​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 30 April 2017

சித்தன் அருள் - 659 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ப்ரஹ்லாதனின் பக்தி அவன் தந்தைக்கு பிடிக்கவில்லை. தந்தையின் போக்கு ப்ரஹ்லாதனுக்கு பிடிக்கவில்லை. தந்தை என்ற உறவில் ப்ரஹ்லாதன் மதிப்பை வைத்திருந்தான். ஆனால் தந்தையின் கருத்தில் ப்ரஹ்லாதனுக்கு மதிப்பு இல்லை. எனவே தாய்க்கும், தந்தைக்கும் ஆற்ற வேண்டிய கடமை, கொடுக்க வேண்டிய மரியாதையை மைந்தன் கொடுத்துதான் ஆக வேண்டும். ஆனால் அவர்களுடைய கருத்தை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை, அந்த கருத்து நல்லவற்றிற்கு, சத்தியத்திற்கு, அறத்திற்கு, இறைக்கு எதிராக இருக்கும் பட்சத்தில். எனவே இஃதொப்ப நிலையிலே தாய்க்கும், தந்தைக்கும் தன் பிள்ளை தாராளமாக தர்மம் செய்வது பிடிக்கவில்லையென்றால், அந்தக் கருத்தை அந்த மைந்தன் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து தர்மத்தை செய்யலாம். அதே சமயம், தாய்க்கும், தந்தைக்கும் செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete