​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 6 April 2017

சித்தன் அருள் - 634 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையால் மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டியது யாதென்றால் இஃதொப்ப ஆசையும், தீவிர ஆசையும், நிலையற்ற தன்மைமேல் வைக்கின்ற பற்றும், என்றுமே துன்பத்தை தந்துகொண்டுதான் இருக்கும். விழிப்புணர்வற்ற, ஞானமற்ற ஒன்றின் மீது மனிதன் வைக்கின்ற விருப்பமோ, ஆசையோ, பற்றோ கட்டாயம் ஒரு நிலையில் அவனுக்கு இன்பத்தை தருவதுபோல் இருந்தாலும் மறுநிலையில் துன்பத்தைத் தரும். அதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு வனாந்தரம் செல்ல வேண்டுமா? குகையிலே அமர்ந்து சதாசர்வகாலம் தவம் செய்ய வேண்டுமா? என்றெல்லாம் மனிதர்கள் வினவலாம். அது ஒரு நிலை. இந்த சமூக வாழ்க்கையை நன்றாக நேர்மையாக மேற்கொள்வதோடு, எந்த பந்தபாசத்திலும், பற்றிலும் ஆழ்ந்துவிடாமல் வாழப்பழகுவதே மெய்ஞானத்தை நோக்கி நன்றாக வலுவாக செல்வதற்குண்டான வழிமுறையாகும். ஒன்று தீவிரமான, நேர்மையான சிந்தனையை வளர்த்துக்கொண்டு அந்த நேர்மையான சிந்தனைக்கு பங்கம் வராமல் வாழக் கற்றுக்கொண்டிட வேண்டும். இல்லையென்றால் பரிபூரண சரணாகதி பக்தியிலே தம்மை ஈடுபடுத்திக்கொண்டு "அனைத்தும் இறைவனுக்குத் தெரியும். இறைவன் பார்த்துக்கொள்வார்" என்று வாழ்ந்துவிட வேண்டும். ஆனால் மனிதர்கள், சில சமயம் அப்படியும், சில சமயம் இப்படியும் வாழ்வதே பல்வேறுவிதமான குழப்பங்களுக்கு வழிவகுக்கிறது. இப்படி வழிவகுத்திடாமல் மனிதன் தன்னையும் நிம்மதியாக வைத்துக்கொண்டு, தன்னை சுற்றியுள்ளவர்களையும் நிம்மதியாக வாழும்படி செய்வதற்குண்டான செயலை செய்வதே, வாழ்க்கையை எமது வழியில் வாழ்வதற்கு ஒப்பாகும். தன்னை சுற்றியுள்ள எல்லாவகை உயிர்களுக்கும் எந்த வகையிலும் தீங்கை செய்யாமல், எண்ணுகின்ற எண்ணத்தில் கூட பிறரை இழிவாக, தரக்குறைவாக எண்ணாமல், பிறரை பற்றி ஒரு தவறான விமர்சனத்தை உருவாக்கிவிடாமல், வாழக் கற்றுக்கொள்ள அஃதே இறைவழியில் செல்வதற்குண்டான சரியான வழியாகும்.

9 comments:

 1. Agnilingam sir how can I meet you

  ReplyDelete
  Replies
  1. Why you want to meet me? Any specific reason?

   Delete
  2. yes i have reason please reply me

   Delete
 2. ஓம் ஸ்ரீ அகத்திய சித்த குருசுவாமியே சரணம்.....

  ReplyDelete
 3. ஐயா அவர்களுக்கு வணக்கம்...ஓம் ஸ்ரீ அகத்திய பெருமானை என் குருவாக நினைத்து பூஜைசெய்த நாளிலிருந்து எங்கள் வாழ்கையில் இருந்த துன்பங்கள் விலகி நிம்மதியுடன் இருக்கி றே ாம் ....என் மனதளவிலும் எவ்வளவோ மாற்றங்ளையும் உணர்கிறேன்...நம்பினால் நடக்கும் என்ற நம் குருவின்வாக்கு முற்றிலும் உண்மை.நம்பிக்கையுடன் குருவை சரணடைந்து அனைவரும் வளம்பெறவேண்டும்...நம்பிக்கை தரும் சித்தன் அருள் வலைதளம் வாழ்க பல்லாண்டு காலம்.... ஐயா அவர்களின் சேவையும் மென்மேலும் சிறக்கவும் நலமுடன் இருக்கவும் எம்பெருமானை பிராத்திக்கிறேன்.... ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ.....

  ReplyDelete
 4. ஐயா அவர்களின் ேசவைக்கு என் மனமார்ந்த நன்றியையும் தெரிவிக்கிறேன்.....

  ReplyDelete
 5. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

  ReplyDelete
 6. ஓம் அகத்தியர் ஐயா லோபமுத்ரா தாய் திருவடிகள் சரணம் சரணம்

  ReplyDelete
 7. ஓம் ஶ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாப விமோட்சனம் ரோக அகங்கார துர்விமோட்சனம் சர்வதேவ சகல சித்த ஒளி ரூபம் சதுர்யுக சற்குருவே ஓம் அகத்திய கிரந்த கர்த்தாயே போற்றி...

  ReplyDelete