​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 14 April 2017

சித்தன் அருள் - 641 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியர் அடியவர்கள் அவர்கள் குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், சித்தன் அருளின் "ஹேவிளம்பி" தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

யாங்கள் அடிக்கடி கூறுவது போல, இறைவன் அருளால் கூறுகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமே சிந்தனை. தொடர்ந்த சிந்தனை என்பது மனமாகும். விழிகளை மூடிக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் மனதை உற்று நோக்கினால் அதில் எத்தனையோ ஆசா, பாசங்கள் இருக்கலாம். அவற்றிலே ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். அதை விட்டுவிட்டு மேலும் பார்த்தால் என்ன தெரியும்? லோகாயம் மட்டுமே அதில் நிரப்பப்பட்டு இருக்கும். ஒன்று இல்லக்கடமை அல்லது தசக்கடமை அல்லது அப்பொழுது அவன் சந்திக்கின்ற கடுமையான பிரச்சினை குறித்த சிந்தனை அல்லது எதிர்காலத்தில் வேறு எஃதாவது புதிதாக ஒரு பிரச்சினை இதனை சார்ந்து வந்துவிடுமோ? என்ற அச்சம். இஃது எதுவுமே இல்லாத மனிதனாக இருந்தால் பொழுதை ஆக்குவதற்கு பதிலாக பொழுதை போக்குகிறேன் என்று அந்தப் பொழுதை வீண் செய்வதும் அதற்காக தனத்தை வியம் செய்வதுமான ஒரு அசுரத்தனமான செயல்களில் ஈடுபடுவது. இப்படி மனதிற்கு அந்த மாபெரும் சக்திக்கு சரியான பணியை தராமல் அதன் ஆற்றலை முறைபடுத்தி பயிர்களுக்கு அந்த மனோசக்தி எனப்படும் நீரை பாய்ச்சாமல் தேவையற்ற வெள்ளமாக வடிய விடுவதுதான் மனிதனுக்கு என்றென்றும் இயல்பாக இருந்து வருகிறது. எல்லோருக்குமே இது பெரும்பாலும் பொருந்துகிறது. உடல் வேறு, உடலில் குடிகொண்டு இருக்கும் ஆத்மா வேறு. ஆத்மா எத்தனையோ உடல்களுக்குள் இருந்துகொண்டு, புகுந்துகொண்டு பிறவி என்ற பெயரில் வாழ்ந்து, மடிந்து, வாழ்ந்து, மடிந்து சேர்த்த வினைகளின் தொகுப்புதான், அந்த வினைகளின் அடிப்படையில்தான் அடுத்த உடம்பு கிடைத்திருக்கிறது. அந்த உடம்போடு அந்த ஆத்மா மயக்கமுற்ற நிலையிலே தன்னை அறியாமல் வாழ்கிறது. அப்படி வாழ்கின்ற அந்தப் பிறவியிலும், அது பல்வேறு வினைகளை செய்கிறது. அதில் பாவமும், புண்ணியமும் அடங்குகிறது. இதிலே பாவங்களைக் குறைத்து எல்லா வகையிலும் புண்ணியங்களை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மகான்களின் உபதேசமாக இருக்கிறது. இந்த புண்ணியத்தை கனவிலும், நனவிலும், ஒவ்வொரு அணுவிலும் எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டே, கடமைகளை பற்றற்ற நிலையில் ஆற்றிக்கொண்டே உள்ளத்தில் சதாசர்வகாலம் இறை சிந்தனை மட்டும் வைத்துக்கொண்டு, எதனையும் இறைவன் பார்த்தால் எப்படி பார்ப்பாரோ அந்த பார்வையில் பார்க்கப் பழகினால் மனம் நிம்மதியான நிலையிலிருக்கும். நிம்மதியான மன நிலையில்தான் மனிதனுக்கு பெரிய ஞானம் சார்ந்த விஷயங்கள் மெல்ல, மெல்ல புரியத் துவங்கும்.

பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை என்பது எக்காலத்திலும், எந்த மனிதனுக்கும் கிடையாதப்பா. பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறான்? என்பதில்தான் வாழ்க்கை நிலை அடங்கியிருக்கிறது. அசைக்க முடியாத இறை பக்தி கொண்ட மனிதனுக்கும், அப்படியில்லாத சராசரி மனிதனுக்கும் வேறுபாடே, அதிகளவு துன்பத்தை பார்க்கும்பொழுது அதனை எப்படி எதிர்கொள்கிறான்? என்பதை பொறுத்துதான். ஒரு வேளை இறைபக்தி இல்லாவிட்டாலும் தன்னுடைய அனுபவ அறிவைக்கொண்டும், தான் கற்ற கல்வியைக்கொண்டும் துன்பங்களை எதிர்கொண்டு வாழ்கின்ற மனிதன் எத்தனையோ மடங்கு மேலப்பா, இறைபக்தி இருந்தும் சோர்ந்து போகின்ற மனிதனைவிட. எனவே மனசோர்வு மிகப்பெரிய பிணி. அதற்கு இங்கு வருகின்ற யாரும் இடம் தராமல் இருப்பதே சிறப்பு.


8 comments:

 1. அய்யா அவர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .....

  ReplyDelete
 2. மதிப்பிற்குரிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கும்,
  மதிப்பிற்குரிய திரு.அகினிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கும்,
  மற்றும் நம் குரு அகத்தியர் அடியவர்களுக்கும்,

  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  எல்லோரும் எல்லையில்லா நன்மைகள் பெற்று வாழ குரு அகத்தியர் அருள் புரிய வேண்டுகிறேன்.

  மிக்க நன்றி,
  இரா.சாமிராஜன்

  ReplyDelete
 3. ஹேவிளம்பி means sir explained briefly

  ReplyDelete
 4. நாளை 14 04 2017 வெள்ளிக்கிழமை காலை 2 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார்.

  இதுவரை நடைபெற்றது 'துர்முக' வருடமாகும்
  'துர்முக' என்றால் 'கேடுவிளைவிக்கிற' என்ற வராஹமிஹிரர் வாக்குப்படி அதன் கெடு பலனை நம் நாட்டில் நிறையவே நாம் உணர்ந்தோம்.

  நாளை முதல் 'ஹேமலம்ப சம்வத்சரம்' என்று அழைக்கப்படுகிறது

  சம்வத்சரம் என்றால் ஆண்டு, வருடம் என்று அர்த்தம்.
  ஹேம என்றால் தங்கம்..லம்ப என்றால் லட்சுமி. இரண்டையும் சேர்த்து சொல்லிப்பார்க்கும்போது இந்த வருடத்தின் பெயரின் அர்த்தம் விளங்கும்
  எல்லாவகையிலும் 'செழிப்பான' என்று புரிந்துகொள்ளலாம்.

  அகஸ்தியர் பரம்பரையில் வந்த சித்தர்களால் இந்த வருடம் 'ஹேவிளம்பி' வருடம் என்றும் அழைக்கப்படுகிறது.

  மொத்தம் 60 வருடங்கள். அதில் இந்த ஹேமலம்ப வருடம் 31 வது வருடமாக வருகிறது.
  31 முதல் 35 வரை உள்ள 5 வருடங்களும்
  ப்ரஹ்மாவின் புத்திரர்களான பிரஜாபதி என்ற ரிஷிகளால் ஆளப்படுகிறது.

  நமது முன்னோர்களாக கருதப்படும் இவர்கள்,
  இந்த நாட்டையும், மனித குலத்தையும், மற்றைய அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் நமது முன்னோர்களாக சொல்லப்பட்டிருக்கிறது.

  விசாக நக்ஷத்ரமும் அனுராதா என்று சொல்லப்படுகிற அனுஷ நக்ஷத்ரமும் கூடிய நன்னாளில் இந்த வருடம் ஆரம்பிக்கிறது

  விசாக நக்ஷத்ரத்தின் க்ரஹம் குரு
  அனுஷ நக்ஷத்ரத்தின் க்ரஹம் சனீஸ்வரர்.

  குருவும் சனியும் சேர்ந்தால் அது மஹா பாக்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது. நாளை கிழமையும் வெள்ளிக்கிழமை

  ஆகையால் இந்த மாதிரி குரு சனி வெள்ளி (சுக்ரன் ) சேர்க்கையில் பிறக்கும் இந்த ஆண்டு நமக்கும், மற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் எல்லாவகையிலும் சிறந்ததாக இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.

  'லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து'

  ReplyDelete
  Replies

  1. மதிப்பிற்குரிய திரு.அகினிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

   மிக சிறப்பான விளக்கம் அய்யா.

   மிக்க நன்றி
   இரா.சாமிராஜன்

   Delete
  2. Agniligam arunachalam sir end agathiyar pakkanu,kelvi kekanum

   Delete
 5. அய்யா அவர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .....

  ReplyDelete