​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 2 November 2022

சித்தன் அருள் - 1208 - அன்புடன் அகத்தியர் - கபாலேஷ்வரர் மகாதேவ் மந்திர் பஞ்சவடி நாசிக் கோதாவரி நதிக்கரை.




9/10/2022 புரட்டாசி பௌர்ணமி திதி ஞாயிற்றுக்கிழமை அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த ஆலய பொதுவாக்கு.  வாக்குரைத்த ஸ்தலம் :கபாலேஷ்வரர் மகாதேவ் மந்திர் பஞ்சவடி நாசிக் கோதாவரி நதிக்கரை. 

உலகை ஆளும் ஈசனையும் ஈசனின் தேவியையும் பணிந்து பரப்புகின்றேன் வாக்குகளாக புசண்டனவன்!!!

இதை எவற்றை!! எவற்றை!! என்று கூட ஆனாலும் அகத்தியன் இவ்வுலகத்தில் சாதாரணமான மனிதனாகவே வந்து அதாவது எண்ணற்ற மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டே இருக்கின்றான்!!

இதை யார் உணர்வீர்களாக???

ஆனாலும் இப்பொழுது கூட!!! அகத்தியன்!!! அதாவது இப் புசுண்டன் என்னதான்? சொல்கின்றான் என்று பின் பார்ப்போம்!!... என்று மனிதனாகவே இருந்து இங்கேயே அமர்ந்திருக்கின்றான்!! பின் அவனும் பின் எதை என்று அறியாமலே!!!!

ஆனாலும் இதையென்று உணர்ந்து கொண்டால் மனிதர்கள் பிறப்பில்லை ஆயிற்றே!!!! இதனால்தான் மனிதர்களுக்கு புத்திகள் மட்டம்!! மட்டம்!! என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்!!!

அதனால் பின் மனிதனைப் போல இங்கு அகத்தியனும் அதாவது உங்களைப் போன்றே அமர்ந்திருக்கின்றான் அகத்தியன்!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளை பின் அதிகாலையில் எதை என்றும் எவற்றை என்றும் கூட இராமனும் சீதையும் வந்து நிச்சயமாய் எதை எவற்றில் இருந்து கூட ஆனாலும் இதை என்று உணராதபடி எப்படி செயல்படும் என்பதற்கெல்லாம் விளக்கங்கள்!!!

ஆனாலும் ராமா!! சீதா!! இதை பின் லட்சுமணனும் அழகாகவே பின் குடிகொண்டு குடி கொண்டு இத்தலத்திலே பின் பௌர்ணமி தன்னில் நிச்சயமாய் வந்தார்கள் எதை எவற்றை என்று கூட பின் பூஜையும் செய்தார்கள் அனைவருக்கும் ஆசிகள் கொடுத்துவிட்டு சென்றார்கள்!!!!!!

அதனால் அவர்களுக்கு என்ன தேவையோ அதை நிச்சயமாய் பூர்த்தி ஆயிற்று!!!

ஆனாலும் பிறவியின் கடலை அதாவது எண்ணற்ற சித்தர்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் அறியாத மூடர்களே!! முட்டாள்களே!! என்று தான் யான் மனிதனை உரைப்பேன்!!!

ஏனென்றால் மனிதனின் பின் ஆசை பின் பேராசையாம்!!!!அவ் பேராசை பின் தீட்டுவதற்கு மனிதன் முட்டாள் செயல்களில் இறங்குகின்றான்!!! பக்தியும் காட்டுவதில்லை!! அமைதியாக இருந்து பின் நம் தனக்கு இவை இதை என்றெல்லாம் இறைவன் மீது நாட்டமா? இல்லை மற்ற பொருள்கள் மீது நாட்டமா??

ஆனால் பொருள்கள் எவ்வாறு அழியக்கூடியதோ அவ்வாறுதான்!!! மனிதன் நிச்சயமாய் பின் அழியக்கூடியவன் என்பதை கூட சித்தர்கள்!!......

ஆனாலும் எதை எதை மனிதா!! நீ பின்பற்றினாய்?? இறைவனிடத்தில் எதையெல்லாம் ? நீ கேட்கின்றாய்!? என்னதான்?? தகுதி இருக்கின்றது!! என்று  யோசித்தாயா????

யோசித்து!! யோசித்து!! கேட்டால் தான் இறைவனும் உந்தனுக்கு பதில்........!!!!

ஆனாலும் பதில் இல்லையே?!!!!!!
 
ஏன் பதில் இல்லை??? மனிதா!! பிறந்து விட்டாய்!! ஆனாலும் எதற்கு ?!!....

ஆனாலும் மனிதனை நம்பிக் கொண்டிருக்கும் பொழுது ஏன் உந்தனுக்கு இறைவன் தேவைப்படுகின்றான்???

இறைவனும் பின் மனித ரூபம் !!

ஆனாலும் இதிலிருந்து அடங்கியுள்ளது ஆனாலும் வரும் காலங்களில் சித்தர்கள் நிச்சயமாய் இறைவன் எல்லாம் எப்பொழுது? எங்கு? வருகின்றான் என்பதையெல்லாம் உரைப்பார்கள்!!!!!

அதை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே நன்று!! நன்று!! நன்று!! எப்பொழுதும் கூட!!!!

இதை எதை என்று கூட வருத்தங்கள் மனிதனுக்கு உருவாக போகின்றது!!! ஆங்காங்கே எதை எவற்றிலிருந்து ஆனாலும் உண்டா? இல்லையா? எதனை நிமித்தம் காட்டி நிமித்தம் காட்டி உண்டு என்பதற்கும் கூட இயலாமையில் வழிகள் வழிகள்  எதையென்றும் பின் பின் வரும் காலங்களில் நிச்சயம் சித்தர்கள் செப்புவார்கள்!!! உணர்ந்து உணர்ந்து இதை கடைப்பிடித்தாலே போதுமானது!!! எண்ணற்ற பிறவிகளில் செய்த கர்மாக்கள் தொலையுமடா!!!
தொலையுமடா மனிதா!!!

ஏன் பிறந்தாய்?? எதற்காக பிறந்தாய்?? எதற்காக வளர்ந்தாய்?? திரும்பவும் எதற்காக ?போகின்றாய்!!! திரும்பவும் எதற்காக? வருகின்றாய்!!!! புத்திகெட்ட மனிதா இப்புத்தியினை வைத்துக்கொண்டு மனிதா!! வாழத் தெரியவில்லையே!!! வாழத் தெரியாமல் வாழ்கின்றாயே மனிதா!!

ஏன்??  ஏன்? மனிதா?? பின் அனைத்தும் வரவேண்டும் வரவேண்டும் காசுகள் வரவேண்டும்!! வரவேண்டும்!! ஆனாலும் இவையெல்லாம் பொய்யடா!!!

ஆனாலும் பொய்யானவற்றை தேடி சென்றால் நீயும் பொய்யானவை தான்!! அதனால் அதனால் தான் உந்தனுக்கு அழிவுகள் !! உண்மையானவை பின் உண்மையானவற்றை பின் தேடி தேடி செல்லும் மனிதா!! அப்பொழுதுதான் புரியும் உண்மை நிலை அறிந்து அறிந்து!!!

அதனால் பிறப்பின் ரகசியம் ஆனால் இறப்பும் நிச்சயம் இறப்புக்கு செல்கின்ற மனிதா!!! சித்தர்கள் எதை என்றும் தெரியாமலே செப்பிக் கொண்டு இருக்கின்றார்கள் !!!

ஆனாலும் மனிதா !!! பிறப்பு !! இறப்பு!! ஆனாலும் மணங்கள், திருமணங்கள் ஆனாலும் அன்னை!! தந்தையர்!! இவைதனை இறைவனே தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர..... நீங்கள் தேர்ந்தெடுக்க தேவையில்லை அதனால் தான் ஆனாலும் இதற்குத்தான் போராடி கொண்டிருக்கின்றான் மனிதன்!!!

எப்படி வாழ்வான்? மனிதா!! மனிதா இது கலியுகம் கலியுகத்தில் பிறந்தோர்கள் எண்ணற்ற தீங்குகளையும் கூட எதனையும் என்று கூட அனுபவிக்காமல் அனுபவிக்காமல் சென்று விட்டாயே மனிதா!!!

மனிதா எதனை? அனுபவிக்காமல் சென்று விட்டாயென்றால் இறை பக்தியை அனுபவிக்காமல் சென்று விட்டீர்களே!!!!!

ஆண், ஆண், ஆண், பெண், இதனையும் நிமித்தம் காட்டி என்னென்ன விஷயங்கள் வருங்காலங்களில் நடக்கப் போகின்றது என்பதையும் கூட அப்படியே எடுத்துரைப்போம்!!!!

நிச்சயம் சாதாரணமானவன் அகத்தியனே!!!!

ஆனால் அகத்தியனை வைத்துக்கொண்டு அகத்தியன் இப்படியெல்லாம் பணக்காரனா?!!! எதை செல்வந்தனா!?? என்றெல்லாம் மனிதன்!!!

ஆனால் அகத்தியனுக்கு!!!.....

ஒன்றை மட்டும் சொல்கின்றேன் எதை அறிந்து எவற்றை அறிந்து சாதாரணமாக இருப்பது தான் அகத்தியனுக்கு மிகப்பெருமை!!!!

ஆனாலும் அனைத்தும் இருக்கின்ற இடத்தில் கூட ஆனாலும் இன்னும் இன்னும் சித்தர்கள் எதை என்று மனிதனை உருவாக்க உருவாக்க பின் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்!!!

ஆனால் மனிதனோ!!! தீயவையில் தான் யாங்கள் செல்வோம் பாவத்தை தான் யாங்கள் சுமப்போம் என்றெல்லாம் புத்திகெட்ட மனிதனே சென்று கொண்டிருக்கின்றான்... அதனால் என்ன பயன்???

பயன் ஒன்றும் இல்லை மனிதா!!! திருந்திக் கொள்!!! உணர்ந்து கொள்!!!!

ஆனாலும் இன்னும் பல மனிதர்களை யாங்கள் நிச்சயம் எப்படியாவது திருத்தியாக வேண்டும் திருத்தித்தான் பார்ப்போம் என்று அகத்தியன் முழு முயற்சியோடு இருக்கின்றான்!! நிச்சயம் மாற்றுவோம் மாற்றுவோம் என்று!!!

நிச்சயம் மாற்றுவார்கள் பின் சித்தர்கள் அகத்தியன் வழியே வருவார்கள் ஏராளமானவர்கள்!!!

ஆனாலும் பொய்!! பொய்!! ஆனாலும் இதையெல்லாம் அகத்தியன் பார்த்துக் கொண்டே பின் அப்பொழுது அப்பொழுதே அணைத்துக் கொண்டிருக்கின்றான் அதாவது பின் விலக்கிக் கொண்டிருக்கின்றான் யார் யார் என்பதையும் எதிர்த்து எதிர்த்து!!!

எதிர்த்து நில்!! போராடு எதனைப் எதிர்த்து போராட வேண்டும் ஆனால் இதை பாவங்களை எதிர்த்து நின்று போராட வேண்டும் இதனால் மனிதனுக்கு புத்திகள் இல்லை!!

ஆனாலும் இதனை நிமித்தம் ராமனும் ராமனின் ஒர் சிறு!!! சிறு விடுகதை உண்டா இல்லை இல்லை என்பது வந்து விட்டால் என்னதான் உண்டு மனிதா உன்னிடத்தில்!!!!

உன் உடம்பை வைத்துக் கொண்டு என்னென்ன?? விளையாட்டு மனிதா!!!

ஆனாலும் ஒன்றும் செய்யப் போவதில்லை யான் அதை செய்கின்றேன்!!! இதைச் செய்கின்றேன் !!! யான் தான் பக்திமான் எந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்பவன் முதல் வகையான திருடனப்பா!!! திருடன் !!! இதை யான் பல அதாவது உலகத்திற்கு சிறந்த ஆனாலும் உலகத்திற்கு தோன்றியவன் எதை என்று பல யுகங்களாக பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் இறைவன் கூட!!!!

யானும் கூட பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் மனிதன் அதை செய்கின்றான் இதைச் செய்கின்றான் என்று சொல்கின்றானே தவிர கடைசியில் அவன் நிலைமையை பார்த்தால் அவந்தனுக்கே துன்பம் வந்திற்று!!! அனைத்தும்!!

ஆனாலும் ஏமாற்றுவது ஆனாலும் இதை என்று அறிய ஆனாலும் இப்பொழுது கூட சொல்கிறேன் சித்தர்களை வைத்துத்தான் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை யான் சரியாக கணித்திட்டேன்!!! ஆனாலும் அவர்களுக்கும் பின் கர்ம வினைகள் சேர்ந்து கொண்டே தான் இருக்கின்றது!!! நீங்கள் அறிவீர்களா!!! எதனை நிமித்தம் காட்டி திருந்துவீர்களா??? ஆனாலும் பல மனிதர்கள் அமைதியாகி விட்டார்கள் இன்னும் ஒரு அடி கொடுத்தால் நிச்சயம் அவர்களும் அமைதியாவார்கள்!!! நிச்சயம் எதை எவற்றில் இருந்து கூட மனிதா!! மனிதா!! பிழைப்புக்கள் ஏராளம் ஏராளம் அதை வைத்துக் கொண்டு பிழைப்பு  நடத்தினாலே போதும் இறைவன் உன்னிடத்தில் வருவான்!!

ஆனால் ஏமாற்றி பிழைப்பு நடத்தினால் சிறிது காலம் விட்டு விடலாம் என்று எண்ணுவான் இறைவன் ஆனால் அனைத்தையும் பிடுங்கி விடுவான் அப்பொழுது தான் தெருவில் வந்தால் தான் உந்தனுக்கு புரியுமா??? மனிதா???

மனிதனே மிச்சங்கள் ஆனாலும் எதை ஏமாற்றுகின்றாய்?! எதை பின்பற்றுகின்றாய்?? நிலைமைகள் வேறு ஆனால் ராமன் ஆனாலும் சீதா ஆனாலும் இதை என்று அறிய அறிய பின் ராமன் தான் நிச்சயம் தெய்வம் என்று சீதாதேவி நினைத்து  கொண்டிருந்தாள்... ஆனாலும் இதை பரிபூரணமாக இங்கே அமைந்திருக்கும் சில சிற்றூர்களிலும் திரிந்தாள்!! 

ஆனாலும் ஏனைய பிறவிகள் இங்கே வழங்கப்பட்டுவிட்டன பின் சீதாதேவிக்கு!!!

ஆனாலும் இங்கு மலை ஒன்று ஆனாலும் அவள் நிழல் போல் தாங்கியுள்ளது!!! அங்கே பல தவங்களை மேற்கொண்டுள்ளாள் சீதாதேவி!!!

ஆனாலும் பின் மனிதர்கள் உருவெடுக்கவில்லை இதனை நிமித்தம் காட்டி அனுமானும் இங்கே இங்கேயே தவங்கள் மேற்கொண்டான் மேற்கொண்டு மேற்கொண்டு சீதாதேவி என்னவெல்லாம் நினைக்கின்றாளோ அவையெல்லாம் செய்து முடித்தான் அனுமான்!!!!

இதனையும் அறிந்து அறிந்து இதனால் இங்குள்ள பல பல உண்மைகள் நிச்சயம் அனுமானுக்கு தெரியும்!! அனுமானே பல மலைகள் மீது இப்பொழுது கூட சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்பது உண்மை!!!

அதை முதலில் விளக்குவது நிச்சயம் இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே நிச்சயம் அவ் அம்மையின் அதாவது தேவியின் அருள் சீதா தேவியாகவே இருக்கின்றாள் இப்பொழுதும்கூட!!!!!

ஆனாலும் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்!!! இதை என்று அறிவதற்கு கூட ஆனாலும் இதிகாசங்கள் பல பல ஆனாலும் மனிதனுக்கு தெரியாமல் போய்விட்டது குலத்தை அழித்துக் கொண்டு இருக்கின்றான்!! எதற்காக?? என்பதையும் கூட ஆனாலும் சாக நிலை வரம் பெற்றவர்கள்(சிரஞ்சீவி)  சீதாதேவியும் ஒன்று ராமனும் ஒன்று!! ஆனாலும் லட்சுமணனும் ஒன்று!! ஆனாலும் இதை யார் அறிவார்கள்????

ஆனாலும் நிச்சயம் கலியுகத்தில் ராமனும் ஆனாலும் மனிதர்களுக்கு பின் போதித்ததை அதாவது அனைத்தும் பொய் என்பதை காட்டப் போகின்றான் ஆனாலும் வரும் காலங்களில் ராமனே இல்லை என்று!!..... ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் ஆனாலும் இதனை நிமித்தம் காட்டி ராமனும் நிச்சயம் எங்கு அமர்ந்திருக்கின்றான் என்பதைக் கூட!!!!!

நிச்சயம் சொல்வேன் சொல்வேன் இப்பொழுதே சொல்லிவிடுகின்றேன். எதை என்று கூட திருமலை அதாவது திருப்பதி எதை என்று வேங்கடவனிடத்தில் தான் ராமனும் சீதையும் அழகாகவே குடி கொண்டிருக்கின்றார்கள் இப்பொழுதும் கூட!!!!

அங்கிருந்து தான் அனைத்தும் சாதிக்க போகின்றார்கள் ஆனாலும் பாணங்கள் எவை என்று கூட ஆனாலும் இதன் தன்மையை உணர்ந்த அனுமானும் அங்கே ஒளிந்து இருக்கின்றான்!!!!

இதனால்தான் இன்னும் வரக்கூடிய நேரங்களில் அழிவுகள் ஏற்படும் பொழுது அனுமான் தக்க சமயத்தில் நிச்சயம் பக்தர்களுக்கு உதவிகள் செய்வான்!!!!

ஏனென்றால் இதனையும் அறிந்து அறிந்து சீதா தேவியும் அனுமானுக்கு இம்மலையில் ஓர் உபயத்தை உபசரித்தாள் என்னவென்று என்னவென்று உபசரித்தாள்  !!! எது என்று கூட ஆனாலும் பின் அனுமானை வரவழைத்து சீதா தேவியும் பின் அனுமானே!!!!! அதாவது இப்படி சுற்றி சுற்றி வருகின்றாயே என்னதான் பயன்!!!! என்று கேட்க!!!

அனுமானும் இதை நிமித்தம் காட்டி எதனையென்று அறிவதற்குள் சீதா தேவியே எப்படியாவது ஆனாலும் சீதா தேவி யார் என்று கூட சரியாக கணிக்க முடியும் என்னால்!!!

ஆனாலும் இப்பொழுது கூட அது தேவையும் இல்லை ஆனாலும் வரும் காலங்களில் சித்தர்கள் செப்பிவிடுவார்கள்!!!!

ஆனாலும் சீதா தேவியே!! எதை என்று எதிர்கொண்டு பின் அனுமானே என்னதான் வேண்டும்?? ஆனாலும் இதை அறிந்து உந்தனுக்கு சாகப்போவது( சிரஞ்சீவி) இவ்வுலகத்தில் இல்லை அதாவது நீயும் எதனைத் தான் தாங்கிக் கொள்கின்றாய் என்பதை நினைக்க !!

அனுமானும் ஆமாம் சீதா தேவியே!!! அன்னையே!!! ஆனாலும் பல மனிதர்களுக்கு அதாவது அனுமான் எப்பொழுதே!!! உணர்ந்து கொண்டான்!!! எதை என்று நிமித்தம் உண்டடா எதனை என்றும் எதனையும் என்றும் என்றும் அறியாத அளவிற்கும் கூட ஆனாலும் அனுமானும்சீதாதேவியிடம் சீதாதேவியிடம் ஆனாலும் எதையென்று கூற எப்பொழுதும் மனிதர்கள் கலியுகத்தில் அதாவது இன்னும் இன்னும் அழிவுகள் காத்துக் கொண்டிருக்கின்றது!!! அதனால் நிச்சயம் இறைபக்தி உள்ள ஆட்களை காப்பாற்ற வேண்டும் தேவியே!!!!

அதாவது உன்னைப் போன்று இவ்வுலகத்தில் பிறந்து நீங்கள் என்னதான் சந்தோசம் அடைந்தீர்கள் என்பதற்கிணங்க ஆனாலும் சீதா தேவியும் கோபித்துக் கொண்டு!!!

அனுமானே இப்படி எல்லாம் யான் சந்தோஷத்திற்கா????? வந்துவிட்டேன்??!! இப்பொழுது இல்லை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இப்படி வாழ்ந்தால் தான் மோட்சம் என்பதை ஏற்படுத்த வேண்டும் ராமனும் அப்படித்தான் இப்படி இருந்தால்தான் நியாயம்!! நீதி!! அன்பு!! பின் பின் பின் ஏராளம்!!!! இப்படி இருந்தால்தான் பிறவி கடலை கடக்க முடியும் என்பது இராமனுடைய லீலை!!! அதனால்தான் இதுவும் இன்னும் அவதாரத்தில் எடுத்துக் கொண்டே செல்கின்றது!!!

இவ் அவதாரமும் யான் சொல்கின்றேன் ஆனாலும் இதை அறிவதற்கு காலங்கள் சென்று விடுகின்றன!!! நல்லோர்கள் திருந்துவார்கள்!! திருந்துவார்கள்!! இன்னும் திருந்தியும் விட்டார்கள் இன்னும் ஏராளமான வாக்குகளும் நிச்சயம் சித்தர்கள் செப்புவார்கள்!! இதை உணர்ந்து கொண்டு உணர்ந்து கொண்டு இன்னும் நல் முறையில் சென்று சென்று உயர்ந்த பக்தியை காண்பிப்பார்கள்!

நிச்சயம் சித்தர்கள் மனிதர்களுக்கு செய்வார்கள் என்பது திண்ணமான வாக்கு!!!!

வாக்குண்டா?! எதனை நிமித்தம் காட்டி!!!...... ஆனாலும் ஓர் ஞானி அதாவது எதை என்று அறியாத அளவிற்கு கூட பின் நிலைமைகள் மாறி மாறி அதாவது இங்கே சுற்றித்திரிந்தான்!!!( பஞ்சவடி) 

அவனுடைய சீடர்களும் பல!! பல!!..... ஆனாலும் அவ் ஞானிக்கு ஈசன் மீது பற்று!!!

ஆனாலும் ஈசன் மீது பற்று கொண்டு!! பற்று கொண்டு! 

ஆம்!! எதை ?ஆம் என்ற வார்த்தைகளுக்கும் விளக்கங்கள் உண்டா?? விளக்கம் என்பதற்கும் எதனையுமென்று நிமித்தம் காட்டி ஆனாலும் அவ் ஞானி பின் நமச்சிவாயா!! நமச்சிவாயா!! என்று சொல்லிக் கொண்டிருக்க!!! சொல்லிக் கொண்டிருக்க!!!! சீடர்களும் உற்று நோக்க அவ் ஞானியவன் சீடர்களுக்கு பல வழிகளிலும் கூட ஞானத்தை போதித்தான்!!!

ஆனால் சீடர்களோ அதை புரிந்திருக்கவில்லை!!! ஆனாலும் புரிந்திருக்கவில்லை என்பதற்கிணங்க மாற்றங்கள் தான் வந்த வண்ணம் குருவிற்கோ சீடர்களை பற்றி சரியாக தெரிந்து விட்டது!!!!

உண்மையான சீடர்கள் இவர்கள் இல்லை!!! ஆனாலும் நம் தன் முயற்சியை கைவிடக் கூடாது என்பதற்கிணங்க பின் எவையெல்லாம் சொல்ல வேண்டுமோ? அவையெல்லாம்!! சொல்லிக் கொண்டே வந்தான் அவ் ஞானி!!!!

ஆனாலும் சீடர்களோ!!! இப்படித்தான் குருவானவன் சொல்லிக் கொண்டு இருக்கின்றான் ஆனாலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!!! பிரயோஜனமும் இல்லை!!! சொல்லியதும் கூட அதில் கூட ஒருவன் இவன்தான் குருவா??!! இவந்தனுக்கு என்ன தான்? தெரிகின்றது!?

ஆனால் குருவோ!!! இதையெல்லாம் ரகசியமாக கேட்டு வந்தான்!!! ஆனால் சீடர்கள்!!.......

ஆனாலும் குருவோ!!! குரு நினைத்தால் அனைத்தும் கொடுத்து விடலாம் ஆனால் கொடுக்கவில்லை ஏனென்றால் பின் அநியாயத்தில் இறங்கி விடுவார்கள்!!! செல்வத்தை அதாவது இவர்கள் இஷ்டம்போல்!!...... ஆனாலும் ஒன்றை சொல்கின்றேன்!!

அவ் ஞானியவனுக்கு பல சீடர்கள் !! பல சீடர்கள் !! ஆனாலும் அதில் ஒருவன் கூட உத்தமன் இல்லை!!!

அனைவரும் ஏதாவது ஒன்று நடக்க வேண்டும் என்றே எண்ணிக் கொண்டு இருந்தார்கள்!!!

ஆனாலும் மறுத்து!! மறுத்து!! நிமித்தம் காட்டி சரி பார்ப்போம்!!! என்று குருவும் ஒன்றும் செய்யவில்லை!!!!

ஆனாலும் இதுவே கடந்த காலம் அதாவது நிகழ்காலம் எதிர்காலம் ஆனாலும் இப்படியே கடந்து போயிற்று!!!!! 

ஆனாலும் தம் மனதில் குரு அனைத்தும் செய்வான் செய்வான் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தார்கள் சீடர்கள்!!! ஆனாலும் இதனை மறுப்பதற்கு ஒன்றுமில்லாமல்......

ஆனாலும் குருவோ!!! அனைத்து சீடர்களையும் அறிந்தான்!!!! இவர்களுக்கு கொடுத்து விட்டால் என்னதான் செய்வார்கள் என்று நினைக்க!!! ஆனால் நினைத்துப் பார்த்த பொழுது பின் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் வந்திருக்கின்றார்கள் நம்மிடையே!!!! இவர்களுக்கு கொடுத்தாலும் இவர்கள் பல வழிகளிலும் கூட உண்மையைப் பின்பற்றவும் மாட்டார்கள் இறை பக்தியும் செலுத்த மாட்டார்கள்!!! என்று குருவானவன் உணர்ந்து கொண்டான்!!!!

அதனால் முதலில் ஓர் சீடனை எழுப்பினான்!!! ஞானியானவன்... ஆனாலும் சீடா!!!!! உந்தனுக்கு என்னதான் வேண்டும்????? என்று கூற!!!

ஆனாலும் இதையென்று அறியாத அளவிற்கும் கூட முட்டாள் சீடனை ஆனாலும் இவ்வுலகத்தில் உள்ள அனைத்து சுகங்களும் எந்தனுக்கு கிட்ட வேண்டும் என்று சீடன் கூறினான்!!

சரி அப்படியே ஆகட்டும்!! என்று குரு சொல்லிவிட்டான்!!!

ஆனாலும் இதையென்று அறியாத அளவிற்கும் கூட மற்றொரு சீடனை எழுப்பி சீடனே!!! உந்தனுக்கு என்ன தேவை ??என்று கேட்க!!!

அச் சீடன் எந்தனுக்கு பின் செல்வங்கள் வேண்டும் செல்வங்கள் இருந்தால் தான் இவ்வுலகத்தில் பிழைக்க முடியும் என்று கூற!!!
சரி தருகின்றேன் என்று குரு!!!! அவந்தனும் அமர்ந்து விட்டான்!!!

மற்றொரு சீடன் எந்தனுக்கு இவ்வுலகத்தில் உள்ள எங்கெங்கு எதனையென்று பின் சுகங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் சென்று யான் அனுபவிக்க வேண்டும் என்று !!

ஆனாலும் சரி தருகின்றேன் என்று!!!
பின் அமைதியாக அவ் சீடனும் உட்கார்ந்து விட்டான்!!!

ஆனாலும் இன்னொரு சீடனும் எழுந்து நின்று எந்தனுக்கு திருமணங்கள் அதாவது ஒன்றில்லை!! இரண்டில்லை!! மூன்றில்லை !! பல திருமணங்கள் வேண்டும் என்று!!!!

ஆனாலும் சரி அவையும் வழங்குகின்றேன் என்று குரு கூறிவிட்டான்!!!

அவந்தனும் உட்கார்ந்து விட்டான்!!

இன்னொருவன்!!!......

சீடா!!! எதை என்று நீ கூறு என்று ஞானி கேட்க!....

எந்தனுக்கு இவ்வுலகத்தில் அனைவரும் என்  கட்டுக்குள் வரவேண்டும் யான் தான் மன்னனாக இருக்க வேண்டும்!!!

சரி என்று குரு கூறிவிட்டான்!!! 
சரி அமர்ந்து கொள் என்று!!!

இன்னொரு சீடனோ எந்தனுக்கு எதை என்று கூற எதை என்று கூறாமலே கூறிவிட்டால் நன்றாக உண்டு என்பதை கூட அவன் ஒரு கேள்வியை வைத்தான்!!! எதை எப்பொழுது என்று தெரியாமலே குருவிடம்!!!

குருவானவனே உன்னைப் போன்றே யான் ஆக வேண்டும் என்று!!!

ஆனாலும் சரி ஆகிவிடலாம் என்று குரு உபசரித்தான்!!!

ஆனால் இப்படியே சென்று கொண்டிருந்தது ஆனாலும் ஒருவன் பற்றி யாரும் சிந்திக்கவில்லை எந்தனுக்கு இறை பலம் வேண்டுமென்று யாரும் கேட்கவில்லை!!!

ஒருவன் பணம் கேட்கின்றான் ஒருவன் திருமணம் வேண்டுகின்றான் எதை இவந்தனுக்கு எதை என்று கூட மனிதன் தொழில் வேண்டுகின்றான் ஆனாலும் பின் இவற்றையெல்லாம் உணர்ந்து உணர்ந்து குருவானவன் எப்படி இருக்கின்றார்கள் மனிதர்கள் ஆனாலும் இதையென்று அறிந்து ஆனால் இவற்றின் நிலைமை எல்லாம் குருவிற்கு தெரிந்தாலும் அவன் வாயில் இருந்து வர வேண்டும் என்று தான் எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள்!!!

ஆனாலும் கடைசியில் ஒரு சீடனை எழுப்பினான்!!

எழுந்து நில் !!எழுந்து நில் !!என்று கூற ஆனாலும் சீடனோ மறுத்து விட்டான்!!!

குருவே யான் அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றேன்!!

ஏனப்பா? அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றாய் என்று!!!!

ஆனாலும் சீடனோ எந்தனுக்கு... இவ்வுலகத்தில் ஏதும் தேவையில்லை எதுவுமே தேவையில்லை!!!

குருவே நீ என்ன செய்தாலும் யான் செய்கின்றேன் என்று கூறி ஆனாலும் சரி என்று குரு ஆனாலும் இதையென்று அறியாத...குருவிற்கு ஓர் யோசனை!!!! 

இதை எவை ஆனாலும் குருவானவன் அச்சீடனுக்கு சொன்னான்!!! நிதானமாக ஆனாலும் இவ்வுலகத்தில் பல மனிதர்கள் இருக்கின்றார்கள் அவ் மனிதர்களுக்கெல்லாம் உதவிகள் செய்து கொண்டே வா!!!! என்னென்ன?? தேவையோ அவையெல்லாம் கொடு என்று!!!

ஆனாலும் அவ் முட்டாள் சீடனோ!! குருவானவனே இப்படி சொல்கின்றாயே!!! எப்படி ? என்னால் கொடுக்க முடியும்??? என்னிடத்தில் ஆனால் எவை இருக்கின்றது?? ஆனாலும் அவன் ஒரு சீடன் ஆனால் சீடனின் மனதில்!!......

ஆனால் குரு நினைத்தான்!! இவந்தனும் கடைசியாக முட்டாளாக இருக்கின்றானே!!  என்று!!

இதை எவற்றைத் தவிர்த்து ஆனாலும் சரி சீடர்களை யாரையுமே நம்பவில்லை!!

ஆனாலும் எதை அறிந்து ஆனாலும் என்றென்று உணர்ந்த உணர்ந்து பின் சீடர்களே வீண்!!! அதாவது நிச்சயம் பின் இனிமேல் சீடர்களுக்கு எதையும் கற்பிக்கப் போவதில்லை என்று அவ் குரு முடிவெடுத்தான்!!! முடிவெடுத்து ஆனாலும் பல வாயில்லா ஜீவராசிகளுக்கு அதாவது கோமாதாவிற்கு பல வழிகளிலும் உதவிகள் செய்தான் !!!

ஆனாலும் அக் கோமாதாவும் பேசியது இங்கே இப்பொழுது கூட அதாவது கலியுகத்தில் நிச்சயமாய் அழிவுகள் வரக்கூடியது என்பதை கூட சரியாக கணித்து விட்டேன் யான்.... அதனால் இப்பொழுது கூட இங்கே இவ்விடத்திலே கோமாதா ஒன்று பேசும்!!! அவ் கோமாதா பேசிவிட்டால் இவ்வுலகம் முழுமையாகிவிடும்!!!

அதாவது அழிவு நிலைக்கு சென்று விடும்!!! வரத்தான் போகின்றது நிச்சயமாய் நிச்சயமாய்  அக் கோமாதாவின் பின் எதை எவற்றில் இருந்து கூட மனிதன் பிறக்கத்தான் போகின்றான் அழிவுகள் வரப்போகின்றது எளிதிலே!!!

ஆனாலும் இதை அறிந்து கொண்டு அறிந்து கொண்டு யாங்கள் சித்தர்கள் எதற்கு எதை என்று கூட எப்பொழுதுமே நிச்சயம் எடுத்துரைத்துக் கொண்டே இருப்போம்!!

ஆனாலும் மழைகள் எதை எவற்றில் இருந்து கூட அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது ஏனென்றால் மனிதா அழிவுகள் இறைவன் ஏற்படுத்தவில்லை!!! நீ தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றாய்!!

யான் எப்பொழுதே சொல்லிவிட்டேன் நீ மாறினால் நிச்சயம் இறைவன் மாறுவான்!! இறைவன் மாறி விடுவான் இயற்கையும் மாறிவிடும்!!!

இயற்கை தான் இறைவன் என்று உணர்ந்து கொள்!!!!

மனிதா அதை வரும் காலங்களில் எப்படியெல்லாம் அகத்தியன் உரைப்பான் என்று எதிர் நோக்குங்கள்!!! நிச்சயம் சொல்வான்!!! அப்பொழுது தெரியும் இறைவன் எங்கிருக்கிறான்?? என்பதை கூட யார் யார் இறைவன் இல்லையோ அவையெல்லாம் நிச்சயம் மனிதா நம்பித்தான் ஆக வேண்டும் முட்டாள் மனிதனே நம்பித்தான் ஆக வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் ஒளி ரூபமாகவே இன்னும் சொல்வான் அகத்தியன்!!!

அகத்தியனை மிஞ்சியவன் இவ்வுலகத்தில் எவருமில்லை !

அனைத்தும் கண்டுபிடிப்புகளை அகத்தியன் ஆராய்ந்து !!ஆராய்ந்து!! ஆனால் மனிதன் நிலைமையோ இப்படி தான் பொய் சொல்லி பொய் சொல்லி அகத்தியனை பின் தனியாக ஒதுக்கி விட்டார்கள்!!! இப்பொழுது கூட அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்!!

அகத்தியன் வாக்கு அதை இதை என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள் ஆனால் அகத்தியன் விடப் போவதும் இல்லை!!!

தண்டனைகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் உணருவீர்களாக!!!!

ஏன்? உன் நிலைமைக்கு அகத்தியன்!... மனிதா!! உன் வாயில் அதாவது எச்சில் அதாவது நாறும் வாயிலிருந்து சொல்கின்றாயே இது நியாயமா???

உன் நாவு எதை என்று எதிர்நோக்கும் ஆனாலும் யான் வார்த்தைகளை(சாபம்) விட்டு விட்டால் அவை அழிவு நிலைக்குப் போய்விடும்!!... வேண்டாம் மனிதனே!!

ஆனாலும் இப்பொழுதெல்லாம் சித்தர்களை ஒரு மறைமுக பொருளாகவே விளையாட்டு பொம்மைகளாகவே பார்க்கின்றார்கள் அவர்களுக்கெல்லாம் அடி பலமாக விழுந்து கொண்டிருக்கின்றது எதனையும் எதனையும் என்று கூட

அழிவுகள் மனிதனால் நிச்சயம் நிச்சயம் நிச்சயம் அதை செய்தால் இதை இதை என்றெல்லாம்!!..... 

யாங்கள் மறைத்திருக்கின்றோம் பல வழிகளிலும் கூட......பல பல உபதேசங்களை மந்திரங்களை எல்லாம் அதனால்!!.... ஆனாலும் மனிதா எத்தனை ஜென்மங்கள் ??? எத்தனை பிறவிகள்??? எத்தனை கடந்து கடந்து வந்து நிற்கின்றாய்?!!!

ஆனாலும் இதற்கெல்லாம் பின் எங்கு தான்?? விடிவெள்ளி உள்ளது?!!!

பின் மந்திரத்தை சொன்னால் அனைத்தும் நடக்குமா??????

சிரிக்கின்றேன் யான்!!!

இதையென்று அறியாது சொல்லிவிட்டேன்.. ஆனால் அதற்கும் எங்களுடைய அருள்கள் வேண்டும் என்று!!! பல பல வழிகளிலும் கூட யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்!!!!

ஏனடா மனிதா!!! எதையென்று எதையுமே எதிர்பார்க்காமல் நிச்சயம் மந்திரத்தை ஜெபித்துக் கொண்டால் அதாவது எங்களுடைய அருளால் எதை எவற்றிலிருந்து பின் தெரியாமல் செப்பிக் கொண்டாலே அவ் மந்திரத்திற்கும் பலம்!!!

ஆனால் மந்திரத்திற்கு பலம் குருவருள் இல்லாமல் நிச்சயம் இருக்காது அதனால் தான் யாங்கள் பிடுங்கி விட்டோம்!!!

அதனால்தான் எவ் மந்திரம் ஜெபித்தாலும் எவ் மனிதனுக்கும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை அதனால் பின் வெறும் வாயைத் தான் அதாவது மண்ணைத்தான் பின் வாயில் எதை வைத்துக் கொண்டு மென்று கொண்டு தின்ன வேண்டும்!!

அதனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை அதனால் யார் ஒருவன் எதை என்று எதையும் எதிர்பார்க்காமலே நீதான் வேண்டும் இறைவா!!!! என்று சொல்லி மந்திரத்தை ஜெபித்தால் நிச்சயம் பன்மடங்கு பன்மடங்கு உயர்வுகள் பெருகும்!!!

எதை எவற்றின் என்று கூட எதை எதை பின் சித்தர்கள் கேட்பது என்பது கூட தகுதி தராதரம் இல்லாமல் சொல்கின்றனர்..

யாங்கள் என்ன??? மனிதர்களுக்கு என்ன?? உரைக்க வேண்டுமா?? என்ன???

ஆனாலும் இதையென்று அறியாமல் அறியாமல்  பொய் பொய் மனிதன் வாயில் அதாவது பக்தி என்ற நிலைமையை ஏற்படுத்தி பொய் என்ற நிலைமைக்கு வந்து விட்டான்!!!

இதனால் கலியுகத்தில் பக்தி என்பது பொய்யாக கூடும் இதனால்தான் அகத்தியன் கண்டுபிடித்ததெல்லாம் மறைமுகமாக பல மனிதர்கள் கண்டுபிடித்ததாக சொல்லி விட்டார்கள்..... நிச்சயம் அகத்தியன் வருவான் எதையும் எதிர்கொண்டு ஆற்றுவான்!!!

நிச்சயம் இப்படியென்று அமைதியாக இருந்து விட்டான் அகத்தியன்!!! ஆனால் பொங்கியெழுந்து வருகின்றான்!!!!

பின் ஆற்றின் வழியே எதை என்று நிமித்தம் காட்டி காட்டி எப்பொழுதெல்லாம் அநியாயங்கள்!! அக்கிரமங்கள்!! நடக்கின்றதோ?! அப்பொழுதெல்லாம் நிச்சயம் சித்தர்கள் வருவார்கள்!!! அதாவது இறைவனும் வருவான்!!!

ஆனாலும் எதையென்று நிமித்தம் காட்டி முதலில் திருத்தத்தான் பார்ப்பான்!! எதை எவற்றை என்று கூட!!

அவ்வாறு திருந்தி விட்டாலே போதுமானது !!!

அப்பப்பா!!! என்னென்ன?? மனிதனின் விளையாட்டுக்கள்!!!

இறைவன் இல்லை என்ற நிலைமைக்கு போய் விட்டான் மனிதன்!!! தண்டனைகள் உண்டு!!! தண்டனைகள் உண்டு!!

ஆனாலும் மனிதா!!! பிறப்பெடுத்தும் பிறப்பெடுத்து வந்து!! வந்து !!தின்று!! தின்று!! கழிந்து!! கழிந்து!! போகின்றாயே!!!

ஒரு உபயம் எதனால் உன்னால் நடந்திருக்கின்றது????

மற்றவர்களுக்காக நீ என்ன செய்திருக்கின்றாய்?! அதை செய்தால் தான் நிச்சயம் உந்தனை பின் இறைவன் மீட்டெடுத்து அதன் மூலமே நல்வழிப்படுத்துவான்!!!

அதனால் தான் வாழ வேண்டும் தன் குடும்பம் வாழ வேண்டும் என்றெல்லாம் நீ நினைத்துக் கொண்டிருந்தால் இறைவன் நீ போய்விடு என்று சொல்லி விடுவான்!!

அதனால் நீயே எதை என்று அறியாமலே கஷ்டங்கள் பட வேண்டும்!! அதனால் அனைத்தும் இறைவனிடத்தில் தான் என்று ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள் இறைவன் பார்த்துக் கொள்வான்!!!

கஷ்டங்கள் கொடுத்தாலும் இன்பங்கள் கொடுத்தாலும் நிச்சயம் இறைவனை சரணாகதி அனைத்திற்கும் காரணம் இறைவனே என்று சொல்ல வேண்டும்!!!

மனிதா!! முட்டாள் மனிதா!!! தரித்திர மனிதா!! தரித்திரனே என்றுதான் சொல்வேன் மனிதனை...எதையென்று கூட.... 

பிறந்துவிட்டு!!! ஏதும் இல்லாமல் பிறந்துவிட்டு அனைத்தும் தா !!  தா !! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றாயே!!!!! புத்திகெட்ட மனிதா!!! இதுவும் ஒரு பிழைப்பா!!!

இல்லை!!!

எதை என்று எதனால் நீ கேட்க வேண்டும்!!???

எதை என்று கூட நீ பிறக்கும்பொழுதே இவையெல்லாம் வேண்டுமென்றா??? பிறப்பாய்!!! 

ஆனாலும் மனிதா!!! இதுதான் புத்திகள் வேண்டும்!! புத்திகள் வேண்டும்!! அறிவுகள் பலமாக இறைவன் கொடுத்து அனுப்புகின்றான்!!! அவ் அறிவை பயன்படுத்தி உன்னால் முடியவில்லையே!!!! 

அப்பொழுது நீ எதற்கு? மனிதனாக!!..........

மனிதன் என்பது பொய்யப்பா!!! பொய் வேடமப்பா!!! மனிதா எங்கு செல்கின்றாய் என்று யோசித்துப் பார்!!!!

சுடுகாட்டிற்கு செல்லும் மனிதனே!!!! உந்தனுக்கு அனைத்தும் தேவையா!???

அவையெல்லாம் எடுத்துக் கொண்டு தான் போகின்றாயா????

ஏன்?? எதற்கு என்று சிந்தி!!!!!

மனிதா அனைத்தும் நம்தன்  இல்லை அதாவது மனிதனுக்கு சொந்தம் இல்லை!!! அனைத்தும் இறைவனுக்கு சொந்தம் அதாவது இறைவனை நெருங்க நெருங்க கஷ்டங்கள் கொடுத்தாலும் உந்தனுக்கு என்ன தேவையோ?!! அதைத்தான் இறைவன் செய்வானே தவிர!!!

ஆனாலும் அவை இவை என்று கூட பல மனிதர்கள் அப்பப்பா!!!!! எதையென்று கூற இறைவனை நெருங்குகின்றார்கள் இறைவனை நெருங்கி நெருங்கி அதை கொடுக்கின்றான்!! இதை கொடுக்கின்றான்!!! என்று பொய் சொல்லி சொல்லி மாண்டு பிறப்பெடுத்து மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து கஷ்டங்கள் பட்டு பட்டு வீணாக போகின்றாயே?!!! மனிதா!!!!

வேண்டாம்!! பிறவிகளே வேண்டாம்!!!

ஆனால் எங்கள் வழிகளில் வருபவர்கள் பிறவிகளை நிச்சயம் அறுப்போம் அறுப்போம்!!!

மனிதா ஒன்றை தெரிந்து கொள்!!!

சித்தர்கள் எதை என்று அறியாமலே பல வழிகளிலும் கூட பல பிறவிகள் கடந்து கடைசியில் திக்கு அறியாது நிற்கின்ற பொழுது தான் எங்களுடைய அருமைகள் புரியும்!!!!

மற்றவர்களுக்கெல்லாம் புரியாது!!! சித்தர்கள் பேசுகின்றார்களா?!! ஏதோ பேசுகின்றார்கள்!!!! என்று போய் விடுவார்கள் அப்பனே!!! 

இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவரின் வாழ்க்கையை பற்றியும் எந்தனுக்கு தெரியும்!!! நிச்சயமாய் உரைக்கப் போகின்றேன் நிச்சயம் மனிதா!! மனிதா!! சித்தர்களிடத்திலிருந்து தப்பவும் முடியாது ஒளிந்து நின்று ஆனாலும் ஓடி ஒளிந்து நிற்கவும் முடியாது!!

கர்மம் பிடித்த மனிதா!! புத்தி கெட்ட மனிதா!! கெட்டும் போயிற்று!!! இன்னும் வாழ்ந்தென்ன!!!! பிரயோஜனம்?? வாழ்ந்தென்ன?? பிரயோஜனம் என்ற நிலைமைக்கு வந்துவிட்டாலே இறைவனை சரணாகதி பொய் பொய் மனிதன் எதற்கெடுத்தாலும்!!.......

நாவா???  அது??!.... 

எதை என்று உணர்த்த உணர்த்த அதனால் சொல்கின்றேன் இனி மேலும் இதை என்று அறிய இறைவன் அதாவது உன் உடம்பை சரியாக கவனித்துக் கொண்டாலே போதுமானது !!மற்றவை எல்லாம் சொல்வான் எதை இன்னும்  அகத்தியன்!!

இவ் உடம்பில் என்னென்ன இருக்கின்றது!!! அவ் பகுதிகளில் இருந்து எப்படியெல்லாம் ஒளி ஊடுருவுகின்றது!!!

எதனை நிமித்தம் காட்டி எதை என்று கூட உயர்ந்த நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி எல்லாம் நிச்சயம் நம் தன் வாழ்ந்தால் அவை எல்லாம் நம்மை ஈர்க்கும் என்பதை எல்லாம் சொல்லப் போகின்றான்!!!

சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!!! அதை பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் வாழ்ந்து விடலாம் அனைத்தும் சாதித்து விடலாம்!!! மனிதா!!! பல ஞானியர்கள் இப்படித்தான்!!........

இவ் ஊன் உடம்பை, ஊன் உடம்பை, ஆனாலும் மனிதா!! ஊன் உடம்பை வளர்த்து விட்டு வளர்த்தி விட்டு கடைசியில் நெருப்பிற்கு அடிமையாக ஆகின்றாயே??!!! இவையெல்லாம் பிறவியே இல்லை!!!

இறக்கின்றான்!! பிறக்கின்றான்!! சாகின்றான்!! சாகுவதற்கும்!! பிறப்பெடுப்பதற்கும் வழிகள் உண்டா??

வழிகள் உண்டு!!! நிச்சயம் மனிதன் நினைத்தால் பிறப்பை கூட தடுக்கலாம்!!!

அவை தன் அகத்தியன் தான் வந்து உரைப்பான்!!!

ஆனாலும் இதற்கென்று கூட... ஆனாலும் ரகசியங்கள் எதை எவற்றில் இருந்து கூட!!.....

பிரம்மரிஷியான அகத்தியன்!!!!! ஆனாலும் அனைத்தையும் உணர்ந்தவன் அகத்தியனால் அனைத்தையும் மாற்ற முடியும்!!!! அகத்தியன் எவ்வாறு என்று கூட!!...

அன்புக்குரியவன்!! பல பல வகையிலும் கூட பல பல வழிகளிலும் கூட கண்டுபிடிப்புகள் பல பல அவந்தனை எதை என்று கூட யானும் ஆச்சரியப்பட்டேன்!!! பல சித்தர்களும் ஆச்சரியப்பட்டார்கள்!!!

ஆனால் இப்பொழுது கூட இங்கே வந்து சாதாரணமாக உட்கார்ந்து புசுண்ட முனி!! என்ன தான்? சொல்கின்றான் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றான் மனிதனோடு மனிதனாக!! எப்படி என்று பார்!! அகத்தியன் நிலைமையை பார் !!எதை என்று கூட!!...

அகத்தியன் என்றால் அனைத்தும் எதை என்று அறிந்து அறிந்து இதனால் யாங்கள் மனிதனை சாதாரணமாக விடப் போவதில்லை!!!!

சித்தர்களை இதையென்று கூட இப்படியே சொல்லிக் கொண்டு போனாலும் இதையென்று அறிந்து அறிந்து இவையென்று புரிந்து புரிந்து எண்ணற்ற கோடி பிறவிகள் பிறந்தும் பிறந்தோம் வாழும் மனிதா!!!! நிச்சயம் உன் பிறவியை நீ அறிந்திருக்கவில்லையே!!!??....

இதுதான் தர்மமா???? நியாயமா???

மனிதா!!! உன் பிறவியை நீ அறிந்து விட்டால் எதற்காக வந்து விட்டாய்?? என்று நீ நினைத்துக் கொண்டால் நீ தான் மனிதன்!!! அப்படி இல்லை என்றால் மனிதன் இங்கு மனிதனே இல்லை!!!

ஒரு கோடி மனிதன் இருக்கின்றான் என்றால் அதில் ஒருவன் கூட மனிதன் இல்லை!!!!

மனிதா உன் நிலைமைகள் என்னென்ன எங்கு தான் பிறக்கின்றாய்??? என்னென்ன செய்கின்றாய்???? என்னென்ன விளையாட்டுக்கள்????

 சாகக்கூடிய மனிதா!!! சாகப் போகின்ற மனிதா!!! பின் கட்டையில் செல்கின்ற மனிதா!!!! எதை எவற்றை என்று கூட நல்ல ஒழுக்கத்தை முதலில் வளர்த்திக் கொள்!!!! வளர்த்துக் கொள்ளுங்கள்!!!

எதை என்று அறியாது இறைவன் தானாகவே வருவான்!!!! தானாகவே வருவான்!!!!

இறைவனை தேடி நீங்கள் செல்ல தேவையில்லை!!!

இறைவன் உங்களை தேடித்தான் வரவேண்டும்!!

எங்கும் மனிதா!!! எங்கெங்கு இருக்கும் மனிதா!!! எங்கெல்லாம் அலைந்து திரிகின்றாயே!!!

ஆனால் எதற்கு?? திரிகின்றாய்?? எதற்கு திரிந்து தெரியாமல் தான் திரிந்து கொண்டிருக்கின்றாய்!!!

ஆனாலும் அதை நிமித்தம் காட்டி நிச்சயம் இதைப் போன்று பல ஞானியர்களும் எங்கெல்லாம் திரிந்து திரிந்து கடைசியில் பார்த்தால் அவன் உள்ளத்திலே அழகாக அமர்ந்திருப்பான் இறைவன்!!!

இதைத்தான் முதலில் இறைவனை அமர்த்தி வையுங்கள் உங்கள் மனதில்!!!!

அப்படி அமைத்து விட்டால் நீங்கள் அனைத்தும் பின் சொல்வதும் நடக்கும் அனைத்தும் திறமைகள் இறைவன் கொடுப்பான் அப்பனே!!!

அப்பனே!!! என்றெல்லாம் சித்தன் அதாவது அகத்தியன் மட்டும்தான் எதை என்று அறியாமல் பாசத்தோடு மக்களை பார்த்துக் கொண்டிருக்கின்றான்!!!


அதை வைத்துக் கொண்டு அனைவரையும் எதை என்று அறியாமலே அகத்தியனையும் எதை என்று எவற்றை என்று கூட புரியாதபடிக்கு அகத்தியனையும் ஏமாற்றி விட்டார்கள்!!!

ஆனால் அகத்தியன் விடுவானா!??? என்ன???

காலம் ஒன்றில்லை!! இரண்டில்லை!!! காலம் மாறிக்கொண்டே போகின்றது!!! தர்மத்திற்கும் அநியாயத்திற்கும் எதை என்று கூட அநியாயத்திற்கும் பின் இவ்வுலகம் ஏங்கி கொண்டிருக்கின்றது!!!

மனிதா!! மனிதா!!! அழிவுகளும் வரப் போகின்றது!!! எதை நிமித்தம் காட்டி அழிவுகள் வந்தால் இறைவன் மீது குற்றம் சொல்லாதே!!!!

உன்னிடத்தில் இருந்து குற்றங்கள் கண்டுபிடி!!!

 எதற்காக? இப்படி எல்லாம் அழிவுகள் வருகின்றது என்பதை கூட!.....

எங்கெங்கு எப்படி எல்லாம் அழிவுகள் சாதாரணமாக வருவது இல்லை!!!

நீ செய்த தவறுகளால் தான் வருகின்றது!!! எங்கெல்லாம் அழிவுகள் என்று கூட!!

ஆனால் நல்லோர்கள் நிச்சயம் இவ்வுலகத்தில் வாழ்வார்கள்!!!! வாழ்வார்கள்!!! ஆனாலும் பின் நல்லோர்கள் பின் கேள்விகள் கேட்பான் இதற்கும் புத்தி கெட்ட மனிதன் அவன் நல்லவனாக தான் இருந்தான் ஏன்? இறந்துவிட்டான் என்று கூட!!...

முட்டாள் மனிதா!! என்னிடத்தில் கேள்!!! யான் சொல்கின்றேன்!!!

அவன் என்னென்ன பாடுகள் செய்கின்றான் என்பதை கூட என்னென்ன செய்தான் என்பதை கூட!!

நோய்கள் பெருக்கெடுக்கும் மனிதா பின் ஒருவன் சொல்கின்றான் இவன் தீய உள்ளோன்!!! அதாவது தீயதையே செய்கின்றான் நன்றாகத்தான் இருக்கின்றான் என்று கூட

ஆனால் அவ் முட்டாள் மனிதனுக்கு தெரியுமா அவன் என்னென்ன?? அனுபவிக்கப் போகின்றான்!! எப்படி என்று கூட!!....

எதை என்று அறியாத அளவிற்கு கூட அதனால் தரித்திர மனிதா !!  திருந்திக்கொள்!!!
திருந்திக்கொள்!!! இன்னும் விளக்கங்கள் ஏராளமான சித்தர்கள் தருவார்கள் தருவார்கள் பின் அகத்தியனும் இன்னும் அறிவியல் ரீதியான விஷயங்களை சொல்லத்தான் போகின்றான்!!!

ஆசிகள் !! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..........தொடரும்!

1 comment:

  1. ஓம் காகபுசுண்டர் முனிவர் போற்றி

    ReplyDelete