ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.
( இவ் தொடர் வாக்கின்- 7 ஆம் பகுதி - குருநாதர் வாக்குகளை மட்டும் இப்போது பார்ப்போம் )
குருநாதர் :- அப்பனே, சித்தர்களை, அப்பனே, யார் என்று? பின், அப்பனே, மக்களுக்கு இன்னும் கூட தெரியவில்லை என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, மிகவும் அடித்தளத்தில் இருப்பவனுக்கு தான் அப்பனே, நிச்சயம், யாங்கள் வந்து உதவி செய்து, அப்பனே, பன்மடங்கு உயர்வுகளை, அப்பனே, பெற வைப்போம் என்போம் அப்பனே. அதனால், அப்பனே, நல்விதமாகவே உங்களுக்கும் அனைத்தும் யான் செய்கின்றேன் அப்பனே, நலமாகவே.
குருநாதர் :- அப்பனே, நன்முறைகளாகவே, அப்பனே, நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா?
அடியவர்கள் :- இருக்கு, இருக்கு, இருக்கு.
குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட. அப்பனே, பின், நம்பிக்கை, தும்பிக்கை. அப்பனே, உயர்த்தி வைப்பேன். தும்பிக்கையால்.
சுவடி ஓதும் மைந்தன் :- பிள்ளையார்….
குருநாதர் :- எதை என்று புரிந்து கூட, ஞானத்தை அள்ளித் தருவேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஞானங்களும் கொடுப்பார். எல்லா விஷயங்களும் தெரிஞ்சுக்கணும். ஞானங்கள் கண்டிப்பா கொடுப்பார்.
குருநாதர் :- அறிந்து கூட, இதனால், பின், அனைவரும் அறிந்தும் கூட, எதை என்று கூட. தாயே, உன் மகனை அழை. இங்கு
சுவடி ஓதும் மைந்தன் :- உங்க மகனை தான் அழைக்க சொல்றார்.
குருநாதர் :- அப்பனே, உனக்கும் ஆசைகள் இருக்கின்றது அப்பா. ஆனாலும், நீ சரியாக பயன்படுத்துவது இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால், சரியாக பயன்படுத்தல.
========================================
# உங்கள் தாய் தந்தைக்கு யான் மதிப்பு அளிப்பேன் என்று உங்கள் இல்லத்தில் உள்ள குருநாதர் படத்தின் முன் சொல்லுங்கள்.
=======================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், இனிமேலும். அப்பனே, நிச்சயம், எவை என்று அறிந்து கூட, என் தாய் தந்தைக்கு பின் யான் மதிப்பு அளிப்பேன் என்று என்னிடத்தில் உரை.
அடியவர் மகன் :- இனிமே நான் தாய் தந்தைக்கு மதிப்பு கொடுப்பேன்.
========================================
# உங்கள் தாய் தந்தைக்கு எந்த மனக்கஷ்டத்தையும் கொடுக்கக்கூடாது.
=======================================
========================================
# உங்கள் தாய் தந்தையை - பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
=======================================
குருநாதர் :- நிச்சயம், பின் அதை இதை செய்யக்கூடாது. அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று நிச்சயம், அறிந்து கூட, அப்பொழுது என் ஆசிகள் உந்தனுக்கு வரும். நிச்சயம், பின் அனைத்தும் உந்தனுக்கு செய்வேன். மெதுமெதுவாக. ஆனால், உன் தாயை நீதான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
========================================
# உங்கள் தாய் தந்தைக்கு மனக்கஷ்டம் நீங்கள் கொடுத்தால்
========================================
========================================
# நீங்கள் கீழாகவே போய்க்கொண்டிருப்பீர்கள்.
=======================================
========================================
# அப்பனே, இது அகத்தியன் வாக்கு.
=======================================
குருநாதர் :- நிச்சயம், பின் எவ்வளவு மன கஷ்டத்தையும் கொடுக்க கூடாது. நீ உன் தாய்க்கு மன கஷ்டம் கொடுத்துக் கொண்டே இருந்தால், நீ கீழாகவே போய்க்கொண்டிருப்பாய்.
குருநாதர் :- அப்பனே, இது அகத்தியன் வாக்கு.
குருநாதர் :- அப்பனே, பெற்றவள். அப்பனே, எப்படி கஷ்டங்கள் பட்டு பட்டு உன்னை நிச்சயம் எப்படி பாசங்களோடு? அப்பனே, நிச்சயம். அப்பனே, யானே உணர்ந்தேன் அதை.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களை எப்படி எல்லாம் வளர்த்தாங்க? எப்படி பாசத்தை காட்டுனாங்கன்னு சொல்லிட்டு, நான், எனக்கு தான் தெரியும்பா.
குருநாதர் :- அப்பனே, ஆனால் அப்பனே, அதற்கு அப்பனே, பின் எதை என்று அறிய அறிய. அப்பனே, ஒன்று கூட நீ செய்வது சரியில்லை என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா அகஸ்தியர் பார்த்திருக்காரு. உங்க வீட்ல ஏதாவது படம் இருக்கா? அது படம் இல்ல. அவர் நேர்லவே பார்த்துக்கிறார். அப்ப, நீ செய்வதெல்லாம் தவறு. அம்மா தப்பா நினைக்காதீங்கமா.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நீ என்ன பண்றன்னு பார்த்துட்டே இருக்கிறான்ப்பா. ஆனா, ஒன்னு கூட சரியில்ல என்று . அவர் அகத்தியர் சொல்கிறார். - தாய் , தந்தையை மதிக்காமல் - நீ செஞ்சது ஒன்னு கூட சரியில்லை என்று சொல்கிறார். )
குருநாதர் :- இதே போலத்தான், அப்பனே, அனைவரின் இடத்தில் வந்து யான் பார்ப்பேன். அப்பனே, நிச்சயம். அப்பனே, நிச்சயம். அனைவரின் பின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கின்றேன். அப்பனே, அப்பனே, தெரியாமல் செய்துவிட்டாய். மாற்றி வைக்கின்றேன் அனைத்தும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீ வந்து தெரியாமல் செய்துகிட்டு இருக்கின்றாய்.
குருநாதர் :- அப்பனே, ஒருவன் புத்தியை மாற்றினான். அப்பா, அறிந்து கூட, அப்பனே, நிச்சயம், அவன் கூட. அப்பனே, மந்திரவாதி என்பேன். அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- ( புத்தியை மாத்திட்டாரு. இவரை ஒரு மாந்திரவாதி. அது யாருன்னு தெரியல. அகத்தியருக்கு தெரியும். அப்போ, உன் புத்திக்கு தகுந்த மாதிரி அவர் நடக்கல. ஆனா, அதையே நான் மாத்துறேன்ப்பா. )
குருநாதர் :- அப்பனே, இவ்வுலகத்தில், அப்பனே, நிச்சயம், தீயவர்கள் தான் அதிகம் பக்திக்கு நுழைகின்றார்கள் என்பேன். அப்பனே, அவர்கள் எல்லாம் வரும் காலத்தில் சித்தர்களை நொறுக்குவோம் என்போம் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இது பொதுவா சொல்றாரு. உங்களுக்கு இல்ல, தீயவர்கள் தான் பக்திக்கு, பக்திக்கு, பக்திக்கு அதிகமாக வருகின்றார்கள். அவர்களையும் வரும் காலத்தில் நொறுக்குவோம். )
குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, இதனால் தான் , அப்பனே, பக்தி என்றென்றல் சொல். அப்பனே, பின் தலைகளாக போய்க்கொண்டிருக்கின்றது அப்பனே.
குருநாதர் :- அப்பனே, பக்தியை பயன்படுத்திக் கொண்டு அதை செய்கின்றேன். இதை செய்கின்றேன் என்று சொல்வானப்பா. ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பேன் அப்பனே.
======================================
# எங்கள் குழந்தைகளாக இருங்கள் - போதுமானது
=====================================
குருநாதர் :- அப்பனே, எங்களை மீறி ஒன்னும் நடக்காதப்பா. சித்தர்கள் மீறி ஒன்னும் நடக்காது, ஒன்னும் நடக்காது. அப்பனே, அதாவது, நிச்சயம், அப்பனே, எங்கள் குழந்தைகளாக இருங்கள். போதுமானது என்பேன் அப்பனே. உங்களுக்கு அனைத்தும் நாங்களே செய்கின்றோம்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், எதை என்று அறிய அறிய யான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்பனே, அனைத்தும் நீ செய்ததெல்லாம் தவறுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இவ்வடியவர் இல்லத்தில் உள்ள புகைப்படத்தின் மூலம் குருநாதர் பார்த்துக்கொண்டே இருக்கின்றார் அவர்களை.)
(இதேபோல எல்லோர் வீட்டிலும் உள்ள குருநாதர் போட்டோ அதன் மூலம் நடக்கின்றது இந்த இறைவனின் சித்து விளையாட்டு )
குருநாதர் :- அப்பனே, என்னை பார், தெரியும் அங்கே.
குருநாதர் :- அப்பனே, விரும்பியதை அடைந்து விடலாம். எளிதில் கூட கவலையில் விடு. அப்பனே,
குருநாதர் :- அப்பனே, நல்லிதமாக, உன் தாயவளுக்கு நீ நிச்சயம் மரியாதை கொடுத்தால், அப்பனே, அனைத்தும் பின் யான் உந்தனக்கு சொல்லிக் கொடுப்பேன். அப்பனே,
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், பார்த்துக் கொள்ளத்தான் வேண்டும். அப்பனே, நிச்சயம், அப்பனே, யானே பார்ப்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, மாந்திரவாதி. அப்பனே, உன் மூளையை. அப்பனே, நிச்சயம், எதை என்ற அறிய இருட்டினில் கொண்டு சென்றுவிட்டான் என்பேன் அப்பனே,
குருநாதர் :- இதனால் , அப்பனே, பின் செலவுகள் அதிகம் என்பேன். அப்பனே, ஏன் எதற்கு என்றால், அப்பனே, அனைத்தும் பணத்திற்காக என்பேன் அப்பனே.
(பண செலவுகள் அதிகம் )
குருநாதர் :- அப்பனே, அனைத்தும் மாற்றுவேன். அனைத்தும் கொடுப்பேன்.
========================================
# தினமும் தாய் தந்தை காலை தொட்டு வணங்குங்கள்
========================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், பின் அவளை கால்களை தொட்டு வணங்கு , இப்பொழுதே
சுவடி ஓதும் மைந்தன் :- நமஸ்காரம். நீங்க ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா, பண்ணுங்கம்மா. நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு, நல்லா இருக்கணும்.
குருநாதர் :- அப்பனே, புத்திகள் நன்றாகத்தான் இருக்கின்றது என்பேன். அப்பனே, ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை. ஏனென்றால், அப்பனே, ஒரு மாந்திரிகவாதி அதை மறைத்தே விட்டான்.
குருநாதர் :- அறிந்து கூட, அப்பனே, அனைத்தும் தெளிவுபடுத்தி விட்டேன் அப்பனே, நிச்சயம், அப்பனே, நன்முறைகளாகவே யான் சொல்வதை ( செய்து கொண்டு வந்தாலே, அடுத்த வாக்கம் விரைவில் வரும். அப்பா)
===========================================
# மாணவனுக்கு - உயர்வு கொடுப்பது ஆசிரியன்
===========================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அதாவது, பின் ஆசிரியன், அதாவது, மாணவனிடத்தில் சொன்னால், மாணவன் சரியாக செய்து வந்தால், அடுத்தடுத்து, அப்பனே, வாய்ப்புகள் கிட்டி , அப்பனே, அப்படியே உயர்த்து வைத்து விடுவானப்பா.
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட, இன்னும், இன்னும், அப்பனே, ஒவ்வொருவருக்கொருவர் அப்பனே, என்ன, ஏது, எதெல்லாம், ஏன், இவ்வுலகத்திற்கு வந்துள்ளீர்கள் என்பதெல்லாம், அப்பனே, நிச்சயம் யான் செப்புவேன்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, நிச்சயம், தந்தை யான் இருக்கின்றேன். அப்பனே,
குருநாதர் :- அப்பனே, நன்முறைகளாகவே.
===========================
# தந்தைக்கு என்ன தேவை ?
===========================
குருநாதர் :- அப்பனே, இங்கு மீண்டும் சொல்கின்றேன். எந்தனைக்கு என்ன தேவை என்று?
அடியவர் :- அன்பு
===========================================
# அன்பை மிஞ்சியது உலகத்தில் ஏதுமில்லை
===========================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அதையே போதும். அப்பா, அப்பனே, பின் உலகத்தில் இதைவிட, அப்பனே, பின் மிஞ்சியது ஏதுமில்லை. அப்பா,
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, எனக்கு தேவையில்லை. அப்பா, அபிஷேகங்கள், ஆராதனைகள், அப்பனே, பிரசாதங்கள், அப்பனே, ஒன்றுமே தேவையில்லை. அப்பா, அப்பனே, அன்புதான் தேவை. முதலில்
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, உன் மகன், அப்பனே, இறந்தவருக்கு கூடியவன். அப்பனே, காப்பாற்றிவிட்டேன் அப்பனே.
குருநாதர் :- ஆனாலும் அப்பனே, நிச்சயம், காசுகள் கொடுத்திருந்தால், அப்பனே, உன் மகனை நீ பார்த்திருக்க முடியாது. அப்பா, சொல்லிவிட்டேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, எது என்று மரியாதை? அப்பனே, பின் அனைத்தும் நீங்கள் செய்த தவறுகள் தான் என்பேன். அப்பனே,
அடியவர்:- கண்டிப்பாங்க.
குருநாதர் :- அப்பனே, எவை என்று புரிய புரிய? அப்பனே, நிச்சயம், அப்பனே, உன்னிடத்தில் காசுகள் இருந்தது. அப்பா, அப்பனே, பின் ஒரு மாந்திரவாதியும் கூட. அப்பனே, இவனிடத்தில் நிறைய காசுகள் இருக்கின்றது. இவனை பிடித்து விட்டால், நம் தனக்கு அனைத்தும் வந்துவிடும் என்று, அப்பனே, மாந்திரீகம் செய்துவிட்டான் அப்பா. இதனால் காசுகள் அனைத்தும் சென்றுவிட்டது என்பேன். அப்பனே, அப்பனே, பின் அதனால்தான், அப்பனே, முதலில் அறிவுரைகள் கொடுத்துவிட்டால், அப்பனே, நிச்சயம், இவையெல்லாம் பொய் (என்று நீ உணர்வாய்).
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய புரிய ஆனாலும், அப்பனே, இப்படித்தான். அப்பா, நிச்சயம், அப்பனே, பின் பல பல வழிகளிலும் கூட. அப்பனே, எவை என்று அறிய அறியா? அப்பனே, அதாவது, பின் பணம் அவனுக்கே தேவைப்படும் என்பேன் அப்பனே. இதனால் என்ன செய்வது என்று புரியாமல், நிச்சயம், இவ்வாறு ஆன்மீகத்தில் இறங்கி, பணத்தை பிடுங்குவான். அப்பா. அது போல தான் , அப்பனே, ஒருவன் நீ மாட்டிக்கொண்டாய். அப்பா,
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், நிச்சயம், அறிந்தும் அறிந்தும் கூட. இதனால், அப்பனே, பின் நிச்சயம், யானே மாற்றுகின்றேன் அப்பனே. நீ எதையும் கேட்டு விடாதே. வரும் காலத்தில்
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட, எதை என்று புரிய புரிய. பின் மீண்டும், அப்பனே, அனைவருக்கும் சொல். எழுந்திரு அப்பனே.
அடியவர் :- ( நவகிரக தீபத்தை அனைவரும் ஏற்றுங்கள் என்று சொன்னார் )
குருநாதர் :- அறிந்தும் எது என்று அறியா. அதாவது, பின் அப்பனே, அனைத்தும் சொல்லிவிட்டேன்.
=================================================
# இதுதான் பரிகாரம் என்பேன். அப்பனே, அனைவருக்குமே……
=================================================
=================================================
# அகத்திய மாமுனிவரை உங்கள் தந்தையாக ஏற்றுக்கொண்டு அன்பை செலுத்துங்கள்
=================================================
=================================================
# இதுதான் பரிகாரம் என்பேன். அப்பனே, அனைவருக்குமே…..
=================================================
குருநாதர் :- நிச்சயம், அப்பனே. அதாவது, நிச்சயம், அறிந்தும் கூட, நிச்சயம். அதாவது, தந்தையாக என்னை ஏற்றுக்கொண்டு, அப்பனே, அன்பை செலுத்துங்கள். அப்பனே, இதுதான் பரிகாரம் என்பேன். அப்பனே, அனைவருக்குமே
குருநாதர் :- இதை விட்டுவிட்டு, நிச்சயம், பின் தெரியாமல் கேள்விகள் கேட்டு, கேள்விகள் கேட்டால், அடுத்த வாக்கு நிச்சயம் வராது என்பேன்.
குருநாதர் :- தாயே. எதை என்று புரிய? நிச்சயம், விதி தன்னில் கூட பல பிரச்சனைகள் சூழ்ந்து நிற்கின்றது. தாயே, அவையெல்லாம் யாராலும் நீக்க முடியாது. தாயே, ஆனாலும், நிச்சயம் என்னை நாடி வந்துவிட்டாய். யான் நீக்குகின்றேன்.
குருநாதர் :- எப்படி? யார் மூலம்? பின் என்ன செய்ய வேண்டும் என்று இதே போலத்தான். அப்பனே, அனைவருக்கும் கூட, அப்பனே, நிச்சயம், விதியில் என்ன உள்ளது என்பதை எல்லாம், பின் நிச்சயம் தெரியுமப்பா. அதனால், அப்பனே, என்னிடத்தில் வந்துவிட்டால், அப்பனே, யார் மூலம் எதை செய்ய வேண்டும்? எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது, குழந்தை போல் யான் பார்த்துக் கொள்வேன். அப்பா, நிச்சயம், நீங்கள் கேட்க தேவையே இல்லை.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், பின் எவை என்று அறிய. அப்பனே, நீங்கள் கேட்பதெல்லாம், அப்பனே, அறிந்து கூட. அதனால், அப்பனே, உங்கள் மீது தவறு இல்லை என்பேன். அப்பனே, உங்களை, உங்களை, அப்பனே, அப்படி ஆக்கிவிட்டார்கள் என்பேன். அப்பனே, என்னை ஜோதிடன் என்று நினைத்து விட்டார்கள் அனைவருமே
குருநாதர் :- அதனால், நிச்சயம், எதைப் பற்றியும் எவை என்றது அறிய. பின், நிச்சயம், பின் தந்தைக்கு, நிச்சயம், மரியாதை அளியுங்கள். போதுமானது, நிச்சயம், பின் அளியுங்கள். என்றும் இங்கு யான் சொல்ல மாட்டேன்.
குருநாதர் :- தாயே, நிச்சயம், பின் உலகம் எதை என்று அறிய. கிரகங்கள், நிச்சயம், நகர்ந்து சென்றால், அனைவருக்குமே கஷ்டங்கள் தான். நிச்சயம், அறிந்தும் ஒவ்வொரு விதத்திலும் கூட நோய்கள் வந்துவிடும். நிச்சயம், பின் ஒவ்வொரு ஒருவர், நிச்சயம், நிம்மதி, இன்மை, நிச்சயம், தோக்க இன்மை, இவையெல்லாம் வந்துவிடும். ஆனால் அனைவருக்குமே யான் சரி செய்து விடுகின்றேன்.
குருநாதர் :- தாயே, அறிந்து கூட, மின்சாரம் தொட்டால் என்ன ஆகும்? நீ கூறு.
சுவடி ஓதும் மைந்தன் :- மின்சாரத்தை தொட்டால் என்ன ஆகும்? சாக்கடிக்கும்.
குருநாதர் :- தாயே, சித்தர்களை, நிச்சயம், தொட்டால் இப்படித்தான். ஆனாலும், உங்களுக்காக யாங்கள் பின் இறங்கி வந்து, பின் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அவ்வளவுதான். இதில், நிச்சயம், நீங்கள், நிச்சயம், பின் அறிந்து கூட. பின், அதாவது, நீங்கள் பின் கேள்விகள் கேட்டால், நிச்சயம், இங்கு எவை என்று அறிய. பின், எதை என்று புரிய? சித்தர்கள், பின் பொய்யாகி விடுவார்கள்.
========================================
# அனைத்துமே யான் வழி நடத்துகின்றேன்
========================================
குருநாதர் :- இன்னும் இன்னும் சிறப்புகள் உண்டு. பின், அனைத்துமே யான் வழி நடத்துகின்றேன். சிலருக்கு, நிச்சயம், சில மாந்திரவாதிகளாலும், பின் தொல்லைகள். பின், அவற்றுக்கெல்லாம் யானே விலக்கம் அளித்து, பின் நன்முறை படுத்துகின்றேன்.
குருநாதர் :- நன்முறைகளாகவே சிலருக்கு சில சில வகையில் கூட பிரச்சனைகள். பின், யாம் அறிவோம். அனைத்தும், நிச்சயம், பின் ஏதோ ரூபத்தில் வந்து, அனைத்தும் தீர்த்து வைப்போம்.
குருநாதர் :- அறிந்தும் எது என்று புரிந்தும் கூட, அனைத்தும் யாம் யாங்களே அறிவோம்.
குருநாதர் :- எது என்று புரியாது. யாங்கள் சொல்வதை, நிச்சயம், அறிந்தும் நீங்கள் அப்படியே சென்று கொண்டிருந்தால், விதியின் பாதையும் யாங்கள் சொல்வோம்.
குருநாதர் :- அப்பனே, நல்விதமாகவே அனைவருக்கும் அப்பனே. பின் அறிந்து கூட அனைத்தும் செப்பிவிட்டேன். அப்பனே, நிச்சயம் இதை செய்துவிட்டு, பின் நிச்சயம் செய்து கொண்டிருந்தாலே, அப்பனே, அதி விரைவிலே, அப்பனே, இன்னும், அப்பனே, பின் அதாவது, பின் ஒரு மாதம் அல்லது இரு மாதத்திற்குள்ளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் உண்டு. அப்பொழுது அனைத்தும் பின் சொல்கின்றேன். இன்னும் கூட, அப்பனே.
ஆசிகள்!!
ஆசிகள் அப்பா!!
போதும். அப்பா!!
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய பெங்களூர் சத்சங்கம் வாக்குகள் - நிறைவு அடைந்தது. )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment