அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப யாம் இறைவனின் கருணையைக்கொண்டு என்றும், இறைவனின் அருளைக்கொண்டு என்றும், காலகாலம் இயம்பிக்கொண்டே இருக்கிறோம். இஃதொப்ப நீக்கமற நிறைந்திருக்கக்கூடிய இறையாற்றல் எல்லா இடங்களிலும், எல்லா உயிர்களிலும் தங்கி எல்லா நிலைகளிலும் தன் ஆற்றலை எப்பொழுதுமே செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இங்ஙனமாயின் இதை பெரும்பாலான உயிர்கள், குறிப்பாக, மனிதர்கள் ஏன் உணர முடிவதில்லை? என ஆய்ந்து பார்க்குங்கால் இறைவனின் தன்மைகளை, இறைவனின் குணநலன்களை, இறைவன் எனும் மாபெரும் சக்தியை மனிதன், தன் உடலியல் சார்ந்த வாழ்வியல் நோக்கிலே என்றென்றும் வைத்து பார்ப்பதால் புலன்கள் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் அவன் யோசித்துப் பார்ப்பதால் மட்டுமே இஃதொப்ப மனிதர்களால் இறைத்தன்மையை, கடுகளவும் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. இறைத்தன்மையை உணரமுடியாமல் போகிறது. தெய்வீகம் உள்ளே, உள்ளே, உள்ளே, உள்ளே, உள்ளே என்று ஒளிர்ந்தாலும், மனிதனால் அந்த ஒளிர்தலை புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. மாயையும், அறியாமையும், ஆசையும், தன்முனைப்பும், தீவிரமான பற்றும், இச்சையும், இதைத் தாண்டிய ஒரு நிலை இருக்கிறது, என்பதை உணர ஒட்டாமல் இதற்குள்ளாகவே மனிதன் வாழ்ந்து, வாழ்ந்து, வாழ்ந்து, வாழ்ந்து, வாழ்ந்து, வாழ்ந்து அப்படியே மாய்கிறான். இதிலிருந்து ஆத்மாக்களை கடைத்தேற்ற வேண்டும் என்பதுதான் இறைவன் எமக்கிட்ட பணி. ஆயினும், அப்பணி எளிய பணி அல்ல என்பது எமக்குத் தெரியும். இறைவன் அருளாலே, இறைவனின் பெரும் கருணையாலே இதனை எம்போன்ற மகான்கள் காலகாலம் விதவிதமான சூழலிலே, விதவிதமான லோகத்திலே, விதவிதமான பக்குவம்கொண்ட மனிதர்களுக்கு, அவனவன் மன நிலை அறிந்து, கூட்டிக்கொண்டேயிருக்கிறோம்.
ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDelete