எல்லோருக்கும் கிடைக்காத ஒன்றே ஒன்று நிம்மதி தான். எது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம், ஆனால் நிம்மதி சம்பாதிப்பது என்பது இயலாத காரியம் என்கிறான் அவன் காலாங்கிநாதன். அந்த நிம்மதியும் நான் தருகிறேன். அது கிடைக்காத வஸ்து, காயகல்பம் போல. அதையும் நான் தருகிறேன், நிம்மதி எப்படி வருமென்றால்? பிரார்த்தனை செய்யாமலே வரும், நீங்கள என்னை நோக்கி அல்ல, இறைவனை நோக்கி அல்ல, சித்தர்களை நோக்கி பயணம் செய்யுங்கள், எந்த சித்தனாவது உனக்கு தொடர்பு கொடுப்பான். அதன் மூலம் எதிர்கால வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
மருத்துவரீதியிலே இன்னும் எத்தனையோ நோய்கள் வரப்போகிறது, இன்றைய தினம் இந்த முருகன் சன்னதியில் வைத்து கொண்டு, அகத்தியன் சொல்லுகிறேன், இன்னும் இந்த உலகத்திலே எத்தனையோ காய்ச்சல் என்று சொல்லுகிறார்களே ? அதைவிட மோசமான காய்ச்சல் வரப்போகிறது. இன்னும் உலகம் வந்து நோய்களால் திண்டாட போகிறது. வித விதமாக புரிந்து கொள்ள முடியாத வியாதிகள் எல்லாம் தோன்ற போகிறது. அதில் ஒன்று வடகிழக்கு மாகாணத்திலே, ஏற்கனவே தோன்றிவிட்டது. இதுபோல அது குட்டி போட்டு குட்டிபோட்டு, இன்னும் ஏறத்தாழ 3137 வியாதிகள், கண்ணுக்குள் காண முடியாத வியாதிகள் எல்லாம் வரப்போகிறது.அத்தனை வியாதிகளும் பறந்து வந்து சிலரை எப்படியோ மனிதர்களை தாக்கி அழிக்கலாம். மனிதர்களே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு புதுப்புது வியாதிகள் வந்து தோன்றலாம். விஞ்ஞான உலகத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது. அந்த வியாதிகளுக்கு எல்லாம் என்னடா மருந்து என்றால் ? பிரார்த்தனை தான் மருந்தா ? என்று கேட்காதே, பிரார்த்தனையும் ஒரு மருந்து, மூலிகையும் ஒரு மருந்து. அந்த மூலிகை இலை இந்த கஞ்சமலையிலே, வடகிழக்கு திசையிலே, பூமிக்கு அடியிலே, ஏற்கனவே தோன்றிவிட்டது. அது இன்னும் 14 ஆண்டுகளுக்கு பிறகு, இல்லை அதற்கு முன்னாலே கூட சொல்ல முடியாது, பூமியில் இருந்து விருட்டென்று வெளியில் கிளம்பும். அந்த மூலிகை வித்தியாசமாக இருக்கும்.அந்த மூலிகையின் வாசனைகள் ஆச்சர்யமாக இருக்கும். அதை மூலிகையை புரிந்து கொண்டவர்கள், அந்த மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள், அந்த மூலிகையை பற்றி அறிந்து கொண்டு, அதை தக்கவாறு பயன்படுத்திக் கொண்டால், எதிர்வரும் 3000 மேல் வரக்கூடிய புதுப்புது வியாதிகளை குணப்படுத்தும் சக்தி, சர்வ வல்லமை படைத்த இந்த மூலிகைக்கு மட்டுமே உண்டு. உலகத்தில் தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. தமிழ்நாட்டிலே இந்த கஞ்ச மலைக்கு மட்டுமே உண்டு. அப்போ பொதிகை மலை என்னாயிற்று என்று கேட்காதே? கொல்லிமலை என்னாயிற்று, அங்கு மூலிகை இல்லையா என்று கேட்காதே. சதுரகிரியிலே மூலிகையே இல்லையா என்று கேட்காதே! இது ஆரம்பம் ஆகும். இது காலத்தின் கட்டாயம் என்று சொல்லி, இதனுடைய விளைவுகள் மற்ற மலைகளில் தோன்றும். முதலில் தோன்றுகிற இடம் இந்த அற்புதமான இந்த இடத்தில் தான். ஆக எந்தெந்த நோய்கள் வரப்போகிறதோ, அதற்கு ஏற்கனவே மூலிகைகள் இறைவன் படைத்து விட்டான். அதைப்போல நோய்களையும் படைத்தது கொண்டிருக்கிறான். நோய்களின் பேரே வித்தியாசமாக இருக்கும்.
நன்றாக இருப்பான், திடீரென்று கை கால்கள் இழுத்து விடும். நன்றாக பேசுவான், செயலிழந்து போவான். ஒரு கண் இருக்கும், ஒரு கண் இருக்காது. அரக்கன் போல அந்தக் காலத்தில் கொம்பு முளைக்கலாம்.தலைமுடி இல்லாமல் போகலாம்.மூன்ற அடிக்கு மேல் வளர முடியாமல் போகலாம். ஒரு கை இருக்கும், ஆனால் ஒரு கால் இருக்காது, ஆனால் வாழ்வான். பேச்சிற்கும் ஆனால் செயல்பட முடியாது. கண்ணீருக்கும் ஆனால் பார்க்க முடியாது, ஆக இப்படியும் எத்தனையோ வியாதிகள் வரப்போகிறது. இதெல்லாம் கூடவே அவர்கள் செய்த பாவத்தின் அடையாளம்.அந்த மாதிரி பாவங்கள் எதுவுமே உங்களை அண்ட கூடது என்பதற்காகவும், உங்களது குடும்பம் நல்லதொரு எதிர்காலம் தழைக்க வேண்டும் என்பதற்காகவும், அகத்தியன் உள்பட, காலாங்கிநாதன் உள்பட இங்கு வந்து, உங்களையெல்லாம் அழைத்து, உங்களுக்கு அந்த புண்ணியத்தை இப்பொழுதே நாங்கள் தருகிறோம். இங்குள்ள அதைப்பெருக்கும் அந்த மாதிரி வியாதிகள், அந்த மாதிரி வம்சங்கள் பிறக்காது. அது வராது தடுக்கின்ற புண்ணியத்தையும், காலங்கிநாதர் உட்பட நானும் நல்லதொரு நாளில் இந்த நேரத்தில், உங்களுக்கெல்லாம் புண்ணியமாக நான் வழங்குகிறேன். இதை கூட தாரை வார்த்து கொடுக்கிறேன் என்று சொன்னால், தாரை வார்த்து வெறுமனே சொன்னால் எப்படி ? தண்ணீர் தெளித்து கொடுக்க வேண்டாமா! என்று கேட்பாய் நீ. ஏனென்றால் நீ சட்ட திட்டம் படித்தவன். முறைப்படி எதுவும் செய் என்று கேட்டாலும் கேட்பாய். உனக்கு உரிமை இருக்கிறது, நானும் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஆக தாரை வார்த்து கொடுத்தேன் என்று எப்பொழுது அகத்தியன் சொல்லிவிட்டேனோ, காலாங்கிநாதர் எப்பொழுது சொல்லி விட்டாரோ ? உங்களுக்கு அந்த மாதிரி, வியாதிகள் தொந்தரவு, ஆரோக்கியம் பலம் குறைவாக இருக்கின்ற நிலை ஒருபொழுதும் ஏற்படாது. அதற்கு வாக்குறுதி, அகத்தியன், காலாங்கிநாதன் சார்பில் இங்கு வழங்குகிறேன். ஆக இங்குள்ள அத்தனை பேரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மன அமைதியோடு இருக்க வேண்டும். சந்தோஷத்தோடு இருக்க வேண்டும்.குழந்தைகள் செல்வச் செழிப்போடு, நல்ல படியாக இருக்க வேண்டும்.மன நிம்மதி இருக்க வேண்டும்.
பணத்தால் நிம்மதி வேண்டுமா? கிடைக்கும், பொருளால் நிம்மதியா? கிடைக்கும், குழந்தைகளால் நிம்மதியா? கிடைக்கும், நோய்கள் நீங்கி நிம்மதியாக இருக்க வேண்டுமா? அதுவும் கிடைக்கும். இப்படிப்பட்ட புதுப்புது வாக்குறுதிகள் எல்லாம் காலாங்கிநாதன் உங்களுக்கு வழங்கியிருக்கிறார். ஆக இன்றைய தினம் நீங்கள் அத்தனை பெரும் மிக மிக மிக புண்ணிய சாலிகள். அற்புதம் படைத்தவர்கள். ஏனென்றால் நீங்கள் எல்லாம் இன்றைக்கு, நேற்றைக்கு காலாங்கிநாதரிடம் தொடர்பு கொண்டவர்கள் அல்ல. ஜென்மாதி ஜென்மமாக இருகின்றது. அந்த தொடர்பு தான் உங்களை இங்கு வர வைத்திருக்கிறது. ஆக காலாங்கிநாதன் கோயிலிலே ஆங்குதான் அகத்தியன் வாக்குரைக்கலாம் என்று சொன்ன போது, மேலே சென்றால் நன்றாக இருக்கும் என்று இந்த உயர்ந்த இடத்தில் கொண்டு வந்தது காலாங்கிநாதன் தான். காலாங்கிநாதன் இப்பொழுது அந்த கோயிலில் இல்லை, இதோ என் பக்கத்தில் கருவறையில், முருகன் சன்னிதானத்தில் தான் இருக்கிறார்.
ஆக முருகன் சன்னிதானத்திலே அகத்தியன் இருக்கிறேன், காலாங்கிநாதன் இருக்கிறார், என்னோடு சேர்ந்து பதினேழு சித்தர்களும் இருக்கிறார்கள். ஆக கீழே படிக்க வேண்டிய வாக்குறுதி, மலைமேல் படித்துவிட்டு வந்து மயங்கிவிடக்கூடாது. எங்கு படிக்க வேண்டும் என்பது அகத்தியனுக்கு தெரியும். காலாங்கிநாதனே கட்டளை இட்டான், இங்கு வந்து அமர்ந்து படி என்றான்.ஆகவேதான் அகத்தியன் அவன் பொருட்டு, என் நண்பனின் பொருட்டு நல்லதொரு வாக்கினை தந்திருக்கிறேன்.
ஆக இந்த நாள் மிக மிக புண்ணியமான நாள், அருமையான நாள், காலாங்கிநாதன் பிறந்த நாள், சில தெய்வ ரகசியங்களை எல்லாம் விரைவிலே உங்களுக்கு சொல்லப் போகின்ற நாள், மருத்துவ குணங்களை அறிந்து கொண்டிருக்கிற நாள், எதிர்காலத்தில் 3000 மேற்பட்ட வியாதிகள் உங்களையோ, உங்கள் வம்சத்தையோ தாக்காமல் பாதுகாக்க அரண் போட்ட நாள், ஆயுசு அதிகரித்த நாள், அவன் செய்த தானங்களையெல்லாம் நீ பெற்ற நாள், காலாங்கிநாதர் பிறந்த நாள், ஆக அகத்தியனுக்கு மனம் மகிழ்ந்து, நீங்கள் எல்லோரும் பல்லாண்டு வாழ்க ! எந்தவித தொல்லையும் இல்லாமல், நோய்நொடி இல்லாமல், மன நிம்மதியோடு, ஆரோக்கியத்தோடு, சின்ன சின்ன எதிர்பார்ப்புகளை தூக்கி எறிந்துவிட்டு, பெரும் எதிர்பார்ப்பு நிம்மதியை நோக்கி இருந்த நாள், அதை விட ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் யாரோ சிலருக்கு இங்கே விண்மீனாக மாறக்கூடிய பாக்கியம் இருக்கிறது. யார் அந்த நாதன் அகத்தியன் யாம் அறியேன், காலாங்கிநாதர் அதற்கு முடிவு செய்வார். அவன் கருணை உங்கள் அத்தனை பேருக்கும் கிடைக்கிறது. முதன் முதலாக காலங்கிநாதன் வாக்குரைத்திருக்கிறார்.முதன் முதலாக காலங்கிநாதன் உங்களையெல்லாம் அழைத்திருக்கிறார்.இது இதுவரை வாழ்க்கையில் நடந்திடாத அதிசியம்.ஆக அகத்தியனுக்கு என்ன தான் சொல்லப்போகிறான் என்ற ஆசையில் கூட, நான் மட்டுமல்ல என்னோடு சேர்ந்த பதினேழு சித்தர்களையும் அழைத்து வந்திருக்கிறேன். ஆக சித்தர்களில் காலாங்கிநாதரும் ஒருவர் என்றாலும் கூட, அவன் இப்போ தனிப்பட்ட இடத்தில் உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் போட்டு, அவனுக்கு மயிலிறகால் சாமரம் வீசி, அவனுடைய நல்லதொரு வாக்கினை கேட்கிற நாள், அவனுடைய பிறந்த நாளில் உங்களுக்கெல்லாம் புண்ணியம் கிடைத்திருக்கிறது. நோய்கள் தன்மை குறைய இருக்க வாக்குறுதி கொடுத்திருக்கிறான், விண்மீன்கள் ஆக்கப் போகிறேன் என்று சொல்லுகிறான். அதற்கும் அகத்தியன் ஒருவேளை உடன்பட்டு செய்யக்கூடும்.அது அருமையான நல்லதொரு நாள் இந்த நாள்.
முருகன் சன்னிதானத்தில், அவர் காலாங்கிநாதர் வேண்டுகோள்படி, அகத்தியன் நானும் வந்தேன், அவன் சொன்னதை உங்களுக்கு சொன்னேன், ஆக அருமையான நாள் இன்றைய தினம் ஆரம்பம் ஆகிவிட்டது என்று சொல்லி அகத்தியனுக்கு ஒரு சிறு நேரம் ஒய்வு தேவை என்பதால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்.
[இந்த தொகுப்பு, பழையபடி வியாழன் அன்று பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிட முயற்சி செய்து கீழ் காணும் நேரத்தில் வெளியிடப்படுகிறது! எல்லாம் அவர் செயல்.]
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete