22/7/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி
ஆதி மூலனை மனதில் எண்ணிச் செப்புகின்றேன், அகத்தியன்!!!.
அப்பனே, பலமாக. அப்பனே, அருள்கள். அப்பனே, எங்கெங்கு இருக்கின்றது??? என்பதையெல்லாம், அப்பனே, எங்களுக்கு அழகாக தெரியும்ப்பா.
இதனால், அப்பனே, பின் வரக்கூடிய நாட்கள், அப்பனே, மாதங்கள், ஆண்டுகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு இருக்கும்?? என்பதையெல்லாம், அப்பனே, அறிந்து, அப்பனே, பின் நிச்சயம் சித்தர்கள் பல வகையிலும் கூட செப்புவார்கள்ப்பா!!!.
இவ்வாறு, பின் செப்பித்து, அப்பனே, அதை சரியாக, பின் ஏற்றாலே போதுமானதப்பா.!!!
நிச்சயம், அப்பனே, பின் பிழைத்துக் கொள்ளலாம்.
அப்பனே, அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம், பின் போகப்போக, மனிதன், அப்பனே, மனக்குழப்பத்தோடே வாழ்வான்.
அப்பனே, ஏன்?, எதற்கு? என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் சந்திரன், அப்பனே, நிச்சயம், பின் அறிந்தும், அப்பனே, மங்கலாகப் போகின்றான்ப்பா!!!
அதாவது, அப்பனே, தன் சக்தியை, அப்பனே, பின் குறிப்பிட்ட காலத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு, பின் இழப்பு என்பதையெல்லாம், அப்பனே, நிச்சயம் யாருக்கும் தெரியாதப்பா.
இதனால், சந்திரன், அப்பனே, சிறிது, அப்பனே, நிச்சயம் சக்திகள், அப்பனே, அதாவது, மற்ற கிரகங்கள், அப்பனே, பின் மற்ற இன்னும், அப்பனே, பால் திரளில்
(கேலக்ஸி மில்கி வே galaxy Milky Way)
உள்ள, அப்பனே, சில சில துகள்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அவை, பின், நிச்சயம் பலமாக, பின் சந்திரன் மீது விழுகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம், பின் அழுக்கு, அப்பனே, பின் தேங்கி நிற்குமப்பா.
(உதாரணத்திற்கு வாகனத்தின் முகப்பு வெளிச்சத்திற்கு முன்பாக தூசி படிந்தால் விளக்கின் ஒளி மங்குவதைப் போல)
இதனை, அப்பனே, பின் சரி செய்யவே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சில, அப்பனே, வருடங்கள் ஆகுமப்பா.
இதனால், வரக்கூடிய நேரங்களில் கூட, அப்பனே, மனக்குழப்பங்கள் தான் மனிதனுக்கு அதிகமாகும் என்பேன்,
அப்பனே. இதனால், ஒருவருக்கொருவர் வீண்பழி, அப்பனே, நிச்சயம் என்ன பேசுகின்றோம்? என்று தெரியாமல் பேசுதல், அப்பனே, இன்னும், அப்பனே, பின் எதை, எவை என்று அறியாமலும் கூட, இல்லங்களுக்குள்ளே, அப்பனே, பின் இன்னும் பிரச்சனைகள் ஏற்பட்டு, சண்டைகள் தான் ஏற்படுமப்பா.
இதை நீக்க, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பல வழியிலும் கூட, வாக்குகள் யாங்கள் செப்புகின்றோம், அப்பனே.
அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் எதை என்று புரிய, அப்பனே, பின் இடையிடையே, பின் திங்களூர் சென்று அடைய வேண்டுமப்பா.
(திங்களூர் நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய ஸ்தலம்)
திங்களூர், பின் சென்று கொண்டிருந்தாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் தெளிவான அறிவு ஏற்படுமப்பா!!!
அது மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பன்மடங்கு, அப்பனே, பின் உயர்வுகள் பெற, அப்பனே, அண்ணாமலையிலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அவை மட்டுமில்லாமல், அப்பனே, பின் சங்கரனின், அப்பனே, பின் கோயில்,
(சங்கரன்கோயில்)
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அங்கும் கூட, அப்பனே. அது மட்டுமில்லாமல், அப்பனே, பின் அங்கிருக்கும், பின் பாம்பாட்டி சித்தனின், அப்பனே, அருள்கள் பெற, அப்பனே, தியானங்கள், அப்பனே, செய்தாக வேண்டும் என்பேன்,
அப்பனே. வரக்கூடிய நேரங்களில் கூட,!!!
இவ்வாறு செய்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம், பின் படிப்படியாக, மனக்குழப்பங்கள், மனக்குழப்பங்கள் நீங்குமப்பா.
ஏனென்றால், அப்பனே, பின் சந்திரன் எங்கு?, ஏது?, எவை? என்று புரியாமலும் கூட.
அது மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட, பலமாக, அப்பனே, பின் அதன், அப்பனே, கதிர்வீச்சுக்கள் விழுகின்ற இடத்தில் எல்லாம் செல்கின்ற பொழுது,!!
ஆனாலும், அப்பனே, பின் சிறிதளவு குறையுமப்பா.
ஆனாலும், அறிந்தும் புரிந்தும், ஆனாலும், பின் இங்கு, அதாவது, பலமாக, பின் கதிர்வீச்சுக்கள், பின் நிச்சயம் அடிக்கின்ற பொழுது, அப்பனே, சிறிது தேய்வு ஏற்படலாமே தவிர!!!..
அப்பனே, விழுந்து கொண்டே இருக்கும் என்பேன், அப்பனே.
ஆனாலும், மற்ற இடங்களில் எல்லாம், அப்பனே, நிச்சயம், அப்பனே, தேங்கி நிற்குமப்பா. எவ்வாறு என்பதையெல்லாம், அப்பனே,!!
அப்படியே, பின், அதாவது, பின் அவ்வளவு வேகங்கள், அப்பனே, பின் வராதப்பா. அதனால்தான் சொல்லி இருக்கின்றேன், அப்பனே.
அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அமாவாசை தன்னில் கூட, பௌர்ணமி தன்னில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இவ் ஏழுமலையானிடத்தில் அமர்ந்து, அப்பனே, தியானங்கள் செய்ய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பரிசுத்தமான, அப்பனே, நிச்சயம், அப்பனே, சந்திரனின் ஆற்றல் கிட்டுமப்பா.
இதனால், தெளிவான முடிவுகள், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எடுத்து, அப்பனே, நன்முறைகளாகவே வாழலாம்.
அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் எதிர்வினைகள்!!! எல்லாம், அப்பனே, வருங்காலத்தில் அதிகமாகுமப்பா.
(எதிர்வினைகள்.. எதிர்மறை சக்திகள்... நெகட்டிவ் சக்தி)
அவ்வாறு, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறு, பின் அது, அதிகமாகின்ற பொழுது, அப்பனே, மனிதனுக்கு பைத்திய நிலை, அப்பனே!!!
என்ன செய்வது??, பின் எங்கு செல்வது??? என்றெல்லாம் தெரியாதப்பா.
ஏன் இந்த வாழ்க்கை??? என்றெல்லாம் யோசித்து விடுவானப்பா.!!
இதனால், அப்பனே, சரியாகவே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது, ஏழுமலையானிடத்தில், அப்பனே, அமாவாசை அன்று, அப்பனே, நிச்சயம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால், அப்பனே, நிச்சயம் தியானங்கள் செய்து கொண்டே இருந்தாலே, அப்பனே,!!!!
அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இங்கு வந்து, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பல வழிகளில் கூட, அப்பனே, பல பாடல்கள், அப்பனே, பின் இயற்றி உள்ளார்கள், அப்பனே, பெரியோர்கள்.!!!! அவையெல்லாம் பாடிட்டு வந்தாலே போதுமானதப்பா.
(ஆழ்வார்கள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தம்.. மற்றும் அன்னமாச்சாரியார் என பல பக்தி மகான்கள் திருப்பதி ஏழுமலையானுக்கென இயற்றிய பாடல்கள்)
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எதிர்வினைகள், அப்பனே, அண்டாதப்பா.
அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் பழனி தன்னில் கூட, அப்பனே, ஏறி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அமாவாசை திதியில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, அப்பனே, பின் அதாவது, எதிர்வினைகள், அப்பனே, பின் அண்டாதப்பா.
அப்பனே, எவ்வாறு என்பதையெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இன்னும், அப்பனே, பல திருத்தலங்கள் உள்ளது என்பேன், அப்பனே. சரியாகவே, அப்பனே!!
, இவ்வாறாக, ஆனாலும், சிறுக சிறுக, அப்பனே, எவ்வாறு என்பதையெல்லாம், சரியான நீள் வட்ட பாதையில் இல்லையப்பா, சந்திரன் கிரகம், அப்பனே,!!
அவ்வாறாக, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட இருக்கின்ற பொழுதுதான், அப்பனே, இவ்வாறெல்லாம் நடக்கின்றது என்பேன், அப்பனே.
அது சரியாக பின் வருவதற்கு, அப்பனே, சில மாதங்கள் எடுத்துக்கொள்ளுமப்பா.
அதனுள்ளே, மனிதன், அப்பனே, என்னென்ன??, அப்பனே, என்னென்ன?? சண்டைகள், அப்பனே, எத்தனை, எத்தனை, அப்பனே, பின் அன்பானவர்களை பிரிவார்களப்பா. அன்பானவர்களே எதிரி ஆவார்களப்பா. அன்பானவர்களை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவை வேண்டும், இவை வேண்டும் என்றெல்லாம், அப்பனே, பணத்திற்காகவும், அப்பனே, பின் நிலத்திற்காகவும், அப்பனே, சண்டையிட்டுக் கொண்டு, அப்பனே, பின் மனநிலைகள் மாறுமப்பா.
பின் இறைவன் எங்கு இருக்கின்றான்?? என்று தேடுவானப்பா.
சொல்லிவிட்டேன், அப்பனே, ரகசியங்கள், அப்பனே,
அனைத்தும், அப்பனே, பின் நிச்சயம், அப்பனே, பின் மனிதனால் சொல்ல முடியாதப்பா. சில ரகசியங்கள் எல்லாம், அப்பனே.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதன் அழிகின்றானே என்பதற்கிணங்க!, மீண்டும், அப்பனே,!!!
அதாவது, எங்களுக்கு வேலை இல்லையப்பா, கலியுகத்தில் என்பேன்,
அப்பனே.
எப்படியாவது மனிதன் செல்லட்டும் என்றெல்லாம் விட்டுவிடலாம்.
ஆனாலும், அப்பனே, மனிதன் பாவமப்பா. இறைவனை வணங்கி, வணங்கி, பின் எப்படியெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, வணங்கினாலும், கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது என்பவை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே
. அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் எதை என்று புரிய, அப்பனே. அது மட்டுமில்லாமல், அப்பனே, சரியாகவே, அப்பனே, பின் அதாவது, சிறிது பின் நீள்வட்ட பாதையிலிருந்து விலகி, அப்பனே, பின் அதாவது, கேதுவுக்கு, அதாவது, பின் எதை என்று புரிய, அப்பனே. பின் சம்பந்தமான, பின் இடத்திலும் கூட, சந்திரன் வருகின்றானப்பா.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனக்குழப்பங்களாகவே வாழ்வான், அப்பனே.
நிச்சயம் எவை எடுத்தால், பின் நல்லவை, அவை இவை!! செய்யலாமா?? என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருப்பான், அப்பனே.
இதனால், அப்பனே, மிக்க சலனங்கள் தான், அதாவது, தூக்கமின்மை வரும், தூக்கமின்மை, அதாவது, எதை என்று புரிய, அப்பனே. அவை மட்டுமில்லாமல், அப்பனே, எதை எதையோ தானாக பேசுதல், எவை என்று அறிய, அது மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாகவே பேசிக்கொண்டே இருத்தல், எந்தனுக்கு நல்லதாகவில்லையே!!!, இறைவன் வணங்கியும் ஒன்றும் ஆகவில்லையே!!! என்றெல்லாம், அப்பனே,
நிச்சயம், அப்பனே, அவை இவை என்றெல்லாம், அப்பனே, செப்பி, அப்பனே, புலம்பிக் கொண்டே இருப்பானப்பா.
அவை மட்டுமில்லாமல், இவ்வாறாக இருக்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் மனதில் தைரியம் வராதப்பா. அப்பனே,
இதனால், மனதில் பின் தைரியம் , வராத பொழுது, அப்பனே, நிச்சயம் சில தீவினையும் கூட வந்து சேருமப்பா.
இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவை மட்டுமில்லாமல், அப்பனே, பின் கும்பகோணத்தில், அப்பனே, அழகாக, அப்பனே, பின் வீற்றிருக்கும், பின் பிரத்தியங்கரா தேவியிடம் கூட, அப்பனே, நிச்சயம் சென்று வருதல், சிறப்பு தரும் என்பேன்,
அப்பனே.
சிறப்பு தரும் என்பேன், அப்பனே. அஷ்டமி திதிகளிலும், பௌர்ணமி திதிகளிலும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே.
(கோயிலின் முகவரி: மஹா ப்ரத்யங்கிரா தேவி ஆலயம், அய்யாவாடி, திருநாகேஸ்வரபுரம், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
சிறப்புகள்: எதிர்வினைகள்
ஏவல், பில்லி, சூனிய போன்ற தீய சக்திகள் விலகும்.)
இன்னும் திருத்தலங்கள் பல பல, அப்பனே,
அது மட்டுமில்லாமல், அப்பனே, அனைத்தும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய, அப்பனே. பின் இடையிடையே, அப்பனே, பின் அடிக்கடி, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, திங்களூர், (சந்திரன் கோவில்) நிச்சயம், பின் சென்று வரவேண்டும் என்பேன், அப்பனே.
அங்கேயே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், பின் அமர்ந்து, அப்பனே, பின் சந்திரனுக்கு, பின் தீபங்கள் ஏற்றி, அப்பனே, பின் சந்திரனுக்கான, பின் சந்திரனுக்காக, காயத்ரி மந்திரம் கூட எடுத்துரைத்து வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பேன், அப்பனே. (சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்து கொண்டே வர வேண்டும்)
அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் சூரியனார் தலத்திலும் ஏறி, அப்பனே, அங்கிருக்கும் கிரகங்களுக்கு கூட, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, வணங்கி, அப்பனே, காயத்ரி மந்திரம் செப்பி, அப்பனே, அருகில் உள்ள,!!!!
அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அழகாக, அப்பனே, தாய் வீற்றிருக்கின்றாள் அல்லவா? தாய் வீற்றிருக்கின்றாள் அல்லவா?
(சூரியனார் திருத்தலத்திற்கு முன்பாக வீற்றிருக்கும் மங்களாம்பிகை தாயார் திருத்தலம்)
அப்பனே, அவளிடம் சென்று தஞ்சம் அடைய வேண்டும் என்பேன், அப்பனே.
ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட, கலியுகத்தில், அப்பனே, மனக்குழப்பங்கள் இன்னும் என்னென்ன?, எதை என்று புரிய, அப்பனே. இதனால்தான், அப்பனே, நிச்சயம் இக்கிரகத்தைப் பற்றி யான் இப்பொழுது சொன்னேன், அப்பனே. நலங்களாகவே !!!
ஏன்,? எதற்கு அறிந்தும் புரிந்தும் கூட, அப்பனே, மனிதனிடத்தில், அப்பனே, எத்தனை உண்மைகள் தெரிந்தாலும், அப்பனே, சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது என்பேன், அப்பனே.
புதுமையான விஷயங்கள் எல்லாம், பின் என் பக்தர்களுக்கு யான் எடுத்துரைப்பேன், அப்பனே.
அதன் மூலம், அப்பனே, நீங்கள் வெற்றி கொள்ளலாம் என்பேன், அப்பனே.
அவை மட்டுமில்லாமல், அப்பனே, சந்திரனும் சரியில்லை, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக இருப்பதால், அப்பனே, இல்லத்திலே பிரச்சனைகள் வருமப்பா.
அதனால், அப்பனே, நிச்சயம், பின் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அமைதியாக, பின் இருந்தால் மட்டுமே, அப்பனே, போதுமானது.
அப்படி இல்லை என்றால், அப்பனே, இன்னும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு, அப்பனே, இன்னும் இன்னும் என்னென்னவோ,? அப்பனே, நடக்கும்.
அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும், அது மட்டுமில்லாமல், அப்பனே, சுக்கிரனின் சக்தி அதிகமாகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் யோசனைகள், அப்பனே, பின் எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பலமாகவே எவை எவையோ நோக்கி செல்லுமப்பா.!!!
அப்பனே, மனிதனின், அப்பனே, பின் ஆசைகள், பணத்தின் மீது ஆசைகளும், இன்னும் பின் சொத்து சேர்க்க வேண்டும், இல்லம் சேர்க்க வேண்டும், அப்பனே. நிச்சயம் எதை என்று புரிய, அப்பனே, பின் வாசனை திரவியங்கள், பின் எதை என்று புரிய, அப்பனே. அவை இவை என்றெல்லாம், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் அவை செய்தால், இவை நடக்கும், அப்பனே. பின் நிச்சயம், பின் உடம்பிற்கு தேவையானதெல்லாம், அப்பனே. அவை இவை என்றெல்லாம் சொல்வார்களப்பா!!!நிச்சயம் தன்னில் கூட!!!
(சுக்கிரனின் உச்சத்திற்கு பல மனிதர்கள் பல பலன்களை கூறுவது)
ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பேன், அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட, அவ்வாறாக, நிச்சயம், அப்பனே. சுக்கிரனின் சக்தி அதிகமாகின்ற பொழுது, அப்பனே, பின் பணத்தை இழப்பார்களப்பா.
அப்பனே, இவைதன், அப்பனே. பின் நிச்சயம் தன்னில் கூட, சக்தி அதிகமாகிக் கொண்டே போகின்றது.
அதாவது, அப்பனே, பின் ஐந்து வருடங்களுக்கு முன்பே, அப்பனே, சுக்கிரனின், சுக்கிரனின் சக்தி அதிகமாக போயிற்று என்பேன், அப்பனே.!!!
இதனால், அப்பனே, பின் எவ்வாறெல்லாம், அப்பனே, பணத்தை இழப்பீர்களோ, அவ்வாறெல்லாம் இழப்பீர்கள் என்பேன், அப்பனே.
அதனால், அப்பனே, நன்முறைகளாகவே, அப்பனே, இறைவன் கொடுத்திருக்கின்றான் இதுவே போதும் என்றெல்லாம், அப்பனே, நினைத்து வாழுங்கள் என்பேன், அப்பனே. போதுமானது என்பேன், அப்பனே. நலங்களாகவே,
அப்பனே இவ் இரு பின் கிரகங்களின், அப்பனே. பின் நிச்சயம் தன்னில் கூட ஒன்று, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, பின் குறைவு, பின் மற்றொன்று அதிகமாகின்ற பொழுது, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று புரிய, அப்பனே. பின் அழகான பொருட்கள் எதை என்று புரிய, அப்பனே. மேலெல்லாம்,.....
(ஆடம்பர பொருள்களின் மீது மோகம் ஆன்லைன் விளையாட்டுக்கள் பணத்தின் மீது மோகம் சூதாட்டம் மீது மோகம் இன்னும் பல மாய மோகங்களை சுக்கிரன் சக்தி அதிகமாக போனதால் மனிதர்களிடையே ஏற்படும்)
அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, அவை இவை என்றெல்லாம், அப்பனே. மனதை செலுத்தி, அப்பனே. பணத்தை, அப்பனே, இழப்பீர்கள் என்பேன், அப்பனே.
இதனால் சரியாகவே, அப்பனே. பின் யான் சொல்லிய இடங்களுக்கெல்லாம், அப்பனே.(சென்று வர வேண்டும்)
அவை மட்டுமில்லாமல், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, சுக்கிரனின் இல்லமான, அப்பனே. பின் கஞ்சனூர் சென்றும், அப்பனே.
(கஞ்சனூர் சுக்கிர பகவான் கோயில்)
பின் அதாவது, அப்பனே. வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும், செப்பிவிட்டேன், அப்பனே.
அது மட்டுமில்லாமல், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, இவை, அதாவது, சந்திரன் பலம் இழக்கும் என்ற பொழுது, அப்பனே. புதனும், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, பின் செயல் இழப்பானப்பா.
இதனால், அப்பனே. நிச்சயம் பின் திருவெண்காடு சென்று, அப்பனே. அங்கும் எதை என்று அறிய, அப்பனே. பின் சரியாக, அப்பனே. உறங்கி வந்து, அப்பனே. நலங்களாகவே பெற்று, அப்பனே. வாழ்க்கையில், அப்பனே. வெற்றி பெருக, அப்பனே.
எம்முடைய ஆசிகளும் அருளும் என் பக்தர்களுக்கு, அப்பனே. எப்பொழுதும், அப்பனே. இருக்குமப்பா.
துன்பங்கள் வேண்டாம், அப்பனே. துன்பத்தை போக்கவே, அப்பனே.
சித்தர்கள், யாங்கள் வந்து வந்து, வாக்குகள் செப்பி, அப்பனே. பின் வழிநடத்துகின்றோம், அப்பனே.
இதனால், அப்பனே. எதை என்று புரிய, அப்பனே. நல்லோரும் எதை என்று அறிய, அனைவரும் வாழ வேண்டும் என்பேன், அப்பனே.
இதனால், அப்பனே. உண்மையாக, நேர்மையாக, அப்பனே. தர்மத்தை கடைபிடிக்க சொல்லுங்கள் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட,
அவ்வாறு, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, வருங்காலத்தில், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, குருவானவனும் கூட, அப்பனே. அதாவது, குரு கிரகமாகவும் கூட செயல்படாமல் போகும் என்பேன், அப்பனே.
ஏனென்றால், அப்பனே. யார் ஒருவன் சரியாக தர்மத்தை கடைபிடித்து செல்கின்றானோ, அவந்தனக்கு மட்டுமே குருபகவான், அப்பனே. பின் ஆசீர்வாதங்கள் கொடுத்து, அப்பனே. அனைத்தும் கொடுப்பான்.
அப்படி இல்லை என்றால், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, அவனும் கூட அமைதி தான் பொறுப்பான் என்பேன், அப்பனே.
இதனால், அப்பனே. பின் குரு பெயர்ச்சி அங்கும் இங்கும் (ராசிகளுக்கு) நன்றாக வருகின்றது என்று சொன்னாலும், அப்பனே. ஒன்றும் லாபம் இல்லைப்பா. அப்பனே.
குருபகவானுக்கு முதலில் பிடித்தது, அப்பனே. தர்மத்தை நிலைநாட்டுதல் என்பேன், அப்பனே.
அத்தர்மத்தை நிலைநாட்ட செய்யுங்கள், அப்பனே. பின் பக்தர்களே எதை என்று புரிய, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட இறைவனை, அப்பனே. பின் ஏன் வணங்குகின்றோம்? என்றெல்லாம், அப்பனே. நிச்சயம் அறியாது வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள் என்பேன், அப்பனே.
இதனால், அப்பனே. மேலும் மேலும், அப்பனே. துன்பத்திற்கான வழிகளை மனிதனை ஏற்படுத்திக் கொண்டு, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, அப்பனே
இதனால், அப்பனே. நிச்சயம் யோகத்தை யான் அளிக்கின்றேன் என்பேன், அப்பனே. முதலில் பக்தி யோகத்தை யான் அளிக்கின்றேன் என்பேன், அப்பனே.
மற்ற யோகங்கள் எல்லாம் தானாக வந்துவிடுமப்பா.
இவையெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன், அப்பனே. பக்தி என்ற யோகம், அப்பனே. முதலில், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, அப்பனே. மனிதனுக்கு, அப்பனே. நிச்சயம் சரியாக இல்லையப்பா.
இவ்வுலகத்தில்!!
அவ் யோகத்தை முதலில் கொடுக்கின்றேன், அப்பனே.
ஆனாலும், அப்பனே. அறிந்தும் புரிந்தும், அப்பனே. நிச்சயம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு யோகங்கள், அப்பனே. பின் நிச்சயம் இருக்கின்றது!!
அதை செயல்படுத்த, அப்பனே. மனிதனுக்கு தெரியவில்லையே, அப்பனே.
மனிதனுக்கு தெரியாமல், அவை இவை என்றெல்லாம், அப்பனே. அலைந்து திரிந்து, அப்பனே. மந்திரங்கள் உபதேசத்தை கொண்டு, அப்பனே. எப்படி ஏது என்றெல்லாம், இவை செப்பினால், அவை நடக்கும். அவை யான் சொன்னால், இவை நடக்கும் என்பதை எல்லாம், அப்பனே. நிச்சயம் ஏற்க முடியாதப்பா. சொல்லிவிட்டேன், அப்பனே. நன்மைகளாகவே,
இதனால், அப்பனே. அப்பனே. பல வகையிலும் கூட, அப்பனே. கலியுகத்தில் துன்பங்கள் தான், அப்பனே. துன்பங்கள் சூழ்ந்து நிற்கின்றது என்பேன், அப்பனே. அவையெல்லாம் விரட்ட, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட யான் சொல்லிக் கொடுக்கின்றேன் என்பேன், அப்பனே.
சித்தர்களும் மந்திரங்களும் கூட, அப்பனே. எப்படி எல்லாம் எதிர்வினைகள் கூட, அப்பனே. வந்து கொண்டே இருக்கின்றது, அப்பனே. அவையெல்லாம், அப்பனே. பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே. பின் எதிர்கொள்ள தக்க தக்க தக்க, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட பரிகாரங்கள் உரைத்து, அப்பனே. பின் அதன் மூலம் வெற்றி அடைய, அப்பனே. யாங்கள் நிச்சயம் செய்திடுவோம், அப்பனே.
நம்பிக்கை, அப்பனே. எதை என்று புரிய, அப்பனே. பின் அதாவது, பின் என் கையில், அப்பனே. வைத்துள்ள நம்பிக்கைகள், அப்பனே. வீண் போகாது என்பேன்
அப்பனே.
ஆனாலும், நிறைந்த, அப்பனே. இவ்வுலகத்தில், அப்பனே. பொய் சொல்லுவர்கள் தான் அதிகம் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட,
அதாவது, எங்களை வைத்து, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, பல வகையிலும் கூட, அப்பனே. எதை எதை என்று புரியாமலும், எவை என்றும் அறியாலும் கூட, அப்பனே. பின் திரிந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கும், அப்பனே. பாவ விமோசனம் கொடுத்து தான் இருக்கின்றோம், அப்பனே.
சில காலங்களில் மட்டுமே என்பேன், அப்பனே.
ஆனாலும், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, அவை தன், அப்பனே. எப்படி துவங்கும் என்பதை எல்லாம், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, பின் சித்தர்கள், பின் நிச்சயம் தன்னில் கூட, அறிந்திருப்பார் என்பேன், அப்பனே.
மனிதனின் நிலை, மனிதனின் நிலை, அப்பனே. யார் அறிந்திருப்பார்??? இங்கே, அப்பனே. எவரும் இல்லையப்பா.
அப்பனே. நிச்சயம் தன்னில் கூட நாளை என்ன நடக்கின்றது???, அப்பனே. நிச்சயம் என்பவை எல்லாம், அப்பனே. தெரியாதப்பா,!!
அவையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் என்பேன், அப்பனே. அவையெல்லாம் தெரிந்து கொள்வதற்கே, அப்பனே. சித்தர்கள், யாங்கள், அப்பனே. பரிசுத்தமான உங்களிடத்தில் வந்து, அப்பனே. பல வகையிலும் கூட, அப்பனே. எப்படி எல்லாம் இறைவனை காணலாம்?? என்பதை எல்லாம், அப்பனே. தாந்திரீக முறையிலே, யாங்கள் செப்பிடுவோம், அப்பனே. அதை பயன்படுத்திக் கொண்டு, இறைவனையும் காணலாம்.
நீங்களும் வெல்லலாம் என்பேன், அப்பனே!!!.
குறைகள் வேண்டாம், அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட யான் சொல்லி இருக்கின்றேனே. இவையெல்லாம் ஏற்று நடங்கள்,
அவை மட்டுமில்லாமல், அப்பனே. இன்னும் புதுப்புது, பின் நிச்சயம் தன்னில் கூட வாக்குகள், பின் சித்தர்கள் வந்து செப்புவார்களப்பா. இறங்கி!!!
இதை தன் சரியாக கடைபிடிப்பவன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, பின் மேலோனாகவே இருப்பான் என்பேன், அப்பனே.
ஆனாலும், சரியாக கடைபிடிப்பதற்கும் புண்ணியங்கள் வேண்டுமப்பா. அப்பனே,!!!
அப்புண்ணியங்கள் எப்படி பெருக்க வேண்டும்?? என்பவை எல்லாம், அப்பனே. பின் யான் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன், அப்பனே.
நிச்சயம், அப்பனே. பின் அதாவது, நிச்சயம் இவ் நரகத்தில், அதாவது, நிச்சயம் தன்னில் கூட பல பல பாவங்கள் தான் மனிதனிடத்தில் அதிகம் உள்ளதப்பா.
அவை தன் பின் நீக்கிட தான், அப்பனே. முதலில் யாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்
ஆனாலும், அப்பனே. அவையும் கூட, பின் மனிதன், அப்பனே நிச்சயம் பொய் என்று சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றான், அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட பாவம் அதிகமாக இருந்தால், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட உண்மை கூட பொய்யாக தெரியும் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய, அப்பனே.
இதனால்தான், அப்பனே. நிச்சயம் இப் பாவம் இருக்கின்ற வரையில், அப்பனே. உண்மையை யாரும் நம்பப் போவதில்லை என்பேன், அப்பனே.
அதனால், அப்பனே. அப்பாவத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும், அப்பனே. சுட்டெரிக்க வேண்டும், அப்பனே.
தூரே எறிய வேண்டும், அப்பனே. அவை அவைகளுக்காகத்தான் யாங்கள் நிச்சயம் தன்னில் கூட உங்களிடத்தில் போராடிக் கொண்டே இருக்கின்றோம், அப்பனே.
அவை மட்டுமில்லாமல், திருடனாக இருந்தாலும், அப்பாவத்தை நீக்க வேண்டும் அல்லவா?
அவை எதை என்று புரிய, எப்படி நீக்க வேண்டும்? என்பதை எல்லாம், அப்பனே. எப்படி அழிவுகள் வருகின்றது ? என்பதை எல்லாம், அப்பனே. உங்களுக்கு பின் தெரியாதப்பா, நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே. எதை என்று புரிய, அவை சொன்னாலும், அப்பனே. எதை என்று அறிய, அப்பனே. ஆனாலும், அதை நிறுத்தத்தான் யாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம், அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட, அப்பனே. இவ் தேசத்தில் (இவ் உலகத்தில்) மனிதன், அப்பனே. பின் தயாரித்த, அப்பனே. செயற்கைகளால், அப்பனே. பின் வெடிக்கப் போகின்றது என்பேன், அப்பனே. சில மாதங்களில் என்பேன், அப்பனே.
அவை தன் நிச்சயம் வெடித்தால், அப்பனே. நிச்சயம், அப்பனே. பின் முக்கால் பங்கு உலகம், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, பின் அழிவோடு அழிந்துவிடுமப்பா. நிச்சயம், அதனால்தான், அப்பனே. நிச்சயம், அப்பனே. மனிதனுக்கு புத்திகள் இல்லையப்பா. எப்படி எப்படியோ சொல்லிக்கொண்டு, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட,
இதனால் பணத்தை பின் எதை என்று புரியாமலும் ஈர்த்து, அப்பனே. எவை என்றும் அறியாமலும் ஈர்த்து, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, ஆனாலும், அதை நிறுத்த தெரிவதே இல்லையப்பா.
அப்பனே, பாவத்தை செய்துவிடுகின்றான், பின் அப்பனே. ஆனாலும், பாவத்தை எப்படி தடுக்க முடியாது? எதை என்று கூட, பின் தடுப்பதற்கு தெரிவதே இல்லையப்பா.
இதனால், அப்பனே. நிச்சயம், அதை சரி செய்து கொண்டே இருக்கின்றோம் என்போம், அப்பனே. அதன் சக்திகள் அதிகம், அதிகமாக, அப்பனே. நிச்சயம், தன்னில் கூட கிரகங்களின் சக்தியும் கூட, பின் நிச்சயம் தன்னில் அவை கெடுத்து விடும் என்பேன், அப்பனே.
அதனால்தான், அப்பனே. அழிவுகள், அப்பனே. மனிதனின் மனிதனின் மனநிலைகள் சரியில்லாமல் போகுதல், அப்பனே. நிச்சயம், தன்னில் கூட சிறுது சிறிதாக (கசிந்து ) கசிவு ஏறுகின்ற பொழுது, அப்பனே. நிச்சயம், ஏகப்பட்ட நோய்களும் அதிலிருந்து வருமப்பா.
அதனை தடுத்து நிறுத்தவே, அப்பனே. பல வகையிலும் கூட, அப்பனே. யாங்கள் முயற்சிகள் மேற்கொண்டு, எதை என்று அறிய அறிய அப்பனே. பின் வந்து கொண்டே இருக்கின்றோம்,
ஆனாலும், அப்பனே. அதனுள்ளே பல வகையிலும் கூட, அப்பனே. பின் நன்மைகள், அப்பனே. பின் உங்களால் முடிந்தவரை, அப்பனே. பொறுத்திருங்கள், அப்பனே.
மனது எதை என்று அறிய, அப்பனே. நிச்சயம், தன்னில் கூட உலகத்தை, அப்பனே. பின் அதாவது, எங்களுக்கு ஒருவர் மட்டும் தேவையில்லையப்பா. அப்பனே, உலகமே எங்கள் சொந்தக்காரர்கள் தான், !!
உலகமே என் சொந்தம் தான் என்பேன், அப்பனே. அதனால், அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என்பேன், அப்பனே. இதனால்தான், அப்பனே. நிச்சயம், தன்னில் கூட போராடிக் கொண்டிருக்கின்றோம், அப்பனே. உங்களுக்காக இறங்கி வந்து, அப்பனே.
நிச்சயம், இவ்வாறாக செப்பினாலும், மனிதன் சொல்வானப்பா. எங்களுக்காக ஏன்? போராட வேண்டும் என்று,!!!
ஏனென்றால், அப்பனே. அனைத்தும் அனுபவித்துவிட்டு, இப்படித்தான் சொல்வானப்பா.
எதை என்று புரிய, எவை என்று அறிய சில, அப்பனே........
"""""" பின் சில பைத்தியங்களும் இவ்வுலகத்தில் இருக்கின்றது!!!!!.... என்பேன், அப்பனே.
அவ் பைத்தியங்களை எப்படி திருத்துவது??? என்பது எல்லாம், அப்பனே.
அடி கொடுத்து திருத்துவதா?
நிச்சயம், தன்னில் கூட, எவை பின் கொடுத்து திருத்துவது?? என்பது எல்லாம், அப்பனே. சித்தர்கள், அப்பனே. பின் நிச்சயம், தன்னில் கூட, வருங்காலத்தில் செப்பிக் கொள்வார்கள், அப்பனே.
நிச்சயம், இன்னும் பரிசுத்தமான இடங்கள் எல்லாம் உள்ளதப்பா. அவைகளுக்கு சென்று, அப்பனே. நிச்சயம், உங்களை நீங்கள் வெல்வீர்களாக, அப்பனே.
உங்களை நிச்சயம், அப்பனே. பின் யாங்கள் வெல்ல வைப்போம், அப்பனே. பின் இங்கிருந்தே நாராயணன் அருளும் பரிபூரணம், அப்பனே. நிச்சயம், தன்னில் கூட, ஆசிகள், ஆசிகளப்பா. இன்னும் வாக்குகள் செப்புவோம், அப்பனே. ஆசிகள்!!, ஆசிகள்!!.


.jpeg)



ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete