வணக்கம் அகத்தியர் அடியவர்களே
பஞ்சவடி வாக்கு பாகம் 1
கடந்த 9/10 2022 புரட்டாசி பௌர்ணமி தினம் அன்று!!! கடந்த மாதத்தில் சிவவாக்கியர் சித்தர் உரைத்ததை பின்பற்றி அமாவாசை பௌர்ணமி தினங்களில் நாசிக் பஞ்சவடி கோதாவரி ஸ்தானம் மற்றும் கபாலேஸ்வரர் தரிசனம் செய்ய முடிவு எடுத்து அகத்தியர் அடியவர்கள் புரட்டாசி அமாவாசை தினத்திலும் செய்து முடித்து அடுத்து புரட்டாசி பௌர்ணமி அன்றும் அடியவர்கள் ஒன்று கூடி நாசிக் பஞ்சவடியில் கோதாவரி திருவேணி சங்கமம் ஸ்நானம் மற்றும் சாதுக்களுக்கு அன்னதானம் மற்றும் கபாலேஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடத்தினர். கபாலீஸ்வரருக்கு நல்முறையாக விபூதி சந்தனம் பன்னீர் பால் என வாசனாதி திரவியங்கள் கொண்டும் மிகச் சிறப்பான முறையில் ஒரு அடியவர் கொண்டு வந்திருந்த முருகப்பெருமானின் வேலும் வைத்து பூசை நடத்தப்பட்டது!!! நம் குருநாதரின் ஓலைச்சுவடி ஜீவநாடி பெட்டகம் கபாலேஸ்வரர் மடியிலே வைக்கப்பட்டு பூசை முழுவதும் மிகச் சிறப்பாக நடைபெற்றது... பூசை முடிந்தவுடன் அன்னதான சேவை தொடங்கியது வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கு மற்றும் சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜை போன்றே அன்னதானம் நடத்தப்பட்டது!!! ஒவ்வொரு சாதுக்களும் வந்து அன்னதானம் உண்ட பொழுது அன்னதான கூடம் முழுவதும் தெய்வீக பரவச நிலை ஏற்பட்டது!!! வந்து அன்னதானத்தை ஏற்றுக் கொண்ட சாதுக்கள் அனைவரும் ஆசீர்வாதம் செய்துவிட்டு சென்றனர்!!
அதன் பிறகு மாலை வேளையிலும் தரிசனம் செய்துவிட்டு கபாலேஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் அமர்ந்து திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் ஜீவநாடி ஓலைச்சுவடியை வணங்கி ஜீவநாடியை வாசிக்கும் பொழுது காகபுஜண்டர் மகரிஷி வந்து வாக்குகள் தந்தருளினார். அவர் வாக்கு தர துவங்கிய உடனே தரிசனம் செய்ய வந்த எங்கிருந்தோ வந்த பக்தர்கள் அனைவரும் அப்படியே அமர்ந்து கேட்கத் துவங்கினர். காகபுஜண்டர் மகரிஷி யான் என்ன உரைக்கப் போகின்றேன் என்பதை கேட்பதற்கு மனித வடிவில் அகத்தியர் இங்கே அமர்ந்திருக்கின்றான் என்ற வாக்கு கேட்ட பொழுது அடைந்த பரவசத்திற்கு அளவே இல்லை காரணம் என்னவென்றால் யாராக இருக்கும் ? யாராக இருக்கும்? அவராக இருப்பாரா? இவராக இருப்பாரா? என்ற சிந்தனை அனைவர் மனதிலும் ஓடிக்கொண்டே இருந்தது!!!
காகபுஜண்டர் மகரிஷி நல்முறையாக வாக்குகள் தந்த பிறகு நம் குருநாதர் அகத்திய பெருமான் வாக்குகளை தரத் தொடங்கினார்!!!!
கபாலேஸ்வரர் ஆலய கருவறை பின்புறம் அடியவர்கள் கூட்டம் பக்தி பரவசத்தோடு இருக்க பௌர்ணமி தினம் இரவு தொடங்கிவிட்டது பூரண கலையோடு சந்திரனும் ஒளி வீச சரியாக வாக்கு உரைத்த இடத்திலிருந்து வானில் பௌர்ணமி நிலாவும் பௌர்ணமி நிலா அருகிலேயே விடிவெள்ளி எனும் சுக்கிரன் நட்சத்திரமும் அனைவருக்கும் காண கிடைத்தது!!!! காரணம் இல்லாமல் இந்த தரிசனம் அன்று கிடைக்கவில்லை குருநாதரின் வாக்குகளை ஒவ்வொன்றாக கேட்கும் பொழுது தான் அதன் மகத்துவமே புரிந்தது!!!!
திரு ஜானகிராமன் ஐயா சுவடியை வாசிக்க தொடங்கினார்!!!
தமிழில் வாக்குகள் உரைக்க உரைக்க வட இந்திய பக்தர்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டு சன்னிதானத்தை வலம் வந்து கொண்டு இருந்தனர்!!
மிகவும் முக்கியமாக அறிவியல் ரீதியான வாக்குகளை குருநாதர் அகத்தியர் தரத் தொடங்கிய பொழுது இடையிடையே நிறுத்தி நிறுத்தி குருநாதர் வாக்குகளாக தந்தார்!!!
ஒரு அகத்தியர் அடியவர் வடமொழியில் மொழிபெயர்த்து கொடுக்க!!! கொடுக்க!!! குருநாதர் அகத்தியர் இடி முழக்கம் போல ஒவ்வொரு வாக்கும் உரைத்து !!உரைத்து பரவசப்படுத்தினார்.
வட இந்திய பக்தர்கள் அனைவரும் ஒரு தெய்வீக அதிர்வோடு அனைவரும் அப்படியே அமர்ந்து விட்டனர்!! கூட்டம் கூடிவிட்டது எல்லோரும் அமர்ந்து என்னவென்று கேட்கத் தொடங்கி விட்டார்கள்!!! சொல்லப்போனால் ஆலயத்தின் அக்கம் பக்கம் இருந்தவர்கள் அனைவரும் கூடி அமர்ந்து நம் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த ஒவ்வொரு வாக்கினையும் கேட்டு கேட்டு பரவசத்தில் ஆழ்ந்து போய் விட்டனர்!! ஒரு சத்சங்கம் நடந்தது போலவே இருந்தது!! குருநாதருடைய வாக்குகளை கேட்க கேட்க அந்த பஞ்சவடியே அதிர்ந்து போனது!!!! ஒரு பனை ஓலை சுவடியில் குருநாதர் அகத்திய பெருமான் வந்து வாக்குகள் உரைப்பதை அவர்கள் காண்பது இதுவே முதல் முறை மேலும் மேலும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயினர்!!!
அதே ஊரில் வசிக்கும் அதே ஆலயத்தின் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் அடியவர்களுக்கு கோதாவரி நதியின் சிறப்பும் பௌர்ணமியும் ஸ்நானமும் இதனைக் குறித்து குருநாதர் ஒவ்வொன்றாக விளக்க விளக்க மெய்யுருகி ஆச்சரியமும் பக்தி பரவசம் மேலோங்கி எங்களுக்கு இன்றைய நாள் புண்ணிய நாள் !!!
குருநாதர் அகத்தியர் பெருமானின் ஜீவநாடி குறித்து தெரியாத மக்களுக்கு அனைத்தும் விளக்கிக் கூற அவர்கள் சொன்ன விஷயம் இதுதான் !!!
நாங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்து இருக்கின்றோம் இதுவரை நாங்கள் அறியாத விஷயம்!!! இன்று அகத்தியர் பெருமான் உரைத்த விஷயங்கள் எங்கள் வாழ்நாள் பொக்கிஷம் இன்று குருநாதரின் வாக்குகளை கேட்க முடிந்தது நாங்கள் செய்த புண்ணியம் குருநாதர் அகத்திய பெருமானுக்கும் கபாலேஸ்வரருக்கும் கோடான கோடி நன்றிகள் நமஸ்காரங்கள் என்று பக்தியில் உருகி போய்விட்டனர்!!! கபாலேஸ்வரர் ஆலயத்தில் இரவு நடைபெறும் ஆர்த்தி பூசை முடிந்த பின்பும் மக்கள் கூட்டம் சுவடி வாசிக்கும் இடத்தில் ஒரே கூட்டமாக கூடி இப்படி எல்லாம் உலகத்தில் அதிசயங்கள் உண்டா?? என்று வியந்து போய் வாக்குகளைக் கேட்டு அதிசயத்துப் போயினர்!!!
குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கினை இப்பொழுது பார்ப்போம்!!!
ஆனைமுகன் அறுமுகன் போற்றியே!!!! பணிந்து அகத்தியன் செப்புகின்றேன்!!!
அப்பனே!!!! நல்முறையாகவே புசுண்ட முனி எதையென்று அறியாமலே சொல்லி விட்டான் !!! யானும் இங்கு அமர்ந்திருந்தேன்!!!! அப்பனே!!!
அதிகாலையிலே எதை எவற்றை என்று கூட அப்பனே ராமனும் சீதாவும் அழகாகவே வந்து நிச்சயமாய் அப்பொழுது கூட பூசைகள் நடந்து கொண்டே இருந்தது அப்பொழுதே வந்து சென்று விட்டார்கள்!!! நலமாக ஆசீர்வாதங்களும் தந்துவிட்டார்கள் யானும் வந்தேன்!! புசுண்ட முனியும் இங்கே அனைவருக்கும் அருளினான். வசிஷ்டமுனியும் இன்றளவு வந்து உட்கார்ந்து அழகாக உண்டு விட்டு சென்றான் எதை என்று அறிந்து அத்திரியும்(அத்ரி மகரிஷி) அழகாக வந்தான்!!! இதை என்று கூற அவை மட்டும் இல்லாமல் அப்பனே விசுவாமித்திரனும் வந்து பின் அன்னத்தை பின் எதையென்று அறியாமலே எதை என்று தெரியாமலே உண்டு விட்டு சென்றான்!!!
அப்பனே வசிஷ்டனும் பல உதவிகளை ராமனுக்கு இவ்விடத்தில் தான் சொல்லித் தந்து கொண்டே இருந்தான் அதனால் வசிஷ்டனும் பின் அடிக்கடி வந்து கொண்டே இருப்பான் வசிஷ்டனின் வாக்குகளும் இங்கே கிடைக்கும்!!!!
அதாவது இக் கோதாவரி என்று பின் அழைக்கின்றார்களே இவ் நதியைப் பற்றி யான் சொல்லிவிட்டேன்!!!..... அதனால் ராமனுக்கு இவ் நதி மிகவும் பிடிக்கும் இவ் நதியானது!!!
ஆனாலும் இதை அறிந்து அறிந்து பல வழிகளிலும் கூட பல தெரிந்து தெரிந்து இங்கே பின் எதை அறிந்து அறிந்து கொண்டு பல வழிகளிலும் கூட பின் ராமன் அதாவது தன் எதையென்று மனிதனுக்கு பின் கஷ்டங்கள் ஏற்பட்டால் ராமனே அழைத்து நீ கோதாவரி சென்று அங்கேயே குளித்துக் கொண்டே இரு என்று சொல்வான்!!! சில கஷ்டங்களும் நீங்கிவிடும்!!
அதனால் பல பல அதனால் அனுமானும் இதற்கு ஒரு உத்தரவை கொடுத்திட்டான்.
பின் ராமரே!!! இதையென்று கூற உந்தனுக்கு பிடித்தமான ஒன்று இவ் நதி அதனால் உங்களுக்கு எது பிடிக்கின்றதோ? அது எந்தனுக்கும் பிடிக்கும்!!!! அதனால் இவ் நதி எங்கிருந்து ஓடுகின்றதோ? அங்கிருந்து பின் எங்கிருந்து மறைகின்றதோ( கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் சென்று சேரும் இடம் வரையிலான அனைத்து தலங்களிலும் அனுமான் இருப்பார்) அங்கு வரையிலும் யான் இருப்பேன் என்று கூறி விட்டான்!!!
அதனால் அறிந்து அறிந்து இன்னும் எதை என்று தெரிய தெரிய இதனால் நிச்சயம் இங்கே நிச்சயம் ஆனாலும் ஒரு சூட்சமம் உள்ளது இதை பின் நல்லோர்களுக்கு மட்டுமே தெரியும்!!
அதாவது புண்ணியங்கள் பின் கர்மங்கள் கழிந்து புண்ணியங்கள் செய்தவர்களுக்கு மட்டுமே புரியும் அப்படி அவர்கள் கடைசியில் வந்து இங்கே நீராடுவார்கள் அவர்கள் கர்மத்தையும் நிச்சயம் யான் தொலைத்து இருக்கின்றேன் பல மனிதர்களுக்கும் உதவிகள் செய்து கொண்டே இருக்கின்றேன் இப்பொழுது கூட உங்களுக்கும் உதவிகள் செய்து விட்டேன் நீங்கள் நீராடி விட்டதால்!!!!!
எவை என்று அறியாது இன்னும் ஒரு சூட்சமத்தை உங்களுக்கு சொல்கின்றேன் ராமனுடைய சீடர்கள் பல கோடி!!! சீதா தேவியின் சீடர்கள் பல கோடி!!! அதாவது அனுமானின் சீடர்கள் பல கோடி!!! ஆனாலும் அனைவரும் அதிகாலையிலே இக் கோதாவரி நதியிலே நீராடுவார்கள்.!!! இவ் நதியின் புண்ணியம் பின் அப்படியே செல்லும் என்பேன்!!! இதனால்தான் மனிதனுடைய கர்மங்களும் அதிலிருந்து அழிந்து கொண்டே செல்கின்றது!!!
அப்பனே எவை என்று அதனால்தான் பல நதிகளுக்கு புண்ணிய நதிகள் என்றே பெயர்கள் வைத்துள்ளார்கள்!! ஆனாலும் இதனைப் பற்றியும் வரும் வரும் வாக்குகளில் நிச்சயமாய் சொல்கின்றேன்!!!
ஆனாலும் இதன் தன்மையை ஒன்று புதைந்துள்ளது இதன் கூட ஆனாலும் ஒளி விளக்காக அதாவது பின் எதை அதாவது பின் சுக்கிரனுடைய ஆதிக்கம் சரியாகவே அதிகாலையிலே இங்கு விழும் என்பேன்!!! ஆனாலும் இவ் நதி இதிலும் கூட அதனால் பின் சுக்கிரனவானவன் சுக போகங்களுக்கே தயாராகி ஆனாலும் பின் எதை என்று அதனால் இங்கு வந்து கொண்டே இருந்தால் சுகபோகங்கள் அதாவது பின் இதையென்று அறியாத அளவிற்கும் கூட பின் சுங்கனின் அதாவது நட்சத்திரம் போல் மின்னுகின்றான் மேலே!!!
அவ் நட்சத்திரமானது இங்கே பின் ஒளிர்ந்து அதாவது பின் பரிபூரணமாக வெளிச்சத்தை காட்டுகின்றது இவ் நதியிலே!!!
அதனால்தான் இவ்நதியில் நீராடினால் அனைத்தும் கிடைக்கும் என்பதை சொல்லிவிட்டேன்!!!!
எதை என்று அறிய ஆனாலும் பின் பின் இங்கே ஒளி விழுந்து இதனையும் கடந்து அப்படியே அவ் நீரானது புனிதத் தன்மை பெறுகின்றது இதனால் அப்படியே செல்கின்றது இதனால் இன்னும் பல மனிதர்கள் ஆனாலும் சரியாக புண்ணியம் கொண்டிருந்தால் பின் ராமனே அழைத்து விட்டு ஆனாலும் நீரில் மூழ்கி பின் எழச்செய்வான் என்பது சரித்திர உண்மை!!!!
எதை எவற்றை என்று கூட சம்தான் மாமுனி அதாவது பின் ஈசன்(கபாலேஷ்வரர்) அடியில் ஒளிந்துள்ளான்!!!
அனைவருக்கும் ஆசிகள் தந்து கொண்டே தான் இருக்கின்றான்!!!
இதனைப் பற்றி சொல்கின்றேன்!!! ஆனாலும் இதையென்று ஆனாலும் ஒன்றை ஆனாலும் அனுதினமும் இவந்தனுக்கு பின் சொந்தங்கள் ஈசன் மட்டுமே!!
ஆனாலும் தாய் தந்தையரையும் இழந்து விட்டான் பின் நமச்சிவாயா!!! சங்கரனே !! சங்கரனே!!! என்றெல்லாம் அலைந்து கொண்டிருந்தான்!!!
ஆனாலும் ஒருவன் அதாவது ஒரு சூட்சமத்தை விளக்குகின்றேன் இவ்வளவு கஷ்டங்கள் படுகின்றானே என்று அனுமானே !!!! மனித ரூபத்தில் வந்து பின் அதாவது முதியோர் வேடம் அணிந்து பின் மகனே இவ் நதியில் அனுதினமும் நீராடு!!!! உந்தனுக்கு ஒரு பொக்கிஷம் கிடைக்கும் என்று கூறிவிட்டான்!!!
இதனால் யார் இது?? அவந்தனுக்கும் புத்திகள் வந்தது இதனால் நிச்சயம் யாரோ ஒரு பெரியவர் வந்து சொன்னாரே!!!! அதன்படியே செய்வோம் என்று பின் அனுதினமும் நீராடிக் கொண்டிருந்தான் இவ் நதியில்!!!!! காலையிலும் மாலையிலும் இதுதான் இவந்தனுக்கு வேலைகள்!!!!
ஆனாலும் சரியாக இங்கு நீராட நீராட அவநதனுக்கு அனைத்தும் கிட்டியது!!!! அனைத்தும் கிட்டியது அவந்தனுக்கு... இன்னும் ஒளியும் அதாவது..பின் சுக்கிரனுடைய ஒளி நிச்சயமாய் பின் அவனுடைய மனதில் பதிந்து அதாவது சுறுசுறுப்பாயிற்று!!!!
இதனால் விரும்பியதெல்லாம் வந்தது அவந்தனுக்கு!!! அதனால் ஒன்றை மட்டும் இங்கு வந்து ஈசா!!! அதாவது சங்கரனே!!!! அனைத்தும் எந்தனுக்கு தந்து கொண்டே இருக்கின்றாய்!!!! ஆனால் யான் சொல்வது... அனைத்தும் பலிதமாக வேண்டும்.... எங்களுக்கும் யாரும் இல்லை ஆனாலும் மனிதனின் நிலைமைகள் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அவந்தனுக்கெல்லாம் யான் எடுத்துரைக்க வேண்டும் எவை எவை என்று சொல்லி மனிதனை மாற்ற வேண்டும் என்றெல்லாம்!!!
ஆனாலும் அப்படியே நடந்து விட்டது!!!! பின் சுகங்கள் ஒரு பக்கம் இருக்க!! அதாவது பின் அனைத்தும் கிட்டியது!!!! அனைத்தும் தானமாக வழங்கிவிட்டு பின் வருபவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான் இப்படி செய்தால் நன்று !!அவ் நதியில் குளியுங்கள் குளித்துவிட்டு நல் முறையாக இறைவனை வணங்குங்கள்!!! போதுமானது அனைத்தும் கிட்டும் கிட்டும் என்று.
இதனால் பல மனிதர்கள் பல வழிகளிலும் கூட பல ஆண்டுகள் பின் சமமான வழிகளில் கூட பின் நீந்தி அதாவது நீராடி!! நீராடி !! இறைவனை வணங்கி!! வணங்கி!! எதை என்றும் ஆனாலும் பல கர்மங்களை போக்கிக் கொண்டனர்!!!!
ஆனாலும் இதை அறிந்த ஒரு செல்வந்தன் ஏன் இதனைக் கூட இவ்வாறு செய்கின்றான் இவனிடத்தில் செல்வோம் என்று வந்து பின் அவ் செல்வந்தனும் பின் நீ இவ்வாறு செய்கின்றாயே!!! எந்தனுக்கும் ஒரு வழி காட்டு!!! இன்னும் யான் மக்களை ஆள வேண்டும் என்று!!!
அதனால் ஆனாலும் அவ் ஞானிக்கு தெரிந்து விட்டது ஆனால் பெரிய ஞானியாக ஆகிவிட்டான்!!! ஆனாலும் இதை அறிந்து அறிந்து செயல்பட்டுக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு சரி நீராடு என்று!!!
ஆனாலும் நீராடிக் கொண்டே இருந்தான் அவ் செல்வந்தன் ஆனாலும் அனைத்தும் கிட்டியது ஆனால் ஆணவம் வந்துவிட்டது!!! ஆனாலும் இதை அழிக்க முயன்ற அனுமானே வந்து அழித்துவிட்டு எதையென்று அனைத்தும் எடுத்து விட்டான்!!!!
ஆனாலும் கடைசியில் அவனிடத்தில் மீந்தது ஒன்றுமில்லை!!!! இதனால் பின் ஞானி இடத்திற்கு வந்து அனைத்தும் தந்தான்!!!
எந்தனுக்கு ஆணவம் வந்துவிட்டது யான் என்னதான் செய்ய வேண்டும்?? என்று கூற
அதனால் இப்படி செய் !!நிச்சயம் உதவிகள் செய்வான் இறைவனே!!! என்று கூட அவந்தனும் பல வழிகளிலும் பின் ஞானத்தை பெற்று பெற்று அவந்தனும் திருப்தி ஆகி எதை என்றும் உணராத அளவிற்கும் கூட இங்கேயே தங்கி இருக்கின்றான்!!!! அவந்தனும் ஓர் சுயம்புவாக அடியில் எதை என்று கூட இன்னும் நிரூபிக்க நிரூபிக்க பின் ""சுப்பரா""!!! எனும் பின் சுப்பரா!!! எனும் பெயரும் அவனிடத்திற்கே உண்டு!!! உண்டு இதனையும் அறிந்து அறிந்து இப்பொழுதும் கூட வருபவருக்கெல்லாம் ஆசிகள் தந்து கொண்டே இருக்கின்றான்!!! கர்மத்தை நீக்கிக் கொண்டே இருக்கின்றான்!!!
மனிதனே !!! மனிதன் என்றால் கர்மா!!!
கர்மாவை சுமந்து கொண்டிருக்கின்றான் !!அதனால் எங்கெல்லாம் கர்மாவை அழிக்க முடியுமோ?? அங்கெல்லாம் நிச்சயம் வரும் காலங்களில் சித்தர்கள் செப்புவார்கள்!!
அதைத் தெரிந்து நல் முறையாக நடந்து கொண்டாலே கர்மா போகும் !!!முக்தி மோட்சமும் கிடைக்கும்!!!
நிச்சயம் கஷ்டங்கள் தான் அனைவருக்கும் வருவது என்பதை கூட ஆனால் கஷ்டங்கள் பட்டு எப்படியாவது செல்ல வேண்டும் என்று அப்பனே இதை என்று அறிந்து அறிந்து எவை எதை ஆனால் பின் மாய அதாவது மாயத்திற்கு மட்டும் கஷ்டங்கள் படுகின்றது!!
உண்மையானவற்றிற்கு நீங்கள் கஷ்டப்படுவீர்கள் என்றால் நிச்சயம் இறைவன் உங்களை அழைப்பான்!! அழைப்பான்!! அழைப்பான்!!!
அப்பனே நலமாகவே நலமாகவே அதனால் என்னை நம்பிக் கொண்டவர்களை நிச்சயமாய் யான் கைவிட மாட்டேன் கடைநாள் வரையிலும்!!!!
அதனால்தான் அப்பனே நல்விதமாக அப்பனே சுமந்து வந்து விட்டீர்கள் பல கர்மங்களை அதை முதலில் நீக்க வேண்டும் அதை நீக்கினால் தான் மட்டுமே பிறவி கடலை நீந்த முடியும் என்பேன் அப்பனே!!!!
அக் கர்மத்தை வைத்துக்கொண்டு அப்பனே எதைச் சொன்னாலும் நிச்சயம் நடக்கப் போவதில்லை என்பதை தெளிவாக சொல்லி விட்டேன்!!!!
அதனால்தான் என்னிடம் வருபவர்களை முதலில் கர்மத்தை அடியோடு அழித்து விடுவேன் சொல்லிவிட்டேன்!!!
கர்மா !! அப்பனே கர்மா அப்பனே மனிதன் எடுத்துக் கொண்டே வருகின்றான் ஒவ்வொரு பிறப்பிலும் கூட!! கூட!! அக் கர்மா இருக்கும் வரை எதுவும் நடக்காது என்பேன்!!!! நினைத்தது கூட தாமதங்கள் ஆனாலும் இறைவன் எதை இறைவனிடத்தில் சென்றாலும் ஆனாலும் பக்திகள் அதிகமாக காட்ட வேண்டும்!!
பின் இறைவா!! நீயே!! என்று இருந்தால் தான் மட்டுமே இறைவனும் இறங்கி வந்து ஏதாவது முறையில் கர்மத்தை பின் தொலைத்து விடுவான்!!!
அதனால் அப்பனே புண்ணிய நதிகளில் நிச்சயம் நீராட நீராட இன்னும் மாற்றங்கள் யான் வரும் காலங்களில் நிச்சயம் உரைக்கின்றேன் பல வழிகளிலும் கூட அப்பனே!!!
அதை தெளிவாக கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே இவ்வுலகம் அப்பனே அநியாயம் படைத்தது அக்கிரமங்கள் அப்பனே எதை என்று அறியாமல் இன்னும் அழியப் போகின்றது நீரால் அப்பனே!!!!
இதையெல்லாம் தெரிந்து கொண்டு அப்பனே நலமாக வாழ்வீர்களா என்பதற்கிணங்க யான் நிச்சயம் மாற்றமடைய செய்வேன்!!! மாற்றமடையச் செய்வேன்!!!
அப்பனே இதை எவற்றிலிருந்து எவை என்றும் அறியாமலே ஈசனும் காத்துக் கொண்டிருக்கின்றான்!!!
நிச்சயம் எதை என்று அறியாமலே இன்னும் எதை என்று தெரியாமலே நோய்கள் மூலம் உருவாக்கலாமா??? மனிதன் திருந்துவதற்கு!!!!
அதாவது நீரின் மூலம் அழிவுகளை உருவாக்கலாமா?? மனிதன் திருந்துவதற்கு!!!
அதாவது பூமியை(பூகம்பம்) அசைக்க வைக்கலாமா?? என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான் ஈசன்!!!
திருந்துங்கள் மனிதர்களே!!!
இவை உண்மை என்பதை கூட அப்பனே மனிதனுக்கு பேராசைகள் அப்பனே ஆனாலும் அவ் பேராசையை நிறுத்துங்கள்!! அனைத்திற்கும் இறைவனே காரணம் என்று யார்? ஒருவன் நினைக்கின்றானோ!!! அவந்தனுக்குத்தான் அனைத்தும் கிட்டும்!!!
அதனால்தான் முன்னோர்கள் எங்கெங்கு அமைக்க வேண்டுமோ திருத்தலங்களை அங்கங்கே சரியாக அமைத்து விட்டார்கள் அப்பனே!!!!
சாதாரணமானவை!!! இல்லை அப்பனே அங்கங்கு பல வழிகளிலும் கூட சித்தர்கள் மறைந்து கொண்டு அதாவது ஞானியர்கள் பல ஜீவ சமாதிகள் அடைந்தும் கொண்டு இன்னும் கூட தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள்!!!
அங்கே சென்றால் மனிதனின் நிலைமைகள் மாறும் என்பேன்!!!! அப்பனே
இவையென்று எவை என்று திரும்பவும் திரும்பவும் இங்கு ஏன் உங்களை வரச் சொன்னேன் என்றால் அப்பனே ஈசனை நினைத்து பல கோடி மக்கள் அதாவது ஓர் எதையென்று நதி அதாவது இக் கோதாவரி நதியானது பின் பெருக்கெடுத்து ஓடியது!!!!
ஆனால் அனைவரும் இங்கே பல கோடி மனிதர்கள் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது சங்கரா !!சங்கரா!! என்று கூட.....
ஆனால் சங்கரனே அனைவரையும் இங்கே ஜீவசமாதி அடையச் செய்தான்!!! அதனால்தான் அப்பனே அவ் ஞானியர்களின் அருள் இங்கு பரிபூரணமாக இருக்க அனைத்தும் நலமாகும்!!! அதற்காகத்தான் உங்களை யான் வரச் சொன்னேன்!!!
இதை எவை என்று கூட அழுக்காணி சித்தனும் இங்கே பல தவங்களை மேற்கொண்டான்!!!!
ஆனால் எங்கு?? அழுக்கு இருக்கின்றதென்றால!!!! மனிதன் இடத்திலே அழுக்கு இருக்கின்றது!!
அதனால் ஒரு பாடல் அவந்தனே வந்து பாடுவான்!!!
(அழுக்காணி சித்தர் இடையில் வாக்கு, பாடல் பாடுகின்றார் அவர் பாடிய பாடல்)
சொக்க வைக்க!! எதனை? என்று நிமித்தம் காட்டி!! காட்டி!! காட்டி!! அன்பை காட்டி!! காட்டி!! வருவது ஏதடா??
ஏதடா? மனிதா!! மனிதா!! உந்தனுக்கு தெரியாது!!
தெரியாது !தெரியாது! அறிந்த பின் செயல்படுவது ஏதடா???
முட்டாளே !! இதனையும் அறிந்து உண்டு உண்டு எதனை? உண்டு அழுக்கை உண்டு அழுக்கே!!! வந்து கொண்டிருக்கின்றது! வந்து வந்து சென்று அடையும் இடம் ஏதடா!!??
ஏதடா? மனிதா!!! மனிதனின் நிலைமைகள் மாறினாலும் மாறினால் மாறினால் போராட்டம் போராட்டம் என்பதே உத்தரவாக ஆகும் இருந்து விட்டாலும் இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததை தேடுகின்றாய்!!!! தேடுகின்றாயேடா மனிதா!!!
மனிதனையும் மானிடனையும் சேர்த்து மனிதனையும் மானிடம் என்றால் ஒருவனே என்று நினைத்துக் கொண்டு இருந்தாயே மனிதா இவைத்தான் உன்னிடத்தில் புதைந்துள்ளது புதைந்துள்ளது புதையல் உன்னிடத்திலே அதை எடுடா!!!! எடுத்துக்கொண்டு வாழடா!! வாழ்ந்தபின் எதை என்று நிமித்தம் காட்டி சென்றடைய ஏதடா?? மனிதா நிமித்தம் உன் எண்ணமே உன்னை சீரழிக்குமடா!!! அழிக்குமடா எதனை என்றும் உணர்த்துமடா
உணர்ந்த பின் தங்கி எங்கு செல்வதடா!!! செல்வது பிச்சை எடு பிச்சை எடுத்து உண்பதா? மனிதா இன்னும் பிச்சை எடுத்துக் கொண்டே இருக்கின்றாயே காலங்கள் காலங்களாக காலம் வந்து வருந்துவது ஏதடா காலம் மருந்து ஏதுடா மருந்து இட்டுச் செல்வது மனிதனுக்கு எக்காலம்?? என்று உணர்வது எக்காலம்?? மனிதன் எக்காலம் உணர்ந்து உணர்ந்து பெண்மையை தாய் என்ற நிலைமைக்கு என்று எப்பொழுது நினைக்கின்றானோ அப்பொழுது மாற்றங்கள் உண்டடா!!!! உண்டடா!!!
ஆனால் இதையும் அறியாத மனிதனுக்கு ஒன்றும் தெரியாது அழிவுகள் வந்து கொண்டே இருக்குமடா !!
போட்டி போட்டு போட்டி மனிதன் உயர்ந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றானடா இருக்கின்றானடா ஒன்றும் லாபம் இல்லையடா!!! அழிந்து போகக்கூடிய காலங்களில் பின் மனிதன் மேலோங்கி நினைக்க பார்க்கின்றானே வரும் என்பதை கூட அதுவும் பொய்யாகுமடா பொய்யாகுமடா உன் எண்ணங்களும் பொய்யாகுமடா அனைத்தும் பொய்யாகுமடா இறைவன் தான் மெய்யாகுமடா இறைவன் தான் உண்மையடா நித்தம் நித்தம் பேசி பேசி பேசியுணர்ந்த போதிலும் போதிலும் உன்னை வந்தடைந்தது ஏதடா?
ஏதடா? ஏதடா? நின்று நின்று பலன் தருவது ஏதடா? ஏது என்று வந்த போதிலும் மனிதனுக்கு நிலையானது வந்து வந்து நின்று நின்று பார்த்து பார்த்து உணர்ந்து உணர்ந்து கொள்வது ஏதடா?
ஏதடா? நின்ற தொழுதின் கூட வந்தது வந்தபின் செல்வது ஏதடா? ஏதடா?
ஏதடா? இன்றின்றி அன்றின்றி வந்து வந்து நன்று நன்று கேளடா!! கேளடா!! கேட்டு விட்டு செல்லடா!!... சென்று சென்று முதலாயினடா!! ஆயிற்று !!ஆயிற்று!! வந்து வந்து எதை என்று நின்று நின்று காண்பது ஏதடா??
ஈசன் நாமமே!!!
ஈசன் நாமமே!!! நமச்சிவாய என்ற மந்திரமே உயர்ந்த வகையானதடா!!!
உயர்ந்து !!உயர்ந்து!! நிச்சயம் நிச்சயம் நமச்சிவாய!!! நமச்சிவாய!! நமச்சிவாயம் !! என்று சொல்லடா!! சொல்லடா!! சொல்லடா!! கேளடா!! உன் எண்ணத்தில் பதிந்து கூறடா!! கூறடா!!
என்றும் இவ்வுலகத்தில் பெரியது ஏதடா?
ஏதடா? ஏதடா? நமச்சிவாயன் ஏதடா? உண்டடா !!உண்டடா!! உன் ஒளியில் உண்டடா!!!
உன் ஒளி தான் மனதடா!! மனதில் நின்று பேசுடா மனசாட்சி எதை என்று உணர்த்துவதற்கு உள்ளதடா!!! உள்ளதென்று எதிர்பார்க்கும் ஏதடா? ஏதடா? பிறவிகள் பிறவிகள் என்று நமச்சிவாயனை உணர்ந்து விட்டாலே உணர்ந்தென்றும் உண்டடா!!! உண்டென்று சொல்லடா!! மனிதா!! மனிதா!! எதை என்று எதை என்று விளக்கங்கள் கேளடா!! கேளடா!! கேளடா கேட்டிட்டு செல்லடா!!! கேட்டிட்டு!! கேட்டிட்டு!! வந்ததென்று வந்ததென்று புண்ணியங்கள் சேரடா!! புண்ணியங்கள் சேரடா!!! புண்ணியங்கள் சேரடா!!
கர்மா தான் அழியுமடா!!
கர்மா தான் அழியுமடா புண்ணியத்தை சேர்த்துக் கொண்டாலே!!.....
ஆனாலும் அதுவும் தெரியாதடா மனிதனுக்கு புண்ணியங்கள் சேர்த்து கொள்வதற்கும் தாமதங்கள் தாமதங்கள் என்று உணர்ந்து உணர்ந்து செல்லடா!! செல்லடா!! செல்லடா!! பாவங்கள் செல்லடா!! செல்லட்டுமடா என்று வாக்குகள்.......
அழுக்காணி சித்தர் பாடலை பாடி வாக்குகள் தந்தார்....
அதன் பிறகு குருநாதர் அகத்தியபெருமான் விஞ்ஞான முறையில் வாக்குரைத்தார்..... அந்த வாக்கு பாகம் 2 ல் தொடரும் !!.......வணக்கம் அகத்தியர் அடியவர்களே
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..........தொடரும்!
👍
ReplyDeleteஎம்பெருமானே அகத்தீசா... எமது நெஞ்சார்ந்த வணக்கங்கள் தங்களுக்கு... அடியேனுக்கு சில எண்ணங்கள் பகிர்ந்துகொள்கிறேன். மானிடப்பிறவியே கேடுகெட்ட பிறவி. இதில் இறைவன் ஏன் நோயாலும் - நீராலும் - நெருப்பாலும் - பூகம்பத்தாலும் அழிக்கவேண்டும். அழிக்கவேண்டும் என்று நினைத்தால் இறைவனுக்கு கண்சிமிட்டும் நேரமே அதிகம். சித்தர்களாகிய நீங்களும் மனிதனுக்கு தன்டனை தருவோம் தண்டிப்போம் என்று வாக்குறைக்கின்றீர்கள். நீங்கள் தன்டியுங்கள்... இறைவன் உலகை அழிக்கட்டும்... கலியுகம் முடிந்து வேறு யுகம் பிறக்கட்டும்... இறையும் தேவர்களும் சித்தர்களுமே வாழட்டும்... வின்னுலகம்போல் பூவுலகிலும் வாழுங்கள்.. ஆளுங்கள்...வைத்துக்கொள்ளுங்கள்... பூலோகத்தை... மானிடனும் பிறவியை அறுக்கட்டும்...வேண்டாம் மனிதப்பிறப்பு. ஏன் எப்பிறப்புமே வேண்டாம் தரவும் வேண்டாம். அவனை பிறக்கவைத்து அவனை தவறுகள் செய்யவைத்து - அவனை தண்டித்து - உலகத்தை அழியவைத்து அப்பப்பா முடியவில்லை - தாங்கமுடிவில்லை - இறையின் திருவிளையாடலுக்கு மானிட ஜென்மம் பொம்மையாகிப் போய்விட்டது. எம் பெருமானே அகத்தீசா... தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை. மனிதனின் கர்மா பற்றி - தாங்களும் ஏனையோரும் அறிந்தது. மனிதனை பிறக்கவைத்து பிறக்கவைத்து அவனை அழிப்பதில் என்ன லாபம் இறைவனுக்கு. மனிதனுக்கு - இந்த தர்மத்தை செய்யுங்கள் - இந்த ஆலயம் செல்லுங்கள் - இதன்படி இப்படி நன்முறையில் வாழுங்கள். ஜென்மத்தை கடைதேற்றிக்கொள்ளுங்கள் என்று கூறிவிடுங்கள் தீர்க்கமாய் - நிரந்தரமாய் - உறுதியாய். வருபவன் வரட்டும் நல்வழியில். நிச்சயமாய் வருவான் - வாழ்வான். இனி இறையின் வாயிலிருந்து - அதாவது ஈசனின் திருவாக்கிலிருந்தோ - சித்தர்களின் அருள்வாக்கிலிருந்தோ- மானிடனை தண்டிபோம் அழிப்போம் என்று அருள்வாக்கு அளிப்பதில் எமக்கு உடண்பாடில்லை. இல்லையேல் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அருள்வாக்கு தந்து நம்பி வரும் ஆத்மாக்களை நல்உள்ளங்களை வழிகாட்டி வாழசெய்யுங்கள். மனிதனை தன்டிப்பதில் அழிப்பதில் அர்த்தமில்லை. மனதில் இன்னும் எவ்வளவோ பேசவேண்டும் பதிவிடவேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கிறது. நடக்கும் . கண்டிப்பாய் நாம் பேசுவோம் அய்யனே... அகத்தீசா... எல்லாம் விதி என்று மட்டும் ஒற்றைவரியில் கூறிவிட வேண்டாம் அய்யனே... அன்புடன் ச. சுந்தரமூர்த்தி
ReplyDeleteஅகத்தீசா... தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை. மனிதனின் கர்மா பற்றி - தாங்களும் ஏனையோரும் அறிந்தது. மனிதனை பிறக்கவைத்து பிறக்கவைத்து அவனை அழிப்பதில் என்ன லாபம் இறைவனுக்கு. மனிதனுக்கு - இந்த தர்மத்தை செய்யுங்கள் - இந்த ஆலயம் செல்லுங்கள் - இதன்படி இப்படி நன்முறையில் வாழுங்கள். ஜென்மத்தை கடைதேற்றிக்கொள்ளுங்கள் என்று கூறிவிடுங்கள்
ReplyDeleteவணக்கம் திரு சுந்தரமூர்த்தி ஐயா அவர்களே நீங்களே கமெண்டில் பதிவு செய்திருக்கிறீர்கள் இதைத்தானே குருநாதர் செய்து கொண்டிருக்கின்றார் எப்படி வாழ வேண்டும் எந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று இதை ஏன் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை
இனி இறையின் வாயிலிருந்து - அதாவது ஈசனின் திருவாக்கிலிருந்தோ - சித்தர்களின் அருள்வாக்கிலிருந்தோ- மானிடனை தண்டிபோம் அழிப்போம் என்று அருள்வாக்கு அளிப்பதில் எமக்கு உடண்பாடில்லை
ReplyDeleteஇதற்கு பதில் என்னவென்றால் ஒரு தந்தையானவனுக்கு தன்னுடைய பிள்ளைகளை கண்டிப்பதற்கு உரிமை உண்டு. அவர் சிருஷ்டியில் படைக்கப்பட்ட நாம் தவறுகள் செய்யும்பொழுது ஒரு தந்தை தன் மகன்களை மிரட்டுவார் அப்படி செய்யாதே இப்படி செய்யாதே நான் உன்னை அடித்து விடுவேன் என்று அதற்கு என்ன அர்த்தம் நாம் திருந்துவதற்காக கூறும் வார்த்தைகள் இது இதை சரியாக உணர்ந்து கொண்டு திருந்தி நல்லபடியாக வாழ வேண்டும் சித்தர்களோடு கொள்கையில் உடன்பாடு இல்லை என்றெல்லாம் நாம் தீர்மானிக்க கூடாது அதற்கான தகுதி நம்மிடத்தில் கிடையாது அவர்கள் நமக்காக வந்து வாக்குகள் தருவது பெரிய விஷயம் இதில் எனக்கு உடன்பாடு இல்லை உடன்பாடு உண்டு இந்த கருத்து எல்லாம் செல்லாது ஐயா
அகத்தீசா... எல்லாம் விதி என்று மட்டும் ஒற்றைவரியில் கூறிவிட வேண்டாம் அய்யனே... அன்புடன் ச. சுந்தரமூர்த்தி
ReplyDeleteவணக்கம் ஐயா இத்தனை வாக்குகள் நீங்கள் படித்திருந்தும் ஒன்றை கூட நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லையா என்னென்ன கர்மாவிற்கு என்னென்ன தண்டனைகள் எங்கெங்கு செல்ல வேண்டும் மனிதன் தெரிந்து வாழ்வதற்கு எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் வாக்குகள் தருவதாகும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் வாக்குகள் தர வேண்டும் என்றால் அந்த மனிதருக்கு முதலில் புண்ணியம் இருக்க வேண்டும் குருநாதரின் வாக்குகளை கேட்பதற்கே புண்ணியம் வேண்டும் அவருடைய பெயரை உச்சரிப்பதற்கே புண்ணியம் வேண்டும் அப்படி இருக்க வருகின்றவர் போகின்றவர் எல்லோரையும் அழைத்து வாக்குகள் தரவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா ஒவ்வொரு பொதுவாக்கிலும் எத்தனை வாக்குகள் ஓரத்திற்கு நின்றார் ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்து கூர்ந்து கவனித்து படியுங்கள் ஒவ்வொரு வாக்கிலும் என்னென்ன செய்ய வேண்டும் எப்படி எல்லாம் நடக்க வேண்டும் ஏன் உதாரணத்திற்கு இந்த கோதாவரி ஆற்றில் போய் நீராடுங்கள் பௌர்ணமி அன்று என்று கூறி இருக்கின்றார் நாம் எத்தனையோ செலவுகள் செய்கின்றோம் ரயில் வசதி இல்லையா பஸ் வசதி இல்லையா ஒரு பௌர்ணமி நாள் அன்று போய் கோதாவரி ஆற்றில் நீராடி விட்டு கபாலீஸ்வரரை தரிசனம் செய்ய நம்மால் முடியாதா அவரே வந்து தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கின்றார்கள் அது நடக்க முடியுமா குருநாதர் தன்னுடைய ஒவ்வொரு வாக்கிலும் எப்படி எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் அவர் அவை அனைவரும் உணர வேண்டும் வாக்குகளை சரியாக படிக்க வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும்
அகத்தீசா... எல்லாம் விதி என்று மட்டும் ஒற்றைவரியில் கூறிவிட வேண்டாம் அய்யனே
ReplyDeleteநீங்கள் இத்தனை வாக்குகள் படித்தும் புரிந்து கொண்டது இவ்வளவு தானா
சித்தர்கள் யாங்கள் நினைத்தால் விதியும் மாற்ற முடியும் என்று ஒவ்வொரு வாக்கிலும் கூறுகின்றாரே அதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லையா குருநாதர் எப்பொழுது எல்லாம் விதி என்று எப்பொழுது சொன்னார் தேவையில்லாமல் தேவையற்ற கருத்துக்களை பதிவு செய்யாதீர்கள்
தனி ஒரு மனிதனாக தனி ஒரு சிந்தனை ஆக மானிடர்கள் நல்வாழ்க்கை வாழ வாக்குகள் தந்து போராடிக் கொண்டிருக்கின்றார் அகத்தியர்..... ஒவ்வொருவரின் விதியை மாற்றுவதற்காக தான் ஒவ்வொரு வாக்கும் சித்தர்கள் கூறியதை சரிவர கடைபிடித்தாலே மிதி மாறும் முத்தி மோசம் கிடைக்கும் இதை கர்மாவை அழித்து புண்ணியத்தை பெருக்கி நல் பக்தியை காட்டி இந்த மானிடப் பிறப்பே வேண்டாம் பிறவிப் பெருங்கடலை அறுத்து முக்தியை தருவேன் என்று ஒவ்வொரு வாக்கிலும் கூறுகின்றாரே அதை நீங்கள் சரியாக உணரவில்லையா
சித்தர்களுக்கு ஆலோசனை சொல்வதற்கெல்லாம் நமக்கெல்லாம் தகுதி கிடையாது நீங்கள் அதை செய்யுங்கள் இதை செய்யுங்கள் சொல்வதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கின்றது அதை சொல்லாதீர்கள் இதை சொல்லாதீர்கள் என்று சொல்வதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கின்றது...... ஏற்கனவே அவர் சினமடைந்து வாக்குகள் தராமல் 10 15 வருடங்களாக குருநாதருடைய வாக்குகள் கிடைக்காமல் எத்தனை எத்தனை பக்தர்கள் அழுது புலம்பி கெஞ்சி வேண்டி அவர் திரும்பவும் நமக்காக வந்து வாக்குகள் தந்து கொண்டிருக்கின்றார் அதை சரியாக புரிந்து கொண்டாலே போதும் அவருக்கு புத்திமதிகள் சொல்வதற்கோ அதை சொல்லாதீர்கள் இதை சொல்லாதீர்கள் என்று சொல்வதற்கும் நமக்கு தகுதிகள் கிடையாது தயவு செய்து அவரை சினம் அடைய வைத்து விடாதீர்கள்
ஐயா சாமி சுந்தரமூர்த்தி சாமி ஏற்கனவே சித்தர்கள் எல்லாம் மலையை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு போய் விட்டார்களா என்றெல்லாம் பேசி ஈசனுக்கு அறிவுரை சொல்வது குருநாத அகத்தியருக்கு அறிவுரைகள் சொல்வது இப்படி எல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளாமல் பேசிக்கொண்டே இருந்ததால் தான் ஒருமுறை பார்வதி தேவி அம்மா வந்து சினமடைந்தார்களே அதுபோல் சினம் அடைந்தால் என்ன ஆவது??? தயவு செய்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் அதைக் கேளுங்கள் நாம் அவர்களுக்கு சொல்லக்கூடாது எதுவும்.... ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் மனிதர்கள் செய்யும் செயல்களை கண்டு சினமடைந்து வெறுத்துப் போய் வாக்குகள் தருவதே நிறுத்திக் கொண்டார்... தயவுசெய்து அகத்தியர் அடியவர்கள் எல்லாம் தவமாய் தவமிருந்து வரம் இருந்து வாங்கிய வரத்தை இப்படி எல்லாம் குழப்பம் அடைய செய்து கெடுத்து விடாதீர்கள்
ReplyDelete