​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 8 April 2017

சித்தன் அருள் - 635 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஆத்திசூடியில் வரும் ‘ அரவம் ஆடேல், அனந்தல் ஆடேல் “ என்பதன் பொருள் பாம்போடு பழக வேண்டாம் என்பதுதான் நேரடியான பொருள் என்றாலும் கூட, இஃதொப்ப இந்த பாம்பானது சுருண்டு கிடக்கும் பட்சத்திலே அந்த குண்டலினி ஆற்றல் எனப்படும் அந்த சக்தி, மனிதனுக்கு தெரியாமல் போய்விடுகிறது. இந்த ஆற்றலை பாம்பாக உருவகப்படுத்துவது மகான்களின் ஒரு நிலையாகும். இஃதொப்ப நிலையிலே அப்படி சுருண்டு கிடக்கும் அந்தப் பாம்பை ஆடாமல், அசையாமல் நேராக நிமிர்த்தி மேலே ஏற்ற வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும்.

6 comments:

  1. அருமையான விளக்கம் ....

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  3. இந்த 786 என்னை பற்றிய ஒரு ரகசியத்தையும்,அகத்தியர் அவர் கைகளால் செய்த ரசலிங்கம் பற்றியும்,அகத்தியரின் சீடனாக இருந்து முஸ்லீம் சமயத்தை உண்டாக்கிய நபிகள் நபிகள் நாயகம்
    வரலாற்றை உங்களுக்கு கூறுகிறேன்.இது அகத்தியருக்கும்,எனக்கும் என் குருவுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம்.உலக நன்மைக்காக உங்களுக்கு தருகிறேன்.பயனடையவும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன் ....

      Delete
    2. வணக்கம் திரு.ராம்குமார் அவர்களே,

      தங்களின் பதிவுக்காக தினந்தோறும் காத்திருக்கிறோம். நன்றி வணக்கம்

      இரா.சாமிராஜன்

      Delete