​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 20 November 2025

சித்தன் அருள் - 2013 - அன்புடன் அகத்தியர் - கபில வனம் வாக்கு!









8/10/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: கபில்வத்தை/ கபில வனம் மகா சித்தர்கள் வனம் யாள சரணாலயம். மொனராகலை மாவட்டம் ஸ்ரீலங்கா.

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!!!



இலங்கையில் இருக்கும் முருகப்பெருமானின் தவ பூமி ஆன  கும்பகர்ணன் நதியாய் பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கும் வனப்பகுதி 
காட்டாறுகளும் மிக அடர்ந்த காட்டுப் பகுதியும் சாலைகளும் மின்சாரமும் இல்லாத 
கபில வனத்தில் குருநாதர் ஏற்கனவே 2025 ஜூலை மாதத்தில் உரைத்த வாக்கு சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1891 பதிவில் வெளிவந்துள்ளது மீண்டும் வாக்குதனை படிக்க ஈசனார் பார்வதி தேவியார் திருவிளையாடல் குருநாதர் அகத்தியர் பெருமான் இராவணன் முருகனின் தவம் வள்ளி தெய்வானை தேவி கும்பகர்ணனுக்கு தந்த வரம் என பல விஷயங்களை மேலும் உணர்ந்து கொள்ள முடியும். மேலும் கபில வனத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும் முடியும். கபிலவனம் எங்கு இருக்கின்றது? எப்படி செல்வது? அங்கு நடக்கும் அதிசயங்கள் மற்றும் அந்த ஸ்தலத்தில் மகிமைகள் சூழ்நிலை அனைத்தையும் இந்த சித்தன் அருள் பதிவு எண் வாக்கில் தெரிந்து கொள்ள முடியும் அதனால் மீண்டும் ஒருமுறை பதிவினை அனைவரும் படிக்கவும்)






குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு


 உலகையெல்லாம் ஆளக்கூடிய இறைவா,!!! இறைவியே, போற்றியே! பணிந்து வாக்குகள் ஈகின்றேன், அகத்தியன்.


 அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அப்பனே!!!!


பல பரிசுத்தமான அப்பனே, ஜீவன்கள் இங்கு வாழ்ந்து தான் வருகின்றது. அப்பனே!!!


ஏன்?, எதனால்? என்பவை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மோட்சத்தை தேடித் தேடி, அப்பனே, நிச்சயம். அப்பனே, பல வடிவங்களில் கூட, அப்பனே,!!!! முருகனை, அப்பனே, தொல்லை செய்தனர் என்பேன். அப்பனே!!!

(இந்த காட்டில் வாழும் பல ஜீவராசிகள் மோட்சத்தை தேடி முருகனிடம் வேண்டிக் கொள்வதற்காக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றது)




 இதை விவரமாகவே பின் செப்பினாலும்!!!!, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அறிந்தும் கூட, பின் பல பரிசுத்த, அப்பனே, ஆன்மாக்கள், அப்பனே, நிச்சயம், அதாவது முனிவர்களாகவும், அப்பனே, இங்கு தவழ்ந்து, அப்பனே, ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன். அப்பனே


, நல்விதமாக எவ்வாறு?, ஏன்?, எதற்கு,? இவ் முனிவர்கள் ஆசீர்வதிக்க வேண்டும்?? என்பவை எல்லாம், அப்பனே, சரியாகவே எடுத்துரைக்கின்றேன். அப்பனே,!!


இதனால், அப்பனே, ஒரு பகுதி, அப்பனே, இராவணனுடையதாகவே,!!!!அப்பனே!!!, 


ஒரு பகுதி என்பது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அறிந்து கூட, பின், அதாவது, இவ் தேசமே!!! (இலங்கை)




அப்பனே, பின் தன் கட்டுப்பாட்டில், அப்பனே, பின் இராவணன், அப்பனே, சரியாகவே, அப்பனே, பின் எதை என்று அறிய, ஈசனை நினைத்து உருகி, அப்பனே, பல பாடல்களை பாடி, அப்பனே, மனதார, அப்பனே, அறிந்தும் கூட, பல பல விஷயங்கள் செய்து வந்தான். அப்பனே!!

எதை, எவை என்று புரிய!! அப்பொழுது அறிந்து கூட, பல பல, (இங்கும்) பின் முனிவர்கள், நிச்சயம் தன்னில் கூட, ஈசனிடத்தில், பின் வரங்கள் கேட்டு, நிச்சயம், பின் பல முனிவர்கள் தவம் செய்து கொண்டே, தவம் செய்து கொண்டே!!!!, 


ஏன்? இந்த தவம், இதனால், நிச்சயம், எந்தனுக்கு ஏற்றவாரே, பின் அவர்களும் செய்வார்கள், அறிந்தும் கூட, பின் அதனால், நிச்சயம், அவ் வரத்தை, அதாவது, யான் என்ன சொல்கின்றேனோ, அதனை தன் நிச்சயம் தன்னில் கூட, பின் முனிவர்களும் கேட்க வேண்டும் என்றெல்லாம், நிச்சயம், பின் ஈசனை நினைத்து, நினைத்து உருகி உருகி, எதை என்று புரிந்தும் கூட, நிச்சயம், பின் உருகி உருகி, இராவணன் அறிந்தும் கூட!!!,


 ஆனாலும், பின் முனிவர்களும் கூட, நிச்சயம், ஈசனே!!!, பின் அறிந்து கூட, யாங்களும் உங்களைத்தான், பின் நினைத்து நினைத்து, தியானங்கள், தவங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.


 ஆனாலும், இராவணனுக்கு அவ் வரத்தை கொடுத்துவிட்டால், நிச்சயம், தவறாக, எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, பின் அதாவது, தவறாகவே பயன்படுத்திக் கொள்வான், இராவணன்,!!!

அதனால் கொடுத்துவிடாதே‌ஈசனே!!! என்று,  ஈசனிடத்தில் கூட,!!! முனிவர்களும் கூட,!!


 ஆனாலும், அறிந்தும், எதை என்று புரிய, ஆனாலும், பின் இராவணனும் கூட,...

 ஈசனே!!!!, உன்னையே நினைத்துக் கொண்டிருக்கையில், யான் எப்படி தவறு செய்யுவேன்?!!!!, நிச்சயம், தன்னில் கூட, !!

அப்படி தவறு செய்தாலும், நீ நிச்சயம், பின் அதாவது, பின் தண்டிக்க, தண்டிக்க, நிச்சயம், நீ தண்டனை கொடுப்பாய் அல்லவா?


 எப்படி??? இவ் முனிவர்கள் இப்படி, நிச்சயம், அறிவில்லாதவர்களாக பேசலாம்??? என்று!!!
 இராவணனுக்கும், பின் கோபம் வந்தது. நிச்சயம் தன்னில் கூட!!!



(இராவணனும் கோபத்துடன்)

 முனிவர்களே!!, ஏன்? எதற்கு,? யான் நல்லதையே, பின் செய்யவில்லையா? ஏன்? எதை? என்று புரிய,

யான் அனைத்தும் செய்தேனே, எதை என்று அறிய, அதாவது, யான் நல்லவனாக, பின் இருந்ததினால்தான், ஈசனையும் நினைக்க தோன்றியது.


(நான் நல்லவனாக இருப்பதினால் தான் சிவபக்தியாக இருக்க முடிகின்றது)

 அதேபோலத்தான், நிச்சயம், தன்னில் கூட, ஈசனும் எந்தனுக்கு வாரி வாரி, வரங்களை கொடுத்துக்கொண்டு, வரங்களை கொடுத்துக்கொண்டே இருக்கின்றான்.


 அவ் வரங்களை வைத்து, நிச்சயம், தன்னில் கூட, பல மக்களுக்கு சேவை செய்கின்றேன் என்று!!!


 அப்பனே, இவையெல்லாம், நிச்சயம், எதற்காக?, 

பின் இராவணன், எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் இவ்வுலகத்தை, எதை என்று அறிய, அப்படியே, நிச்சயம், தன்னில் கூட, பின் ஒரே, பின் அதாவது, பின் அதாவது, விரலில், பின் தூக்கிவிட வேண்டும் என்றெல்லாம், வரங்கள் கேட்டான் என்பேன். அப்பனே!!!


 அப்பொழுதுதான், பின் ஈசனுக்கும் கூட, எவை என்று அறிய, கவலைகள்!!!, 


ஈசனார்:
ஏன்? எதற்கு?, பின் இராவணனே, பின் எதை என்று புரிய, அனைத்தும் நீ என்ன?, ஏது?, எவை என்று புரிய, அனைத்தும், பின் யான் உணர்ந்தேன். நீ மனதில் என்ன நினைக்கின்றாய்?? என்பவை எல்லாம், யான் உணர்ந்து, உணர்ந்து, உணர்ந்து, அறிந்தும் கூட, இதனால், நிச்சயம், ஏன்? எதை என்று புரிய, அதாவது, ஏன், பின் உன் மனதிலே என்ன?, எதை என்று அறிய, அனைத்தும் அறிந்து, அறிந்து விட்டேன்.


 எதனால்,?? இவ்வுலகத்தை, பின் அதாவது, ஒரே விரலில், அதாவது, ஏதாவது ஐந்து விரலில், எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, நிச்சயம், தன்னில் கூட, பின் சுண்டு விரலில், நிச்சயம், தூக்கிவிட வேண்டும் என்றெல்லாம், நீதான் எண்ணிக் கொண்டிருக்கின்றாய் அல்லவா? 


எதற்காக?, என்று எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட!!!

ராவணன்:

பின் அதாவது, தந்தையே!!!, எதை என்று புரிய, உணர்ந்து கொண்டாயா? 

நிச்சயம், தன்னில் கூட, இதனால், நிச்சயம், அறிந்து கூட, அதனால், பின் இம் மகன், நிச்சயம், தன்னில் கூட, பின் தவங்கள் இருந்து, தியானங்கள் செய்து......நிச்சயம், பின் அறிந்து கூட, பின் உணர்ந்திருக்க மாட்டானா? அதாவது, உணர்ந்து கொள்ள மாட்டானா??? என்றெல்லாம், நிச்சயம், மனதில்,!!!!


(தந்தையே நீங்கள் புரிந்து கொண்டீர்கள் ஆனாலும் நான் எதற்காக இந்த வரத்தை கேட்கின்றேன் என்று உணர்ந்து கொண்டீர்களா என்று)


 தந்தையே ஆனாலும், உணர்ந்து விட்டாய். நிச்சயம், அனைத்திற்கும் காரணம், இச் சுண்டு விரலே,!!!!

இச் சுண்டு விரல் இல்லை என்றால், நிச்சயம், வாழ்க்கையின் தத்துவம் புரியாது மனிதனுக்கு.

(மனிதர்கள் கையில் இருக்கும் சுண்டு விரல் இல்லையென்றால் வாழ்க்கையில் தத்துவம் புரியாது)


 நிச்சயம், எதுவுமே இல்லை, இவ்வுலகத்தில், அனைத்தும், நிச்சயம், தன்னில் கூட, இவ் விரலால் ஆட்டிப் படைக்க, அறிந்தும்!!
 ஏன் எதற்கு, எவ்வாறாகவே, நிச்சயம், தன்னில் கூட!!!


 பின் அதாவது, ஈசனாரே,!!! அனைத்தும் தெரியும், நிச்சயம், தன்னில், கலியுகம் எவ்வாறெல்லாம்? அழியப் போகின்றது என்பதை எல்லாம் அறிந்தும் கூட,!!!

 அதாவது, நிச்சயம், தன்னில் கூட, அவ் வரத்தை எந்தனுக்கு கொடுத்துவிட்டால், நிச்சயம், கலியுகத்தை யான் காப்பேன் என்று அறிந்தும் கூட,!!!



 அப்பனே, இவையெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, எதை என்று அறிய, அப்பனே, பின் தொடங்குவதற்கு, கலியுகம் தொடங்குவதற்கு, எதை என்று புரிய,!!!

(இச்சம்பவம் கலியுகம் தொடங்குவதற்கு முன்பு நடந்தது)


 அப்பனே, இன்னும் இன்னும்  எதை என்று அறிய, அப்பனே, இராவணன் பல பல அவதாரங்கள், எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, எவை என்று, அனைத்து அவதாரங்களிலும் கூட, எதை என்று புரிய, அப்பனே, பின் இராவணனின் பங்கு, முக்கிய பங்கு வகிக்கின்றது என்பேன், அப்பனே!!!, நிச்சயம், தன்னில் கூட,


 அனைத்திலும், அப்பனே, பெயர்தான், பெயர்தான் மாற்றம், ஆனாலும், ஒவ்வொரு வற்றிலும் கூட, எதை என்று வந்து வந்து, அப்பனே, அவன் லீலைகளை காட்டி, அவன் பெயரை, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட,!!!

(இராவணன் எப்படி எல்லாம் தவம் இருந்து பல பல பிறவிகள் எடுத்து ஒவ்வொரு பிறவியிலும் ஈசனிடம் எப்படி எல்லாம் வரத்தை பெற்று ஒவ்வொரு அவதாரமாக எடுத்து வந்தார் என்பதை திரிகோணமலை வாக்கில் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம் 

சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1655.)




 ஆனாலும், பெயர்தான் மாற்றம் என்பேன், அப்பனே!!!!,

 ஏனென்றால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஏன்? எதற்கு?, மனிதனுக்கு பெயர் வைக்கின்றார்கள்? என்பவை எல்லாம் தெரியாதப்பா,


 எதை என்று, ஏன்? மனிதன், பின் பெயரை வைத்து அழைக்கின்றார்கள், எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம், ஆடுகள், அதாவது, மனிதர்கள் என்று சொன்னால், அப்பனே, நிச்சயம், பின் வித்தியாசம் இல்லாமல் போய்விடுவார்கள், அதனால்தான், அப்பனே, ஒவ்வொருவருக்கும் ஒரு நாமத்தை வைத்து வைத்து, அப்பனே, நிச்சயம், இப்படி அழைத்தால், நிச்சயம் வருவான் என்றெல்லாம், அப்பனே,


 இதற்குத் தான், அப்பனே, பெயர்களே தவிர, அப்பனே, நிச்சயம், எதை என்று அறிய, அப்பனே, பின் அறிந்து கூட, இதனால், அப்பனே, பெயர்கள் எதற்கு? வைத்துள்ளார்கள் என்பவை எல்லாம், மனிதனுக்கும் கூட தெரியாதப்பா,


 இதனால், இராவணன் மறைமுகமாக, அனைத்து அவதாரங்களிலும் கூட, அப்பனே, பின் வந்து, எது என்று அறிய, அனைத்தும், பின் நிச்சயம், தன்னில் கூட, வெளிகாட்டினான், இப்படி இருந்தால்தான், பக்தி என்று, நிச்சயம், தன்னில் கூட,!!!


 இவையும் கூட, வரங்களாகவே, ஈசனிடத்தில், நிச்சயம், அறிந்தும் கூட,!!!


(பல பல பிறவிகளில் பல பல அவதாரங்களாகளாக இராவணன் எடுத்து வந்து சிவ பக்தியை காட்டி பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தினார்)


பின் ஈசன் அறிந்தும் புரிந்தும் கூட, இதனால், நிச்சயம், எவை என்று அறிய, கலியுகத்தில், நிச்சயம், பல பல, பின் துன்பங்கள் தான், மனிதனுக்கு நேரிட போகின்றது!!!!, 


பின் தந்தையே,!!! அதனால், நிச்சயம், பின் இவ் உலகத்தை என் சுண்டு சுண்டு விரலில் வைத்துவிட்டால், நிச்சயம், அனைத்தும் யானே செய்வேன் என்று,!!!!


 நிச்சயம், அதாவது, பின் பார்வதி தேவியோ!?, பின் இராவணனே, அறிந்தும், எதை என்று!!!, 


ஆனாலும், எதை என்று, இப்படி கேட்கின்றாயே,!!!!! பின் நிச்சயம், அதாவது, பின் இத் தேவன், தேவாதி தேவன், நல்லது செய்ய மாட்டானா??? என்றெல்லாம்,


இராவணன்:

 நிச்சயம், தன்னில் கூட, பின் தாயே!!!, நிச்சயம், பின் அதாவது, தேவாதி தேவனைப் போல் கருணை படைத்தவர், இவ்வுலகத்தில் இல்லை,!!!

 ஆனாலும், அறிந்தும் கூட, ஏனென்றால், நிச்சயம், தன்னில் கூட, எவை என்று அறிய, பின் அதாவது, கலியுகத்தில் மக்கள், பின் செய்வதை, நிச்சயம், பின் அதாவது, எவை என்று அறிய, அதாவது, தந்தை, நிச்சயம், மனம் வருந்துவார்,  அப்படியெல்லாம் நடக்கப் போகின்றது!!!

(கலியுகத்தில்  மனிதர்கள் செய்யும் செயல்களால் தந்தை ஈசன் மனம் வருந்துவார் அப்படித்தான் கலியுகத்தில் நடக்கப் போகின்றது அதனால் எனக்கு இந்த உலகத்தில் கட்டுப்பாடு வரம் எனக்கு தந்து விட்டால் அனைவருக்கும் தண்டனைகள் கொடுத்து உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்ற போகின்றேன் என்று வரத்தை இராவணன் கேட்டார்)


ஆனால் தந்தையோ, இப்படி படைத்து விட்டோமே, எதை என்று புரிய, என்றெல்லாம், நிச்சயம், திருத்தத் தான் பார்ப்பார், கருணை வடிவம் கொண்டு,!!!

 திருத்துவோம், திருத்துவோம், என்று!!! எதை என்று புரிய!!,


(கலியுகத்தில் மனிதர்களை திருத்துவோம் என்று)

 ஆனாலும், நிச்சயம், யான் அப்படி இல்லை.!!!

 உடனுக்குடனே தண்டனை கொடுத்து விடுவேன்,!!!

 அதனால்தான், நிச்சயம், அதாவது, பின் தன், அதாவது, நிச்சயம், தன்னில் அறிந்தும், புரிந்தும் கூட,!!!

 தாயே!!!, அதாவது, ஈசன் அறிந்தும், புரிந்தும் கூட, பின்  காலடியில் இருந்தால் போதும்,!!!



 ஏனென்றால் மக்கள் அறிந்தும், புரிந்தும் கூட, எதை எதையோ செய்வார்கள், நிச்சயம், ஐந்தறிவுள்ள ஜீவராசிகளுக்கும் சில கருணை இருக்கும்,!!


 ஆனாலும், ஆறறிவு படைத்தவன், நிச்சயம், எதை என்று அறிய, அறிய, எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, அறிவுகள் இல்லாமல் போல் செயல்பட்டு, பல பல துன்பங்களை, நிச்சயம், தன்னில் கூட, தானும், பின் அனுபவித்து, நிச்சயம், பின் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளுக்கு, இன்னும் ஏனைய ஜீவராசிகளுக்கும், பின் பெரும் துன்பத்தை....எல்லாம்,!!!.........


 பின் நிச்சயம், அழித்து, அழித்து, இதனால், பின் எதை என்று அறிய, அறிய, ஜீவராசிகளை அழித்து, நிச்சயம், இவந்தனும், பின் அழிவான், ஒன்றும் பிரயோஜனம் இல்லாமல்,...இவ் உடம்பு போய்விடும்,!!


 இதனால்தான், அறிந்தும், தெரிந்தும், எவை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, பின் யானே அதாவது, பின் எவை என்று புரிய, பின் நிச்சயம், யானே மனிதனாகவே, அறிந்தும், புரிந்தும் கூட, அனைத்திலும், நிச்சயம், தன்னில் கூட, அடித்து நொறுக்கி, நிச்சயம், மனிதனை, பின் உடனுக்குடனே, தண்டனைகள், நிச்சயம், தன்னில் கூட, பெறும்படி, பின் செய்வேன் என்று!!இராவணனும்!!!



 ஆனாலும், நிச்சயம், இவ் முனிவர்களும் அறிந்தும், எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, பின் முனிவர்களும் கூட, பின் தவங்கள் இயற்றி!!!!, நிச்சயம்,!!!!

(இராவணனுக்கு வரத்தை) இவையெல்லாம் தந்து விடாதே!!, ஈசனாரே!!!,

 நிச்சயம், இப்பதவி, பின் இராவணனுக்கு தந்துவிட்டால், இராவணன், இராவணன், நிச்சயம், என்னென்னவோ செய்வான்!!!!,


 எதை என்று அறிய அறிய யாங்களும், பின் தியானங்கள் தான் செய்து கொண்டிருக்கின்றோம் என்று!!!, 

(முனிவர்களும் உலக நன்மைக்காக தான் தவங்கள் செய்து கொண்டிருக்கின்றோம் என்று)


எதை என்று புரிய, இதனால், நிச்சயம், தன்னில் கூட, எவை என்று புரிய, நிச்சயம், இதனால், நிச்சயம், அதாவது, அறிந்தும் கூட, ஆனாலும், பின் முனிவர்கள், தவங்கள் செய்து கொண்டே,!! செய்து கொண்டே,!!!


 ஆனாலும், அறிந்தும் கூட, இராவணன் கூட, எதை என்று அறிய, பின் அதாவது, முனிவர்களே,!!!! நிச்சயம், இவ்வாறு தவங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்களே, நிச்சயம், ஒரு வரத்தையாவது, நிச்சயம், கேட்டுப் பெறுங்கள், பார்ப்போம், ஈசனிடம் என்று!!!!, 


நிச்சயம், முனிவர்கள் ஈசனிடம் அனைவரும் எதை என்று புரிய, பின் கேட்டனர்!!! வரத்தை!!!

, அவ் அவ், எதை என்று புரிய, பின் ஒவ்வொருவரும், நிச்சயம், ஒவ்வொரு வரத்தை, ஈசனிடம் கேட்டனர்,!!!


 ஆனாலும், நிச்சயம், ஈசன் அறிந்தும், புரிந்தும் கூட, தயங்கினான்!!!...., எதை என்று புரிய, கொடுக்கலாமா??, வேண்டாமா?? என்று,!!


 ஆனாலும், பார்வதி தேவியே!!!!,...
 நிச்சயம், பின் ஈசனாரே!!!!, ஏன் தயங்குகின்றீர்கள்??? எதை என்று பொறுத்து, இப்படி என்றெல்லாம்,!!!


 ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, இவர்களும், அதாவது இவர்களுக்கு, வரத்தை தர  வேண்டுமென்றால், நிச்சயம், பல பல பிறப்புகளிலும், பல புண்ணியங்கள், பல வழியிலும் கூட, சேவைகள், எது என்று கூற!!!

 ஆனாலும், இப்பிறவிகள், எது என்று அறிய, சில பாவங்களையும் கூட, நிச்சயம் செய்துவிட்டதே, பின் எப்படி? வரத்தை தருவது? என்று,


 ஆனாலும், இராவணனோ, பலமாக சிரித்தான்!!!, எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, பின் முனிவர்களும் கூட, நிச்சயம், முழித்தனர், இங்கே,!!!
 எதை என்று அறிய!!!

 ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாக, நிச்சயம், பின் ஈசனார் தான், நிச்சயம், பின் அமைதி காக்கின்றார்,!!!

 (முனிவர்களுக்கு வரத்தை தராமல்)


 அதாவது, கந்தனிடம், எது என்று புரிய, பின் இங்கேதான், கந்தனும் கூட, தவங்கள், நிச்சயம், தன்னில் கூட,!!!

 பின் அதாவது, கந்தனிடத்தில் சென்று, நிச்சயம், அனைவருமே ஒன்று கூடினர், நிச்சயம்!!


, ஆனாலும், ஒருவருக்கொருவர், நிச்சயம், கந்தனும், கந்தன் தியானத்தில் இருக்கின்றான், நிச்சயம், எதை என்று புரிய,!! யாரும் கேட்கக்கூடாது என்று!!,

 ஆனாலும், இராவணனும், பின் பலமாக சிரித்தான், எதை என்று புரிய!!


 இச் சத்தம், நிச்சயம், தன்னில் கூட, பின் முருகனுக்கு, பின் எது என்று அறிய, எவை என்று அறிய, கேட்டது!!


 நிச்சயம், தன்னில் கூட, அமைதியாக, பின் இராவணன், எதை என்று அறிய, அறிய, நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், இராவணனை நினைத்தான், முருகன்!!!,

 ஆனாலும், இராவணன் புரிந்து கொண்டான், எதை என்று கூற, முருகன், நம் தனை நினைத்திருக்கின்றான் என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட,!!!


இதனால், முருகன், எதை என்று அறிய, எவை என்று புரிய, நிச்சயம், தன்னில், இதை என்று, புரியாமல் இருந்தாலும், பின் மீண்டும் மீண்டும், எதை என்று அறிய, நினைத்தான், இராவணனுக்கும் தெரியும்,


 இதனால்தான், நிச்சயம், தன்னில், எவை என்று புரிய, நிச்சயம், தூய மனதாக, தூய மனதாகவே, நிச்சயம், சில புண்ணியங்களாகவே, நிச்சயம், தன்னில் கூட, பின் இருந்தாலே, நிச்சயம், இறைவன் நினைப்பதும், பின் மனிதனுக்கு தெரியும்,


 மனிதன் என்ன நினைக்கின்றானோ?, அவைதன், பின் இறைவனுக்கும் தெரியும், நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, நல்விதமாகவே, இவ்வாறெல்லாம், எது என்று புரிய!!,


 ஆனாலும், பின் மீண்டும், எதை என்று அறிய, அறிய, நிச்சயம், தன்னில் கூட, பல லட்சம், பின் முனிவர்கள் கூட, ஒன்று கூடினர்,

 எதை என்று, இப்படி?, பின் ஈசனாரிடம், எப்படி வரங்கள் வாங்குவது??? என்றெல்லாம், நிச்சயம்,
 எதை என்று பொறுத்து,!!


ஆனாலும், நிச்சயம், எவை என்று அறிய, பின் இராவணனும் கூட, பின் சிரித்தான்!!!!

எப்படித்தான்???, நீங்கள், பின்; உங்கள் பாவத்தை போக்க போகின்றீர்கள்?? என்று,!!


 நிச்சயம், தன்னில், அறிந்தும், புரிந்தும் கூட,!!


 இதனால், நிச்சயம், எதை என்று அறிய, பின் இப்பொழுது, அறிந்தும், புரிந்தும் கூட, இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின் விழுங்கப் போகின்றான், நீங்கள் எல்லாம், பாவங்கள், பின் செய்தவர்கள் தானே!!!!

நிச்சயம், பின் கும்பகர்ணன் வந்து,  உங்களை எல்லாம், விழுங்கத்தான், அதாவது, அப்படியே, (வாயிலிட்டு) நிச்சயம், எவை என்று அறிய, முழுங்க, எதை என்று அறிய,!!!! என்றெல்லாம்!!


 நிச்சயம், ஆனாலும், அனைவருமே, எதை என்று புரிய, நிச்சயம், திகை, திகைத்தனர், நிச்சயம், எதை என்று!!!...புரிய, பின் ஈசனாரே!!!!, இவ்வாறு, எவை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, பின் உன்னை நினைத்துக் கொண்டே, பின் இருந்தோமே, என்றெல்லாம்!!!!
 நிச்சயம், பின் எதை என்று புரிய!!!,


 இதனால், அமைதி, எவை என்று அறிய, இதனென்றும் கூட, நிச்சயம், தன்னில், அறிந்தும் கூட, அறிந்தும், எவை என்று புரிய,!!!



 நிச்சயம், பின் கந்தனாரும், இவை, உண்மைதனை, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும் கூட!!!

கந்த பெருமான்:

 பின் கும்பகர்ணனே!! எதை என்று கூற, அனைவரையும், பின் தொல்லைகளிலும், பின் நீக்க வேண்டும், அதாவது, புண்ணியத்தை சேர்க்க வேண்டும், நிச்சயம், அவரவர் விருப்பப்படியே, நடக்க வேண்டும்,!!


 ஏனென்றால், இவர்கள், நிச்சயம், தன்னில் கூட, மனிதனுக்கு, அதாவது, வருங்காலத்தில், நிச்சயம், தன்னில் கூட, கலியுகத்தில், நிச்சயம், பல பல இன்னல்களும், மனிதனுக்கு தோன்றும்!!!,

 ஆனாலும், இவர்கள், புண்ணிய ஆன்மாக்கள், அதாவது, எத்தனை வருடங்கள்???, பின் தவங்கள் செய்து, (ஈசனை) தந்தையை நோக்கி, நோக்கி,!!!!


 ஆனால், இப்பொழுது, சிறிய பாவத்தால், நிச்சயம், எதை என்று கூற, வரங்கள் கிடைக்காமல் போகின்றதே!!!!!,

 நிச்சயம், பின் கும்பகர்ணனே, அறிந்தும், எதை என்று கூற, பின், அதாவது, நீ, எவை என்று கூற, ஒரு நதியை உருவாக்கு,!!!!!


 அவ் நதியில், நிச்சயம், தன்னில் கூட, எவை என்று கூற, தவழ்ந்து வருகின்ற பொழுது, நிச்சயம், அதாவது, பின் பலமாக, நிச்சயம், அனைத்து முனிவர்களும் மூழ்கி விடுவார்கள்,!!!


 அப்பொழுது, அனைத்து பாவங்களும் தொலைந்துவிடும்!!, அறிந்தும் புரிந்தும்,!!


 இதனால், எதை என்று புரியாததால், அவ் முனிவர்களுக்கும், நிச்சயம், பின் தந்தை, பின் பெரும், பின் எவை என்று கூற, புண்ணியங்களை, எதை என்று கூற, அவர்களே பெற்று, நிச்சயம், தன்னில் கூட, தந்தையானவனும், வரங்களும் கூட, பின், நிச்சயம், தன்னில் கூட, பின் அளித்து விடுவார் என்றெல்லாம்!!!,



 பின் அவ்வாறாகவே, நிச்சயம், பின்,  அதாவது, முருகா, எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, பின் கட்டளையாகவே, நிச்சயம், தன்னில் கூட,!!!

(இதேபோன்று மத்திய பிரதேசம் ஓம்காரேஸ்வரர் ஜோதி லிங்கம் திருத்தலத்தில் நர்மதா நதியில் ஈசன் அருளால் தன்னுடைய உடல்களை துறந்து ஞானிகள் உள்ளே தவமிருந்து கொண்டிருப்பதை முருகன் வாக்கில் கூறிய பதிவை மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது மேலும் புரியும்

(Tuesday 24 January 2023

சித்தன் அருள் - 1275-அன்புடன் அகத்தியர் ஸ்ரீ ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம்!

12/10/2022 ஸ்ரீ முருகப்பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: ஸ்ரீ ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம், மார்கண்டேய ஆஸ்ரமம் சாலை. சிவபுராணம் மாந்தாத்தா தீவு, காண்ட்வா மாவட்டம் மத்திய பிரதேசம்.)




 ஆனாலும், பின் இராவணனும் கூட, பின் எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, எவை என்று அறிந்து கூட, பின் பெரும், பின் மகிழ்ச்சி, பின் அடைந்தான், நிச்சயம், தன்னில் கூட!!!


(கும்பகர்ணன் நதியாக பிரவாகம்)

பின், அதாவது, பின் பாய்ந்தது, நிச்சயம், இங்கெல்லாம், பின் ஒன்று கூடியிருந்த, பின் முனிவர்கள், நிச்சயம், தன்னில் கூட, அவ்வாறாகவே,  சிறிது தூரம், அடித்துச் சென்றனர், நிச்சயம், தன்னில் கூட, அனைத்தும் விலகியது, நிச்சயம், பாவங்கள், பின் தொலைந்தது!!!,

 புண்ணியங்களாக!!!....,

 அப்பொழுது, நிச்சயம், பின் ஈசன், பின் அனைவரையும் கூட, மகிழ்வித்து!!!,


 ஆனாலும், இராவணனும், இவையெல்லாம், ஈசனாரே, பின், நிச்சயம், தங்கள் விளையாட்டுத்தான், அனைத்தும் யாம் அறிவோம், நிச்சயம், தன்னில் கூட,


 அதாவது, தந்தையை, இவ்வுலகத்தில், அறிய வைத்தவன், பின் யானே,!!


(இப்படி ஒரு திருவிளையாடலை தந்தையான ஈசன் நடத்தியதை அதாவது நடத்தியதற்கு காரணம் நானே!!! இந்த திருவிளையாடல் மூலம் தந்தையின் லீலையை உலகிற்கு அறிய வைத்தவன் நானே என்று இராவணன் பெருமிதம்)


 நிச்சயம், அதனால், பின் அனைத்தும், உன் லீலைகளே!!! என்று, நிச்சயம், பின் அறிந்தும், புரிந்தும், எதை என்று அறிய,


 இதனால், நிச்சயம், தன்னில் கூட, அவரவருக்கு, பின் வரங்களை, நிச்சயம், அள்ளி, பின் தந்தனர், முனிவர்களுக்கு,
 நிச்சயம், தன்னில் கூட, 


இவ்வாறாக, பின் அவ் முனிவர்களும் கூட, மறைமுகமாக, இப்பொழுதும், ஈசனையும், பின் எண்ணி, எண்ணி, வாழ்த்தி, பின் துதித்துக் கொண்டே இருக்கின்றனர்,


 இதனால், நிச்சயம், தன்னில் கூட, இவர்களுக்கு, எது என்று அறிய, இக்காடுகளில் கூட, அங்கும் இங்கும், பின் தியானத்தில் ஈடுபட்டுள்ளனர்,
 நிச்சயம், தன்னில் கூட,

 நல்முறையாகவே, முருகனை வேண்டி, நிச்சயம், தன்னில் கூட, பல பல வழிகளில் கூட, பின், நிச்சயம், தன்னில் கூட, முருகனே!!!, நீயே என்றெல்லாம், வருவோருக்கெல்லாம், இவ் முனிவர்கள், நிச்சயம், ஆசிகள் கொடுத்துக்கொண்டே வருகின்றனர்,


 இதனால், நிச்சயம், அறிந்தும் புரிந்தும் கூட, எவை என்று கூட, இன்னும் ரகசியங்கள் எல்லாம் சொல்வேன், அனைவருக்குமே, ஆசிகள்!!!! கும்பகர்ணனின் ஆசிகளும் கூட,!! இராவணனின் ஆசியும் கூட,!!! நிச்சயம், தன்னில் இருக்கின்ற பொழுது, சில விஷயங்கள், அனைத்தும் மாறும்!!!


, எதை என்று புரிய, இங்கு இருப்பவர்களும் கூட, நிச்சயம், தன்னில் கூட, பின் எவை என்று புரிய, பின் கும்பகர்ணன் அருளால் தான், இங்கும் இங்கும் கூட, வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள், இன்னும் கூட,

(கபிலவனத்தில் சேவை செய்து வருபவர்களும் வன காவலர்களும் வனத்துறை அதிகாரிகளும்)

 அவர்களுக்கும் கூட, நிச்சயம், ஒவ்வொருவருக்கும் கூட, இங்கு வருகின்ற பொழுது, நிச்சயம், கும்பகர்ணன், பின் அதாவது, முனிவர்கள் கூட, பின் அவர்களுக்கு ஆசீர்வதித்து, பெரும் பதவியில் கூட, !!!அவர்களுக்கு பண உதவிகளும் கூட, தேவைபடுகின்ற பொழுது, நிச்சயம், வெளியே செல்கின்ற பொழுதும், அவர்களுக்கும் உதவி செய்து கொண்டே!!!

(இலங்கை அரசியலிலும் இந்த புனிதமான இடம் முக்கிய பங்கு வகிக்கின்றது அனைவரும் இங்கு வந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று அதன் பிறகு பதவி ஏற்பதும் பதவி வகிப்பதும் உயர்நிலை அடைவதும் அங்கு வரலாற்று சம்பவமாக இருந்து கொண்டே இருக்கின்றது)

(அப்படி இங்கு வந்து அருள் பெற்று உயர்ந்த இடத்தில் வகிப்பவர்கள் எல்லாம் மீண்டும் இங்கு வந்து கபிலவனத்தில் சேவை செய்பவர்களுக்கு நிதி உதவி செய்வதும் நடந்து கொண்டிருக்கின்றது அதைத்தான் குருநாதர் குறிப்பிடுகின்றார்)


 எதை என்று கூட, இங்கு ஆசிகள் பெற்றுத்தான், நிச்சயம், புறப்படுகின்றார்கள், பாதுகாவலர்களும் கூட,!!

(அனைத்து வன காவலர்கள் பாதுகாவலர்கள் யாத்திரை வருபவர்கள் அவர்களுக்கு உதவி செய்பவர்கள் என)




இதனால் கவலைகள் வேண்டாம், இன்னும் ரகசியங்கள் சொல்வேன், நல்விதமாக, அப்பனே கவலைகள் வேண்டாம், அனைவருக்குமே, எம்முடைய ஆசிகள், லோபா முத்திரையோடு!!

, கந்தனும் அழகாக, பின் பார்த்துவிட்டான், ஆசிகள், ஆசிகள், 

இன்னும் விவரமான வாக்குகள் எல்லாம் செப்புகின்ற பொழுது புரியும். 

தன்னையே ஆளலாம்!! 

ஆசிகள்!! ஆசிகள்!!!



12 காட்டாறுகள் கடந்து 32 கிலோமீட்டர் அடர்ந்த வனம் உள்ளே சாலைகள் இல்லாத கடும் காடுகளுக்கு உள்ளே பிரத்தியோக ஜீப்புகள் மற்றும் டிராக்டர்கள் உதவியுடன் மட்டும் தான் இந்த இடத்திற்கு செல்ல முடியும். கடும் மன உறுதியும் உடல் வலிமையும் பக்தியும் விரதமும் இருந்தால் மட்டுமே இங்கு செல்ல முடியும். முருகன் மற்றும் நவகோடி சித்தர்கள் தவம் இருக்கும்  இடம் இது. இங்கு அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவை குருநாதர் அகத்திய பெருமான் இவ்வுலகம் நன்மையுற புனித பயணம் செய்வித்து வாக்குகள் நல்கினார்.

இந்த புனித ஸ்தலம் பற்றிய தகவல்கள்.

ஆதி கதிர்காமம் என்று சித்தர்களால் பூஜிக்கப்படும் கபில வனமாகிய  கெபிலித்தை
முருக பெருமான் இலங்கையில் தவமியற்றி சக்திகளை பெற்று ஆதி சமாதியாகி,  காலம் காலமாக சித்தர்கள் பாதுகாத்து வரும் அபூர்வ சித்த வனம் கெபிலித்தை

கெபிலித்தை என்று அழைக்க படும் கெபிலித்தை மகா சித்தர்கள் வனம். - யாள சரணாலயம் -  மொனராகலை மாவட்டம், இலங்கை.
Kabiliththa Dhiyana Murugan Temple - Yala Forest - Monaragala District, Srilanka.

இது யாள வனவிலங்குகள் சரணாலயத்தின் மத்தியில் கும்புக்கன் கும்பகர்ணன் ஆற்றின் தென்கரையில் மிகப்பண்டைய காலத்தில் முருகனுக்காக உருவான திறந்தவெளி மரக்கோயில். இங்கு தான் முருகப்பெருமான் ஆதியில் தவமியற்றி சக்திகளை பெற்றதாக வரலாறு சொல்கிறது. பின்னர் முருகன் கதிர்காமத்தில் சூரசம்ஹாரத்தை முடித்த பின் தனது தங்க வேலை எறிந்ததாகவும், அந்த வேல் ஓர் புளிய மரத்தில் வீழ்ந்ததாகவும், அப்புளிய மரத்தின் கீழ் ஆதி வேடர்கள் முருகனின் வேலை வைத்து வழிபட்டு வந்த இடம்.

கட்டிடங்கள் இல்லாத, ஐயர் பூசாரி இல்லாத, மிகவும் சக்தி வாய்ந்த கோயில் இது. 12 சிற்றாறுகளைக் கடந்து 32 கி.மீ  ட்ராக்டர் வண்டியில் மிக கடினமாக பயணம் செய்தே இவ்சித்தர்கள் வனத்தை அடைய முடியும். 

இன்றும் யானைகள் ரூபத்தில் தேவர்கள் சித்தர்கள் கந்தர்வர்கள் வந்து இங்கு முருகனை வழிபடுவதை கண்ணுராக காணலாம். இன்று வரை சிலரால் மட்டுமே செல்லக்கூடிய அபூர்வ வனம். முருகன் அருள் இருந்தால் மட்டும் இவை சாத்தியம். 

ஆதியில் கதிர்காமத்தில் போகர் பெருமான் வைத்து பூஜை செய்து காணாமல் போன நவாக்சரி யந்திரம் , நவ பாஷாண வேல் இங்கு தான் இருப்பதாக பலரால் நம்ப படுகிறது. இந்த இடத்தை இன்றும் ஆதி கதிர்காமம் என்றே பழைய சிங்கள நூல்கள் , மஹா வம்ச நூல்கள் குறிப்பிடுகிறது.

கபில வனம் முருகனின் குடியிருப்பு என்று பல பழைய நூல்களில் கூறப்படுகிறது. எனவே, கபில வனம்  ஒரு பெரிய தெய்வீக சக்தியின் தளம் என்று நம்பப்படுகிறது. அங்கு மக்கள் விரதம் இருந்து  தினமும்  செல்கிறார்கள்..

பண்டைய செவிவழி  கதையின்படி, ஒரு மழை நாளில் அனைத்து சக்திகளையும் இந்த பூமியில்  இந்த இடத்தில் ஒரு புளி மரத்தின் (சிங்கள மொழியில் "சியாம்பலா" மரம்) கீழ் இறக்கி நவகோடி சித்தர்களுக்கும் தவத்தை கற்று கொடுத்தார். அதில் இருந்து "சியம்பலவா தேவலாயா" என்று பெயர் வந்தது. முருக பெருமான் இந்த புனித நிலத்தில் வசித்து சமாதி நிலையில் தியானிக்கிறார் என்று அனைத்து நூல்களும் சொல்கிறது.. 
எனினும் இங்கு முருக பெருமான் தனது ஒளி தேகத்தோடு கபில முனிவருக்கு காட்சி கொடுத்ததால் தான் இந்த வனத்திற்கு கபில வனம் என்ற பெயர் வந்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு முருக பெருமான் ஒளி தேகத்தோடு நவகோடி சித்தர்களோடு  நிஷ்டையில் அருள் புரிகிறார் என்றும்,போகர் கதிர்காமத்தில் வணங்கிய நவபாசான நவாக்க்ஷரி யந்திரம் மற்றும் முருகபெருமானின் வேல், ஆபரணங்கள்  போன்ற பொருட்கள் அனைத்தும் இங்கு எங்கோ தான் மறைக்கப்பட்டுள்ளதாகவும் பல நூல்களில் உள்ளது.

 எனவே இங்கு யாரும் வேடிக்கைக்காக கபிலவனம் செல்லக்கூடாது என்பது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது, அது கண்டிப்பாக ஒரு புனித  பயணம். இந்த புனித இடத்தை  பார்வையிட திட்டமிட்டால், நாம் ஒரு தூய்மையான இறை சாதகனாக மாற வேண்டும், பயணத்திற்கு குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு முன்பு தீய பழக்கங்கள் தவிர்த்து பிரம்மச்சரியம் மேற்கொண்டு கடுமையான விரதம் மேற்கொள்ள வேண்டும். கபிலவனத்தில் ஆன்மீக சக்திகளின் காரணமாக, இந்த நடைமுறைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள் வீடு திரும்பும் வழியில் பல தடைகளை எதிர்கொள்வார்கள். மேலும் இங்கு உள்ள காவல் தெய்வமான கடவற கலுபண்டா அப்பச்சி யானை வடிவில் வந்து விரதத்தை ஒழுங்காக மேற்கொள்ளாதவர்களை புனித புளியமரத்தை தரிசனம் செய்ய முடியாமல் விரட்டி அடிப்பது பல முறை நிகழ்ந்து உள்ளது. 

கபில வனம்  யாலா தேசிய பூங்காவின் மையத்தில் அமைந்துள்ளது.  பிளாக் IV மற்றும் கபில வனத்தை (சியம்பலாவா தேவலாயா) தரிசனம் செய்ய  மூன்று முக்கிய வழிகள் உள்ளன. இருப்பினும் இந்த வழிகள் அனைத்தும் யால காட்டில் உள்ளது.  எனவே இது யாருக்கும் எளிதான சவாரி அல்ல. மிகவும் கடினமான இந்த இயக்கிக்கு வின்ச், ஸ்னாட்ச் பெல்ட், ஹை லிப்ட் ஜாக், கூடுதல் எரிபொருள் போன்ற பாகங்கள் கொண்ட நான்கு சக்கர வாகனம் தேவைப்படுகிறது.  ஆனால் நான்கு சக்கர இயக்கி மற்றும் இயந்திர திறன் கொண்ட அனுபவமிக்க இயக்கி தேவை. நீங்கள் ஒரு காட்டின் நடுவில் இருப்பதால், தங்குவதற்கு ஓய்வு இடங்கள் இருக்காது.  எனவே உங்கள் முகாம் உபகரணங்கள் மற்றும் ஏராளமான குடிநீரை உங்களுடன் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

கபில வனத்திற்கான காட்டுப்பாதை வழிகள்

பாதை 1 - குமன-> குடா கெபிலித்த-> அடா கும்புகா-> கால் அமுனா-> கபிலவனம் புனித புளியமரம்  (முருகன் ஆலயம் )


பாதை 2 - யலா-> தொகுதி 2-> குறுக்கு கும்புகன் ஓயா-> குடா கெபிலித்த-> அடா கும்புகா-> கால் அமுனா -> கபிலவனம் புனித புளியமரம்  (முருகன் ஆலயம் )

பாதை 3 - மோனராகலா-> கோடயனா-> 5 கனுவா (5 வது இடுகை) -> கோட்டியகலா-> போகாஸ் ஹனிடியா சாலை அல்லது கம்மல் யயா சாலை->கபிலவனம் புனித புளியமரம்  (முருகன் ஆலயம் ) (கோட்டியாகலத்திலிருந்து கபிலவனம்  வரை 31 கி.மீ)

பாதை நிலை

இந்த வழிகள் பயணம் செய்வதற்கு மிகவும் கடினம்,4 wheel ஜீப்கள், பெரிய டிராக்டர்கள் போன்ற  வாகனங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும் 4 × 4 ஓட்டுநர் திறன்களுடன் 4 எக்ஸ் 4 மீட்பு பாகங்கள் தேவை (நம்பகமான வின்ச் + ஸ்னாட்ச் பெல்ட் + ஹை-லிப்ட் ஜாக்ஸ் + கூடுதல் எரிபொருள்).

இன்றும் இங்கு நவகோடி சித்தர்கள் தவமிருப்பதாக இன்றும் அனைவராலும் சொல்லப்படுகிறது. மேலும் இலங்கையில் அன்று முதல் அரசாங்க சிம்மாசனத்தில் யார் அமருவதாக இருந்தாலும் இங்கு சென்று வழிபட்ட பின் தான் தங்கள் அரச பதவிகளை ஏட்பது வழக்கம் ஜனாதிபதி பிரதமர் முதட்கொண்டு....

இவ்விடத்திட்கும் வேற்று கிரக வாசிகளுக்கும் தொடர்பு உள்ளதாக இன்றும் நம்பப்படுகிறது....

முறையாக விரதமிருந்து இங்கு சென்று வந்தால் அடுத்த வருடத்துக்குள் நினைத்து சென்ற காரியம் நடக்கும். உங்கள் வாழ்க்கையே மாறும் என்பது அங்கு சென்று வந்த அனைவரினதும் அனுபவம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment