​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 30 November 2022

சித்தன் அருள் - 1232 - அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!


வாழ்க்கையில் இன்பம் அமைதி பெற:-

சில துன்பங்களை தவிர்க்க முடியவில்லை, சில வேதனைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை, இவைகளுக்கெல்லாம் ஒரு மாற்று வழி, தீர்வு கிடைக்காதா? நிம்மதியாக இந்த உலகில் வாழ இயலாதா? என்று பலரைப்போல உனக்குள்ளும் இருக்கின்ற அகப்போராட்டம். அப்படிப்பட்ட நிலையில் நியாயமாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் அவனுக்கு துன்பமாக தெரிகின்ற பிரச்சினைகள், பல நிகழ்வுகள், மற்றவர்களுக்கு துன்பமாக தெரியாது. அவனுக்கே, சில ஆண்டுகள் கழித்து, முன்பு துன்பமாக தோன்றியது, அப்பொழுது துன்பமாக தெரியாது. அப்பொழுது வேறொரு விஷயம் துன்பத்தை தரக்கூடியதாக அமையும். இன்னும் சில காலங்கள் போனால், இந்த விஷயம் போய் வேறொரு விஷயம் துன்பமாக ஆகிவிடும். ஆக, வெளியிலிருந்து வருகின்ற ஒரு நிகழ்வோ, நடக்கின்ற செயலோ, ஒரு மனிதனுக்கு ஓரளவு துன்பத்தை தருவதாக இருந்தாலும், அவனுடைய மனம், உறுதியாக உறுதிப்படும் என்றால், இந்த பிரச்சினை, பிரச்சினையாக அவனுக்கு தெரியாது. இது ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்களால், மனம் சாந்தமாக, உறுதியற்று இருக்கின்ற தன்மையால், சின்ன துன்பங்களை கண்டு துவண்டு போய் விடுகின்ற தருணம், பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கிறது. இதை புரிந்து கொள்வது கடினம், இருந்தாலும் ஓரளவு இறைவன் அருளால் விளக்குகிறோம் அப்பா. ஒரு மனிதன் இருக்கிறான். அவன் ஏதோ ஒரு பாபங்களை செய்திருக்கிறான். அதற்காக, இறைவன், அவனை பல ஜென்மங்களாக மிருகங்களாக படைத்து அந்த மிருக உடலுக்குள், தான் யார் என்பதை (மனித உடலுக்குள்ளேயே தான் யார் என்பதை அறியாமல்தான் வாழ்கிறார்கள்) அறியாமல், மிருக உடலுக்குள் என்ன தெரியும், பசித்தால் உணவு, உறக்கம் வந்தால் உறக்கம், உடல் வேட்க்கை வந்தால், அதற்குரிய காலத்தில் தீர்த்துக் கொள்ள வேண்டும். இப்படித்தானே விலங்குகள் வாழ்கின்றன. இந்த தன்னுடைய உடல் சார்ந்த உணர்வுகளுக்கு தீர்வை மட்டும் புலன்களால் நுகர்ந்து வாழ்ந்து கொண்டு, ஒரு பிறவியை முடித்து விடுகிறது. நன்றாக கவனிக்க வேண்டும், விலங்குகளுக்கு புதிதாக பாபங்கள் சேராது. ஏன் என்றால், அது என்ன செய்தாலும், இது தவறு என்று அதற்குத் தெரியாது. இயல்பாக அதற்கு என்ன குணம் இருக்கிறதோ, அந்த குணத்தின் படிதான் அது நடந்து கொள்கிறது. உதாரணமாக ஒரு புலி, மானை கொன்று தின்றால், புலிக்கு அது பாபத்தை சேர்க்காது. அதை மனிதன் செய்தால்தான் பாபமாக மாறுகிறது. இப்படி பல பிறவிகள், மிருகங்களாக எடுத்து, சேர்த்த பாபங்களை நீக்கி கொள்கிறது. சரி! ஒரு பிறவியில் மனிதனாக பிறக்கவைப்போம், இனிமேல் இது ஒரு மனித பிறவிக்கு, எப்படி பதவியிலே, பதவி உயர்வு பெறுகிறார்களோ அதுபோல், மிருக பிறவியிலிருந்து, மனித பிறவிக்கு மாற்றி அமைக்கிறான் இறைவன். அல்லது வேறு ஒரு பிறவியிலே அவ்வாறு செய்கிறான்.

அவ்வாறு செய்யும் பொழுது, எடுத்த எடுப்பிலேயே, நல்ல குணம், இரக்கம், பொது நன்மைகளை கருதி செய்ய வேண்டிய காரியங்கள், பெருந்தன்மை இவையெல்லாம் வந்துவிடாது. அது பல ஜென்மங்கள், மிருகங்களாக இருந்ததால், அதற்குள் அந்த மிருகப் பதிவுதான் இருக்கும். தன்னுடைய தேவைகள் மட்டுமே முக்கியம், இதனால் யார் பாதிக்கப்பட்டாலும் அது என்னை ஒன்றும் பாதிக்காது என்ற நிலையில்தான் அந்த ஆத்மா அந்த மனித கூட்டுக்குள் வாழும். [இந்த தருணத்தில், ஒவ்வொருவரும் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும், நான் எடுக்கின்ற தீர்மானம் மிருகப்பதிவினாலா இல்லை இறை அருளினாலா என்று].  ஏற்கெனவே பாபங்கள் அற்ற நிலையில் பிறப்பதால், ஓரளவுக்கு, போனால் போகட்டும் என்று சிறிதளவு செல்வத்தையும், செல்வாக்கையும் இறைவன் தந்து விடுவான். ஏற்கெனவே, மனதில் ஈவு இரக்கமோ, பெருந்தன்மையோ இல்லாத நிலையில்தான் அந்த ஆத்மா பிறவி எடுத்திருக்கிறது. இப்பேர்ப்பட்ட ஆத்மாவுக்கு, செல்வமும், செல்வாக்கும் சேர்ந்து விட்டால் என்ன நடக்கும். அதை தக்க வைத்துக் கொள்ளவும், தன்னை சுற்றி உள்ளவர்களை மீது எல்லாம் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி பாபங்களை சேர்த்துக் கொள்ளும். ஆனால், அது ஓரளவு பாபம் என்று தெரிந்தாலும் ஆணவத்தால் அப்படித்தான் நடந்து கொள்ளும் அந்த ஆத்மா. இப்படியாக பல பிறவிகளில் பாபத்தை சேர்த்துக் கொண்டே வரும்.  ஒரு பிறவியில் இந்த பாபத்தை அனுபவித்து தீர்க்க வேண்டும். எப்படி தீர்க்க வைப்பது? சுயநலமே முழுக்க முழுக்க கொண்ட பிறவிகளாக பிறந்துவிட்ட ஒரு மனிதனுக்கு, அரக்க குணம், இரக்கமே அற்ற அரக்க குணம் கொண்ட ஒரு மனநிலையை கொண்ட மனிதனுக்கும், நீ என்ன தண்டனை கொடுத்தாலும், அதை அவனால் உணர்ந்து கொள்ள முடியுமா? பிறகு, இந்த பாபங்களை எப்படித்தான் நீக்க முடியும்? யோசித்துப்பாரப்பா.

ஒரு சாத்வீகமான மனநிலையிலேயே, நல்ல எண்ணங்கள் கொண்ட ஒரு மனநிலையிலேயே, பிறர் துன்பத்தை கண்டு துடிக்கின்ற நிலையிலே, ஒரு மனிதனை பிறக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான், அது, இதற்கு முன் பிறவிகளில் சேர்த்த பாபங்களை தீர்த்துக் கொள்ளும் முயற்சியிலே சிறிதளவாவது இறங்கும். அப்படி இறங்கும் பொழுது, இயல்பாக சாத்வீக குணம் இருந்தால் தானே, அது முதலில் யாருக்கும் எந்த விதத்திலும் தீங்கு செய்யக் கூடாத எண்ணத்திற்கு வரும். பிறர் படுகின்ற வேதனையை பார்த்து, துடித்து ஏதாவது செய்ய முடியாதா என்கிற முயற்சியில் ஈடுபடும். இப்படிப்பட்ட மனநிலையை கொண்ட மனிதனுக்கு இயல்பாக, பழைய ஜென்மத்தின் பாபங்களை செய்த காரணத்தால், கடினமாக நிகழ்சசிகள் வாழ்க்கையில் நடக்கும் பொழுது, தாங்கிக் கொள்ள முடியாமல் சோர்ந்து விடுகிறான். இதே துன்பம் அசுரர் மனம் கொண்ட மனிதனுக்கும் வரும். ஆனால் அவன் அதனை எடுத்து எறிந்துவிட்டு சென்று விடுவான். ஏன் என்றால், அவனது மனம், இரக்கமற்ற, அரக்க குணமாக இருப்பதினால். 

மனம் சாத்வீகமாக இருப்பதால், புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதென்பது ஒரு லாபம். அதே சாத்வீக மனம், எந்த ஒரு துன்பத்தையும் எதிர் கொள்ள அங்கே பயனற்றதாகிவிடுகிறது. எனவே எப்படி இருக்க வேண்டுமென்றால், தனக்கு துன்பம் ஒரு வேதனை என்று வரும்பொழுது, அந்த துன்பத்தையும், வேதனையும் எதிர் கொள்ள, தன்னுடைய மனதை நன்றாக உறுதியாக வைத்துக்கொள்ள, கைப்பிடி உள்ள பகுதியை தான் வைத்துக் கொண்டு, துன்பங்களும், வேதனைகளும் வரும்போது கூரான முனையை அந்த துன்பத்தின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். பிறர் துன்பத்தை தீர்கின்ற அந்த நெகிழ்ச்சியான மனம் இருக்கும் சமயம், கூரான பகுதியை தன் கையில் வைத்துக் கொண்டு கைப்பிடி உள்ள பகுதியை பிறர் மீது படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். எனவே ஒரே மனம் பிறருக்கு உதவி செய்யும் பொழுது, சாத்வீகமாகவும், தனக்கு துன்பம் வரும்பொழுது மிகவும் இறுக்கமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். இந்த முயற்சியும், பயிற்சியும் இருந்து விட்டால் ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும், எப்போதுமே இன்பம்தான், அமைதிதான். அந்த வழியில், நீயும் முன்னேறு, நன்றாக இருக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்....... தொடரும்!

6 comments:

  1. பச்சை கற்பூரம் பயன்பாடு என்பது நம் பாரம்பரியத்தில் பல நூற்றாண்டுகளாக பெருமாள் கோவில் தீர்த்ததில் பயன்படுத்தும் ஒன்று. இன்று நேற்றல்ல இதை பயன்படுத்துவது. பலஆயிரம் வருடங்களாக பயன் படுத்தும் பொருள் இது. சீனாவிடம் இருந்து இப்போது வேண்டும் என்றால் வாங்கி கொள்ளமுடியும். 2000 வருடங்களுக்கு முன்பே நம் பெருமாள் கோவில்களில் பயன்படுத்தபடுகிறது.RSS மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டு பூஜை பொருட்கள் சுத்தமானது கலப்படம் இல்லாமல் தயாரித்து பல சைவம் குடும்பத்துக்கு நேரடியாக சென்று கொண்டு இருக்கிறது. பல நல்ல வேலைகள் RSS மூலம் தேர்ந்தெடுத்து செய்யப்படும் வேலைகளில் கலப்படம் இல்லாமல் பூஜை பொருட்கள் செய்வதும் ஒன்று. நமக்கு தேவை என்றால் நாம்தான் தேடி செல்ல வேண்டும்.. அழகு சாதன விற்பனைக்கு உள்ளது தேவை என்றால் தொடர்பு கொள்ளவும்என்று யாரும் இந்த blog யில் advertisement கொடுக்கவில்லை... புரிந்தால் சரி ...

    2. மரப்பட்டை மூலம் தான் கற்பூரம் மற்றும் பச்சை கற்பூரம் தயாராரிக்கபடுகிறது.distilation method தான். நம் நாட்டில் கூட கற்பூரம் மரப்பட்டை கிடைக்கிறது. நிறைய படித்த பெண்கள் தயாரித்து நேரடியாக பக்தர்களுக்கு சென்று கொண்டு இருக்கிறது. .. அதனால் உலகில் ஒருவர் மட்டுமே சுத்தமாக செய்கிறார் என்று நீங்கள் சொல்வது தவறு....

    3. ஜானகிராமன் அய்யாவிடம் நாடி படிக்கும் போது ' பூஜை பொருட்கள் கலப்படம் இல்லாமல் தயாரித்து கொடு. போகர் திருமூலர் அகத்தியர் உனக்கு சூட்சமமாக பல மூலிகை பற்றி தெரியப்படுத்துவோம் .பல பல நோய்களுக்கு மருந்து தயாரித்து நீ கொடுக்க வேண்டும் " என்று இதை தான் பல முறை படித்தார்.

    4. சில அகத்தியர் பக்தருக்கு கஷ்டம் வரும் போது என் மூலம் சொல்லி அதற்கு வழி காட்டினார்.

    5. வியாபாரம் தாண்டி பல உண்மைகள் உண்டு . புரிந்தால் சரி.....

    ReplyDelete
    Replies
    1. Whom are you preaching for? We are fed up of your self aclaimed statements.Sorry to say but you are not approved by appa.You have not given appropriate evidences yet...provide proper citation,address of such so called RSS training program.It will be very good for all of us to have such information.

      Delete
  2. சிரம் தாழ்ந்த வணக்கம் அய்யனே - அரிந்தேன் - புரிந்தேன் - இருப்பினும் அடியவனும் சராசரி மானிடன்தானே????? மனம் சற்று சலித்துக்கொள்கிறது - என்ன செய்ய ?!?!?! சிலர் பொய்யாக ஆன்மவிசயங்களை - ஆன்மீக விசயங்களை ஆளும்பொழுதும் - கையாளும்போதும் - மனம் பொருக்கவில்லை - இந்த கேடுகெட்ட மாந்தர்களை நினைத்து - சரி - நடப்பது நடக்கட்டும் - எம்மை வழிநடத்துங்கள் - தங்களை நம்பிதான் உடன் ஓடி வந்துகொண்டிருக்கின்றேன் - எம்முள் இருந்து எம்மை இயக்குங்கள் - நலம் நலமே தொடரும்... தொடரட்டும் அய்யனே... அனைத்திற்கும் நீங்களே பொருப்பு... தங்களுக்கும் - தங்களின் மேலான அருள் வாக்கிற்கும் ஆயிரம்கோடி வணக்கங்கள் நன்றிகள் - ""ௐ அகத்தீசாய நம""

    ReplyDelete
  3. அருமை ஐயா..
    ஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி..
    அம்மா லோபமுத்ரா தாயே போற்றி...

    ReplyDelete
  4. Om Agatheesaya Namah! I always had this question in mind. How to stay strong minded as well as satvic natured, always gentle and kind towards others. Agathiyar's clear explanation with sharp edge of knife facing us and opposite edge towards others will stay in my mind. Thank you so much ayya for this information!

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete