​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 17 November 2022

சித்தன் அருள் - 1220 - அன்புடன் அகத்தியர் - சபரிநாதன்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

கார்த்திகை மாதம் துவங்கி விட்டது!!! மண்டல பூஜை ஆரம்பித்து விட்டது!!! ஊரெங்கும் சரண கோஷம்!!!! கலியுக வரதன்!!! கண்கண்ட தெய்வம் ஐயன் ஐயப்ப சுவாமியை காண பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயன் திருமுகத்தை காண சபரி மலை யாத்திரையை தொடங்கி விட்டார்கள்!!!

நமது சித்தன் அருள் 1163 ல் நம் குருநாதர் அகத்திய பெருமான் சபரிமலையில் ஐயப்பனை பற்றி தந்த வாக்கினை அடியவர்கள் அனைவரும் படித்திருப்பீர்கள்!!!!!!

""""""எதையென்று கூற அப்பனே இதையென்று அறியாத அளவிற்கு கூட இன்னும் இவனுடைய லீலைகள் தொடரும் என்பேன் கலியுகத்தில்!!!!!

அப்பனே!! நிச்சயம் தர்மத்தை நிலை நாட்டுவான் வரும் வரும் காலங்களில் அப்பனே!!!!

பலமுறையிலும் இவந்தனை எதை என்று அறிய பல பல வழிகளிலும் இவந்தனுக்கு யான் பல வழிகளிலும் ஞானம் பெற  உதவிகள் செய்துள்ளேன் அப்பனே!!!

இதனால் நிச்சயம் இவந்தனை பின் உருவாக்க உருவாக்க இன்னும் பல மனிதர்களுக்கும் எதை என்று அறியாமலே நிச்சயம் எவற்றின் மூலம் அறியாத அளவிற்கும் கூட உண்மைகள் இல்லையோ அதனால் அழிவுகள் நிச்சயம் என்பதே... யான் நிச்சயம் சொல்லிவிட்டேன்.

இவையென்று அறியாது பலபல மனிதர்களுக்கும் நிச்சயமாய் ஒழுங்காக இல்லாத மனிதனுக்கும் பல வழிகளில் கஷ்டத்தை கொடுத்துக் கொண்டே தான் வருவான்.... இதை என்று அறியாமலே இன்னும் சிறப்புகள் உண்டா என்பதற்கு இணங்க எவை என்று இவனுடைய இன்னும் கருணை!!!!

யான் எப்படிப்பட்டது என்பதை கூட தெரிவித்து விடுகின்றேன் அப்பனே!!!!

எதனையென்றும் அறியாத இவ்வுலகத்தில் வந்தான் வந்தான் என்பதையும் கூட ஆனால் அப்பனே இவந்தன் எதை என்றும் அறியும் அளவிற்கு கூட சித்தர்களை பக்குவ நிலைக்கு இங்கே அமர்த்தி அமர்த்தி பல பல வழிகளிலும் கூட பின் சித்தர்கள் கூட இவந்தனுக்கு ஞானத்தை பல வழிகளிலும் செப்பினார்கள் அப்பனே!!!

அதில் என்னை இவந்தனுக்கு...பின் அகத்தியா என்றாலே இவந்தனுக்கு.... பாசங்கள்!!! பாசங்கள்!!!

ஏனென்றால் அப்பனே இவந்தன் நிலைமையை சரியாக சொன்னால் அப்பனே....... எதனைமென்று அறியாத அதனால் பல வருடங்களாக என்னிடத்திலே பல போதனைகளை கற்றுக் கொண்டான் அப்பனே!!!!

இப்படித்தான் வாழ வேண்டும்!!!
இப்படித்தான் இருக்க வேண்டும்!!!

இப்படி வாழ்ந்தால் தான் எதை என்று அறியாமலே இவ்வுலகத்தை கடத்திட முடியும் மோட்ச கதியும் அடைய முடியும் என்பதை கூட யான் எடுத்துரைத்தேன் இவனிடம்...!!! 

அதனால் அப்பனே இவந்தனும் ஒரு.."""சித்தன் "" என்று யான் குறிப்பிடுவேன்!!!! அப்பனே!! 

இவ்வாக்கிலேயே மேலும் சபரிநாதனின் அருள் பெற்ற ஒரு பெண் பக்தையை பற்றியும்...சபரி நாதனே நண்பனாக வந்து உடன் வாழ்ந்து அருள் பெற்ற அடியவரை பற்றியும் இவ்வாறு கூறியிருந்தார் !!!

""""""" அப்பனே ஓர் பிறவியில் அப்பனே ஒருவன் எதை என்று அறிய அவந்தனுக்கும் தாய் தந்தை இல்லை ஆனாலும் பல வழிகளிலும் சுற்றி திரிந்தான்!!!

ஏன் இந்த நிலைமை???? 

எதனையும் என்று அறிய அறிய ஆனாலும் அவந்தனுக்கு உதவிகள் செய்ய யாரும் முன் வரவில்லை!! முன்வரவில்லை!!!

சிறு குழந்தையாக இருக்கின்ற பொழுதே அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எதனை என்று கூட யான் பின் இதையன்றி கூற ஆனாலும்!!!

இவந்தன் அக் குழந்தைகளிடத்துச் செல்லும் பொழுது இவந்தன்.... அனாதை என்று கூட... பல மக்கள் ஏளனம் செய்தார்கள்!!!

ஆனாலும் இவன் மனம் பொங்கி வழிந்தது!!! ஆனாலும் பின் திரிந்தான் இக்காடுகளில்(சபரிவனம்) எல்லாம் திரிந்தான்!!!!திரிந்தான்!!!! 

ஐயனே!!!!  ஐயனே!!!! சரணம் ஐயனே!!!! சபரிநாதனே!! சரணம் ஐயனே!!!! என்றெல்லாம் திரிந்து திரிந்து !!!!

ஆனாலும் பின்  கருணை உள்ள இவ் சபரிநாதனும் ..... இப்படி ஒரு குழந்தையா!!!!!

நிச்சயம் இவந்தனுக்கு யாரும் இல்லை என்று கூட!!!

அதனால் யாம் சிறு வேடத்தில் கூட சென்று இவனை தாலாட்டுவோம் என்று கூட எண்ணி விட்டு!!!!! நலமாகவே நலமாகவே பின் சென்றான்.

இதனை என்று அறிய சிறுவனே இதை என்று அறிய நீ யாரப்பா?? என்று கேட்க!!!

எந்தனுக்கும் யாரும் இல்லை என்று அச்சிறுவன் கூற!!!! இவ் சபரிநாதனும் எந்தனுக்கும் யாருமில்லை நாம் நண்பர்களாகவே இருக்கின்றோம் என்று எண்ணி!!!!!

இதனால் பல வகையிலும் பல பல வழிகளிலும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்!!!

ஆனால் வந்தது சபரிநாதன் என்று தான் என்று எதை என்று புரிந்து கொள்ளவில்லை அவந்தன்.

இதனால் எதை என்று அறியாமலே பல முன்னேற்றங்கள் பட்டு பட்டு எதை என்று அறிய.... 

இதனால் அவந்தனுக்கு எதை என்று அறியாமலே பல அருள்கள் கொடுத்து!! கொடுத்து!! எவை என்று கூற....

அதனால் அவந்தனும் இப்பிறப்பில் இங்கே தான் பிறந்துள்ளான் கலியுகத்தில்!!!

அவந்தனுக்கும் மோட்சப் பிறப்பு!!!!

அவந்தன் எதையன்றி கூற நிச்சயம் இவ் வாக்குகளும் அவந்தன் நிச்சயம் அவனை போய் சேரும்!!!!!!

எதையென்று அறிய அவந்தனும் புரிந்து கொள்வான்!!!!

அப்பனே என்னுடைய ஆசிகளும்!!!!!! 

அதனால் அவந்தனும் எதை என்று அறிய முற்காலத்திலும் அவந்தனையும் யானே பல வழிகளிலும் இவனுக்கு யாருமில்லை என்று கூட பல பல வழிகளிலும் பல பல இறைத் திருத்தலங்களுக்கு அழைத்துச் சென்று கொண்டே போயிருகின்றேன்.

அவந்தனும் கடைபிறப்பாக இப்புவிதனில் பிறந்திருக்கின்றான் அவந்தன் எதை என்று அறியாமலே நிச்சயம் அவந்தனுக்கும் இவ்வாக்குகள் போய்ச் சேரும் என்பேன்!!!!

அவந்தனும் படிப்பான்!!! அவனே புரிந்து கொள்வான்!!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் இப்புவிதன்னில் அவந்தன்  எந்தனுக்கும் என் அன்பு பிரியமான லோபா முத்திரைக்கும் திருத்தலத்தையும் கட்டி இயற்றியுள்ளான் என்பேன் அப்பனே!!!!

இதனால் இன்னும் மறைமுகமான விஷயங்கள் சொல்லப் போகின்றேன் இவ்வுலகத்திற்கு!!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே ஒவ்வொன்றையும் நிச்சயம் எடுத்துக்காட்டாக நிச்சயம் என் பக்தர்கள் இன்னும் உலா வந்து கொண்டிருக்கின்றனர் அப்பனே.....எவையென்று கூற அதனால் நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே!!!"""""

குருநாதர் அகத்தியர் பெருமான் தன் வாக்கில் உரைத்தபடி அந்த அடியவர் இடத்திற்கே. அது சொல்லப்போனால் அகத்தியர் வாழும் இடம்!!!  அவ்விடத்தில் சென்று அவருடைய முற்பிறவியை சபரிநாதனுடன் எத்தகைய உறவு அகத்தியன் யான் உந்தனுக்கு என்னென்ன செய்தேன் ? என்று பொறுமையாக ஒரு தாயவள் தன் மடி மீது குழந்தையை அமர்த்தி கதை சொல்லுவது போல   குருநாதர் தான் இருக்கும் இடத்திற்கு சென்று தந்த வாக்கினை நாம் பார்ப்போம்!!!

வாக்குரைத்த ஸ்தலம் மற்றும் அந்த அடியவரைப் பற்றிய விபரங்கள் அவர் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றார்? என்பதெல்லாம் அடுத்தடுத்த பாகங்களில் வெளிவரும்!!!!

இப்பொழுது குருநாதர் உரைத்த வாக்கினை பார்ப்போம்!!!!

அய்யப்பனும் அகத்தியரும் அடியவரும் பாகம் 1

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன்!!!! அகத்தியன்!!! 

அப்பனே !! நலமாக நலமாக என்னுடைய ஆசீர்வாதங்கள்!!!! அப்பனே எவை என்று கூற அப்பனே இவ்வுறவு இப்பொழுது வந்ததில்லை என்பேன் அப்பனே!!! அப்பனே பல பல பிறவிகளில் வந்ததப்பா!!!!

அப்பனே !!! எவையும் என்று என்னையும் நாடி நாடி வந்து பின் ஆண்டாய் அப்பனே... இதனையுமென்று பொறுத்துக் கொள்ளாமல் அப்பனே பல சித்தர்களின் ஆசிர்வாதங்கள் பெற்று பெற்று அப்பனே மானுடப் பிறவி எவ்வாறு என்பதை அறிந்து நீதானப்பா இவ்வுலகத்திற்கு கேட்டு வந்தவன் என்று எவ்வாறு புரிதல் என்பதையும் கூட அப்பனே!!!! முன் ஜென்மமே உன் கடைப்பிறப்பு!!!

ஆனாலும் அப்பனே நீ தான் இப்பிறப்பெடுத்து வரவேண்டும்!! என்பதை அடம்பிடித்து வந்து விட்டாய்!!!!

அப்பனே!!! இவையென்று கூற என்னுடைய அடிவாரத்திலே நீ பிறந்தாய் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் இதனையும் என்று மறுப்பதற்கு ஒன்றுமில்லை!!! உன் தாய் தந்தையரும் நல்முறையாகவே என்னை வணங்கி வணங்கி நல்விதமாகவே ஈசனுக்கும் சேவை செய்தவர்கள்!!!

இப்பொழுது கூட அங்கே பாவங்கள் நாசமாகும் பாபநாசமே என்பேன்!!! உன் தாய் தந்தையர் வாழ்ந்த ஸ்தலமப்பா!!! 

இவை என்றும் அறியாத அவர்களுக்கும் ஈசன் ஒருவனே என்ற நினைப்பும்!!!!.... ஆனாலும் இருப்பினும் எவற்றினின்றும் ஈசனே அவர்களுக்கு திருமணத்தையும் செய்து வைத்தான்!!! செய்து வைத்தான் என்பதற்கிணங்க ஆனாலும் பிறந்தாய் நீ கூட!!......

ஆனாலும் உன் மீது பாசம் இல்லை!!! இவ்வாறு என்று  நன்கு அறிந்து இதுவும் ஈசன் குழந்தை என்று கூட பாபநாசனிடமே பின் அடைக்கலம் !!அடைக்கலம் கொடுத்து விட்டனர் என்பேன் உன் தாய் தந்தையர்!!!!

நலன் காண இதனைமென்று கூட நீ வளர்ந்தாய்!!! வளர்ந்தாய் அங்கே கூட எவ்வாறு பின் விதவிதமான உண்ண உணவுகள்!!! இவை என்று கூற இறைவனிடத்தில் கூட நல்விதமாகவே அன்னங்கள் கொடுத்து வந்தனர்!! ஆனாலும் உன் எண்ணங்கள் மேன்மை பெற்றது!!! பின் நல்விதமாகவே அங்கு இருக்கும் அனைவரும் கூட பின் ஏந்தி ஏந்தி உண்ண உணவு அருந்தி வந்தாய் என்பேன்!!

இதனால் வயது உந்தனுக்கும் ஆகிவிட்டது!!! பின் புத்திகள் பல செயல்பட தொடங்கி விட்டது !!!ஆனாலும் உந்தனுக்கு தெரிந்து விட்டது குறிப்பிட்ட காலத்தில்!!!

எதனையும் என்று குறிப்பிடாமல் பின் இங்கேயே இருக்கின்றோமே நம் தனக்கு யார் ? தந்தை!! யார்? தாயார்..!! என்ற நிலைமையும் உந்தன் மனதில் நுழைந்து விட்டது!!! இவையன்றி கூற ஆனாலும் அதனை  உணர்ந்து கொண்டே இருக்கின்றான் ஈசனும் கூட!!! அவை மட்டும் இல்லாமல் அங்கேயும் யானும் (அகத்தியர்) பார்த்துக் கொண்டே தான் இருந்தேன்!!!

இதனை என்று மறுப்பதற்கு ஒன்றுமில்லாமல் பின் இதனையும் என்று கூட உன் மனதும் சலனம் அடைந்து விட்டது!!!!

இவ்வாறு பின் குடும்பங்களோடு இதனைமென்று கூட கும்பலோடு அனைவரும் வருகின்றார்களே!!! நான் மட்டும் ஏன் இங்கு அடைக்கலமாக வந்துவிட்டோம் தனியாக!!!
எவையென்று கூற ஆனாலும் அவ் சிறுவயதில் கூட இறைவன் எவ்வாறு என்பதை கூட தன் பக்கத்திலே இருக்கின்றான் என்பதைக் கூட உந்தனுக்கு தெரியவில்லை!!...

ஆனாலும் அவ்வயது அவை போன்றே!!!

அதைப்போன்று என்பதற்கு இணங்க வருத்தப்பட்டாய் நீ!!

ஈசனே!!! இவையென்று கூற ஆனாலும் நம்தனக்கு யாரும் இல்லையே!!!  இவ்வாறு இதனையுமென்று கூற நம்தனக்கும் கூட இவ்வாறு.. ஆனாலும் அதற்குள்ளாகவே.  உன் . தாய் தந்தையரும் பின் சிவ கதி அடைந்து விட்டனர் இவையன்றி கூற!!!!

அதனால் அப்பனே அங்கு ஏந்தினாய் தர்மத்தை!!! தர்மத்தை ஏந்தியும் கூட இதை எவ்வாறு என்பதையும் கூட...அவ் உள்ளமும் நன்றாகவே இருந்தது என்பேன்!!!பின் இதனையுமென்று இவையென்று கூட தர்மம் ஏந்தி பின் காசுகள் அதிகமாக பின் எங்கு வைப்பது என்பதை கூட உந்தனுக்கு தெரியவில்லை!!

ஆனாலும் இவை ஏன்?? பின் நம்தன் வைத்துக்கொள்ள வேண்டும்??? என்பதற்கு இணங்க அப்பனே அவை தன் கூட மற்றவர்களுக்கு கொடுத்து விட்டாய் இவை என்று என்று கூட!!! வாழட்டும் என்று கூட!!!

ஆனால் உன்னைப் பற்றி உன் சிந்தனைகள் இல்லை !! இல்லை என்பதற்கிணங்க அப்பனே!!!

ஆனாலும் ஈசன் இதை உற்று நோக்கி பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்!!! பார்வதி தேவியும் நல்விதமாகவே அங்கே தங்கி இருக்கின்றாள் இச்சிறுவனுக்கு சிறுவயதில் கூட இவ்வளவு யோக்கியங்கள் என!!!

ஆனாலும் யான் கூட எவ்வாறு என்பதையும் கூட அப்பனே மகிழ்ந்தேன்!!! இவையன்றி கூட... ஆனாலும் இவையன்றி கூட செயல்பட !! செயல்பட!! ஆனாலும் பொருள்கள் உந்தனுக்கு வந்து கொண்டே வந்து கொண்டே இருந்தது என்பேன்!!!

அவற்றையெல்லாம் பின் தான தர்மங்கள் ஒவ்வொரு இல்லத்திற்கும் உண்ண உணவுகள் ஆகாரங்கள் இவை என்று கூட பன்மடங்கு கொடுத்து வந்தாய்!!!

ஆனாலும் உன் நிலைமை அப்பனே இருபான் ஐந்து( 25 வயது) பின் இவையென்று கூட ஆனாலும் அதனுள்ளே எவ்வாறு என்பதையும் கூட புரிதல் நிலைக்கு ஏற்ப ஆனாலும் பக்திகள் சிறந்து விளங்கினாய்!!!

பல பாடல்களையும் ஈசனை நோக்கி பாடினாய்!!!! பாடினாய் பாடினாய் என்பேன்!!!! இவையன்றியும் கூட!!!!

அப் பாடல்களும் அப்பனே ஒரு பதிகத்தில் இடம்பெற்றுள்ளன அப்பனே அவையும் வருங்காலத்தில் யான் சொல்கின்றேன்!!!!

அப்பனே நலமாக நலமாக இவையன்றி கூற அப்பனே!!! ஆனாலும் அப்பனே வயது இவை என்று கூற ஆனாலும் உந்தனுக்கு ஈசன் மேலே கோபம் வந்துவிட்டது பின்!!! இவையன்றி கூட ஆசை!! பாசம் இவை என்று கூற. இவையன்றி கூற எவையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமே!!!! எந்தனுக்கு தாய் தந்தையர் எவர்? என்று கூட ஈசனிடம் சண்டையிட்டாய்... முறையிட்டாய்!!

அப்பனே இவை என்றும் உணராமல் எவ்வித நலன்களும் ஆனாலும் உந்தனுக்கும் கூட பின் இவையன்றி கூற அங்கேயே மனக்கலக்கத்தோடு உணவு அருந்தாமல் அப்பனே ஒரு மாதம் கழித்து விட்டாய்!!

ஆனாலும் ஈசன் அவ் நிலைமையில் கூட தயங்கினான்!!! இவையன்றி கூற  ஏன் இந்த மைந்தன்!!! இப்படி எண்ணிக் கொண்டிருக்கின்றான் இவந்தனை தன் பிள்ளையாக எண்ணிக் கொண்டிருக்கின்றோமே.... இவ் விஷயம் இவந்தனுக்கு தெரியவில்லை!!! ஆனாலும் தெரியப்படுத்துவோம் என்பதற்கிணங்க... அதனுள்ளே மறுநாள் எவை என்று கூட ஈசனையும் திட்டி தீர்த்தாய்!!!!

இவையென்று கூற யான் இங்கேயே இருக்கின்றேனே!!!! எந்தனுக்கு நீ என்ன செய்தாய்???? இவை என்று கூற அதனால் எவை என்று கூற யான் தொடங்குகின்றேன் யாத்திரையை என்று கூட!!

அதனால் அப்பனே அங்கிருந்து புறப்பட்டாய் அப்பனே!!!

அப்பனே இவையன்றி கூட ஆங்காங்கே இருக்கும் சிவாலயங்களுக்கும் அப்பனே பல ஸ்தலங்களுக்கும் ஏறி இறங்கினாய் அப்பனே!!!

இவையன்றி கூற ஆனாலும் இவை என்று கூற அப்பொழுது மனதில் என்ன நுழைந்ததென்றால் அப்பனே !!!   """ ஈசன் நிச்சயமாய் காட்சியளிப்பான் என்பதை கூட உன் மனம் சொல்லியது!!!

ஆனாலும் ஈசன் இங்கே இருக்கின்றான் என்பதை கூட.. மறந்துவிட்டாய் ஆனாலும் அவ் வயது அப்படி என்பேன்!!!

ஆனாலும் ஈசன் கூட செல்லட்டும் !!! என்று விட்டு விட்டான்!!!! அப்பனே இவை என்று கூட.....

ஆனால் சுற்றினாய் அப்பனே !!! மலை மலையாய் அப்பனே!! எவை என்று கூட!!!

ஆனால் இதனையும் என்று கூட ஈசன் ஆனாலும் அப்பனே மறைமுகமாக பின் பின்னாலே வந்து கொண்டிருந்தான் அப்பனே சிலசில விஷயங்களில் கூட!!!

அப்பனே இதனால் அப்பனே பல வழிகளிலும் சென்றாய்!!!!! பல மலைகளிலும் சென்றாய் அப்பனே விதவிதமாக அப்பனே சித்தர்களையும் கண்டாய் அப்பனே!!!

சுருளி மலையில் அப்பனே இவையன்றி கூற விதவிதமாக பல மரங்களின் பழங்களையும் நல் விதமாக உண்டு உண்டு வாழ்ந்து வந்தாய்!!!

ஆனால் இறைவன் நேரடியாக காட்சியளிப்பானா!?? என்று கூட உன் மனதில் தோன்றி கொண்டே இருந்தது!!! யாத்திரையை விடவில்லை அப்பனே சென்று கொண்டே இருந்தாய் மலைகள் மீது அப்பனே!! 

சதுரகிரி ஏறினாய்!!! அப்பனே அங்கே தங்கினாய் !!அப்பனே வெள்ளியங்கிரியிலும் கூட அப்பனே அங்கே தங்கினாய்... அப்பனே இவை என்று கூற கடைசியில் அப்பனே ஓர் மலையில் தங்கினாய் அப்பனே ஆனாலும் அவை தன் காடுகளில் அடர்ந்த காடுகளில் அடர்ந்த மிருகங்கள் எவை என்றும் அப்பனே இவை என்று கூற அப்பனே சரியாக உறங்கும் நேரத்தில் கூட நமச்சிவாயா நமச்சிவாயா என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது இதனையும் என்று அறியாமல் மிருகங்கள் உன்னை கொல்ல வந்த பொழுது அப்பனே!!!

அப்போதைய நிலைமைகள் எவ்வாறு என்று தோன்றிய நிலைமைக்கு அப்பனே இவையன்றி கூற அப்பனே காட்சியளித்தான்!!!!!

அப்பனே!!! சபரிநாதன்!!!!!

இவையன்றி கூற அப்பனே நிலையாக  இவ் மைந்தன் இவ்வாறு வந்திருக்கின்றானே என்பதைக் கூட நிலை நிறுத்தி பார்த்தான்!! இவையன்றி கூற!!!! 

அதனால் இவையன்றி கூற தன் தலத்தின்( சபரிமலை) அருகிலே இவனை பின் பின் இதனையென்று தன் பக்கத்திலே அமர்ந்திட வேண்டும் என்று கூட நிலையானதாக அப்பனே அப்பனே புலியின் மீது அமர்ந்து உன் நிலைமையை பார்த்து நிலைமையை  அப்பனே !!அப்பனே!! அருகிலே அமர்த்திக் கொண்டு அவன் தலத்திற்கு அழைத்துச் சென்றான் அப்பனே!!

அவந்தன் எவ்வாறு என்பதையும் கூட அவந்தன் சில காலங்கள் பாதுகாத்தான் தந்தை போல !!என்று !!!

நிலையானதாக இவையன்றி கூற பின் அனைத்தும் இதையன்றி கூற அப்பனே இவை என்றும் ஆனால் அய்யன் எவ்வாறு என்பதையும் கூட அவன் தான் சபரிநாதன் என்று கூட நீ உணர்ந்திருக்கவில்லை அப்பொழுது!!!!

அய்யப்பனும் அகத்தியரும் அடியவரும்  பாகம் 2  ல் தொடரும்!!!! 

பின் குறிப்பு ::: மேலே அமர்ந்துள்ள நிலையில் இருக்கும் ஐயப்பன் புகைப்படம் பந்தள அரச குடும்பத்தினர் காலம் காலமாக வைத்து வணங்கும் ஐயப்பனின் உண்மையான உருவபடம்!!! அரச குடும்ப முன்னோர்கள் ஐயப்பனை எப்பொழுதும் கண்டு கொண்டே இருக்க வேண்டும் என்று வேண்டி வணங்கி அந்த ஐயப்பனே அருள் தந்து அருவுருவமாக வந்து அமர்ந்து தன்னை ஓவியமாக வரையச்சொல்லி அருள் தந்து ஓவியமாக வரையப்பட்டு பந்தள ஐயப்பன் வாரிசு அரண்மனை குடும்பத்தினர் அவர்கள் பொக்கிஷமாக வைத்து வணங்கி வரும் ஓவியம் இது!!! இந்த ஓவியத்தை ஒரு ஐயப்ப பக்தருக்கு பரிசாக தந்த பொழுது அவர் வெளியிட்ட புகைப்படம் இது!!!

பச்சிளம்பாலகனாய் கருணை வடிவாய் ஐயப்பன் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காண கண் கோடி வேண்டும்!!! சுவாமியே சரணம் ஐயப்பா!!!!

ஓம் ஸ்ரீ  லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

3 comments:

  1. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.......

    ReplyDelete
  2. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  3. https://youtube.com/shorts/BbT52Ff-BxY?feature=share

    ReplyDelete