​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 19 April 2017

சித்தன் அருள் - 649 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனிடம் மிகக் கடுமையாக பிரார்த்தனை செய்வதும், வேண்டுகோள் வைப்பதும் தவறல்ல. அதே சமயம் இறைவனிடம் ‘ இதை உடனடியாக நடத்திக் கொடு. அதிசயத்தை செய்து காட்டு ‘ என்றால் வேண்டுமென்றே இறைவன் சோதனைகளை அதிகரிப்பார். எனவே இறைவன் திருவடியை இறுக பற்றிக்கொண்டு ‘ நீ எதை வேண்டுமானாலும் செய், எப்பொழுது வேண்டுமானாலும் செய். ஆனாலும் என்னைக் கைவிட்டு விடாதே ‘ என்ற ஒரு பரிபூரண பக்தியின் அடிப்படையில் உள்ள பூரண சரணாகதிக்கு ஒரு மனிதன் வந்துவிட வேண்டும். "வாழ்க்கை நீண்ட காலம் அல்ல. குறைந்த காலம். அதற்குள் எண்ணியது கிடைத்து வாழ்ந்தால்தானே?" என்பது போன்ற விஷயங்கள் கட்டாயம் இறைவனுக்கும் தெரியும். மகான்களுக்கும் தெரியும். ஆனால் எந்த விதி எப்பொழுது மாற்றப்பட வேண்டும்? என்பதும் இறைவனுக்கும் தெரியும். திடும் என ஒரு விதியை மாற்றுவதால், நன்மை நடந்து விட்டால் பாதகமில்லை. அதே சமயம் தீய பக்க விளைவுகள் வந்து, முன்பு இருந்த நிலைமையே மேல் என்கிற ஒரு நிலை வந்துவிடும் என்பதையும் மனிதன் மறந்துவிடக் கூடாது.

இறைவனின் கருணையாலே, ஒவ்வொரு மனிதனும் விதியின் வழியாக வருகின்ற துன்பங்களில் இருந்து விரைவில் விடுதலை அடைய வேண்டும் என்று எண்ணுகிறான். யாங்களும் மறுக்கவில்லை. அதே சமயம் ஒரு மகானின் தொடர்பு கிடைத்து வழிமுறைகள் அறிந்தாலும் கூட பல்வேறு தருணங்களில் மனிதனால் விதியை வெல்ல முடிவதில்லை. காரணம், மன சோர்வும், எதிர்மறையான எண்ணங்களும், விதியை எதிர்த்துப் போராட ஒரு வலுவைத் தராமல் அவனை சோர்ந்து அமர வைத்து விடுகிறது.

11 comments:

  1. . அதே சமயம் தீய பக்க விளைவுகள் வந்து, முன்பு இருந்த நிலைமையே மேல் என்கிற ஒரு நிலை வந்துவிடும் enna mean pantranga agathiyar kits kelunga straight sollunga

    ReplyDelete
    Replies
    1. Almighty knows which is right for you.

      Delete
    2. Enaku Vara vazhi illa

      Delete
    3. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு உண்டு . அகத்தியரிடம் உண்மையாக பிராத்தனை செய்தால் நிச்சயம் தங்கள் பிரச்சனைக்கும் ஒரு தீரு கிட்டும் .....

      Delete
    4. அகத்திய பெருமான் கூறுவதில் அர்த்தம் இதுதான். ஒருவன்/ஒருவள் அவளின் சிரமங்களை முழுவதும் தீர்த்துவிடுங்கள் என்று இறைவனிடம் அல்லது சித்தர்களிடம் வேண்டும் பொழுது, இறை மோக்ஷம் அளித்திட தீர்மானித்தால், சிரமங்களின் வீர்யத்தைக் கூட்டி கர்மாவை கழிக்க வைத்து, மோக்ஷத்தை கொடுக்கும். இது தான் விதி. இறைவனின் இந்த தீர்மானம், சிலவேளை அனுபவிக்கிற மனிதனை "வேண்டுதலுக்குப் பின் நடக்கிற விஷயங்களை விட, வேண்டுதலுக்கு முன் இருந்த நிலைமையே மேல்" என்று எண்ண வைத்துவிடும். எத்தனையோ பிறவிகளில் சேர்த்த கர்மாக்களை, இந்த பூமியில் கழித்து முடிக்கத்தான் நம் அனைவரையும் இறைவன் அனுப்பியுள்ளான் என்று, பக்தியை, முழு சரணாகதியை மட்டும் இறைவனிடம், சித்தர்களிடம் வைத்து வாழ்ந்து வந்தால், நம் பாரத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டு சுமப்பார்கள். நமக்கு பாரம் தெரியாது. ஆனால் ஓரளவுக்கு சுமந்து அனுபவிப்போம். இது தான் அகத்தியர் கூறிய தீய விளைவுகளின் - சாரம்.

      Delete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  3. திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

    அருள் நிறைந்த வாழ்க்கைக்கு.
    https://drive.google.com/file/d/0ByfIrLNX8R2xTkQzSndEYkFkSWs/view

    அதில் 11-ஆம் பக்கத்தில்,மூன்றாவது பத்தி "எந்த கோவிலுக்கு சென்றாலும் நவகிரக சந்நிதிக்கு செல்லாதீர்கள்" என்று இருக்கிறது. சித்தன் அருளில் சில / பல அனுபவங்களில் நவ கிரகங்கள் தம்பதி சமேதராக காட்சி தருகிறார்கள் அது விசேஷமானது என்று தகவல் படித்த நியாபகம். சற்று குழப்பமாக இருக்கிறது, தயவு செய்து தெளிவு படுத்துங்கள் அய்யா.

    மிக்க நன்றி,
    இரா.சாமிராஜன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு சாமிராஜன் அவர்களே. நீங்கள் கூறியது உண்மை. அதன் உள்ளர்த்தம் புரிந்து கொள்ளுங்கள். சித்தர்கள் வழிபடு என்று ஒருவனுக்கு கூறும் பொழுது, அங்கே, சித்தர்களின் வேண்டுதல்/உத்தரவு நவகிரகங்களிடம் இருக்கும். சித்தர்கள் வாக்கை அவர்களால் மீற முடியாது. அப்படிப்பட்ட, சூழ்நிலைகளில் தாராளமாக உடனேயே சென்று வழிபடவேண்டும். அகத்தியர் நவகிரகங்களை வழிபடுங்கள் என்று கூறியது, கருங்குளத்தில். ஏன். அங்கே தம்பதி சமேதராக சித்தர்கள் சாட்ச்சியாக நவகிரகங்கள் அமர்ந்துள்ள. என்னதான் நம் கர்ம வினைப்படி அந்த நேரத்தில் கெடுதல் (நம் எண்ணப்படி) செய்யவேண்டுமாயினும், அதை செய்ய முடியாத நிலையில்தான் நவகிரகங்கள் இருக்கும். பாதுகாப்பாக போய் தரிசித்து வழிபட்டுவிட்டு வந்துவிடலாம். ஒரு ஜோசியர் சொன்னார் என்றோ, தனிப்பட்ட ஒருவருக்கு தோன்றியது என்றோ சென்று வழிபடவேண்டாம் என்பதுதான் "அருள் நிறைந்த வாழ்க்கைக்கு" தொகுப்பில் கூறியதன் அர்த்தம்.

      ஒரு சித்தர் தன் பாடலில் "ஆசை அறுமீன்காள் ஆசை அறுமீன்காள், ஈசனோடாயினும், ஆசை அறுமீன்காள்" என்று கூறியுள்ளாரே. இது முரண்பாடாக தோன்றவில்லையா? ஈசன் என்பதன் பொருள் இறைவன். அந்த இறைவனைத்தான் அவர்கள் வழிபடுகிறார்கள். அதெப்படி இப்படி கூற முடியும் என்று புரிந்ததா?

      Delete
    2. அதனுடைய சாராம்சம் என்னவென்றால் நவக்ராஹங்களுக்கு விதியை மற்றும் வல்லமை இல்லை , அந்த அந்த ஆத்மகளுக்கு அவர்கள் செய்த கர்ம படி பலன்களை வழங்குவர்தற்கான வல்லமை மட்டும்தான் உள்ளதே அன்றி விதி மாற்றும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை . முதலில் அகத்தியர் இறைவனுக்கே அந்த அதிகாரம் இல்ல என்கிறார் . எல்லரோமே அவர்கள் செய்த கர்மாவை அனுபவிக்கத்தான் வேண்டும் நவக்ராஹன்களுக்கு அபிஷேகம் செய்வதாலோ அல்லது அவர்களை அன்றாடம் துதி செய்வதாலோ ஒன்றும் மாறிவிட போவதில்லை . பின் எதற்காக நவக்ராகங்கள் வழிபடு என்றால் உன்னால் துன்பப்பட்ட ஆதமகளை எண்ணி நீ மனம் வருந்தி செய்த பாவத்தை உணர்ந்து தீபம் ஏற்றினால் அது அந்த அந்த ஆத்மாக்களு போய் சேரும் அவர்கள் வாழ்வில் நல்லது நடக்கும் , இது விதி மகள் மனதை குளிர்விக்கும் அதற்காகதான் இந்த இறை வழிபாடுகள் எல்லாம் எல்லா இறை வழிபடின் நோக்கமே தான் தவறை உணரவேண்டும் என்பது தான் இன்னும் சொல்லபோனால் எனக்கு இது வேண்டும் என்று கேட்பதை விட என்னால் துன்பப்பட்ட ஆத்மாக்கு நற்கதி தாருங்கள் அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள் என்று வேண்டுவதே சால சிறந்தது .....


      இதை நான் சொல்லிகொண்டிரும்போதே பிள்ளையார் படத்தில் இருந்து மலர் கிழே விழுந்தது !! ....

      Delete
  4. Don't mistaken me asking like this agnilingam arunachalam sir,creatvie sir,Saravanan manika sir,athy moorthy sir neenga agathiyar pathurKingala,pesi irukungala

    ReplyDelete
  5. We have all spoken to Agathiar through Jeeva naadi on various occasions. Agathiar has visited our house in human form with the name for that person as Agasth on an expected day. I have never known that person before.

    He is watching us every moment.

    NRSridharan

    ReplyDelete