அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02.11.2025 அன்று திருவண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.
வணக்கம் அடியவர்களே, திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனையில், அன்புடன் போகர் சித்தர் உரைத்த வாக்கு - அதன் ஒரு பகுதி மட்டும் இங்கு அதி முக்கிய அவசர பதிவாக வெளியிடுகின்றோம். முழு வாக்கும் பின்பு வெளிவரும்.
அடியவர்கள் இந்த வாக்கினை பயன்படுத்தி , நம் குருநாதர் அகத்திய மாமுனிவரின் வாக்குகளை பெற்றுக் கொள்க. வாருங்கள் இந்த அதி முக்கிய அவசர பதிவு வாக்கின் உள் செல்வோம்.
=======================================================
# அன்புடன் போகர் சித்தர் வாக்கு ( அவசர பதிவு வாக்கு)
=======================================================
அகிலமெல்லாம் ஆளக்கூடிய அகிலாண்டேஸ்வரி, அகிலாண்டேஸ்வரியை பணிந்து போற்றுகின்றேனே. போகனவனே.
(..................)
நிச்சயம் ஏற்றங்கள் உண்டு. யாங்கள் கொடுப்போம், யாங்கள் சொல்லியதை, நிச்சயம் தன்னில் கூட கடைபிடித்து, நிச்சயம் பின் ஏற்றம் பெருக. பின் அதாவது, பின்
திருவாசகத்தில் 13 ஆம் பின் பதிகம் ( திருப்பூவல்லி ) , பின் பாடல் அறிந்தும் எது என்று கூற யோகங்கள்.
(..................)
இதைத்தன் அறிந்து, இவைத்தன் நிச்சயம் தன்னில் அறிந்தும், பின் நவ, எவை என்று அறிய, பின் அதாவது தானியங்களுடனே தீபங்கள், பின் ஏற்றி, நிச்சயம் தன்னில் கூட, பின் காவேரி தன்னில் , இப்பாடலை பாடிற்று, நிச்சயம் தன்னில் கூட, பின் அமாவாசை தன்னில் கூட, நீராட, அகத்தியனின் ஆசிகளும் கிட்டும், இன்னும் ஞானங்களும் கிட்டி , இன்னும் அவரவருக்கு அகத்தியன் வந்து வாக்குகள் சொல்வான் பலமாக.
(..................)
இன்னும் இன்னும் சிறப்பாகவே வாக்குகள் உண்டு. சித்தர்கள் நிச்சயம் தன்னில் கூட உங்களைப் பின் வழிநடத்துவார்கள். மீண்டும் சொல்கின்றேன்.
சித்தர்கள் பின் வழியில் வருவதற்கும் நிச்சயம் தன்னில் கூட புண்ணியம் வேண்டும்.
நிச்சயம் எவை என்று அறிய கீழானவர்களை யாங்கள் சேர்க்க மாட்டோம். நிச்சயம் இவ்வுலகத்தில் இரண்டு எது என்று கூற (1) ஒன்று மேலானவர்கள் (2) மற்றொன்று கீழானவர்கள்.
நிச்சயம் மேன்மையான எண்ணங்கள் உடையவர்கள் மேன்மையானவர்கள். மற்றவர்கள் கீழான எண்ணம் உடையவர் பின் நிச்சயம் கீழானவர்கள்.
நிச்சயம் அக் கீழானவர்கள் எங்கள் அருகில் வரவே முடியாது. அதனால்தான் மேன்மையான எண்ணங்கள் வையுங்கள். யாங்களே அழைத்து வருவோம். இறைவனிடத்தில் அழைத்துச் செல்வோம். இறைவனை காட்டுவோம் அருளை, ஆசிகளை பெற்றுத் தருவோம்.
நீடோடி வாழ்க! ஆசிகள்! ஆசிகள்! அனைவருக்குமே!.
==============================================
# அதி முக்கிய, அவசர பதிவு வாக்கு (நிறைவு)
==============================================
=============================================
# அதி முக்கிய அவசர பதிவு வாக்கு விளக்கம் :-
=============================================
திருவாசகத்தின் 13ஆம் பதிகமான திருப்பூவல்லி பாடலை, பாடினால் யோகங்கள் கிட்டும்.
அமாவாசை நாளில் காவிரி ஆற்றில் நீராடி, இந்த பாடலை பாட வேண்டும். நவ தானியங்களுடனே தீபங்களை ஏற்றி, பக்தியுடன் பாடும் போது, குருநாதர் அகத்திய மாமுனிவரின் அருள் ஆசிகள் மேலும் பலமாக கிடைக்கும்.
நவதானியங்கள் வைத்து அதன்மேல் நவ தீபங்கள் ஒரே பாக்கு மட்டை தட்டில் ஏற்றலாம் அல்லது தனித்தனியாகவும் ஏற்றலாம். உங்கள் விருப்பமே.
இந்த பாடலை காவிரி ஆற்று நீர் நிலைகளில், தீபம் ஏற்றி, பூ வைத்து, நவதானியங்களை வைத்து பாடும் போது, குருநாதர் அகத்திய மாமுனிவரின் அருள் ஆசிகள் மேலும் பலமாக கிடைக்கும்
மேலும், ஞானம் பெருகும். இதை உணர்ந்து, நிச்சயமாக இவ் வழிபாட்டை செய்தால், நம் குருநாதர் அகத்திய மாமுனிவர், உங்களுக்கு நேரடியாக, பலமான வாக்குகள் உரைப்பார்கள். இதனை அடியவர்கள் நன்கு பயன்படுத்தி கொள்க. குருநாதரின் வாக்குகள் பெறுக. அனைவருக்கும் தெரிவியுங்கள்.
====================================================
# ஐப்பசி நீராடல் குறித்து மற்ற நலம் தரும் வாக்குகள்
====================================================
=====================================================
# (1) பல பாவங்கள் நீங்கி, சித்திகள் பெறுவது எப்படி ?
=====================================================
சித்தன் அருள் - 1034 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலையப்பர் தரிசனம்!
https://siththanarul.blogspot.com/2021/09/1034.html
வாக்கு சுருக்கம்:-
ஐப்பசி மாதத்தில், காவேரி நதியில் நவ நாட்கள் (9 நாட்கள்) பக்தியுடன் நீராடி, அகத்திய மாமுனிவரை நினைத்து, அமாவாசை திதியில் தொடங்கி இந்த வழிபாட்டை மேற்கொண்டால், பல பாவங்கள் நீங்கும். இதனை பெரிய அரசர்கள் செய்தும் சித்திகள் பெற்றுள்ளனர்.
அடியவர்கள் பயன்படுத்தி கொள்க.
================================================
# (2) ஏன் புண்ணிய நதிகளில் நீராடினால் யோகங்கள்?
================================================
https://www.youtube.com/watch?v=3I2PCGce2a4
https://www.youtube.com/watch?v=aDzHl_TZd9k
சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு!
https://siththanarul.blogspot.com/2024/10/1710.html
அன்புடன் அகத்திய முனிவர் வாக்கு (சித்தன் அருள் - 1710) :-
“ஐப்பசி திங்களில் இவ் மாதத்தில் தான்... அப்பனே சக்திகள் அப்பனே பின் குவிந்து நிற்குமப்பா...போகப்போக அப்பனே அவை குறைவாகிவிடும் என்பேன் அப்பனே!!!”
வாக்கு சுருக்கம்:-
மனித உடலில், குறிப்பாக மூளை, கண்கள், பற்கள் போன்ற பகுதிகளில் இருக்கும் நுண்ணுயிர்கள் (microorganisms) சில நேரங்களில் செயல் இழக்கின்றன. ஆனால், கங்கை, காவிரி, தாமிரபரணி போன்ற புனித நதிகளில் நீராடும் போது, அங்கு உள்ள சக்திவாய்ந்த நுண்ணுயிர்கள் உடலில் உள்ள நுண்ணுயிர்கள் உடன் இணைந்து, புத்துணர்ச்சி ஏற்படுத்துகின்றன.
இதனால்:
- மூளை நுண்ணுயிர்கள் செயல்படத் தொடங்கும்
- கண்களில் உள்ள நுண்ணுயிர்கள் சீராகி பார்வை மேம்படும்
- பற்களில் உள்ள நுண்ணுயிர்கள் செயல்பட்டு பல் நோய்கள் குறையும்
- உடல் இளமை பெறும்
- யோகங்கள் ( நன்மைகள்) ஏற்படும்
இந்த ஐப்பசி மாதத்தில், நதிகளில் நீராடி, நவகிரகங்களின் ஒளியை சரியாகப் பயன்படுத்தி, நவகைலாயங்கள் மற்றும் நவதிருப்பதிகள் தரிசனம் செய்தால், பாவங்கள் கரையும், வளர்ச்சி ஏற்படும். இது சித்தர்களின் ரகசியம்
==========================================
# (3) ஐப்பசி மாத அறிவியல் ரகசியங்கள்
==========================================
https://www.youtube.com/watch?v=K66nCQA4Tr4
சித்தன் அருள் - 1201 - அன்புடன் அகத்தியர் - அகத்திய பெருமானின் உத்தரவு!
https://siththanarul.blogspot.com/2022/10/1201.html
வாக்கு சுருக்கம் :-
ஐப்பசி மாதத்தில் துருவ் நட்சத்திரம் பூமிக்கு நெருக்கமாக பிரகாசிக்கிறது. இந்த நேரத்தில், சூரியன் மற்றும் சந்திரன் கீழ்நோக்கி பயணிக்கின்றனர், மேலும் மேலிருந்து வரும் நன்மை தரும் ஒளியை ஒரு கோள் தடுத்து, தீய ஒளியாக மாற்றி மனிதர்களின் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நோய்கள், இறை பலம் குறைபாடு போன்ற விளைவுகள் ஏற்படும்.
இந்த தீய சக்திகளிலிருந்து மனிதர்களை காக்க, நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் காவிரி மற்றும் தாமிரபரணி நதிகளை அறிவியல் ரீதியாக உருவாக்கி உள்ளார்கள்.
இந்த தீய ஒளியில் இருந்து பாதுகாப்பதற்காக, ஐப்பசி மாதத்தில் காவிரி மற்றும் தாமிரபரணி நதிகளில் நீராட வேண்டும். நவகிரகங்களின் ஒளி அதிகமாக இருக்கும்; அதனை நன்மையாக பயன்படுத்த, நவகைலாயங்கள் மற்றும் நவதிருப்பதிகளை பக்தியுடன் தரிசிக்க வேண்டும்.
இந்த ஐப்பசி மாதத்தில் ஈசன், பெருமாள் மற்றும் பிரம்மா ஆகியோர் நதிகளில் நீராடி அருள் வழங்குவார்கள். சனிபகவான் இந்த மாதத்தில் அதிக சக்தியுடன் இருப்பார்; நல்லோர் நன்மை பெறுவார்கள், தீயோர் தண்டனை பெறுவார்கள்.
====================================================
# திருவாசகம் - 13 ஆம் பதிகம் - திருப்பூவல்லி - சுருக்கம்
====================================================
திருப்பூவல்லி என்பது திருவாசகத்தில் இடம்பெறும் ஒரு பக்தி பாடல் தொகுப்பு. இதில் "வல்லி" என்றால் "கொடி" என்று பொருள். பெண்கள் பூக்களை கொடியிலிருந்து கொய்யும் செயல் "பூவல்லி" என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "பூவல்லி கொய்யாமோ" என்ற அழைப்பு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. நால்வகைப் பூக்களில் பெரும்பாலும் கொடிப்பூக்கள் பற்றியே இப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.
இந்த பாடல்களின் முக்கிய நோக்கம் மாயவிஷயங்களை நீக்குதல் ஆகும். அதாவது, உலக வாழ்க்கையின் வெற்றியால் ஏற்படும் மயக்கத்தை விலக்கி, இறைவனிடம் முழு மனதுடன் சரணாகதி அடைவது.
திருப்பூவல்லி என்பது திருவாசகத்தின் ஒரு பகுதி, மாணிக்கவாசகர் அருளிய 13வது பாடலாகும். இது மாயா விசயம் நீக்குதல் என்ற தலைப்பில், உலக மயக்கங்களை விட்டு இறைவனிடம் சரணாகதி அடையும் ஆன்மீகப் பயணத்தைப் பாடுகிறது.
திருப்பூவல்லி சுருக்கம்
பாடல் வடிவம்: நாலடி தரவு, கொச்சகக் கலிப்பா.
பாடும் சூழல்: பெண்கள் சிவபெருமானுக்குப் பூக்கள் சூட்ட, அவனது புகழைப் பாடிக்கொண்டு அல்லி மலர்களைப் பறிக்கின்றனர்.
முக்கிய கருத்துகள்:
இறைவனின் திருவடிகளை தலைமேல் வைத்து, உலக பந்தங்களைத் துறந்து பக்தியில் ஈடுபடுதல்.
பாண்டிப் பிரான் எனும் சிவன், பந்தங்களை அறுத்து ஆன்மாவை ஆண்டவனாக வர்ணிக்கப்படுகிறார்.
வல்வினைகள் அழிக்கப்படும், பழவினைகள் கிறி செய்யப்படும், பேராசை நீக்கப்படும்.
சிவபெருமான் பல வடிவங்களில், பல இடங்களில், பல செயல்களில் அருள்புரிந்தவனாக வர்ணிக்கப்படுகிறார்:
முப்புரம் எரித்தவன்
ஆலமரத்தின் கீழ் அருமறைகள் அருளியவன்
பாம்புகளை அணிகலனாக அணிந்தவன்
யானையின் தோலை போர்த்தியவன்
நரியைக் குதிரையாக்கி வந்தவன்
தில்லை அம்பலத்தில் நடமாடும் சிவன், சிலம்பொலி கேட்க ஆசை, பெருந்துறையான் எனும் சிவபெருமானின் திருநடனம்—all symbolize the soul’s yearning for divine union.
மூலம்: ஒவ்வொரு பாடலும் "பூவல்லி கொய்யாமோ" என்ற அழைப்புடன் முடிகிறது, இது பூக்களை கொய்யும் ஆன்மீகச் செயலை குறிக்கிறது.
இந்த பதிகம் , உலக மாயையை விட்டு இறைவனின் அருளை நாடும் ஆன்மாவின் அழகிய பயணத்தை மிகுந்த கவிதைத் திறனுடன் வெளிப்படுத்துகின்றன.
===============================================
# திருவாசகம் - 13 ஆம் பதிகம் - திருப்பூவல்லி
===============================================
இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே,
துணை ஆன சுற்றங்கள் அத்தனையும், துறந்தொழிந்தேன்;
அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ! (1)
எந்தை, எம் தாய், சுற்றம், மற்றும் எல்லாம், என்னுடைய
பந்தம் அறுத்து, என்னை ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான்;
அந்த இடைமருதில், ஆனந்தத் தேன் இருந்த
பொந்தைப் பரவி, நாம் பூவல்லி கொய்யாமோ! (2)
நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து,
தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான்,
மாயப் பிறப்பு அறுத்து, ஆண்டான்; என் வல் வினையின்
வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ! (3)
பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே,
எண் பட்ட தக்கன், அருக்கன், எச்சன், இந்து, அனல்,
விண் பட்ட பூதப் படை வீரபத்திரரால்
புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ! (4)
தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான்
ஊன் நாடி, நாடி வந்து, உட்புகுந்தான்; உலகர் முன்னே
நான் ஆடி ஆடி நின்று, ஓலம் இட, நடம் பயிலும்
வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ! (5)
எரி மூன்று தேவர்க்கு இரங்கி, அருள்செய்தருளி,
சிரம் மூன்று அற, தன் திருப் புருவம் நெரித்தருளி,
உரு மூன்றும் ஆகி, உணர்வு அரிது ஆம் ஒருவனுமே
புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ! (6)
வணங்க, தலை வைத்து; வார் கழல், வாய், வாழ்த்த வைத்து;
இணங்க, தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து; எம்பெருமான்,
அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே, ஆடுகின்ற
குணம் கூர, பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ! (7)
நெறி செய்தருளி, தன் சீர் அடியார் பொன் அடிக்கே
குறி செய்துகொண்டு, என்னை ஆண்ட பிரான் குணம் பரவி,
முறி செய்து, நம்மை முழுது உழற்றும் பழ வினையைக்
கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ! (8)
பல் நாள் பரவிப் பணி செய்ய, பாத மலர்
என் ஆகம் துன்னவைத்த பெரியோன், எழில் சுடர் ஆய்,
கல் நார் உரித்து, என்னை ஆண்டுகொண்டான்; கழல் இணைகள்
பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ! (9)
பேர் ஆசை ஆம் இந்தப் பிண்டம் அற, பெருந்துறையான்,
சீர் ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான்,
கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி,
போர் ஆர் புரம் பாடி பூவல்லி கொய்யாமோ! (10)
பாலும், அமுதமும், தேனுடன், ஆம் பரா பரம் ஆய்,
கோலம் குளிர்ந்து, உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள்
ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம்; அந் நெறியே
போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ! (11)
வானவன், மால், அயன், மற்றும் உள்ள தேவர்கட்கும்
கோன் அவன் ஆய் நின்று, கூடல் இலாக் குணக் குறியோன்
ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய,
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ! (12)
அன்று, ஆல நீழல் கீழ் அரு மறைகள், தான் அருளி,
நன்று ஆக வானவர், மா முனிவர், நாள்தோறும்,
நின்று, ஆர ஏத்தும் நிறை கழலோன், புனை கொன்றைப்
பொன் தாது பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ! (13)
படம் ஆக, என் உள்ளே தன் இணைப் போது அவை அளித்து, இங்கு
இடம் ஆகக் கொண்டிருந்த, ஏகம்பம் மேய பிரான்,
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா,
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ! (14)
அங்கி, அருக்கன், இராவணன், அந்தகன், கூற்றன்,
செம் கண் அரி, அயன், இந்திரனும், சந்திரனும்,
பங்கம் இல் தக்கனும், எச்சனும், தம் பரிசு அழிய,
பொங்கிய சீர் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ! (15)
திண் போர் விடையான், சிவபுரத்தார் போர் ஏறு,
மண்பால், மதுரையில் பிட்டு அமுது செய்தருளி,
தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட,
புண் பாடல் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ! (16)
முன் ஆய மால் அயனும், வானவரும், தானவரும்,
பொன் ஆர் திருவடி தாம் அறியார்; போற்றுவதே?
என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம்
பல் நாகம் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ! (17)
சீர் ஆர் திருவடித் திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே
ஆராத ஆசை அது ஆய், அடியேன் அகம் மகிழ,
தேர் ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திரு நடம் செய்
பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ! (18)
அத்தி உரித்து, அது போர்த்தருளும் பெருந்துறையான்,
பித்த வடிவு கொண்டு, இவ் உலகில் பிள்ளையும் ஆய்,
முத்தி முழு முதல், உத்தரகோசமங்கை வள்ளல்,
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ! (19)
மா ஆர வேறி மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலத் திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ (20)
====================================================
# திருவாசகம் - 13 ஆம் பதிகம் - திருப்பூவல்லி (நிறைவு)
=====================================================
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment