6/11/2022 அன்று கார்கோடகநல்லூர் பச்சைவண்ண பெருமாள் அபிஷேக பூஜை குறித்து குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி.
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!!
என்னுடைய ஆசிகள் நலமாக !! நலமாக!! இன்னும் ஏராளம் பின் எதை எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று எதிர் நோக்குகின்றேனோ... அப்பொழுதெல்லாம் யான் நிச்சயம் பல வழிகளிலும் கூட என் பக்தர்களை அழைத்து எங்கெங்கு செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து நிச்சயம் அங்கெல்லாம் பின் பன் மடங்கு நல்விதமாகவே உயர்வுகள் கொடுப்பேன்!!!
அவை மட்டும் இல்லாமல் அப்பனே நலமாகவே நலமாகவே ஏற்றங்கள்!!!!
அப்பனே இதை இதை என்று கூட அப்பனே இன்னும் பின் தற்போது நிலைமையில் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே பெருமாள் எங்கு உள்ளான் என்பதை கூட யான் கணித்திட்டேன் அப்பனே!!!!
ஆனாலும் நலமாகவே எதை எவற்றில் இருந்து சிறிது சிறிது நேரம் (திருமலை) இங்கிருந்து ஆனாலும் பின் எந்தனை அதாவது எவை எவை என்று கூட யான் அங்கு இங்கு ஆனால் எங்கெல்லாம் அழைக்கின்றேனோ பெருமாள் அங்கெல்லாம் நிச்சயம் வருவான் என்பேன்!!!
ஏனென்றால் ஒரு காலத்தில் பெருமாளுக்கு யான் உதவிகள் செய்துள்ளேன்!!!
அதனால் நிச்சயம் தற்பொழுது பின் கார்கோடகநல்லூர் அதாவது ராகு கேது எதை என்று நிமித்தம் காட்டி காட்டி காட்டி எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் பின் நிச்சயமாய் யான் பெருமாளிடத்தில் ஏற்கனவே உரைத்திட்டேன்!!!
ஆனாலும் பெருமானோ!! இதற்கு எவ்வாறு சந்தர்ப்பங்கள் என்று கூட பின் ஆனாலும் இதை அறிந்து அறிந்து ""என் பக்தர்களும் வருவார்கள் நலமாகவே!!!!
அதனால் நீ நிச்சயம் வர வேண்டும் என்று சொல்ல!!!
இல்லை அன்றைய தினத்தில் நிச்சயம் எதை உற்று நோக்க எதன் மூலம் எதனை தெரிவிக்க தெரிவிக்க நிச்சயம் பக்தர்களுக்கும் அருள வேண்டும் என்பதைக் கூட கட்டாயமாக !!!....ஆனாலும் நிச்சயமாய் பின் நானும் எதை என்று அறிந்து அறிந்து பின் பெருமாளிடம் பின் உணர்ந்து உணர்ந்து பின் யான் பல வழிகளிலும் கூட பின் பெருமானே!!!! எண்ணிப் பார்த்தாயா!! என்று கூட!!!...
ஆனாலும் என் பக்தர்களும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் பலர் பலர்!! அதனால் வர வேண்டும் எதை என்று அறிந்து அறிந்து அதனால் பின் யானே உந்தனுக்கு சேவைகள் பல செய்வேன் என்று கூற!!!
ஆனாலும் நிச்சயம் பெருமாள் அங்கே சென்று விட்டான் (கார்கோடகநல்லூர்) என்பேன்!!!
ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து பரிசுத்தமாக ஆனாலும் மனிதர்களை பார்த்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறைகள் ஆனாலும் நிச்சயம் அதை யான் பெருமாளிடத்தில் முறையிட்டு இன்னும் மாற்றம் அடையச் செய்வேன்!!!
அங்குள்ள அனைவருக்கும் எதையென்று அறிந்து அறிந்து எம்முடைய ஆசிகள்!!!
யானும் லோபா முத்ரா தேவியும் அங்கு எதை என்று அறிந்து அறிந்து அங்கு செல்கின்றோம் நலமாகவே!!! எதை என்று உணர்ந்து உணர்ந்து சென்று தான் தரிசித்து தரிசித்து பல வழிகளிலும் கூட!!....
ஆனாலும் இன்னும் வரும் காலங்களில் அங்கு யார்?? யார்?? இருக்க வேண்டும்? என்பதைக் கூட நிச்சயம் யானே தீர்மானிப்பேன்!!!!
ஏனென்றால் பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து... அங்கு ஏனோ!!!! தானோ!!!! எதையென்று அறிந்து அறிந்து ஆனாலும் நிச்சயமாய் பின் நல்வழியாக்க யானும் எதை என்று எதிர்த்து எதிர்த்து லோபாமுத்ராவும் நிச்சயம் உணவு வந்து நிச்சயமாய் பின் ஏந்தி பின் நிச்சயம் உட்கொண்டோம்!!!!
நலமாகவே அதனால் ஒவ்வொருவரையும் பார்த்தோம்!!!! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறை ஆனாலும் நிச்சயம் அதையெல்லாம் நிச்சயம் செய்வேன் வரும் காலங்களில்!!!!!
ஆனாலும் பின் எதனையும் என்றும் கூட இன்னும் ஆண்டுகள் செல்லச் செல்ல இன்னும் அங்கு( கார்கோடகநல்லூர்) யான் மாற்றம் அடையச் செய்வேன்!!! சொல்லிவிட்டேன்!!!
இன்னும் எதையென்று அறிந்து அறிந்து எப்படி எல்லாம் பல மனிதர்களுக்கு வரும் காலங்களில் நோய்களும் எதை என்று அறிந்து அறிந்து பின் கஷ்டங்கள் வரும்!!! ஆனாலும் நிச்சயம் பெருமாளிடத்தில் யான் முறையிட்டு விட்டேன்!!!!
பெருமானே!!! எவை என்று அறிந்து அறிந்து இப்படி எல்லாம் எதை என்று எவற்றில் இருந்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் யான் சொன்னேன்!!!! பெருமானிடத்தில்!!!
ஆனாலும் பெருமானோ!!! எதை என்று அறிந்து அறிந்து நிச்சயம்!!...
அகத்திய மாமுனிவரே!!!! வரும் காலங்களில் கூட எப்படி செய்ய வேண்டும்!? எதனை நிமித்தம் காட்டி காட்டி எதனை எல்லாம் எதை பறித்து பறித்து எதனை உணர்ந்து உணர்ந்து செய்ய வேண்டும் என்பதை எல்லாம் யான் பின் யானே ஏற்படுத்தி விடுகின்றேன்!!
அதனால் உன் இஷ்டத்திற்கும் எதை என்று அறிந்து அறிந்து நீயே ஏற்படுத்துவாய் என்று கூட!!.....
அதனால் பல வழிகளிலும் கூட பின் ஆண்டுகள் பெருக பெருக இன்னும் எதையென்று அறியாமலே இன்னும் மிக்க அங்கு சந்தோஷங்கள் நிகழுமப்பா!!!
ஏனென்றால் எதை என்று இப்பொழுது கூட பின் இதற்கு முன்பே கூட பின் மன வருத்தங்களோடு எதை எதை என்று கூற!!!..... அப்படி செய்தாலும் பின் எதை என்று அறியாமலே ஆசீர்வாதங்கள் கிட்டாது!!!!
ஆனாலும் பின் யானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!!!!
ஆனால் பின் """"""""""ஒரு எல்லைக்கு தான் !!!! பார்ப்பேன்"""""""........ அதை தன் எதை என்று அறிந்து அறிந்து!!!..... அதற்கும் மேலே சென்று விட்டால்??!!!!! என்னுடைய ஏற்பாடுகள் பின் பின் வேறு மாதிரியாக காணப்படும்!!!........
இதுதான் என்னுடைய தீர்ப்பே!!!!!......
இதனால் நிச்சயம் வரும் காலங்களில் எப்படி செய்ய வேண்டுமோ!!!! அப்படியெல்லாம் யான் செய்கின்றேன்!!!! நலமாகவே!! நலமாகவே!!
இன்னும் எதையென்று அறிந்து அறிந்து சந்தோஷங்கள் யான் அங்கேயே பின் அமர்ந்து அமர்ந்து எதை என்று அறியாத அளவிற்கும் கூட...
என்னுடைய பக்தர்களுக்கும் ஆசிர்வாதங்கள் தருகின்றேன்!!!!
ஆனாலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?! என்பதையெல்லாம் முன்(முன்னதாகவே) எதை என்று அறிந்து அறிந்து யான் சொல்லிவிட்டேன்!!!!
அவை போலவே நடந்து விட்டால் நிச்சயம் பின் ஒரு குறையும் வராது!!!!
ஆனாலும் ஒன்றை சொல்கின்றேன் பின் பெருமானுக்கு உகந்ததாக பச்சை கற்பூரம் சரியாகவே இதை தன் கையில் வைத்துக்கொண்டு அதாவது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பெருமான் எதை என்று அறிந்து அறிந்து பின், பின் பெருமாளடத்தில் கேட்டாலே!!! நிச்சயம் உயர்வுகள் உறுதியாக செயல்படும்!!!!
ஆனாலும் இதற்கும் சம்பந்தமான விடுவார்களா எதை என்று அறிந்து அறிந்து அதனால் பின் உயர்வான பச்சை கற்பூரத்தையும் பின் நல்விதமாக சிறிதளவு கிராம்பையும் எதை என்று பின் துளசியையும் பின் உள்ளங்கையில் வைத்து பின் நல்விதமாக பெருமாளை வேண்டி கொண்டு அதாவது பெருமாள் எதிரில் நிற்க வேண்டும்... பின் எதை என்று அறிந்து அறிந்து பின் உள்ளங்கையில் எதை என்று அறிந்து அதனை பின் வேண்டிக் கொண்டு நல்விதமாகவே பெருமானே பெருமானே என்று!!!!
(பெருமாள் / பெருமான் பொருள் ஒன்று என்பதை உணர்க)
கொடு!!!! கொடு!!!! எதையென்று அறிந்து அறிந்து.... சரியாகவே பின் இவைதன் பின் பெருமானே!! பெருமானே!! என்றிருந்தால் அவன் நிச்சயம் நம்மிடத்தில் வருவான்!!!!!
ஏனென்றால் அவந்தனுக்கு பச்சை கற்பூரம் என்பது பின் உயர்வானது அப்பொழுது நிதானித்து எதை என்று அறிந்து சிறிதளவு பின் வாயில் இட்டு மென்று தின்று வந்தாலே அவன் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைத்துவிடும்!!! இது எல்லோருக்கும் சமமானது!!!!
ஆனாலும் இதையென்று அறியஅறிய இதனால்தான் இங்கும் எதை என்று கூற அங்கே பெருமான் இருப்பான் அதாவது திருமலையில் ஆனால் பின் பச்சைக் கற்பூரத்தை பின் உள்ளங்கையில் வைத்து பின் அவனிடத்தில் அதாவது பின் 50 அடி தூரத்தில் கூட நின்றாலும் பெருமான் ஆசீர்வாதங்கள் பரிபூரணம்!!!!( திருமலை திருப்பதியில் பெருமாள் தரிசனம் செய்யும் பொழுது)
ஆனாலும் இதையென்று அறிந்து அறிந்து இப்பொழுதெல்லாம் எங்கு எதையென்று அறிந்து விட்டுவிடுவதில்லை!!! ஆனாலும் இதை பெரியோர்கள் நன்கு அறிந்திருந்தனர்!!!..... சொல்லிவிட்டேன்!!!
ஆனாலும் எதை எதை என்று உணர்ந்து உணர்ந்து இங்கிருந்து எதை நேர்க்கோடாக கண்டாலும் எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் பெருமானும்!!!
கொங்கணரே!!!!!(கொங்கணவ சித்தர்) பின் எதையென்று எவற்றையென்று.... அகத்தியன் உடைய பக்தர்கள் பல பல வழிகளில் கூட பின் ஓர் திருத்தலத்திற்கு அதாவது தற்போது கோடகநல்லூர் என்றே பின் அழைத்து அழைத்து ஆனாலும் அங்கு செல்க!!!!!
ஒவ்வொரு குறையையும் நீக்க வேண்டும் ஆனாலும் மனிதனிடத்தில் தன் தன்மைகள் எப்படி இருப்பது என்பதை மூன்றாவது கண்ணில் பார்த்து அதை அனைவருக்கும் கொடு என்று நிச்சயமாக பெருமான் எதை என்று கொங்கணவனிடத்தில் கூட!!!. கூறிவிட்டான்!!
நிச்சயம் கொங்கணவனும் அங்கே வந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்கின்றான்.... அதனால் நலமாகவே ஏற்றங்கள் உண்டு!!!
பின் எண்ணம் போல் வாழ்க்கை!! என்கின்றார்களே !!! அதனால் ஒவ்வொருவர் எண்ணத்தையும் பார்த்துக் கொண்டே கொங்கணன்!!! எதையென்று அறிந்து அறிந்து!!!
அதனால் நிச்சயம் பின் ஆஞ்சநேயனும் அங்கே( கார்கோடகநல்லூர்) வலம் வந்து கொண்டே இருக்கின்றான்!!!! ஒவ்வொரு நிலைமையும் ஒவ்வொருவர் நிலைமையும் பார்த்து பார்த்து அங்குள்ள அனைவருக்கும் எதை என்று அறிந்து சில மனிதர்களுக்கும் பின் சனி பகவானால் பல தொல்லைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது ஆனாலும் அவந்தன் மனதை ஆராய்ந்து நிச்சயம் அனுமானும் பல வழிகளில் கூட பின் அனைத்தையும் மாற்றமடைய செய்வான்!! எதை என்று அறிந்து அறிந்து!!!
இதனால் நிச்சயம் பின் காவேரி தன்னில் நீராடும்(துலா ஸ்நானம்) பொழுதும் எவை என்று அறிந்து அறிந்து இன்னும் சொல்கின்றேன்!!!! சிறிதளவு பின் நல்விதமாகவே பின் பச்சை கற்பூரத்தையும் இட்டு இட்டு நல்விதமாகவே நீராடி வந்தாலே நிச்சயம் வெற்றிகள் உண்டு!!!
ஆனாலும் ஒன்றை மட்டும் சொல்கின்றேன் ""பச்சை கற்பூரம் !!! தூய பச்சை கற்பூரம்!!! நிச்சயம் பெருமானுக்கு பிடித்ததாகும்!!! அதை எங்கு உள்ளதோ அங்கு நிச்சயம் பின் அதிக அளவு பின் நல் சக்திகள் ஈர்க்கும் என்பேன்!!
அதனால் என்னுடைய பக்தர்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் எப்பொழுதும் கூட நிச்சயமாய் பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து அவ் பச்சை கற்பூரத்தை எப்பொழுதும் தன்னிடத்தில் வைத்துக் கொண்டாலே போதுமானது!!!!
உயர்வான எண்ணங்களும் மாறும் மாறும் நிச்சயம் வரும் வரும் காலங்களில் என்னென்ன நோய்கள் ஏற்படப் போகின்றது என்பதை எல்லாம் யான் அறிவேன் எப்படி எல்லாம் இவ்வுலகம் அழியப் போகின்றது என்பதைக் கூட யான் அறிவேன்!!!
ஆனால் நிச்சயம் என் பக்தர்களை எப்படி எல்லாம் காக்க வேண்டும் என்பதையெல்லாம் நிச்சயம் பொதுவாகவே சொல்லிக் கொண்டே வருகின்றேன்!!! அதனால் அப்படியே செய்தாலே நலமாகும்!! நலமாகும்!!
நிச்சயம் எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் இன்னும் ஞானங்கள் ஏற்படும் இதனால் நிச்சயம் பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து இன்னும் இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க இன்னும் மாற்றம் அடையச் செய்வேன்!!!
நலம் !! நலம்!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
நம் குருநாதர் அகத்திய பெருமாள் பச்சை கற்பூரத்தை பற்றி அதன் மகத்துவத்தைப் பற்றி தன்னுடைய வாக்கில் அடிக்கடி கூறிக் கொண்டே வருகின்றார்!!!
சித்தன் அருள் 1066 ல் அருப்புக்கோட்டை மவுன ரெட்டி குரு சித்தர் ஜீவசமாதி வாக்கின்போது கூட பச்சைக் கற்பூரத்தை உட்கொண்டு வந்தால் பெருமாளின் அனுக்கிரகம் கிட்டும் என்று கூறியிருந்தார்!!!
நம்முடைய பாலராமபுரத்தில் கோயில் சேவையில் கூட பச்சை கற்பூரத்தை பயன்படுத்துக என்று சூட்சமமாக உத்தரவுகள் கொடுத்திருந்தார்!!!
பல அகத்தியர் அடியவர்கள் பலரும் பச்சைக் கற்பூரத்தை வாங்கி பாலராமபுரம் அனுப்பி வைத்திருந்தனர்
இதில் அடியவர்களுக்கு விளக்கமாக ஒரு தகவல்களை தெரிவிக்கின்றோம் இதனைப் பற்றி குருநாதர் உரைத்ததையும் தெரிவிக்கின்றோம்
பெரும்பாலும் கோவில் வாசலில் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கற்பூரம் என விற்கப்படும் கற்பூரம் ரசாயன கலவை சூடம் என்றும் இதனை கூறுவார்கள்
அடுத்து பச்சைக் கற்பூரம் எனப்படும் கற்பூரம் சில உணவு பண்டங்களிலும் கோயில்களிலும் பயன்படுத்துவார்கள்
அந்த பச்சைக் கற்பூரமானது விலை அதிகம் அதாவது கிலோ 2000 ரூபாயிலிருந்து 2500 ரூபாய் வரை விற்கப்படுகின்றது இது எப்படி எடுக்கப்படுகின்றது என்றால் கற்பூரம் மரங்கள் அதாவது பைன் ட்ரீ இதிலிருந்து எடுக்கப்படும் தைலத்தை இந்த கற்பூர மரத்தில் இருந்து எடுக்கும் தைலம் உண்மையானது தூய்மையானது ஆனால் அதை சுண்ணாம்பு கலந்து இயற்கையான முறையில் பதங்கமாக்குதல் முறைப்படி செய்ய வேண்டும் ஆனால் பச்சைக் கற்பூரம் செய்யும் தொழில் செய்பவர்கள் பச்சை கற்பூர தைலத்தை எடுத்து அதனுடன் சிறிதளவு ரசாயனம் சேர்த்து அதை விற்பனை செய்கின்றனர்!! அதாவது பாதி அளவு இயற்கையானதும் பாதி அளவு செயற்கையானதும் கலந்திருக்கும் இதில்
அடியவர்கள் பச்சைக் கற்பூரம் குறித்து குருநாதர் அகத்திய பெருமாள் இடம் கேட்ட பொழுது அவர் தந்த வாக்குகள்
அப்பனே இதை இதை என்று அறிய அப்பனே எவை என்று கூற அப்பனே இப்படித்தான் அனைவரும் செய்கின்றார்கள்!!
ஆனால் எங்களுக்கு அன்போடு செய்யும்பொழுது அதை யான் மாற்றி விடுகின்றேன் கவலைகள் இல்லை!!!
குருவே பச்சைக் கற்பூரத்தை உட்கொள்ளுதல் வேண்டும் என்று கூறி இருந்தீர்கள் உண்மையான பச்சை கற்பூரம் இயற்கையான பச்சை கற்பூரம் எங்கு இருக்கின்றது எங்கு கிடைக்கும்???
அப்பனே இதை இதை என்று அறிய அப்பனே மகாராஷ்டிராவில் அதாவது ஒரு முதியவனிடத்தில் இருக்கின்றது அப்பனே அதை நீங்களே கண்டுபிடித்து சென்றால்தான் அதன் அருமை புரியும்!!!!
மகாராஷ்டிராவில் எந்த திசையில் அதாவது எப்பகுதியில் இருக்கின்றார் என்று கேட்ட பொழுது நாசிக்கிலிருந்து மேற்கு பகுதியில் என்று குருநாதர் வாக்குகள் உரைத்திருந்தார்.
குருநாதர் வாக்கில் உரைத்த அந்த முதியவர் எங்கு இருக்கின்றார் என்பதை அகத்தியர் அடியவர்கள் அவரை விசாரித்து வருகின்றார்கள் நாம் அனைவரும் பிரார்த்திப்போம் அந்த முதியோரிடம் இருந்து உண்மையான பச்சை கற்பூரம் கிடைக்க வேண்டும் என்று நாம் அனைவரும் குருநாதரிடம் வேண்டுகோள் வைத்து பிரார்த்திப்போம்
பச்சைக் கற்பூரம் பூசையிலும் சரி உட்கொள்ளுதலும் சரி குருநாதர் கூறியபடி பக்தர்கள் அனைவரும் கடைப்பிடிப்போம் உண்மையான பச்சை கற்பூரம் இயற்கையான முறையில் தயாரித்தால் அதனை பற்றி தகவல்களை பாலராமபுரத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் நன்றி வணக்கம்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்...............தொடரும்!
பச்சை கற்பூரம் 2 விதமாக தயாரித்து விற்பனைக்கு வருகிறது. 1. கற்பூரம் மரப்பட்டை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி நீரீல் ஊற வைத்து பின் காய்ச்சும் போது மரப்பட்டையில் இருந்து கற்பூரம் பிரிந்து நீரீல் மேல் மிதக்கும். பின் இதனை குளிர வைக்கும் போது கட்டியாகி கற்பூரம் வரும். 2. Turpentine oil இருந்து synthesis பிரித்து chemical முறையில் எடுப்பது. அகத்தியர் அடியவர்கள் இதனை பார்த்து வாங்கவும். யாருக்காவது தூய்மையான பச்சை கற்பூரம் இயற்கையாக தயாரித்தது தேவை என்றால் 9629496486 what's app செய்து பெற்றுக் கொள்ளவும்.
ReplyDeletedo you do distillation process at your own?there is very very less difference in original green camphor and that of made from terpentine,camphene,pine etc.Only the manufacturer knows the difference otherwise they both are identical and for this reason hard to believe sellers like you.
Deleteஇது சித்தனருள் வலைதளம், நீங்கள் இதை வியாபார தளமாக பயன்படுத்துகிறீர்கள், இது மிகவும் தவறான செயல். ஜீவநாடியில், குருநாதரின் அறிவுரையை கேட்டு அதன்படி நடந்துகொள்ளுங்கள்.
Deleteஅகத்தீசாய நம 🙏🙇♂️
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteகற்பூரம் என்பதும் மரப்பட்டை காய்ச்சி எடுப்பது தான். கடினமான தொழில் தான்.ஏன் என்றால் கற்பூரம் தொடர்ந்து சுவாசிக்க நுரையீரலை பாதித்து மூக்கில் இருந்து ரத்தம் வரும். ஆனால் இறை சக்தி நேரடியாக இறங்கி வருவது கற்பூரத்தில் தான். For example நீங்கள் ஒரு லட்சுமி பூஜை செய்கிறீர்கள் என்றால் பூஜை நிறைவின் போது கற்பூர ஆரத்தி காட்டி பூஜை நிறைவு செய்வோம். அந்த ஆரத்தியில் லெட்சுமி இறங்கி நம்மை ஆசிர்வதிப்பார். இதை எப்படி உணர்ந்து கொள்ள முடியும் என்றால் கற்பூரம் ஆரத்தி காட்டும் போது தீ ஆனது உயரமாக படர்ந்து இயல்பு நிலையை விட அதிகமாக எரியும் அப்போது photo எடுத்து பார்த்தால் லட்சுமி உருவம் or லட்சுமி வாகனம் அதில் நன்றாக தெரியும் . இது உண்மை
ReplyDeleteதற்போது கற்பூரம் (HEXAMINER chemical) கலந்து தயாரித்ததா இல்லை வெறும் கற்பூரம் தானா என்று பார்த்து வாங்கவும். Hexaminer powder எடுத்து smell பண்ணி பார்த்தால் பிணவாடை அடிக்கும் . கற்பூரத்தில் கலக்கும் போது தயாரித்தவரை தவிர வேறு யாரும் கண்டு பிடிக்க முடியாது... நாம் தான் பார்த்து பூஜை பொருட்கள் வாங்கி உபயோகப்படுத்த வேண்டும்.
தூய்மையான கற்பூரம் மற்றும் பச்சை கற்பூரம் தேவை என்றால் 9629496486 what's app பண்ணுங்கள்
Whats the gurantee whether you have organic green camphor which has made from plant extracts of sinnamomum camphora and not other tress like pine and its associated species?Just prove the originality and then play your marketing gimmicks here.Or otherwise render the sources of your purchase and other authentic data regarding green camphor.
DeleteMr.vivek
DeleteThanks for your reply.
Just to inform you that I'm not doing any marketing gimmicks and doesnt require too as I'm a professor in pharmacy college. If you want to know the qenuinety of the product, you can come and check in my home itself. Whatever products I'm doing are 100% genuine as most of our members are also purchasing from me. As my subject is of herbal, I know how and what to prepare from herbs. This is not my regular business, only against customers requirement I'm preparing for them.
So, without knowing anyone dont publish harsh comments.
This comment has been removed by the author.
Deleteவணக்கம் இது ஒன்றும் வியாபாரம் செய்யும் தளம் அல்ல குருநாதன் அகத்தியரின் வாக்குகளை உணரக்கூடிய தலம் இது இதில் உங்கள் வியாபாரத்தை காட்ட முயற்சி எடுக்காதீர்கள் உங்களிடம் உண்மையான பச்சை கற்பூரம் தயாரிக்கிறார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் நீங்கள் உண்மையாக தயாரிக்கிறீர்கள் என்றால் அகத்தியர் உங்களைத்தான் கூறி இருப்பார் உங்களுடைய வியாபாரத்தை வெளி ஆட்களிடம் வைத்துக் கொள்ளுங்கள் இங்கு இருக்கும் அகத்தியர் அடியவர்களுக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்
Deleteபச்சைக் கற்பூரத்தை உண்மையாக எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை அகத்தியரிடம் கேட்டுவிட்டு அதன்படி செய்து வியாபாரம் செய்யுங்கள் நீங்கள் எந்த முறைப்படி தயாரிக்கிறீர்கள் உங்களிடம் கற்பூரம் மரம் உள்ளதா எதுவுமே தெரியாமல் என்னிடம் உண்மையான பச்சை கற்பூரம் இருக்கின்றது என்று நீங்கள் உங்களுடைய பொருளை விளம்பரப்படுத்துகிறீர்கள் இது தவறானது அகத்தியர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
Om Agastheesaya Namah
First of Siththan Arul is a purely non commercial spiritual blog (run by order of agthiyaar and sidhdhaars) and not mean to use for any marketing activities.
Delete1.Maharshi clearly mentioned about specific person he is only making pure kapoor(chanpoor) and finding that person is a task given by maharshi.
2.If you are authorized person agthiyaar must have already mentioned in jeev naadi.
3.If you are not doing these for commercial purpose you must distribute green chanoor to temples and NGO's for making medicine.
4.You must ask agthiyar(appa) in jeev naadi wheather your champoor is pure.
Dear sister,
DeleteI myself is pharma graduate and has done research and now in business.Being so,i have taken enough efforts to search for pachchai karpooram.In the name of borneol and iso borneol,almost all companies are trading chemically pure camphor and not pachchai karpooram.Some companies are making pure camphor with excellent aroma and physical properties from plant extracts like pine and other identical trees which are available as industrial products in international market.But there are no traces that anyone is making it from sinnamomum camphora tree in india.Some chinese companies are doing excellent job providing camphor from camphor tree as they have done cultivation of camphor trees,sinnamomum camphora/camphor laurel.
This camphor is very costly and with this reason,we have only chemical caphor in our hands as industry in india is making it from chemicals like camphene,terpentine etc.
now,come to your point,you said you prepare this purely.
Please allow all of us to know which method and what ingredients are being used for camphor at your end.There is no harm sharing the information with ample of evedences,photos etc here.If it is at all satisfactory,we must buy from you.
The extract essential oil from camphor trees leaves and bark is not that easy to do it at home or even from small scale unit as it involves various procedures and accuracy.
Prove your purity statements with scientific ways and evidences.Thank you.
ஓம் அகத்தீசாய நமக நல்ல தகவலை குருநாதர் உரைத்துள்ளார் இறைவனுக்கு அன்போடு சாத்துவதற்கும் பக்தர்கள் உட்கொள்ளுவதற்கும் பச்சை கற்பூரம் கிடைக்க அந்த திருமலை வாசனும் நமது குருநாதர் அகத்திய பெருமானும் வழிகாட்டி உதவிட அன்போடு வேண்டுகிறேன்
ReplyDeleteஇங்கு உள்ளவரிடம் உண்மையான பச்சை கற்பூரம் இருக்கின்றது என்றால் உண்மையாக பச்சை கற்பூரம் முறைப்படி தயாரிக்கிறார்கள் என்றால் குருநாதர் அகத்தியர் பெருமான் அந்த கேள்விக்கு இங்கேயே பச்சைக் கற்பூரம் கிடைக்கின்றது என்று சொல்லி இருப்பார் அவர் ஏன் மகாராஷ்டிராவில் ஒரு முதியவரிடம் இருக்கின்றது என்று கூறி இருக்கின்றார் அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் தன்னிடம் இருப்பது தான் தயாரிப்பது உண்மையான பச்சை கற்பூரமா என்றே தெரியாமல் வியாபார நோக்கத்திற்காக பதிவுகள் யாரும் இட வேண்டாம் குருநாதர் அகத்தியரிடம் தான் தயாரிப்பது உண்மையான பச்சை கற்பூரமா அல்லது எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை வாக்குகளாக கேட்டுவிட்டு அதன்படி உண்மையாக பச்சை கற்பூரத்தை குருநாதர் சொல்லும் படி செய்துவிட்டு அதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்
ReplyDeleteகுருநாதர் அகத்திய பெருமானிடம் ஜீவநாடியில் வாக்கு கேட்டுவிட்டு அதன்படி தயாரித்து வழங்கலாம் 100% நீங்கள் உண்மையாக தயாரித்தால் குருநாதர் உங்களையே பரிந்துரை செய்திருப்பார் அல்லவா அவர் ஏன் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு முதியவனை தேடிச் செல்லுங்கள் என்று கூறினார் அதனால் நீங்கள் முதலில் குருநாதர் இடம் வாக்குகளில் தெளிவு பெற்று பச்சை கற்பூரத்தை அனைவருக்கும் வழங்குங்கள் வியாபாரம் செய்யுங்கள்
ReplyDeleteஅகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம் குருநாதர் ஒரே ஒரு நபரிடம் தான் பச்சைக் கற்பூரம் பரிபூரணமான உண்மை தன்மையில் உள்ளது அதனை இனிமேல் உரைப்பேன் என்று உரைத்துள்ளார்கள் ஆனால் இந்த அம்மையார் பச்சை கற்பூரம் குறித்து பதிவு வெளியிட்டு உள்ளார்கள் இது இந்த தளத்தை வியாபார நோக்கத்தில் பயன்படுத்த வேண்டாம் என்பது அடியேனின் விண்ணப்பம்
ReplyDelete