​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 14 November 2022

சித்தன் அருள் - 1218 - அகத்தியர் மைந்தனுக்கே பரீட்சை - 5

நான் அழைப்பு விடுத்த நண்பர் உடனேயே வந்து சேர்ந்தார்.

"உனக்கு, ஒரு 9 நாளுக்கு ப்ரம்ம முகூர்த்தத்தில் வேலை இருக்கு. இதை எனக்காக செய்ய வேண்டுகிறேன், முடியுமா?" என்றேன்.

"சொல்லுங்கள்! செய்கிறேன் என்றார்!"

இதுவரை நடந்தவைகளை கூறிவிட்டு, "என் குருநாதர் த்யானத்தில் அமர்ந்திரு! ஒரு மண்டலத்துக்கு அப்புறம் நான் வருகிறேன், இறை உத்தரவால் வேலை உள்ளது என்று கூறி சென்றுவிட்டார். என் உடல் படாத பாடு படுகிறது. நீ என்ன செய்ய வேண்டும் என்றால், விடியற்காலை அந்த முருகர் கோவிலுக்கு 9 நாட்கள் சென்று அவர் வேலில் குத்தியிருக்கும் எலுமிச்சை பழத்தையும், சிறிது உச்சி விபூதியையும் வாங்கி வா! எனக்கு வேண்டும்" என்றேன்.

அவரும் தினமும் ப்ரம்ம முகூர்த்தத்தில் சென்று வாங்கி வருவார். எலுமிச்சை பழத்தை ஒரு நிமிடம் நெற்றியில் வைத்து அகத்தியப் பெருமானிடம் பிரார்த்தித்துவிட்டு, தலையணைக்கு கீழே வைத்து விடுவேன். விபூதியை சற்று நெற்றியில் பூசிக்கொண்டு உள்ளுக்கும் எடுத்துக் கொண்டேன். சற்று பலன் அளிக்காத தொடங்கியது. பல வித வேதனைகள் வந்து படுத்தினாலும், உடலுக்கு எங்கிருந்தோ தாங்கும் சக்தி கிடைத்தது. நிறைய அளவுக்கு மாத்திரைகள், மருந்துகள் உள்சென்றன. நான் சாப்பிடாத மருந்தே இல்லை எனலாம். இப்படி தொடர்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கும் போது தான் ஒரு நாள் இப்படி ஒரு எண்ணம் தோன்றியது.

"அகத்தியப்பெருமான், ஒரு மண்டலம், இறைவன் இட்ட கட்டளையாக சேவை செய்ய போவதாக தானே சொல்லிப் போனார். அவருக்கு, நான் இத்தனை சிரமங்களை அனுபவிக்கப் போகிறேன் என்பது முன்னரே தெரிந்திருக்குமோ? அவரும் சேர்ந்து தான் இந்த நாடகத்தை நடத்துகிறாரா?" என்றெல்லாம் தோன்றியது.

"உண்மை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர் நாடியில் வந்தால் தான் முடியும். சரி! காத்திருப்போம்" என்று அமைதியானேன்.

ஒரு வழியாக, நொந்து நூலாகி, ஆரோக்கியத்தை இழந்து, கூனி குறுகி, நண்பர்கள் அனைவரும், இவருக்கு என்ன நடக்கிறது என்று ஆச்சரியப்பட்டபடியே இருக்க, பலமுறை அவசர சிகிர்ச்சையையும் பெற்று 48 நாட்கள் கழிந்தது. ஒரு பேரமைதி வந்து சேர்ந்தது.

உடல் சோர்வால், அகத்தியர் உதவ வேண்டிய நேரத்தில், என்ன நடக்கப்போகிறது என்று சொல்லாமல் விட்டு சென்றதால், அவர் மீது பயங்கர கோபம் வந்தது. ஒருவனை எவ்வளவு தூரம் சித்திரவதை பண்ண முடியுமோ அவ்வளவு தூரம் விட்டு கொடுத்து விட்டு எப்படி இவரால் தன் மைந்தனை விட்டு விலகி இருக்க முடிந்தது? என்றெல்லாம் யோசனை வந்தது.

அது ஒரு வியாழக்கிழமை. விடியற் காலையிலேயே எழுந்து உடல், மன சுத்தியுடன், முன்னர் போலவே, த்யானம் செய்து ஜீவநாடியை எடுத்துப் பார்த்தேன்.

அகத்தியப்பெருமான் உடனேயே வந்து வாக்குரைத்தார். முதல் விசாரிப்பே "ஆசிகள், நலம்தானே! பரீட்ச்சை எப்படி இருந்தது? மிகப் பெரிய அருளையெல்லாம் பெற்று விட்டாய் போல.சாதாரண மனிதனுக்கு வருகிற கோபம் எல்லாம் உனக்கு வரலாமோ? அனைத்துக்கும் காரணமுண்டு! பொறுமையாக கேள்!" என்று கூறத்தொடங்கினார்.

சித்தன் அருள்............தொடரும்!

3 comments:

  1. Ohm agatheesaya nama..plz post next part soon

    ReplyDelete
  2. சற்குரு அகத்தியர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

    ReplyDelete
  3. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete