அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் இடைக்காடர் சித்தர் உரைத்த வாக்கு - பகுதி 4
31.08.2025 - திருவண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.- பகுதி 4
=======================================================
=======================================================
# திரு அண்ணாமலையார் - திருவிளையாடல் ரகசியம் #
=======================================================
=======================================================
இடைக்காடர் சித்தர் :- அப்பா , இவ் அண்ணாமலையில், பின் ஒன்று நடந்தது. உண்மை நிலையை யான் உரைக்கின்றேன் இப்பொழுது.
அன்பும். அறனும், அறிந்தும் புரிந்தும் கூட, இறைவா, எங்கும் நிறைந்திருக்கும் அன்பானவனே, ஈசனே, உன்னைப் பற்றியே, யான் இங்கு தெரிவிக்கப் போகின்றேன்.
மகள்களே, மகன்களே, அறிந்தும், நிச்சயம் அறிந்தும், (ஒரு செல்வந்தன்) இவைதன் பல செல்வங்களுக்கு அதிபதி. ஆனாலும், நிச்சயம் அறிந்தும், இவைதன், அதாவது, தற்பொழுது தில்லை தன்னிலே. ஆனாலும், இது எவை என்று புரிய.
(செல்வம்) அத்தனையும் நிச்சயம் பின் தில்லை தனக்கே சொந்தம் என்று வந்துவிட்டான் அண்ணாமலைக்கு. (அதாவது தனது செல்வம் அனைத்தும் எம்பெருமான் தில்லை நடராஜருக்கே என்று அனைத்தையும் தில்லையிலேயே விட்டு விட்டு வந்துவிட்டார் அந்த தில்லை செல்வந்தன், அண்ணாமலைக்கு)
அதாவது, நிச்சயம் எதை என்று புரிய. ஆனாலும், இவைதன் இங்கு, அதாவது, தற்பொழுது ஈசானிய லிங்கம் என்று அறிந்து, அங்கே பின் அமர்ந்து கொண்டான். நிச்சயம் வருவோர்கள் போவோர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனாலும், ஏன் இவர்கள் இவ்வாறு சுற்றித் திரிகின்றார்கள் என்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனாலும், இவ்வாறாகவே வருவார்கள், போவார்கள். ஆனாலும், நிச்சயம் இவனும் பார்த்துக் கொண்டே இருப்பான். பின், ஏன், எதற்கு என்று? ஆனால், அனைவரும் வருவோர்கள் எல்லாம், நிச்சயம் பின், ஏன் இவ்வாறு இவன் பார்க்கின்றான்? திருடன் போல் என்று, நிச்சயம் அவனை பின் ஏசி ஏசி விட்டு செல்வார்கள். அப்பா.
இப்படித்தான் அப்பா உலகம். நிச்சயம் உண்மை பேசுபவனை திருடன் என்பார்கள். பொய் பேசுபவர்கள் நல்லோர்கள் என்பார்கள் அப்பா. இதுதான் கலியுகம்.
இதுதான் கலியுகம். இப்படியே, நிச்சயம் அறிந்தும் புரிந்தும் , இப்படியே ஒருவன் நிச்சயம் இருந்தான். இதனால், பின் பார்வதி தேவியும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனாலும், நிச்சயம் இவன் கூட பார்ப்பவர்கள் எல்லாம் ஏதோ பின், அதாவது, நமச்சிவாயா, அருணாச்சலா என்றெல்லாம் கூட சொல்ல மாட்டான்.
நிச்சயம் பிதற்றிக்கொண்டே கொண்டே இருப்பான். அவை, இவை, எதை புரிந்து, எவை, என்று ஏதோ ஒன்றை பிதற்றிக்கொண்டே இருப்பான்.
ஆனாலும், மேலிருந்து. அதாவது, பின் பார்வதி தேவியும் கூட, ஈசனிடம் முறையிட்டாள். நிச்சயம் இவனும், அதாவது, என்ன ஏது, வருவோரெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கின்றான். நிச்சயம் ஓர் முறை இவனிடத்தில் சென்று வாருங்கள்.
தேவியே!! அறிந்து புரிந்து கூட, பின், அதாவது, செல்கின்றேன். இவன் பாசத்திற்காக.
அதாவது, (தானாக) மனித வடிவிலே, நிச்சயம் வந்து, நிச்சயம், அதாவது, சுற்றிக் கொண்டிருக்கின்றார்களே நிச்சயம் புரிந்து கூட, அதாவது, கால்களை மிதித்து சென்றான் ஈசன். (ஈசனார் மனித வடிவில் வந்து அருளினார் - திருவண்ணாமலையில் அதி மிக கவனம் தேவை. எவ் மனித வடிவத்திலும் எம்பெருமான் அண்ணாமலையார் வரக்கூடும் )
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அதாவது, ஆனாலும் (பக்தன்) அவனுக்கு தென் பட்டுவிட்டது, இவன் இறைவன் தான் என்று. ஆனாலும், இறைவனை பார்த்து, கண் தெரியாதவனே என்று கூறிவிட்டான்.
ஆனாலும், நிச்சயம் பின், ஈசன் கூட பார்த்தான். கண் தெரியாதவனே என்று. ஆனாலும், அவனுக்கும் தெரியும், ஈசன் என்று. ஆனாலும், வந்தது கோபம் பார்வதி தேவிக்கு. நிச்சயம் ஆனாலும், உன்னை கண்டு விட்டான் அவன் எதை என்று புரிய. ஏன் கண்டுவிட்டான் என்றால், நிச்சயம் ஈசன் என்று கண்டுவிட்டான்.
பின், ஏன், எது என்றால், அவனிடம் ஆசைகளும் இல்லை. நிச்சயம் எதுவுமே இல்லை. அதனால்தான், நிச்சயம் உன்னை கண்டு உணர்ந்தான் என்று.
அறிந்தும் புரிந்தும் , ஆனால் ஈசன் மீண்டும் பின் வலங்கள் வந்து மீண்டும் ஒரு மிதி மிதிக்கின்றான். அட, முட்டாளே! பின், கண் தெரியாதா என்று மீண்டும்.
அறிந்து புரிந்து, மீண்டும் வலங்கள் வந்து, நிச்சயம் அறிந்தும் , எதை என்று புரிய, மீண்டும் (பக்தன்) உறங்கிக் கொண்டிருந்தான். (பக்தன்) வயிற்றில் , ஏறி மிதிக்கின்றான் ஈசன். ஆனாலும் , எழுந்து பின், மீண்டும் கண் தெரியாதவனே, முட்டாளே, அறிவில்லாதவனே என்று (அவ் பக்தன்) திட்டித்தீர்த்தான் ஈசனை.
நிச்சயம் அப்பொழுது பார்வதிக்கு கோபம் வந்து, மீண்டும் கீழே வந்து விட்டாள். பின், தேவனை அறிந்தும், நிச்சயம் இவ்வளவு திட்டி தீர்க்கின்றானே, நிச்சயம் உங்களுக்கு கோபமே வரவில்லையா என்று?.
(எம்பெருமான் ஈசனாரும்) நிச்சயம் வரவில்லை. அவந்தனக்கு , நிச்சயம் எதை என்று புரிய எவ் ஆசையும் இல்லை.
எதனையும் அவை என்று புரிய,
#---------------------------------------------------------------------------------#
#---------------------------------------------------------------------------------#
““““““ அன்பான என் பக்தன் என்னை திட்டுகின்றான் என்றால், அதனையும் யான் ஏற்றுக்கொள்வேன். ””””””
#---------------------------------------------------------------------------------#
#---------------------------------------------------------------------------------#
( எம்பெருமான் ஆதி ஈசனார் சொல்வது என்னவென்றால், ஒருவர் உண்மையானவனாகவும், ஆசை இல்லாதவனாகவும், பாசத்துடன் , அன்பாக இருந்தால், இறைவனை திட்டினால், அதனையும் அன்போடு யான் ஏற்றுக்கொள்வேன்)
அறிந்தும் புரிந்தும் மீண்டும். பின், அதாவது பார்வதி தேவியே !!! நீ அமைதியாக இரு, யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று மீண்டும் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நிச்சயம் வயிற்றின் மேலே மிதிக்கின்றான். நிச்சயம் பக்கத்தில் உள்ள, பின் அதாவது அறிந்தும், (அவ் பக்தன்) ஒரு கொம்பொன்றை எடுத்து, பின் பலமாக அடிகின்றான் ஈசனை. ஈசன் அழகாக சிரிக்கின்றான்.
அறிந்தும் புரிந்தும், எதை என்று அறிய, நிச்சயம் இவை புரிந்தும் கூட. இதனால், பின் எதை என்று அறிய, நிச்சயம். ஆனால், பின் சிவபெருமானே விளையாட வந்து, உந்தனுக்கு அறிந்து கொடுக்க, அதாவது, என்னிடத்திலிருந்து தான் நீ விளையாடுவாயா என்ன? நிச்சயம் அறிவு இல்லாதவனே என்று மீண்டும் திட்டி தீர்க்கின்றான்.
அப்ப. சரியா? ஆள் இல்லையா? ஆள் இல்லையா? நானே ஒன்னும் இல்லாம இதை, இதை ஒன்னு வந்து நீங்க பார்த்தீங்கன்னா, மீண்டும் என்னை விளையாடி இருக்கிறான். அது மாதிரிதான் சொல்லி இருக்காங்க.
நிச்சயம் இப்பொழுதும் எது என்று அறிய அறிய சில அடியார், நிச்சயம் ஈசனேயே வணங்கிக் கொண்டு இருப்பவர்களை எல்லாம் (எம்பெருமான் ஈசன்) அவன் விளையாடிக் கொண்டே இருக்கின்றான். பின் பார்ப்போம் பார்ப்போம் என்று.
ஆனாலும், அறிந்து புரிந்தும், அதற்குள்ளே எங்களுக்கு கஷ்டம் என்று நீங்கள் ஓடி ஒளிந்து விடுகின்றீர்கள்.
எதை புரிந்து, ஆனால் நிச்சயம். மீண்டும் பின் ஈசன், பின் அவனிடம் கேட்கின்றான். நிச்சயம் அறிந்து, பின் (யான்) யார் என்று (உனக்கு) தெரிகின்றது. அதாவது, கேட்கின்றேன், உனக்கு என்ன வேண்டும்? என்ன வரத்தை? நிச்சயம் என்று.
(அவ் பக்தனை எம்பெருமான் ஆதி ஈசனார், என்ன வரம் வேண்டும் என்று கேட்கின்றார்.)
இதே போலத் தான், நீங்கள் எதை கேட்கிறீர்களோ, ஈசன் நிச்சயம் தன்னில் கூட. அதாவது, அமைதியாக இருந்தாலே, ஈசன் இடத்தில் கேட்பான். நிச்சயம், அதாவது, யாங்கள் சொல்வதெல்லாம்.
(உண்மை , நேர்மை, பக்தி, ஒழுக்கம், அன்பு, புண்ணியங்கள் செய்தல்)
(பக்தன் ஈசனாரிடம்) :- நிச்சயம் அறிந்தும் புரிந்தும், அறிவில்லாதவனே, நிச்சயம். அதாவது, ஒரு துளியும் கூட இல்லை. எனக்கு என்ன வேண்டும் என்று, ஈசனிடம் வேண்டும் என்றால், நிச்சயம் அறிந்து புரிந்தும், எதை என்று தேவையில்லை. வரமெல்லாம்.
நிச்சயம் தன்னில் கூட கொடுப்பதற்கு நீ யார் ?
(ஆதி ஈசனார்) :- அறிந்தும் புரிந்தும் , தெரிந்து தான் பேசுகின்றாயா? ஆனாலும், நிச்சயம் அறிந்தும் புரிந்தும் , (யான் தான் ஈசன் என்று) தெரியுமா? தெரியாதா? என்றெல்லாம்.
(பக்தன்):- தெரிந்து தான் பேசுகின்றேன். இறைவனாக இருந்தால் என்ன?
(நான் நீங்கள் ஈசன் என்று தெரிந்துதான் பேசுகிறேன். நீங்கள் ஈசனாக இருந்தால் எனக்கென்ன? ஒன்றும் தேவையில்லை)
ஏற்கனவே (என்னிடம் உள்ள) அனைத்தும் நீக்கிட்டுதான், இங்கு உட்கார்ந்து நிச்சயம் தன்னில் கூட கொஞ்சம். இங்கு, பின் அமர, பின் அழகாக, எதன் அருகிலே?, பிணத்தின் அருகிலே, நிச்சயம், பின் அறிந்தும் புரிந்தும் கூட, அனைவரும் இங்கு உட்கார்ந்து இருக்கின்றார்கள். ஆனால், உயிரோடு இருக்கும் பொழுதே , என்னை இங்கு அமர்த்தி விட்டாயே?. இது நியாயமா? என்று (பக்தர் , ஆதி ஈசனாரை பார்த்து கேட்டார்)
(அதன் பின்னர்) நிச்சயம் அறிந்து புரிந்தும், (அவ் பக்தன்) கெட்டியாக ஓடோடி வந்து, ஈசனை பிடித்துக் கொள்கின்றான். நிச்சயம் அறிந்தும் புரிந்தும், எதை என்று, நிச்சயம். அதாவது, நீதான் வேண்டும் என்று நிச்சயம், பின் ஓடோடி, நிச்சயம் நேரடியாக (பக்தர், திரு அண்ணாமலையார் திருவடிகளை சரண் அடைந்தார்).
=======================================================
=======================================================
# திரு அண்ணாமலையார் மூலவர் ரகசியம் #
=======================================================
=======================================================
(திரு அண்ணாமலையார் ) :- அறிந்தும் புரிந்தும், அதாவது, எப்பொழுதும் (திரு அண்ணாமலையார்) யான் இருக்கும் வரை, நிச்சயம் என், அதாவது, எதை என்றும் புரிய, என் மடியின் மீதே, நீ அமர்ந்து, இங்கு வருவோருக்கு எல்லாம், சரியான நிச்சயம் தன்னில் கூட என்ன கேட்கின்றார்களோ, அதையே நீ தர வேண்டும். உன்னையே யான், முதலாளி ஆக்குகின்றேன் என்று, இப்பொழுது கூட மூலஸ்தானத்தில் மடியின் மீது அமர்த்தி வைக்கின்றான் அவனை.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( திரு அண்ணாமலையார், தன்னுடைய மடியின் மீது அந்த ஞானியை / சித்தரை எப்போதும் நிரந்தரமாக மூலஸ்தானத்தில் அமர்த்தி, அவரை, திரு அண்ணாமலையின் “முதலாளி” என நிரந்தரமாக அறிவித்து. அவர் எப்போதும், திரு அண்ணாமலைக்கு வருகிறவர்களின் நியாயமான கோரிக்கைகளை அவர் முன் வைத்தால், அந்த ஞானி சித்தரே அதை வழங்க வேண்டும் என திரு அண்ணாமலையார் அருளியுள்ளார்கள்.)
இடைக்காடர் சித்தர் :- நிச்சயம். இவ்வாறாகவே அருள்கள் வருவோருக்கெல்லாம் , அவன் கொடுத்துக்கொண்டே இருக்கிறான்.
ஐயோ, பாவம்! ஈசனே கொடுக்கலாமா என்று ( அவ் ஞானி கேட்டாலும் ), நிச்சயம் அப்பா கொடு என்று ( ஈசனார் அண்ணாமலையார்).
(ஆனால்) நிச்சயம் தவறு செய்து விட்டு, மீண்டும் வந்தால், யான் பிடுங்கி விடுவேன் என்று ஈசன்,
நிச்சயம், இவ்வாறாகத்தான் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் , எவை என்று அறிய, இப்பொழுதும் வருபவர்களுக்கு எல்லாம், வாரி வாரி அருள்கள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அறிந்தும் கூட .
=======================================================
=======================================================
# திரு அண்ணாமலையார் மூலவர் - பிணம் ஞானி #
=======================================================
=======================================================
நிச்சயம், அவனை அறிந்தும் புரிந்தும் , எவை என்று கூற அவன் பெயர் என்னவென்றால்,
“““““““““““““ பிணம் ஞானி ”””””””””””
ஏன்? எதை என்று எதிர்பார்க்க? பிணத்தை எரிக்கும் இடத்தில் பின் இருந்ததால், அவனை அனைவருமே பிணம், பிணம் என்று அழைத்தார்கள்.
இதனால் நிச்சயம் உங்களுக்கும், ஆசிகள் வழங்கத்தான் போகின்றான். நிச்சயம், அவனை பற்றி யான் சொல்லிக் கொடுத்துவிட்டேன்.
நிச்சயம், இவ்வாறாகத்தான் இன்னும் தவழ்ந்து நிற்கின்றார்கள் நிச்சயம், பல ஞானிகள். அவர்களைப் பற்றி எல்லாம் சொல்வேன். அங்கெல்லாம் சென்றால், நிச்சயம் பின் விடிவு, எவை என்று கூற கிடைத்து, பின் மாபெரும் வாழ்வு வாழ்வீர்கள். ஆனாலும், உண்மையை இன்னும் எதை என்று அறிய, இக் கூட்டத்தில், எதை என்று புரிய இன்னும் நிச்சயம் பின் கூட்டி கூட்டி, நல் வாக்குகளாக செப்பி செப்பி, சித்தர்கள் பக்குவங்கள் எடுத்து, உங்களுக்கு தேவையானது அனைத்தும் உங்கள் கொடுக்கத் தயார்.
(கூட்டுப் பிரார்த்தனை மூலம் பல நல் வாக்குகளை இனிமேல் சித்தர்கள் , அனைவரின் நலனுக்காக செப்புவார்கள். அடியவர்களுக்கு தேவையான அனைத்தும் கொடுக்க சித்தர்கள் தயார். எனவே அடியவர்கள் இவ் கூட்டுப்பிரார்தனையில் அவசியம் கலந்து கொள்ளவும்)
நிச்சயம், தாயே , தந்தையே , எம்முடைய ஆசிகள். இடைக்காடனின் ஆதிகளால், நிச்சயம் சில கிரக நிலைகளையும் கூட உங்களுக்கு மாற்றி அமைக்கின்றேன். ஆசிகள். அடுத்து சில வாக்குகள் தெரிவிக்கும் பொழுது, சில உண்மைகள் தெரியும். ஆசிகள்.
=====================================================
(கூட்டுப் பிரார்த்தனைக்கு வந்த அடியவர்கள் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். ஏன் என்றால் அவர்களுக்கு கிரக நிலைகளை மாற்றி அமைத்துவிட்டார் கருணையுடன் இடைக்காடர் சித்தர். எப்பேர்ப்பட்ட பாக்கியம் அவ் அடியவர்களுக்கு. மாபெரும் பாக்கியம் பெற்ற அவ் அடியவர்கள் அனைவரும் இன்னும் பலரை இனி வரும் கூட்டுப் பிரார்தனைக்கு அழைத்து வாருங்கள். அனைவருக்கும் நன்மைகள் உண்டாகட்டும்.)
=====================================================
(அன்புடன் இடைக்காடர் சித்தர் அருளிய - 31.08.2025 அன்று நடந்த திருவண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு நிறைவு)
ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete