​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 10 November 2022

சித்தன் அருள் - 1213 - அகத்தியர் மைந்தனுக்கே பரீட்ச்சை!


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமானின் அடிபணிந்து அவர் உத்தரவின் பேரில் செயல்படும் போது, பலவித சோதனைகளுக்கும் அந்த ஒருவரை உட்படுத்தி, அவரை புடம் போட செய்வார். இன்ன இடத்திற்கு வா என அவர் உத்தரவிட்டு நாம் சென்றால், அங்கு சோதனைகள் காத்திருக்கும், அனுபவங்கள் கிடைக்கும், அதற்கும் மேலே நாம் உணராமலேயே நிறைய அளவுக்கு நம் கர்மா கரைந்து போகும்.

ஒரு முறை, அகத்தியர் மைந்தன் திரு.ஹனுமந்த தாசன் அவர்களை சந்தித்த பொழுது, அவராகவே பகிர்ந்து கொண்ட ஒரு அனுபவத்தை இங்கு சமர்ப்பிக்கிறேன்.

அவர் தன்வாழ்க்கையை அகத்தியப்பெருமானுக்கு என அர்ப்பணித்தவர். அவர் அளித்த ஜீவநாடி வழி அருள் வாக்குகளை பெற்று, பலரின் வாழ்வில் அருளை கொடுத்தவர். இருப்பினும், தன் கர்மாவை, பல நேரங்களிலும் அனுபவித்தே கழித்தவர். அகத்தியர் கூட இருக்கிறார் என்பதற்காக கர்மசுமையை அவர் தோளில் இறக்கி வைத்ததில்லை. ஆயினும், தனிமை கிடைக்கும் நேரத்தில் எல்லாம் "ஓம் அகத்தீசாய நம" என மனதுள் ஜபம் செய்து அமர்ந்திருப்பார்.

அவருக்கு தெரியாமலேயே ஒரு இறை சந்திப்பு அகத்தியப் பெருமானுடன் நடந்தது. நாடி வாசிப்பவரின் பெயரில் அமர்ந்துள்ள "ஹனுமான்" அகத்தியப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அகத்தியப்பெருமான், ஹனுமந்த தாசனின் கர்மாவை, கோள் நிலைகளின் இருப்புடன் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கர்மாவின்படி, உடனேயே வரும் அந்த நேரத்தில் இறை கோள்களின் உதவியுடன், அவரை சோதிக்க வேண்டும்.

அகத்தியர் மனதில், இறை, எந்த ரூபத்தில் வந்து, எப்படி சோதிக்கப் போகிறது என்கிற எண்ணம். எதை பற்றியும் கவலை கொள்ளாத தகப்பனாக/குருவாக அவர் இருந்தாலும், தன் மைந்தனுக்கு சோதனை காலம் என்கிற பொழுது, அவரும் சற்று விசனப்பட்டார்.

"ஆசீர்வாதங்கள்! என்ன அகத்தியரே? என்ன சிந்தனை? அதென்ன சிறிய கவலை ரேகை உங்கள் மனதில் ஓடுகிறது?" என்ற படி த்யானத்தில் இருந்த அகத்தியப்பெருமானுக்கு எதிரில் வந்தமர்ந்தார், வாயு புத்திரன்.

தியானத்தை கலைத்து கண் விழித்தவர், தன் முன் அனுமனே வந்து அமர்ந்திருப்பதை கண்டு, ஆச்சரியப்பட்டு "வாருங்கள் ராம தாசனே! நமஸ்காரங்கள் பல. அடியேனுக்கு உங்கள் தரிசனம் கிடைக்க என்ன பாக்கியம் செய்தேனோ? ராமர், சீதா, லக்ஷ்மணன் எல்லோரும் நலம் தானே? அடியேனின் நமஸ்காரத்தை அவர்களுக்கு தெரிவித்து விடுங்கள். தாங்கள் அடியேனை தேடி இதுவரை வந்த காரணத்தை அறியலாமா? சிரமபரிகாரத்திற்கு, அடியேன் என்ன செய்ய வேண்டும்?" என்று வினவினார்.

பாருங்கள் நம் குருநாதர் நடந்து கொள்கிற விதத்தை. ராமனுக்கே, குருவின் ஸ்தானத்தில் இருந்து ஆதித்ய ஹ்ருதயத்தை உபதேசித்தவர். அவர் ராம தாசனிடம், அடியேன் என்று கூறிப்பணிந்து நிற்கிறார்.

"சிரம பரிகாரத்திற்கு எதுவும் தேவை இல்லை. ராமர் சேவைக்காக இவ்வழி சென்று கொண்டிருந்தேன். தாங்கள் த்யானத்தில் அமர்ந்திருந்தாலும், மனதுள் ஏதோ ஒரு யோசனையை போட்டு உருட்டிக் கொண்டிருந்தீர்! அகத்தியன் இப்படி இருக்க மாட்டீரே! என்னவாயிற்று இவருக்கு!" என விசாரிக்கலாம் என்று வந்தமர்ந்தேன்" என்றார், அனுமன்.

"அது ஒன்றுமில்லை! தற்போதைய கர்மா, கோள்நிலை படி என் மைந்தன் ஒருவனுக்கு, இறைவனால், சோதனை வைக்கப் பட உள்ளது. அந்த சோதனை என்ன? யார் வரப்போகிறார்கள்? என் மைந்தன் அந்த பரீட்ச்சையில் வெற்றி பெற்று விடுவானா? என யோசித்துக் கொண்டிருந்தேன்! அந்த யோசனையில், தாங்கள் வருவதை கவனிக்க தவறி விட்டேன்! சற்று மன்னித்து, பொறுத்தருள வேண்டும்" என்றார்.

"அது இருக்கட்டும். இறை சோதனைக்குள்ளாக்கப் போவது, என் தரிசனம் பெற்று தன் பெயரை "ஹனுமத் தாசன்" என மாற்றிக் கொண்டவன் தானே. அவன் உன் மைந்தனா? இல்லையே! அவன் பிறந்த உடனேயே ராமனுக்கு தாரை வார்க்கப்பட்டு, ராமஸ்வாமி என திருநாமம் உரைக்கப் பட்டவன் அல்லவா?" என்றாரே பார்க்கலாம்.

அகத்தியப்பெருமானுக்கு, தன் மைந்தனுக்கு இறை வைக்கப் போகிற சோதனையில் தன்னையும் சேர்த்திட, அவரை சுற்றி ஒரு வலை பின்னப்படுவது புரிந்தது.

பின்னணியில் நடப்பது எதுவும் தெரியாமல் அகத்தியர் மைந்தன் எப்போதும் போல் அனைவருக்கும் நாடி வாசிக்கும் வேலையை செய்து கொண்டிருந்தார்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

8 comments:

  1. வணக்கம் ஐய்யா.

    இப்பதிவு வாசித்து, குருநாதருக்கே வந்த மறைமுக சோதனையும், திரு.ஹனுமந்தாசன் ஐய்யா அவர்களுக்கு, என்ன இறை சோதனை வந்தது, அதனை நம் குருநாதர் தனக்கும் வந்த இறை சோதனையாய், எவ்வாறு அருளாசி வழங்கினார் என்பதையும் அறிந்து கொள்ள, மிகவும் ஆவலாயிற்று.

    ஓம் அகத்தீஸாய நம்
    குருவடி சரணம், திருவடி சரணம்🙏🙏🙇🙇

    ReplyDelete
  2. அன்புடன் அகத்தியம் பெருமானுக்கு... அன்புடன் அடியவனின் பனிவான வணக்கங்கள்- சித்தர்களின் தலைமை - சப்தரிஷிகளில் ஒருவர் - ராஜரிஷி- தமிழ் மொழியின் மைந்தன்- அஷ்ட சித்து- அஷ்ட கர்மம்- நவக்கிரகங்களை கட்டுப்படுத்திவைத்திருப்பது - சிவமைந்தன்- திருமாலின் வலதுகரம்- நவரத்தினைமாலை பாடி லலிதாம்பிகையின் பேரருளை பெற்றவர் - வைத்தியம் சாஸ்திரம் - சாஸ்திரம்- சாயுச்சம் - பல கற்பம் உண்டவர் - இன்னும் ஏராளம்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்---- அப்படிப்பட்ட உங்களுக்கே-இறை வலைப்பின்னல் போட்டிருப்பதை அனுமன் மூலம் உணர்கின்றீர்!?!?!?! நாங்கள் கர்ம மானிடபிறப்பு - எங்களை தன்டிப்பதில் அழிப்தில் இறையோடு சித்தபெருமக்களும் கூடினால் எப்படி!?!? அவன் என்ன செய்வான்!?!?எப்படித்தான் வழமுடியும்!?!? ஆகையால் அருள்கூர்ந்து நல்லருள்வாக்கை கூறி மனிதனை கடைத்தேற்றி விடுங்கள். திக்கற்றவனுக்கு தெய்வம்தான் துணை. அவன் நம்பிக்கையை காப்பாற்றி வாழவைத்தால் அவன் ஏன் தவறான வழிக்குச் செல்லுகிறான் ???? ஆன்மீகத்திதை தழைக்கச் செய்யுங்கள் - அவனவன் ஆலயத்தை இடித்து இந்துமதத்தை இழிவாகபேசி ஆன்மீகத்தை அழிக்கமுயலும் ஆத்மாக்களை தன்டியுங்கள் அழியுங்கள். தர்மம் வளர துணையாயிருங்கள்- நாடியை நாடி - நாடிவரும் நல்லாத்மாக்களை - உங்கள் மைந்தன் ஹனுமந்தாசனை மீட்க கவலைகொண்டதுபோல் - எங்களையும் மீட்டு பாதுகாத்து வாழவையுங்கள் - நாங்களும் உங்கள் பிள்ளைகள்தானே!?!?!? இன்னும் எவ்வளவோ.... அன்புடன் ச. சந்தரமூர்த்தி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிட்டது மிகவும் உண்மை ஐய்யா...

      Delete
  3. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமக
    ஐயா விரைவில் அடுத்த அடுத்த பதிவு ஐயா

    ,

    ReplyDelete
  5. ஓம் அகத்தீசாய நமக
    ஐயா விரைவில் அடுத்த அடுத்த பதிவு ஐயா

    ,

    ReplyDelete