​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 14 November 2022

சித்தன் அருள் - 1219 - அகத்தியர் மைந்தனுக்கே பரீட்சை - 6


​"உன் ஜாதக கர்மா படி, பல நேரங்களிலும் இறைவனால் சோதனை நடத்தப்பட வேண்டும். அதில் மிக சிறந்த ஒரு நேரம் என்பதே கழிந்த மண்டலம். இறைவன் அனுமனை அனுப்பி சோதித்தார். நீ என் மைந்தன் என்றறிந்த போது சோதனை இன்னும் கடுமையாயிற்று. அவரா? நானா என்கிற போட்டி எங்களுக்குள் வலுத்தது. பொதுவாக இறை சோதனை செய்யும் பொழுது, வெளியில் நின்றே சோதனை சூழலை உருவாக்கும், சோதிக்கும். ஆனால் அனுமனோ, அரூபமாக வந்து உனக்குள்ளேயே இறங்கி நின்று விளையாடினான். நீ இன்னும் உயிரோடிருக்கும் காலத்தில் அவ்வப்போது அனுபவிக்க வேண்டிய வியாதி வேதனைகளை உனக்கு தொடர்ந்து 48 நாட்களுக்கு கொடுத்து, உன் கர்மாவை வேகமாக சுத்தம் செய்தான். இதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?" என்று நிறுத்தினார்.

நான் அமைதியாக "புரியவில்லை, நீங்களே கூறுங்கள்!" என்றேன்.

"கோவிலுக்கு போய் இறைவனை தரிசிக்கும் முன் குளித்து உடலை சுத்தம் செய்து கொள்வது போல், உடலில் இருக்கும், எழுதி வாங்கி வந்த கெட்ட கர்மாக்கள் பரிபாலனம் செய்யப்பட்டால்தான், இறை தரிசனம் கிட்டும். நீ கூட அடிக்கடி கேட்பாயே, எனக்கு ராமரின் தரிசனம் கிட்டுமா என்று? அந்த தரிசனம் இனி உனக்கு விரைவில் கைவல்யமாகும். ராமபிரானின் ஏற்பாட்டில், அனுமன் வந்திறங்கி, உன் கர்மாவை சுத்தம் செய்து சென்றுள்ளான். என் மீது நீ காட்டிய பக்தியில், அனுமனே கதி கலங்கிப் போய், மிகச் சிறப்பாக உன்னை ஆசிர்வதித்து சென்றிருக்கிறான்.

இந்த கலியுகத்தில், இறைவன்/சித்தர்கள்/முனிவர்கள்/பெரியவர்கள், மனித குலத்துக்கு செய்து தருகிற அத்தனை நல்லதிற்கும் "ஒரு நன்றி கூட இறைவனுக்கு/சித்தனுக்கு" கூற வேண்டும் என்று தோன்றாத மனிதர்களுக்கு இடையில், என்ன சோதனை வந்தாலும், என் குருவுக்கு பிறகுதான் மற்றவர்கள் எல்லாம் என்று அனுமனுக்கே நீ உணர்த்தியதை அவர் ராமனிடம் பூரித்து தெரிவித்து விட்டார். மேலும் அப்படிப்பட்ட மனிதன் தாங்களை தரிசிக்கவும் ஆசைப்படுகிறான் என உரைத்துள்ளார். இதை கேட்ட ராமபிரானும் மனம் மகிழ்ந்து போயுள்ளான்.

இனி சொல், உன்னை விட்டு விலகி நிற்க அனுமன் உரைத்த பொழுது, நீ தனியாகவே நின்று சோதனையில் ஜெயித்து, இறைவன் தரிசனத்துக்கு தகுதியை வளர்த்துக் கொள்வாய், என்று நான் விலகி நின்றது, எந்த விதத்தில் தவறு? உன் கோபம் எந்த விதத்தில் நியாயம்?" என்றார்.

கண்களில் நீர் தளும்ப, அனுபவித்த அத்தனை வேதனையும், அந்த ஒரு நொடியில் என்னை விட்டு அகல, எழுந்து நின்று அகத்தியரை நாடியில் பார்த்து "மன்னித்துவிடுங்கள் என் கோபத்திற்கு. நீங்கள் ஒன்றுமே இதைப்பற்றி கூறாமல் சென்று விட்டதால் வந்த ஆதங்கத்தில் கோபப்பட்டுவிட்டேன். மன்னித்தருளுங்கள்!" என்று நாடியை நமஸ்காரம் செய்தேன். [இதை கூறும் பொழுதே அவர் கண்கள் கலங்கி, சற்று நேரம் அமைதியாக இருந்து பின் தொடர்ந்தார். எனக்கு அவர் மனநிலை புரிந்தது].

"அதற்குப்பின்தான் பத்ராச்சலத்தில் ஸ்ரீராமன், சீதை, லக்ஷ்மணன், அனுமன் ஆகியோரின் தரிசனமும், ராமர் சாப்பிட்டு மிச்சம் வைத்த மாதுளையை பிரசாதமாக சாப்பிடும் பாக்கியமும் கிடைத்தது" என்றார்.

அகத்தியர் அடியவர்களே, இந்த தொகுப்பு, குருநாதர் ஹனுமந்ததாசன் அவர்களின் திடமான பக்தியை உங்களுக்கு தெரிவிப்பதற்காகவும், அவருக்கு மரியாதை செய்வதற்காகவும், குருவிடம் நாம் எப்படி நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், எந்த சோதனையிலும், குரு நம்மை நாம் அறியாமல் கூட இருந்து காப்பாற்றுவார் என தெரிவிக்கவும் எழுதப்பட்டது.

இதே போன்ற ஒரு சூழ்நிலையில், அகத்தியப்பெருமானே வந்து அடியேனை அழைத்து சென்று, தண்டனை கொடுத்து, கர்ம கழிவுக்கு வழி செய்தார். 2019இல் ஒரு நாள் "நீ உடனே புறப்பட்டு வா! உனக்கு தண்டனை கொடுத்து, கர்மா கரைய வேண்டும்!" என்றார்.

குருநாதர்தான் கூறுகிறார் என்றுணர்ந்து "எங்கே வரவேண்டும்?" எனக் கேட்டேன்.

"என் வேதபுரிக்கு வா!" என்றார்.

"சரி! வருகிறேன்! அதற்கு முன் பெருமாளை பார்த்துவிட்டு வருகிறேன்!" எனக்கூறி அத்திவரதரை காஞ்சிபுரத்தில் தரிசித்து விட்டு சென்றேன்.

போகும் வழியில், மனைவியிடம், "எனக்கு, என் கர்ம வினைப்படி, தண்டனை தந்து, கர்ம பரிபாலனத்துக்காக அகத்தியப் பெருமான் வரச் சொல்லியிருக்கிறார். பயம் வேண்டாம். கொல்ல மாட்டார், நிச்சயம் உயிரோடு திரும்பி வருவேன், என்று கூறி அனைவருடன் வேதபுரிக்கு சென்றேன். உடல் பாதிக்கப்பட்டு ஞாபகம் இன்றி மயங்கி விழ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அடியேனை காப்பாற்ற வேண்டி, என் அனுமதியுடன் காலில் ஒரு விரலை வெட்டினார்கள். மிகுந்த ஸ்ரமங்களுக்குப் பின் ஒரு மாதம் கழிந்து ஊர் வந்து சேர்ந்தேன். இங்கு மருத்துவமனையில் இரண்டாவது விரலை எடுக்க வேண்டும் என்றார்கள். அனுமதித்தேன். இரண்டு விரலையம் வெட்டிய போது நல்ல ஞாபகம் இருந்தது. அப்பொழுது எழுந்த எலும்பு உடைக்கிற சப்தம் போலும், என்னுள் இப்பொழுதும் பதிந்துள்ளது. ஆயினும், அந்த இரு நேரத்திலும் "ஓம் அகத்தீசாய நமஹ!" என்று தான் கூறினேன்! இன்று அடியேனை காப்பாற்றி, நடக்க விட்டிருப்பது, அகத்தியப்பெருமானிடம் அடியேன் வைத்துள்ள குரு பக்தி தான். அவர் ஏதேனும் கூறிவிட்டால், பின் எந்த பக்கமும் பார்ப்பதில்லை. அதை சிரம் மேற்கொள்வதே அடியேனின் வாழ்க்கை.

இப்படி அகத்தியருடன் வாழுங்கள் என்று உங்களிடம் கூறிக்கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

15 comments:

  1. குருவடி சரணம்
    ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  2. வணக்கம் ஐய்யா 🙏

    கடந்த சில நாட்களாக, பரிட்சை என் 1211 முதல் 1219 , இன்று வரை, திரு. ஹனுமன்தாசன் ஐய்யா அவர்களுக்கு நிகழ்ந்த பரிட்சையும், குரு அருளும், திரு அருளும் துணை நின்று அருளியதை, அறியும் போது, குருநாதரின் கருணையையும், அவர் மீது கொள்ள வேண்டிய பக்தி, நேர்மை, உண்மை, அன்பு, பற்று மற்றும் குருநாதரின் திருவடியில் நம் சிரம் தாழ்த்தி பணிந்து, நம் கடன் அவர் திருவடிக்கு பணி செய்து கிடப்பதே மட்டுமே, என்னும் நிதர்சனமான உண்மை பக்தியை உணர்த்துகின்றது.

    லோபா அம்மா உடனமர் அகத்தீஸ் அப்பா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

    அகத்தியர் அடிநாய் 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

    ReplyDelete
  3. அன்புடன் அகத்தியம் பெருமானுக்கு... அன்புடன் அடியவன் பதிவிடுவது... என்ன சொல்வதென்று தெரியவில்லை... இருந்தாலும் இப்படிப்பட்ட கர்மாவெல்லாம் நினைத்து பார்கவே... நடுங்குகிறது!!!!! அப்பா... நமரொம்ப கஷ்டம்... எது எப்படியோ இந்த அடியவனையும் ஒன்றுமே அரியாத ஆத்மாக்களையும் கைவிட்டுவிடாதீர்கள்... பிறப்பை கடைதேற்றவேண்டும்...அன்புடன் அடியவன்..

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நம. குருவே துணை.

    ReplyDelete
  5. கண் கலங்கி விட்டேன். குருவே சரணம்.

    ReplyDelete
  6. ஐயா, நீங்கள் கூறும் வேதபுரி எங்கே இருக்கிறது. அருள் பாலிக்கவும்

    ReplyDelete
  7. ஐயா தங்களின் குரு பக்தி அளவுகடந்தது ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    மனம் நடுங்கி விட்டது

    ReplyDelete
  8. அன்பின் இலக்கணம்,நின் மைந்தனுக்கே இப்படி ஒரு தண்டனை.அதையும் கூப்பிட்டு கொடுக்கீறிர்கள்
    அவரும் ஏற்று கொண்டார்.நாங்கள் எப்படியோ.
    அனுபவ சித்தர்கள் ஏற்று கொள்ளும் நிலைமையும் வேறு.நாடு இப்போது இருக்கும் நிலைமை.

    வசதி வாய்ப்பு இல்லாவிடிலும்,தராவிடினும் நோய் தீர்த்து அருள்வாய். இறைவனிடமே எல்லாம் விட்டு விடுகிறேண்.
    கடை நாள் வரை காப்பாற்று. நின்னை மறக்கும் போது சிறு தண்டனை கொடுத்து தெளிவு படுத்து.
    ஓம் சத்குரு மகான் சேஷாத்திரி சுவாமிகள் திருவடிக்கே சரணம்!
    ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

    ReplyDelete
  9. அற்புதமான அனுபவங்கள். கொடுத்த வைத்த மனிதர்கள். ஒரு வேண்டுகோள்.
    திரு ஜானகிராமன் அவர்களின் புகைப்படம் ஜீவநாடி உடன் இருப்பது - இருந்தால்
    பதிவிடவும்(அகத்தியர் அனுமதியுடன்).

    ReplyDelete
  10. Vedapuri narasimmar temple at Nellore,Andhra dt,sir.isit correct or not pls conformed,incase any mistake pls forgive me.thankyou🙏

    ReplyDelete
  11. அகத்தீசாய நம 🙇‍♂️🙏 மிக்க நன்றி ஐயா, இந்த நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்ததற்கு,,

    ReplyDelete
  12. Om Agatheesaya Namah! really blessed to read Hanumandhasan ayya's and your experiences. This is a true guide for all of us. We have to think of guru during any difficult circumstances. Thanks ayya and waiting for the next one.

    ReplyDelete
  13. இறைக்கும் அகத்தியர் அய்யனுக்கு நன்றிகள் கோடி,இந்த வலைத்தளம் மூலமாக நல்வழி கை பிடித்து அழைத்து செல்வதற்கு ,

    ReplyDelete
  14. நமஸ்காரங்கள் அய்யா,
    அகத்தியர் மைந்தன் ஹனுமத்தாசன் அய்யா அவர்களுக்கு அகத்தியர் ஜீவ நாடிகிடைத்தது பற்றி யும் ஹனுமத்தாசன் அய்யா அவர்களின் மறைவு பற்றியும் அகத்திய பெருமானின் அனுமதி இருந்தால் பதிவிட கோருகிறேன் அய்யா

    ReplyDelete
  15. திரு ஹனுமந்த தாசன் அவர்களின் மறைவு பற்றி, திரு கார்த்திகேயன், பெருமாளும் அடியேனும் என்னும் தொகுப்பில் விரிவாக, பின்னுரையாக கொடுத்துள்ளார். அதை pdf பைல் ஆக தொகுத்து சித்தன் அருளில் தரப்பட்டுள்ளது. அப்போது நடந்த விஷயங்களும் அதில் உள்ளது.

    நாடியை பொறுத்தவரை, அவருக்கு, வடக்கில் (Rishikesh) "லக்ஷ்மண் ஜுலா" என்கிற இடத்தில் ஒரு கோவிலில் சித்தர் ஒருவர் வந்து கொடுத்தார் என ஒரு முறை தெரிவித்துள்ளார்.

    ReplyDelete