​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 24 April 2017

சித்தன் அருள் - 653 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

  • ஒரு ஆத்மா மீண்டும் இந்த பூமியிலே பிறக்க வேண்டிய ஒரு சூழல் வரும்போது, இதுவரை எடுத்த மொத்த ஜென்மங்கள் எத்தனை? அதில் கழித்த பாவங்கள் எத்தனை? சேர்த்த புண்ணியங்கள் எத்தனை? இந்த விகிதாசாரத்தின் அடிப்படையிலே ஓரளவு புண்ணியம் இருந்தால்தான் மனிதனாகவே பிறக்க முடியும். அதற்கே அவன் சேர்த்து வைத்த புண்ணியம் செலவாகி விடும். 
  • மிகுதி புண்ணியம் இந்த பூமியிலே மேல்திசை நாடுகளிலே பிறக்காமல் இஃதொப்ப பாரத கண்டத்திலே, கர்ம பூமியிலே பிறப்பதற்கே சில புண்ணியம் வேண்டும். 
  • அதனினும் இறை மறுப்புக் குடும்பத்தில் இல்லாமல், இறையை நம்பக்கூடிய குடும்பத்தில் பிறப்பதற்கே, சில புண்ணியங்கள் வேண்டும். 
  • அஃதோடு மட்டுமல்லாமல் மகான்களின் தொடர்பு கிடைப்பதற்கும், ஸ்தல யாத்திரை செல்வதற்கும், தர்மங்களில் நாட்டம் வருவதற்கும் புண்ணியம் தேவைப்படும். 
  • பிறகு ஆணாக, பெண்ணாக, ஆரோக்கியமான உடல் கிடைக்க புண்ணியங்கள் வேண்டும். பெண்ணாக பிறப்பதற்கு புண்ணியம் வேண்டும். 
  • பெண் என்றால் பெண் தோற்றத்தில் மட்டுமல்ல. அந்தப் பெண் உணர்வை நன்றாக உணரக் கூடிய, பெண்மைக்குரிய குணங்கள் மேலோங்கி நிற்கக்கூடிய சாத்வீகமான பெண்ணாக பிறப்பதற்க்கென்றே சில புண்ணியம் தேவைப்படும். 
  • அதன் பிறகுதான் ஏனைய விஷயங்கள். கல்வி, பணி, பொருளாதாரம் என்று புண்ணியத்தைப் பகுத்துக் கொண்டே வந்தால் ஒரு நிலையில் புண்ணியம் தீர்ந்து விடும். 
  • எதோடு புண்ணியம் தீர்ந்து விடுகிறதோ, அதன் பிறகு அந்த ஆத்மாவிற்கு போராட்டமாகத்தான் இருக்கும். அதை(புண்ணியத்தை)த்தான் அவன், அந்த ஊரிலே பிரார்த்தனை செய்து, தர்மங்களை செய்து, சத்தியத்தைக் கடைபிடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

8 comments:

  1. very very intersting and aboorva thagaval..siram thazhtha vanakkangal gurunatharukku..Nandrigal agnilingam avargalukku..

    ReplyDelete
  2. எனக்கு மிகவும் பிடித்த ஒரு பதிவு , நான் அடிகடி மனதில் நினைத்து அசை போடும் பதிவு . அனைவரும் இந்த பதிவை மனதில் நிறுத்த வேண்டும் . நான் என்ன துன்பப்டுகிறோம் எதற்காக அழுகிறோம் என்று ஒருமுறை மேல உள்ள விஷயத்தை படித்தாலே போதும் . அவன் அதனை கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும் . நல்ல பதிவு அய்யா , இது அனைவருக்கும் பொய் சேரவேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்கிறேன் .....

    ReplyDelete
  3. கர்ம பூமியிலே Means India or tamilnadu

    ReplyDelete
  4. மிக அருமை.இந்த பூமியில் பிறக்க புண்ணியம் செய்ய வேண்டும்.சத்தியம்.நன்றி.
    ஸ்ரீ அகஸ்திய பெருமான் அருள்.

    ReplyDelete
  5. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  6. அகத்தியப் பெருமான் விளக்கிய பிறவியின் ரகசியத்தை உணர்ந்து தெரிந்தவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும். பாரதத்தில், கர்ம பூமியில், இறை பக்தி உள்ள குடும்பத்தில், நிறைய பெரியவர்களின் ஆசியை பெறுகிற, புண்ணிய தலங்களுக்கு செல்கிற, நல்ல வருமானம் உள்ள உத்யோகத்தில்/தொழிலில், அதுவும், ஆணாக/பெண்ணாக பிறந்தவர்கள், எவ்வளவு புண்ணியத்தை சேர்த்து வைத்திருந்தால், இறைவன் இப்படி ஒரு வாழ்க்கையை நமக்கு அருளியிருப்பார்? அப்படி கிடைத்த வாழ்க்கை தந்திருப்பதே அதிகம் என்று தோன்றவேண்டாமா? உலகியல் ரீதியான செல்வம்/வசதி இல்லை என்று கவலைப்படுவதைவிட்டு, நாம் ஒவ்வொருவரும், இறைவனுக்கும்/சித்தர்களுக்கும் மிக்க நன்றியை கூறி, மேலும், எந்த நிலையிலும், நாங்கள் ஒரு பொழுதும், உங்கள் திருவடியை விட்டு போய்விடக்கூடாது என்கிற ஒரு பிரார்த்தனையை அவர்களிடம் எப்போதும் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி இருந்தால், நிச்சயம், நமக்கு எது தேவை என்கிற விஷயங்களை (அவர்கள் தீர்மானிக்கிற விஷயங்கள்), அவர்களே கிடைக்குமாறு அருள் புரிவார்கள். இதை மனதில் கொண்டு, அகத்தியர் நீட்டுகிற கரத்தை பிடித்துக் கொண்டு, மேலேறிவருகிற வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று, அவர் பாதம் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரி , அதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன் . நம்மக்கு இது கிடைத்ததே பெருசு ஆனாலும் ஆசை யாரை விட்டது அது படுத்தும் பாடுதான் இதெல்லாம் .....

      Delete