30/6/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு:
வாக்குரைத்த ஸ்தலம்: ஓதியப்பர் சன்னதி ஓதிமலை.நள்ளிரவு 12:11AM.
ஆதி சிவ சங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன். அகத்தியன்,
அப்பனே, நிச்சயம் தன்னில் அப்பனே, அருகிலிருந்து யானே நடத்தி வைத்தேன். அப்பனே, பின் உங்களுக்கு என்ன தேவை இதைவிட?
நிச்சயம் தன்னில் கூட உங்கள் குறைகளை கூட. அப்பனே, நிச்சயம் போக்குவேன். யானே, அப்பனே,
நிச்சயம் தன்னில் கூட. அவரவர், அப்பனே, நிச்சயம் பின் பாவத்தை பார்த்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே,
அதையும் கூட. அப்பனே, வருங்காலத்தில் உங்களுக்கு தெரியாமலே, நிச்சயம் யானே சரி செய்து விடுவேன். அப்பனே, நலங்களாக அதனால் குறைகள் வேண்டாமப்பா,
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எத்தனை,? எத்தனை? விதவிதமான மனிதர்கள். அப்பனே, எத்தனை?, எத்தனை? விதவிதமான பாவங்கள் மனிதனுக்கு!! அப்பனே,!!
அவையெல்லாம் செப்பிக் கொண்டிருந்தால், அவை செப்பிட்டும் அவை செப்பிட்டு, நிச்சயம் எதிர்முனையில். அப்பனே, பின் என்ன நடக்கும்???? என்பதை எல்லாம் யான் அறிவேன். அப்பனே
, நீங்கள் குழந்தைகள், என் குழந்தைகள். அதனால், பின் செப்பினாலும், நீங்கள் பின் பயப்பட்டு, பின் அறிந்து கூட, பின் இப்படி, இப்படி என்று இருந்து விடுவீர்கள்.
(மனிதர்களாகிய நாம் என்னென்ன பாவங்கள் செய்தோம் என்னென்ன கர்ம வினைகள் நமக்கு உள்ளது என்பதை எல்லாம் நமக்கு தெரிவித்தால் நாம் பயந்து மனமடைந்து போய் விடுவோம்
நாம் அனைவரும் சித்தர்களின் குழந்தைகள் குருநாதரின் குழந்தைகள் அதனால் நம்மை நல்வழியில் நடக்க வைத்து புண்ணியங்களை செய்ய வைத்து நம்மளுடைய பாவங்களை நமக்கே தெரியாமல் அகற்றி வருகின்றார்கள்)
அதனால், எங்கள் குழந்தைகளுக்கு பின் எப்படி?, பின் பாவத்தை உறிஞ்ச தெரியும் என்று எங்களுக்கு தெரியும்ப்பா,
நிச்சயம் அப்படியே உறிஞ்சிட்டு, நிச்சயம் உங்களுக்கு தேவையானதை யானே வழங்குவேன்.
அப்பனே, நிச்சயம் விதியை வென்றவர் உண்டோ? நிச்சயம், அப்பனே, இவ்வுலகத்தில் விதியை வெல்ல முடியாதப்பா,
பிரம்மன், அப்பனே, பின் எழுதியது எழுதியது தானப்பா,
இதனால் நீங்கள் இறைவன் அருகிலே இருந்தாலும், பின் பூஜைகள் செய்தாலும், அப்பனே, எத்தனை?, எத்தனை? தான, பின் தர்மங்கள் செய்தாலும், அப்பனே, நிச்சயம், அப்பனே, நிச்சயம் எவை என்று கூட கலியுகத்தில் மாற்ற முடியாதப்பா, !! இதனால் உங்களுக்காக, அப்பனே, பின் உழைத்துக் கொண்டிருக்கின்றேன். அப்பனே,
இதனால், நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, இவ் உங்கள் நம்பிக்கை, நிச்சயம், அப்பனே, பின் யான் காத்திருவேன். அப்பனே, மாற்றிடுவேன்
விதியை.
நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, எதை என்று புரிய, ஒவ்வொருவருக்கும், அப்பனே, ஒவ்வொரு குறையோடு தான்!!!
இருப்பினும், அப்பனே, பின் அன்போடு, அப்பனே, பின், அதாவது, அப்பனே, பின், இறைவனை நினைத்து, நினைத்து, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின் வருகின்றீர்களே!!!!!!. அப்பனே,
பின் ஆனந்தத்தில் ஆனந்தமப்பா,!!!
அப்பனே, நிச்சயம், எவ்வாறு, பின் கஷ்டத்திலும் கூட, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின், இறைவனை வணங்காமல், அப்பனே, பின், இறைவனை வணங்காமல், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. கலியுகத்தில், அப்பனே, இவ்வளவு கஷ்டங்களா????? என்று சென்று விடுவானப்பா, மனிதன்,
அப்பனே, பாதியிலே, இறைவனை, அப்பனே, பின், விட்டுவிட்டு சென்று விடுவானப்பா,
ஆனால், இறைவனை குறை கூறிக்கொண்டிருப்பானப்பா,
ஆனாலும், எத்தனை கஷ்டங்களாயினும், அப்பனே , நிச்சயம், தன்னில் கூட. பின், இறைவனையே, சேவித்து, நன்மைகளை செய்ய வேண்டும் என்று துடிதுடித்துக் கொண்டிருக்கின்றீர்களே. அப்பனே,
உங்களுக்கு யான் நன்மைகளையே செய்வேன். அப்பனே, வருங்காலத்தில்!!
கவலை விடுங்கள். அப்பனே, நிச்சயம், அப்பனே, விதியினை பார்த்தால், ஒவ்வொருவருக்கும், அப்பனே, ஒவ்வொரு வேதனையில் அப்பா!!, நிச்சயம், தன்னில் கூட.
அப்பனே, பின், யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேனப்பா,
அவையெல்லாம், நிச்சயம், யானே நீக்கிடுவேன். அப்பனே, உங்கள் இல்லத்தில், அனைவரும் இல்லத்தில், யான் வருவேன். அப்பனே, நிச்சயம், கவலையில் இல்லையப்பா, அறிந்தும் புரிந்தும் கூட.
இதனால், அப்பனே, நன்மைகளாகவே, நன்மைகளாகவே, அப்பனே, ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு, அப்பனே, இன்றைய நாளில் சக்திகள் கொடுத்திருக்கின்றேன். அப்பனே,
அவ் சக்திகள் போகப்போக புரியுமப்பா,
உங்களை நீங்கள் அறிவீர்களாக.
அப்பனே, நலங்களாக. இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. கலியுகத்தில், அப்பனே, மனிதனால், அப்பனே, பின், நிம்மதியாக வாழ முடியாதப்பா,!!!
இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. சித்தர்கள், யாங்கள், நிச்சயம், மனிதனுக்கு, நிச்சயம், தன்னில் கூட. கலியுகத்தில், அப்பனே, மனிதனால், அப்பனே, பின், நிம்மதியாக வாழ முடியாதப்பா,
இதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. சித்தர்கள், யாங்கள், நிச்சயம், மனிதனுக்கு, நிச்சயம், தன்னில் கூட. எங்கள் அருள் அறிந்தும் கூட, பின், பலமாக கொடுத்து, அப்பனே!!!
, ஐயோ, பாவம் என்று, நிச்சயம், வந்து கொண்டு, அப்பனே, பாவத்தை ஒழித்துக் கொண்டிருக்கின்றோம்.
அப்பனே!!
அப்பனே, சற்று பொறுமையாக இருந்தால், அப்பனே, நிச்சயம், அனைத்தும்,அப்பனே, முடியுமப்பா,!!!
நிதானத்துடன் செயல்பட்டால், அனைத்தும் முடித்து தருவோம். யாங்களே, அப்பனே,
அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின், ஆத்திரம் பட்டாலும், அப்பனே, விதியை மாற்ற முடியாதப்பா!!
அப்பனே, நிச்சயம், யாங்கள்தான் மாற்ற வேண்டும். அப்பனே,
இதனால், உங்கள் வினை, அப்பனே, இப்படி ஒவ்வொருவரையும் கூட. அப்பனே, பின், எப்படி,? ஏது? என்று கூட. அப்பனே, நிச்சயம், வாட்டுகின்றது. வருங்காலத்தில், என்பவை எல்லாம், யாங்கள் அறிவோம். அப்பனே,
நிச்சயம், தன்னில் கூட. அதற்கு ஏற்றார் போல், அனைத்தும், யாங்களே, மாற்றித் தருவோம்.
அப்பனே, வெல்க, அப்பனே,!!!
எப்பொழுதும், நிச்சயம், தன்னில் கூட, உங்கள் இதயத்திலே வாழ்ந்து கொண்டிருப்பேன். அப்பனே,!!!,
அப்பனே, நலங்களாக.
இதனால், அப்பனே, பின், வாழ முடியாத காலம். அப்பனே,இக் கலியுகம்.
நிச்சயம், அப்பனே, இருட்டில் இருக்கின்றானப்பா, மனிதன்,
அப்பனே, உங்களையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன். அப்பனே, ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு வினை!
ஆனாலும், அப்பனே, நிச்சயம், உங்களை யான் விட்டு விடுவதில்லை என்பேன். அப்பனே,
நிச்சயம், ஆசிகளை கொடுத்து, அப்பனே, பின், பகலுக்கு எடுத்து வருகின்றேன். அப்பனே, போதுமா? அப்பனே, ஆசிகள்!!!
அப்பனே, அவ்வாறு கொண்டு வந்துவிட்டால், அப்பனே, நீங்களே, அப்பனே, இன்னும், அப்பனே, பல மக்களுக்கு புண்ணியம் செய்வீர்களாக. அப்பனே,
இதனால், நீங்களும் புண்ணியங்கள் பெருக்கிக் கொள்ளலாம் என்பேன். அப்பனே,
அப்பனே, அத்தனை சக்திகளும் மனிதனிடத்தில் உள்ளதப்பா,
இதனால், அப்பனே, அவ்சக்திகள், அப்பனே, பின், நிச்சயம், சிலருக்கே, அப்பனே, பின், கொடுத்து, அப்பனே, அதை இயக்கிடுவேன் என்பேன். அப்பனே,
நிச்சயம், அனைவருக்கும் கொடுத்திட்டாலும், அப்பனே, நிச்சயம், எதை என்று புரிய, அப்பனே, புரியாமல் போய்விடுவான் என்பேன். அப்பனே, மனிதன்,
இதனால், அப்பனே, விதியை வெல்லும் சக்தி, அப்பனே, மனிதனுக்கு வருங்காலத்தில் சொல்லிக் கொடுப்பேன் என்பேன். அப்பனே,
அப்பனே, நீங்களே, அப்பனே, அன்புடனே, இறைவனை நேசித்து,!!!! நேசித்து,!!!..
ஆனாலும், துன்பத்தோடு தான் வாழ்ந்து வருகின்றீர்கள்.
ஆனாலும், அப்பனே, அத்துன்பம், அப்பனே, எப்படி போக்குவது?? என்பதெல்லாம், அப்பனே, வருங்காலத்தில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, நிச்சயம், அறிந்தும் புரிந்தும் கூட.
இதனால், அப்பனே, நிச்சயம், இன்பம், துன்பம், அப்பனே, இவை என்று புரிய, அப்பனே, அறிந்தும் கூட.
இதனால், அப்பனே, இரண்டுமே வைத்திருக்கின்றான் என்பேன். அப்பனே, இது மறைமுகமாக, அப்பனே, அறிவியல் வழியாக எடுத்துரைத்தால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், அணுவாகவும் செயல்படுகின்றது என்பேன். அப்பனே,
துன்ப அணு !! இன்ப அணு, !!
அப்பனே, நிச்சயம், அத் துன்ப அணுவை, அப்பனே, போக்குவதற்கு முதலில், அப்பனே, பல ஆலயங்கள், அப்பனே, பல வகையான இவ்வாறு மூலிகைகள், நிச்சயம், கொண்டு செய்தாலே, அப்பனே, அவ் அணுவை அழித்து விடலாம் என்பேன். அப்பனே,
(துன்ப அணுக்களை ஒழிக்க ஓதி மலையில் செய்தவாறு பல ஆலயங்களுக்கு சென்று இதுபோன்று பல்வேறு மூலிகைகளை பயன்பவேண்டும்ஹோமம் செய்ய வேண்டும்
இப்படி செய்யப்படும் ஹோமத்தில் தொடர்ந்து கலந்து கொண்டால் துன்ப அணுக்கள் ஒழிந்து விடும்)
நிச்சயம், வருங்காலத்தில் என் பக்தர்களுக்கு அதையும் தெரிவிப்பேன். அப்பனே,
அப்பனே, ஆனாலும், பின், அவ் துன்ப அணுவை, அப்பனே, அழிப்பதற்கு சாதாரணம் இல்லை என்பேன்.
. அப்பனே, அதை எப்படி அழிப்பது??? என்பதையெல்லாம், அப்பனே, உங்களுக்கே, அப்பனே, பின், உள்நுழைந்து, அப்பனே, சில சில வழியில் கூட, பின், செப்புவேன் என்பேன். அப்பனே,
நிச்சயம், அப்பனே, அனைவருமே எங்கள் குழந்தைகள், அப்பனே,
நிச்சயம், தன்னில் கூட, யாங்கள் காத்திருவோம். அப்பனே,
நிச்சயம், அப்பனே, பின், எங்களை நம்பி வந்துவிட்டீர்கள் அல்லவா?
அப்பனே, சிறிது காலம் பொறுத்தீர்கள் என்பேன்.
. அப்பனே, நிச்சயம், அப்பனே, எப்படி? நீங்கள் எல்லாம்,
நீங்கள் குழந்தைகள், நிச்சயம், என்னிடத்தில், நிச்சயம், தன்னில் கூட,
அதாவது, அழகாக, நிச்சயம், பின், இனிப்பு வாங்கித் தாருங்கள் என்று கேட்பீர்களாக. நிச்சயம், அறிந்து கூட, வாங்கித் தருகின்றேன், வாங்கித் தருகிறேன் என்று அழைத்துச் சென்று கொண்டே இருந்து மாற்றிடுவேன். அனைத்தும்,
அப்பனே, மனிதன் ஒவ்வொரு பின், அதாவது, நிச்சயம், தன்னில் கூட வினைக்காக, அப்பனே, நிச்சயம், அறிந்தும் கூட, அப்பனே, பின், எதை என்று அறிய போராடி, அதாவது, அப்பனே, பின், அனுபவிக்க ஏன்? மனித பிறப்பு எதனால் ஏற்படுகின்றது? என்பவை எல்லாம் விவரமாக குறிப்பிடுவேன். அப்பனே,
ஏன் நோய்வாய் படுகின்றான்? பின் அப்பனே, ஏன் இறக்கின்றான்? அப்பனே,
நிச்சயம், தன்னில் கூட, அனைத்தும் குறிப்பிடுவேன். என் பக்தர்கள், அப்பனே, அனைத்தும் தெரிந்து கொண்டு வாழ வேண்டும். அப்பனே,
நிச்சயம், தன்னில் கூட, முதல் வகுப்பிலே தேர்ச்சி பெற வேண்டும் என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் கூறிக்கொண்டே இருக்கின்றேன்.
அப்பனே, முதன்மை, இரண்மை, அப்பனே, இவ்வாறாக எடுத்துச் சென்றாலே, அனைத்தும் உங்களுக்கே புரியுமப்பா,
இதனால், அப்பனே, உங்களை அனைவருமே யான் இன்று கண்டிட்டேன். லோபாமுத்திரையோடு!!!
அப்பனே, இன்னும் ஆசிகள், அப்பனே, இன்னும் ரகசியங்கள் சொல்வேன். அப்பனே, பின், அதாவது, இப்பொழுது போதுமப்பா,
அனைவருக்குமே ஆசிகள் அழகாக யானேசெய்து முடித்துட்டேன். அப்பனே,
குருநாதரிடம் சில அடியவர்கள் சில சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்டனர் அவர்களுக்கு குருநாதர் உரைத்த பதில் வாக்கு.
ஒரு அடியவர் காசி செல்வது குறித்தான குருநாதரிடம் வைத்த விண்ணப்பத்திற்கு
குருநாதர் உரைத்த பதில்
காசி, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, அதாவது, திடீரென்று காசி யாத்திரை என்று சொல்லிவிட்டாய். அப்பனே, நிச்சயம், அப்பனே, அதாவது, பாவத்தை கொடுத்தவன்!!!! பாவத்தையே, பின், நிச்சயம், தன்னில் கூட அழிப்பானா ??என்று நீ கூறு.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
காசி யாத்திரை செல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்டு விட்டீர்கள் !!
குருநாதர் பாவத்தை.. அதாவது நீங்கள் முற்பிறப்பிலோ எப்பிறப்பிலோ செய்த கர்மாக்கு ஏற்ப உங்களுக்கு பாவம் ஏற்பட்டுள்ளது பாவத்தை உங்களுக்கு அதற்கு தண்டனையாக கொடுத்த இறைவனே அவ்வளவு சீக்கிரத்தில் பாவத்தை அழிப்பதற்கு வழியை ஏற்படுத்துவாரா என்று உங்களிடம் கேட்கின்றார்.
குருநாதர்:
அப்பனே இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின், ஒவ்வொருவரும் அழைத்து செல்பவரும் அனைவரிடத்திலும் பாவங்கள். அப்பனே,
இதனால், அப்பனே, கஷ்டங்கள் பட்டுதான் பார்க்க வேண்டும். ஈசனை!!
சொல்லிவிட்டேன். அப்பனே,
அவ்வாறு கஷ்டப்பட்டு கண்டிட்டால் மட்டுமே பாவ வினைகள் தீருமப்பா, !!
சுலபமாக கண்டிட்டால், அப்பனே, நிச்சயம், அப்பனே, சேராது எவை என்று கூட புண்ணியங்கள்!!!
போதுமா? உந்தனக்கு!!!
அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, சாதாரண மனிதனை காண வேண்டும்? என்றாலே எவ்வளவு கஷ்டங்களப்பா,
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
ஐயா நீங்கள் சாதாரண ஒரு மனிதரை பார்ப்பது என்றாலே அவரிடம் முன் அனுமதி பெற வேண்டும் அவரிடம் சொல்ல வேண்டும் அதன் பிறகு அவரை சந்திக்க வேண்டும் அப்படி இருக்க இறைவனை பார்க்க வேண்டும் என்றால் கஷ்டங்கள் பட்டு தான் ஆக வேண்டும்.
குருநாதர்:
அப்பனே!!, எங்கெல்லாம் நீ சிரமப்படுகின்றாயோ?, அங்கெல்லாம் புண்ணியம் சேருகின்றது என்று வைத்துக்கொள். அப்பனே, அவ்வளவுதான்!! சொல்லிக்கொடு. அனைவருக்கும் !!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
குருநாதர் கூறியது காசிக்கு செல்லும் உங்கள் அனைவருக்கும் பாவங்கள் இருக்கின்றது.. அதனால் காசிக்கு செல்வதென்றால் இறைவனை காண்பது என்றால் பல சிரமங்கள் கஷ்டங்களை கடந்து தான் பார்க்க வேண்டும் இதை அனைவருக்கும் கூறு என்று சொல்லுகின்றார்.
குருநாதர்:
அப்பனே, இதனால், நிச்சயம், தன்னில் கூட எதை என்று புரிய. அப்பனே, எவை என்று அறிய ஏன் அப்பனே, ஏன்? அப்பனே, பின், எங்கெங்கு? எதை என்று அறிய அறிய!!!
அவ்வளவு தூரத்தில் இருக்கின்றான் அவன்.
(ஈசன்)
அப்பனே, இறைவனை, அப்பனே, அலைந்து, திரிந்து, அடிபட்டு, மிதிபட்டு கண்டால்தான். அப்பனே, உத்தமம்.
அப்பனே, அனைத்தும் சுலபமாக கிட்டிவிட்டால், அப்பனே, இறைவனுக்கு மதிப்பு ஏதப்பா?????,
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இந்த உலகத்தில் எதுவுமே சுலபமாக கிடைத்துவிட்டால் அதற்கு மதிப்பு எதுவும் இல்லை என்று குருநாதர் குறிப்பிடுகின்றார்
குருநாதர்:
அப்பனே, நிச்சயம், அறிந்தும் புரிந்தும் கூட இன்னும், அப்பனே, சொல்கின்றேன். வாக்குகள், அப்பனே, குறை இல்லை. அப்பனே, நிச்சயம், இன்னும், அப்பனே,
இது தனி உலகம். அப்பா!!! என்று போகனே உரைத்திட்டான்.
அப்பனே, இதனால், அப்பனே, இதற்கு நிச்சயம் பல சான்றுகள் உண்டு.
அவற்றையெல்லாம் வெளிக்கொண்டு வரும்பொழுது, நிச்சயம் அனைத்தும் புரியுமப்பா,
அப்பனே, நிச்சயம், தன்னில் கூட சிலருக்கு கூட ராகு தோஷங்கள். அப்பனே, நிச்சயம், பாம்பு ஒன்று. அப்பனே, நிச்சயம், தன்னில் உமிழ்ந்திட்டு, அப்பனே, பின், அதை எடுத்துட்டு சென்றுவிட்டது.
(குருநாதரும் போகர் பெருமானும் வாக்குகளில் குறிப்பிட்ட அந்த நாக தேவதை இந்த பூஜையின் போதும் மறைமுகமாக வந்து சிலருக்கு ராகு கேது தோஷங்கள் இருந்தது அதை நீக்கிவிட்டு சென்றுவிட்டது நாக தேவதையின் ரகசியம் குறித்து சித்தன் அருள் 1592 பதிவில் உள்ளது அந்த பதிவில் நாக தேவதையை குறித்த குருநாதர் வாக்கின் சிறு குறிப்பு இன்னும் பல சிறப்புக்கள் உண்டு என்பேன் அப்பனே ஆனாலும் நவகிரகங்களுக்கும் சம்பந்தங்கள் உண்டு என்பதை போல் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது அப்பனே நாக வடிவத்தில் அப்பனே அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட இன்று இருக்கின்றது அப்பா
அதற்கும் சம்பந்தங்கள் அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய ராகு கேது என்றெல்லாம் தோஷங்கள் அப்பனே
கழியுமா ?????
நிச்சயம் கழியாது அப்பனே!!! ஏன் எதற்கு அப்பனே ஆனாலும்!!!!!......
இங்கு இருக்கின்றதே நாக தேவதை அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே.......அவள்தன் ஒரு வைரத்தை அப்பனே வைத்துள்ளாள் அப்பனே அறிந்தும் கூட வயிற்றினில் அப்பனே
அவைதன் நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது பின் மறைமுகமாகவே சிலசில ஒளிக்கற்றைகள் (வெளிப்படுத்தும்) பின் கண்ணுக்குத் தெரியாதப்பா!!!!
அப்பனே ஆனாலும் (ஓதி மலையில் தங்கி உறங்க வேண்டும்) உறங்கினால் புரியுமப்பா !!!!நிச்சயம் அறிந்தும் கூட நிச்சயம் அவள்தனை பார்த்து விட்டாலும்!!...
(இரவில் நாக தேவதை ஒளிக்கற்றையை வெளிப்படுத்தும் பொழுது)
பயந்து இறந்து விடுவானப்பா மனிதன்!!!
அதனால் தான் அப்பனே அனைத்திற்கும் காரணங்கள் உண்டு அப்பனே!!
(சில ஆலயங்களில்)
ஏன் இரவில் தங்கக் கூடாது?? சில ஆலயங்களுக்கு செல்லக்கூடாது?? ஏன் அப்பனே சில ஆலயங்களுக்கு கூட பெண்கள் அனுமதிப்பதில்லை??
அனுப்பாமல் அப்பனே இப்படியே எதை என்றும் அறிய அறிய அப்பனே... அனைத்தும் காரணத்தோடு தான் செய்கின்றார்கள் அப்பனே
ஆனாலும் இதையே அறிந்தும் கூட உண்மைதனை மறைத்து மறைத்து அப்பனே இன்னும் விளக்கங்கள்)
அப்பனே, நலங்களாகவே இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, மனிதனின் படைப்பு, அப்பனே, ஒரு அற்புத படைப்பு என்று!!!
ஆனாலும், அப்பனே, நிச்சயம், அதை ஏன், எதற்கு? அப்பனே, அதாவது சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். அப்பனே, மனிதனை படைத்து, அப்பனே, பின், மனிதனை காக்கும் அளவிற்கு, அப்பனே, நிச்சயம், அப்பனே, ஒரு பெட்டியும் கொடுத்துள்ளானப்பா,
அப்பனே, அதை சரியாக உபயோகப்படுத்தவே, உபயோகப்படுத்துவதே இல்லை. என்பேன், அப்பனே!!, அதை தூக்கி ஓரமாக வைத்துள்ளீர்கள். நீங்கள், அப்பனே,
அதை எப்படி? பின் எடுத்து, அப்பனே, உங்களை பின் சரி செய்ய என்றெல்லாம் யான் கூறுகின்றேன். அப்பனே,நிச்சயம்
அப்பனே, அறிந்தும் இதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, வினைகள் காலம். அப்பனே, அதாவது நோய்கள் காலம் என்பேன். அப்பனே, மனிதனுக்கு ஒவ்வொரு வினையிலும் கூட, அப்பனே, பின் சற்று ஏற்படுத்தி நெருங்க போகின்றது. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் நோய்கள் அப்பனே,
ஆனால் எப்படி சரிப்படுத்துவது? அப்பனே, நிச்சயம், பின் அதையும் கூறுகின்றேன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஒரு திருத்தலத்தில் இங்கேயே எதை என்று புரிய. அப்பனே,
இதனால், அப்பனே, நிச்சயம், மனிதனின் பின் அதை சீர் செய்ய. அப்பனே, நிச்சயம், நீடூழி, அப்பனே, வாழலாம் என்பேன். அப்பனே,
அப்பனே, இறைவன் அனைவருக்குமே, அப்பனே, அனைத்தும் கொடுப்பதில்லை என்பேன். அப்பனே,
நிச்சயம், ஒவ்வொன்றிலும், அப்பனே, பின் பிடுங்கி வைத்திருக்கின்றான் என்பேன். அப்பனே,
அதையும் கொடுத்துவிட்டால், அப்பனே, நிச்சயம், பின் படைத்தவனை, அப்பனே, கண்டுகொள்ள மாட்டார்கள் என்பேன். அப்பனே, மனிதன்!!
அதனால்தான் பிடுங்கி வைத்துள்ளானப்பா,
இதனால், அப்பனே, பக்தி பொய்யாக போகும் என்பேன். அப்பனே, அனைவருக்கும், அப்பனே,
பின் கொடுத்துட்டால், அப்பனே, உலகம், அப்பனே, பின் தீமையில் சென்றுவிடும். இதனால், அப்பனே, பின் ஒவ்வொருவருக்கும் நல் பக்தியில் உள்ளவருக்கு பிடுங்கி வைத்துக்கொண்டு, அப்பனே, இதன் மூலம் நிச்சயம் இன்னும் மாற்றுங்கள் என்று, அப்பனே, மாற்றிய பிறகு கொடுக்கின்றேன் என்று ரகசியமாக வைத்திருக்கின்றானப்பா, பத்திரமாக!!!!!
அப்பனே இதனாலதான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இங்கு இருப்பவர்களுக்கு, பின் அனைவருக்குமே ஒவ்வொன்றை பிடுங்கி வைத்துள்ளானப்பா, பத்திரமாக!!!
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நிச்சயம் இப்பொழுது கொடுத்துவிட்டால்!?!?!?!
, அப்பனே, நிச்சயம் பின், அதாவது இவ் இதை!,(ஆலயங்கள் பூஜைகள் இறைவன் தரிசனங்கள்) அதாவது, அப்பனே, பின் முருகனை பார்ப்பது எவர்?
(மனிதர்களுக்கு அனைத்தும் கொடுத்து விட்டால் அனைத்தும் கிடைத்துவிட்டால் இறைவனை மறந்து விடுவார்கள் ஆலயத்திற்கு செல்ல மாட்டார்கள் தர்ம நெறியை கடைப்பிடிக்க மாட்டார்கள்)
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இன்னும் ரகசியங்கள் சொல்கின்றேன். அப்பனே, ஒவ்வொன்றாக, அப்பனே, அனைத்தும், அப்பனே, பின் சொல்லிக் கொண்டிருந்தால், அப்பனே, புரியாதப்பா. நிச்சயம், அப்பனே, உலகத்திற்கு, அப்பனே, நன்மைகள் வேண்டும். அப்பனே, உங்களால் ஆசிகள்,
அப்பனே, பின் ஆசிகள்,
யான் உங்களுக்கு தேவையானதை யானே ஏற்படுத்துகின்றேன். ஆசிகளப்பா, ஆசிகள்.
ஆலயத்தில் சேவை செய்து வரும் அடியவர் ஒருவர் குறித்து குருநாதரிடம் கேட்டதற்கு
அப்பனே, எதை என்று புரிய அப்பனே, அவன் இறந்தவன் தானப்பா,
அப்பனே, பின், அதாவது, முருகன், அப்பனே, உயிர் கொடுத்து, அப்பனே, வைத்திருக்கின்றானப்பா, அவ்வளவுதான்.
அப்பனே, நிச்சயம், அப்பனே, இறந்தவனுக்கு என்ன கூறுவது?
இறைவன் படைப்பு. அப்பனே, நிச்சயம், முருகன் வேலைக்காக வைத்திருக்கின்றான். அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், முருகன் வேலை, அப்பனே, செய்வானப்பா.
அப்பனே, நிச்சயம், தன்னில் கூட சில தடை தாமதங்கள். அப்பனே, நிச்சயம், அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, முருகன் ஏற்படுத்திக் கொள்வான் என்பேன். அப்பனே, அழகாகவே!!
கவலை விடுங்கள்.
மற்றொரு ஓதி மலையில் சேவை செய்து வரும் அடியவர் குருநாதரிடம் தனக்காக வாக்குகள் கேட்ட பொழுது
அப்பனே, எப்படியோ போயிருக்க வேண்டியவன். அப்பனே, ஆனால் இப்படி வைத்திருக்கின்றான் என்றால், அப்பனே, முருகனை நினைத்து பெருமைப்படு.
கூடியிருந்த மற்றொரு அடியவர் குருநாதர் எனக்கும் ஆசிகள் தரவேண்டும் குருநாதா என்று கேட்டதற்கு
, அப்பனே, நிச்சயம், இன்றைய பொழுதில், அப்பனே, அனைவருக்குமே ஆசிகள் என்று, அப்பனே, போகன் சொல்லிவிட்டான். அப்பனே, குறைகளை விடுங்கள். அப்பனே, நிச்சயம், அதாவது சொல்லிக்கொண்டே தான் இருக்கின்றேன். அப்பனே, ஒவ்வொருவனுக்கும், அப்பனே, ஒவ்வொரு குறை. அப்பனே, அதையெல்லாம், அப்பனே, யானே நீக்கி, அப்பனே, உங்களிடத்தில் இருக்கின்றேன். அப்பனே, வருவேன். அப்பனே, நீக்கி தருவேன் என்பேன். அப்பனே, கவலை விடுங்கள். கவலை விடுங்கள்.
மற்றொரு அடியவர் மற்ற ஒருவருக்காக கேட்ட பொழுது
அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. முருகன் அழகாக, அவன் பின் எண்ணிய எண்ணங்கள் ஈடு ஏற்றுவான் என்பேன். அப்பனே,
ஏனென்றால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின், அதாவது, அவன் எண்ணிய இடங்கள் ஈடேறாமல். அப்பனே, நிச்சயம், அவன் ஆன்மா பிரியாதப்பா சொல்லிவிட்டேன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. இயக்குகின்றான் கந்தனே!!!
இயக்குகின்றான் கந்தனே. அப்பனே, நிச்சயம், எப்பொழுதும் அடியேனாகவே இரு. முருகனுக்கு!!
அடியார்
மடம் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று இருக்கின்றேன் குருநாதா ஆசிகள் வேண்டும்.
அப்பனே, கந்தனே இயக்குவான் என்று சொல்லிவிட்டேன். இதற்கு என்ன அர்த்தம்?
அப்பனே, நிச்சயம், தன்னில் கூட போதுமானதப்பா. அப்பனே, அவரவர் விருப்பப்படி அப்பனே, நிச்சயம், தேவையுள்ளவை. அப்பனே, நிச்சயம், உங்கள் மனதை, நிச்சயம், யான் ஆராய்ந்து பார்த்துவிட்டேன். அப்பனே, தேவையுள்ளதை கொடுப்பேன். அப்பனே, தேவையில்லாததை கொடுக்க மாட்டேன்.
சொல்லிவிட்டேன். அப்பனே, நிச்சயம், அப்பனே, அனைவருக்குமே ஆசிகள். அப்பனே, தேவையானதை, நிச்சயம், கொடுப்பேன். அப்பனே, நிச்சயம், அப்பனே, பாருங்கள். சக்தியை, முருகன் சக்தியை. அப்பனே, ஆசிகள் போதுமானதப்பா.
அப்பனே, இன்னும் வாக்குகள். அப்பனே, ரகசியத்தோடு குறிப்பிடுகின்றேன். இப்பொழுது போதுமானதப்பா. ஆசிகள், ஆசிகள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

.jpeg)

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete