​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 4 April 2017

சித்தன் அருள் - 632 - ஞான ஜோதி அம்மா!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமான் காட்டுகிற மெய் வாழ்க்கையை வாழ எல்லோருக்கும் ஆசை இருக்கும். இருப்பினும், குடும்ப சூழல் பல முறை அதை தடுத்துவிடும் என்பதே பலரின் வாழ்க்கையில் காண முடிந்தது. ஒரு சில ஆத்மாக்களுக்கு, எல்லாவற்றையும் உதறிவிட்டி, அகத்தியர் கையை பிடித்துக்கொண்டு நடக்கிற பாக்கியம், விதியானது இறைவன் அருளால் அனுமதிக்கும். அப்படி வாழ்ந்த ஒரு புண்ணிய ஆத்மா, ஞான ஜோதி அம்மா. அகத்தியர் அடியவர்களிடையில் நல்ல நட்பை உருவாக்கி, பல நேரங்களில் சரியான பாதையை அகத்தியர் அவர்களுக்கு உரைக்க, அதை பிறரும் தொடர்ந்து நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் பிறருடன் பகிர்ந்து கொண்டு, அவர்கள் வாழ்க்கையையும் மேம்படுத்தி, நிறைய தான தர்மங்களை செய்து நம்மிடை வாழ்ந்தவர், இன்றுகாலை 4 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.


[வள்ளலார் கண்ட ஜோதியை, அகத்தியப் பெருமானிடம் அருள் தீக்ஷையாக உள்வாங்கிய புகைப்படம்]

இவரது வாழ்க்கையில், அகத்தியர் இவருக்கு சொன்னது அனைத்துமே அதன் படியே நடந்தது என்பதிலிருந்து, இவர் அகத்தியப் பெருமானின் கனிவான அருளை, எவ்வளவு பெற்றவர் என்பது தெளிவாக்குகிறது.

அவர்களின் ஆத்மா இறைவனடி சேர்ந்து மோக்ஷமடையவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் "சித்தன் அருள்" வலைப்பூ, அகத்தியர் அடியவர்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேதே அகத்தீசாய நமஹ!

7 comments:

 1. அம்மா அவர்களின் புண்ணிய ஆத்மா இறைவனடி சேர்ந்திட பிராத்திக்கிறேன்......ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 2. திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

  ஞான ஜோதி அம்மாவை பற்றி சில குறிப்பு பகிர வாய்ப்பு இருந்தால் பகிருமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். அவர்களை பற்றி ஒரு குறிப்பும் எனக்கு தெரியாது. அவர்களின் ஆத்மா இறைவனடி சேர்ந்து மோக்ஷமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

  மிக்க நன்றி அய்யா,
  இரா.சாமிராஜன்

  ReplyDelete
  Replies
  1. பதிவில் சேர்த்தமைக்கு மிக்க நன்றி அய்யா.
   இரா.சாமிராஜன்

   Delete
 3. ஸ்ரீ அகத்தியாய நமஹ4 April 2017 at 11:02
  அம்மா அவர்களின் புண்ணிய ஆத்மா இறைவனடி சேர்ந்திட பிராத்திக்கிறேன்......ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ

  ReplyDelete

 4. ஸ்ரீ அகத்தியாய நமஹ
  அம்மா அவர்களின் புண்ணிய ஆத்மா இறைவனடி சேர்ந்திட பிராத்திக்கிறேன்.....

  ReplyDelete
 5. ஸ்ரீ அகத்தியாய நமஹ4 April 2017 at 11:02
  அம்மா அவர்களின் புண்ணிய ஆத்மா இறைவனடி சேர்ந்திட பிராத்திக்கிறேன்......ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 6. Sorry I do not have tamil key board. Hence this post is in english. Gana Jothi Amma was a great soul and enjoyed Ahathiar's blessing. She used to refer to the saint as Appa in all her speeches. She must have died in USA where she lived with her children.
  Pray to Agasth muni to bless me also on the same lines.

  NRSridharan

  ReplyDelete