​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 29 December 2025

சித்தன் அருள் - 2054 - அன்புடன் அகத்தியர் - இலங்கை யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - 1







அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால் 23/12/2025 அன்று நடந்த யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 1

தேதி : 23/12/2025, செய்வாய்க்கிழமை. 
நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை...
இடம் : கீரிமலை தீர்த்தக்கரை மண்டபம், நகுலேஸ்வரம், யாழ்ப்பாணம்

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 
====================================

அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால் 23/12/2025 அன்று நடந்த யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 1

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அப்பனே, நன்மைகள் ஏராளம். ஆனாலும், அப்பனே, மனிதனிடத்தில் உண்மை நிலைகள் பின் புரியவில்லையே அப்பா. 

==========================
# ஸ்ரீ ராமபிரான் கண்டுபிடித்த மாந்தி கிரகத்தின் ரகசியங்கள் 
========================== 

குருநாதர் :- இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இங்கு, அப்பனே, பின் கிரகத்தை, அப்பனே, எப்படி ஏது என்றெல்லாம், அப்பனே, கண்டுபிடித்தானே ராமபிரான். அவனைப் பற்றித்தான் சொல்லப் போகின்றேன் அப்பனே. 


குருநாதர் :- மிகப்பெரிய கிரகம், அப்பனே, மாந்தி. அப்பனே, அதை விட்டுவிட்டார்கள், அப்பா. இதனால், அப்பனே, அதை எப்படி எடுத்தால், அப்பனே, எப்படி நலன்கள் நடக்கும் என்பதை எல்லாம் நான் எடுத்துரைக்க போகின்றேன், இப்பொழுது, அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா… புரிகிறதா? இந்த உலகத்தில் மாந்தி என்ற கிரகத்தைப்  பற்றி எடுத்துரைக்க போகிறார். அந்த கிரகத்தை யார் கண்டுபிடித்தார்கள் தெரியுமா? ஸ்ரீ  ராமர்.  இதுக்கு யாருக்காவது தெரியுமா?  எனக்கும் தெரியாது. 

குருநாதர் :- இதைத்தன் எவை என்று புரிய பல கோணங்களில் அறிந்தும் கூட, பல ஞானியர்கள் ராமனுக்கு நிச்சயம் இவ்வாறாகத்தான், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், இதை என்று கூட நடக்கப்போகின்றது. இதனால், எப்படி நிச்சயம் வெல்ல முடியாது என்றெல்லாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஸ்ரீ ராமபிரானுக்கு பல ஞானிகளும் இருக்காங்க, இல்லையா? அவர்கள் அனைவரும் இப்படி வரப்போகுது… இப்படித்தான் நடக்கப் போகிறது… என்று சொல்லிட்டாங்களாம். ஆனா, அதைத் தடுக்க வழி சொல்லல. அது எப்படி நடக்குது, எப்படி நடக்கப்போகுது, என்னென்ன ஆகப்போகுது — இதை மட்டும் சொல்லிட்டு ஞானிகள்,  அறிவுறுத்துறாங்க ஸ்ரீ ராம பிரானுக்கு.


குருநாதர் :-  ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட இவை எவ்வாறு தடுப்பது என்பதை எல்லாம் பின் அனுமானை அழைத்து.


குருநாதர் :-  பின் அனுமானும், பின் இறைவா, அனைத்தும் நீங்கள் அறிந்ததை எதை என்று பொறுத்து, பின் நிச்சயம் உங்கள் தவம், பின் மிகச் சிறந்தது. அதை நான் கண்டுள்ளேன். அத்தவத்தின் வலிமையால், நீங்களே உங்களை உணர்ந்து அறிந்து கூட, பின் கண்டுபிடியுங்கள். யான் அழகாக, பின் மௌனம் காத்திருக்கின்றேன். 
சுவடி ஓதும் மைந்தன் :-   ஸ்ரீ  ராம பக்த அனுமானும் - ஸ்ரீ  ராமபிரானிடம் சென்று , “என்  இறைவா , நீங்கள்  தவத்தில் சிறப்பானவர்.  ஆனால், அதை நீங்களே உங்கள் தவத்தின் வலிமையால் கண்டுபிடிக்கவேண்டும்” என்று சொல்கின்றார்.
குருநாதர் :-  அப்பா, எதை என்று புரிய ராமன், நிச்சயம் ஆழ்ந்த தியானத்தில் அறிந்தும், இவைத்தன் அப்பா, எதை என்று அறிய. பின் இவைத்தன், பின் சூரியனை சுற்றி, பின் பல கோள்கள். ஆனாலும், இதில் ஒரு மாந்தி, பின் அறிந்தும், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்தும் கூட, எதை என்று கூட, அக்கோளானது, பின் கடல் தன்னிலே விழுந்தது. 


சுவடி ஓதும் மைந்தன் :- பல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, அந்த கோள் எங்கே இருந்தது தெரியுமா? கடலில் விழுந்துச்சு. அந்த கோள் கடலிலே விழுந்துச்சு. அப்போ ஸ்ரீராமபிரான் இவர் என்ன செய்கிறார்?  அவர் அதை எப்படி சொல்கிறாரென்றால்— இவருக்கு அது எல்லாம் ஞான திருஷ்டியால் தெரியும். ஐயா, புரிகிறதா?  யாருக்கு தெரியும்?  ஸ்ரீ ராமபிரானுக்கு தெரியும்.


குருநாதர் :-   எதை என்று அறிவித்து, (மாந்தி கிரகம்) இவை மேலே  சேர்த்தால் மட்டுமே, நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் வெல்லலாம். புரிந்து கொண்டான் ராமனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அந்த மந்தி கோளானது கடலின் கீழே, கடல் அடியில் சென்றுவிட்டது. அதை வென்றால் மட்டும்தான்,  அனைத்தும் வெல்லலாம் என்று  புரிந்து கொண்டார் ஸ்ரீ ராமபிரான்.


குருநாதர் :-   இதன் திசை அறிந்தும், இவை என்று எவை அறிய, நிச்சயம் தன்னில் அங்கு, பின் சிறிதளவு சென்றாலே, நிச்சயம் பின் அக்கோளானது ஈர்த்துவிடும். அவ்வளவு பின் சக்திகள், அதற்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த மாந்தி கிரக கல்லை  நெருங்க முடியாது. அந்த கல்லை வந்து நெருங்க முடியாது.


குருநாதர் :-   இவைத்தன், பின் ஆழ்ந்த அறிந்தும், புரிந்தும் கூட, கடலிடையே ஆழ்ந்த எவை என்று கூட, பின் பன்மடங்கு, பின் சுற்றிக் கொண்டே இருக்கின்றது. கண்ணிமைக்கும், பின் நேரத்தில் அறிந்தும் கூட, பல கோடி மைல்.


சுவடி ஓதும் மைந்தன் :-   “இப்படி கண்ணை மூடி, கண்ணைத் திறக்கும் போது  அது பல கோடி மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றது அந்த கல்.”


குருநாதர் :-   இவைத்தன் ராமனும் கூட யோசித்தான், நிச்சயம் பின் அனுபவித்தே ஆகவேண்டும் என்று தெரிந்துவிட்டது ராமனுக்கு. 




குருநாதர் :-   நிச்சயம், இவைத்தன் இவ்வாறாக, பின் அனுபவிக்கும் பொழுது, நிச்சயம், பின் எப்படியாவது, பின் அக்கோளினை எதை என்று கூற, அவைதனும் கூட, பின் கூர்முனையாகவே, பின் அறிந்தும், எவை என்று கல் அறிந்தும் கூட, இவைத்தன் ஆனாலும், இதனிடையே அக்கல்லை கண்டுபிடித்தால், பின் வரக்கூடிய நேரங்களில் மக்களையும் காப்பாற்றலாம் என்றெல்லாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அது ஒரு கல். கோள் என்றால், அது கல்லே. ஸ்ரீ ராமபிரானுக்கு எல்லா வித்தைகளும் தெரியும். அப்படியிருக்க, அந்த கஷ்டம் வரும் நேரத்திலாவது, அதை நாம் கண்டுபிடித்து , சில பேருக்குச் சொல்லி விட்டோம் என்றால், மக்கள் வரக்கூடிய காலத்தில் என்ன செய்வார்கள்? காப்பாற்றிக் கொள்வார்கள்; தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வார்கள் என்று சொல்லிவிட்டார்.


குருநாதர் :-   அறிந்து எதை என்று கூற. இதனால், நிச்சயம் தன்னில் கூட, ராமனும் , நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக வரப்போகும் என்று நினைத்து, நிச்சயம் அதில் கூட, பின் மக்களுக்கு, பின் வழிவகை, பின் செய்ய வேண்டும் என்றெல்லாம். 


===========================
# பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) ரகசியங்கள் 
===========================


குருநாதர் :-   அப்பா, அறிந்து கூட, பின் அவை எப்படி என்றால், அப்பா, நிச்சயம் தன்னில் கூட, அவ் சுற்றின் வேகமானது, பின் நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும், எவை என்று கூட, சூரியனை, அப்பனே, ஒளி, அப்பனே படும் என்பேன். அதாவது, நீருக்கும் அங்கும் எதை என்று கூட, சுழல் வேகம், சுழல் வேகம் அதிகம் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- அந்த கோள் அது சுற்றிக்கொண்டே இருக்கிறது… அந்த வேகம் எவ்வளவு அதிகமாக, கோடி என்று சொன்னார் இல்லையா? அந்த வேகத்தால் உருவாகும் வைப்ரேஷன் பவர் எங்கே போய் மோதும்? அது சூரியனைத்தான் சென்று அடிக்கும், ஐயா… புரிகிறதா? அது கடலுக்கு கீழேதான் இருக்கிறது—ஒரு கோள் கீழே இருக்கிறது. அந்த கோள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கிறது. அந்த சுழற்சி வேகத்தைப் பார்த்தால், அந்த வேகத்திலிருந்து வரும் ஒளி எங்கே போய் விழும்? சூரியனில்தான் விழும்… புரிகிறதா அய்யா ?


குருநாதர் :-  அப்பா, அறிந்தும், இப்பொழுது, நிச்சயம், அவ்விடத்திற்கு சென்றாலே, நிச்சயம் தன்னில் கூட, பின் நிச்சயம் எவை என்று அறிய, நிச்சயம் நெருங்க முடியாது. இதனாலே, பயங்கள் இப்பொழுதும் தெரியும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமாம்… அந்த இடத்துக்கு போனால் ப்ளைட் எதுவும் பறக்காது. நானும் அதைத்தான் நினைக்கிறேன். அங்க கப்பலும் கூட நெருங்க முடியாதாம். அங்கே ஒரு பெரிய சக்தி மாதிரி ஏதோ இருக்கிறது; அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படியிருக்க, என்ன செய்ய முடியும்? அந்த இடத்திலேயே ப்ளைட்டும் பறக்க முடியாது.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) 
சுவடி ஓதும் மைந்தன் :- இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? அப்படியென்றால், அந்த சக்தி—அந்த force—என்ன ஆகிறது? இங்கிருந்து, கீழிருந்து, அங்கிருந்து… அது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. யார் அதன் அருகில் போனாலும், அது close ஆகிவிடும், ஐயா… புரிகிறதா?


குருநாதர் :-  அப்பப்பா, அறிந்தும் எதை என்று கூற, அனைத்தும், அப்பனே, எதை என்று அறிந்தும் கூட, எதை என்று கூற, அப்பனே, கடைசி, அப்பனே, பின் (பெர்முடா முக்கோணத்தில் இருந்து ) அவ் கதிர்வீச்சு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இங்குதான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, முடிவு, முடிந்து, அப்பனே.  இதனால் முடிவிலிருந்து அதை பிடிக்கலாம் என்றே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்போ… எத்தனை கிலோமீட்டர் தூரம் இருக்கிறது? அங்கிருந்து இங்கே வர்றதுக்கு அந்த அளவு தூரம். அப்படியிருக்க, அதன் வேகம்—அதன் சக்தி—எங்கே முடியும்? அது இலங்கையில் முடியும்.


கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :-  — பெர்முடா முக்கோணம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  பெர்முடா இடம் என்று சொல்றாங்க இல்லையா… அந்த சக்தி வந்து இங்கத்தான் இலங்கையில் முடிகிறது. அதனோட சக்தி முழுவதும் இங்கத்தான் நிற்கிறது. புரியுதா, ஐயா? அது அந்த force தானே.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப ஒரு லைட் இருக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த லைட் எவ்வளவு வெளிச்சம் காட்டும்? எவ்வளவு தூரம் வரை காட்டும், ஐயா? அந்த லைட்டை எடுத்துக்கொண்டால், அதன் வெளிச்சம் ஒரு வரம்பு வரைதான் போகும். அதே மாதிரி, அந்த சக்தியும் கடைசியில் எங்கே வந்து முடிகிறது தெரியுமா? இலங்கையில் முடிகிறது.
குருநாதர் :-  நிச்சயம், இங்கிருந்து சென்றால், அதை வென்று விடலாம் என்று, நிச்சயம் தன்னில் கூட, பின் அனுமானிடம் இதை கூறினான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன ஆச்சு? அனுமனிடம் யார் சொல்கிறார் ? ஸ்ரீ ராமர்… ராமர்தான் சொல்கிறார் . ஏனென்றால் இங்குதான் ஒரு பெரிய சக்தி இருக்கிறது. அது இங்குதான் முடிகிறது. அது முடியும் இடத்திலிருந்து தான் நாம அதை நெருங்க முடியும். அப்போதுதான் நெருங்க முடியும்; அங்க நேரடியாக நெருங்க முடியாது. நாம இங்கிருந்து… இந்த வழியாக வந்தால்தான் அந்த சக்தியை நெருங்க முடியும். அதை யார் சொல்கிறார்? ஸ்ரீ  ராமர் சொல்கிறார் அனுமானிடம்.


குருநாதர் :-  இதைத்தன் அறிந்தும், புரிந்தும், இவைத்தன் எவ்வாறு? நிச்சயம் தன்னில் கூட, பின் இன்னும் ரகசியங்கள். இதனை எவ்வாறெல்லாம். பின் அனுமானும், பின் அதாவது, பின் இறைவா, அறிந்து கூட, அனைத்தும், பின் புதுமையான வித்தைகளாக இருக்கின்றது. இதை எப்படி சரி செய்வது என்று, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, அனுமானே, அறிந்தும், பின் ஓர் முறை அங்கு நெருங்கு பார்ப்போம். பின் அதாவது, முதலே நீ சென்றிட்டு வா என்று, ராமனும் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்போ ஸ்ரீ ராமர் என்ன செய்கிறார்? அனுமனிடம்  சொல்கிறார்: “அனுமனே , நீ முதலில் போய் பெர்முடா முக்கோணம் அதை பார்த்து வா… அந்த சக்தி எப்படி இருக்கிறது என்று நீயே சென்று பார்த்து வா. முதலில் அதை அறிந்த பிறகு தான் நாம அதை சரி செய்ய முடியும்.” என்று சொல்லி, ஸ்ரீ ராமர் ,  அனுமனை பெர்முடா முக்கோணத்திற்கு அனுப்புகிறார்.


குருநாதர் :-  இவை அறிவித்து, பின் அறிந்தும், இதைத்தன் நெருங்க, நெருங்க அறிந்தும், எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும், இவைத்தன், பின் நெருங்க முடியாமல், நெருங்க முடியாமல். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்போ ஸ்ரீ ராம பக்த அனுமன் அங்கு போகிறார். ஆனால் போகும் போதே என்ன ஆகிறது? நெருங்க முடியவில்லை. அந்த இடத்தையும்… அந்த மாந்தி கோளையும் நெருங்க முடியவில்லை. எப்படி சென்றாலும், எவ்வளவு சென்றாலும், நெருங்க முடியாமல் தள்ளப்படுகிறார்


குருநாதர் :-  இவைத்தன் வேகங்கள் அதிகம். எதை என்று அறிய, மீண்டும், பின் அறிந்தும், மீண்டும், பின் வந்து, பின் அறிந்தும், இங்கேயே, பின் இறைவா, நெருங்க முடியவில்லையே என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்போ அனுமன் என்ன செய்கிறார்? நெருங்க முடியலையா… என்று சொல்லி, அவர் இங்கேயே திரும்பி வந்துவிடுகிறார். “ஸ்ரீ ராமா , என் இறைவா என்னால் , நெருங்க முடியலே… என்ன செய்யலாம்?” என்று கூறி, மீண்டும் வந்து சேர்ந்தார்


குருநாதர் :-  பின் அதாவது, ராமனும் என்னை, இறைவா, இறைவா என்று அழைக்கின்றாய். யான் உனை, இறைவா என்று அழைக்கின்றேன். உன் சக்தியை காட்டு, உன்னாலும் அனைத்தும் வெல்ல முடியும் என்று. 




சுவடி ஓதும் மைந்தன் :-  “அனுமனே  என்னை இறைவன் என்று நீ சொல்கிறாய். ஆனால் நான் ஒரு விஷயம் சொல்கிறேன்: உன்னை யான் இறைவா என்று அழைக்கின்றேன் இப்போது, உன்னாலும் அனைத்தும் வெல்ல முடியும் ,” என்று ஸ்ரீ ராமர் அவர் அனுமனிடம் கூறுகிறார்


குருநாதர் :-  இதைத்தன் அனுமானம் முடிவெடுத்தான். இதனால் அறிந்தும், இவைத்தன் பன்மடங்கு ஆயிரக்கணக்கோன், பின் ஒரே மாதிரியாகவே மனித உடம்பு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்போ ஸ்ரீ ராம பக்த அனுமன் அவர் என்ன செய்கிறார்? அனுமன் ஒரே ஒருவர்தான்… ஆனால் அவர் ஆயிரம் பேர் போல தோன்றுகிறார். அவர் மாதிரி பல வடிவங்களில், பல உருவங்களில் தோன்றி, அந்த இடத்தை உடைக்க முயற்சிக்கிறார். அங்கே போனால், அதே மாதிரி ஆயிரம் அனுமான்கள் இருப்பது போலத் தெரிகிறது. ஆனால் உண்மையில் அவர் ஒரே அனுமன் தான். கண்ணாடியில் நம்மை பார்த்தால் எப்படி பல பிரதிபலிப்புகள் தெரியும்… அதே மாதிரி, பல வடிவங்களில் தோன்றி, அவர் தானே அந்த செயலைச் செய்கிறார் அங்கு.


குருநாதர் :-  இதைத்தன் எவ்வாறு என்பதை எல்லாம் நெருங்குகின்ற பொழுது, அறிந்தும் இவைத்தன் ஆனாலும் எதை என்று புரிய, ஆனாலும் இவை என்று அறிய, ஆனாலும் இதனிடம் இன்னும் அறிந்தும், இவை என்று தெரியாமல், நெருங்க, நெருங்க, பின் முடியவில்லையே. மீண்டும் காற்று அதிவேகமாக, இன்னும் பின் இழுத்து, இழுத்து, 


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் முடியவில்லை. இவ்வளவு பேர் சேர்ந்தாலும் என்ன பயன்? அந்த கல்லையோ அந்த கோளையோ நெருங்க முடியவில்லை. 1000 அனுமான் எல்லாரும் முயற்சி செய்கிறார்கள், எல்லாம் செய்து பார்த்தார்கள்… ஆனாலும் என்ன ஆனது? முடியவில்லை. நெருங்கவே முடியவில்லை


குருநாதர் :-  இவைத்தன் அறிந்தும், இதை என் புரிய, நிச்சயம் தன்னில் கூட, மீண்டும் பின் இறைவா, இவ்வளவு ஆனாலும் எதை என்று புரிய, எத்தனை, எத்தனை அறிந்தும் கூட. இதனால் நிச்சயம் அறிந்தும், இவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் ராமனும், நிச்சயம் தன்னில் கூட, மீண்டும் தியானத்தில் அமர்ந்து, நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட, எவை என்று புரிய, நிச்சயம் மீண்டும் தவத்தில். அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் இறைவனை நோக்கி அறிந்தும் கூட, அறிந்தும் கூட. இதனால் மீண்டும், மீண்டும், இதனால் ஒரு பின், ஒரு தன் நினைப்புக்கு வந்தது. நிச்சயம் தன்னில் கூட நல்லது செய்தால், புண்ணியங்கள் பின் செய்தால், நிச்சயம் அக்கோளை அடைந்து விடலாம் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்போ என்ன செய்யவேண்டும்? நல்லதையே செய்ய வேண்டும். புண்ணியம் அதிகமாகச் செய்தால் தான் அந்த கோளைப் பிடிக்க முடியும்


================================
# மரங்கள் நடுவதால் உண்டாகும் புண்ணியங்கள் அளவிடமுடியாது 
================================


===================================
# புண்ணியங்கள் செய்தல் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் 
===================================


குருநாதர் :-  பின் மீண்டும் ராமன், பின் அறிந்தும் கூட, அதாவது, பின் எவை என்று அனுமானை அழைத்து, அனுமானே, நிச்சயம் தன்னில் கூட, தியானத்தில் உணர்ந்தேன். நிச்சயம் தன்னில் கூட, இவ்வுலகத்தில் எவ்வாறெல்லாம், எத்தனை பேர்கள், நிச்சயம் தன்னில் கூட, கலியுகத்தில் கஷ்டத்தான் படக்கூடியவர்கள். ஆனால் அக்கல்லை நாம் வென்று விடலாம். இதனால் நிச்சயம் அறிந்தும், எவை என்று புரிய, அறிய, இவைத்தன் ஆனாலும், இன்னும் பின் ( பெர்முடா முக்கோணத்தில்  உள்ள மாந்தி கோள் கிரகத்தின் ) அதன் பக்கத்தில் ஒரு மலை இருக்கின்றது. மலை இருக்கின்றது. அதை நான் உணர்ந்தேன். அதிலிருந்து, நிச்சயம் தன்னில் கூட, பல மூலிகைகள், பின் எடுத்து வந்து, அங்கங்கு இடு.  இதைத்தன், நிச்சயம் தன்னில் கூட, மனிதனுக்கு, பின் தேவைப்படுகின்ற பொழுது, நிச்சயம் தன்னில் கூட, பின் இயற்கை எதை என்று புரிய, அதை உட்கொண்டாலே, புண்ணியங்கள் ஆகும். இதை நீ செய், இவ்  புண்ணியத்தால் இன்னும் நீ ( உனது புண்ணியங்களை ) பெருக்குவாய், அனைத்தும் கூட என்றெல்லாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்போ அவர் என்ன சொல்கிறார்? அந்த கல்லின் பக்கத்தில் என்ன இருக்கிறது தெரியுமா? ஒரு பெரிய காடு இருக்கிறது, ஐயா… புரிகிறதா? அந்த கோளின் பக்கத்திலேயே ஒரு மிகப் பெரிய காடு இருக்கிறது. அந்த காட்டில் நிறைய மூலிகைகள் இருக்கின்றன.
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்தில் மனிதன் பல நோய்களை உருவாக்குவான். கஷ்டப்படுவான். அதனால், அந்த மூலிகைகளை எடுத்துக்கொண்டு வந்து, எப்படியாவது உலகம் முழுவதும் சென்று அந்த மூலிகையைப் பரப்பி விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- அதன்மூலம் உனக்கு  புண்ணியம் சேரும் போது, நீ அந்த கோளை எளிதாக அடைய முடியும் என்று சொல்கின்றார் ஸ்ரீ ராமர். புரிகிறதா, ஐயா?


குருநாதர் :-  இதைத்தன் அப்படியே அவர் மலையிலிருந்து எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, உலகத்தில் அறிந்தும் எதை என்று புரிய. ஆனால் அழகாக, நிச்சயம் தன்னில் கூட, ஒருமுறை, நிச்சயம் தன் வட்டம் அடித்தான். பின் அனைத்தும் அங்கங்கு இட்டான். நட்டுக்கொண்டது, 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதை எடுத்துக்கொண்டார்… எடுத்துக்கொண்டு போய்விட்டு, வழியெங்கும் என்ன செய்தார் தெரியுமா? வட்டம் அடித்தபடி, அங்கங்கே எல்லாம் தூவி விட்டார். புரிகிறதா? அங்கங்க தூவிவிட்டார். தூவும்போது அவர் என்ன செய்தார்? அந்த மூலிகையையே தூவி விட்டார். அப்படிச் செய்ததால் என்ன ஆனது? எத்தனை மக்களை காப்பாற்றினார், எத்தனை பேருக்கு உதவினார்—அதற்கெல்லாம் புண்ணியம் சேர்ந்து பெரிதாகி விட்டது அனுமனுக்கு.


குருநாதர் :-  அறிந்தும், மீண்டும் அறிந்தும், எவை என்று கூட, பின் அக்கல்லை நோக்கி புறப்படுகின்றேன், இறைவா என்று ராமபிரானிடம் கூறிவிட்டு, பின் சென்று அறிந்தும், நிச்சயம் கோளை, அவ்வளவு வேகத்துடன், பின் இயங்கிக் கொண்டிருப்பதை, அப்படியே நிச்சயம் தன் கையால் தூக்கினான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்போ இங்கே அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? புண்ணியம் செய்யவேண்டும், ஐயா… புரிகிறதா? புண்ணியம் செய்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அதனால்தான் அவர் தவ வலியையும் சேர்த்து, எல்லா முயற்சிகளையும் செய்து, இறுதியில் என்ன செய்கிறார்? அந்த கல்லைத் தூக்குகிறார். அந்த கல்லை… ஐயா, புரிகிறதா? அவர் அதைத் தூக்க முடிகிறது


குருநாதர் :-  அறிந்து, எவை என்று அறிய, மீண்டும், பின் அதாவது, பின் எதை என்று புரிய, பின் ஆகாயத்திலே, எதை என்று அறிய, 


சுவடி ஓதும் மைந்தன் :-  மீண்டும் அதை மேல சேர்க்க வேண்டியதால்தான் அவர் முயற்சி செய்கிறார். எங்கிருந்து அது விழுந்ததோ, அங்கேயே சென்று “இதை மீண்டும் ஃபிட் பண்ணிடலாம்” என்று சொல்லி, அந்த கல்லைத் தூக்குகிறார். கீழே இருந்ததை ( அந்த மாந்தி கிரக கல்லை )  எடுத்துக் கொண்டு பூமிக்கு  மேலே கொண்டு வருகிறார்


குருநாதர் :-  ஆனாலும், பின் நிச்சயம் தன்னில் கூட, மேலே வருகின்ற பொழுது, பூமி அதிர்ச்சிக்குள்ளானது. பூகம்பம் எல்லாம் அங்கங்கு. ஆனால் தெரிந்து கொண்டான் அனுமன். பின் இப்படி, நிச்சயம் தன்னில் மீண்டும், அதை உள்ளுக்குள்ளே வைத்துவிட்டான். 


சுவடி ஓதும் மைந்தன் :- அவர் அதை எடுத்துக்கொண்டு வருகிறார். எடுத்துக்கொண்டு வரும்போது என்ன நடக்கிறது? கடலின் மேல் வழியாக அப்படியே எடுத்துக்கொண்டு வருகிறார். அப்படிக் கொண்டுவரும் நேரத்தில் என்ன ஆகிறது? அழிவு ஆரம்பிக்கிறது. அந்த கல்லையோ, அந்த கோளையோ எடுத்த உடனே அழிவு வரத் தொடங்குகிறது. பூகம்பங்கள் கூட அதிகமாக ஆரம்பிக்கின்றன. அதைப் பார்த்ததும் அவர் என்ன செய்கிறார்? திரும்பி, அந்த கல்லை மீண்டும் கீழே இருந்த இடத்திலேயே எடுத்துவந்து வைத்து விடுகிறார். அங்கேயே அதை மீண்டும் வைக்கிறார்


குருநாதர் :-  மீண்டும் பின் ராமனிடமே அறிந்தும், நிச்சயம் அதற்கு ஒரு சக்தி அறிந்து கூட, இதனை மேலெடுத்து செல்லலாம் என்று, பின் அதாவது மேலே எழுப்பி வந்தேன். ஆனாலும், அறிந்தும் எவை என்று புரியா, பின் அதாவது, இறைவா, நிச்சயம் பின் அதாவது, பூமி அறிந்து கூட, அதிர்வடைகின்றது என்பதை எல்லாம். இதனால், பின் மீண்டும் அங்கே வைத்துவிட்டேன் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா புரிகிறதா? “நான் அதை மீண்டும் அங்கேயே வைத்துவிட்டேன். ஏன் என்றால் , அதை எடுத்துட்டு மேல கொண்டு வந்த உடனே என்ன ஆகுது? அழிவு வருது… அழிவு வருது. அதனால்தான் அதை அங்கேயே வைத்தேன்,” என்றார்


குருநாதர் :-  நிச்சயம் பின் கலியுகம் மக்கள் பின் நிலைமை எதை என்று அறிய, நிச்சயம் எவை என்று புரிய. இதனால், நிச்சயம் சிறிது அவை மேல் வந்தாலே கடினம் என்றெல்லாம், பின் புரிகின்றது. எதை என்று அறிய, இதனாலே, நிச்சயம் தன்னில் கூட, அவ் சம வேகத்தில், நிச்சயம் அறிந்தும், புரிந்தும், எதை என்று அறிய, வேகத்தில் இயக்கிக் கொண்டிருக்க, நிச்சயம் தன்னில். பின் இவ்வாறாக, நிச்சயம் பல பல மலைகள் சேர்ந்து, நிச்சயம் அதிருகின்ற பொழுது, பின் அக்கோளானது அதிரும். நிச்சயம் இவ்வாறு இன்னும் நிலநடுக்கங்கள் காத்துக் கொண்டிருக்க. ஏனென்றால், அவ் கல் எதை என்று புரிய, வயதாகிக் கொண்டே போகின்றது. இவ்வாறாக, வயதாக, வயதாக, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, அனைத்தும் இவ்வாறாக, சிறிது சிறிதாக, நிச்சயம் தன்னில் கூட, மேல் எழும்பும், இவ்வாறாக. 


அது வயதாக வயதாக என்ன ஆகும்? தானாகவே மேல எழுந்து வருமா? அப்படிச் மேல எழுந்துவந்தால் என்ன ஆகும்? அழிவு வரும்… நிலநடுக்கங்கள் நிறைய வரும்


குருநாதர் :-  இதைத்தன் பின்பற்ற, நிச்சயம் தன்னில் அறிந்தும், புரிந்தும், ஆனால் மேல் வரக்கூடாது என்பதற்கிணங்க, நிச்சயம் பின் பல எதை என்று அறிய, அனுமானும் ராமனும் சேர்ந்து, அறிந்தும் எவை என்று அறிய, பல பல பல கற்களை அதற்கு தகுந்தார் போல் கல் இங்குதான் உள்ளது. இதற்கே சிறந்த அறிந்தும் கூட, அறிந்தும் கூட, இவை தன் உருவாக்கினவன் ராவணனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அது மேலே எழும்பாமல் இருக்கிறதுக்கு ஒரு கல் இருக்குது. அந்த கல் அதை உருவாக்கியது யாரு? ராவணன். அய்யா புரியுதுங்களா? 


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட, இதைத்தன் எவ்வாறு என்பதை எல்லாம், இதனாலே தான் உருவாக்கிய கல்லை எதை என்பதை எப்படி என்பதை எல்லாம் யான் அறிவேன். நீ பயன்படுத்தினாயே என்றெல்லாம், பின் ராமன் மீதே கோபம், ராவணனுக்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த கல்லின் சக்தியை முதலில் கண்டுபிடித்தது ராவணன்; ஆனால் அதை பயன்படுத்தி மக்கள் அழிவு வராமல் காப்பாற்றும் வழியை செயல்படுத்தியது ராமன். கல்லை எடுத்து அங்கு வைத்து பாதுகாக்கலாம் என்று ராமன் செய்தாலும், உண்மையில் அதை கண்டுபிடித்த பெருமை ராவணனுக்கே. ஆனால் அந்த செயலில் ராவணனுக்கு கோபம் ஏற்பட்டது


குருநாதர் :-  ஆக, மொத்தம் அனைவருக்கும் சம வலிமை தான். 


சுவடி ஓதும் மைந்தன் :- இங்க ஆக, மொத்தத்தில் எல்லாருக்குமே எல்லாமே சம வலிமைக்காரர்கள். 


குருநாதர் :-  அனைவருமே பூமியை காக்க வந்தவர்கள் தான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருமே பூமியை காக்க வந்தவர்கள் தான். எல்லாருக்கும் அந்த சக்தி உண்டு. 


குருநாதர் :-  இவைத்தன் அறிவித்து எதை என்று புரிய, அவ் கோளுக்கு வயதாகிக்  கொண்டே இருப்பதால், நிச்சயம் தன்னில் அறிந்தும், பின் எவை என்று அறிய. மீண்டும், அதாவது, ஆகாயத்தில், பின் சூரியனோடு அறிந்தும், புரியும், தொடர்பு கொண்டு, தொடர்பு, தொடர்பு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பின் கிரகங்களின், பின் வரும் நற்பலன்கள், நிச்சயம் பின் மனிதனுக்கு வந்து அடையாது. 




சுவடி ஓதும் மைந்தன் :- கிரகங்கள் சரியாக செயல்பட வேண்டுமெனில், கடலின் ஆழத்தில் இருக்கும் அவ் மாந்தி கோளுக்கு சக்தி ஒரே நிலையாக இருக்க வேண்டும். அந்த சக்தி குறைந்துவிட்டால் அல்லது மாந்தி கோள் சம வேகத்தில் சுழலாமல் இருந்தால், ஜாதகத்தில் உள்ள வியாழன், புதன், குரு போன்ற கிரகங்களின் செயல்பாடு பாதிக்கப்படும். சமநிலை குலைந்தால் கிரகங்கள் தங்கள் பணியைச் செய்ய முடியாது


குருநாதர் :-  அப்பா, ஒன்றை சொல்கின்றேன், அறிந்து கூட, உங்கள் குழந்தையை உங்களிடமிருந்து பிரித்தால் என்ன ஆகும்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  உங்க குழந்தை உங்களிடம் இருந்து பிரிந்து போயிட்டா என்ன ஆகும்? என்ன வருத்தம் அடைய நீங்க? 


குருநாதர் :-  அதுபோல்தான், அப்பா, கிரகங்களின் குழந்தை (மாந்தி )  அக்கோளானது. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ, கிரகங்களோட குழந்தை தான் அந்த ( பெர்முடா முக்கோணம் என்ற பகுதியில் கடலின் அடியில் இருக்கும் மாந்தி என்ற  ) கோளானது. அப்போ, சரியான பாசம் தொடர்பு ஏற்படுத்தி கொண்டே  இருக்கணும். அய்யா புரியுதுங்களா? அப்படி ஏற்படுத்தவில்லை என்றால்  என்ன ஆகும்? ஐயா, அழிவு வரும். கிரகங்கள் வேலை செய்யாது. மொத்தத்தில் நவகிரகங்கள் அது வேலை செய்யாம போயிடும். 


குருநாதர் :-  இதை அறிவித்து இன்னும் இன்னும் எதைப் பற்றி, எவை என்று அறிய, இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, பின் மறைக்கப்பட்டதே. ஆனாலும், சுவடிகளில் அழகாக, அழகாக அதையும் புதைந்து கிடந்தது. 


குருநாதர் :-  ஆனாலும், அதில் இருக்கும் விஷயங்களை மக்களை நிச்சயம் ஏனென்றால், தவ வலிமையால் கலியுகத்தில், நிச்சயம் தன்னில் கூட, அதில் இருக்கும் ரகசியங்கள் மக்களுக்கு தெளிவு அடைய வேண்டும் என்றெல்லாம். ஆனாலும், சுவடிகள் அழிவதில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஞானிகள் எழுதியது எப்படியோ, அது கலியுகத்தில் மனிதருக்கு நிச்சயமாக சேர வேண்டும்; அந்த காலத்தின் சூழ்நிலைகளும் அதில் இணைந்து புரியப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.


குருநாதர் :-  நிச்சயம்  ஞானி, ஞானியர்கள், நிச்சயம் தன்னில் கூட எழுதி வைத்தது என்றும் மாறாதது. இவ்வுலகத்திற்கு தெரியவரும் இன்னும் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஞானிகள் கலியுகத்தில் மனிதருக்கு ஏற்படும் அழிவுகளை முன்கூட்டியே உணர்ந்து, அவை எப்படியாவது மனிதருக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கில் எழுதினர். அவர்களின் வாக்கு பொய்யாகாது; ஆகவே அந்த உண்மைகள் ஒருநாள் நிச்சயமாக எல்லோருக்கும் வெளிப்படும்.


கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- ( இவ் வாக்குகள் கேட்டவுடன் இறைவனை வேண்ட ஆரம்பித்தார் )  ஓம், திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம். இன்பமே, சூழ்க! எல்லோரும் நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வத்தோடு வாழ்க! ஓம், நமச்சிவா! ஓம், சக்தி! ஹர ஹர மகாதேவா! சிவ சிவ சம்போ! மகாதேவா! ஓம், சாமியே, சரணம்! ஐயப்பா! ஓம், முருகப்பெருமானே, போற்றி! ஓம், அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெரும் தென்னை! அருட்பெருஞ்ஜோதி! ஓம், நமச்சிவாய! ஓம், நமச்சிவாய! 


குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக எதை என்று புரிய? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற? அப்பனே, பின் அக்கோளுக்கும் வயது ஆகிக்கொண்டே, ஆகிக்கொண்டே. அப்பனே, இதனால், அப்பனே, பின் அதற்கும் எதை என்று கூற கிரகங்களுக்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சம்பந்தம் குறைந்து கொண்டே வருவதால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இதனை தடுக்கவே, அப்பனே, நிச்சயம்! அப்பனே, பலர், பலர், பலர்! அப்பனே, பின் ராமனுடன் போராடினார்கள் என்பேன் அப்பனே.  எப்படி போராடினார்கள் என்பதை எல்லாம் விளக்கத்துடனே யான் தெரிவிப்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :- அதனுள்ளே, அப்பனே, நல்விதமாகவே எது என்றறிய. அப்பனே, பின் அதாவது, அப்பனே, அனைவருக்காகவும், அப்பனே, உலகம், பின் நன்மை வேண்டியும் கூட. அப்பனே, எதை என்றறிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஈசனை நினைத்தும், அப்பனே, நிச்சயம் தன்னில் உருகி. அப்பனே, பின் ஒரு சிவபுராணத்தை பாடுங்கள். 




சுவடி ஓதும் மைந்தன் :-  திருப்பி, நான் சொல்றேன், நிறைய விஷயங்கள், அதுக்குள்ள எல்லாரும் நல்லா இருக்கணும்னு என்று வேண்டி, சிவபுராணத்தை பாடுங்க. ஐயா. சிவபுராணம் படிங்க.


(அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்தது போல , உலக நம்மையே வேண்டி மீண்டும் சிவபுராணம் பாட ஆரம்பித்தார்கள் அங்குள்ள அடியவர்கள் )

(அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால், 23.12.2025 அன்று கீரிமலை தீர்த்தக்கரை மண்டபம், நகுலேஸ்வரம், யாழ்ப்பாணம், இலங்கையில்  நடந்த  சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை வாக்குகள் தொடரும்….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete