​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 22 November 2022

சித்தன் அருள் - 1224 - அன்புடன் அகத்தியர் - சபரிநாதன் - 3




அய்யப்பனும் அகத்தியரும் அடியவரும் பாகம் 3

இவையென்று நலமாக நலமாக ஆனாலும் ஆனாலும் வயது முதிர்ந்தடைந்து விட்டது அடைந்து விட்டது இவ்வாறு என்பதையும் கூட ஒரு முதியவன் எந்தனுக்கு மனதில் நுழைந்தவாறு இவ்வாறு என்பதைக் கூட பல

பின் மனதில் நினைத்துக் கொண்டாய்!!! பின் ஓர் முதியவன் இவ்வாறு என்பதை கூட பல இவ்வாறு நன்று உள்ளதாய் நல்லதை செய்வேன் என்று சொன்னான்!!!

ஆனாலும் அதை கேட்டிட்டு யானும்...வந்திட்டேன்!!! 

எந்தனுக்கு நன்மைகளை செய்யவில்லை என்று கூட!!! 

யார் அந்த முதியவன் என்று கூட.....

உடனே வந்தேனப்பா!!!!( அகத்தியர்) யான் தான் இங்கு!!!

இவையன்றி கூற அப்பனே இதையென்று அறியாத அளவிற்கு  அறியாத அளவிற்கு உண்மை நிலை மலர்ந்தது!!! இவை என்று கூட!!! 

நீதான் எந்தனுக்கு யான் உதவிகள் செய்கின்றேன் என்று கூறி விட்டாய்!!!

ஆனாலும் உதவிகள் செய்யவில்லை என்று கூற!!

ஆனாலும் எந்தனுக்கும் மிகுந்த கோபங்கள் இவ்வாறு என்பதையும் கூட!!

இவை என்பதை கூட ஆனால்!! நீ எவ்வாறு என்பதையும் கூட .....நண்பா!!!!!! என்று அழைத்தாயா???? என்று யான்(அகத்தியர்) கேட்டேன்!!

யான் அழைக்கவில்லையே!! என்று நீ கூறிவிட்டாய்!!!

ஆனாலும் சரி !!!இவ்வாறு என்பதையும் கூட நீ எப்பொழுது அழைக்கின்றாயோ!!! அப்பொழுது நிச்சயம் வருவான் என்பதை கூட!!

ஆனாலும் இவையன்றி கூற நீயும் கூறிவிட்டாய்!!சரி!!! நீயும் நல்லோருக்கு உதவிகள் செய்வோம் யானும் எவ்வாறு என்பதையும் கூட இனி மேலும் வயதான காலத்தில் ஏதாவது செய்கின்றேன் எவை என்று கூற நீ ஏன் இங்கேயே இருக்கக் கூடாது??? என்று கூறி விட்டாய்!!!! நீயும் என்னுடன் இருந்து விடு !!இருவரும் நல்லது செய்வோம் என்று நீ கூறிவிட்டாய்!!!!

இவையன்றி கூற ஆனாலும் சிறிது யானே யோசித்தேன்!!! இவையன்றி கூற ஆனாலும் இதனையென்றும் கூற... சரி!!!! இருக்கின்றேன் என்று கூறிவிட்டேன்!!!!

இவையன்றி கூற இப்பொழுது எவை என்று கூற புரிகின்றதா??? அப்பனே!!!!!

உன் சொப்பனத்திலும் இனி மேலும் காட்டுவேன்!!!

இவையன்றி கூற ஆனாலும் இவையன்றி கூறும் பொழுது கூட ஆனாலும் பின் கடைசியில் ஓர் முறை பார்ப்போமே என்று கூட!!!  """ நண்பா!!!!! என்று கூறிவிட்டாய்!!!!

ஆனாலும் வந்து விட்டான் சபரிநாதன்!!!!!

இவையன்றி கூற ஆனாலும் பின் உன்னை காணாமல் எவ்வாறு என்பதையும் கூட... பின் கண்ணீர் மல்கியது....இவையன்றி கூட சபரியை கட்டி அணைத்து கொண்டாய்!!! 

ஆனாலும் யானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் உண்மை நிலையை உந்தனுக்கு சொல்லிவிட்டேன் இவையென்று கூட!!!!!

இவந்தானப்பா!!! ....எவையன்றி கூற...... """"""" கலியுக வரதன்!!!!! ஐயப்பன் என்று""""......!!!!!!! கூறிவிட்டேன்!!!!

இவன்தான் அப்பனே அலைந்து கொண்டிருப்பதை கூட!!! 

ஆனாலும் நீ கூறிவிட்டாய் அழுதாய்!! அழுது புலம்பினாய்!!! பக்கத்திலே இருக்க எவ்வாறு என்பதை கூட நலன்கள் நலன்கள் இவ்வாறு என்பதையும் கூட என்னால் காணவில்லையே என்று கூட நீயும் கட்டி பிடித்துக் கொண்டு அழுது புலம்பினாய்!!! ( ஐயப்பன் அருகில் இருந்ததை கூட உணர முடியாமல் உணர்ந்து பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று)

ஐயனே ஐயப்பா!!!!! எவ்வாறு என்பதையும் கூட.  நீ என் கூடவே.... இருந்து விடு என்று கூட!!!

ஆனாலும் சபரிநாதனும் இல்லை!!! இவையென்று கூற ஆனாலும் என்னிடத்திற்கே யான் செல்கின்றேன்!!!! ஆனாலும் நீயோ இங்கேயே இரு!!! நல் எவை என்று கூற அகத்தியனும் கடை நாள் வரையிலும் இங்கேயே தங்கி பல வழிகளையும் உந்தனுக்கு காட்டுவான்.. என்று கூற!!!

ஆனாலும் இவையன்றி கூட அடம் பிடித்தாய் நீ!!!

எவ்வாறு என்பதையும் கூட ஆனாலும் இவையன்றி கூட யான் எனது எதனை என்றும் கூட ஒரு பிறப்பை இவ்வாறு என்பதையும் கூட உந்தனுக்கு முக்தியே ஆகட்டும் என்று கூட..பின் இவையென்றும் நல்விதமாகவே அய்யனும் சொல்லிவிட்டான்!!!!

ஆனாலும் இவையன்றி கூற எந்தனுக்கு முக்திகள் வேண்டாம்....பின் எவையென்று கூட எதனையென்றும் அறியாமல் உணர்வதற்குள் எல்லை இல்லா எந்தனுக்கு முக்திகள் கிட்டி விட்டால்... உந்தனை நேரடியாக காண முடியாது!!!

அதனால் எந்தனுக்கு மறுபிறவி வேண்டும் என்பதை கூட பின் சபரிநாதனிடமே நீயே கேட்டுக் கொண்டாய்!!!

பின் வேண்டாமப்பா பிறவிகள்!!!! பிறவிகள் எடுத்து பின் இக்கலியுகத்தில் பல கஷ்டங்கள் பட வேண்டியதற்கு... வேண்டாம் என்னிடத்திலே இருந்து கொள்!!! என்று கூட

இல்லை!!!  இல்லை!! எந்தனுக்கு மனித ஜென்மம் வேண்டும்!!! வேண்டும் இச்ஜென்மத்தில் கூட நண்பர்களாக வாழவில்லை!!! அடுத்த ஜென்மத்தில் ஆவது நண்பர்களாக வாழ வேண்டும் என்று கூறிவிட்டாய்!!!!

எவையென்று இதனையுமென்று நீ கூற!!!! அவந்தனும் சரியப்பா!!!!

எவையென்று கூற அடுத்த ஜென்மம் எடுத்து என்னிடத்திலே இருந்து கொள்வாய்!!! எவையென்று கூற உன் நண்பனாகவே இருக்கின்றேன்!!!! நீயும் என்னை நண்பனாகவே அழைத்து வரலாம் என்று!!!! 

அதனால் அப்பனே எவை என்று கூட நீ போகாவிடிலும் (சபரிமலை) அப்பனே அவனே உன்னை அழைத்துச் செல்வான் என்பேன்!!!!!

அப்பனே இவையன்றி கூட அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே போகாவிடிலும் அவன் உன்னை தேடி வருவான் என்பேன்!!!!

அப்பனே இவை போன்று அப்பனே நல்விதமாக அதனால் தான் இக்காட்சிகள்( சம்பவங்கள்) அனைத்தும் இங்கே தான் நடைபெற்றது என்பேன்!!!( தீர்த்தமலை அடிவாரத்தில் இருக்கும் அகத்தியர் ஆசிரமம்)

அப்பனே இவையன்றி கூட அப்பனே போதாததற்கு அப்பனே ஆனாலும் நன்விதமாக புரிந்து கொண்டாய் அப்பனே!!!

இவை என்று கூடஅப்பனே யானும் சொன்னேன் உந்தனுக்கு இன்னும் இருப்புகள் எவ்வாறு என்பதையும் கூட பின் அடுத்த பிறவி என்று கூறி விட்டான் இவை என்று கூற!!!

ஆனாலும் நீ தான் இருக்கின்றாய் நான் உன்னை எப்படி பார்ப்பது என்று கூட!!!!

ஆனாலும் யானும்( அகத்தியர்) சொன்னேன் இங்கே( தீர்த்தமலை அகத்தியர் ஆசிரமம்) என்னை பார்ப்பாய் என்று!!!! அடுத்த பிறவியை எடுத்தாலும் கூட!!

அப்பனே இவையன்றி கூற அப்பனே!! ஆனாலும் போனது எவ்வாறு என்பதையும் கூட மலைகள் ஆனாலும் அவ் சபரிநாதனும் இங்கேயே காட்சி அளிப்பான் என்பது மெய்யப்பா!!!! 

அப்பனே நல்விதமாக காலங்கள் எவை என்று கூட சென்று கொண்டே இருக்கும் பொழுது அப்பனே இவை என்று கூட நீயும் என்னிடத்தில் கூறி விட்டாய்!!!

எந்தனுக்கு இன்னும் ஆயுட்காலம் குறைவே!!! அதனால் பல ஆலயங்களுக்கு ஏறி பல பல உண்மைகளை மனிதர்களுக்கு சொல்லி பல பாடல்களையும் பாடிட்டு வர வேண்டும் கடைசியில் இங்கேதான் என் உயிர் பிரிய வேண்டும் பின் மறுபிறவியும் இங்கே என்று கூட!!!!

எதனையென்று அதனால் பின் கடைசி காலங்களில் பின் பரதேசி போல் பல இடங்களுக்கு சென்று பல பாடல்களை நீ பாடினாய் என்பேன்!!!!

இவையன்றி கூற அப்பனே இவையென்றும் நல்விதமாக ஆனாலும் இதனையென்றும் குறிப்பிடாமல் கடைசியிலும் இங்கே தான் வந்து விட்டாய் அப்பனே!!!! உன் உடம்பும் இங்கே தான் மாண்டது என்பேன்!!!!!( முற்பிறவியில்) 

{ தற்சமயம் தீர்த்தமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் அகத்தியர் ஆசிரமம் முற்பிறவியில் இந்த அடியவர் சமாதி அடைந்த இடம்!!! ஐயப்பனையும் குருநாதர் அகத்தியரையும் சந்தித்த இடம்!!!! இந்த ஜென்மத்தில் அந்த அடியவருக்கு இந்த அதிசயங்கள் நடந்த இடம் தானமாக கிடைக்கப்பெற்று அந்த நிலத்தில் அகத்தியர் ஆசிரமம் அமைத்திருக்கின்றார்}

ஆனாலும் இவையன்றி கூட திரும்பவும் இங்கே தான்(இப்பிறவியில்) வந்துவிட்டாய் நீ!!!!

அப்பனே எவையென்று கூற அதனால் இவையன்றி கூற அப்பனே நல் விதமாக யானும் உன்னை ஆசிர்வதித்து விட்டேன்!!! எவையன்றி கூற பின் அடுத்த பிறப்பிலும் நல்ல விதமாக உண்டு என்பது உண்டு என்பது பின் அனைத்தும் பின் திருமணம் பிள்ளைகள் பெற்று இவன் விருப்பப்படியே வாழ்ந்து பின் எவை அன்றி கூட என்னையும் பார்த்து அனைத்து தெய்வங்களையும் பார்த்து தரிசனமும் உண்டு என்பேன்!!!!

அப்பனே எவை என்று கூட பிறவியின் ரகசியத்தை சொல்லி விட்டேன்!!! அப்பனே

இன்னும் பிற பிறவிகளில் இன்னும் ரகசியங்கள் உண்டு.  (தற்போது ஒரு பிறவியின் ரகசியத்தை மட்டும் இப்பொழுது உரைத்திருந்தார்) அப்பனே ஒவ்வொன்றாக சொல்கின்றேன் அப்பனே!!!

அதனால் அப்பனே உன் நிலைமைகள் எந்தனுக்கு தெரிந்து விட்டது அப்பனே எவை என்று கூட நிச்சயமாய் எதைச் செய்ய வேண்டும் என்பதை கூட உன் பிள்ளைகளை தன் பிள்ளைகள் போல் எண்ணி சபரிநாதனே பார்த்துக் கொள்வான்........ விட்டுடு!!!! தன் நண்பனின் பிள்ளைகளை அவந்தனே பார்த்துக் கொள்வான் கவலைகள் இல்லை!!!!

அப்பனே நலமாக நலமாக உண்டு என்பேன் அப்பனே நல்விதமாக யானும் பலமுறை இங்கு வந்து தங்கி செல்கின்றேன் அப்பனே!!!!

அப்பனே இவை என்று கூற அப்பனே இது என்னுடைய மலையப்பா!!!!! (தீர்த்தமலை) 

அப்பனே இவையன்றி கூற இங்கே அப்பனே பல அதிசயங்கள் நடந்தேறும் என்பேன் அப்பனே கண்ணுக்கு புலப்படாத வகையிலும் பல சித்தர்களும் வருவார்களப்பா!!!! 

அப்பனே புதைந்துள்ளது என்பேன் அப்பனே மலை முழுவதும் ரகசியங்கள் !!!!! அப்பனே இவ்வாறு என்பதை கூட இவ்வாறு இருந்து அப்பனே நல்விதமாக முன்னேற்றங்கள் எவ்வாறு என்பதையும் கூட யானும் அப்பனே வருவேனப்பா!!!!!

இன்னும் எவ்வாறு என்பதையும் கூட பல பல ரூபங்களில் அப்பனே!!!!

எவை என்பதை கூட என் நிலையானதில் அப்பனே இங்கு பல முறை கூட வந்து தங்கினேன் என்பேன் அப்பனே!!!!

இவையன்றி கூற அப்பனே  நல் விதமாக   இன்னும் அப்பனே இங்கேதான் நான் தங்கப் போகின்றேன் போதுமா?!! உந்தனுக்கு!!!

இன்னும் வருங்காலங்களில் அப்பனே சிறப்புக்கள் மிகும் என்பேன் அப்பனே!!!!!

அப்பனே இவையன்றி கூட அப்பனே தானாக வரவில்லை அப்பனே!!!!!! எவை என்று கூட  """ யானாகவே வந்தேன்"""!!!!!! அப்பனே!!!!!

அப்பனே பார்!!!!! அப்பனே எவை என்று கூட என்னை பார்த்துக் கொண்டே இரு!!!( ஆஸ்ரமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அகத்திய பெருமான் திருவுருவச் சிலை) 

திடீரென்று!!! உண்மை ரூபமாக காட்சி அளித்து விடுவேன் யான்!!!!!!!

அப்பனே இவ் மலைக்கு பல சித்தர்களும் வருவார்கள் அப்பனே வந்து திரிவார்களப்பா!!!!

முருகன்!! / கந்தன்!!! இவையன்றி கூற..... இவர்களுக்கும் வித்தியாசம் உண்டு என்னவென்று நீ கூறு!!

(அடியவர் தந்த பதில் முருகன் என்பது மகா சித்தன் என்று அடியேன் நினைக்கின்றேன் கந்தன் என்பது முருகன் என்பதும் பல்வேறு ரூபங்கள் என்று நினைக்கின்றேன் )

அப்பனே இவையன்றி கூற(குருநாதர் நகைப்புடன்) சரியான பதில் இதுவா???

ஆனாலும் ஒருவனே!!!!!( கந்தனும் முருகனும்) 

அப்பனே நலமாக கூறிவிட்டேன் இவையன்றி கூற நீ என்ன கேட்கப் போகின்றாய்? என்பதை கூட யான் அறிவேன்!!!!

திரும்பவும் கேட்கின்றேன் என்ன வேண்டும்???? என்பதை நீயே கூறு!!!

குருநாதா அடியேன் நான் தங்களுடைய குழந்தை இந்த குழந்தை இடம் வந்து என்னுடன் நீங்கள் உரையாடியது பெரும் பாக்கியம் எந்தனுக்கு!!! என்னைப் பற்றி உங்களுக்கு தெரியும்!!! இந்த ஆசிரமத்தை கூட நான் உலக நன்மைக்காக பொதுமக்கள் இங்கு வந்து பயன் பெற வேண்டும் பக்தி மயமாக வேண்டும் அதற்காக உங்களுடைய அனுக்கிரகம் வேண்டும்!!!என்னை நீங்கள் பார்த்துக் கொள்கின்றீர்கள்!!! என்னுடைய நண்பன் ஐயப்பன் பார்த்துக் கொள்வார் என்று எனக்கு சத்தியமாக தெரியும்!!

இந்த உலகம் ஷேமமாக இருக்க வேண்டும் இந்த ஊரும் இந்த ஊரை சுற்றியுள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் இந்த ஆசிரமத்திற்காக பாடுபட்டு கொண்டிருக்கக் கூடிய இங்குள்ள அனைவரும் அனைவருடைய குடும்பமும் இங்கு பணி செய்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அவர்களுக்கு நல்வாழ்க்கை கிடைக்க வேண்டும்!!!

எனக்கென்று சொந்தமாக நீங்கள் தான் இருக்கின்றீர்களே என்னையும் என் குடும்பத்தையும் பார்த்துக் கொள்வதற்கு நீங்களும் ஐயப்பனும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் நான் எனக்கென்று தனியாக என்ன கேட்க வேண்டும்??

அப்பனே நலமாக உண்டு என்பேன் அப்பனே!!!!  இவையென்று கூற யான் நலமாகவே அனைத்தையும் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே!!! சில இயற்கையான உணவுகளை உட்கொண்டுவா நீ போதுமானது!!! அப்பனே நல்விதமாக மற்றவை எல்லாம் யான் பார்த்துக் கொள்கின்றேன்.... அப்பனே நல்விதமாக சித்தர்களும் வருவார்களப்பா!!!!

அப்பனே ஒவ்வொரு சித்தர்களும் நல்விதமாகவே வந்திட்டு தங்கிட்டுத்தான் செல்வார்கள் என்பேன் அப்பனே கவலைகள் இல்லை!!!! இவர்கள் சித்தர்கள் வரும்பொழுது அப்பனே இன்னும் பரிசுத்தமான அப்பனே சில சில கர்ம வினைகள் இங்கு வந்தால் அப்பனே அகலும் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் கர்மா உள்ளவன் இங்கு வர முடியாதப்பா!!!! இதுதான் உண்மை என்பேன்!!!!ஆனாலும் நல் விதமாக பின் வந்துவிட்டால் அவந்தன் கர்மா அழிந்து விட்டு!!! சித்தர்களின் ஆசிகளும் தொடர்புகளும் கிடைக்கும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே வரும் காலத்தில் அப்பனே எவை என்று கூட சித்தர்களின் தரிசனங்கள் எவை என்று கூட சித்தர்களை உணராதவர்கள் பலர் வந்து கொண்டிருப்பார்கள் அதனால் அவர்களுக்கு துன்பங்கள் எவ்வகையில் செல்வது என்பேன்!!!

எவை என்றும் இதனையென்றும் அறியாத அளவிற்கும் மனிதர்களைக் கூட அழைத்துக் கொண்டே இருக்கின்றோம் யாங்கள் வாருங்கள் வாருங்கள் என்றும் கூட!!!

ஆனாலும் அவந்தன் கர்மா நிலைகள் அப்படி இருக்கின்றது அப்பனே!!! 
எது எவையென்று கூற ஆனாலும் அப்படியும் மீறி வந்து விட்டது வந்துவிட்டது போல வந்து விட்டால் அப்பனே கர்மாக்கள் எவை என்று கூற பின் அதனையும் பின் எவ்வாறு தொலைப்பது என்பதையும் கூட யாங்கள் வழி காண்பிப்போம்!!!

ஆனாலும் கஷ்டங்கள் நிச்சயம் விரைந்து ஓடும் என்பேன் அப்பனே பின் பிறவி தோறும் அப்பனே மக்கள் எவை என்று கூட தெரியாமல் பிறந்து பிறந்து கஷ்டங்களை அனுபவித்து அனுபவித்து செல்கின்ற பொழுது யாங்களும் கூட மனதில் சில கஷ்டங்கள் ஏற்படுத்திக் கொள்கின்றோம் எங்களுக்கு மனது கஷ்டமாகிவிடுகின்றது இவந்தனுக்கு இவ்வாறா!!! என்பதை கூட!!!!

ஆனாலும் அப்பனே என்னை அடைந்து விட்டால் அப்பனே நிச்சயம் அவந்தன் நல்விதமாக மாறுவான்!!

செல்வாக்கு அடைவான் !!!அப்பனே இவை என்று கூறாத அளவிற்கும் கூட கர்மத்தை நீக்குவேன் அதனால் அப்பனே இவை என்று கூட கர்மத்தை நீக்கும் பொழுது சில கஷ்டங்கள் வரலாம் அப்பனே அப்பொழுது கூட அகத்தியன்!! அகத்தியன்!! என்று சொல்லிவிட்டால் அப்பனே அவன் நிலைமைகள் மாறும்!!!

அப்பனே இதனால்தான் அப்பனே இவை என்று கூட சித்தர்கள் ஆசிகள் இல்லாமல் அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் இறைவனை நேரடியாக காண முடியாது என்பேன்!!!

ஆனாலும் மனிதர்களோ முட்டாள் மனிதர்களோ எவை என்று கூட எதனை என்றும் சிந்திக்க கூட தெரியாமல் அப்பனே நேரடியாக இறைவனை காண்பது என்பது அவ்வளவு சுலபமில்லை என்பேன் அப்பனே!!!

அதனால் இறைவனை காண காண எவ்வாறு என்பதையும் கூட துன்பங்களே வருகின்றது என்பது தான் மனிதனின் நினைப்பு என்பதை கூட யான் தெரிந்து கொண்டேன்!! அதனால் தான் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட எங்களைப் போன்ற சித்தர்களை அணுகினால் மட்டுமே இறைவன் தரிசனம் யாங்கள் காண்பிப்போம் அப்பனே!!

தெரிந்து கொள்!!! அப்பனே இதனால் வந்து விட்டாய் என்னை நோக்கி!!! அப்பனே இவையன்றி கூற நல்விதமாக இன்னும் பல தரிசனங்கள் உங்களுக்கு காண்பிப்பேன் என்பேன் அப்பனே குறைகள் இல்லை!!!!!

குருவிடம் அடியவர் ஒரு வேண்டுகோளை வைக்கின்றார்!!!

குருநாதா நாங்கள் அனைவரும் உங்களுடைய குழந்தைகள் நாங்கள் அனைவரும் எந்த விதமான வேதங்களையும் படிக்கவில்லை எங்களுக்கு எதுவும் தெரியாது எங்களுக்கு என்ன தெரிகின்றதோ அதை மட்டும் உபச்சாரமாக செய்கின்றோம்!!!

குருநாதர் குறுக்கிட்டு... அப்பனே இவை என்று கூற ஏதும் தெரியாது என்று நினைத்து விடாதே அப்பனே உந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்பேன் அப்பனே!!! அப்பனே ஒன்றைச் சொல்லி விடுகின்றேன் அப்பனே இவையன்றி கூற ஒரு பாடலை பாடு!!!! யானும் கேட்கின்றேன்!!!

குருநாதர் அடியவரிடம் ஒரு பாடலை பாடு என்று கேட்க அடியவரும் பாடலை பாடத் தொடங்குகின்றார்!!!!!

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி!!!!!

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி!!!!!

சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்
சின்னஞ்சிறு பெண் போலே!!!!!!!!!!!!!!!!!!!

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது. 

 சின்னஞ்சிறு பெண் போலே !!!  சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்!!!

மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனமும் ஆடிடுவாள்

பித்தனுக்கு இணையாக நர்த்தனமும் ஆடிடுவாள்!!!

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்!!!.
அம்ம்ம்ம்மா!!!!!!!!!!!!!!!!!! 

பாடி முடித்ததும் அடியவர் குருநாதரிடம் வேண்டுகிறார் 

குருநாதா!!!! அடியேன் செய்யும் உபச்சாரங்களில் ஏதாவது அபச்சாரமோ குற்றங்களோ குறைகளோ இருந்தால் இந்த குழந்தைகளை செமிக்கனும் மன்னிக்க வேண்டும் குருநாதா!!!

அப்பனே எவை என்று கூற அப்பனே நல்லவை என்பேன் அப்பனே!!!! இது இப்பொழுதும் மட்டும் கூட நீ பாடவில்லை என்பேன் அப்பனே முன் ஜென்மத்திலிருந்தே நீ பாடி கொண்டிருந்ததை யான் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே நல்மனதாக!!!!

எவை என்று கூட ஆனாலும் ஒரு உத்தரவை உந்தனுக்கு சொல்கின்றேன் உன்னால் முடியும் பொழுது அங்கு செல் அப்பனே இவையன்றி கூற அபிராமி திருக்கடையூர் சென்று ஒரு முறை பார் அன்னையை!!!!!

இவையன்றி கூற அப்பனே எவை என்றும் பின்னாளில் அப்பனே ஒரு முறை மலையனூர் சென்று வா( மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி)

அப்பனே எவை என்று கூற எதனால் என்பதை கூட அன்னை என்று நீ கூறி விட்டாய் அவர்களும் ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்!!! அவர்களை சென்று பார்த்திட்டு வா!!!!

அப்பனே நலமாக நலமாக அப்பனே இத்தனை சொந்த பந்தங்களை வைத்துக் கொண்டு அப்பனே நீ ஒரு அப்பனே பின் நீயே யோசித்துக் கொள்!!!!!!!

அப்பனே நலமாக நலமாக எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலை புரிவதற்கும் அப்பனே இவ் பந்தங்கள் அப்பனே... எதை என்றும் இதை ஓதுபவனும்( ஜானகிராமன் ஐயா) ஓர் விதத்தில்.. பந்தம் அவைதனும் உந்தனுக்கு சொல்கின்றேன் வரும் காலங்களில்!!!! உந்தனுக்கே உணர்த்துவேன் என்பேன்!!

அடியவரின் மனைவிக்கு 

இவையென்று அம்மையே!!! சொல்கின்றேன் பின் நவராத்திரி எனும் நாள் வருகின்றது நவ தினங்கள் எவை என்றும் கூட அவ் நவதினங்களிலும் நிச்சயமாய் உன் இல்லத்தில் நவராத்திரி தினத்தில் பின் ஒவ்வொரு தேவியையும் வணங்கி வா நிச்சயம் ஒரு தேவி உன் இல்லத்திற்கு வருவாள் என்பேன்!!

அப்பனே எவை என்று கூட ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே இந்த உலகத்தில் நிலையானது ஏதுமில்லை என்று அப்பனே எதுவும் மாறி மாறி தான் வரும் என்பேன் அப்பனே!!!

சூரியன் எப்பொழுதுமே இருந்து விட்டால் என்ன பயன் அதற்கு?? சந்திரன் கூட எப்பொழுது எவை என்று கூட இருந்து விட்டால் என்ன பயன் அதற்கு??

துன்பம் கூட இருந்து விட்டால் என்ன பயன்?? அப்பனே இவை என்று கூட அப்பனே வாழ்க்கை இன்பமாகவே இருந்து விட்டால் என்ன பயன்?? அப்பனே கூறு!!! அப்பனே மாறி மாறி தான் வரும் என்பேன் கவலைகள் இல்லை!!

யானே இருக்கின்ற பொழுது... என்ன உந்தனுக்கு?? அதனால் தான் சொன்னேன் அப்பனே உந்தனுக்கு!!!

அப்பனே நலமாக நலமாக எவை என்று கூட அப்பனே நல்விதமாகவே உண்டு என்பேன் அப்பனே யான் இவைதன் உணர உணர அப்பனே அடிக்கடி நல்விதமாக நெல்லிக்கனியை எடுத்துக்கொண்டு வா!!

அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே மாதத்திற்கு இருமுறையாவது கடுக்காயை உபயோகித்துக்கொள்!!! 

அப்பனே இவை என்று கூட அப்பனே நல்விதமாக உன்னால் முடிந்தவரை பின் அப்பனே தேவ கனியான ஒரு எலுமிச்சையை நல் விதமாக ஒரு அம்மன் சன்னதியில் எவ்வாறு என்பதையும் கூட வைத்து அதனையும் பில் ஓர் பத்து மணி நேரங்கள் கடக்க அதனையும் அச்சாற்றுடன் கலந்து நீ உட்கொள்ள நன்று என்பேன்!!!

அப்பனே நலமாக நலமாக அப்பனே வாரத்திற்கு இருமுறையாவது நல்விதமாக துளசி இலைகளை பறித்து பருகி வா( துளசி தீர்த்தம்)

அப்பனே இவையன்றி கூற அப்பனே மாதத்திற்கு இவை என்று கூற இரு நாட்கள் அப்பனே துத்தி இலை எனும் மூலிகையையும் உட்கொண்டு வா!!!

அப்பனே இவையென்றும் உணராமல் பின் அப்பனே நல் விதமாக பின் அறிந்த அளவிற்கும் கூட நல்விதமாக கீரை வகைகளை உட்கொள்ள நன்று என்பேன்!!!

இதனையும் என்று அறிவதற்குள் அப்பனே ஆனை நெருஞ்சில் எனும் மூலிகையும் உண்டு அதனையும் எடுத்துக் கொள்!!!!

அப்பனே இவை என்று கூட இதனை சிறிது இலைகளைப் பறித்து மாதத்திற்கு ஒரு முறை உண்டுவா போதுமானது!!!

அப்பனே இவையன்று கூட இன்னும் ஆவாரம்பூ எனும் மூலிகைகளையும் நல் விதமாக சாற்றை எவ்வாறு என்பதையும் கூட அதனையும் சூடேற்றி அப்பனே அதையும் உண்டு வா!!!!

அப்பனே நலமாக நலமாக அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் கூறிய அளவிற்கும் கூட முற்பிறவியையும் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே இன்னும் வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே கவலைகள் இல்லை நல்முறையாக அப்பனே எவை என்றும் எதனை என்றும் கூற அப்பனே இதனையும் என்று அறியாமல் எந்தனுக்கு நல்விதமாக அப்பனே பின் யான் பல வாக்குகளிலும் சொல்லிவிட்டேன்!!!!

அன்பு மட்டும் பிரதானமானது!!! என்பேன் அப்பனே!!! அவை செய்தாலே போதும் அன்பை மட்டும் காட்டினால் போதும் அப்பனே எவை என்று கூற நல் மனதாக இருந்து பின் எதை செய்தாலும் யான் ஏற்றுக்கொள்வேன் அப்பனே!!!

அடியவர் இடையில் பொதுவாக கேட்ட கேள்விக்கு குருநாதர் உரைத்த பதில்கள்!!!!

குருவே தோல் வியாதிக்கு சிகிச்சை என்ன செய்ய வேண்டும்???

அப்பனே நல்முறையாக எலுமிச்சைச் சாறு போதும் என்பேன். களிமண் போதும் என்பேன் உபயோகத்துக் கொள்ளச் சொல்!!!

அப்பனே இவை அறிந்து கூட அப்பனே தோல் நோய் எவ்வாறு என்பதையும் கூட இதற்கு தகுந்தவாறு அப்பனே புற்று மண் என்பேன் அப்பனே!!!

இவைதான் பல பல ரூபங்களில் எவ்வாறு என்பதையும் கூட பல வருடங்களில் வாழ்ந்த முன்னோர்கள் இதைத்தான் செய்வார்கள் என்பேன்.!!!

அப்பனே நலமாக சொல்லிவிட்டேன் எவை என்று கூட அப்பனே நலமாக உண்டு ஆசிர்வாதங்கள் என்பேன் அப்பனே குறைகள் இல்லை அப்பனே 

குருவே இந்த கொரோனா காலகட்டத்தில் என்னால் இந்த ஆசிரமத்தை சரியாக கவனிக்க முடியவில்லை அதனால் தங்களிடம் மன்னிப்பு கூறுகின்றேன் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்

அப்பனே யான் அவையெல்லாம் நேசிப்பதில்லை அப்பனே சித்தர்களே இவை போன்று தான் எதையும் எதிர்பார்க்காதவர்கள் என்பேன்!!!! அப்பனே நல்விதமாகவே 

அன்பை மட்டும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து விட்டால் போதுமானது என்பேன் அப்பனே!!!

யாங்கள் எதுவும் விரும்புவதில்லை யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் பல வாக்குகளிலும் !!

அப்பனே அன்பு தான்!!! அன்பு தான்!!! பிரதானமானது!!!!

அப்பனே நலமாக நலமாக இவை என்று கூற அப்பனே நல்லவை எவை என்று கூற முன் ஜென்மத்திலே அழைத்து விட்டாய் யாமும் சேர்ந்து நல்லதை செய்து விடுவோம் என்று கூட அதனால் தான் அப்பனே யானும் இங்கேயே இருக்கின்றேன் அப்பனே வரும் என்பேன் அடிக்கடி இச் சுவடியும் இங்கு!!!!

ஆசிரமத்தில் பணிபுரியும் அடியவருக்கு குருநாதர் உரைத்த ஆசீர்வாதம்!!!

அப்பனே ஆசிர்வாதங்கள் அப்பனே எவை என்றும் கூட மனிதர்கள் இவ்வுலகத்தில் நிலையில்லாததை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ஆனாலும் அப்பனே எப்படியாவது இவ்வுலகத்தில் வாழ வேண்டும் என்று கூட மனதில்!!

ஆனாலும் அப்பனே இறையருள்கள் பெற்றுக் கொண்டே வந்திருந்தால் அப்பனே அவையெல்லாம் நலமே ஆகும் என்பேன் அப்பனே!!!

எந்தனுக்கு சேவை எவ்வாறு என்பதையும் கூட அப்பனே நலமாகவே உண்டு என்பேன் அப்பனே யான் கூட அப்பனே சில தினங்களுக்கு முன்பு இங்கே கூட உணவருந்தினேன் அப்பனே!!! அப்படி இருக்க யான் என்ன? விட்டு விடுவேனா என்ன??? அப்பனே!!!!

அப்பனே நலமாகவே நலமாகவே கூறிவிட்டேன் அப்பனே இதை என்றும் கூற அப்பனே நலமாகவே உண்டு என்பேன் அப்பனே ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன்!!! அனைவருக்கும் கூட அப்பனே!!!!

மனிதன் என்றால் அப்பனே!! துன்பம் வரும்!! இவையன்றி கூற யானும் பல பல காலங்களில் பார்த்து விட்டேன் அப்பனே 

இறைவனே இப்புவியில் பிறந்தாலும் கஷ்டமே!!! என்று பல மனிதர்களுக்கும் சொல்லிவிட்டேன் அப்பனே!!! 

ராமனை எடுத்துக்கொள்!! அப்பனே!!! கிருஷ்ணனை எடுத்துக்கொள்!! அப்பனே 

ஏன் ஈசனையே எடுத்துக்கொள் அப்பனே!! கந்தனை எடுத்துக்கொள்!!! ஆனாலும் மனித பிறப்புக்கள் அப்பனே கடந்தாக வேண்டும் ஆனாலும் அப்பனே சித்தர்களை நோக்கி வந்து விட்டால் அப்பனே யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே இவையன்றி கூற 

அதனால் தான் அப்பனே சொல்லி விட்டேன் அப்பனே 

நலமாகவே இல்லை பிறவிகள்!! அப்பனே இல்லை பிறவிகள் அனைவருக்கும் கூட யான்
சொல்லி விட்டேன்!!! 

எவையென்றும் கூற இன்னும் பல ரூபங்களில் யான் இங்கு சுற்றி வருவேன் அப்பனே கவலைகள் இல்லை அனைவரின் வாழ்க்கையையும் யான் பார்த்துக் கொள்வேனென்றால் நிச்சயம் பார்த்து கொள்வேன் அப்பனே!!! எவையென்று கூட...பல கர்மாக்களும் அப்பனே யானும் நீக்க வேண்டும் அவை என்று கூட பலவிதிகளிலும் பல துன்பங்கள் இருக்கின்ற பொழுதிலும் அதையும் பிரம்மாவிடம் எடுத்து கூறி நீக்கிவிட வேண்டும் என்பதை கூட அப்பனே அதனால்தான் அப்பனே யான் பொறுத்திரு!! சிறிது காலம் பொறுத்திரு!!! என்றெல்லாம் யான் கூறிக் கொண்டே வருகின்றேன் மக்களுக்கு!!!

ஆனாலும் அதைக் கூட தெரியாத மனிதர்கள் கூட அப்பனே அவை வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பின் அதை நோக்கி போய்க்கொண்டு பின் அவை மூலம்தான் அழிவுகள் என்பதை தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றார்கள்!!!

பொறுத்திரு!!! என்று சொன்னால் அப்பனே யானே அனைத்தும் செய்து விடுவேன் என்று தான் அர்த்தம்!!! அப்பனே!!!

இவை என்றும் கூற நல்முறையான ஆசிகள் ஆசிகள் உண்டு என்பேன் அப்பனே இன்னும் பல முனிவர்களும் இங்கு வந்து வாக்குகள் செப்புவார்கள் என்பேன் அப்பனே குறைகள் இல்லை நலமாக நலமாக உண்டு உண்டு ஆசிர்வாதங்கள் அப்பனே!!!

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!!

ஐயப்பனும் ஏழுமலையானும் அண்ணாமலையாரும் அகத்தியரும் திருவிளையாடல் புரிந்து நல்லாசிகள் பெற்று முற்பிறவிலும் சரி இப்பிறவிலும் சரி இறை அருள்களை பலமாக பெற்று வாழ்ந்து வரும் அந்த அடியவர்!!!

அரூர் தீர்த்தமலை அடிவாரத்தில் அகத்தியர் ஆசிரமத்தை அமைத்து வணங்கி வழிபட்டுக் கொண்டு வருகின்றார்!!!

ஸ்ரீ குருமண்டலம் அகத்தியர் ஆசிரமம் தீர்த்தமலை. அரூர் திருவண்ணாமலை செல்லும் சாலை தமிழ்நாடு.

முற்பிறவிலும் பாடி துதித்து வணங்கி வந்த அவர் இப்பிறவியிலும் இறை அருளால் இறை பக்தி பாடல்களை பாடும் பிரபல பாடகர்!!!!

இவர் பாடிய பக்தி பாடல்கள் ஏராளம் ஐயப்பன் , அண்ணாமலையார்,  ஏழுமலையான், தேவி, என அனைத்து தெய்வங்கள் பக்தி பாடல்களை பாடி பக்தர்களை பக்தி மார்க்கத்தில் தன்னுடைய சங்கீத திறமையாலும் பாடல்களாலும் நல்வழிப்படுத்தி சென்று கொண்டிருக்கின்றார்!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் மீதும் பல பக்தி பாடல்களை மனம் உருகி பாடி வெளியிட்டு இருக்கின்றார்!!!!

ஓம் அகஸ்திய நாதனே!!! 

அகத்தியர் ஆரத்தி பாடல் சித்தர் நாயகன்... என அகத்தியர் மேல் அன்பு கொண்டு இவர் பாடிய பாடல்கள் அகத்தியர் பக்தர்களை பரவச ப்படுத்தும்!!!!

அவர் இன்னும் நம் குருநாதர் அகத்தியரின் திருவருளால் வாழ்வாங்கு வாழ்ந்து பல பக்தி பாடல்களை பாடி மென்மேலும் பக்தர்களை பக்தி வழிக்கு அழைத்துச்சென்ற செல்ல குருநாதரின் அன்பினை பெற்று வழியொற்றி  நடந்து வரும் அந்த அடியவருக்கு வாழ்த்துக்களை கூறி வணங்குகின்றோம்!!!!

அந்த அடியவர் பெயர் 

குரு மண்டலம் திரு வீரமணிதாசன்!!!!!

அவர் நம் குருநாதர் மேல் அன்பு கொண்டு பாடிய பாடல்களின் இணைப்பை சில பாடல்களில் தொகுப்பை இணைத்துள்ளோம் பாடல்களை கேட்டு அகத்தியரின் அருள்களைப் பெறுங்கள்.

https://youtu.be/OgV3D2wGrg8
https://youtu.be/_mAFRvZ1gBc

ஐயப்பனும் அகத்தியரும் அடியவரும் பாகம் முற்றிற்று!!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.........தொடரும்!

3 comments:

  1. அன்புடன் அகத்தியம்பெருமானுக்கு அன்புடன் அடியவனின் ஆத்மார்த்தமான வணக்கங்கள்... இவ்வடியவன் மீதும் குற்றம் குறைகளிருப்பின் பொருத்தருளவேண்டும் ! - பொருத்து அருளவேண்டும் !!அய்யனே... அடியவனின் மருத்துவம் அருள்வாக்கில் அறிந்தேன்... அடியவனின் கனவில் அம்பாளை ஆட்டோவில் ஏற்றிவிட்டு தாங்களும் ஏறிய நிலையில் - ( பின்) - ஆட்டோ ஏன் சாய்ந்தது??? அடுத்த அருள்வாக்கில் தங்களின் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கும் அடியவன்..

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
    Blessed to see and live with sitthanarul everyday. Thanks to you ayya. Without knowing this i always prefer to hear this adiyavar voice music for ayyapan songs.

    ஐயா... முருகன் கந்தன் விளக்கம் தாருங்கள் ஐயா. இது ரொம்ப நாள் இருக்கின்ற கேள்வி...

    ReplyDelete
  3. அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்..

    குருவருளால் குருவின் தாள் பணிந்து, 2019 ஆம் ஆண்டில் தீர்த்தமலை ஸ்ரீ அகஸ்தியர் தரிசனம் கண்டு, குரு மண்டலம் திரு வீரமணிதாசன் ஐயா விடம் நேரில் ஆசி பெற்றோம். இதனை பதிவாக தேடல் உள்ள தேனீக்கள் தளத்தில் குருவருளால் கொடுத்துள்ளோம்.

    ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_23.html

    ரா.ராகேஸ்
    சின்னாளப்பட்டி

    ReplyDelete