​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 26 November 2022

சித்தன் அருள் - 1226 - அன்புடன் அகத்தியர் - ராகு கேது சூட்ச்சும கோவில்கள்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே! 

நம் குருநாதர் அகத்தியப் பெருமான் பஞ்சவடி வாக்கில் விஞ்ஞானபூர்வமான வாக்குகளை தந்திருந்தார் அதில் ராகு கேது பற்றிய மிகப்பெரிய சூட்சுமத்தை பற்றி விளக்கி இருந்தார்

நமது சித்தன் அருள் வலைதளத்தில் 1225 அன்புடன் அகத்தியர் பதிவில் முழு வாக்குகளும் வந்துள்ளன...

அகத்திய பிரம்மரிஷி உரைத்த உலகம் அறியாத ராகு கேது ரகசியம்

""அப்பனே!!!  இதை என்று அறியாத அளவிற்கு ஒரு சூட்சமம் அதாவது தெரியாத ஒன்றை இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே!!!

ராகு கேதுக்கள் சாதாரண!!மானவை இல்லை சாதாரணமானவை இல்லை !!!ஆனாலும் இதன் ஒளி அப்பனே அமாவாசை திதியிலும் பௌர்ணமி திதியிலும் கூட திடீரென்று திருத்தலங்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் என்பேன் அப்பனே!!!

இதை சரியாக வழியில் பயன்படுத்திக் கொண்டால் அப்பனே அனைத்தும் சார்ந்தே செல்லும் என்பதின் அப்பனே இதனை என்றும் நிமித்தம் காட்டி அப்பனே. அவ் ஒளியானது அப்பனே எங்கெங்கு செல்கின்றது??

முதலில் திருநாகேஸ்வரம் என்னும் இடத்திலே இருந்து ஆரம்பிக்கும் அப்பனே படிப்படியாக சென்று அப்பனே நேர்கோட்டிலே சென்று அப்பனே கேதார்நாத் அங்கு சென்றடையும் என்பேன் அப்பனே ...இதைதன் பௌர்ணமி எதை என்று பின் அமாவாசை திதிகளில் மட்டுமே  அவ் ஒளியானது அப்படியே அப்பனே செல்லும் என்பேன் அப்பனே அதுவும் பின் திருத்தலங்களை நோக்கி எதை என்று அதை என்று( ஆலயங்களை) கூட உராய்ந்து செல்லும் என்பேன் அப்பனே!!!!

அதனால் அப்பனே எதை என்று கூட அதில் நேர்கோட்டில் செல்லுங்கள் அப்பனே!!! அவ் அந்த ஆலயங்களில் மட்டும் சூட்சுமம் ஒளிந்துள்ளது!!!!

நட்சத்திரங்கள் மேலே இருக்கின்றன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்!!!! ஆனால் அப்பனே கீழே இருந்து அவை அவற்றின் ஒளியானது அப்பனே அனைவரையும் ஒளி வீசி அப்பனே அது மேல் இல்லை அப்பனே கீழிருந்தே ஆட்டுவிக்கின்றது!!!

அதனால் அப்பனே அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே ராகு கேதுக்களை அப்பனே எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பேன் அப்பனே!!!

அப்பனே இதை என்றும் அறியாத அளவிற்கும் ஆனால் இதிலும் சூட்சமம் உள்ளது அப்பனே ஆனாலும் நமச்சிவாயனை பிடித்து விட்டால் அப்பனே நிச்சயம் ராகு கேதுக்களின் ஒளி அப்பனே அதிகமாக படும் என்பேன் அப்பனே அப்பொழுது தோஷங்கள் நீங்கிவிடும் என்பேன்!!!

என்று வாக்குகள் தந்திருந்தார்!!!! குருநாதர் உடைய விஞ்ஞான வாக்கு ஒவ்வொன்றும் பல அதிசயங்களும் ஆச்சரியங்களும் பொதிந்து உள்ளது நம்மை போன்ற மனிதர்களுக்கு இதை எளிய விளக்கத்தோடு அற்புதமாக நாம் பயன்பெற வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே நம் குருநாதர் இதை வாக்குகளாக தந்திருக்கின்றார்.

குருநாதருடைய கூற்றுப்படி திருநாகேஸ்வரம் தொட்டு கேதார்நாத் வரையிலான ஒரு நேர்கோட்டு பயணத்தை பற்றி ஒரு சிறிய ஆய்வினை செய்த போது பல ஆச்சரியகரமான தகவல்கள் கிடைத்தன அதை அடியவர்களுக்கு தெரிவிக்கின்றோம்.

தமிழ்நாடு முதல் ஆந்திரா தெலுங்கானா மத்திய பிரதேசம் உத்தர பிரதேசம் என நேர்கோட்டாக செல்லும் அக்கோடுகள் கேதார்நாத் சென்றடைகின்றது இதில் சில முக்கியமான ஆலயங்களைப் பற்றி தகவல்கள் கிடைத்தன இன்னும் ஏராளமான ஆலயங்களும் இருக்கலாம் அதில் அறிந்தவற்றை அடியவர்களுக்கு தெரிவிக்கின்றோம்!!!

1. கேதார்நாத்
2. காளஹஸ்தி
3. ஏகாம்பரநாத- காஞ்சி
4. திருவண்ணாமலை
5. திருவானைக்காவல்
6. சிதம்பரம் நடராஜர்
7. ராமேஸ்வரம்
8. காலேஸ்வரம் -

இவ் ஆலயங்கள் அனைத்தும் 79° தீர்க்கரேகைகளில் அமைந்துள்ளன.ஒரே நேர்கோட்டில் குருநாதர் உரைத்தபடியே நேர்கோடாக செல்லும் பொழுது ஒளி படும் ஆலயங்களாக அறிந்து கொள்ள முடிந்தது!!! இன்னும் மற்ற மாநிலங்களிலும் அவ்வொளி செல்லும் ஆலயங்கள் இருக்கக்கூடும்!!! குருநாதரின் திருவருளால் அனைத்தும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......... தொடரும்!

4 comments:

  1. Replies
    1. ​திருத்தப்பட்டது. சுட்டி காட்டியமைக்கு நன்றி! ஓம் அகத்தீசாய நமஹ!​

      Delete
  2. நன்றி தந்தை யே நன்றி உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றி அப்பா ராகு கேது சூட்க்ஷமத்தை உரைத்த தங்களுக்கு நன்றி அப்பா

    ReplyDelete
  3. ஐயனே ஒரு சந்தேகம் நேர்கோட்டில் செல்லுங்கள் என்றால் எப்படி ஐயா கொடிமரம் த்திலிருந்து அல்லது கருவரையிலிருந்தா மேலும் இந்த தலங்களில் பெளர்ணமி அமாவாசை அன்று தங்கினால்நலம் மாகுமா என்று விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா

    ReplyDelete