​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 18 November 2022

சித்தன் அருள் - 1221 - அன்புடன் அகத்தியர் - அடியவனை காத்த அகத்தியப்பெருமான்!



என்னை நம்பியவர்களை அகத்தியன் கைவிட்டதாக சரித்திரம் இல்லை!!!!! இந்த ஒரு வாசகம் அகத்தியர் அடியவர்களுக்கு திரு வாசகம் தான்!!!!

கர்ம வினைகளின் படியோ கோள்களின் சாராம்சத்தின் படியோ மலை போல வரும் துன்பங்கள் கூட அகத்தியன் பெயரைச் சொன்னால் பனி போல விலகி ஓடும் இது நிதர்சனமான உண்மை!!!!

ஸ்ரீராமன், ஸ்ரீ கிருஷ்ணன், சபரிநாதன் ஐயப்பன் முருகன் முதலான இறை மனித வடிவம் எடுத்து வரும் பொழுது உபதேசங்கள் செய்து ஒவ்வொரு சூழ்நிலையிலும் உடன் இருந்து வழிநடத்தியவர் நம் குருநாதர் அகத்திய பெருமான்!!!! 

சித்தர்களுக்கெல்லாம் தலைமை சித்தனாய் இருந்து கொண்டு வழிகாட்டியும் சப்தரிஷிகளுக்கும் சர்வ நாயகனாய் இருந்து சகலமும் செய்து கொடுத்தும்!!!

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முதல்வனாக இருந்து முனைப்பாக இருந்து வழிநடத்தி சென்றும்

புத்தன்!! இயேசு!! முகமது நபி!! வள்ளலார்!! பட்டினத்தார்!! ஆதிசங்கரர்!! பாபா மஸ்தான்  சாய்பு!! என மனித குலத்திற்காக இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கும்

கரிகால் சோழன்!!! ராஜராஜ சோழன்!!! ராஜேந்திர சோழன்!!! பாண்டியன் நெடுஞ்செழியன்!! மகேந்திர வர்ம பல்லவன்!! விக்ரமாதித்தன்!! சிவாஜி!! போன்ற மன்னாதி மன்னர்களுக்கும் நல் வழிகாட்டியாக இருந்தும். .... இந்த பிரபஞ்சத்தில் நவ கோள்களையும் அண்ட சராசரங்களையும் யுக  யுகங்களாக!!! தன் கண்ணசைவில் காத்து ரக்ஷித்து வரும் நம் குருநாதர் அகத்திய பெருமான்... 

தன்னை வணங்கிக் கொண்டு தன்னையே நம்பி வரும் மனிதர்கள் நம் மீதும் பெருங்கருணை இருக்கின்றது!!!! அப்பனே!!! அம்மையே!!! என்று அன்பாக அழைத்துக் கொண்டு கருணை கடலாக வாழும் வழிமுறைகளை காட்டிக் கொண்டு நமக்கு ஒரு துன்பம் என்றால் உடனே வந்து உடனிருந்து காத்தருளும் நம் அகத்தியரின் கருணை சம்பவங்கள் ஏராளம்!! ஏராளம்!!!

அதில் ஒரு சம்பவத்தை சமீபத்தில் நடந்த ஒரு கருணை நிகழ்வை இப்பொழுது பார்ப்போம்!!!!

தன் பக்தன் ஒருவனுக்கு வந்த பெரும் கண்டத்தினை அடியோடு அழித்து காப்பாற்றிய குருநாதர்  அகத்திய பெருமானின் பாசத்தினை பற்றி இப்பொழுது காண்போம்!!!!!

13/11/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகத்திய ஜீவநாடி வாசிக்கும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அனுதினமும் செய்யும் பூஜை அனுஷ்டானங்களை செய்துவிட்டு சுவடியை பிரிக்கின்றார்!!!!

அனுதினமும் பூசைகள் செய்துவிட்டு அடியவர்களுக்கு வாக்கு உரைப்பதாகட்டும் அல்லது தினமும் காலையில் குருநாதர் என்ன? கூறுகின்றார் என்று பார்ப்பதை வழக்கமாகவே வைத்திருப்பார் திரு ஜானகிராமன் ஐயா!!!

அதேபோல அன்றும் சுவடியை பிரித்த பொழுது!!!!

மகனே ராமா!!!!! நீ உடனடியாக மகாராஷ்டிரம் செல்ல வேண்டும்!!!! அங்கே என் மைந்தன் ஒருவனுக்கு மிகப்பெரிய கண்டம் காத்திருக்கின்றது!!! இவ் சுவடி தன்னை அவந்தன் இல்லத்திலே வைக்க வேண்டும் மீதி அனைத்தையும் யான் பார்த்துக் கொள்வேன்!!!!

அப்பனே நீ விரைந்து செல்க!!!! என்று உத்தரவிட்டார். 

திரு ஜானகிராமன் அய்யாவும் உடனடியாக நண்பர்களை தொடர்பு கொண்டு சென்னையில் இருந்து புனே செல்லும் விமான பயணச்சீட்டு இருக்கின்றதா என்று ஆலோசித்து விட்டு மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து புனே செல்லும் விமானத்தின்  டிக்கெட் கிடைத்துவிட!!! உடனடியாக புக் செய்து விட்டு சென்னையை நோக்கி கிளம்ப வேண்டும்!!!

வேலூரில் இருந்து சென்னைக்கு செல்லும் பாதை மிகவும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை!!!!

தனது நண்பரும் ஓட்டுனருமான ஐயப்பன் அவரை வாகனத்தை செலுத்தச் சொல்லி விரைவாக கிளம்பினார்!!!! ஜானகிராமன் ஐயா மனம் முழுவதும் எப்படியாவது என்று அந்த பக்தரின் இல்லத்திற்கு சென்று சுவடியை வைத்து விட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது!!! நம்முடன் குரு அகத்தியர் வருகின்றார் கவலைப்படாமல் பதட்டப்படாமல் நீ வண்டியை செலுத்து ஐயப்பா!!!!

அவருடன் வரும்பொழுது போக்குவரத்து நெரிசலை குறித்து நீ கவலைப்படாதே என்று வண்டியை செலுத்தச் சொல்லி அகத்தியரை நினைத்து தியானிக்க தொடங்கினார் ஜானகிராமன் ஐயா!!!!

நிலைமையைப் புரிந்து கொண்ட நண்பர் ஐயப்பன் குருநாதர் மேல் பாரத்தை போட்டு விட்டு வாகனத்தை வேகமாக இயக்கத் தொடங்கினார்!!!!

சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைந்து டிக்கட்டுகள் பரிசோதனை முடிந்து விமானத்தில் ஏறி அமர்ந்தார் ஜானகிராமன் ஐயா!!!

இப்பொழுது குருநாதர் கண்டத்திலிருந்து காப்பாற்ற நினைத்த அந்த அடியவரை பற்றி அறிந்து கொள்வோம்!!!

அந்த அடியவர் மிகச் சிறந்த அகத்தியர் பக்தர் இந்த பிறவிலும் சரி முற்பிறவியிலும் சரி குருநாதரே உயிர் மூச்சு!!!  அவரே என் வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தவர் தற்பொழுதும் வாழ்ந்து வருபவர்!!!! குருநாதர் உபதேசங்களை சொன்ன சொல் தட்டாதவர்!! ஏகப்பட்ட புண்ணிய காரியங்கள் தான தர்மங்கள் மனமுவந்து குருநாதர் அகத்தியரின் பேரில் செய்து வருபவர்!!! பிறந்தது மராட்டிய இனத்தில் என்றாலும் அந்த அடியவருக்கு தமிழ்நாடு, தமிழ் என்றால் உயிர் என்னுடைய உடல் மட்டும்தான் மகாராஷ்டிராவில் என்னுடைய மனம் முழுவதும் தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள் குறிப்பாக பொதிகை மலை பாலராமபுரம் திருவண்ணாமலை சதுரகிரி மதுரை மீனாட்சி கோட்டம் திருச்செந்தூர் பழனி என என குருநாதர் வாசம் புரியும் இடங்கள் என்றால் அவருக்கு அலாதி பிரியம்!!!!

இந்த அடியவர் தற்போது ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மேலாண்மை ஆலோசனைக் குழுவில் உயர்ந்த இடத்தில் பணிபுரிந்து வருபவர்!!! குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்திடும் ஒவ்வொரு ஆலயங்களுக்கும் இடைவிடாது தொடர்ந்து சென்று கொண்டே இருப்பார்!!!

இவரிடமும் குருநாதர் அகத்திய பெருமானுக்கு தனிப்பெரும் பாசமும் உண்டு!!!! என் மைந்தன் என் மைந்தன் என்று எப்பொழுதும் வாக்குகளில் சிலாகிப்பார்!!!!

அவருடைய பக்தி அகத்தியரின் அன்பு இவற்றை தெரிந்து கொள்ள இரண்டு சிறு சம்பவங்களை இங்கு பார்க்கலாம்!!

அந்த அகத்திய அடியவர் முற்பிறவியில் அகத்தியனையே நினைத்துக் கொண்டு வாழ்ந்து வருகையில் இறுதி காலம் நெருங்கிய பொழுது நம் குருநாதர் அகத்தியர் பெருமான் தவம் செய்து வாழ்ந்து வந்த ஒரு குகையில் அகத்தீசா அகத்தீசா என்று உச்சரித்துக் கொண்டே தியானம் செய்து கொண்டே குருவை நினைத்து உயிரைத் துறந்தவர்.. உயிரைத் துறந்தவர் என்றால் குருநாதரையே குருநாதர் பெயரே உச்சரித்துக் கொண்டிருந்த பொழுது இயற்கையாக அவர் உயிர் பிரிந்தது!!! இப்படி தன் மீது பாசம் கொண்டு பக்தி கொண்டு!! தன்னையே நினைத்து தன் மைந்தன் தான் இருந்த குகைக்குள் வந்து இப்படி ஒரு பாசத்தை காட்டி விட்டானே!!!! என்று குருநாதரே செய்ய வேண்டியதை நல்லபடியாக செய்து முடித்தேனப்பா!!!! என்று வாக்குகள் தந்திருந்தார்!!!!

சமீபத்தில் கூட ஒருமுறை அந்த அடியவருக்கு குருநாதர் வாக்குகள் உரைத்த பொழுது அப்பொழுது இரவு 9 மணி இருக்கும்!!!

திரு ஜானகிராமன் ஐயா ஜீவநாடி வாசிப்பது வேலூரில் இருந்து கொண்டு!!! அந்த அடியவர் வாக்கினை கேட்டுக் கொண்டிருப்பது மகாராஷ்டிராவில் இருந்து கொண்டு!!! திரு ஜானகிராமன் ஐயா தமிழில் வாக்குகளை படிக்கும் பொழுது அவருக்கு மொழிபெயர்த்து தரும் அடியவர் குஜராத்தில் இருந்து கொண்டு தொடர்பு இணைப்பின் மூலம் வாக்குகளை தந்து கொண்டிருந்த பொழுது!!!!....

அப்பனே நல்லாசிகள்!!!! என் வாக்கினை கேட்டுக்கொண்டே அப்படியே திரும்பிப் பார் !!!!  என்று  குருநாதர் உரைத்திட அந்த அடியவரும் திரும்பி பார்த்தால் அவர் வீட்டிற்கு வெளியே ஒரு பைரவர் நின்று கொண்டு இவர் வீட்டையே பார்த்துக் கொண்டிருக்க!!!

அப்பனே அது யான் தானப்பா!!!! உன்னைக் கண்டு ஆசீர்வதிக்கவே யான் வந்தேனப்பா!!! நல்லாசிகள் நல்லாசிகள் என்று நல்வாக்குகள் தந்தார் அந்த அடியவரும் நெடுஞ்சான் கிடையாக தெருவில் பைரவரை பார்த்துக் கொண்டே தரையில் விழுந்து அழுது கண்ணீர் மல்கி வணங்கினார் எனைக் காண ஓடோடி வந்தாயோ!!!! குருநாதா!!!!! என்ன தவம் செய்தேன் யான்!!!!

என் அப்பனே!!!! அகத்தியா!!!!! என்றெல்லாம் மெய்யுருகிப் போய்விட்டார் அடியவர். 

அந்த அளவுக்கு குருநாதரிடம் தனிப்பெரும் பக்தி அவருக்கு!!!!

இப்படிப்பட்ட அடியவருக்கு  குருநாதர்  ஐந்து மாதங்களுக்கு முன் வாக்கு தந்த பொழுது அப்பனே!!! சில சில கண்டங்கள் வரும் காலங்களில் வரும்!! அதை எல்லாம் யானே சரி செய்து விடுவேன்!!! குறைகள் இல்லை குற்றங்கள் இல்லை கவலைகள் இல்லை அப்பனே என்னையே நம்பிக் கொண்டிருக்கும் என் பக்தர்களை யான் ஒருபோதும் கைவிட மாட்டேன்!!!! கர்மத்தின் படி சில கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தாலும்!!!! அவையெல்லாம் என் மேற்பார்வையிலே நடக்க வைத்து கர்மங்கள் முழுவதையும் அகற்றி நல்படியாக வாழ்வில் மேன்மை செய்து முக்தியையும் அடைய வைப்பேன் அப்பனே!!!

விதியை மாற்றும் வல்லமையும் எந்தனுக்குண்டு!!!! தேவைப்பட்டால் விதியையும் மாற்றுவேன் அந்த பிரம்மனிடமே யான் சென்று முறையிட்டு சண்டையிட்டு என் பக்தர்களுக்காக விதியையும் மாற்றி தருவேன் அப்பனே!!!
யான் கூறுவதை அப்படியே செய்து கொண்டு வருகின்றாய் அப்பனே!!! உயர்ந்த பக்தியை காட்டுகின்றாய் அப்பனே!!! தான தர்மங்கள் நல்படியாக செய்து புண்ணியங்களை சம்பாரித்து கொண்டிருக்கின்றாயப்பனே!!! என்னுடைய ஆசிகள் கடைநாள் வரை உந்தனுக்கு இருக்கும் அப்பனே!!! என்று வாக்குகள் தந்திருந்தார்!!!!!

சிறிது கால தாமதத்துடன் விமானம் புறப்பட்டாலும் இரவில் புனே விமான நிலையம் வந்தடைந்தது விமானம்!!!

புனே விமான நிலையத்திலிருந்து இறங்கிய திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் அந்த அடியவர்களின் வீட்டிற்கு செல்ல தொடங்கினார்!!!

ஒரு அகத்தியர் அடியவருடன் தொடர்பு கொண்டு அந்த அடியவருக்கு தகவல் தெரிவித்து விட!!!!

என்ன ஏது என்று தெரியாமல் எதிர்பாராத ஆச்சரியத்துடன் அந்த அடியவரும் திக்கு முக்காடி குருநாதர் சுவடி நம் வீட்டுக்கு வருகின்றதா என்ன காரணமாக இருக்கும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டு ஜானகிராமன் ஐயாவையும் சுவடியையும் வரவேற்க அவர் தயாராகிக் கொண்டு திரு ஜானகிராமன் ஐயா விமான நிலையத்திலிருந்து தன் வீட்டிற்கு வரும் முகவரியை வாகன ஓட்டுனரிடம் சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னுடைய வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் நிற்கச் சொல்லி தன்னுடைய வாகனத்தை எடுத்துக் கொண்டு போய் அவரை அழைத்து வர திட்டமிட்டு அதன்படி தயாராகி கிளம்பினார்!!!

திரு ஜானகிராமன் ஐயா அவர்களும் காலை உணவு உண்டதோடு சரி அவசர அவசரமாக கிளம்பியதால் வாகன பயணத்தில் கூட இடையில் நிறுத்தி உணவு ஏதும் உட்கொள்ளவில்லை எப்படியாவது அவருடைய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்த காரணத்தினால் உணவைப் பற்றி நினைக்கவே இல்லை!!!! இரவில் விமான நிலையத்திலிருந்து அடியவர் வீட்டிற்கு செல்லும் வழியில் பசி வயிற்றைக் கிள்ளியது அந்த அடியவருக்கும் இந்த தகவலை தெரிவித்து விட அப்பொழுது இரவு மணி 11.... அந்த நேரத்தில் புனே நகரத்தை சுற்றி உள்ள ஊரகப் பகுதியில் ஹோட்டல்கள் 10:00 மணிக்கு எல்லாம் அடைக்கப்பட்டு விடும்!!!

சரியாக அந்த அடியவர் திரு ஜானகிராமன் அய்யாவை சென்று அழைத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு உணவகம் மட்டும் திறந்திருந்தது உடனடியாக அங்கு சென்று என்ன உணவு இருக்கின்றது என்பதை கேட்ட பொழுது!!!!! டால் கிச்சடி எனப்படும் பருப்பு சாதம் மட்டும்தான் இருக்கின்றது என்று உணவகத்தார் தெரிவித்தனர். 

சரி அதையே உண்டு விடுவோம் என்று திரு ஜானகிராமன் ஐயாவிற்கு  உணவை பெற்றுத்தர !!!கடும் களைப்பில் இருந்த காரணத்தினாலும் அசதியினாலும் அதிகமாக உண்ண முடியவில்லை!!!

அந்த அடியவருக்கு அந்த நேரத்தில்  என்ன தோன்றியதோ என்று தெரியவில்லை !!! மீதி இருந்த உணவை பார்சலாக செய்து கொண்டு எடுத்துக்கொண்டு திரு ஜானகிராமன் ஐயாவை அழைத்துக் கொண்டு அந்த உணவகத்தின் முன்புற கதவை கூட அடைத்து விட்டார்கள்!!!

பின்புற கதவின் வழியாக அடியவரும் திரு ஜானகிராமன் அய்யாவும் வெளியே வர !!!

தூரத்தில் ஒரு வயதான முதியவர்  யாசகம் பெற்று  வாழ்பவர் தோற்றத்தில் அங்கு நின்று கொண்டிருக்க!!!!

இந்த நேரத்தில் அந்த முதியவர் பசியில் தானே இருப்பார் நம் கையில் உணவு இருக்கின்றதே!!!! இதை அவருக்கு கொடுப்போம் என்று நினைத்து  அந்த அடியவர் அவர் அருகே சென்று தன்னுடைய காலணிகளை கழட்டி வைத்து ஓம் நமச்சிவாய!!!! ஓம் அகத்தீசாய நமக!!!!! ஐயா எங்களிடம் உணவு இருக்கின்றது நீங்கள் உண்ணுகின்றீர்களா என்று கேட்க அந்த முதியவரும் சரிப்பா!!! கொடு!!!

நான் பசியில் இருக்கின்றேன் நான் உண்டு விடுவேன். என்று மராத்தி மொழியில் பேசி அதை வாங்கிக் கொண்டார்!!!!

அந்த அடியவரும் குருநாதரின் ஜீவநாடி உடன் இருந்த சமயத்தில் நம்மால் இந்த நேரத்திலும் அன்னதானம் செய்ய முடிந்தது என்று மகிழ்வுடன் நினைத்துக்கொண்டு வீட்டிற்கு ஜானகிராமன் ஐயாவை அழைத்துச் சென்று ஜீவநாடி சுவடி பெட்டகத்தை தன்னுடைய வீட்டின் பூஜை அறையில் வைத்து விட்டு திரு ஜானகிராமன் ஐயாவை ஒரு தங்கும் விடுதியில் தனி அறை எடுத்து கொடுத்துவிட்டு நாளை காலை வந்து உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன். அதுவரை வந்த பயண களைப்பு மாற நிம்மதியாக உறங்குங்கள்!!!!

ஏனென்றால் வீட்டில் அந்த அடியவருக்கு ஒரு மிகச் சுட்டியான குழந்தை ஒருவன் இருக்கின்றான்!!

அவந்தனும் குருநாதர் அருளாலும் முருகப்பெருமான் அருளாலும் பிறந்த ஆண் குழந்தை!!! அவனுடைய சுட்டித்தனத்தால் திரு ஜானகிராமன் ஐயா உறக்கம் பாதித்து விடக்கூடாது  என்று நினைத்து  அருகிலேயே ஒரு தங்கும் விடுதியில் ஒரு அறை எடுத்து தந்து கொடுத்து விட்டு சென்று விட்டார்!!! அந்த அடியவரின் மனைவி தற்பொழுது ஏழு மாத கர்ப்பிணி!!!! அடியவரும் அவருடைய மனைவியும் குருநாதரின் சுவடி நம்முடைய வீட்டிற்கு வந்துள்ளது என்று மகிழ்ந்து அதிகாலையிலே!!! பிரம்ம முகூர்த்தத்திலே!!! எழுந்து சுவடிக்கு பூஜை செய்தனர் பூசையின் போதே எங்கிருந்தோ மதியை மயக்கும் சந்தன மணம் அறை முழுவதும் பரவி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது!!!

அடியவரும் புரிந்து கொண்டார் குருநாதர் அருவுருவமாக வந்திருக்கிறார் என்று பெரு மகிழ்ச்சி கொண்டார்!!!!!

காலைப் பொழுதும் நல்படியாக விடிந்து  திரு ஜானகிராமன் ஐயா அவர்களும் அசதி  தீர உறக்கம் முடித்து எழுந்து குளித்துவிட்டு அந்த அடியவர் வீட்டிற்கு சென்றார்!!! சென்று காலை உணவை உண்டு விட்டு குருநாதரை வணங்கி ஜீவ நாடியை பிரித்து வாசிக்க தொடங்கினார்!!!!

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!

நலமாகவே என்னுடைய ஆசீர்வாதங்கள்!!! அதனால் அப்பனே குறைகள் இல்லை யான் அனைத்தையும் பார்த்துக் கொள்வேன் அப்பனே!!! 

எதை எந்நேரத்தில் எப்போது எதை என்று நினைத்து நினைத்து வந்ததோ அவை எல்லாம் யான் நீக்கி நிச்சயமாய் உன் மனதிற்கு ஏற்றவாறு அனைத்தும் செய்வேன் அப்பனே நலமாகவே!!!

அதனால் ஒரு குறையும் கொள்ள வேண்டாம் அப்பனே நலமாகவே நலமாகவே என்னை நம்பியவர்களை கூட நிச்சயம் யான் கைவிடப் போவதுமில்லை அப்பனே!!! இனிமேலும் நல்விதமாகவே!!!!

அப்பனே என்னென்ன தேவையோ அவையெல்லாம் நிச்சயம் கர்மா சேராமல் யான் கொடுப்பேன் அப்பனே நலமாகவே!!! எதை என்று அப்பனே அதன் மூலம் கர்மா சேர்ந்தாலும் நிச்சயம் யான் தடுத்து விடுவேன் அப்பனே!!!!

குறைகள் இல்லை அப்பனே எதை எதை என்று நலமாகவே வெற்றிகள் உண்டு அப்பனே நலமாகவே நலமாகவே அப்பனே எதை என்று அறிய நேற்றைய பொழுதில் கூட நீ உணவு கொடுத்தாய் அப்பனே நலமாகவே!!!! அதையும் நன்றாகவே அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே யான் வாங்கியும் கொண்டேன் அப்பனே அப்பனே இதனால் சில சில வழிகளிலும் கூட கண்டங்கள் எவை என்று அறிந்து அறிந்து அப்பனே நீ கொடுத்ததாயே உணவு!!!!

அப்பனே யான் சரியாகவே கண்டத்தையும் அதன் மூலமே வாங்கிக் கொண்டேன் அப்பனே மாற்றியும் அமைத்து விட்டேன் அப்பனே நலமாகவே அதனால் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே நலமாகவே!!!

அப்பனே நலமாகவே நலமாகவே வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே!!! எதை என்று அறிந்து அப்பனே என்னையே நம்பிக் கொண்டிருக்க நிச்சயம் யான் நல்லதையே செய்வேன் அப்பனே முறைகளாகவே நல்முறைகளாகவே அப்பனே!!!

இன்னும் வெற்றிகள் தான் உந்தனுக்கு உண்டு!!! உண்டு என்பேன் அப்பனே நலமாகவே நலமாகவே அனைத்தும் நலமாகவே செய்கின்றேன் அப்பனே உந்தனுக்கு!!! பிறவிகள் எவை என்று அறிந்து அறிந்து இனி பிறவிகள் கிடையாது என்பேன் அப்பனே...... அதனால் அப்பனே எதை என்று உணர்த்த வேண்டுமோ அப்பனே நல் முறையாகவே யான் அங்கங்கு வந்து  எதையென்று உணர்ந்து உணர்ந்து பின் உரைப்பேன் என்பேன் அப்பனே!!! இதனால் குறைகள் இல்லை குறைகள் இல்லை!!

அப்பனே எதனை என்று நிமித்தம் காட்டி அப்பனே என் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்றென்றால் அங்கேயே வந்து பின் எதை என்று அறிந்து அறிந்து பின் அப்பனே நிற்பேன் அப்பனே!!!! நலமாகவே

அதனால் குறைகள் கொள்ள வேண்டாம் அப்பனே என்னுடைய ஆசீர்வாதங்கள் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இதையென்று உணர்ந்து உணர்ந்து அப்பனே என்று அதிகாலையிலே யான் வந்திட்டு நலமாகவே உன் இல்லத்திற்கு எதையென்று அறிந்து அறிந்து ஆசீர்வாதங்கள் தந்துவிட்டேன் அப்பனே நல் விதமாக அப்பனே எதை என்று அறிந்து அறிந்து பின் கண்டத்தையும் நீக்கி விட்டேன் அப்பனே நலமாகவே அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே நலமாகவே வெற்றிகள் உண்டு அப்பனே!!! இன்னும் வாழ்க்கையில் என்னென்ன சாதிக்க துடித்தாயோ நல்விதமாக அதையும் நிச்சயம் வெற்றி கொள்வாய் அப்பனே நலமாகவே நலமாகவே வெற்றிகள் உண்டு உண்டு!!!!

என்று அன்போடு வாக்குகள் தந்து அடியவரின் கர்ப்பவதியான மனைவிக்கும் நல்ல ஆசிர்வாதங்கள் தந்து பாலாம்பிகையின் மந்திரத்தையும் முருகனின் மந்திரத்தையும் ஜெபித்துக் கொண்டே வா என்று நல்ல ஆசீர்வாதங்கள் தந்தார் நம் குருநாதர் அகத்திய பெருமான்!!!!

அந்த அடியவருக்கு திடீரென்று இரவில் இருந்து இந்த கணம் வரை நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் பிரமிக்க வைத்தது!!!!

திடீரென்று குருநாதர் வந்தது!!! சுவடியை வீட்டில் பூசையில் வைக்கச் சொன்னது!!!! இரவில் அந்த உணவகத்தின் பின்புற வழியாக வந்த பொழுது அங்கே நின்று கொண்டு இருந்த முதியவர் ரூபத்தில் வந்தது குருநாதரா??? அப்பனே!!! அகத்தியா!!!

இந்த அடியவனின் கண்டத்தை நீக்க ஓடோடி வந்து வழியில் வந்து நின்று அந்த கண்டத்தினை நீக்கி அதிகாலையிலும் என் இல்லத்திற்கு வந்து நல் ஆசீர்வாதங்கள் தந்து தற்பொழுது சுவடியில் வந்து எனக்கு வாக்குகள் தந்து எனக்கு அருள் தருகிறீர்களே!!!! கருணை கடலே!!!! கற்பகத் தருவே!!!! கண்கண்ட தெய்வமே!!!! தோன்றா துணையனே!!!!! என்றெல்லாம் மனம் முழுவதும் மகிழ்ச்சியில் நிறைந்தாலும் கண்களில் ஆனந்த கண்ணீரோடு நெக்குருகி ஜீவநாடியை பணிந்து தொட்டு வணங்கி திரு ஜானகிராமன் அய்யாவை கட்டிப்பிடித்துக் கொண்டார்!!!!

திரு ஜானகிராமன் ஐயாவை பொருத்தவரை குருநாதர் என்ன உரைக்கின்றாரோ எப்பொழுது உரைக்கின்றாரோ அதை உடனடியாக செய்து முடித்து விடுவார், குருநாதர் சொன்னவுடன் உடனடியாக அவசர அவசரமாக கிளம்பி வந்து அதுவும் மொழி தெரியாமல் வந்து குருநாதர் சொன்ன கடமையை நிறைவேற்றி கண்டத்திலிருந்து காப்பாற்ற குருநாதர் நடத்திய லீலையில் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக இலக்கை வந்தடைந்த அவரை அகத்தியன் மைந்தனே !!! அன்பு ஜானகிராமன் ஜி தன்யவாத்!! தன்யவாத்!!! உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!!

யானோ ஒரு சாதாரண மனிதன் தான்!!!  என்னால் முடிந்தவரை குருநாதர் மேல் பக்தியை காட்டிக் கொண்டு அவர் கூறும் வழியை கடைப்பிடித்து கொண்டு வருகின்றேன்!!!

என் மீது இரக்கம் காட்டி என்னை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றிய அகத்தியரை என் அப்பனை !!! என் குருநாதனை!!!! எப்படியெல்லாம் நன்றி சொல்லி ஆராதிப்பது என்று தெரியாமல் தடுமாறி நிற்கின்றேன் இதுதான் உண்மை!!!

கருணை  கடலான அகத்தியருக்கு!!! என் அன்பை!!! என் பக்தியை!!! என் கண்ணீரை!!! காணிக்கையாக தருவதை தவிர என்னிடம் வேறொன்றும் இல்லை அகத்தியா!!!! அகத்தியப்பா!!! உன் திருவடிகள் சரணம் சரணம்!!!!! என்று நன்றி நவில்ந்தார்!!

குருநாதர் தன்னுடைய வாக்கில் உரைத்தபடி வெற்றிகள் வந்து குவியும் என்பதற்கிணங்க அடியவர் பணி புரியும் அலுவலகத்தில் இவர் கூறிய ஆலோசனைகள் ப்ராஜெக்ட் சம்பந்தமான விஷயங்கள் நிறுவனத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரும் அங்கீகாரத்தினை இவருக்கு அலுவலகத்தில் கொடுக்க பாராட்டு மழையில் நனைந்து விட்டார் !!!!  அடியவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை!!! நிறுவனத்தின் அடுத்த கட்ட நகர்விற்கான மிகப்பெரிய ப்ரொஜெக்ட்!!  அதில் இவருடைய ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இவரை மேலும் உயர்த்தி விட்டார்கள் குருவே உங்கள் லீலைகளே!!!!  லீலைகள்!!!! என்று பரவசப்பட்டு போய்விட்டார் அடியவர்.

இந்த மகராஷ்டிரா பயணம் ஒரு குருநாதரின் கட்டளைப்படி அவசரநிலை பயணமாக அமைந்தது!!!

குருநாதர் மகாராஷ்டிராவில் வந்து உள்ளதை அறிந்து கொண்ட பல அடியவரும் குருநாதரின் வாக்குகளை கேட்பதற்காக தொடர்பு கொண்ட பொழுது....... 

அப்பனே!!!! எதற்காக யான் வந்தேன் என்பது அறிந்ததே நீங்கள் !!!

யான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!! எந்தனுக்கும் பல வேலைகள் இருக்கின்றது அப்பனே!!! பல உயிர்களை காப்பாற்ற வேண்டியுள்ளது அப்பனே!!!! அனைவரையும யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!!

அவரவர் நிலைமை யான் அறிந்தது தான்!!! இவர்களுக்கு பின் உரைக்கின்றேன் நலமாக நலமாக எம்முடைய ஆசிகள்!!! என்று வாக்குகள் தந்திருந்தார்....

பிறகுதான் புரிந்தது இதே போன்று இன்னும் எத்தனை எத்தனை அடியவர்களை காப்பாற்ற குருநாதர் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று விதவிதமாக லீலைகள் செய்து கொண்டிருக்கின்றார் என்பதை அறிந்து பக்தியில் மனம் பரவசம் அடைந்தது தான் உண்மை!!!!

திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் சில சமயங்கள் தொடர்பு கொண்டால் அவர் போனை எடுப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் அது உண்மை இல்லை!!!

அவர் நமது குருநாதர் கட்டளைப்படி பெரும்பாலும் யாத்திரையில் இருக்கின்றார். குருநாதர் ஆணைப்படி யாத்திரையில் இருக்கும் பொழுது சில சமயம் தொடர்புகள் வைத்துக் கொள்ள முடியாது அதை அடியவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்!!!

அகத்தியரும் அகத்தியன் மைந்தனும் எந்நேரத்தில் எவருக்கு யாருக்கு உரைக்க வேண்டும்? யாரை காப்பாற்ற வேண்டும்? என்பதை எல்லாம் குருநாதர் முடிவு செய்து அதன்படியே ஜானகிராமன் ஐயாவை இயக்குகின்றார்!!!

அவருடைய கட்டளைப்படி குருநாதர் என்ன நினைக்கின்றாரோ அது மட்டும் தான் அங்கு நடக்கும்!!!

அடியவர்கள் வாக்கிற்காக காத்திருப்பது ஒன்றும் தவறில்லை!! சிறிது காலதாமதம் ஆகலாம்!!!

ஆனால் குருநாதரிடம் வேண்டி பிரார்த்தனை செய்து அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்!!! உண்மையான பக்தியும் நல் புண்ணியங்களும் இருந்தால் ஜீவநாடி சுவடி உங்களுடைய வீட்டிற்கு வரும்!!!! உங்களுடைய இல்லத்திற்கு வந்து குருநாதர் வாக்குகள் தந்தருள்வார் இதுதான் உண்மை!!!!!!

அடியவர்கள்  துன்பத்தில் இருப்பதை குருநாதர் அகத்தியர் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்!!

எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும்?? எதை உரைக்க வேண்டும் !? யாருக்கு உரைக்க வேண்டும்?? என்பதை தீர்மானிப்பது நம் குருநாதர் அகத்தியர் மட்டுமே !!!

அதன்படி சரியான நேரத்தில் வாக்குகளும் தருவார்!!!!

அடியவர்களுக்கு தன் பக்தர்களுக்கு ஒரு துன்பம் என்றால் உடனடியாக வந்து நிற்பார் !!!வந்து நிற்பார் !!வந்து நிற்பார்!!!

அதற்கு உதாரணம் தான் அகத்தியர் நடத்திய இந்த திருவிளையாடல்!!!!

நன்றிகள் நமஸ்காரங்கள்!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் ............ தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக
    ஓம் அகத்தீசாய நமக
    ஓம் அகத்தி சாய் நமஹ
    அருமை ஐயா

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நம, குருவே துணை

    ReplyDelete
  3. Mahaguru is with him always he is such blessed soul wholeheartly surrendered to Mahamuni

    ReplyDelete
  4. நமஸ்காரம் ஐய்யா.

    1221 - இன்றைய குருநாதரின் வாக்கு,எனக்காகவே உரைத்தது போல் அமைந்துள்ளது. குருநாதர் திருவடிகளுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும். குருநாதரின் கருணை இந்த அடிநாய்க்கும் பல தருணங்களில் சுவாமி சூட்சமமாக அருள் புரிந்து வருகின்றார். குருநாதர் மீது நாம் கொள்ளும் அன்பும் உண்மையுமே அவரோடு நம்மை பயணிக்க செய்யும்.

    ஓம் ஶ்ரீ லோபமுத்ரா அம்மா உடனமர் அகத்தீஸ் அப்பா திருவடிகள் போற்றி போற்றி
    குரு அடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🙇🙇🙇

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  6. Om sri lopamudra samatha Agasthiyar thruvadi saranam.Ayya intha thogubai vazagiya umoku Kodi namaskaram Ayya.mai chlirthatu ayya

    ReplyDelete