​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 27 November 2022

சித்தன் அருள் - 1228 - அந்தநாள்>இந்த வருடம் - கோடகநல்லூர்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த மாதம் நவம்பர் 06ம் தியதி அகத்தியப்பெருமான், பெருமாளுக்கு வருடம் தோறும் செய்து வருகிற அபிஷேக பூஜை,  மிக சிறப்பாக நடை பெற்றது. மதியம் 2 மணிக்கு முடிவடைந்த பூஜைக்குப்பின், மதியம் 2.30 மணிக்கு, திருப்பதியில் இருந்த அகத்தியப்பெருமானின் ஜீவ நாடியில், திரு ஜானகிராமன் அவர்கள் அகத்தியப் பெருமானின் வாக்கை உரைத்தார். அந்த வாக்குகளை அடுத்த நாளே சித்தன் அருள் வலைப்பூவில் வழங்கப்பட்டது. இந்த பூஜை சம்பந்தமான வாக்குகளை சுருக்கி உங்களுக்கு கீழே வழங்குகிறேன்.

பூஜைக்குப் பின் அகத்தியர் அருள் வாக்கு:-
  • அனைவருக்கும் ஆசிகள்.
  • எதை செய்ய வேண்டும் என (அகத்தியர்) எதிர்பார்க்கின்றேனோ, அப்பொழுதெல்லாம் அடியவர்களை ஏதேனும் ஒரு வழியில் தெரிவித்து, அழைத்து சென்று, அங்கெல்லாம் நல்லவிதமாக உயர்வு கொடுப்பேன்.
  • நான் அழைக்கும் இடத்திற்கெல்லாம் பெருமாள் வருவார், ஏன்  என்றால், ஒரு காலத்தில் பெருமாளுக்கு யான் உதவி புரிந்துள்ளேன். என் பக்தர்கள், உன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். யானும் உனக்கு சேவைகள் செய்வேன் என்றிட, பெருமாள் திருப்பதியிலிருந்து கோடகநல்லூர் வந்து விட்டார்.
  • பக்தர்கள் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை இருப்பினும், பெருமாளிடம் கூறி மாற்றமடையச் செய்கிறேன்.
  • இனி வரும் காலங்களில் அங்கு யார் யார் இருக்க வேண்டும் என யானே தீர்மானிப்பேன்.
  • யானும், லோபாமுத்திரையும் வந்திருந்து பெருமாள் கொடுத்த உணவை உண்டோம்.
  • ஆண்டுகள் செல்லச்செல்ல கோடகநல்லூரை நிறைய மாற்றி அமைப்பேன். பெருமாளிடத்தில் அவற்றை உரைத்துவிட்டேன்.
  • மனவருத்தங்களோடு அங்கு எதை செய்யினும், ஆசீர்வாதங்கள் கிட்டாது. யானும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன். ஒரு எல்லை வரைதான் பார்ப்பேன், அதன் பின்னர் விஷயங்கள் (ஏற்பாடுகள்), வேறு மாதிரியாக பார்க்கப்படும். இதுவே என் தீர்ப்பு.
  • என் பக்தர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முன்னரே உரைத்துவிட்டேன். அப்படி நடந்து கொண்டால் குறைகள் வராது.
  • சுத்தமான பச்சை கற்பூரம், கிராம்பு, துளசி, இவை மூன்றும் வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு பெருமாளிடம் வேண்டினால், அனைத்தையும் அருளிடுவார்.
  • பெருமாளே, கொங்கணவர் சித்தரை அழைத்து, வந்திருந்த அனைவரது வேண்டுதல்களையும் உற்று நோக்கி, அருளக்கூறி, அனுப்பிவைத்தார்.
  • அனுமனும் பெருமாள் உத்தரவின் பேரில் அங்கு வந்து, சனீஸ்வரனும், எப்படி ஒவ்வொருவர் கர்மாவுக்கு ஏற்றபடி நடந்து கொள்கிறார்கள் என பார்த்து நிறைய மாற்றங்களை மனிதருள் உருவாக்கி விட்டார்.
பெருமாள் அபிஷேக பூஜை தினத்தன்று கோடகநல்லூரில் வந்திருந்தவர்கள்:-
  1. ப்ரஹன் மாதவப் பெருமாளாக திருப்பதியிலிருந்து பெருமாள்!
  2. ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்திய பெருமான்
  3. கொங்கணவ சித்தர்
  4. அனுமன்
  5. சனீஸ்வரன்
  6. தாமிரபரணித்தாய்
  7. அகத்தியர் அடியவர்கள்.
நிகழ்வுகள்:-

கோடகநல்லூர், அந்த நாள்>இந்த வருடம் அபிஷேக பூஜைகள், திருமதி.லக்ஷ்மி தேவராஜன் என்கிற அகத்தியர்ப் பெருமானின் அடியவரின் மேற்பார்வையில் நடை பெற்றது. அவரால் நேரடியாக வர முடியாத சூழ்நிலையில், அவரது நண்பர்கள் (அகத்தியர் அடியவர்கள்) முன் நின்று சிறப்பாக நடத்தினர்.

அன்றைய தினம் காலை 4 மணியிலிருந்தே அடியவர்கள் வந்து தாமிரபரணியில் நீராடி அபிஷேக பூஜைக்காக காத்திருந்தனர்.

வந்திருந்த அடியவர்களுக்கு காலை சிற்றுண்டி அளிக்கப்பட்டது.

மந்திரம் முழங்க, சங்கல்ப்பம் செய்து, தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

பெருமாளுக்கும், தாயார்களுக்கும், கருடாழ்வாருக்கும் முன்னரே வஸ்த்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் பூமாலைகளும் சமர்ப்பிக்கப்பட்டது.

பெருமாளுக்கும், தாயார்களுக்கும் அபிஷேக தீர்த்தம் தாமிரபரணியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு அபிஷேகம் நடந்தது.

பெருமாளுக்கு எண்ணைக்காப்பு போட்டபின் பிரசாதமாக எண்ணெய் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

வெட்டிவேர் தீர்த்தம், பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், 108 மூலிகைப்பொடி, சந்தனம், மஞ்சள், தேன், நெய், போன்ற பலவித பொருட்களால், பெருமாளுக்கு அபிஷேகம் நடை பெற்றது.

எப்போதும் போல் பெருமாள் மிகுந்த திருப்தியுடன், ஆனந்தமயனாக அமர்ந்திருந்தது உணரப்பட்டது.

அபிஷேக நேரத்தில் அகத்தியப்பெருமானை, கண்டவர்கள், உணர்ந்த அடியவர்கள் ஏராளம்.

துளசி, தாமரை, அரளி, ரோஜா, மல்லிகை போன்ற பலவித பூக்களால், பெருமாளை மூழ்கவைத்து, அகத்தியர் அடியவர்கள், இறை அருளை பெற்றனர்.

திரு.தேவராஜன் என்கிற அகத்தியர் அடியவர், பெருமாள் மீது பாடல் இயற்றி பாடினார்.

ஒரு அகத்தியர் அடியவர் அடியேனிடம் "பூஜை நன்றாக இருந்தது. பெருமாள் ஏற்றுக்கொண்டாரா?" என வினவ நீங்களே நிமிர்ந்து பார்த்து கேளுங்கள் என்றேன்.

"என்ன பெருமாளே! பூஜையை ஏற்றுக்கொண்டீரா? திருப்திதானே?" என வானத்தைப் பார்த்து கேட்க, சற்று நேரத்தில் மழை கொட்டியது. வந்திருந்த அடியவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

உழவாரப்பணி செய்த அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும், அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். மறுபடியும் நாம் அனைவரும் அகத்தியரின் அடியவர்கள் என்று நிரூபித்து விட்டீர்கள். எவ்வளவு சுத்தம் தேவையோ அதற்கும் மேலே சுத்தமாக்கி கோவிலை திருப்பி சமர்ப்பித்தது மிக சிறப்பாக அமைந்தது. பெருமாளும், தாயார்களும், அகத்தியர் லோபாமுத்திரை, சித்தர்கள் அனைவரும் மிக மகிழ்ந்து போயுள்ளனர். உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தும் விட்டனர். 

பெருமாள்/அகத்தியர் சார்பாக வந்திருந்த அடியவர்களுக்கு கீழ்கண்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
  1. பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்பட நான்கு வகையான அன்னம்.
  2. அபிஷேக பஞ்சாமிர்தம்.
  3. பெருமாளுக்கு பாதத்தில், மார்பில் சார்த்தப்பட்ட மஞ்சள் பொடி.(இது ஒரு அருமருந்து. உள்ளுக்குள் எடுத்துக்கொள்க)
  4. முருகப்பெருமானின் கிரௌஞ்சகிரி பால் கட்டி.
  5. அகத்தியப்பெருமான், லோபாமுத்திரை சார்பாக அனைவருக்கும் அவர்கள் படம் பதித்த 10 ரூபாய் நாணயம். இது பெருமாள் பாதத்தில் வைத்து அளிக்கப்பட்டது.
  6. அகத்தியப்பெருமான் லோபாமுத்திரை தாயுடன் சேர்ந்து அருளும் படம் (வீட்டு பூஜை அறையில் வைக்க).
  7. அகத்தியப்பெருமான் அருளும் சிறிய படம் (பையில் வைத்துக்கொள்ள).
​அடுத்த தொகுப்பில் கோடகநல்லூர் நிகழ்ச்சி நிறைவு பெரும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......தொடரும்!​

4 comments:

  1. அகத்தீசாய நம

    ReplyDelete
  2. அன்புடன் அகத்தியம் பெருமானுக்கு அடியவனின் பணிவான அன்பு வணக்கங்கள்... நவம்பர் 7 ம் நாள் பௌர்ணமி... முருகர் ஆலயத்தில் தங்களுக்கு பௌர்ணமி பூஜை...அதைமுன்னிட்டு அடியவனால் கோடகநல்லூர் வர இயலவில்லை... வந்திருந்தால் நாணயம் கிடைத்திருக்கும்... ஒருவேளை எமது ""நா- நயம்"" தவறிவிட்டதா???!!! அதனால் தாயும் தகப்பனும் கொண்ட நாணயம் கிடைக்கவில்லையோ ???!!! அய்யா...அகத்தியம் பெருமானே... எது எப்படியோ... எமது அருகில் இருந்து எம்மை வழிநடத்துங்கள்...அது போதும்...இருப்பினும் மனம் சற்று கணக்கத்தான் செய்கிறது ""நாணயம்"" கிடைக்காததால்... அன்று வரமுடியாத அடியவர்களின் சூழ்நிலை... மனநிலமை... அவர்களுக்கும் அந்தநாள் - இந்தவருடம் == வந்திருந்த அனைவரது ஆசிகளும் வேண்டுமே அய்யா...????? ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  3. கடந்த ஆண்டு ஐப்பசி மாதம் ஒரு நாள் பெருமாள் என்னையும் அவரை காண அழைத்தார் ஆனால் அது ஒரு அதிசயம் தான்.

    ReplyDelete
  4. இந்த தளத்தை எனக்கு அறிமுகபடுத்தியவருக்கு நன்றி. அவர்கள் மூலம் இத்தலத்திற்கு வரும் வாய்ப்பை பெற்றேன். அபிஷேகத்தை காணும் பாக்கியம் பெற்றேன். அழகான அமைதி . மாதவ பெருமாளை பற்றி அவர் பாடிய பாடல் இனிமையாக இருந்தது. நான்கு வரிகளி ல் மடிந்தது கொஞ்சம் குறை' ஆனால் அர்ச்சுகர் கோவிந்த நாமத்தையும் இராமர் காமத்தையும் கோஷமாக பாட வைத்தது அந்த இடமே தெய்வீகமான இருந்தது. மாதவ பெருமாளும் இவரும் ஒன்று ஆதலால் அடுத்த முறை 108 கோவிந்த .நாமாவளி கேட்கும் வாய்ப்பு உண்டாகட்டும். அருமையான பிரசாதம். .அழகான படம் .அதை அளித்தவர்களுக்கு நன்றி..அந்நாள் முழுவதும் ஒன்றின் பின் ஒன்றாக (பிரசாதம்,நாணயம்,படம்,தீர்த்தம், மஞ்சள்.,,)வழங்கிய அகத்திய அடியவர்களக்கு நன்றி). மூலவரை காலையில் பார்க்க முடியவில்லை.. அபிஷேகம் முடிந்தவுடன் பார்க்கலாம் என்றால் திறை போடப்பற்றிருந்தூ. மாலையில் நான்கு மணிக்கு திறக்கப்படும் என்று கூறினார்கள். அன்று இரவே இரயிலில் செல்ல வேண்டும்.அங்கு மாலை வரை இருந்தால், அகத்தியர் வழி காட்டிய கணபதி கோவிலுக்கும் நெலையப்பரையும் காண முடியாது. மனதில் ஓர் அன்னம் ந்நனறக்காக அன்றாட ந்தியை விளக்கி தரிசனம் செய்வித்தார் ஈசன் , மாதவ பெருமாள் செய்வாரோ என்று நன்றருக்கையில், என்ன பெருமாள் பார்க்கனும் வாங்க உள்ள என்ற அர்ச்சுனனின் வார்த்தை மற்ற்ற மகிழ்ச்சையை அளித்த த. மிக மிக மன நிலையுடன் நிறைய பேர் தரிசனம் செய்தோம். எண்ணியபடி மற்ற ஆலயங்கள் சென்று லோபமுத்ரை சமேத அகத்தியரின் கருணையால் மிக மிக மிக மன நிறைவுடன் வீடு திரும்பிaனேன்
    ஓம் ஶ்ரீ Lobamudra சமேத அகதீதீஸ்வர a சரணம்

    ReplyDelete