​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 27 April 2017

சித்தன் அருள் - 656 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு ஆத்மா எப்போது? எந்த மாதத்தில்?  ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் உள்ள பிண்டத்தில் பிரவேசிக்கிறது என்பதை முழுக்க, முழுக்க இறைவன்தான் முடிவெடுப்பார். இஃதொப்ப ஆணும், பெண்ணும் சேர்ந்து சதை பிண்டத்தை உருவாக்குகிறார்கள். அதற்குள் என்ன வகையான ஆத்மா? அது என்ன வகையான காலத்திலே, என்னென்ன வகையான நிலையிலே அந்தப் பிண்டத்திற்குள் நுழைய வேண்டும் என்பதை இறைவன் முடிவெடுக்கிறார். எப்படி முடிவெடுக்கிறார்? அந்தக் குடும்பம், புண்ணியம் அதிகம் செய்த குடும்பமா? புண்ணியங்களை தொடர்ந்து செய்து வரும் பாரம்பர்யம் மிக்க குடும்பமா? அப்படியானால் அந்த புண்ணியத்தின் அளவின் விழுக்காடு எந்த அளவு இருக்கிறது? புண்ணியத்தின் தன்மை எந்தளவிற்கு இருக்கிறது? அப்படியானால் அதற்கு ஏற்றாற் போல் ஒரு புண்ணிய ஆத்மாவை அங்கே பிறக்க வைக்க வேண்டும். அப்படியானால் அந்த புண்ணிய ஆத்மா அங்கே பிறப்பதற்கு எந்த கிரக நிலை உகந்தது? என்பதையெல்லாம் பார்க்கிறார். அதற்கு ஏற்றாற் போல்தான் அந்த ஆணும், பெண்ணும் சேரக்கூடிய நிலையை விதி உருவாக்கும். விதியை இறைவன் உருவாக்குவார். அதன் பிறகு அந்த சதை பிண்டம் உருவாகின்ற நிலையில் ஒரு ஜாதகம் இருக்கும். அதுவும் கூடுமானவரை உச்சநிலை ஜாதகமாகவே இருக்கும். இந்த கூடு உருவாகிவிட்ட பிறகு நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளானது அதற்குள் ஆத்மாவை அனுப்புகின்ற ஒரு காலத்தை நிர்ணயம் செய்து அதற்கேற்ற கிரக நிலைக்கு தகுந்தாற்போல் உள்ள கால சூழலில் அதனை முடிவெடுப்பார். இது ஆதியிலும் நடக்கலாம். இடையிலும் நடக்கலாம். இறுதியிலும் நடக்கலாம். இஃதொப்ப நிலையிலே சில மிக விசேஷமான புண்ணிய சக்தி கொண்ட ஆத்மாக்கள் ஒரு முறை உள்ளே சென்று விட்டு பிறகு மீண்டும் வெளியே வந்து இறைவனைப் பார்த்து "நான், இந்த குடும்பத்தில் பிறக்க விரும்பவில்லையே! வேறு எங்காவது என்னை அனுப்புங்கள்" என்றெல்லாம் உரைக்கின்ற நிலைமையும் உண்டு. இஃதொப்ப நிலையில், அஃதொப்ப அந்த பிண்டம் ஆண் பிண்டமாக இருக்கலாம். உள்ளே இருக்கின்ற ஆத்மா, பெண் தன்மை கொண்ட ஆத்மாவாக இருக்கலாம். அஃதொப்ப அந்த பிண்டம் பெண் பிண்டமாக இருக்கலாம். உள்ளே நுழைகின்ற ஆத்மா, ஆண்  ஆத்மாவாக இருக்கலாம் அல்லது பெண் ஆத்மாவாக இருக்கலாம். பெண் பிண்டம், பெண் ஆத்மா – அங்கு பிரச்சினை இல்லை. ஆண் பிண்டம், ஆண் ஆத்மா – அங்கும் பிரச்சினை இல்லை. ஆனால் இதை மாறி செய்வதற்கும் சில கர்ம வினைகள் இருக்கின்றன. இதற்குள் நுழைந்தால் அது பல்வேறு தெய்வீக சூட்சுமங்களை விளக்க வேண்டி வரும்.

8 comments:

  1. Om Lopamudramata Samhet Agatheesaya Namah

    ReplyDelete
  2. Etho soltringanu puriyuthu but enna theriyala please konjam puriyara mathiri soltringala

    ReplyDelete
    Replies
    1. ஏன் இங்கு பிறந்தோம்? இறைவனுக்கு கண்ணில்லையா? எதற்க்காக இப்படி சிரமப்படுகிறோம்? யார் நம் பிறவியை எப்படி எந்த காலத்தில் தீர்மானிக்கிறார்கள்? இந்த பிறவிக்கான தகுதி என்ன? இதிலிருந்து விடுபடுவது எப்படி போன்ற விஷயங்களை யோசிப்பவர்களுக்கு, இன்றைய அகத்தியரின் அருள் வாக்கு.

      Delete
    2. OK agnilingam jii but puriyalaye please explain pantringala

      Delete
  3. ஐயா.. அகத்திய பெருமானின் திருதாழ் வணங்கி கேள்வியாவது அவரின் ஜீவ நாடி வாசிப்பவர்கள் நாடிக்கு சன்மானம் இல்லை என்றும் பரிகாரம்/ அன்னதானம் என்று அளவிற்கு அதிகமாக கேட்பது அகத்திய பெருமான் வழி வகுக்க வேண்டும். தங்களது அருள்வாக்கு தொடரினை படித்து அதில் தாங்கள் இது பெருமான் வாக்கு என்று கூறியதால் இந்த சந்தேகம்.

    ReplyDelete
  4. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  5. ஐயா , மன்னிக்கவும் ஆத்மாவுக்கு ஆண் பெண் என்று பிரிவு இல்லை என்று படித்திருக்கிறேன் .

    ReplyDelete