​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 25 April 2017

சித்தன் அருள் - 654 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

செடி,கொடிகளைக் கொன்றுதான் நாங்கள் இந்த பூமியில் வாழ வேண்டுமா? வேறு மாற்று வழியில்லையா?

மனிதனாக பிறந்து விட்டாலே பாவங்கள் செய்துதான் ஆக வேண்டும் என்பதற்கு, இந்த வினாவும் ஒரு உதாரணம். ஆனாலும் ஐம்புலனை சரியாக கட்டுப்படுத்தி. யோக நிஷ்டையில் அமர்ந்து, யோக மார்க்கத்தில் செல்லக்கூடிய ஒரு பாக்கியம் பெற்ற ஆத்மாக்கள் ஐம்பூதங்களில் இருந்து தன் உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியும். காட்டிலிருந்தும், தன்னை சுற்றியுள்ள கதிர்வீச்சிலிருந்தும், சூரிய, சந்திர ஒளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் கூட அந்தந்த பொருளின், புற பாதிப்புகள் ஏதும் இல்லாமல், தன் உடல் சோரா வண்ணம், தேவையான சத்துக்களை கிரஹிக்க முடியும்.  இதற்கு “பஞ்சபூத சாஸ்திர சக்தி தத்துவ முறை"  என்று பெயர்.  இவற்றையெல்லாம் சராசரி மனிதனால் உடனடியாக பின்பற்ற முடியாது.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete