அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
இறைவன் அருளால், மங்கல சின்னம் என்று, இடை காலத்தில் பெண்கள் குங்குமம் வைத்துக்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அதை மறுக்கவில்லை. ஆனால் உடலுக்கு தீங்கைத் தரும் இரசாயனங்களை எல்லாம் வைத்துக் கொள்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையப்பா. இன்னமும் கூறப்போனால், அந்த செந்நிற வண்ணத்தை விட, நேரடியாக தூய்மையான சந்தனத்தை வைத்துக் கொள்ளலாம். நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட திருநீற்றை வைத்துக் கொள்ளலாம். பெண்கள், அப்படி செந்நிற வண்ணத்தை இட்டுக்கொள்ளாமல், மங்கலமான கஸ்தூரி மஞ்சள் பொடியையோ அல்லது தூய்மையான மஞ்சள் பொடியையோ பொடித்து அவற்றை வைத்துக் கொள்ளலாம். அதுதான் சித்தர்களின் முறையாகும்.
ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDelete