அகிலாண்டேஸ்வரியே! 

அனைத்தும் நீயே! 

எங்கும்! எதிலும் நீயே! 


பின் அவரவர் குறைகளை நிச்சயம் பின் பின் போக்கு!!! போக்கு !!

மறைமுகமாக வந்து!!... மறைமுகமாக வந்து!!.



அறிந்தும் எங்களை பேச்சை கேட்டு! 

பின், பின் மனிதர்களே! 

அனைவரும் கண்களை மூடி! பின் இரண்டு அல்லது மூன்று நிமிடம் மீனாட்சி தேவியை நிச்சயம் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்! 


===============================================

( இப்பொழுது போகர் சித்தர்  அங்குள்ள அனைவரின் உங்கள் குறைகளைப் போக்க, 2–3 நிமிடங்கள் அமைதியாக கண்களை மூடி, மனதைக் ஒருமுகப்படுத்துங்கள் என்று உத்தரவிட்டார்கள். அதன்படியே அன்னை மீனாட்சி தேவியை நோக்கி அனைவரும் சில நிமிடங்கள் கண்களை மூடி தியானித்தார்கள். அதன் பின் வாக்குகள் பாடலாக மீண்டும் உரைத்தார்கள்.

https://www.youtube.com/watch?v=SMB7Av04ohY&t=2h58m40s )

===============================================


ஆதியில்!!! என்றென்றும் எங்கெங்கும் இருப்பவளே!!!, தாயே!!, பின் புவனேஸ்வரியே!!, 


மக்களை காப்பாற்றுவாயே!!, எங்கெங்கும் இருப்பவளே!!!. 


அறிந்து இதனுள்ளம் அன்பை பரிமாறி. 


கேட்க அறிந்தோதும் இவை ஒன்று நிற்பாயே, தேவியே, சரணம் !!!!


அறிந்து இவர்கள் உள்ளம் அனைத்தும் தருக,!!! 


என்றென்றும் காப்பாற்றுவாயே. 


அறிந்தும் என்றென்றும் நிலைத்து நிற்கிறோம்!!!, 


எதை என்றும் காப்பாற்றுவாயே, 


எதையின் இருந்தும் எதையும் பங்கிட, 


அனைத்தும் நீயே!!, புவனேஸ்வரியே!!, 


எங்கும் எதிலும் எதை அறிந்தாலும் இருப்பவளே!! காமாட்சியே!!!, 


அறிந்து துயரங்கள் தீர்ப்பாய்,!! வருவாய், நலன்களே அருவாய், மீனாட்சி,!!!


எங்கும் இருப்பவள், எதை என்றும் அறிபவளே, அறிந்தும் எதை என்றும் புரிந்தவளே, 


எதை என்றும் நீயே, அறிந்து உனதுள்ளம் எதை என்று புரிய, 


இவை என்று அறியா, எத்தனை? எத்தனை? எதை எதை என்றும் புரிந்தும் கூட, 

இவை என்றும் இருந்தும் கூட,!!...


 அறிந்திருந்தும் இதை பொறுப்பாயே, 


எதனின்று?(எதிலிருந்து) பின் வந்தது என்று, எவை அறிந்து கூட தெரியவில்லை, 


அறிந்து உனதுள்ளம் யான் புரிந்தேனே, 


அனைவருக்கும் ஆசிகள் தந்தாயே, 


ஆசிகள் !!!


=========================

No comments:

Post a Comment