26/2/2025 சிவராத்திரி அன்று ஈசன் பார்வதி தேவியார் காகபுஜண்டர் மகரிஷி உரையாடிய வாக்கு.
உரையாடிய ஸ்தலம். காக்கும் சிவன் காசி கங்கைக்கரை மீர் காட்.
பார்வதி தேவியார்:
அழகாக ஆடுகின்ற ஆட்டம் தனில் நோய்கள்!!... நோய்களை தீர்க்கும் எம் இறைவா!!! போற்றிப் பணிந்தே!! பணிந்து!! தேவியே!!! தேவியே செப்ப!!!.... நிச்சயம் என் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்க நிச்சயம் மாற்றங்கள்.
எம் ஈசா!!!!! அழகாக என் மனதில் குடி கொண்டுள்ளவனே !! பின் உன்னுள் பாதி !! பின் எந்தனுக்கும் அதாவது பின் உயிரை போன்று நிச்சயம் அனைத்தும் கொடுத்தவனே!!!!
பின் நிச்சயம் எடுத்துரைக்க நன்று!!!
ஒரு கேள்வியை இப்பொழுது பின் உம்மிடத்தில் உம்மிடத்தில் வைக்க போகின்றேன்!!! தேவனே !!!!தேவாதி தேவனே!!
நிச்சயம் மனிதனை பிறக்க வைக்கின்றாய்!!
ஆனால் ஏன் கஷ்டத்தில் கஷ்டத்தில் திரிய வைக்கின்றாய்!!????
நிச்சயம் நிச்சயம் தேவாதி தேவனே!!! எடுத்துரைத்து எடுத்துரைக்க வேண்டும்!!
ஈசனார் :
தேவியே!!! நிச்சயம் அதாவது அறிந்தும் மனிதனை பிறக்க வைக்கின்றேன் அனைத்து நலன்களை கொடுத்துத்தான் பிறக்க வைக்கின்றேன். ஆனால்!? .......
அதில் அவன் தன் சரியாக பயன்படுத்தாததினால் தான் நிச்சயம் வாழ்க்கை தோல்வியில் முடிந்து விடுகின்றது!!
பார்வதி தேவியார்:
மணாளனே !!அன்பான மனாளானே!! நிச்சயம் இதை யான் ஒத்துக்கொள்ள போவதில்லை!!
நிச்சயம் அவ்வாறு படைத்தால்!!! ஏன்? இப்படி எல்லாம் நோய்கள் வரவேண்டும் ?? நிச்சயம் ஏன் கஷ்டங்கள் வரவேண்டும்??
நீதானே படைத்தாயே!!!
நிச்சயம் இன்றைய நாளில் நிச்சயம் நீ தெரிவிக்க வேண்டும்!!!
ஈசனார்:
தேவியே !!அனைத்தும் அறிந்தவள் நீ!!!
ஆனாலும் என்னை கேள்விகளாக கேட்கின்றாயே எப்படி???
பார்வதி தேவியார்:
நிச்சயம் தேவாதி தேவனே !! நிச்சயம் உண்மை அனைத்தும் நிச்சயம் பின் நீ செப்புவது உண்மைதான்!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட படைத்தவர் நீர் !!அல்லவா!!! நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது எடுத்துரைக்க!! அதாவது நிச்சயம் தன்னில் என் கேள்விக்கு நிச்சயம் பின் பதில் கூற!!! வேண்டும்!!
ஈசனார்:
தேவியே !! என்னவென்று கூற !!??....அறிந்தும் இப்பொழுது எடுத்துரைக்கின்றேன்!!
அழகாக நிச்சயம் தன்னில் பின் அனைவருமே என் குழந்தைகள் என்று தெரியும்!!!
பார்வதி தேவியார்:
தேவாதி தேவனே !! நில்லும் !!
பின் பாடத்தை எல்லாம் நிச்சயம் தன்னில் பின் சொல்ல வேண்டாம்!!
முதலில் யான்
கேள்வியை கேட்டேன் அல்லவா!! அதற்கு பதில் கூற வேண்டும்!!
ஈசனார்:
தேவியே!! சொல்கின்றேன் அழகாக படைத்தேன் படைத்தேன் !! ஆனால் சிறு வயதில் என்னென்ன?? தேவைகள் குழந்தைக்கு என்று பின் ஆசைப்படுகின்றதோ?? அவை எல்லாம் யான் கொடுக்கின்றேன்!!
மீண்டும் அதாவது கல்வி வேண்டும் என்கிறான்!!! ஆனால் கொடுக்கின்றேன் திருமணம் என்றார்கள் அதையும் கொடுக்கின்றேன் நிச்சயம் தொழில் வேண்டும் என்று கேட்கின்றார்கள் அதையும் கொடுக்கின்றேன் பின் நிச்சயம் நோய் நொடி இல்லாமல் பின் வாழ வேண்டும் என்று கேட்கின்றேன் கேட்கின்றார் கேட்டுக் கொண்டே!!!! அவ் ஆன்மா பிறப்பெடுக்கின்றது.
ஆனாலும் அனைத்தும் சரி!! என்று ஒத்துக் கொண்டுதான் அனுப்புகின்றேன்!!
பார்வதி தேவியார்:
தேவாதி தேவனே!! நிச்சயம் இதையெல்லாம் பின் அப்படியே ஏன்??? பின் திருமணத்தில் தோல்வி அடைகின்றார்கள்!! பின் தொழிலில் பின் அதாவது நஷ்டத்தை சந்திக்கின்றார்கள் !!நிச்சயம் அறிந்தும் இன்னும் பல பல என்று !!
ஈசனார்:
நிச்சயம் தேவியே !!கேளும்.
நிச்சயம் கல்வியில் அதாவது கல்வி கொடுக்கின்றேன் ஆனால் சரியாக பயன்படுத்துவதே இல்லை !! அதனால் தோல்வியுற்று விடுகின்றான்!!!
இது என் தவறா??? இது!!!
நிச்சயம் பின் தொழிலும் கொடுக்கின்றேன் ஆனால்
அங்கும் தோல்வி அடைகின்றான் ஏன்?? எதற்காக??? தேவையில்லாததை எல்லாம் நிச்சயம் செய்கின்றான் !!
இது யார் மீது தவறு????
மீண்டும் திருமணம் பாக்கியத்தையும் கொடுக்கின்றேன் பின் ஆனாலும் பின் என்னென்ன?? தவறுகள் செய்கின்றார்கள் என்பதையெல்லாம்!!!......
ஆனாலும் அதில் கூட அவனே தான் தோல்வி அடைந்து விடுகின்றான் அறிந்தும் மீண்டும் பிள்ளைகளை கேட்கின்றார்கள் அதனையும் கொடுக்கின்றேன் பின் அதில் கூட நிச்சயம் தன்னில் கூட இவர்கள் ஒழுங்காக இருந்தால்தானே அப் பிள்ளைகளும் கூட ஒழுங்காக வளரும்?!?!?!!! தேவியே புரிந்து கொண்டாயா !!!
பார்வதி தேவியார்:
நிச்சயம் தேவாதி தேவனே!! இவையெல்லாம் கதைகளாக சொல்லலாமே தவிர யான் ஒத்துக் கொள்ளப் போவதில்லை!!! ஏன் எதற்கு?? நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட... அறிந்தும் எவை என்று புரிய இவையெல்லாம் பின் அதாவது யான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்!!!
நிச்சயம் என் கேள்விக்கு பதில் தாரீர்!!!
காகபுஜண்டர் மகரிஷி::
நிச்சயம் அறிந்தும் அன்னையே!!! புசுண்ட முனி செப்புகின்றேன்!! அறிந்தும் அன்னையே!! பின் தேவாதி தேவன் அல்லவா!!! கருணை மிகுந்தவன் அல்லவா!!!
அனைத்திற்கும் அதாவது அனைத்தும் சமமாக பார்க்கின்றவன் அல்லவா!!
பின் இப்படி??? பின் அவரை போய்?? கேள்விகள் கேட்கலாமா???
பார்வதி தேவியார்::
புசுண்டனே நீர் நில்லும்!! நிச்சயம் பின் இடை இடையே வந்து.. பின் அனைத்தும் கெடுத்திடுவீர் நீர்.. நிச்சயம்... அதனால் நில்லும்.
காகபுஜண்டர் மகரிஷி.
தேவியே !! அதாவது சந்தோஷம் என் தாய் இவ்வாறு சொல்கின்றார் அல்லவா எனக்கு மிக்க மிக்க சந்தோஷமே!!!
இருந்தாலும் உள் நுழைகின்றேன்!!
நிச்சயம் பின் ஈசனார் அனைத்தும் எந்தனுக்கு கொடுத்தார் அல்லவா அதனால்!!!
பார்வதி தேவியார்:
பின் புசுண்டனே !! பின் எப்படி இப்படி சொல்லலாம்??? ஈசன் மட்டும் தான் கொடுத்தாரா???
அதாவது பின் இப்பொழுது.. நிச்சயம் யான் கொடுக்கவில்லையா?????
காகபுஜண்டர் மகரிஷி.
பின் அன்னையே!! நிச்சயம் அன்னையில்லாமல் தந்தையா???
பார்வதி தேவியார்:
ஆஹா!!!! புசுண்ட முனியே!! அழகாகவே நிச்சயம் பின் மறைக்கின்றாய் அல்லவா!!
காகபுஜண்டர் மகரிஷி.
நிச்சயம் இல்லை தாயே!!! உண்மையில் உன் மீதும் அளவு கடந்த பாசங்களே!! ஆனாலும் அவ் பாசத்திற்காக என்னை ஏதாவது பின் நிச்சயம் திட்டி தீருங்கள்!! நிச்சயம் அறிந்தும்!!
பார்வதி தேவியார்:
பின் பாசத்திற்குரியவனே!!! பாசம் உள்ளவனே புசுண்ட முனியே!!! எம் அருள் நிச்சயம்... கடை நாளும் உண்டு என்பதை எல்லாம் நீ அறிந்திருக்கின்றாய் அல்லவா!!!
காகபுஜண்டர் மகரிஷி:
நிச்சயம் பின் அதாவது பின் அறிந்தும் கூட அதாவது தாயவள் திட்டி தீர்த்தாலும் பின் நிச்சயம்.. பின் தந்தைக்காக யான் இங்கு வருகின்றேன்.
அதனால் நிச்சயம் தந்தையின் கருணையை பற்றி சொல்லப் போகின்றேன்.
நிச்சயம் அவ்வாறு அறிந்தும் எதை என்று புரிந்தும் நிச்சயம் இக்காசி தன்னிலே நடந்தது.
தேவியே நீரும் (நீங்களும்) அறிந்திருப்பீர்கள்!!!
ஆனாலும் இக் கேள்விக்கெல்லாம் நிச்சயம் பின் அதாவது தந்தை பதில் நிச்சயம் அமைதி காக்கட்டும்.
புசுண்டன் யான் செப்புகின்றேன்!!!
பார்வதி தேவியார்:
சரி புசுண்டரே!!! பின் செப்பி!!! பின் அறியும்!!!.. யான் அமைதியாக நிற்கின்றேன்!! அறிந்தும்!
காகபுஜண்டர் மகரிஷி:
அதாவது தேவியே !! நீயே!! ஆட்சி செய்கின்றாய் காசி தன்னில்!!
நிச்சயம் இங்கு சில வருடங்களுக்கு முன்பே அறிந்தும் ராமன் லட்சுமணன் என்று இரண்டு பேர்!!! இவர்களைப் பற்றி சொல்கின்றேன்.
இவர்களது பெற்றோர்கள் குழந்தைகள் இல்லை!! அதாவது இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
அதாவது தந்தையை... நினைத்து நினைத்து தந்தை (ஈசனார்) மீது!! பேரன்பு கொண்டவர்கள் இவர்களது தாய் தந்தையர்!
இதனால் எங்கு சென்றாலும் எதனை சென்றாலும்... எப்பரிகாரம் செய்தாலும் பலிக்கவில்லையே என்று நிச்சயம் இறந்து விடலாமே !! நாம் இறந்து விடலாம் என்று எண்ணி இக் கங்கை தன்னில் பின் குதிக்க!!!... நிச்சயம் ஈசன் அதாவது தர்மம் ஏந்துபவனைப் போல் வந்து ஏன் இதற்கு இப்படி ஏன் பின்... மாண்டு கொள்ள நினைக்கின்றீர்கள் நீங்கள் என்றெல்லாம்!!!
அவர்களும் ஆனாலும் இல்லை பின் நாங்கள் எங்கேயோ எல்லாம் சென்றோம்... ஈசனை வணங்கினோம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது என்று!!!
தர்மம் வேந்துபவன் போல் வேடத்தில் வந்த ஈசனும்
நிச்சயம் குழந்தை பிறக்கும் நீங்கள் போங்கள் என்று!!!
பின் நிச்சயம் அறிந்தும்... ஈசன் கருணை மிக்கவன் என்று... அதாவது ஈசன் அதாவது... தந்தை வாயாலே!!
சரி என்று அவர்களும் சென்று விட்டார்கள் . நிச்சயம் பின்.. பிறந்து பின் அறிந்தும் அதாவது குழந்தை பின் அறிந்தும் உண்மைதனை எதை என்று கூட.. அதாவது இரண்டு குழந்தை அதாவது ராமன் லட்சுமணன் போல் என்று இருப்பார்கள் என்று!!
பின் அதாவது தந்தையே !! (ஈசனே வரம்) ஏதாவது நிச்சயம் அதே போல் பின் உடனடியாக கர்ப்பமுற்று நிச்சயம் தன்னில் பின் ஈர் (இரண்டு) குழந்தை!!
அதற்கு அதாவது நிச்சயம் சொன்னவாறே.. அதாவது கணவன் பின் அதாவது இல்லத்தவளும் பின் பேசிக்கொண்டு நிச்சயம் பின் அதாவது கங்கை தன்னிலே உயிரை மாய்க்க சென்றோமே!!!...
அங்கு ஒருவர் நிச்சயம் சொன்னாரே!!... நிச்சயம்.. ராமர் போல் லட்சுமணன் போல் என்று நிச்சயம்... அவர்கள் பெயரையே வைப்போம் என்று நிச்சயம் ராமன் லட்சுமணன் என்று இரு குழந்தைகளுக்கும் பெயர் வைத்து விட்டார்கள். நிச்சயம்.
ஆனாலும் அறிந்தும் பின் சிறுவயதிலிருந்தே சிவபக்தியை கற்றுக் கொடுக்க!! கற்றுக்கொடுக்க!!
தாய் தந்தையர்!!
நிச்சயம் பின் அனுதினமும் பின் அதாவது அனுதினமும் இங்கிருக்கும் நிச்சயம் பின் அறிந்தும் அவர்களே... நிச்சயம் தன்னில் கூட பின் உணர்ந்தும் கூட... லிங்கத்தை வைத்து அனுதினமும் வேண்டிக் கொண்டு வேண்டிக்கொண்டு...
அவ் லிங்கமும் அறிந்தும் பின் யான் சொல்வேன் அதாவது..... அகத்தியர் சொல்வார்.. அறிந்தும்!!!
(அவர்கள் வணங்கிய சிவ லிங்கத்தைப் பற்றி குருநாதர் அகத்திய பெருமான் வந்து விளக்கமாக வாக்கில் கூறுவார் காசியில் எங்கு இருக்கின்றது என்று)
அறிந்து விட்டேன் அறிந்தும் பிறர் அறியா வண்ணம் நிச்சயம் இதனால் அனுதினமும் அதாவது நிச்சயம் பின் இருவரும் வயதுக்கு வந்தனர். நிச்சயம் அதாவது இருவரும் கூட !!
ஒருவர் அதில் அதாவது லட்சுமணன் என்பவன் அதாவது நிச்சயம் அனைவரும் நன்றாக படிக்கின்றார்கள்!! எனக்கு பின் முதல் தரத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்று !!
நிச்சயம் அறிந்தும் கூட அவ் ஆசையை நிச்சயம் அறிந்தும் பின் நிறைவேற்றினார்.
ஆனால் மற்றொருவனும் கூட ஏதும் நினைக்கவில்லை!!!... நமச்சிவாயா நமச்சிவாயா என்று இருந்து கொண்டே!! எதையும் கேட்காமல்!!
பின் இப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் அதில் ஒருவன். நிச்சயம் அறிந்தும் எதை என்றும் எடுத்துரைக்க பின் அதாவது பின் அதாவது மறைமுகமாகவே ஈசன் பின் அதாவது எந்தனுக்கு... ஒரு காதலி வேண்டும்!! பின்
அனைவருமே!!!
(அனைவரும் காதலிக்கின்றார்கள் திருமணம் செய்து கொண்டிருகிறார்கள் அதேபோல் எனக்கும்) பின் நிச்சயம் என்று!!
அதாவது பின் அதையும் கொடுத்தான் என் தந்தை ஈசன்.
ஆனாலும் மற்றொருவனோ எதையும் வேண்டிக் கொள்ளவில்லை!!! அறிந்தும் நமச்சிவாயா!! நமச்சிவாயா!! நமச்சிவாயா!! என்று எப்பொழுதும்!!!
நிச்சயம் அதையும் அவனுக்கு கொடுத்திட்டான்!!! ஆனாலும் நிச்சயம் மீண்டும் வேண்டிக் கொண்டான் ஒருவன்!! ஈசனிடத்தில். அதாவது என் தந்தையிடத்தில்!!
அறிந்தும் அதாவது மீண்டும் அறிந்தும் அதாவது மணமுடிக்க வேண்டும் இவள் தனையே என்று மணம் முடிக்க வேண்டும் என்று!!!
நிச்சயம் அதாவது தந்தை ஈசனே மணமும் அவனுக்கு முடித்து விட்டான்!!!(திருமணம் செய்துவிட்டார்)
அறிந்தும் !!
எதை என்று பின் இன்னும் யான் சொல்ல!!!!......!?
தாயே!!!.... அறிந்தும் மீண்டும் நிச்சயம் அழகாக குழந்தைகள் வேண்டும் என்று!!!
பின் அதாவது என் தந்தையே மீண்டும் அழகாக குழந்தைகளை கொடுத்தார்.
ஆனாலும் அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட!! மணத்தையும் கொடுத்தார் ஆனாலும் பின் மீண்டும் அதாவது கல்விகளில் அதாவது இன்னும் ஒரு பெரிய தொழிலை கொடு என்று கேட்டான்!!!
நிச்சயம் அதையும் என் தந்தை கொடுத்தார்!!! ஆனாலும் அனைத்தும் கிட்டியது !! ஆனால் மற்றவனுக்கு ஏதும் கிட்டவில்லை!! அதாவது இவ் விஷயங்கள் 40 வயதுக்குள்ளே அனைத்தும் கிட்டிற்று ஒருவனுக்கு!!!
மற்றொருவனுக்கு ஒன்றும் கிட்டவில்லை!!
ஆனால் ஒருவன் சொன்னான் பின் அதாவது நிச்சயம் பின் அதாவது பின் நம் இருவரும் கூட நிச்சயம் இறைவனை வணங்கினோமே!!!!!! அதாவது எந்தனுக்கு மட்டும் எவ்வளவு கொடுத்திருக்கின்றான்!!!!! உந்தனக்கு மட்டும் ஏன் கொடுக்கவில்லை?? என்று நிச்சயம்!!
ஆனாலும் மற்றொருவன்
நமசிவாய!! நமசிவாய!! என்று!!
சரி நீயாவது நன்றாக இரு !!என்று!! பின் அறிந்தும் உண்மைதனை கூட என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட
ஆனாலும் நிச்சயம் அதாவது பின்
ஏசினார்கள் !!அனைவருமே இவனை ஏசினார்கள்!!
நிச்சயம் பின் அதாவது அண்ணன் தம்பிகள் பின் அதாவது இருவருமே சேர்ந்து பூஜைக்கு செல்வார்கள்!! நிச்சயம் அனைத்தும் செய்வார்கள் ஒருவனுக்கு மட்டும் அனைத்தும் கிட்டியது!! இன்னொருவனுக்கு இல்லையே!! ஏதும் இல்லையே !! என்று நிச்சயம் அறிந்தும் கூட அனைவரும் தவறாக நினைத்தார்கள்!! நிச்சயம் அதாவது இவந்தனுக்கு ஈசன் ஏன் கொடுக்கவில்லை? என்றால் இவன் தவறானவன் !!
அதனால் தான் ஒன்றுமே கிடைக்கவில்லை என்று!!
இதனால் தாய் தந்தையர் கூட மனம் வருத்தமுற்றனர்!!
மனம் வருத்தமுற்று அறிந்தும் நிச்சயம் என் பிள்ளை அதாவது பின் அனைவருமே சொன்னார்கள் ஊரார்கள் அனைவருமே!!!
நிச்சயம் இவனுக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே இதற்குக் காரணம் நிச்சயம் இவன் திருடன் திருடன் என்று!!
ஆனாலும் தாய் தந்தையோ நிச்சயம் இல்லை !!அறிந்தும் அதாவது நிச்சயம் என் மகன் அவ்வாறு தவறு செய்திருக்க மாட்டான் நிச்சயம் பின் படைத்தது இறைவன் என்று அதாவது அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட!!
ஆனாலும் ஒருவன்
யான் நிச்சயம் இறைவனை வணங்குகின்றேன் அவ்வாறு ஆனாலும் அமைதியுற்று!! மீண்டும் நிச்சயம் தன்னில் கூட அவ் லிங்கத்திடம் வந்து லிங்கத்தின் அருகே வந்து நமச்சிவாயா !நமச்சிவாயா!!
யான் என்ன? உன்னை கேட்டு விட்டேன்???
பின் அறிந்தும் யான் அறிந்தும் உன்னிடம் ஒன்றுமே கேட்கவில்லையே!!!
நமச்சிவாய நமச்சிவாயா நமச்சிவாயா என்று நீதானே !!! பின் அறிந்தும் அனைத்தும் நீதானே!!! என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் !!! எதை என்று புரிய !!!
மீண்டும் அறிந்தும் இதன் உண்மையை விளக்க !!!
பின் அனைத்தும் (லட்சுமணன் எனும் பெயர் கொண்டவனுக்கு) கிட்டியவனுக்கு கல்வியும் பின் அழிந்தது!! அறிந்தும் எதை என்று புரிய ஆனால் கல்வியை வைத்துக்கொண்டு தவறான பின் வேலைகள் எல்லாம் பின் செய்தான் இதனால் பின் அவ் (கல்வி) அறிவு மங்கியது !!
அதாவது அறிந்தும் எதை என்று அறிய அதாவது ஒரு பெண்ணையும் கூட காதல் திருமணம் செய்தான் அல்லவா நிச்சயம் இப்பணங்கள் பின் வந்தபின் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.
நிச்சயம் தன்னில் அறிந்தும் எதை என்று புரிய!!!
இதனால் இல்லறத்தில் சிக்கல்கள்!! பின் மீண்டும் அதாவது..அப் பெண் சொன்னாள்!! அதாவது இல்லறத்தவள்!! சொன்னாள்!!... நிச்சயம் இவந்தன் கேடு கெட்டவன்.. அதாவது நிச்சயம் ஈசனையே ஏமாற்றுகின்றான்!!!
அதாவது பக்தி பக்தி என்று சொல்லி.. என்னை ஏமாற்றி நிச்சயம் பின் திருமணம் செய்து கொண்டு நிச்சயம் இப்பொழுது வேறொரு பெண்ணுடன் சுற்றுகின்றான்.
அதனால் நிச்சயம் வந்துவிடு!! என்று இதனால் அவராலும் தொந்தரவுகள் பின் பிள்ளைகளாலும்.. தொந்தரவுகள் பின் இழுத்துச் செல்ல இதனால் மனக்குழப்பங்கள்.
அறிந்தும் இதன் உண்மையைக் கூட அறிந்தும் மீண்டும் தொழிலில் நஷ்டங்கள் ஏனென்றால் நிச்சயம் ஏதோ பின் ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆனால் இன்னும் வளர வேண்டும் என்று... சில சில வழிகளிலும் கூட பின் சிந்தித்து தவறான வழிகளில் எல்லாம் சிந்தித்து இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஓடோடி வந்து பின் அவ் இல்லறத்தவள் அவன் பெற்றோரிடம் நிச்சயம் அறிந்தும் கூட பின்... பெற்றெடுத்தீர்களா??? பிள்ளைகளை... நிச்சயம் பின் இப்படித்தான் இவன் செய்வானா???? என்று காறித் துப்பி !!! அறிந்தும்.
இதனால் அவர்களுக்கும் மனக்குழப்பங்கள்!!!
நிச்சயம் தேவியே!!! புரிந்து கொண்டாயா!!! அறிந்து கொண்டாயா!!!.. அறிந்தும் எதை என்று புரிந்தும். நிச்சயம் தன்னில் கூட தன் தாய் தந்தையே அறிந்தும் இங்கு உன்னைத்தான் அறிந்தும்... இவ்வளவு கருணை படைத்தவர் எம் தந்தை!!!
அதாவது அனைத்தும் கொடுத்தார்!!! பின் ஆசைப்படுவதெல்லாம் கொடுத்திருக்கின்றார்.
ஆனால் இதில் யார் தவறு????? அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட எதை என்று விளக்கங்கள்!!!
ஆனாலும் இதற்கு கூட சில மனிதர்கள் நிச்சயம் அனைத்தும் இறைவன் தானே என்று!!!
ஆனாலும் இதற்கும் கூட
அகத்தியன் வந்து இன்னும் சில புத்திகளை புகுத்தும் பொழுது... நிச்சயம் அறிந்தும் சில மூடநம்பிக்கைகள் ஒழியும்!!!
அப்பொழுது புரியும் உண்மை நிலை!!!
இதனால் நிச்சயம் எதை என்று புரிய அறிந்தும் எதை என்று புரிய!! அதனால் அனைத்திற்கும் தொல்லை!! கடைசியில் தாய் தந்தையரும் கூட பின் மாண்டு விட்டார்கள்!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் எதையும் கேட்காமல் பின் ஈசனே கதி என்று இருந்தவனுக்கு( இராமன் எனும் பெயர் கொண்டவனுக்கு) நிச்சயம் தன்னில் கூட கடைசியில் ஒன்றை கேட்டான்!!! நிச்சயம் பின் என் தாய் தந்தையர் நிச்சயம் பின் இங்கு அறிந்தும் யான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்!!
எந்தனக்காக ஒன்று செய்யும்!!! என் தாய் தந்தைக்கு உயிர் பிச்சையை கொடுங்கள் என்று நிச்சயம்!!
பின் மனம் இரங்கினார்!! தந்தை !! அதாவது ஈசன்!! பின் கொடுத்துவிட்டார்!!
ஆனால் அனைத்தையும் 40 வயதில் அள்ளி கொடுத்து விட்டார்!!!
ஆனால் அறிந்தும் இதைத்தான்... நிச்சயம் இப்பொழுதெல்லாம் மனிதர்கள் பின் வேண்டும் வேண்டும் என்று ஆசைகள் ஆசைகள் வளர்ந்து வளர்ந்து அதற்கு தகுந்தார் போல என் தந்தை கொடுக்கின்றார்!! ஆனாலும் சரியாகவே உபயோகிப்பதே இல்லை!! நிச்சயம் அறிந்தும் எதை என்று கூற!!
பார்வதி தேவியார்:
நிச்சயம் பின் பாசத்திற்குரியவனே புசுண்டனே!! பின் அழகாகவே நீர் சொன்னீர்!!! ஆனந்த கண்ணீர்!!! நிச்சயம் யானும் பின் அதாவது சில சோதனைகளுக்காகவே உன் தந்தையை பின் இவ்வாறெல்லாம் கேட்டேன். நிச்சயம் எந்தனுக்கும் தெரியும்.
பின் நிச்சயம் சரி!!! இன்னொரு கேள்வியையும் யான் கேட்கப் போகின்றேன் பின்!!!
ஈசனாரைப் பார்த்து பார்வதி தேவியார்!!!
பின் மணாளனே!!!! கருணை மிகுந்தவரே!!! நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அதாவது இவ்வுலகத்தில் பணம் வேண்டும் பணம் வேண்டும் என்று நிச்சயம் தன்னில் கூட கேட்கின்றார்களே!!!
அறிந்தும் நிச்சயம் பின் அறிந்தும்... அதாவது பின் கொடுத்தும்!!!!!...... பின் ஏமாறுகின்றார்களே??? ஏன் எதற்கு??? இதற்கு நிச்சயம் பதில் வேண்டும்!!!
ஈசனார்:
அதாவது தேவியே இவ்வளவு நேரம் புசுண்டன் எடுத்துரைத்தான்!!! தேவியே சொல்கின்றேன்!!!
நிச்சயம் அதாவது வாழ்வதற்கு பணம் பின் வேண்டும் என்று மனிதன் நினைக்கின்றான்.. அதை யான் கொடுக்கின்றேன் அழகாகவே!!!
ஆனாலும் இன்னும் பேராசைகள் ஆகின்றது.. அதாவது இவ்வளவு கொடுத்தால் பின் அதாவது அறிந்தும் இவ்வளவு வரும் என்று.
ஆனால் அவ் பேராசைகள் மூலம் அதாவது அவனே ஆசைகள் ஆசைகளில் கூட அதாவது பின் இதுவே இறைவன் கொடுத்திருக்கின்றான் என்று நினைத்து விட்டாலே இன்னும் பணங்கள் வரும்.
ஆனால் அங்கு இறைவனை மறந்து விட்டு பணத்தின் மீது ஆசைகளை கொண்டு நிச்சயம் இன்னும் பணம் வேண்டும் பணம் வேண்டும்.. எவ்வாறு சம்பாதிக்கலாம்? என்றெல்லாம் பின் நிச்சயம் செல்கின்ற பொழுது.. நிச்சயம் அறிந்தும் கூட அவ் பணத்தை மற்றொருவனிடம் கொடுக்கின்றான்..
அவ்வளவுதான்..
பணம் சென்றது!! சென்றது தான்!!
அறிந்தும் எதை என்று மீண்டும் வந்து நிச்சயம் என் முன்னே நிற்கின்றான்.. அதாவது எவ்வாறு என்பதையெல்லாம்.
இங்கு இதில் யார் தவறு?? சொல் தேவியே!!!!
பார்வதி தேவியார்:
நிச்சயம் சரி!!! அவ்வாறு ஆசைகள் ஆசைகளை நீங்கள் தானே படைத்தீர்கள்!!!... நிச்சயம் இதற்கு பதில் வேண்டும்!
ஈசனார்:
தேவியே யானா??????
ஆசைகளை படைத்தேன்?????
நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய.. அனைத்துமே!! அனைத்து ஜீவராசிகளையுமே ஒன்றாகத்தான் படைக்கின்றேன்.பின் என்னென்ன? எதை? எப்படி? வாழ வேண்டும்? எவ் வயதில் பின் மோட்சகதி அடைய வேண்டும்?
நிச்சயம் தன்னில் கூட அனைத்திற்கும் பின் அதாவது அறிந்தும் என் குழந்தைகள் தானே.. என்று அதனால் அறிந்தும் சமமாக தானே கொடுக்கின்றேன்.
ஏன்!?.
காகபுஜண்டர் மகரிஷி:
பின் அன்னையே!! அன்னையே!! அப்படியெல்லாம் தந்தையை கேட்டு விடாதீர்கள்... நிச்சயம் தன்னில் கூட... அனைவரையுமே நிச்சயம் அனைத்து ஜீவராசிகளையும் கூட நிச்சயம் இயக்குபவர் நிச்சயம் தந்தையே!!
ஆனாலும் ஒரு உயிரை கொல்கின்ற பொழுது அழுவதில்லை!!! மற்றொரு உயிரைக் கொல்கின்ற பொழுது.. சந்தோசம் அடைகின்றான் மனிதன். அதாவது இது எவ்வாறு நியாயம்?????
பின் அன்னையே தெரிந்து கொண்டீர்களா??? நிச்சயம் தன்னில் கூட ஒரு உயிரை கொன்று சந்தோசம் அடைகின்றான்... பின் ஆனால் அவன் இல்லத்தில் ஏதாவது நிச்சயம் அசம்பாவிதம் நடந்து விட்டால்.. அழுகின்றான்!! இது எவ்வாறு நியாயம்???
இதுதான் மனிதனுடைய நியாயமா???
பார்வதி தேவியார்:
நிச்சயம் புசுண்டனாரே!!! நீர் சிறிது அமைதி காக்கும்!!
நிச்சயம் மணாளனே.. அழகாக நிச்சயம் அறிந்தும் பின் அதாவது ஏன்? எதற்கு?
அனைத்திற்கும் காரணம் நீர்தானே??
நிச்சயம் நீர் காப்பாற்றி விடலாமே!!!!
ஈசனார்:
நிச்சயம் தேவியே!!! அறிந்தும் சொல்கின்றேன்!! அறிந்தும் அனைவரையும் இன்னும் இன்னும் பிறக்க வைத்துக் கொண்டே இருக்கின்றேன்... அவர்கள் பின் ஞானிகள் ஆகவும்... நிச்சயம் அவர்கள் மூலம் மனிதர்களுக்கு சில சில வகைகளிலும் கூட நிச்சயம் எடுத்துரைக்க... பின் கஷ்டங்கள் கொடுத்து கொடுத்து.. பக்குவங்கள் கொடுத்து கொடுத்து.. உயர்ந்த நிலையை அடைய செய்கின்றேன்... அதன் மூலம் மக்களுக்கு தெளிவு பெற செய்கின்றார்கள் அவ் ஞானியர்கள்.
ஆனாலும் அதையும் கேட்பதில்லை!!! அதையும் கேட்காமல் இன்னும் பல பல சுவடிகளில் கூட நிச்சயம் தன்னில் கூட ஞானியர்கள் அழகாகவே எழுதி வைத்தார்கள்!!
இப்படிச் சென்றால் பின் நோய்களும் வராது!!! என்பவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!! பின் நிச்சயம் கஷ்டங்கள் வளராது!!! நிச்சயம் அனைத்தும் நடக்கும் என்று!
ஆனால் அதைக் கூட புத்தி கெட்ட மனிதன் அறிந்தும் பின்.. அதை பின் நிச்சயம் கற்காமல் ஓடுகின்றான்.
பார்வதி தேவியார்:
நிச்சயம் மணாளனே நில்லும்!!!!
சிவராத்திரியில் காசியில் ஈசனார் பார்வதி தேவியார் காகபுஜண்டர் உரையாடிய வாக்கு பாகம் இரண்டில் தொடரும்
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!