​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 26 November 2022

சித்தன் அருள் - 1227 - அகத்தியப் பெருமானின் அருள்வாக்கு - உங்கள் கவனத்திற்கு!


"எம் வாக்குகளை கேட்கிறவன், படிக்கின்றவன், இந்த ஜென்மத்தில், அவைகளின் படி நடக்க கடமைப்பட்டவன். ஏதோ, பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கூறுவதை கேட்டு, வசதிக்கு ஏற்ப மறந்து விடுவது போல், நடந்து கொள்வதும்/வேறு விதமாகவும் வாழ்ந்தால், எம் வாக்குகள் அவனுள் கடனாக மாறும். பின்னர், எத்தனையோ ஜென்மம் எடுத்து ஒன்றிலும் இறை பக்தியோ, சித்தர்களின் ஞானமோ இல்லாமல் திரிந்து, இறைவன் அனுமதி அளித்தால், ஏதேனும் ஒரு ஜென்மத்தில், மறுபடியும் முதலிலிருந்து ஞானத்தை பெறவேண்டும், எம் கடனை தீர்ப்பதற்கு. சித்த ஞானத்தை, அருளச் சொல்வதே இறைவன்தான். இதுதான் சித்த ஞானத்தின் அடிப்படை. அதனால் தான், எந்த ஒருவனது ஜாதகத்திலும், சித்தர் சாபமோ/சித்தர் கடனோ இருந்தால், எந்த ஜோதிடனாலும் கண்டுபிடிக்க முடியாதபடி இறை அமைத்து விடுகிறது. எம் சேய்கள் எப்பொழுதும் இதை மனதில் கொள்ள வேண்டும்."

அகத்தியப்பெருமான்!

சித்தன் அருள்.......... தொடரும்!

6 comments:

  1. அகத்தீசாய நம

    ReplyDelete
  2. உண்மையான பக்தன் இதுபோல் செய்ய மாட்டார்கள்

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. ஐயனே தங்களது அருள் வாக்கை படித்து படித்து படித்து ஜீவகாருண்யத்தை யும் தர்மத்தையும் கடைபிடிக்கிறார்களே இறைவா

    ReplyDelete
  5. என்றென்றும் நலம் நலமே தொடரும்... தொடரட்டும் அய்யனே... பாவப்பட்ட ஜென்மங்களை மன்னித்துவிடுங்கள் அய்யா... சிலபிறப்பே... கடன்... மேலும் அவன் கடனை சுமக்காமல் கையை பிடித்து கூட்டிச்செல்லுங்கள் அய்யனே... அவன் வருவான் தங்களோடு...இவனும்...ஓம் அகத்தீசாய நம..

    ReplyDelete