அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Thursday, 3 November 2022
சித்தன் அருள் - 1209 - 06/11/2022 - அந்த நாள் இந்த வருடம்!
தேதி: 06/11/2022
இடம்: கோடகநல்லூர்
நேரம்: காலை 9.30/10 மணி
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
நேற்று பூஜையில்கலந்து கொண்ட பொழுது நடந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். நான் கொடிமரத்தின் வலது புறம் அமர்ந்து இருந்தேன்.
அங்கிருந்து பூஜைகள் தெரியாததால் கண்ணை மூடி பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன். அபிஷேகம் நடந்து கொண்டிருந்த பொழுது நான் கண்ணைமூடி ஓம் அகத்தீஸ்வரயா நமஹ என்று பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன். அப்பொழுது திடீர் என்று சாம்பிராணி நறுமணமும் பூவின் மணமும் சிறிது நேரம் என் அருகில் வந்து சிறிது நேரம் இருந்ததை உணர்ந்தேன். வாசம் உணர்ந்த பின் கண்ணை திறந்து பார்த்தேன். ஒன்றும் உணர முடியவில்லை. மீண்டும் கண்ணை மூடி பிரார்த்தனையில் அமர்ந்தேன். ஐந்து நிமிடங்கள் கழித்து திடீர் என்று அந்த இடமே குளிராக உணர்ந்தேன். என்னை சுற்றிலும் குளிராக உணர்ந்தேன். இந்த முறை கண்ணை திறக்கவில்லை. அந்த குளிரை சிறிதுநேரம் அனுபவித்தேன். இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து குளிர் நீங்கியவுடன் வெப்பம் உணந்ததினால் கண்களை திறந்து பார்த்தேன். கண்டிப்பாக அகத்தியர் தான் வந்திருந்தார் என்பதை உணர்ந்து கொண்டேன்.
கண்டிப்பாக அகத்திய பெருமான் எல்லாருக்கும் அருளை அள்ளி கொடுத்திருப்பார்.
உங்கள் அனுபவத்தை அறியவும் ஆவலாக காத்து கொண்டிருக்கிறேன்.
அன்புடன் அகத்தியம் பெருமானுக்கு... எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல...
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ReplyDeleteதன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய வினாசாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமஹாவிஷ்ணவே நம;
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரா தாய் திருவடிகள் போற்றி
ReplyDeleteஅகத்தீசாய நம
ReplyDeleteஐயா, குருநாதர் அருளால் ஒரு யோகஞான விளக்கப் பதிவு. 🙏
ReplyDeletehttp://fireprem.blogspot.com/2022/11/blog-post.html?m=1
ReplyDeleteநேற்று பூஜையில்கலந்து கொண்ட பொழுது நடந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
நான் கொடிமரத்தின் வலது புறம் அமர்ந்து இருந்தேன்.
அங்கிருந்து பூஜைகள் தெரியாததால் கண்ணை மூடி பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன்.
அபிஷேகம் நடந்து கொண்டிருந்த பொழுது நான் கண்ணைமூடி ஓம் அகத்தீஸ்வரயா நமஹ என்று பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன். அப்பொழுது திடீர் என்று சாம்பிராணி நறுமணமும் பூவின் மணமும் சிறிது நேரம் என் அருகில் வந்து சிறிது நேரம் இருந்ததை உணர்ந்தேன். வாசம் உணர்ந்த பின் கண்ணை திறந்து பார்த்தேன். ஒன்றும் உணர முடியவில்லை. மீண்டும் கண்ணை மூடி பிரார்த்தனையில் அமர்ந்தேன். ஐந்து நிமிடங்கள் கழித்து திடீர் என்று அந்த இடமே குளிராக உணர்ந்தேன். என்னை சுற்றிலும் குளிராக உணர்ந்தேன். இந்த முறை கண்ணை திறக்கவில்லை. அந்த குளிரை சிறிதுநேரம் அனுபவித்தேன். இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து குளிர் நீங்கியவுடன் வெப்பம் உணந்ததினால் கண்களை திறந்து பார்த்தேன். கண்டிப்பாக அகத்தியர் தான் வந்திருந்தார் என்பதை உணர்ந்து கொண்டேன்.
கண்டிப்பாக அகத்திய பெருமான் எல்லாருக்கும் அருளை அள்ளி கொடுத்திருப்பார்.
உங்கள் அனுபவத்தை அறியவும் ஆவலாக காத்து கொண்டிருக்கிறேன்.
Happy to hear your experience with Agasthiyar ayyan and perumal ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
Delete