​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 28 November 2022

சித்தன் அருள் - 1229 - அன்புடன் அகத்தியர் - சனி மகாராஜ் ஆலயம்!




10/10/2022 அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு.  வாக்குரைத்த ஸ்தலம்: சனி மகாராஜ் ஆலயம்  பிம்பார்கெட், நஸ்தான்பூர், நாசிக் மாவட்டம், மகாராஷ்டிரா

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!

நலமாகவே நலமாகவே எம்முடைய ஆசிகள் கடைநாள் வரையிலும் அப்பனே எதை எதை என்று கூற இவ்வுலகத்தில் இன்னும் எதை என்று உணராமலே மனிதன் வாழ்ந்து வருகின்றான் என்பதை கூட பல வாக்குகளிலும் சொல்லிவிட்டேன்!!!

அறிந்து அறிந்து அப்பனே செயல்பட்டால் நிச்சயம் வெற்றிகள் உண்டு உண்டு!!!

அப்பனே வெற்றி என்பதையும் கூட அப்பனே சாதாரணமாக அப்பனே கிடைப்பதில்லை அப்பனே இன்னும் ஏராளமான படிகளில் ஏற வேண்டும் அப்பனே!!!

ஏறி !!ஏறி !! ஆனாலும் அப்பனே இவ்வாறு ஏறினால் அப்பனே பல வழிகளிலும் கூட துன்பங்கள் வரும் ஆனாலும் அவற்றையெல்லாம் கடந்து கடந்து இறை பக்தியை மனதில் நிறுத்தி அப்பனே நிச்சயம் முன்னேறினால் அப்பனே சித்தர்கள் யாங்கள் கையைப் பிடித்து அழைத்துச் செல்வோம்!!!! முன்னேற்றத்திற்கு அப்பனே!!!!

இதைதன் உணர்ந்து உணர்ந்து செயல்பட்டால் மனிதர்கள் நல்விதமாகவே அப்பனே எதை என்று எதிர்பாராமலே அப்பனே நல்லவையாக நடந்தேறும் என்பேன் அப்பனே!!!! இன்னும் பல வழிகளிலும் கூட !!!.......

அப்பனே எதை எதை என்று அறிந்து அப்பனே பின் ஒரு முறை அப்பனே பல வழிகளிலும் கூட ராமனுக்கு தொந்தரவுகள் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறியாமல் மனித வடிவம் எடுத்து அப்பனே அவந்தன் பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்கா!!!!!

ஆனாலும் யான் பல உதவிகளை செய்துள்ளேன்!!!

ஆனாலும் அப்பனே இவந்தனுக்கு எதையென்றும் ஆனாலும் இவையெல்லாம் அப்பொழுது காடுகள் ஆனாலும் அப்பனே எதை என்று அறியாத பின் இதையென்றும் தெரியாத பின், பின்!! பின்!! வந்தோர் கெல்லாம் நன்மைகள் பல வழிகளிலும் கூட ராமன் செய்து கொண்டிருந்தான்!!!

ஆனாலும் விதியின் மாற்றம் சில நாட்கள் பின் எதை எவற்றில் இருந்து ஆனாலும் ஓர் ரிஷி அதாவது பின் ஓர் மாதம் நீ தனியாக இருந்து நிச்சயம் வர வேண்டும்  அதாவது மனிதர்களை யாரும் சந்திக்க கூடாது!!!! அப்பொழுதுதான் நிச்சயம் கிரகங்கள் உன்னை!.......

ஆனாலும் ஒரு மாதத்தில் பல இன்னல்கள் ஏற்படும்!! ஆனாலும் இதையென்று சோதனையா என்று ஆனாலும் அதற்கும் மகிழ்ந்தான் ராமன்!!!!

சரி அப்படியே ஆகட்டும்!!! நான் என்ன தவறு செய்தேன்?? பூலோகத்தில் பிறந்தது தவறா????

ஆனாலும் ரிஷி முனிவரே யான் கேட்டுக் கொண்டதற்கிணங்க யான் நிச்சயம் செல்கின்றேன் ஒரு மாதம் என்று!!!

ஆனால் அவ் ஒரு மாதம் இங்கேதான் கழித்தான்!!!

ஆனாலும் கழித்த பிறகு ஆனாலும்... யார்  என் மீது சோதனைகள் என்று அறிந்து கொண்டான் ராமன்!!! இவையெல்லாம் பின் சனீஸ்வரனே நிச்சயம் கொடுக்கின்றான் என்பதை கூட சரியாக உணர்ந்து கொண்டான் ராமன்!!!

ஆனாலும் இதையென்று அறிய அறிய ஆனாலும் பல வழிகளிலும் கூட இங்கு வந்து அமர்ந்தவனுக்கு உணவுகள் கூட கிட்டவில்லை!!!!! அதாவது ஆனாலும் இதை அறிந்து கொண்ட!! அறிந்து கொண்ட!!! பின் எதை என்று அனுமான் நிச்சயமாய் பின் எதை என்று தெரியாமலே பல வழிகளிலும் கூட ஆனாலும் ஒன்றை நினைத்தான்!!! அனுமானுக்கு சரியாக தெரிந்து விடும் ஆனாலும் எதை பின் உணர உணர பின் மனிதனையே பார்க்க கூடாது என்கின்றானே ஆனால் எதன் மூலம் நாம் செல்வது என்று கூட!!!!

ஆனாலும் இதன் மூலம் சரியாகவே பின் அதாவது உயிரெடுத்து அதாவது பின் அனுமான் அதாவது(குரங்கு) ஜீவ ராசியாக உருவெடுத்து இங்கே வந்து பல பழங்களை பின் இராமனுக்கு நிச்சயமாய் உதவி செய்தான் அனுமான்!!!

அப்பனே இதைத்தான் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றான் அப்பனே அனுமானும்கூட மனிதர்கள் யாராவது நல்லோர்களாக திகழ்கின்றார்களா!!!

ராமஜபத்தை ஜெபித்துக் கொண்டே இருக்கின்றார்களா என்று!!!!  என்பவை எல்லாம் நிச்சயம் பார்த்து கொண்டு  அவர்களுக்கெல்லாம் நிச்சயம் அனுமான் பல வழிகளிலும் உதவிகள் செய்வான் நல் மனிதர்களுக்கு கூட!!!

ஆனால் மனிதனின் அதாவது எதை என்று கூட அப்பனே மனிதனுக்கு அதைக் கூட ஒழுங்காகவே வாழ தெரியவில்லை வாழத் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான் அப்பனே இவையெல்லாம் எப்படி?! சாத்தியமாகும்!!! என்பது தான் எனது கருத்தும் கூட!!.....

அப்பனே இதன்முறை ஆனாலும் அப்பனே இவை இப்படியே 10 நாட்கள் கடந்து விட்டது!!! அப்பனே ஆனாலும் பின் அமர்ந்தான் உற்றார் உறவினர் அனைவரும் இருந்து இப்பொழுது எதை என்றும் தெரியாத அளவிற்கும் கூட அனைத்தும் இழந்து விட்டோமே!!!! இதுதான் மனித வாழ்க்கை என்று கூட அப்பொழுது நினைத்தான் ராமன் அப்பனே!!!

ஆனாலும் இதனை சரியாக உணர்ந்து கொண்டு ஆனாலும் நாட்களும் சென்று கொண்டே இருந்தது அப்பனே 20 நாட்கள் ஆயிற்று ஆனாலும் அமைதியாக இருந்தான் பொறுமையாக இருந்தான்!! 

ஆனாலும் பொறுக்க முடியவில்லை சனியின்  அதாவது எதையென்று சனீஸ்வரன் அப்பனே அவந்தனுக்கும் எதை என்று அறியாமலே இப்படி நாம் தான் கஷ்டம் கொடுக்கின்றோம் என்று ஏற்கனவே ரிஷி சரியாகவே கணித்துவிட்டான்!!! இவந்தனுக்கும் சொல்லிவிட்டான்!!! இவந்தனும் இங்கு எதை என்று அறியாத அளவிற்கும் கூட பின் சனியவனும் வந்து பின்!!! 

ராமரே!!!!  உன்னை வணங்குகின்றேன்!!!! 

இவ்வளவு சோதனைகள் அதாவது வேதனைகள் கொடுத்தாலும்.... எதற்கும் அசைய மாட்டாய்!!!!  அமைதியாக பொறுத்திருக்கின்றாய்!!!! 
எதையென்று அறியாமலே !!.....

ஆனாலும் உன்னை வணங்குகின்றேன்!!! என்று சனிபகவான்!!! ராமரை வணங்கிய இடம் இவ்விடமே என்பேன்!!!! 

ஆனாலும் இதை காலப்போக்கில் இவையெல்லாம் மறைந்து போயிற்று!!!! அதாவது மறந்து மறைந்து மறைந்து போயிற்று!!!!  

இங்கெல்லாம் எதனை என்று அறிந்து அறிந்து இன்னும் பின் பல வழிகளிலும் கூட ஆனாலும் இங்கேயே பல பல வழிகளில் கூட ஞானியர்கள் ஜீவசமாதிகளும் அதையென்று அறியாத அளவிற்கும் கூட இங்கேயும் சனி பகவான் சரியாகவே இருக்கின்றான்... 

ஆனால் காலப்போக்கில் எதையென்று அறியாமலே அழிந்து அழிந்து மீண்டும் மீண்டும் பின் தோன்றுகின்றான் சனி பகவான்!!!!! இவ்விடத்தில்!!! 

இதனால் பின் ராமரிடம் வணங்குகின்றேன்!!! ராமா!!!  எதை எப்படி என்று கூட..... யான் நிச்சயம் நீ!!!  உன் மனத்தில் நினைத்தவாறே!!!! நீ யாருக்கும் தீங்குகள் செய்யவில்லை!!!! 

ஆனாலும் பிறப்பு எடுத்து விட்டாய்!!!! மனிதனாக பிறப்பு எடுத்துவிட்டாய்!!!  இறைவனாக வாழ்கின்றாய்!!!! அதனால் உன்னை யான் வணங்குகின்றேன்!!!!

உந்தனுக்கு என்ன தான் தேவை??? என்று பின்!!
எந்தனுக்கு பல வழிகளிலும் கூட கொடுக்க தெரியும் !!!
அது ராமரே அதனை நீயும் அறிந்ததே!!!!! 

அதனால் நிச்சயம் பல வழிகளில் யான் கொடுத்தால் உயர்ந்த இடத்தை அடைந்து விடலாம்!!!! 

அதனால் இவ்வுலகத்தில் உந்தனுக்கு என்ன தான் வேண்டும்???? 

பல சோதனைகளையும் இட்டு விட்டேன்... ஆனாலும் கடைசியில் ஓர் மாதம் சோதிக்கலாம் என்றிருந்தேன்!! 

ஆனாலும் ரிஷியோ உந்தனுக்கு சரியாக சொல்லி இங்கே உன்னை அனுப்பி வைத்து விட்டான்!!!

ஆனாலும் இதுவும் பின் லீலை தான்!! பிரம்மாவின் லீலைகள் தான் என்று யான் உணர்ந்தேன்!!!! 

இதனால் இங்கு வந்து விட்டேன்.... அதனால் கேட்ட வரங்கள் என்னாலும் கொடுக்க முடியும்... 

ஒருவன் உயரத்திற்கு செல்ல கூடிய அளவுக்கு பின் முன்னேற்றி வைப்பவன் யான்!!!! 

ஆனாலும் பின் எதை என்று ஆனாலும் பின் தாழ்ந்த நிலைக்கும் செல்ல வைப்பவன் யான்!!!! என்னிடத்தில் அத் தகுதி இருக்கின்றது!!! 

அதனால் ராமரே!!!!  உன்னை மிஞ்சிய எதை என்று அறியாத சக்திகள் உன்னிடத்திலே இருந்து கொள்ள..... ஆனாலும் யானும் உந்தனுக்கு கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் எந்தனுக்கு மனம் சந்தோஷமடையும் என்று!!! 

ஆனாலும் ராமரே!!!! கேளும்!!!!  கேளும்!!!! 

என்று சனிபகவானும்!!! 

ஆனாலும் ராமரே ஆனாலும் எதை என்று அறியாத அளவிற்கும் கூட நிச்சயமாய் நீ கொடுத்ததெல்லாம் எந்தனுக்கு பாடங்கள் தான் சனி பகவானே!!! அதனால்  இவற்றின் மூலம் பல உண்மைகளை தெரிந்து கொண்டேன்!!!! 

யான் எவ் நிலைக்கு வந்துள்ளேன் என்று பார்!!!! 

ஆனால் நீ!!!  சோதித்தது!!! எந்தனுக்கெல்லாம் ஒரு பாடமாகவே பல பல வழிகளிலும் கூட ஆனாலும் சனி பகவானே!!!

நிச்சயம் ராமரே!!!!!

இதையென்று அறிந்து கொண்டாயே.... என்று கண்களில் நீர்  பெருக்கெடுத்தது சனிபகவானுக்கு!!!! இவ்வாறு அறிந்து கொண்டாயே என்று

நிச்சயமாய் எதை என்று ஆனால் எதை என்று உணராமலே யான் பிடித்துக் கொண்டால் நிச்சயம் பல பக்குவங்களை ஆக்கி ஆக்கி பல கஷ்டங்களுக்குள் நுழைத்து!! நுழைதது!!ஆனால் உயரிய இடத்திற்கு கொண்டு சென்று நிச்சயம் பல புண்ணியங்களை செய்ய வைத்து அதனை எதனை என்று கூட ஞானியாக ஆக்கும் தகுதி என்னிடத்தில் உள்ளது!!!

ஆனாலும் எதை என்று அறியாத ராமா!! ராமா!! கேள்!!! உந்தனுக்கு என்ன தான் தேவை? என்றுகூட

ஆனாலும் இதை அறிந்த ராமன் சரி யான் எதை மீளுகின்ற ஒரு மாதம் கழியப்போகின்றது ஆனாலும் இதையென்று அறியாத சனி பகவானே நிச்சயமாய் பல தொந்தரவுகள் மனிதர்கள் பின் படுத்தி படுத்தி எழுகின்றனர்!!!

ஆனாலும் இதை தன் எதை அறியாமலே எதை என்று உணராமலே பின் அலைந்து திரிகின்றனர் ஆனாலும் நிச்சயமாய் பின் சனி பகவானே!!! நிச்சயமாய் இவ்விடத்திற்கு வந்து எதை என்று வணங்கி சென்றாலே அவந்தனுக்கு அனைத்தும் நீ கொடுத்து விட வேண்டும் என்று பின் ராமனும்!!!

ஆனாலும் பின் சனி பகவானும் நிச்சயம் கொடுக்கின்றேன் !! ராமா!!!

ஆனாலும் அவரவர் பாவ கர்மங்களுக்கு ஏற்பவே இங்கு நிச்சயம் வர முடியும் ஆனாலும் பின் எதை என்று அறியாத அளவிற்கும் கூட..அவந்தனின் பாவ கணக்கு அதிகமாக இருந்தால் இங்கு நெருங்க முடியாது சொல்லிவிட்டேன்!!!

பாவ கணக்கு போகும் தருவாயில் நிச்சயம் இவ்விடம் வருபவர்களுக்கு என்னுடைய ஆசிகள் கிட்டி உயர்ந்த இடத்திற்கு யான் அழைத்துச் செல்வேன்!!! என்று சனிபகவான் கூறிவிட்டான்!!!

அதனால் இதனை எதை என்று கூட அதிகம் பேர் இங்கு வரவும் முடியாது சொல்லிவிட்டேன் இதனையும் அறிந்து அறிந்து அதனால் சூட்சுமங்கள் பல பல ஆனாலும் இங்கேயே எதை என்று கூற பல நாட்கள் இராமன் தங்கி இருந்தான் என்பது மெய்!!!!

அவை மட்டும் இல்லாமல் பின் ராமனுக்கு எதை என்று கூட அனுமான் ஜீவராசியாக வந்து அதாவது வாயில்லா ஜீவராசியாக வந்து பல பல பழங்களை இங்கு கொடுத்தருளினான் இதனால் நிச்சயம் உண்மையான பக்தி உள்ள பின் மனிதர்களை சனி பகவானே இங்கு வரவழைப்பான்... நிச்சயம் ஆறுதல் சொல்லி அனுப்புவான் பல வரங்களையும் கொடுத்து அனுப்புவான் இதுதான் உண்மையப்பா!!!

இன்னும் பல பல திருத்தலங்களையும் சொல்லப் போகின்றேன் அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே இன்னும் பல சித்தர்கள் பின் அகத்தியா!!!!!!! எதை என்று அறியாமலே அறிவில் சிறந்தவன் நீ எதை என்று அறியாமலே விஞ்ஞானம் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூறினால் மட்டுமே விடைகள் என்று கூட!!!

அதனால் சனி கிரகம் எதை என்று எவற்றில் இருந்து பின் எதை என்று உணராமலே அவ் சக்தியானது இங்கு நிச்சயம் அதிக அளவு படுகின்றது படிகின்றது படிகின்றது!!!! இதனால் நிச்சயம் எதை என்று அறியாமலே அதனால் சில சில வழிகளிலும் கூட தொல்லைகள் நிகழும் இங்கிருந்து சென்று எதனை என்றும் அறியாமலே ஆனாலும் நளன்( நளமகாராஜா) அதாவது அவ் நளனும் இங்கு வந்து சில விஷயங்களை பின் கற்றுக் கொண்டான் இதனால் எதை என்று அறியாமலே ஆனாலும் சில சில போதனைகள் அவனுக்கும் பின் அறிவுகள் எட்டியது ஆனால் பல அதாவது எதை என்று பல மாதங்களாக இங்கே உறங்கினான் நிச்சயம்!!

ஆனாலும் உறங்கிக் கிடக்கும் பொழுது சனி பகவானே தன் கனவில் வந்து எதை எவற்றில் இருந்து கூட எதை என்று கூட நளனே!!!! இதை என்று அறியாத நள்ளாறு எதை என்று கூட இப்பொழுது கூட திருநள்ளாறு என்றே அதனை அழைக்கின்றனர் பின் அங்கே சென்றிட்டு வா!! உன் கர்மங்கள் பல வழிகளில் நீங்கும் அங்கே என்று கூற!!! 

அதனால் நள மகராஜாவுக்கும் எதை என்று அறியாத அளவிற்கும் கூட பின் யார் சொன்னது?? யார் சொன்னது?? என்று கூட !!......

ஆனாலும் இங்கிருந்து நடை பயணத்தை மேற்கொண்டு அங்கே அடைந்தான்!!!! பின் சனி பகவான் வரவழைத்தான்!!! 
காகம் ரூபத்தில்!!! 

ஆனாலும் காகமும் வந்தது என்பதை கூட ஒரு சுய உருவமாகவே இருந்தது அக் காகம் இவன் பின்னால் செல்லச் செல்ல ஆனாலும் நீரைத் தட்டி விட்டது!!! முதலில் ஆனாலும் உணவை தட்டி விட்டது!!! ஆனாலும் பல வழிகளிலும் கூட ஆனால் வந்தது யார்?? என்று கூற காகம் எதை என்று ஆனாலும் காகமாக வந்திட்டு எதை எவற்றிலிருந்து அறியாமலே திடீரென்று மாயமாக போய்விட்டது அறிந்து கொண்டான்!!
 நள மகராஜா வந்தது சனியவனே என்று கூட!!!

இதனால் பல வழிகளிலும் கூட அங்கே எதை என்று அறியாமலே பின் சனி பகவானும் வரட்டும்!!!! சொப்பனத்தில் வரட்டும்!!!! அப்பொழுதுதான் முழுமை அடையும் என்பதை கூட அதனால் பல வழிகளிலும் அங்கே தங்கி பல பல எதனை என்பதையும் கூட நிமித்தம் காட்டி பின்பு அனைத்தையும் நீக்கி விட்டு சென்றான் இன்னும் எதை என்று அறியாமலே!!!

இப் பிறப்பும் அதாவது அவ் பின் நளனுக்கும் கூட அளிக்கப்பட்டு இருக்கின்றது அங்கு!!!

எங்கு வாழ்கின்றான்? என்பதை கூட அதாவது ரகசியமாகவே பின் சித்தர்கள் உரைப்பார்கள் என்பது மெய்!!!!

ஆனாலும் எதை எவற்றில் இருந்து கூட ஆனாலும் அங்கும் அதிகமாக படுகின்றது என்பேன் இதனால் தான் எதை எவற்றில் இருந்து கூட அவ் சக்தியானது அங்கே எதை எவற்றின் பின் அதிக அளவு படுகின்றது அதனால் ஒரு நாள் இரு நாள் சென்றாலெல்லாம் நிச்சயம் சரியாக ஆகாது என்பேன் நிச்சயம் வாரத்தில் எதை என்று அறியாமலே எதை என்று புரியாமலே பின் தங்கி தங்கி சென்றடைந்தால் நிச்சயம் அவ் சக்தியானது நிச்சயம்பின் நம் உடம்பில் இருக்கும் எதை என்று கூட சில தீய சக்திகளை எடுத்து விடும் அப்பனே இதைத்தான் யான் விவரித்து இருக்கின்றேன் இப்பொழுது கூட 

இதனால் அப்பனே எங்கெல்லாம் அப்பனே இப்பொழுது கூட எவை எதை என்று எதிர்பார்க்கும் அளவிற்கும் கூட அப்பனே இன்னும் அவதாரங்கள் பல பல என்பேன்!!!

அப்பனே அவ் அவதாரத்தின் வழியே இறைகள் சுற்றி வருகின்றன அப்பனே ஒவ்வொரு தலத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்பேன் அப்பனே எதை எவற்றில் இருந்து கூட!!!

வசிஷ்டனும் எதை என்று அறியாமலே குருகுலத்தை இங்கேயே நடத்தினான் சில ஆண்டுகளுக்கு!!! ஆனாலும் பல வழிகளிலும் கூட அவர்களும் ஞானத்தை பெற்று இங்கே வந்து தான் சென்று கொண்டிருக்கின்றார்கள் நலமாக அவர்களைப் பார்த்தாலே பெரும் புண்ணியமப்பா!!!!

ஆனாலும் பெரிய பெரிய பின் அரசர்களாக!!! எதை என்று அறியாமலே பெரிய பெரிய மாமனிதர்களாக அவர்கள் திகழ்கின்றனர் என்பேன் அப்பனே!!!

நலமாகவே அதனால் அப்பனே ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிச்சயம் எதை என்று அறியாமலே அப்பனே விடிவு காலம் அப்பனே மனிதனுக்கு யான் கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

நிச்சயம் இதைப் பின்பற்றி வந்தால் நலமே மிஞ்சும்!!!

அப்பனே குறைகள் இல்லை அப்பனே சனி பகவானின் லீலைகள் இன்னும் ஏராளமாகவே நிச்சயம் யான் எடுத்துரைப்பேன் அப்பனே

நலமாகவே இதனால் அப்பனே இன்னும் சொல்லப்போனால் அப்பனே எதை எதை என்று நினைக்கும் அளவிற்கும் கூட அப்பனே இவ்வுலகத்தில் வருத்தங்கள் வந்து கொண்டே இருக்கின்றன அப்பனே ஆனால் இப்பிறப்பின் ரகசியம் எதை என்று அறிந்து கொண்டால் அறிந்து கொண்டால் அதுவும் சனீஸ்வரனே என்பேன் அப்பனே!!!

நலமாகவே!!!! நலமாகவே!!!! சனியவன் எதை எவை என்று கூட கெடுத்தாலும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வான் ஆனாலும் எதற்காக கெடுக்கின்றான்? என்பதைக் கூட ஒரு பாடமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் கர்மா அதிகமாக இருந்தாலும் அப்பனே அங்கேயே எதை என்று தெரியாமலே உணர்த்திவிட்டு அப்பனே இன்னும் இன்னும் மேல் நோக்கி அழைத்துச் செல்வான் அப்பனே!!! 

நலமாகவே அப்பனே இன்னும் அதாவது இவ் தேசத்தில் சனி பகவான் வாழ்ந்த இடங்கள் கூட மறைந்து கிடக்கின்றது அங்கெல்லாம் சென்று வழிபட்டாலே அவந்தன் நிச்சயமாய் மனமகிழ்ந்து நம்தனை இவ்வளவு தேடுகின்றார்களே!!!...... என்று நினைத்து உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்வான் என்பது மெய்யப்பா!!!!!! 

இன்னும் வாக்குகளாக பரப்புகின்றேன்!!! என்னுடைய ஆசிகள்!!!! என்னுடைய ஆசிகள்!!! அப்பனே!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 
முகவரி
சனி மகாராஜ்  ஆலயம்
பிம்பார்கெட். 
நஸ்தான்பூர் 
நாசிக் மாவட்டம் 
மகாராஷ்டிரா .,

நந்த்கான்-சாலிஸ்கான் சாலை ரயில்வே கிராசிங் கேட் அருகில், நந்த்கான் 424109.  

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் 

யோகேஷ் துவாரகாதாஸ் குல்கர்னி  841298428/ 9272007198

சாலிஸ்கான் சாலையில் நந்த்கானில் இருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ள நஸ்தான்பூரில் உள்ள பழமையான சனி மஹாராஜ் கோயில் 
இது இந்தியாவில் உள்ள ஸ்வயம்பு சனி பீடங்களில் ஒன்றாகும். இந்த வளாகம் 12 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்துள்ளது. இது பிரதான மந்திர், சிறிய ஹனுமான்  கோயிலும் ஸ்ரீ ராமர் கோயிலும் அமைந்துள்ளது!!! 
கோவில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆரத்திக்குப் பிறகு மகாபிரசாதம் உண்டு. தினமும் காலை 6 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், மாலை 6 மணிக்கும் ஆரத்திகள் நடைபெறும். சனிக்கிழமை மற்றும் சனி அமாவாசை மற்றும் ஷ்ராவண மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த கோவிலுக்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தரும் தங்குவதற்கு பக்த நிவாஸ் விடுதி உள்ளது  மற்றும்  ஒரு அறைக்கு ரூ 500/- கிடைக்கிறது.

இது தோட்டம், உட்காரும் ஏற்பாடுகள், மரங்கள் என இயற்கை சூழலில் அற்புதமாக அமைந்திருக்கிறது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......தொடரும்!

3 comments:

  1. அகத்தீசாய நம

    ReplyDelete
  2. அருமையான தகவல். நன்றி. ஏரிக்குப்பம் எந்திர சனிஸ்வரர் பற்றி ஜீவ நாடி வழியாக அறிய ஆவல். அகத்திய மாமுனி மனது வைத்து அருள வேண்டும்.

    https://www.maalaimalar.com/amp/devotional/temples/2020/12/21080316/2180446/tamil-news-Endhira-Saneeswarar-Temple.vpf
    ஓம் அம் அகத்ததீசாய நம!

    ReplyDelete
  3. The correct adderess is Shani maharaj mandir,post pardhadi, SH 25, Pimparkhed,Dist Nashik Maharashtra 424109.
    website:
    http://www.shanimandirnastanpur.com/
    Location
    https://goo.gl/maps/MyWfapWVjiFMJ2j8A

    ReplyDelete