அன்புடன் முருகப்பெருமான், போகர் சித்தர் அருளிய திருவண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு -
நாள் - 31.08.2025 ஞாயிற்றுக்கிழமை. காலை 8 மணி - மாலை 6 மணி வரை. வாக்குரைத்த ஸ்தலம் :- ராஜா ராணி மஹால் , அவலூர் பேட்டை பை பாஸ் ஜங்ஷன் அருகில் , திருவண்ணாமலை.
(அடியவர்கள் பின் வரும் கூட்டுப் பிரார்த்தனை நாடி வாக்கு YouTube வீடியோவை இயக்கி , அதனுடன் இந்த பாடல் வடிவமான வாக்கினை படிக்க நன்கு புரிதல் உண்டாகும்.
https://www.youtube.com/watch?v=NHHNnQ4laao&t=0h1m10s )
====================================================
# போகர் சித்தர் வாக்கு #
====================================================
பாரெங்கும் அருள் ஈயும் , ஈசா, போற்றியே! பார்வதி தேவியே, போற்றியே!
நிச்சயம், மனிதன் அறிந்தும், அறியாமலும் என்னென்ன சில தவறுகள் அறிந்தும் புரியாமலும் செய்தாலும், நிச்சயம் முருகா, மைந்தா, ஓடோடி வந்து, நிச்சயம் நீ இறங்கினால் மட்டுமே, நிச்சயம் உன் தாய் தந்தையரும் அறிந்தும் புகழ்பாடி, நிச்சயம் பின் மகிழ்ந்து சில மனிதர்களிடையே பாவக்கணக்கு அதிகமாக இருப்பதினாலே, அதையும் நீக்கிட, நிச்சயம் வா, வா, முருகா!
ஓடோடி வந்து, உன் தாயையும் தந்தையையும் மகிழ்வித்து, ஆசிகள் கொடுப்பாயாக, முருகா! வா.
====================================================
# முருகப்பெருமான் வாக்கு #
====================================================
பாரெங்கும் வீற்றிருக்கும் தாயை, தந்தையை பணிந்தே , உன் பிள்ளைகளுக்காகவே உந்தனை வரவேற்கின்றேனே. ஆசிகள் கொடு.
பிள்ளைகள், தவறுகள் செய்திருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு, புண்ணிய கணக்கு அதிகமாக்கு தாயே, தந்தையே.
அண்ணாமலையா, உண்ணாமலை தாயே, பின் உன்னை வாழ்த்தி பாடுகின்றேனே .
====================================================
# முருகப்பெருமான் பாடல் #
====================================================
அன்பென்றும் அறியாத தந்தையே,
அன்பென்றும் அறியாத அன்னையே ,
உன்னையே என்றென்றும் பாடி துதித்து,
உன்னையே என்றென்றும் பாடி துதித்து,
அன்பான என்றென்றும் சேவை செய்தார்களே உன் பிள்ளைகள்
நமச்சிவாயா என்றென்றும் அழைத்தார்களே உன்னையே
அதற்காக மனதில் பாவங்கள் தொலைப்பாயே,
அன்னை தந்தையே, வருவாயே, வருவாயே !
அன்னை தந்தையே, வருவாயே, வருவாயே !
===========================================================================
# கூட்டுப்பிரார்த்தனை - வர இயலாமல் உள்ள அடியவர்களுக்கும் ஆசிகள் #
===========================================================================
என்றென்றும் உன் பிள்ளைகள் உன்னை தேடி வந்து நிச்சயம் தன்னில் அங்கங்கு இருக்கும் வரமுடியாமல் நின்றாலும் அப்பா,
அப்பா, தந்தையே, என்றெல்லாம் நினைத்து நினைத்து , பின் உருகுகின்ற மனிதர்கள், (அவர்களுக்கும்) ஆசிகள் கொடுக்க. வா, வா!
என் தந்தையே, வா! வா!
என் அன்னையே , வா! வா!
எத்தனை பாவங்கள் செய்தாலும்,
எத்தனை பாவங்கள் செய்தாலும்,
அதை தன் பின் குறையாக நினைத்தாலும்,
அதையும் தீர்ந்தாலும், நீக்கிடு
தந்தையே, நீக்கிடு , நீக்கிடு !
தந்தையே, நீக்கிடு , நீக்கிடு !
எப்பொழுதும் உனை நாடி வந்திட்டு
எப்பொழுதும் உனை நாடி வந்திட்டு
பின் என் தந்தை, பின் அன்றென்றும், என்றென்றும், அனைத்தும்,
பின் செய்வாய் என்றென்றும், ஓடோடி வந்து,
அனைத்தும் பின் தந்தையே, செய்வானே என்று
மனிதன் பின், உன்னையே நினைத்து இருக்கின்றான்,
மனிதனே, உன்னையே நினைத்து இருக்கின்றான்.
சிறிது பாவத்தை தொலைத்தாலே போதும்,
சிறிது பாவத்தை தொலைத்தாலே போதும்.
அறிவு ஒன்று வெளிப்படும் தந்தையே,
அறிவு ஒன்று வெளிப்படும் தந்தையே,
================================================================
# அடியவர்கள் புண்ணியக் கணக்கை அதிகரிக்க வேண்டுதல் #
================================================================
அவ் அறிவை நீ வைத்தும் தானே , புண்ணியக் கணக்கை, இன்னும் கூட்டிட்டு கூட்டிட்டு, அவர்களே செல்வார்கள் தந்தையே,
அவர்களே கொண்டு செல்வர்களே புண்ணியத்தை ,
அருள் கூர்ந்து தா தா தந்தையே,
அன்னை பராசக்தி வடிவமாக வருக,
அன்னை பராசக்தி வடிவமாக வா, வா!
என் அன்புத் தாயே,
என் அன்புத் தாயே,
உன்னையே நம்பி வந்து, வந்து
உன்னையே நம்பி வந்து, வந்து.
என் தாயே குறை தீர்ப்பாள் என்று எண்ணி ,
என் தாயே குறை தீர்ப்பாள் என்று எண்ணி ,
உன்னையே நம்பி நம்பி, ஓடோடி மனிதன் வந்து வந்து,
தாயே, தந்தையே, உன்னையே வலமாக சுற்றுகின்றான்
மனம் இறங்கு, தா தா,
அருள்கள் மனம் இறங்கி வந்து , தா தா, அருள்கள் தா தா.
================================================================
# அடியவர்கள் பாவ கணக்கை பிடுங்கி எறிய வேண்டுதல் #
================================================================
அருள் கூர்ந்து , அருள் கூர்ந்து , ஈயும் தந்தையே,
அனைத்தும், ஈயும் தந்தையே.
பாவ கணக்கை ஏதும் இருந்தாலும்,
அதனை பிடுங்கி தானே எறிவாயே தந்தையே,
உன்னாலே அனைத்தும் முடியும், தந்தையே,
உன்னாலே அனைத்தும் முடியும், தந்தையே.
தாயே, வருக, வருக.
தந்தை கோபம் இருந்தாலும், தாயே, வருக,
நீயும் சொல்லி, தா தா.
=============================================================
# திருவண்ணாமலை அழிவை தடுக்க வேண்டுதல் #
=============================================================
தாயே வருக !
தந்தையே, வருக !
இம் மலையே பின் அழியப் போகின்ற நிலையத்தில்
பின் அண்ணாமலை, உண்ணாமலை என்று இத்தலம் இல்லாமல் போகுமே
என்றென்றும், அப்பொழுது ஈசன் தலத்திலே இப்படி நடந்ததே என்று கூறுவார்கள் தந்தையே,
அதற்குள்ளே மனிதனின் பாவத்தை தூரே எறிந்து
அறிந்தும் தந்தையே எத்தனை மனிதனிடத்தில் குறைகள் இருந்தாலும்,
அத்தனையும் முடிவு கட்டு,
அத்தனையும் முடிவு கட்டு, கட்டு,
தந்தையே, வா, வா.
தாயே. வா, வா!
=============================================================
# மக்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டுதல் #
=============================================================
அனைத்தும் உன் பிள்ளைகள் தானே தந்தையே
அனைத்தும் உன் பிள்ளைகள் தானே தந்தையே
தாயே நீயும் தந்தையிடம் கூறு ,
எத்தனை கோபங்கள் இருந்தாலும் தாயே,
அத்தனையும் விட்டிட்டு,
மக்களை காப்பாற்ற வரச்சொல் தாயே,
மக்களை காப்பாற்ற வரச்சொல் தாயே,
அறிந்தும் அறியாமலும் இன்னும் கூட மாதங்கள் பெரும் அழிவு காத்துக் கொண்டிருக்கிறது
அன்னையே , தந்தையே நீயே அதை தானே அறிவாயே
அனைவரும் உன் பிள்ளைகள் தானே
அதை நீ கூட பின் அழித்து எதை என்று பாரு,
அதை தன் தடுத்து நிறுத்தி, அதிர்ஷ்ட வாய்ப்பு பெருக்கும் தந்தையே !!!
அதிர்ஷ்ட வாய்ப்பு தந்தை பெருக்குவானே !!!
தாயே தாயே, வா, வா!
அன்பு நிறைந்தவளே வா, வா!
பணிகின்றேனே, பணிகின்றேனே.
மக்களுக்காக யான் பணிகின்றேனே,
==================================================================
# திருச்செந்தூர் வரும் பக்தர்களின் பாவத்தை போக்க வேண்டுதல் #
==================================================================
மக்களுக்காக யான் பணிகின்றேனே.
நிச்சயம் செந்தூருக்கு என்னை தேடி வந்து.
நிச்சயமாக, செந்தூருக்கு என்னை தேடி வந்து.
பாவங்கள் நீக்கு முருகா என்று சொன்னார்களே,
அங்கும் மிகுந்த பாவத்தை கொண்டு வந்தார்களே,
அதையும் நீங்கள் தானே நீக்க வேண்டும்,
அதையும் நீங்கள் தானே நீக்க வேண்டும்.
முடிவெடுங்கள் தந்தையே !!!
தாயே முடிவெடுங்கள் தந்தையே !!
அன்னைக்கும் தாய்க்கும் என்ன வித்தியாசம் ?
இதனை கூட அறியாத மனிதன் இங்கு இருந்தாலும்,
அதனையும் நீ உணர்த்திடு தாயே.
என்னென்ன லீலைகள் எதனை புரிந்தாரோ
என்னென்ன லீலைகள் எதனை புரிந்தாரோ
அன்னையே, வருக, வருக.
தந்தையிடம் கூறு, கூறு, கூறுக.
எத்தனை, எத்தனை பிறவி இருந்தால், மனிதனுக்கு
அத்தனை பிறவிகள், பின் சந்தோஷமாக வாழ முடியவில்லையே,
சந்தோஷமாக வாழ முடியவில்லையே.
தாயே, தந்தையே, உன்னை நம்பியோர்க்கு .
தாயே, தந்தையே, உன்னை நம்பியோர்க்கு
கஷ்டங்கள் தானே வந்த வண்ணம்,
அதையும் தானே, தானே உணர்ந்தேனே.
அதையும் யானே உணர்ந்தேனே.
நீங்கள் தானே அதையும் பின் பின் பொறுத்தாக வேண்டும், தந்தையே.
அதை கூட மாற்ற, மாற்றோடு வா, வா,
=============================================================
# விதியின் சதியாட்டம் - அதனை முறியடிக்க வேண்டுதல் #
=============================================================
அன்னையே, எத்தனை விதியின் சதியாட்டம் மனிதனுக்கு.
எத்தனை விதியின் சதியாட்டம் பின் மனிதனுக்கு.
தந்தையே, பிரம்மாவிடம் , முறையிடு
தந்தையே, பிரம்மாவிடம் , முறையிடு
சிறிதாவது கலியுகத்தில் நல்லதே பின் நடக்கட்டுமே மனிதனுக்கு
சிறிதாவது நல்லதே நடக்கட்டுமே மனிதனுக்கு
என்றென்றும் இருக்கும், தந்தையே.
அழியாத தந்தையே,
அழககாக தந்தையே.
கருணை வடிவான தந்தையே.
பாசமிகு தந்தையே.
கோபத்தை மனிதனிடம் காட்டாதே,
உன் கோபத்தை மனிதனிடம் பின் காட்டாதே,
அவர்களும் பின் தாங்க மாட்டார்கள்
அவர்களும் பின் தாங்க மாட்டார்கள்
விதியில் எத்தனை, எத்தனை போராட்டம்.
விதியில் எத்தனை, எத்தனை போராட்டம்.
அவையே தாங்க முடியவில்லை , மனிதனாலே,
அவையே தாங்க முடியவில்லை , மனிதனாலே,
நீயும் கஷ்டத்தை அள்ளி அள்ளி கொடுக்கின்றாயே, தந்தையே.
நீயும் அள்ளி அள்ளி கொடுக்கின்றாயே, தந்தையே.
அனைத்தும் உணர்ந்தும், தந்தையே.
எதோ , தெரிந்தும் தெரியாமல் பிறப்பில் விட்டிட்டே.
இனி மேலும் காத்தருள்வாயே, தந்தையே.
இனி மேலும் காத்து காத்தருள்வாய், தந்தையே.
மனிதனை திருத்தவே சித்தர்கள் இருக்கின்றார்கள்.
மனிதனை திருத்தவே சித்தர்கள் இருக்கின்றார்கள்.
பின் அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளை பொறுத்துக்கொண்டு பின் அருள் ஆசிகள் கொடுப்பாயே , அன்னையே,
அருள் ஆசிகள் கொடுப்பாயே , அன்னையே,
தந்தையிடம் எடுத்துக்கூறும் அன்னையே,
தந்தையிடம் எடுத்துக்கூறும், அன்னையே.
அனைத்தும் மாற்று, மாற்று,
உன்னையே கதியென்று எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்.
உன்னையே கதியென்று எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்.
நமசிவாயா, நமசிவாயா என்று உன்னையே பாசத்தோடு , அழைத்துக் கொண்டு இருக்கின்றானே மனிதன்,
தந்தையே நமச்சிவாய என்று அழைத்துக் கொண்டு இருக்கின்றானே உன்னையே.
=============================================================
# மக்களுக்கு அறிவைத் தந்து, பாவத்தை போக்க வேண்டுதல் #
=============================================================
அப்பேர்ப்பட்ட மனிதனுக்கு இறங்கி வா தந்தையே
எத்தனை குறைகளும் இருப்பினும்,
ஒரு எத்தனை குறைகளும் தானே இருப்பினும்,
சிறிதாவது , அறிவை தந்திட்டு, தந்திட்டு,
சிறிதாவது பாவத்தை போக்கு
சிறிதாவது பாவத்தை போக்கு
அதன் மூலம் தெளிவு அடைவான்,
அதன் மூலம் தெளிவு அடைவான்,
தெளிவு அடைந்துவிட்டாலே, நிச்சயம் தன்னில் பின் தீயவை நடக்காது, நடக்காது.
இதுதானே யான் பொறுப்பு , தந்தையே.
இதுதானே யான் பொறுப்பு , தந்தையே.
என்னிடத்தில் வந்து உறங்கின்றோர்க்கெல்லாம் புலம்பல் புலம்பல் புலம்பல்
திருச்செந்தூரிலே, ஒருவனையும் ஒருவனையும் பார்க்கின்றேன் தந்தையே
உறங்கியும் தானே வந்து வந்து , குழம்பி நிற்கின்றானே தந்தையே.
குழம்பி நிற்கின்றானே , தந்தையே.
பின் என்னாலும் விதியை மாற்றமுடியும் தந்தையே
ஆனாலும் பின் அனைத்தும் அறிந்தவர் , தந்தையே.
நீயும் அனைத்தும் , அறிந்தவரும் பின் தந்தையே.
பெரியோனே பெரியோனே !!!
=============================================================
# பாவ வினை இனிமேலும் அண்டாமல் இருக்க - வேண்டுதல் #
=============================================================
அன்னை பராசக்தியே !!!
தந்தையிடம் எடுத்து கூறு, எடுத்து கூறு.
பாவ வினை இனிமேலும் அண்டாமல் பார்க்க சொல்கின்றேன்..
சித்தர்களை பார்க்க சொல்கின்றேனே….
இனிமேலும் எத்தனை, எத்தனை அழிவுகள் என்று சித்தர்கள் உணர்ந்தார்களே
என்னையும் வந்து, தந்தையிடம் நீ முறையிட்டு கூறு என்று முருகா
தந்தையிடம் முறையிட்டு கூறு என்று முருகா .
சித்தர்கள் வந்து, பின் அனைவரும் என்னிடத்தில் செப்ப, செப்ப.
தாயே, தந்தையே, சிலர் என்னிடத்தில் மனிதர்கள் வந்து, வந்து கொண்டே இருக்கையில்
அவர்களுக்கும் புத்தியை மட்டும் யான் கொடுக்கின்றேன்
அதிர்ஷ்ட வாய்ப்பை நீயே அள்ளித்தருவாயே
தந்தையே தாயே
உன்னை,
அண்ணாமலை உண்ணாமலை, என்று ஓடோடி வருகின்றார்கள் உன்னிடத்திலே
அண்ணாமலை உண்ணாமலை காப்பாற்றுவார்கள் என்று ஓடோடி வருகின்றார்கள் தந்தையே
எப்படி நீயும், வணங்காமல் போனாலும் நிச்சயம் தன்னில் ஒரு முறையாவது , ஒரு முறையாவது மனிதனுக்கு சந்தர்ப்பத்தை கொடுப்பாயாக ஈசனாரே
சந்தர்ப்பத்தை கொடுப்பாயாக ஈசனாரே
அனைத்தும் உன்னிடத்தில், எவ்வாறு எவ்வாறு,
மண்டியிட்டு, மண்டியிட்டு கேட்கின்றேனே.
மனிதனுக்கு ஒன்றும் தெரியவில்லை , தந்தையே,
மனிதனுக்கு ஒன்றும் தெரியவில்லை , தந்தையே,
அனைத்தும் தெரிந்திருந்தால் ,
அனைத்தும் தெரிந்திருந்தால் ,
தந்தையே, மனிதன் தவறு செய்ய மாட்டானே,
தந்தையே, தவறு செய்ய மாட்டானே,
அழிவுகளிலிருந்து காத்திட வா, வா !!!!!
அழிவுகளிலிருந்து காத்திடு வா, வா, தந்தையே !!!!!
அன்னையே, பராசக்தியே
அன்னையே, பராசக்தியே
மண்டியிட்டு உன்னையே கேட்கின்றேன் நிச்சயம் தன்னில்
தந்தையிடம் எடுத்துக்கூறி , எடுத்துக் கூறி தாயே,
என் அன்புத் தாயே, தாயே,
தந்தையிடம் பின் எடுத்து கூறி, கூறி, மக்களை காப்பாற்ற சொல்லு ,
தந்தையை , மக்களை காப்பாற்ற சொல்லு ,
வரும் காலத்தில் அழிவுகள் பலம் என்று, பலம் என்று, வந்து கொண்டிருக்கின்றதே
சித்தர்களும் தந்தைக்கு பயந்து, பயந்து, அப்படியே நிற்கின்றார்
என்னிடத்தில் முறையிட்டு, முறையிட்டு,
முருகா!! முருகா!!
அன்னையிடம், தந்தையிடம் கேளு !!
என்றென்று நிச்சயம் தன்னில் தாயே, தந்தையே, யானே பொறுப்பு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தாயே, தந்தையே, யானே பொறுப்பு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
=============================================================
# மனிதருக்கு தலையெழுத்து மாற்ற - வேண்டுதல் #
=============================================================
நிச்சயம் தன்னில் சில மனிதருக்கு, தலையெழுத்து மாற்று தந்தையே !!!
உன்னை போல் இங்கு கருணை படைத்தவர் எவர் ??????
பின் விதியினை உன்னாலும் எல்லாம் மாற்ற முடியும்,
காத்தருள்வாயே, காத்தருள்வாயே,
தந்தையே, தாயே, காத்தருள்வாயே,
அழிவுகளிலிருந்து காத்தருள்வாயே, தந்தையே.
உன்னை நம்பியே நம்பியே,
கிரிவலம் வந்து கொண்டிருக்கிறார்களே
அவர்களும் உந்தனை பணிந்து, பணிந்து, வருகின்றாரே !!!
=============================================================
# புண்ணியத்தை அள்ளி அள்ளி தர, வேண்டுதல் #
=============================================================
புண்ணியத்தை அள்ளி அள்ளி, தா தா , தந்தையே,
புண்ணியத்தை பின் அள்ளி அள்ளி, தா தா , தந்தையே,
என்றென்றும் உன்னையே நம்பி இருப்போர் பல மக்கள்
உலகிற்கும் நிச்சயம் பஞ்சம் வந்து விடுகின்றதே… உலகத்தில்
அதையும் போக்கிட வா வா !!!
மனிதனால் அனைத்தும் அழிவுகள், என்று அனைத்து சித்தர்களுக்கும் தெரியும்
நீயே விளையாடுகின்றாய்,
தந்தையே, நீயே விளையாடுகின்றாய்.
நிச்சயம் சிறிதாவது இடையே நிமித்திட்டு , அப்பிடவே நீ மக்களை ,
சித்தர்கள் பின் திருத்திடுவார்கள், தந்தையே,
=============================================================
# உண்ணாமலை தாயிடம் வேண்டுதல் #
=============================================================
தாயே, உண்ணாமலையவளே !!!
அன்பாலே அழைக்கின்றேனே !!!
மண்டியிட்டு அழைக்கின்றேனே தாய் தந்தையே !!!
என் மக்கள் அனைத்தும் அறிந்தும் கூட,
அனைவரும் தானே, நம் மக்கள் தானே, தந்தையே,
அனைவரும் நம் மக்கள் தானே, தாயே , தந்தையே,
நீயும் கூட இப்படியே அழிவிற்கு சென்றால்
எப்படி, எப்படி, வாழ்வது ?????
மண்டியிட்டு கேட்கின்றேன் !!!!!!!!!!!!!!!!!!!!!
உன் பக்தர்களை நிச்சயம் யானே திருத்துகின்றேன் எப்படியோ
பின் உன்போல் கருணை படைத்தவரே,
எவரோ எவரோ அண்ணாமலை தந்தையே !!
எவரோ எவரோ அண்ணாமலை தந்தையே !!
உண்ணாமலை அம்மா அம்மா !!
எத்தனை எத்தனை மனிதர்களுக்கு துன்பம் வாழ்க்கையில்
எத்தனை, எத்தனை துன்பங்கள்
எப்படியோ தந்தையிடம், பின் நீக்கிட, வா, வா,
அருள்வாய், அருள்வாய், அருள்வாய், அன்னையே,
மனமிறங்கி, வா வா, வா வா, வா வா,
தந்தையிடம் பின் முறையிட்டு சொல்லு தாயே,
=============================================================
# மக்கள் , கோடி கோடியாக அழிவதைத் தடுக்க வேண்டுதல் #
=============================================================
தந்தையிடம் முறையிட்டு சொல்லு தாயே,
வரும் காலத்திலே, கோடி கோடியாக அழிவார்கள், என்பது தந்தைக்கு தெரியுமே,
அதையும் கூட நிற்கச் சொல்லு, நிற்கச் சொல்லு,
=============================================================
# அகத்திய மாமுனிவருக்காக மனமிறங்க வேண்டுதல் #
=============================================================
அகத்தியன் வாக்கைக் கேட்டு, அனைவரும் மண்டியிட்டு,
பின் அறிந்தும் உள்ளம், உன்னை போற்றி போற்றி , திருத்தி, திருத்தி, அறிந்தும் புரிந்தும்
மக்களை திருத்தி, திருத்தி, அகத்தியன் பின் போராடி இருக்கின்றாரே, தந்தையே,
அகத்தியருக்காக மனமிறங்கு, மனமிறங்கு,
நிச்சயம் எதையும் நிச்சயம் தன்னில் ,
அத்தனையும் மனிதனுக்கு கொடு கொடு, கொடு கொடு,
தந்தை, தாயே, என்றென்றும் நீங்களே, பின் அழிவற்றவர்கள்
எத்தனை, எதையும் உணர்ந்த பின்னும்,
எத்தனை, எத்தனை கோடி மக்கள்,
எத்தனை, எத்தனை கோடி மக்கள்.
அவர்கள் எல்லாம் நின் தாளை பணிந்து, உணர்வுள்ளம் இங்கேயும் நின்று.
அறிந்து, பின். தாயே, எத்தனை என்று தந்தைக்கு முறையிட்டு கூறு கூறு,
நன்றென்று, தாயே, தந்தையே,
மண்டியிட்டு கேட்கின்றேன், உந்தன் செல்லப் பிள்ளையே முருகனே,
இறங்கி வாருங்கள், தாய், தந்தையரே,
இறங்கி வாருங்கள், தாய், தந்தையரே,
அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் கொடுத்திட்டு.
அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் கொடுத்திட்டு,
இன்னும் இவர்களும் மேன்மேலும் மக்களை நிச்சயம் நல்வழிப்படுத்துவார்களே,
இன்னும் மக்களை இவர்கள் நல்வழிப்படுத்துவார்களே,
எத்தனை சிறுக, சிறுக, சேர்த்து, சேர்த்து, சேர்த்து, இன்னும் பெருமக்கள் கூட்டிட்டு, கூட்டிட்டு,
பாவ வினையை நீக்குவார்களே ,
பாவ வினையை நீக்குவார்களே ,
மண்டியிட்டு கேட்கின்றேனே, தந்தையே,
மண்டியிட்டு கேட்கின்றேனே, தந்தையே,
அன்னையே, தந்தையிடம் சொல் சொல், சொல் சொல்,
அன்னையே, தந்தையிடம் சொல், சொல், சொல், சொல், சொல்,
எத்தனை, எத்தனை பிறவிகள் கடந்த மக்கள்,
இப்பிறப்பில் இன்பம் காணட்டுமே கலியுகத்திலே
இன்னும் ஆசிகள்
என் அன்னையும், என் தந்தையும் மனமிருக்குவார்கள்.
உங்களுக்கே புரியும்,
பின் கருணை படைத்தவர் எவரெவர் , உங்களைப் போலே.
====================================================
# முருகப்பெருமான் பாடல் நிறைவு ! #
====================================================
====================================================
# முருகப்பெருமான் ஆசி வாக்கு ! #
====================================================
ஆசிகள்.
அறிந்தும், தாய், தந்தையரே, பின் அனுகி , பின் உங்களுக்கெல்லாம் ஆசீர்வாதங்கள்.
இதனால் அறிந்தும், புரிந்தும், நிச்சயம் சில குறைகளை என் தாயே, தந்தையே, நீக்குவாள்.
இன்னும் மென்மேலும் பெருகட்டும், மக்கள் வெள்ளம் அறிந்து கூட,
பக்தி பரவசத்தில் பெருகட்டும்,
பின் பாவங்கள் நீக்கட்டும்,
புண்ணியங்கள் அருளட்டும்,
புண்ணியத்தால் நல்வாழ்வு பெருக,
ஆசிகள், ஆசிகள்.
====================================================
# முருகப்பெருமான் ஆசி வாக்கு நிறைவு ! #
====================================================
ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete