​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 16 November 2025

சித்தன் அருள் - 2003 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு.- பகுதி 6


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - 05.10.2025 - பகுதி 6 (நிறைவு வாக்கு)


ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். 

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
 
அப்பனே அடுத்து, அண்ணாமலையில் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, பின் சாது சந்நியாசிகளுக்கு உடுத்த ஆடை தானம். அவை மட்டுமில்லாமல், சரியாகவே அறிந்தும் கூட, பின் பூஜை மகேஸ்வர பூஜை செய்வித்து மகிழ்விக்க, சித்தர்களும் அதை ஏற்றுக்கொண்டு சில பாவ வினைகள், பின் நிச்சயம் தன்னில் கூட. 

உலகத்திற்காக, நிச்சயம் அவர்களும், பின் அதாவது ஞானிகளும் வருவார்கள் அப்பா.  அப்பனே, இப்பொழுது ஆசிகள். பின் இதை தவறாமல் செய்யுங்கள். நிச்சயம், பின் என்னென்ன ஏது என்று அறிய உங்களுக்கு யாங்கள், பின் அனைத்தும் செய்ய தயாராகவே இருக்கின்றோம். ஆசிகள், ஆசிகள், பிள்ளைகளே. 

குருநாதர் :- அடுத்து, எவை என்று அறிய, அங்கே பின் குடைதானமும் செய்ய நன்று. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  : - (திருவண்ணாமலையில் மகேஸ்வர பூஜை நடத்த வேண்டும். அதற்குப் பின், அங்கு இருக்கும் சாதுக்கள் மற்றும் சந்நியாசிகளுக்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும். வஸ்திர தானம் என்பது ஒரு வேட்டி, ஒரு துண்டு கொடுத்து, அவர்களுக்கு அறுசுவை உணவு , சாதம், இரு வகை ரசம், அறுசுவை உணவுகள் வழங்கி, அன்புடன் படைத்து சேவை செய்வது.அறிந்தபின், திருவண்ணாமலையில் குடை தானம் செய்ய வேண்டும்.) 

குருநாதர் :- இவை என்று நிச்சயம் ஞானிகளும், பின் உங்களை ஆசீர்வதிப்பார். மீண்டும் எதை என்று அறிய, ஆசிகள் இன்னும் பலமாக வாக்குகளும் இருக்க நன்று. ஆசிகள், ஆசிகள், மீனாட்சி, பின் சொக்கநாதன், பின் இடமே, பின் அனைவரிடம் அறிந்தும் இதை புரிய, அனைவருக்குமே, பின் அவனுடைய ஆசிகள், பின் சமம்.

=================================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு நிறைவு 
=================================================


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்திதான் அருள்.....தொடரும்!

1 comment: